Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            ISSN  2454-1990
muthukamalam muthukamalam
உங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.

முத்து: 13 கமலம்: 4
உள்ளடக்கம்

சமையல்

Alexa Rank


பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

நாகர்ஜுனரின் சூனியதா மெய்யியலில் - இயங்கியல்

திரவியராசா நிரஞ்சினி
உதவி விரிவுரையாளர், தத்துவவியல் மற்றும் விழுமியக்கற்கைகள் துறை,
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.


ஆய்வு அறிமுகம்

பௌத்தமதம் உலகில் தோன்றிய புராதன மதங்களில் ஒன்றாக விளங்குகிறது. இது கௌதம புத்தரின் போதனைகளை அடிப்படையாகக் கொண்டது. பௌத்தமதப் பிரிவுகளுள் பிரதானப் பிரிவாக அமைவது மகாயான பௌத்தமாகும். முற்கால பௌத்தம் மற்றும் தேரவாத, ஹீனயான மரபுகளில் காணப்படும் பௌத்தக் கருத்துக்களின் விமர்சனமாகவும் பௌத்த மெய்யியலின் முழுமையான வெளிப்பாடாகவும், மகாயான பௌத்தம் தோற்றம் பெற்றது. மகாயானம் என்றால் “மாபெரும் வாகனம்” என்பது பொருள். மகாயான பௌத்தத்தை இன்று உலகில் திபெத், மொங்கோலியா, சீனா, கொரியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் பின்பற்றுகின்றனர். மகாயான பௌத்தத்தின் பிரிவுகளில் சிறப்பு மிக்கவை பிரக்ஞா பாரமித்தா சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்ட நாகர்ஜுனரின் சூனியவாதம், இலங்காவதார சூத்திரம், வெண்தாமரைச் சூத்திரம், அஸங்கர், வசுபந்துவின் எழுத்துக்கள் முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு யோகாச்சாரம் அல்லது விஞ்ஞானவாதம் ஆகியனவாகும்.

நாகர்ஜுனரின் சூனியதா மெய்யியல்

மகாயான பௌத்தத்தின் பிரிவுகளில் சிறப்புமிக்கவை பிரக்ஞாபாரமித்தா சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்ட நாகர்ஜுனரின் சூனியவாதம் ஆகும். இவ்வாதம் தொடர்பான கருத்துக்கள் நாகர்ச்சுனருக்கு முற்பட்ட மகாயான சூத்திரம், அசுவகோசம் போன்ற நூல்களில் காணப்படினும், சிதறிக்கிடந்த கருத்துகளை ஒழுங்காக அமைத்து சூனியவாதத்தை அமைத்த பெருமை நாகர்ச்சுனரையே சேரும். கி.பி சுமார் இரண்டாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் வாழ்ந்த நாகர்ஜூனா பௌத்த பாரம்பரியத்தை ஆழமாகக் கற்ற செல்வாக்கு மிக்க மெய்யியலாளர்களுள் மிக முக்கியமானவராவார். உலகம் ஒரு போதும் கண்டிராத பேரறிஞர்களுள் ஒருவராய் புராதன இந்தியாவின் மிகப்பெரிய மெய்யியலாளர்களுள் ஒருவராய் இவர் விளங்கினார்.

பௌத்த மெய்யியலின் பிரதான பிரிவுகளில் ஒன்றான மகாயான பௌத்தத்தின் உட்பிரிவுகளில் ஒன்றான மாத்யமிக மெய்யியலின் மிக முக்கிய காரணகர்த்தாவாகவும் இவர் இருந்தார். இவரது மிகச்சிறந்த மெய்யியல் படைப்பான மூலமாத்யமிக காரிகையானது (The Fundamental Wisdom of the middle Way) இந்திய மெய்யியல் வரலாற்றில் மிக முக்கிய செல்வாக்கு செலுத்திய ஒரு படைப்பாகும். இந்நூலானது பல கீழைத்தேய மேலைத்தேய மெய்யியலாளர்களால் மிக ஆழமாக ஆராய்ந்து கற்கப்பட்டதுடன் உரை எழுதவும் பட்டிருந்தது.

நாகர்ஜீனா தன்னுடைய தத்துவத்தை “மாத்தியமிக சாத்திரம்” என்றார். இதனைப் பின்பற்றுவோர் “மாத்தியமிகர்” அதாவது சூனியவாதிகள் தங்களை “மாத்தியமிகர்” எனக் குறிப்பிடுகின்றனர். பழைய பௌத்தர்கள் சொல்லும் “மாத்தியமா பிரஸ்பத்” என்ற சொல்லில் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட பெயர் இதுவாகும். மிகத் தீவிர இன்பம் தேடும் வாழ்விலோ, அல்லது அறவே இன்பந்துறந்த வாழ்விலோ கருத்தூன்றாமல் இரண்டுக்கும் இடையிலான நன்னெறி முறையில் வாழ்தல் என்பதே இதன் பொருள் ஆகும். இவர்கள் புத்தரின் நடுவழியைப் பின்பற்றினர். அது ஒன்றுக்கொன்று எதிரான இரண்டு உச்சநிலைகளைக் கடந்து நிற்கின்றது. அது இருப்பு, இல்லாமை, அழியாமை, அழிவு, ஆகியவற்றால் விளையும் தவறுகளைத் தவிர்க்கிறது.


நாகர்ஜூனாவின் மெய்யியல் கருத்துக்கள் அதிகமாக அவரது மூல மாத்யமிக காரிகையின் இயங்கியலைப் பிரதானமாகக் கொண்டதாக அமைகிறது. இந்நூலில் நாகர்ஜூனா தனது இயங்கியல் முறையையும் அதனூடாக மாத்யமிக மெய்யியலின் முக்கியத்துவத்தையும் தனக்கு முன்னர் இருந்த பௌத்த மெய்யியலின் பிரிவுகளையும், ஏனையச் சிந்தனையாளர்களை விட வேறோரு வகையில் வித்தியாசமாகவும் சிறப்புப் பண்பு கொண்டதாகவும் விளக்கினார். நாகர்ஜூனா ஒரு பெரும் இயங்கியல் வாதியாக இருந்ததோடு சிந்தனையில் எல்லாப் பதார்த்தங்களையும் சுய முரண்பாடுடையவை என்பதை அவரது இயங்கியல் மூலமாக எடுத்துக் காட்டினார்.

நாகர்ஜூனா முன்னெடுத்துச் சென்ற இயங்கியல் முறை அவரது மாணவர்களால் பின்னர் விருத்தி செய்யப்பட்டது. இது கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இருந்து கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டு வரை ஒரு தொடர்ச்சியான அபிவிருத்தியின் வரலாற்றைக் கொண்டுள்ளது.

நாகர்ஜூனாவின் இயங்கியல் முறையானது புத்தருடைய மெய்யியல் செய்திகளை மிக சிறப்பாக அறிந்து கொள்வதற்கான ஒரு தர்க்க அறிவாராய்ச்சியல் ரீதியான ஒரு “நடுவு வழியை” முன் வைக்கின்றது. தேரவாத விளக்கவுரை அல்லது தோற்றப்பாட்டியலுக்கான விளக்கவுரை அனைத்தும் சில விடயங்களைத் தனிப்பட்ட ரீதியாக உரிமை பாராட்டுவதை விட ஒன்றுக்கொன்று புகழ்பாடும் தன்மையைக் கொண்டிருந்தன. அவை புத்தரின் செய்திகளை வெளிப்படுத்துவதில் வேறுபட்ட முறைகளைக் கொண்டிருந்தன. நாகர்ஜூனாவினுடைய இயங்கியலானது அதனை விபரிப்பதில் மிக சிக்கலான தன்மையைக் கொண்டிருகின்றது. சில சந்தர்ப்பங்களில் அது மறை இயங்கியல் ஆகவும் இன்னுமொரு சந்தர்ப்பங்களில் ஆக்கப்பூர்வமான இயங்கியல் ஆகவும் செயற்படுகின்றது. அது எவ்வாறெனில் நாகர்ஜூனாவின் மெய்யியல் முறையியலானது பௌத்த மெய்யியல் வரலாற்றில் வேறுபட்ட வளர்ச்சி வடிவங்களுக்கும் வேறுபட்ட ஆழமான தர்க்க விளக்கவுரைகளுக்கும் இடமளித்தது.

நாகர்ஜூனாவின் இயங்கியலையும் மெய்யியலையும் பிரித்தறிவது கடினமாகும். அவையிரண்டும் ஒன்றே என கூறமுடியும். அவரது இயங்கியலின் Negative Dialectics, Middele Path , Constructive Dialectics எனும் மூன்று பிரிவுகளில் Middele Path என்பது அவரது மெய்யியல் எண்ணக்கருவான “சூனியதா” என்பதையேக் குறிக்கின்றது. இவையே, அவரது மாத்யமிக மெய்யியலின் அடிப்படை எண்ணக்கருவாகவுள்ளது. இந்த நடுவுழியை விளக்குகின்ற இயங்கியல் முறையியலாகவே ஏனைய இரண்டு இயங்கியல் முறைகளும் அமைகின்றன. நாகர்ஜூனாவின் சூன்யதா பற்றிய நோக்கானது ஒரு தர்க்கப் பகுப்பாய்வாகவும், எல்லா வகையான கருத்தாக்கங்களின் மீதான பகுப்பாய்வாகவும் உள்ளதுடன் அது புத்தரின் தோற்றப்பாட்டியல் ரீதியிலான செய்திகளை உயர்த்தி விளக்குவதற்கு உதவியாகவும் செயற்படுகின்றது.


சூனியவாதம் என்ற சொல் பலராலும் “வெற்றுக் கொள்கை” எனப் பொருள் கொண்டாலும், சார்பு நிலையில் உலக உண்மைத்தன்மை பற்றிக் கூறுவதாகவே இது அமைந்துள்ளது. “சூனியம்” என்ற சொல்லிற்கு இன்மை, பாழ் எனப் பொருள் கொள்வது தவறு. சூனியம் விபரிக்க முடியாது. ஏனெனில் அது அறிவின் நான்கு வகைகளுக்கும் அப்பாற்பட்டது. அதாவது இருப்பு, இல்லாமை, இரண்டும் உள்ள தன்மை, இரண்டும் இல்லாத தன்மை, ஆகியவற்றைக் கடந்தது. நுகர்ச்சி இயல்பான நிலையில், அது “சார்பு நிலை - பிரத்தியட்ச சமுத்பாதம்” எனப்படும். அதாவது பிறப்பு, இறப்பு, சுழற்சி என்ற பொருளுடையது. முழுமையான அது உள்பொருள். அதாவது பன்மையில் இருந்து விடுபட்டது என்ற பொருளுடையது.

இவ்வுலகம் விபரிக்க முடியாதது. ஏனெனில் அது இருப்புடையது அன்று, இல்லாததும் அன்று, பரம்பொருள் அல்லது முழுமுதல் விபரிக்க முடியாதது. அது கடந்த நிலை இயல்புடையது. அறிவின் வகைகளால் அதை விபரிக்க முடியாது. எல்லாம் சூனியத் தோற்றங்கள். அடிப்படைப் பொருள் அற்றவை, உள்பொருள் அற்றவை, உள்பொருள் பன்மைத்தன்மை அற்றது, இவ்வாறு சூனியம் சார்பு நிலை, உள்பொருள் என்ற இரு பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது. அதுவே பிறப்பு, இறப்பு, சுழற்சி, நிருவாணம், என்றும் பொருள் தருகிறது. எது சார்ந்ததும் காட்சிப் பொருளாகவும் பொருள்களுக்கும் உட்பட்டதாக உள்ளதோ அது சார்பு நிலை உடையது.

எனவே அது அடிப்படைப் பொருள் அன்று. அனைத்துத் தோற்றங்களும் சார்புநிலைத் தன்மையுடையதாக உள்ளதாக இருப்பதால், அவை உண்மையான தோற்றத்தைப் பெற்றிருக்க முடியாது. ஆகவே, அவை அடிப்படை உள்பொருள் அல்ல. ஆனால், அவை முழுவதும் இல்பொருளுமல்ல அவை உள்பொருளைச் சார்ந்தவையாக இருக்க வேண்டும். உள் பொருளே அதுவாகத் தோன்றுகின்றது. இந்த உள்பொருள் பன்மைத் தன்மையை உள்ளடக்கியது. முழு முதலானது. ஆகவே ‘சூனியம் பாழ் அன்று’ என்ற முடிவுக்கு வரலாம். ஆனாலும் உலகப் பொருட்கள் எல்லாம் மனம் சார்ந்தனவும் அல்ல, பொருள் சார்ந்தனவும் அல்ல, நனவு நிலை சார்ந்நதனவும் அல்ல, இல்லாதனவும் அல்ல, அதாவது எல்லாவற்றையும் விபரிக்க முடியாது அதனால் உள் பொருள் இல்லை என்றாகி விடாது. ஏனென்றால் உள்பொருள் அதுவாகத் தோன்றுகிறது.

இந்த உலகம் இருக்கின்றது எனக் கருதுபவர்கள் தவறு செய்பவர்கள். ஏனெனில் உள் சென்று நோக்கும் போது இவ்வுலகம் சார்பு நிலைப்பட்டது. அடிப்படையிலே இல்பொருள் என அறிய முடிகிறது. இவ்வுலகம் இல்லை எனக்கருதுவது தவறு ஏனெனில் அவ்வாறு கருதுவது இவ்வுலகில் தெரிந்து கொள்ளக்கூடிய உள்பொருள் தன்மையை (காட்சிப் பொருள் உண்மையினை) மறுப்பது போலாகிவிடும். அழிவுத்தன்மை, அழியாத் தன்மை ஆகிய இரண்டும் பொய்யே. பகுத்தாராயும் சார்பு நிலையும் அறிவும் தங்களுக்குள்ளேயே முரண்படுகின்றன. அவை உள்பொருளைத் தராது. உள்பொருள் எல்லாவற்றையும் கடந்தது. அதன் அனுபவம் முழுமையானது. அது சூனியம் எனக் கூறப்படுகிறது. அதைச் சொற்களால் விபரிக்க முடியாது. அறிபவன் அதனை உடனடி அனுபவம் மூலம் அறிய வேண்டும்.


அமைதியான கடல் நீர் காற்றால் அலையாகத் தோன்றுவது போல் நனவு நிலை அறியாமையினால் எல்லைக்குட்பட்ட அறிவுடைய மனிதர்களாக தோன்றுகின்றது. களிமண், பலவகைப்பட்ட பானை, சாடிகளாகத் தோன்றுவது போல நனவு நிலை அறியாமையினால் பல அறிவுடைய மனிதர்களாகத் தோன்றுகிறது. உண்மையான அறிவைப் பெறும் போது தான் உண்மையை அறிய முடியும். உள் பொருள் சூனியமும் அன்று சூனியம் அற்ற தன்மையும் அன்று, இரண்டும் அல்லாததும் அன்று என்ற கருத்தையே சூனியவாதம் வளர்த்தது.

நாகர்ச்சுனர் படைப்பை மறுக்கிறார். எதையுமே எப்போதுமே தோற்றுவிக்க முடியாது. ஒரு பொருள் தன்னில் இருந்தோ, தனக்கு புறம்பானதில் இருந்தோ, இரண்டிலுமிருந்தோ, இரண்டும் இல்லாத தன்மையில் இருந்தோ தோன்ற முடியாது. காரியம் காரணத்தில் இல்லை எனில் காரியத்தை உற்பத்தி செய்ய முடியாது. உதாரணம்: மலடி மகன், முயற்கொம்பு. காரியம் காரணத்தில் உள்ளது எனில் உற்பத்தித்தேவை இல்லை. ஒரு பொருள் தன்னில் இருந்து தோன்ற முடியாது. எனில் தனக்குப் புறம்பானதில் இருந்து எப்படித் தோன்றும் எனக் கூறி நாகர்ஜீனர் தோற்றத்தை ஏற்க மறுக்கிறார். ஒருவர் குணங்களை அறிவர். ஆனால் பொருள்களை அறிவதில்லை. குணங்களின்றி பொருள்களை அறிய முடியாது. பொருள்களின்றிக் குணங்கள் இருக்க முடியாது. குணங்கள் பொருளுக்கு உள்ளேயுமில்லை வெளியேயுமில்லை. பொருளும் குணமும் ஒன்றல்ல வேறும் அல்ல, இரண்டும் சார்புடையவை இல்பொருள் ஆகும்.

நாகர்சுனர் சூனியதா என்ற கருத்தை இரண்டு கருத்துக்களால் விளக்கினார்.

1. சுபாவ சூன்யதா

இங்கு சுபாவ என்பது பரம்பொருளை மறைக்கும் தோற்ற உலகத்தை குறிக்கிறது. இது “பிரத்தியசமுத்பாதம்” என்ற விளக்கமாக 12 தொடர்களைக் கொண்ட காரண காரிய சக்கரத்தால் தொடங்கி அறிவினால் விளக்கப்படுகிறது.

2. பிரபஞ்ச சூன்யதா

இதில் எல்லாப் பன்மைத் தளமும் மறுக்கப்படுகிறது. இறுதி அடிப்படை நிலையை உணர்தல் என்ற உண்மை நிலை பிரபஞ்ச சூன்யதாவாகவுள்ளது. இது புத்தரின் பதார்த்தங்கள் எல்லாவற்றையும் தாண்டும் இருமை அற்ற உணர்வாகும்.உலகத்துப் பொருட்களை குறிப்பிட்டுச் சொல்வதற்கு 4 விதமான வழிகளை 4 அம்ச அளவையியல் “சதுஸ்கோடி” குறிப்பிடுகின்றது. அதனை நாகர்ஜூனர் அதனை மறுக்கின்றார்.

1. அது உண்டு - அதாவது ஒரு பொருள் இருக்கின்றது.

2. அது இல்லை - அதாவது ஒரு பொருள் உளதாக இல்லை

3. ஒரு பொருள் இருக்கவும் இருக்கின்றது - இல்லவும் இல்லை என்று பொருள் படும் வகையில் கூறுவது.

4. அது இருக்கவும் இல்லை, இல்லாமலும் இல்லை - அதாவது ஒரு பொருள் உள்ளதாகவும் இல்லை, இல்லாததாகவும் இல்லை என்று பொருள் படும்.

நாகர்ஜூனர் நான்கு வாதங்களையும், அவற்றுக்கிடையிலான முரண்பாடுகளையும் ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு தனது வியப்புமிக்க தர்க்க வாதத்தினால் இவை ஒவ்வொன்றும் உள்ளார்ந்த ஒரு முரண்பாடு கொண்டதாக மிகவும் சாதூரியமாக விளக்குகின்றார். இந்த 4 வாதங்களும் குறிக்கும் பொருள்கள் வெறும் தோற்றம் மட்டுமே. சத்தியமோ தோற்றங்களுக்கு அப்பாற்ப்பட்டது. அது மாயமான, இரகசியமான உணர்வுக்கு மட்டுமே அகப்படும் என்றார்.

நாகர்ஜூனரின் மெய்யியல் இருப்பு, இருப்பின்மை, சாரம், சாரமற்ற தன்மை என்பவற்றுக்கிடையிலான நடுவு வழியாகும். சூன்யதா ஏனைய காரணங்களினால் உருவாக்கப்படுவதில்லை. அது முழுமையாக அசைவற்றுள்ளது. அத்துடன் அது மேற் சொல்லப்பட்ட அறிவார்ந்த உள்ளுணர்வினால் புரிந்து கொள்ளப்படுகின்றது. மண்ணுலகம் சாராத அதீதமானதொரு இரகசிய உணர்வு மூலமே அதைப் புரிந்து கொள்ள முடியும் என்பதே அதன் விளக்கமாகும். நாகர்ஜூனர் பரிபூரணம் என்ற பரம சத்தியம் உண்டு என்றார். ஆனால் அவர் வற்புறுத்துவது மனிதனின் எவ்வகைச் சிந்தனைக்கும் உட்படாதது என்பதையேயாகும்.

இரவு என்பது எமது மொழி ரீதியான ஒரு எண்ணக்கருவாகும். இரவைப் பற்றி பேசுவதாயின் பகல் என்ற ஒன்று இருக்க வேண்டும். பகல் இல்லையாயின் இரவும் இல்லையென்றாகிவிடும். இதனால் இரவு எனும் எண்ணக்கரு பகல் எனும் எண்ணக்கருவுடன் தேவையின் நிமித்தம் பிறந்ததாகும். இரவு, பகல் தேவையுடன் நிலவுவதில்லை, எனின் எம்மால் இரவு பகலை வேறுபடுத்தி அறிய முடியாது. இதனால் இரவு பகல் தனியாக நிலவுவதில்லை. அவை சுயமானதல்ல, சார்பானதாகும். இவை சுயாதீனமானதல்ல. தங்கியுள்ளவையாகும். அப்படியாயின் உலகில் எதுவும் தனியாக நிலவுவதில்லை. உலகில் அனைத்தும் நிலவுவது இன்னுமொன்றை எதிர்பார்த்தேயாகும். இதன்படி உலகில் எதுவும் சுயமானதல்ல. எல்லாம் சார்பானதாகும். அப்படியாயின் உலகில் அனைத்தும் சூன்யமாகும். இதனால் சார்பு வாதம் பௌத்த சித்தாந்தமாக விளங்குகின்றது. எனவே மாத்யமிக தத்துவவாதிகள் எண்ணக்கரு சூன்யவாதத்தை நோக்கிப் பயணம் செய்கின்றனர்.

நாகர்ஜூனரின் இயங்கியலின் படி நிலவுபவை அனைத்தும் பொருளியலானவையும் சரி, அறிவியலானவையும் சரி, உள்ளவையல்ல. மேலும் எல்லா பதார்த்தங்களும் சுய முரண்பாடுடையவை என்பதை அவரது இயங்கியல் மூலம் எடுத்துக் காட்டுகின்றார். உலகப் பொருட்கள் மனம் சார்ந்ததுமல்ல, பொருள் சார்ந்ததுமல்ல, இல்லாததுமல்ல. இவ்வுலகம் இருக்கின்றதென்போர் தவறிழைக்கின்றனர். ஏனெனில் உள் நோக்கின் இவ்வுலகம் சார்பு நிலையுடைய இல்பொருளென அறிய முடிகிறது. இவ்வுலகம் இல்லையெனக் கருதுவோரும் தவறிழைக்கின்றனர். ஏனெனில் இது இவ்வுலகின் காட்சிப் பொருள் உண்மையை மறுப்பதாகிவிடும். இழிவுத்தன்மை, அறியாத்தன்மை இரண்டும் பொய்யே. பகுத்தறிவும், சார்பு நிலையும், அறிவும் தமக்குள்ளே முரண்படுகின்றன. இவை உள் பொருளைத் தராது. உள் பொருள் சூன்யமன்று, சூன்யமற்ற தன்மையன்று, இல்லாததுமன்று என்ற கருத்தையே சூன்யவாதம் வளர்த்தது.

முடிவுரை

நாகர்ஜூனரின் போதனைகள் பௌத்த சிந்தனை வரலாற்றின் மிக முக்கிய அம்சங்களில் ஒன்றாக விளங்குகின்றது. எண்ணக்கருக்கள் ஊடாக பௌத்தம் பற்றிய உண்மையை விளக்க முடியாது என்பது தான் மாத்தியமிக மெய்யியலின் மூலக் கூற்றாக இருந்தது. இயங்கியல், வெறுமை, நடுவு வழி என்பனவே அதன் முக்கியமான அம்சங்களாகும். மாத்தியமிக மெய்யியலின் அழுத்தம் அதன் வெறுமையை விளக்குவதாக இருப்பதால் அது எண்ணக்கருவினை முற்று முழுதாக நிராகரிக்கின்றது என்று ஏற்றுக் கொள்ள முடியாது. இயங்கியலை அறிமுகப்படுத்துவானூடாக எண்ணக்கருக்களுக்கு அப்பால் உண்மையை ஒரு மறைமுகமாக விளக்குவதாக கொள்ளலாம். நாகர்ஜூனரின் மாத்யமிக மெய்யியலானது பரிபூரணம் என்ற பரம சத்தியம் போலித்தனமான உலகின் காட்சிக்கு முற்றிலும் அப்பாலுள்ளது என்பதை வெளிப்படுத்துகின்றது. இந்த வகையில் சூன்யதாவை உலக வழக்கு மொழியால் முற்று முழுதாகக் குறிப்பிட முடியவே முடியாது என்றாகின்றது. உலக வழக்கில் நாம் சிந்திக்கும் எந்த வகையிலும் அகப்படாமல், அது அதற்கப்பாலுள்ளதாகின்றது. வழக்கமான பொருளில் அதைப்பற்றித் திட்டவட்டமான முறையில் எவ்விதமான கொள்கையையும் வகுத்துக் கொள்ளவும் முடியாது. நாகர்ஜூனரும் சத்தியத்தைப் பற்றி கொள்கை எதனையும் வகுத்துக் கொள்ள முடியாது என்பதை ஏற்றுக் கொள்கின்றார். இதனால் தான் மாத்யமிக மெய்யியல் Immanuvel Kant இன் இரண்டாவது விமர்சன மெய்யியலோடு ஒப்பிடப்படுகின்றது.

உசாவியவைகள்

1. Venkata Ramanan K. (1993) “Nagarjuna’s Philosophy”, Motital Banar Sidass Publishers, Private Limited, Delhi.

2. Surendranath Dasgupta (1992) “A History of Indian Philosophy”, Motital Banasidas,Delhi.

3. Beatria Lane suzki (1981) ”Mahayana Buddhism”, George AllenAnd Unwind Ltd, London.

4. Rhys Davis, T. W (2000) “Buddhism - Its History and Literature”, Asia n Educational Services, Delhi, Madras.

5. Jadunoth Sinha (1996 ) “Out Lines of Indian Philosophy” ,Pilgrims books Pvt. Ltd. Delhi.

6. Shastri. M. N (1996 ) “The History of Buddhism”, Aryan books International, Delhi.

7. Kern. H. (1989) “Manual of Indian Buddhism”, Motital Banasidas, Delhi.

8. Bhattacharyya. N. (1981) “History of Researches on Indian Buddhism”, Manshiram Monoharlal, Delhi.

9. Ja. singn (1987) “An Intoduction to Mathyamika Philosophy”, Motital Banasidas, Delhi.

10. David. J. Kalupahana ( 1994) “A History of Buddhism Philosophy”, University of Hawali Press, Hawali.

11. சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் (1979) “கீழை மேலை நாடுகளின் மெய்ப்பொருளியல் வரலாறு” அண்ணாமலை பல்கலைக்கழக வெளியீடு.

12. ஹிரியண்ணா (1968) “இந்தியத் தத்துவம்” தமிழாக்கம் - தேவசேனாதிபதி, புது டெல்லி.

13. தேவிபிரசாத் சட்டே பாத்யாய - கரிச்சான் குஞ்சு (தமிழில்), 1976, “இந்திய தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும், சென்னை புக்ஸ் - சென்னை.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p125.html


ISSN 2454 - 1990
சிறந்த நூலாசிரியர் பரிசு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...சிரிக்க சிரிக்க
எரிப்பதா? புதைப்பதா?
அறிவை வைக்க மறந்துட்டானே...!
செத்தும் செலவு வைப்பாள் காதலி!
வீரப்பலகாரம் தெரியுமா?
உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
இலையுதிர் காலம் வராது!
கண்ணதாசனின் நகைச்சுவைகள்
குறைச்சுத்தான் எடை போடறாரு...!
அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
இடத்தைக் காலி பண்ணுங்க...!
சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
மாபாவியோர் வாழும் மதுரை
இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
கவிஞரை விடக் கலைஞர்?
பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
கடைசியாகக் கிடைத்த தகவல்!
மூன்றாம் தர ஆட்சி
பெயர்தான் கெட்டுப் போகிறது!
தபால்காரர் வேலை!
எலிக்கு ஊசி போட்டாச்சா?
சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
சம அளவு என்றால்...?
குறள் யாருக்காக...?
எலி திருமணம் செய்து கொண்டால்?
யாருக்கு உங்க ஓட்டு?
வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
கடவுளுக்குப் புரியவில்லை...?
முதலாளி... மூளையிருக்கா...?
குட்டிக்கதைகள்
எல்லாம் நன்மைக்கே...!
மனிதர்களது தகுதி அறிய...
உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
அழுது புலம்பி என்ன பயன்?
புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
கடவுளைக் காண உதவும் கண்ணாடி
தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
சிங்கத்திற்கு வாழைப்பழம்!
வலை வீசிப் பிடித்த வேலை
சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
கல்லெறிந்தவனுக்கு பழமா?
சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
அக்காவை மணந்த ஏழை?
சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
இராமன் சாப்பாட்டு இராமனா?
சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
கழுதையின் புத்திசாலித்தனம்
விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
ஆணவத்தால் வந்த அழிவு!
சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
சொர்க்க வாசல் திறக்குமா...?
வழுக்கைத் தலைக்கு மருந்து
மனைவிக்குப் பயப்படாதவர்
சிங்கக்கறி வேண்டுமா...?
வேட்டைநாயின் வருத்தம்
ஆன்மிகம் - இந்து சமயம்
ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
தானம் செய்வதால் வரும் பலன்கள்
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
பிரதோஷம் எப்படி விஷேசமானது?
விநாயகர் சில சுவையான தகவல்கள்
சிவராத்திரி விஷேசமானது ஏன்?
முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
எப்படி வந்தது தீபாவளி?
தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
அனுமனுக்கு வடை மாலை ஏன்?
திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
முருகா என்றால் என்ன கிடைக்கும்?
குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
விபூதியின் தத்துவம்
கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
இறைவன் ஆடிய நடனங்கள்
யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                       


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License