இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

நவீன அறிவும் தமிழர்நேசனும்

முனைவர் பால்சிங்


முன்னுரை

நவீன அறிவு என்னும் தொடர் 20-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் தமிழில் மிகுந்த கவனத்தைப் பெற்றது. இதே கால கட்டத்தில் தான் ஆங்கிலேயர்களின் காலணி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் என்ற உணர்வும் எழுந்தது. அரசியலில் ஆங்கிலேயர்களை வெளியேற்ற முனைந்த தேசபக்தி கொண்ட சான்றோர்கள்; ஆங்கில மொழி மூலம் தற்கால உலகின் புத்தறிவை தமிழன் பெற்றாக வேண்டும் என்னும் நோக்கத்துடன் உழைத்தனர். ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை வெறுப்பதும் ஆங்கில மொழி மூலம் பெறக்கூடிய அறிவை வெறுப்பதும் புறப்பார்வையில் முரணாகத் தோன்றின. ஆழ்ந்து ஆராயும் போது இவ்விரண்டும் ஒரே அடிப்படையில் இருந்து எழுவதை உணர்ந்து கொள்ள முடியும. அறியாமையிலிருந்து விடுதலை பெறாத நிலையில் அரசியல் விடுதலை முற்றிலும் பொருளற்றதாகிவிடும. மாதவ ஐயர் போன்ற சான்றோர்கள் அறியாமையிலிருந்து உண்டான விடுதலைக்கு முதன்மை தந்தனர். அறியாமை என்னும் இருளிலிருந்து விடுதலை பெற ஆங்கில மொழி அறியாத தமிழ் மக்களுக்கு இது சாத்தியமானது அல்ல, எனவே நவீன அறிவை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குக் கொண்டு வரும் தேவை எழுந்தது. இத்தேவையை நிறைவு செய்ய நவீன அறிவைத் தமிழ்படுத்த வேண்டும் என்னும் உயர் நோக்கத்தை கொண்ட முதல் இதழாகத் தமிழர்நேசன் அமைகிறது.

நவீன அறிவு

இந்திய நாட்டின் தாய்மொழிகள் ஒவ்வொன்றும் பாரம்பரிய அறிவு சேமித்து வைத்துள்ளன. தமிழும் இதற்கு விதிவிலக்கல்ல, அறிவை உயர்வாக மதிக்கும் மதிப்பீடு தமிழருக்கு இருந்துள்ளது. அறிவை உயர்வாக மதிக்கும் புதிய மதிப்பீடு ஐரோப்பாவில் பொது ஏற்பினைப் பெற்றபோது தான் சமகால அறிவியல் போக்கு அங்கு வேகம் பெற்றது. அதுவரை சமயத்திற்கு முக்கியத்துவம் தந்த ஐரோப்பிய கலச்சாரம் அதை துறந்து அறிவியலுக்கு முக்கியத்துவம் தரத்துவங்கியது. பேகன் என்றும் ஆங்கில அறிஞன் 'அறிவே சக்தி என்றான்' இதற்கு இணையாக 'அறிவுடையார் எல்லாம் உடையார்' என்கிறார் திருவள்ளுவர். வள்ளுவர், பேகனின் புகழ்வாய்ந்த இத்தொடர்களையேத் தமிழர் நேசன் தன் முதல் இதழ் தொட்டு ழுழக்கமாக முன் வைத்துள்ளது.

அறிவிற்குச் சமகால ஐரோப்பாவைப் போல் தமிழ்நாடும் முக்கியத்துவம் தந்திருந்தாலும் நவீன அறிவை ஐரோப்பாவிற்கே உரியது என மதிப்பிடப்படுகிறது. தமிழனின் பாரம்பரிய அறிவிற்கும் ஐரோப்பியச் சமகால அறிவிற்கும் இடையிலான வேறுபாடே நவீன அறிவு என்றும் தொடருக்கான விளக்கமாக அமைகிறது. 'தர்மம்,காமம்,மோட்சம் என்னும் மூன்றினையும் பற்றியே அவை விசேஷமாய்ப் பேசுகின்றன என்பதும், தர்மத்தைச் செய்வதற்கும், காமத்தை அனுபவிப்பதற்கும் இன்றியமையாததாகிய அர்த்தத்தைப் பற்றிய நூல்கள் மிகச் சிலவே என்பது தெளிவாகும்” (1) தமிழர்நேசன் வாழ்விற்கு அடிப்படையான பொருளைப் பற்றியப் பாரம்பரிய அறிவில் அக்கரை கொண்டிருக்கவில்லை என்கிறது. பொருளை மையமாகக் கொண்ட பொருளியல் பார்வை ஐரோப்பாவிற்கேப் புதியதுதான். சமயம் எப்பொழுதுமே அறத்திற்கும் வீட்டிற்கும் தான் முக்கியத்துவம் தரும், பொருள் தேடும் வழிகளை தமிழனும் அறிந்திருக்க வேண்டும். ஆனால், அதற்கு முக்கியத்துவம் தந்து அதைத்தேடும், மேலாண்மை செய்யும் வழிகளைக் குறித்த அறிவை மொழியில் வளர்த்தெடுக்கத் தமிழன் முனைந்ததில்லை இந்த அறிவு இல்லாமையினால்தான் சமகாலத்தில் அந்த அறிவை நன்கு உணர்ந்த ஐரோப்பியாகளுக்கு அடிமைகளாகும்படியானது. 'பொருள் தேடும் வழிகளில் மட்டும் மற்ற நாட்டார் அநேகர் நம்மிலும் எவ்வளவோ தெரிந்து கொண்டிருக்கிறார்கள்” (2) தமிழர் நேசன் பார்வையில் தமிழ் மேன்மையடையக் காரணம் தற்காலப் பொருள் தேடும் வழியை அறியாமல் போனது தான்.


பௌதீகமும் ஆன்மீகமும்

பொருளுக்கு முதன்மை அளிக்கும் நவீன அறிவை அதன் அடிப்படையில் எழுந்த நாகரீகத்தை ஏற்க மறுத்த அறிஞர்களும் சமகாலத்தில் இருந்தனர். இந்திய விடுதலை ஆன்மீகப் பாதையில் அடையப்பட வேண்டும் என்னும் கருத்தாக்கம் இங்கிருந்து தான் எழுகிறது. விவேகனந்தரின் அமெரிக்க உரை இந்தியர்களின் வெற்றிக்கு அடையாளமாகக் கருதப்பட்டதும் இதனால் தான். நவீன அறிவைக் கொண்ட நாட்டில் விவேகனந்தர் ஆன்மீகத்தை எடுத்துரைத்தார். நவீன நாகரீகம் இந்தியனுக்கு அன்னியமானது என்னும் சிந்தனை இங்கிருந்து எழுகிறது. அதேசமயம் சமகால வாழ்வின் அடிப்படையே பொருந்தும். 'ஒவ்வொரு நாட்டாரும் தனித்தனியே வாழும் காலம் சென்றுவிட்டது. உலகத்திலுள்ள பல்வேறு சீமையர்களும், கைத்தொழில், வியாபாரம், படைத்திறன் வாழ்கையில் சுகம் தரும் போக்கியங்கள் முதலிய நாகரீகம் சம்மந்தமான எல்லா விஷயங்களிலும் ஒருவரோடு ஒருவர் போட்டிபோட்டு இகலித், கெலித்தவர் குதிரை ஏறும் காலமாக இருக்கிறது” (3) தமிழர்நேசன் பார்வையில் உலகம் முழுமையும் பொருளியல் பார்வைக்கு முதன்மை அளிக்கும் போது இந்தியர்கள் எக்காலத்திலும் அழியாது என ஆன்மீகத்தில் தேங்கவிட முடியாது. தமிழனும் பொருள்தேடும் அறிவை வளர்த்துக் கொண்டு அதில் போட்டியிட்டாலொழிய தற்கால வாழ்வில் வாழ இயலாது.'நமது பாஷைகளில் இருப்பது போல வேறு எவர் பாஷையிலும் இவ்வளவு சிறந்த தர்ம சாஸ்திரங்கள் இல்லை என்று நியாயமாய்ப் பெருமை பாரட்டும் நாம் தினசரி வாழ்கையில் அறம் செய்வதைக் கவனித்தால் நகைப்புக்கு இடமாகும்” (4) அறத்திற்கும் அடிப்படை பொருள்தான், தமிழர் வாழ்வில் அறம் வீழ்சியடையப் பொருள்தேடும் வழிகளை அறியாததுதான் காரணம். எனவேப் பொருளுக்கு முக்கியத்துவம் தரும் புத்தறிவை தமிழன் பெற்றாக வேண்டும் என வலியுறுத்துகிறது.

அறிவியலும் அறிவியல் பார்வையும்

ஐரோப்பாவின் நவீன அறிவு என்பது 1920-ஆம் நூற்றாண்டுகளில் எழுந்த அறிவியல் வளர்ச்சியைச் சார்ந்துள்ளது. இந்த இரு நூற்றாண்டுகளில் தன்னைச் சூழ்ந்துள்ள உலகில் மனிதன் புரிந்து கொள்ள முயற்சித்து அதில் வெற்றியும் பெற்றான். இயற்கை நன்மை பயக்கும் வழிகளில் மனிதனால் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது. புதிய கண்டுபிடிப்புகள் பெரும்பாலும் இக்காலகட்டதத்தைச் சார்ந்தவை. மருத்துவம், பௌதீகம், இரசாயனம் என ஒவ்வொரு துறைகளிலும் புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. இக்கண்டுபிடிப்புகளுக்கெல்லாம் அடிப்படை விருப்பு வெறுப்பின்றி உண்மையே கண்டடையவேண்டும் என்னும் நோக்கத்தில் ஆய்வு நிகழ்த்துவதுதான்.

விருப்பு வெறுப்பின்றி புறப்பார்வையில் ஆராய்வது அறிவியலோடு நின்றுவிடவில்லை. ஒவ்வொரு துறையிலும் தாக்கத்தை செலுத்தியது. இது அறிவியல் பார்வை என வகைப்படுத்தப்பட்டது. இவ்விரு நூற்றாண்டுகளிலும் ஐரோப்பாவில் நிகழ்ந்த சமூக மாறுதல்களுக்கெல்லாம் இவ்வறிவியல் பார்வையே அடிப்படை, அடிமை வழிகள் இந்நூற்றாண்டுகளில் ஒழித்துக் கட்டப்பட்டது. பிறப்பு அடிப்படையில் கறுப்பு வெள்ளை என்ற ஏற்றதாழ்வுக்கு எதிராக ஐரோப்பாவேக் கொதித்து எழுந்தது. மன்னர்கள் ஆட்சி முடிவிற்குக் கொண்டு வரப்பட்டு மக்களாட்சி வேரூன்றியது. பெண்கள் சமமாக மதிக்கப்பட்டனர். அனைத்துத் துறைகளிலும் செல்வாக்கு நிகழ்த்தி வந்த சமயம் பின்னுக்கு தள்ளப்பட்டது. ஐரோப்பாவில் இந்தப் புத்தெழுச்சிதான் உலகம் முழுவதும் அதன் ஆதிக்கத்தை நிலைநாட்டியது. அறிவியலையும் அறிவியல் பார்வையும் அடையாத நிலையில் இந்தியர்கள் அடிமைகளாகவே வாழ நேரிடும் என்ற உண்மை கவனிப்பைப் பெற்றது. அறிவியல் பார்வையை அடைய ஆங்கில மொழி அறிவின்மை பெரும் தடையாக அமைந்தது.

இத்தடையை உடைத்தெறிந்து ஆங்கிலமொழி மூலம் மட்டுமே அடைய இயலும் நவீன அறிவை, தமிழ்படுத்துவதன் மூலம் ஆங்கிலம் அறியாத தமிழர்களும் நவீன அறிவை அடைய முடியும் என்னும் சிந்தனை வலுப்பெறத் துவங்கியது. இதனைச் செயல்படுத்த தமிழர் கல்விச்சங்கம் 1917-ல் சென்னையில் தோற்றுவிக்கப்பட்டது. தமிழர் நேசன் நவீன அறிவைத் தமிழுக்குக் கொண்டு வரும் செயல்திட்டத்தின் இதழாக வெளிவரத் துவங்கியது. தமிழின் முன்னோடி நாவலாசிரியரில் ஒருவரான ஆ. மாதவ ஐயர் முன்னணி செயல் வீரர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.


தமிழர்நேசனின் செயல்திட்டங்கள்

நவீன அறிவைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தத் தெளிவான செயல்திட்டங்களை வகுத்துக் கொண்டு செயல்பட்டது. அறிவியலில் அனைத்துத் துறைகள் சார்ந்த கட்டுரைகளும் அது வெளியிட்டது. எடுத்துக்காட்டாக முதல் இதழில் வெளியான முத்துலெட்சுமி அம்மாளின் வைசூரி அல்லது பெரியம்மை என்னும் கட்டுரையைக் குறிப்பிட வேண்டும். தெய்வ கோபத்தால் வரும் நோய் என அறியப்பட்டிருந்த வைசூரி நோய்க்கான காரணங்களையும் நோய் பரவாமல் தடுக்கும் விதங்களையும் இக்கட்டுரை சித்தரிக்கின்றன.

'அறிவுப்பெருக்கால் கண்டறியப்பட்ட அக வழிகளில் நடவாது கண்மூடித்தனமாக நடந்து மரணம் அடைபவன் தற்கொலை செய்து கொள்ளும் பாவத்துக்கே உள்ளாகிறவன் என்பதில் சந்தேகமில்லை” (5). இவ்வரிகளில் முத்துலெட்சுமி அம்மாள் நவீன அறிவைக் கைக்கொண்டு நோயை வெற்றி காணாதிருப்பது தற்கொலைக்கு நிகரானது என்று குறிப்பிடுகிறார். சித்தார்த்த வருடம் ஆவணி மாதம் வெளியான இதழில் வெளிவந்த பதார்த்தங்களின் கழிவும் அதன் முக்கியத்துவம் என்னும் மற்றொரு கட்டுரையைக் குறிப்பிடப்பட வேண்டும். இக்கட்டுரையில் கழிவுப் பொருட்கள் எவ்வாறு பயன்படும் பொருள்களாக மாற்றப்படுகிறது என்பது விவரிக்கப்படுகிறது. 'கழிவுப் பதார்த்தங்களை வீண் போக்கமால் அமெரிக்கர்கள் உபயோகித்து வருகிறார்கள்” (6) கழிவுப்பொருள்களின் மறு பயன்பாட்டைக் கண்டறிந்ததின் மூலமாகவே அமெரிக்கப் பொருளாதாரம் உயர்வடைந்தது. கழிவுப் பொருட்களை வீணாக்காமல் மதிப்புக்கூட்டிய பொருளாக மாற்றுவதின் மூலம் முதன்மை உற்பத்திப் பொருளின் விலையைக் குறைக்க இயலும். இதன் மூலம் மலிவு விலையில் விற்பனை செய்து உலகச் சந்தையைக் கைப்பற்ற முடியும். நவீன அறிவு இதை ஐரோப்பியர்களுக்குக் கற்றுத் தந்தது. தமிழர்நேசன் இந்த அறிவை இந்தியர்களும் அடைந்தாக வேண்டும் என்கிறது.

தமிழர்நேசன் வரலாற்றையும், இலக்கியத்தையும் அறிவியல் பார்வைக்கு உட்படுத்தியது. இந்திய வரலாற்றை மட்டுமின்றி ஐரோப்பிய வரலாற்றையும் விருப்பு வெறுப்பற்ற அறிவியல் பார்வைக்கு உட்படுத்தியது. ஐரோப்பாவில் பெற்ற வெற்றிக்கான காரணங்களை ஆராய்ந்துள்ளது. 'ஐரோப்பிய நாடுகளிலிருந்து இளம் சிறார்களைக் கப்பமாகப் பெற்று, இஸ்லாமியச் சமயத்தில் சேர்த்துப் படை வீரர்களாக மாற்றினர். இவர்கள் மூர்க்கமாகச் சண்டையிட்டனர்” (7) துருக்கியர்கள் ஐரோப்பிய இளைஞர்களைக் கொண்டு ஐரோப்பாவை வென்றனர். அன்று சிதறுண்டு இருந்த ஐரோப்பிய சிற்றரசர்கள் போரில் பெற்ற தோல்விகளுக்கு ஈடாக இளைஞர்களைத் துருக்கியர்களுக்குக் கப்பமாகக் கொடுத்தனர். இந்தியாவிலும் ஐரோப்பியர்கள் பெற்ற பெரும்பான்மையான வெற்றிகள் இந்திய வீரர்களைக் கொண்டு போரிட்டுப் பெற்ற வெற்றிகள் தான். ஐரோப்பாவில் தாங்கள் அடைந்த தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து, அதற்கான காரணங்களைக் கண்டறிந்து, அதை இந்தியாவில் தங்கள் வெற்றிக்குப் பயன்படுத்திக் கொண்டனர். இவ்வெற்றியின் பின்னணியில் இருக்கும் அறிவியல் பார்வையைத் தமிழன் கைக்கொள்ள வேண்டும் என்கிறது.

இலக்கியத்தில் இதே அறிவியல் பார்வையைக் கொண்டு அணுகுகிறது. இவ்வகையில் மாதவ ஐயாவின் 'தமிழின் இலக்கிய அபிவிருத்தி” கட்டுரையைக் குறிப்பிட வேண்டும். தமிழ் மரபின் ஏற்றத்தாழ்வுகளை ஆராய்கிறது. அதன் பெரும்பகுதி பாலையாக அமைகிறது எனச் சுட்டுகிறது. கம்பனுக்குப் பின் தமிழ் இலக்கிய மரபு படிப்படியாக வீழ்ச்சியடைந்ததை தெளிவுப்படுத்துகிறது. முன்னோர் எழுத்தைப் பொன் போல் கருதும் மரபான போக்கிற்கு எதிரிடையானது. 'தமிழ் மொழியிலே இத்தகையப் பெருமை வாய்ந்த காவியங்கள் பல உள்ளன. அரேபியப் பாலைவனத்தில் விதிவழியல் உயிர் தாங்கி பலகாதவழி நடந்தார்க்குச் சில பொழுது நீரும் நிழலும் உதவும் அரிய சுனைகள் போல் ஆங்காங்கே காணும் இரண்டொரு செய்யுள் தவிர மற்றக் கவிகள் இலக்கியச் சிறப்பின்றி வறண்ட பாழ்போல் பொரிதரும் நூற்றுக்கணக்கான தலபுராணங்கள் அந்தாதிகள் ஆகிய போலி இலக்கிய நூல்களே பலவுள” (8) மாதவ ஐயாவின் இவ்விமர்சனப் பார்வையும் நவீன அறிவைச் சார்ந்தது.


முடிவுரை

தமிழர்நேசன் ஒவ்வொரு துறையிலும் நவீன அறிவின் அவசியத்தை வலிறுத்தியது. பொருள் தேடும் வழிகளையும் பொருளுக்கு முக்கியத்துவம் தரும் புத்தறிவையும் தமிழன் பெற்றாக வேண்டும் என்கிறது. தமிழர் நேசன் நவீன அறிவை இந்தியர்களும் அடைந்தாக வேண்டும் என்கிறது. நவீன அறிவு வலுவடைந்ததினால் தான் இந்தியா விடுதலையடைந்தது.

அடிக்குறிப்புகள்

1. தமிழர்நேசன் (பிங்கள வருடம், ஆவணி மாதம், பக்கம் எண் 2)

2. தமிழர்நேசன் (பிங்கள வருடம், ஆவணி மாதம், பக்கம் எண் 5)

3. தமிழர்நேசன் (பிங்கள வருடம், ஆவணி மாதம், பக்கம் எண்)

4. தமிழர்நேசன் (பிங்கள வருடம், ஆவணி மாதம், பக்கம் எண்)

5. தமிழர்நேசன் (பிங்கள வருடம், ஆவணி மாதம், பக்கம் எண் 55)

6. தமிழர்நேசன் (பிங்கள வருடம், ஆவணி மாதம், பக்கம் எண் 30)

7. தமிழர்நேசன் (ஸித்தார்த்த வருடம், தை மாதம், பக்கம் எண் 169)

8. தமிழர்நேசன் (ஸித்தார்த்த வருடம், தை மாதம், பக்கம் எண் 260)

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p131.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License