இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

மணிமேகலையில் பௌத்தப் பக்திநெறி

முனைவர் சு. மாதவன்
உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை,
மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி (த), புதுக்கோட்டை.


அறவழிப்பட்ட பக்தியைப் ‘பக்திநெறி’ என இங்கு பொருள் கொள்ளப்படுகிறது. வெறும் பக்தி எல்லாம் பக்திநெறி எனும் பெயரில் அழைக்கத்தக்கன அல்ல. பக்தி என்பது அகவயப்பட்டது; நெறி என்பது புறவயப்பட்டது. முன்னது சிந்தனை; பின்னது செயல். உணர்வு, எண்ணம், சிந்தனை, கருத்து, கொள்கை, கோட்பாடு, மெய்யியல் என முறைவழிப்படூஉம் எல்லாம் செயல்வழிப்படூஉம் என ஆகும்போதுதான் அவை ‘நெறி’ எனப் பெயர்பெறும் தகுதியைப் பெறுகின்றன. இல்லையெனில், அவை வெறுமனே அகவயப்பட்டவையாகவே இருந்துவிடும். ஆனாலும் கூட, அகவயப்பட்ட எந்த ஒன்றும் புறவயப்படாமல் இருந்துவிடாது. ஏனெனில், புறத்தின் - பொருளின் - நிகழ்வின் தாக்கத்தால்தான் அகம் உணர்வைப் பெறுகிறது; எண்ணத்தை வளர்க்கிறது; சிந்தனையைப் பெருக்குகிறது; கருத்துக்களை உருவாக்குகிறது; கொள்கைகளை வடிவமைக்கிறது; கோட்பாடுகளைக் தகவமைக்கிறது; மெய்யியலை வளர்க்கிறது. இந்த நோக்குநிலையில், “புறமில்லாமல் அகமில்லை; அகமில்லாமல் புறமில்லை” எனும் தருக்க இயைபை உருவாக்கிக் கொள்ள வேண்டியுள்ளது.

எனவே, ‘பக்தி’ என்ற உணர்வெண்ணச் சிந்தனைக் கருத்துக் கொள்கைக் கோட்பாட்டு மெய்யியல் ‘நெறி’ என்ற செயல்வடிவுக்கு வந்தே தீரும். இங்கு நெறி எனப்படுவது அறநெறியேயாகும். இத்தகைய இயங்கியல் நெறிப்படி, மணிமேகலை எனும் காப்பியப் பனுவலில் இடம்பெற்றுள்ள பௌத்தப் பக்திநெறிக் கூறுகளை வெளிக்கொணர இக்கட்டுரை முயல்கிறது.

பக்திநெறி

‘பக்திநெறி’ என்பது மெய்யியலுக்குப் செயலியலுக்கும் உயிரிழைத் தருக்க இயைபைக் கொண்டது. ‘பக்தி’ என்பது பற்றுதல் ; ‘நெறி’ என்பது பின்பற்றுதல். ‘பக்திநெறி’ என்பது பற்றிப் பின்பற்றுதல் என்பதாகிறது.

பௌத்தப் பக்திநெறி

இந்துமதம் உட்பட எல்லா மதங்களுமே இறைவனை முன்னிட்டுப் பக்தியை வளர்க்கின்றன. பௌத்தமோ, செயன்மையை முன்னிட்டுப் பக்தியை வளர்க்கிறது. இந்தச் செயன்மை புத்தனை முன்னிட்டு அல்ல என்பது பௌத்தப் புரிதல். இது தொடக்க கால நிலை. ஆனால், காலப் போக்கில் புத்தனை வழிபடுதல் என்ற நிலைக்குப் பௌத்தமும் வந்து சேர்ந்துவிட்டது.

இன்னும் சில செய்திகளை இந்த இடத்தில் தெரிந்துகொண்டு தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

1. உலகில் அறிவை முன்னிறுத்திய முதல் மதம் பௌத்தம்

“புத்தம் சரணம் கச்சாமி -
அறிவைப் பின்பற்றுவதென உறுதிஏற்கிறேன்
தம்மம் சரணம் கச்சாமி -
நெறியைப் பின்பற்றுவதென உறுதி ஏற்கிறேன்
சங்கம் சரணம் கச்சாமி -
சங்கத்தைப் பின்பற்றுவதென உறுதி ஏற்கிறேன்”

2. எந்த ஓர் இடத்திலும், ‘கடவுள் உண்டா’ எனும் வினாவுக்குப் புத்தர் விடைபகன்றாரில்லை. இதன் உட்கிடை, “இல்லாத கடவுளைச் சிந்திப்பது வீண்வேலை” என்பதாகும்.

3. “மனிதரை வெளியிலே உள்ள யாருமே(External Agencies) முன்னேற்ற முடியாது. மனிதன் தன்னாலேதான் உயரவேண்டும். தன் முயற்சியும் தன்னொழுக்கமும் மனித முயற்சிக்கு அடிப்படையாகும் என்றும் மனப் பண்பாடுதான் வாழ்க்கையின் இலட்சியம் என்றும் வழிகாட்டியவர் புத்தர்பிரான்” (கந்தசாமி., சோ.ந.1977 :1)

ஆனாலும், பௌத்தமும் பிற சமய நடவடிக்கைகளை ஒத்த சில நடைமுறைகளைப் பின்பற்றத்தான் செய்தது. ஒரே ஒரு சிறப்புக் கூறு பௌத்தத்துக்கு உண்டு. அது பக்தியை நெறிப்பட்ட நிலையில் நடைமுறைப்படுத்தியதுதான் அச்சிறப்புக் கூறாகும்.

எல்லாச் சமயங்களும் பக்தியில் தொடங்கி நெறியை வந்தடைந்தன, வந்தடையவில்லை. பௌத்தமோ நெறியில் தொடங்கி பக்திக்கு வந்தடைந்துள்ளது. எனவே, பொருத்தமான தருக்க இயைபைக் கொண்டதாகப் பௌத்தப் பக்திநெறி விளங்குகிறது. இத்தகைய பக்திநெறியை மணிமேகலை மிகச் சிறப்பாகப் பதிவுசெய்துள்ளது.


ஹீனயானத்தில் பௌத்தப் பக்திநெறி

புத்தரே கடவுளை ஏற்றுக் கொள்ளாததால் புத்தரது காலம் வரை கடவுள் பக்தி போன்ற பான்மை இடம்பெறாமல் பார்த்துக் கொண்டார். எனவே, புத்தர் வரையறுத்தபடி,

“புத்தம் சரணம் கச்சாமி” என்பதே நீடித்து வந்தது. புத்தரது காலத்துக்குப் பிறகு அவரது போதனைகள் சீடர்களால் தொகுக்கப்பட்ட பின்பு,

“புத்தர் சரணம் கச்சாமி” என்பது நடைமுறைக்கு வந்துவிட்டது.

புத்தர் தோன்றும்முன் அறம் மங்கிக்கிடந்த சமூகத்தில் புத்தர் தோன்றிய பின்பு அறநெறி செழித்து வளரத் தொடங்கியது. மனிதர்களை நால்வர்ண வழிப்பாகுபாட்டுள்ளும் மனிதரில் ஒரு பகுதியினரை மனிதராகவேக் கொள்ளாமல் ‘பஞ்சமர்’ என்ற இழிபாகுபாட்டுக்குள்ளும் வைத்திருந்த சமூகத்தில், ‘அனைவரும் மனிதரே’ என்ற பொதுநிலையில் வைத்துப் போற்றிய சமயமாகப் பௌத்தம் ஒளிர்ந்தது; மிளிர்ந்தது. இந்திய மனிதருள் பெரும்பான்மை அல்லது ஒன்றைப் பெரும்பான்மை என்ற நிலையிலிருந்த பஞ்சமர், பௌத்தத்தைக் கொண்டாடி ஏற்றனர்.

பஞ்சமரை மனிதராகக்கூட ஏற்காத பிரமாணீய இந்துமதச் சனாதனச் சகதிக்குள்ளிருந்து மீட்டெடுத்துச் சமத்துவமாக நடத்தியது பௌத்த சங்கம். பௌத்தத்தை அடித்தட்டு மக்கள் அனைவரும் கொண்டாடினர். அவர்களது ஏற்புயர்வுநிலைக் கொண்டாட்டத்தின் செயல்வடிவமாகப் புத்தரை ஒரு இரட்சகர் - மீட்பர் என்ற நிலையில் வைத்துப் பார்த்ததன் விளைவே புத்தரைக் கடவுள் நிலையில் வைத்துப் பக்திப் பரவசத்துடன் போற்ற வைத்தது. இத்தகைய பின்னணியில் உருவானதே ஹீனயான பௌத்தப் பக்திநெறி.

மகாயானத்தில் பௌத்தப் பக்திநெறி

உலகம் கடவுளால் படைக்கப்பட்டது; இயக்கப்படுகிறது என்ற பல்வேறு மதங்களும் சொல்லிவருவது என்பது நம்பிக்கை சார்ந்தது. உலகம் கடவுளால் படைக்கப்படவில்லை; ஆனால் உலகின் சமத்துவப் பண்பாட்டு நடைமுறை புத்தரால் படைக்கப்பட்டது என்று பௌத்தம் சொல்லி வருவது என்பது தன்னம்பிக்கை சார்ந்தது. இத்தகைய அணுகுமுறையில், ஹீனயானத்தைவிட மகாயானம் செழித்து நின்றது. புத்தரைக் கடவுள் நிலையில் வைத்துப் பார்க்கத் தொடங்கிய ஹீனயானப் பார்வையைக் கடந்து புத்தரைக் கடவுளாகவே வைத்துப் பார்க்கும் பார்வையை மகாயானம் தொடங்கி வைத்தது.

பௌத்த பக்திப் பாசுரங்கள்

மணிமேகலையில் சில பகுதிகள் புத்தரின் பாசுரங்களாக அமைந்துள்ளன. வைணவ நெறிக்குரிய பிரபத்தி (சரணாகதம்) கொள்கை மகாயான பௌத்தத்தில் சிறப்பிடம் பெற்றது (கந்தசாமி.,சோ.ந.1977 :10).

பாசுரம் -1

“எங்கோ னியல்குண னேதமில் குணப்பொருள்
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
தகைபா ராட்டுதல் அல்லது யாவதும்
மிகை நாவில்லேன்”(5 : 71-79)


பாசுரம் -2

“புலவன் தீர்த்தன் புண்ணியன் புராணன்
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
ஆயிர வாரத் தாழியந் திருந்தடி
நாவா யிரமிலே னேத்துவ தெவனென்” (5: 98-105)

பாசுரம் -3

“இளவள ஞாயிறு தோன்றிய தென்ன
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
பூமிசை யேற்றினேன் புலம்பறு கென்றே” (10: 11-15)

பாசுரம் -4

“மாரணை வெல்லும் வீர நின்னடி
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
உரகர் துயர மொழிப்போய் நின்னடி” (11 : 61-70)

பாசுரம் -1 புத்தரை வணங்க வேண்டியதன் காரணங்களை எடுத்துரைக்கிறது.

பாசுரம் -2 புத்தரை புகழ அவரை என்னென்ன பெயர்களிலெல்லாம் விளிக்கலாம் என்பதைக் கூறுகிறது.

பாசுரம் - 3 ஞாயிறால் இவ்வுலகம் விளக்கமுறுவதுபோல் புத்த ஞாயிற்றொளி திகழ்கிறது என்பதை விதந்தோதுகிறது.

பாசுரம் -4 எத்தகைய பயனுறு புதுமை, புரட்சிகளையெல்லாம் புத்தர் செய்தருளினார் என்பதையெல்லாம் எடுத்துரைப்பதோடு அவன் திருப்பாதங்களை எவ்வாறெல்லாம் வாயாரப் பாடிப் போற்றலாம் எனப் பட்டியலிடுகிறது.

இப்பாசுரங்கள் அனைத்தும் புத்தரைக் கடவுளாகப் பாவித்து சேவித்து கூவித் துதிப்பது என்ற பக்திப் பரவச நிலையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு பாடப்பட்டுள்ளன.

புத்தரின் புனிதத் தலங்கள்

காவிரிப்பூம்பட்டினம், இந்திர விகாரம், புத்தர் கோயில் (புலவோன் கோவில், மணி. 19 : 5) மணில்லவம், இரத்தினத் தீவம் (11:21), இலங்காத் தீவம் (28:107), கிழக்கிந்தியத் தீவுகள் - நாகபுரம் (25: 1-6), வஞ்சி, காஞ்சி, மதுரை, பாதபங்கயமலை ஆகியன புத்தரின் புனிதத் தலங்களாகத் திகழ்கின்றன. இந்தத் தலங்களிலெல்லாம் பௌத்தத் தெய்வங்களுக்குக் கூட்டு வழிபாடு நிகழ்த்தப்படுகின்றன. இங்கு சென்று வழிபட்டு வருவதைப் பெறும் பேறாகவும் அவ்விடங்களைப் புண்ணியம் பெறும் இடமாகவும் கருதுகின்றனர். இத்தகைய நடவடிக்கை பக்தியின் ஒரு பகுதி வெளிப்பாடாகும். புத்த பீடிகை வணக்கங்களும் மலர்தூவி வழிபடும் வழிபாட்டு முறையும் பக்தி நடவடிக்கையாகும்.

நம்பிக்கைகள்

பக்தியின் பிரிக்க இயலாத பண்பு நம்பிக்கை. நரகம், சொர்க்கம், லோகங்கள், பேய் உலகு, அசுரர் உலகு, தேவரின் அறுவகை உலகு என்ற நம்பிக்கைகள் மகாயான பௌத்தத்தில் மிகுதியாகக் காணப்படுகின்றன.


புத்தர் எடுத்த பிறவிகள்

புத்தர் எடுத்த விலங்குப் பிறவிகள் - முயல், குரங்கு, களிறு, மான், நாய், நாகம், தவளை, மீன், மரத்திலுறையுங் கடவுள், பன்றி, மடங்கல், சேவல் ஆகியன.

புத்தர் எடுத்த மனிதப் பிறவிகள் - துறவி 83 முறை, அந்தணன் 24, அரசன் - 58, கள்வன் -2, சூதன் -1, வெறியாடுபவன் -1 ஆகியன. (கந்தசாமி.,சோ.ந. 1977 : 101 - 102).

எல்லா உயிர்களிலும் புத்தர் இருக்கிறார்; எல்லா உயிர்களாகவும் புத்தர் இருக்கிறார்; எல்லா உயிர்களுக்காகவும் புத்தர் இருக்கிறார் என்ற பக்தி நம்பிக்கையை இவை விதைக்கின்றன. மனிதப் பிறவிகளில் துறவியாக 83 முறை எடுத்துள்ளதாகத் குறிப்பிடப்படுவது புத்தரைக் கடவுளாகக் கொண்டாடினாலும் புத்தரின் துறவுநெறியின் மேன்மைக்குக் கட்டியங் கூறுகிறது.


பௌத்தச் சிறுதெய்வங்கள்

பௌத்த வாழ்வியலின் முன்மாதிரிகளாகப் பௌத்த தெய்வங்கள் விளங்குகின்றன. ஹீனயான பௌத்தத்தில் இல்லாத இந்த தெய்வ உருவாக்கங்கள் மகாயான பௌத்தத்தால் உருவாக்கப்பட்டவை. மணிமேகலைக் காப்பியத்தில் மணிமேகலா தெய்வம் உட்பட பல தெய்வங்கள் இடம் பெற்றுள்ளன.

பெண் தெய்வங்களாவன;

மணிமேகலா தெய்வம், தீவதிலகை, சாம்பாபதி, மணிமேகலை, சிந்தாதேவி, கந்திற்பாவை, கண்ணகி ஆகியோர்.

ஆண் தெய்வங்களாவன;

புத்தன், இந்திரன், சாத்தன், தருமராசன், அறவணஅடிகள், புண்ணியராசன், சங்க தருமன், கோவலன், மாரன் ஆகியோர்.

பெண் தெய்வங்களில் மணிமேகலா தெய்வம் கடற்தெய்வமாக வழங்கப்படுகிறது. அதிலும் கடல்திசை காட்டும் தெய்வமாக இயங்குகிறது. மணிமேலைக் காப்பியத்தினதும் பௌத்த சமயத்தினதுமான முதன்மை நோக்கம் பசி ஒழிப்பே. இந்தப் பசி ஒழிப்புக்கு உரிய அமுதசுரபியை மணிமேகலைக்குச் சொன்னது இந்த மணிமேகலா தெய்வமே. கடலில் தத்தளிப்போருக்குத் திசைகாட்டுவதுபோலப் பசியில் துன்புறுவோர்க்கு உணவு தந்து பசியமர்த்தும் கலங்கரை விளக்கமாக மணிமேகலை தானே விளங்குகிறாள்.

எல்லாவற்றிற்கும் மேலாக, தமிழ்ச் சமூகம் கண்ணகியை எவ்வாறு இன்றும் கொண்டாடி வருகிறதோ அவ்வாறே மணிமேகலையையும் தெய்வமாகக் கொண்டாடி வருகிறது என்பது கண்கூடு. தமிழகத்தில் பரவலாகவும் வணிகப் பகுதிகளாலும் மிகுதியாகவும் இடம்பெற்றுள்ள ‘அன்னபூரணி’ வழிபாடு மணிமேகலை வழிபாடேயாகும். அன்னம் - உணவு, பூரணம் - நிறைவு. அன்னத்தை அமுதசுரபியில் பூரணமாய்ப் பெற்றிருந்தவள் என்பதால் மணிமேகலை, அன்னபூரணியானார். இன்றும் தமிழகத்தில் திகழ்ந்து வரும் அன்னதான நடவடிக்கைகளில் முன்னோடி மணிமேகலையே ஆவாள்.

முடிவுகளாக…

அன்னபூரணி வழிபாடாக இன்றும் நீடித்திருக்கும் பௌத்தப் பக்திநெறி பிற மதங்களைப்போல் வழிபட்டுவிட்டு எவ்வாறேனும் வாழலாம் என விட்டுவிடுவதில்லை பௌத்தம். பிற மதங்களில் உள்ள பக்தி நடவடிக்கைகளை உட்செறித்துக் கொண்டபோதிலும் அறநெறியைப் பற்றியொழுகுவதும் சமத்துவம் பேணுவதுமான போக்குகளிலும் பௌத்தத்திற்கு நிகரான வேறொரு மதம் உலகில் இல்லை எனலாம்.

பக்தி நடவடிக்கைகளில் மூழ்கியுள்ள இந்து மக்களை மீட்டெடுக்கும் நடைமுறை உத்தியாகவும் பௌத்தப் பக்திநெறி திகழ்கிறது எனலாம்.

ஆய்வு நெறிநூல்கள்

1. கந்தசாமி., சோ. ந. பௌத்தம், டாக்டர் எஸ்.இராதகிருஷ்ணன், மேல்நிலை மெய்யுணர்வு கல்வி நிலையம், சென்னை, 1977.

2. மாதவன்., சு, தமிழ் அற இலக்கியங்களும் பௌத்த சமண அறங்களும், செம்மொழி, தஞ்சாவூர், 2008.

3. மாதவன்., சு, தமிழ்ச் செவ்விலக்கியங்களில் பௌத்த வழக்காறுகள், செம்மொழி கருத்தரங்கம், திராவிட பல்கலைக்கழகம், குப்பம், 2014.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p126.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்

முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License