இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

புதுமைப்பித்தன் படைப்புகளில் ஆண்பாத்திரங்கள்

சு. விமல்ராஜ்
உதவிப்பேராசிரியர்,
ஏ. வி. சி. கல்லூரி, மன்னம்பந்தல், மயிலாடுதுறை.


முன்னுரை

ஒரு படைப்பாளன் தான் நிலைநிறுத்துகிற பாத்திரங்களின் வழியாக ஒரு கதையைச் செம்மையாக வழி நடத்துகிறான். தான் படைக்கின்றப் பாத்திரங்களின் மொழிவீச்சின் கருவி கொண்டு வாசகர்களிடத்தில் மறைமுகமாகப் பேசுகிறான். படைப்பாளனின் கதைக்கருவைத் தன் தோள்களில் சுமந்து திரிபவர்கள் பாத்திரங்கள்தாம். தான் நினைத்ததை காட்சிப் படுத்துதலால் சொல்ல முனைந்தாலும், அது காட்சி ஊடகங்களுக்கு பொருந்துமேயன்றி, இவை போன்ற எழுத்துவழி இலக்கியக்கதை மொழிதலுக்குப் பாத்திரங்களின் வழியாகத்தான் படைப்பாளன் வெளிப்படுத்த முடியும்.

மாந்தர் படைப்பின் முதன்மை

எந்த ஒரு படைப்பளனும் பாத்திரத்தை முன்மொழிவதில் சிறத்தை எடுத்துக்கொள்வதில் தவறில்லை. ஏனெனில் படைப்பாளன் கதைக்கருவின் உண்மை மகத்துவத்தை பாத்திரத்தின் வழியாகத்தான் எடுத்து மொழியமுடியும். “கதை மாந்தரைப் படைப்பதில் வாழ்க்கையில் காண்போரையேப் படைக்கின்றோம் என்ற உணர்வு, உண்மையான மனித இயல்பின் வார்ப்பு என்பவற்றைக் கருத்தில் கொள்ளவேண்டும்” (1) என்பதே ஏவ்லின் மே ஆல்பர்ட் அவர்களின் கூற்றாகும். சிறுகதை இலக்கியத்தின் முதன்மைக்கூறு அதன் கதைப்பின்னல் என்றால், அம்முதன்மைக் கூறினுக்குச் செயல் வடிவம் கதைமாந்தர்களால்தான் ஏற்படுகிறது.

புதுமைப்பித்தனின் மாந்தர் படைப்பு

புதுமைப்பித்தன் தன் சிறுகதைகளில் பல்வேறுவிதமான பாத்திரங்களைப் படைத்து அதன் வழியேக் கதையை வழி நடத்துகிறார். சமூகத்தில் பாதுகாப்பு இல்லாமல் வாழ்க்கை நடத்துகிற நடுத்தர வர்க்க மக்களின் முகங்களூடே கதையை நிகழ்த்துகிறார். “உலகப் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யும் சாதனங்களாகத் தன்னுடைய கதைகளைக் கருதவேண்டாம் என்று அவர் கேட்டுக்கொள்ளினும் ‘பாதுகாப்பற்ற மக்கள்’ பற்றியே அவருடைய கதைகள் பேசுகின்றன” (2) இந்தக்கூற்று புதுமைப்பித்தன் பெரும்பாலும் சாதாரன மக்களைப் பற்றிய பாத்திரப்படைப்புகளின் வழியே அவர்களது வாழ்க்கைச் சூழலை பேச முனைந்திருக்கிறார் என்று சிந்திக்கத் தோன்றுகிறது. அவரே “பாதுகாப்பற்ற மக்கள்படும் இன்னல்களையே அக்கதைகள் படம் பிடிக்கின்றன; பாதுகாப்பின்மைக்குரிய காரணங்களையும் அடையாளம் காட்டுகின்றன. அவருடைய கதைகளில், அவருடைய நோக்கம், ‘குழம்புள் காயாக’ மிதக்கவில்லை என்பது உண்மையெனினும், குழம்புள் உப்பாக கரைந்துள்ளது என்பது வெளிப்படை” (3) என்கிறார்.

முருகரத்தினம் அவர்கள் குறிப்பிடும் போது, “இவர்கள் (சமூகத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கும் மக்கள் - புதுமைப்பித்தன் கதை மாந்தர்) துயரம் என்னும் இருளில் உழன்று கொண்டு சமூகக் கொடுமை என்னும் குளிரில் நடுங்கி முன்னேற்றத்துக்கான ஆசைகளை உள்ளத்தில் தேக்கி நம்பிக்கை என்னும் விடிவெள்ளியை எதிர்நோக்கி விடுதலை என்னும் பகற்பொழுதுக்காகக் காத்திருக்கின்றவர்கள்” (4) என்கிறார்.

புதுமைப்பித்தனின் மாந்தர் படைப்பு ஏவ்லின் மே ஆல்பர்ட் (சான்றெண் ஒன்றின்படி) அவர்களின் கூற்றுப்படி இருக்கிறது என்கிறார் முனைவர்சீ. குமரேசன். (5) புதுமைப்பித்தனின் படைப்புகளில் இடம்பெறும் பாத்திரங்கள் இயல்பான மக்கள் வாழ்வில் இடம் பெறுகிற மாந்தர்களை உள்ளதை உள்ளவரே கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. மற்றுமொரு கூற்றை முன்மொழிகிறார் குமரேசன், “புதுமைப்பித்தன் கதைகளில் வரும் மாந்தர்கள் பெரும்பாலும் ஒரே வகையினரே… ... ... ஏக்க உணர்வுடன் வாழ்க்கையை நடத்திச் செல்பவரே அவருடைய கதைகளில் நடமாடுகின்றனர்” (6) என்பதாகும்.


ஆண் பாத்திரங்கள்

பொதுவான புதுமைப்பித்தனின் பாத்திரப்படைப்புகள் குறித்துக் கூறும் பொழுது முனைவர் சீ. குமரேசன் அவர்கள், “ஆண் மாந்தர் எனில் பெரும்பாலும் பற்றாக்குறையுடன் போராடிக் கொண்டிருக்கும் உழைப்பாளிகளே. இவர்களையும் இவர்களின் மனநிலைகளையும் அடிப்படையாகக் கொண்டே ஆசிரியர் பெரும்பாலான கதைகளைப் பின்னியுள்ளார்” (7) என்கிறார். புதுமைப்பித்தனைப் பொருத்தவரை ஆண்பாத்திரங்கள் உழைக்கும் நடுத்தர குடும்பப்பின்னணி உடையவர்களாக இருக்கின்றனர். இது பெரும்பாலான பாத்திரங்களைக் குறித்த கூற்றாம். இயல்பு வாழ்க்கையில் போராடுகிற, உரிமைகளைப் பெற எத்தனிக்கிற பாத்திரங்கள் எனில் மிகப் பொருந்தும். புதுமைப்பித்தனின் ஆண்பாத்திரங்கள் குறித்த பொதுவான பார்வையில் ‘தன்னிறக்க மாந்தர்’, ‘பணியுழல் மாந்தர்’, ‘பகற்கனவு மாந்தர்’, ‘தனிவகை மாந்தர்’, ‘தன்னிரக்கப் படைப்பு மாந்தர்’ என்று பாத்திரமுகங்களுக்கான அடையாளங்களைப் பெயர்ப்படுத்துகிறார் முனைவர் சீ. குமரேசன் அவர்கள். (8)

ஆய்வுச்சிறுகதை ஆண் பாத்திரங்கள்

இங்கு ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள 16 சிறுகதைகளின் ஆண்பாத்திரங்கள் எத்தகைய தன்மை வாய்ந்தவர்கள் என்று ஆராய்வதற்கு இச்சிறுகதைகளின் போக்கும் அதன் கருவும் எந்தச் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டவை என்பதும் அதன் தன்மைக்கேற்ப ஆண்பாத்திரங்கள் எத்தகையதாய் அமைக்கப்பட்டுள்ளது என்றும் ஆராய்வது மிக முக்கியமானதாகும்.

1. ‘சாபவிமோசன’ தொன்மப்பாத்திரம்

தொன்மம்

தொன்மப்பாத்திரம் என்னும் பார்வையில் இச்சிறுகதையின் பாத்திரத்தை ஆராயும் முன்னர் தொன்மம் என்பது குறித்து விரிவாக அலசிப் பார்க்க வேண்டும். இலக்கியவியல், மதஒப்பியல் உளவியல், மானிடவியல், சமூகவியல், நாட்டுப்புறவியல் போன்ற பல துறைகளில் தொன்மம் என்னும் சொல் பயன்படுத்தப்படுகிறது. திறனாய்வுத்துறையின் முன்னோடி நார்த்ராப் பிரையின் தொன்மம் குறித்த விளக்கங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. நார்த்ராப் பிரையின் கருத்தையொற்றி பா. மருத நாயகம் அவர்கள் “தொன்மம் கடவுளர்களையோ கடவுளையொத்த மனிதர்களையோ பாத்திரங்களாகக் கொண்ட கதையென்றும், அது வரலாற்றுக் காலத்திற்கு அப்பாற்பட்டதென்றும், இயற்கையிகந்த நிகழ்ச்சிகளைக் கொண்டதாகவும் அமைந்திருக்கும் என்றும் கூறுவர். தொன்மங்கள் அதிகச் சிரத்தையோடு எடுத்துக்கொள்ளப்பட வேண்டியவை. உண்மையிலேயே நடந்ததாக நம்பப்படுபவை. எல்லா இலக்கிய வகைகளும் தொன்மத்திலிருந்தே தோற்றமுற்றன என்பதே அவர் கருத்து” (9) என்கிறார்.

இலக்கியப் படைப்பிற்கான அடிக்கருத்துகள் எல்லாமும் தொன்மங்களில் இருந்தே தோற்றம் பெற்றன என்று நார்த்தராப் பிரை கருதுகிறார். பெரும்பாலும் தொன்மங்கள் மனிதன், விலங்கு, தாவரம் ஆகியவற்றின் தோற்றம் பற்றியும் மனிதன் எவ்வாறு இப்பொழுது உள்ள நிலைக்கு, அதாவது இறப்பு, பால் உணர்வு, பலவகையான சமூகக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றிற்கு ஆட்பட்டவனாக வந்து சேர்ந்தான் என்பன பற்றியும் விளக்குகின்றன.


விகோவின் கருத்தை மருதநாயகம் அவர்கள் தன்னுடையத் திறனாய்வு நூலில் அழகுபடக் கூறுகிறார். “விகோ எனும் அறிஞர் தமது புதிய விஞ்ஞானம் என்னும் நூலில் நுண்ணிய சிந்தனைகள் தொன்மக்கருத்துகளில் இருந்தே வெளிப்படுகின்றன என்றும் கவிதைக்கு இதுவே அடிப்படை என்றும் மனிதன் கற்கவேண்டிய முதல் விஞ்ஞானம் தொன்மமே என்று சுட்டிக்காட்டினார். அவர் கருத்தில் தொன்மங்கள் உண்மையான நிகழ்ச்சிகள் அல்லது வரலாற்று நிகழ்ச்சிகளின் கற்பனை வடிவங்கள் ஆகும்” (10)

உளவியல் அறிஞர் யுங் அவர்கள் மிக ஆழமான விளக்கத்தைத் தருகிறார். “மனித இனம் முழுவதற்கும் பொதுவான அடிமனக்கூறு ஒன்று உண்டென்றும் அதிலிருந்தே தொன்மங்கள் வெளிப்படுகின்றன என்றும் யுங் கருதினார். எனவேதான் பல நாட்டுப் பல இன மக்களிடமும் காணப்படும் தொன்மங்களில் வியத்தகு ஒற்றுமைகளைக் காணமுடிகிறது என்று அவர் விளக்கமளித்தார்” (11)

’புராணங்களிலும் இதிகாசங்களிலும் வெளிப்படுவது ஒரு குறிப்பிட்ட தனி நபரின் தனிச்சிந்தனை அல்ல, மக்களின் கூட்டுச் சிந்தனையே ஆகும்’ என்பது மார்க்சிம் கார்க்கியின் தொன்மம் பற்றிய கருத்தாகும். (12)

“ஆரம்ப காலத்து மனிதன், தான் எதிர்கொண்ட இயற்கையைத் தன் காலத்திய அறிவினால் புருந்துகொள்ள முயன்ற முயற்சியில் வெளிப்பாடே இத்தொன்மங்களாகும். மனித மனத்தின் கற்பனை ஆற்றலையும் வாழ்க்கை அனுபவத்தின் மூலம் வெடித்த முதல் கலை அமைப்பையும் இத்தொன்மங்கள் வெளிப்படுத்தி நின்றன. பின்னால் வர்க்க சமுதாயம் உருவானபோது இந்தத் தொன்மங்களில் இருந்துதான் மதக் கடவுள்களுக்கான கதைகள் மாற்றி உருவாக்கம் செய்யப்பட்டன” (13) என்கிறார் பஞ்சாங்கம்.

தொன்மங்கள் இறுகிய பாறைகள் அல்ல. உயிர்த்துடிப்புள்ளவை. சமூகம், காலத்துத் தேவைகளுக்கு ஏற்ப தொன்மங்களை பயன்படுத்திக் கொள்கிறது. சமூகம் மட்டுமல்ல சமூகத்தின் ஒவ்வொரு அங்கமும் அவரவர்களின் கருத்துலகிற்கு ஏற்பத் தொன்மங்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்தியச் சூழலில் ஆரிய திராவிட அரசியல் நிலைப்படுகளுக்கு இத்தொன்மங்களே களங்களாயின. ஊடகங்கள் இந்துத்துவ பெருமரபைத் தூக்கிப் பிடிக்க இத்தொன்மங்களைப் பயன்படுத்துகின்றன. படைப்பாளிகளும் தொன்மங்களையேப் படைப்பின் அடிக்கருத்துகளாகவும் பரப்புகளாகவும் உத்திகளாகவும் அமைத்து வெற்றி பெறுகின்றனர். எனவேதான் ரேனிவெல்லக், ‘உலகப் புகழ்பெற்ற படைப்புகள் எல்லாம், புதிதாகக் கதையை உருவாக்கிப் படைக்கப்பட்டவைகளை விட, பழைய தொன்மங்களின் மேல் மறுபடைப்புச் செய்யப்பட்டவைகளாகவே இருக்கின்றன’ (14) என்கிறார்.

புதுமைப்பித்தன் அவர்கள் அகலிகை பாத்திரத்தை முன்னிறுத்தி இரண்டு சிறுகதைகளை எழுதியிருக்கிறார். ஒன்று அகலிகை மற்றொன்று சாபவிமோசனம். அகலிகைத் தொன்மம் குறித்து மூன்றாவது இயலில் விரிவாக ஆராயப் பெற்றுள்ளது.

சாபவிமோசனம் இராமயணப் பின்னணிக் கதை. அக்கதையுள் சமூக எழுச்சியின் ஒரு கூறினை எதிரொலிக்க வைப்பதில்தான் அவருடைய சிந்தனையாற்றல் வெளிப்படுகிறது. அடக்கு முறைக்கும் வன்முறைக்கும் அடங்கிப்போக வேண்டியதுதான் பெண்ணின் நிலை என்பதற்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார் புதுமைப்பித்தன். அவ்வெதிர்ப்பினை ஓர் அடியவளைக்கொண்டு ஓர் அவதார புருஷனிடம் காட்டச் செய்கிறார். வழிபாட்டிற்குரிய இராமனையே வழக்கிற்கு உள்ளாக்கி விடுகிறார். “பெரியாரின் நாத்திகக் கருத்துகள் கொள்கை வெளிப்பாடாக பரவத்தொடங்குவதற்கு முன்பே இவர் மானுடநேய அடிப்படையில் பெண்மைச் சிதைவை படைபிடித்துக் காட்டுகிறார். பெண்கள் என்றால் ஆண்களுக்கு, குறிப்பாகக் கணவனுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டியவர்கள், அதுவே அவர்களுக்கு உரிய பண்பாகும் என்று வழிவழியாக ஊட்டப்பட்டு வரும் நம்பிக்கைக்கே அடிதருகிறார். உலகத்தாருக்காகச் சீதையைத் தீக்குளிக்க வைத்த இராமனால் தனக்குச் சாபவிமோசனம் ஏற்பட்டதை எண்ணித் துடித்துப் போகிறாள் அகலிகை என்பது ஆசிரியரின் கதைச்செருகல்தான் எனினும் ஆசிரியன் சீர்திருத்த மனநிலைக்கு அது உரைகல் ஆகிவிடுகிறது” (15)


சிறுகதையின் துவக்கத்திலேயே அகலிகையின் கனவர் கோதமர் தவம் புரிந்த புற்றிலிருந்து எழுந்து வரும் போது “நிஷ்டை துறந்த கண்கள் சாணை தீட்டிய கத்தி போல் சுருள்கின்றன. உடலிலே, காயகற்பம் செய்ததுபோல் வலு பின்னிப்பாய்கிறது. மிடுக்காக, பெண்ணின் கேவலத்திலிருந்து விடுவித்துக் கொள்ள முடியாதவனைப் போலத் தயங்கி வருகிறான்” (16) என்கிறார். இந்த இடத்தில் கோதமரின் மனநிலையில் இருக்கும் ஒருவிதத் தயக்கம் என்பது பெண்மைக்காக அவர் இட்ட சாபம் குறித்த விமர்சனமாகப் பதிவு செய்கிறார் புதுமைப்பித்தன்.

கோதமனின் மனம் இப்போது தவறு செய்த ஒரு உணர்ச்சியில் வருந்துகிறது. “கோதமனுக்கு அவளிடம் முன்போல் மனக் களங்கமின்றிப் பேச நாஎழவில்லை. அவளை அன்று விலை மகள் என்று சுட்டது, தன் நாக்கையே பொசுக்க வைத்து விட்டது போல இருக்கிறது. என்ன பேசுவது? என்ன பேசுவது? என்ன பேசுவது?” (17) பசிக்கிறது என்று கேட்ட அகலிகைக்கு பழவனத்திலிருந்து பழம் சேகரிக்கச் சென்ற கோதமனுக்கு மனவினை நிகழ்ந்த முதல்நாள் போன்ற ஆசையும் பரிவும் இருந்ததாக வெளிப்படுத்துகிறார். கோதமன் அந்தக்கதையில் முழுவதும் பெண்ணின் அடக்குமுறைக்கு எதிரான, பெண்ணை ஆணின் அடிமை என்னும் எண்னத்திற்கு எதிரான ஒரு சூழலில் உலவுவதாக காட்டுகிறார். கோதமனும் அகலிகையும் சேர்ந்து செல்ல நேர்ந்த துவக்கத்திலிருந்து அவர்களுக்குள் உள்மனதின் உணர்ச்சியைப் படம் பிடித்துக் காட்டுகிறார் புதுமைப்பித்தன். கோதமனின் நெஞ்சம் எப்போதும் நெருடிக்கொண்டே இருக்கிறது. அந்த நெருடலின் பொருள் கோதமன் செய்த தவற்றின் அடையாளம் என்றுதான் கொள்ளவேண்டும். புதுமைப்பித்தன் கோதமன் என்னும் பாத்திரத்தின் சாபம் என்னும் ஒரு செயலை விமர்சனம் செய்கிறார் என்று கொள்வது சரியாகும்.


2. ‘பால்வண்ணம் பிள்ளை’ பிடிவாதப்பாத்திரம்

இரண்டாம் சிறுகதையில் பால்வண்ணம் பிள்ளை என்னும் பாத்திரம் படைக்கப்பட்டுள்ளது. தான் பிடித்த முயலுக்கு மூன்றுகால் என்று சொல்லும் மனநிலை உடையவர் பால்வண்ணம் பிள்ளை. இவரைப் போன்ற செயல்பாடு உடையவர்கள சமூகத்தில் பலரைக் காணமுடியும். இப்படிப்பட்டவர்கள் குடும்பத்தில், அலுவலகத்தில், ஊர்அவையில், பொதுஇடங்களில் என்று பல்வேறு இடங்களில் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு மனத்தன்மை உடைய ஒருவரின் செயல்பாடு குறித்து விரித்துரைக்கிறார் புதுமைப்பித்தன்.

“பிராணி நூல், மிருகங்களுக்கு, முக்கியமாக முயலுக்கு நான்கு கால்கள் என்று கூறுமாம். ஆனால் பால்வண்ணம் பிள்ளையைப் பொருத்தவரை அந்த அபூர்வப் பிராணிக்கு மூன்று கால்கள்தான். சித்தி உறுதி, கொள்கையை விடாமை, இம்மாதிரியான குணங்கள் எல்லாம் படைவீரனிடமும், சத்தியாக்கிரகிகளிடமும் இருந்தால் பெருங்குணங்களாகக் கருதப்படும். அது போயும் போயும் ஒரு கலெக்டர் ஆபீஸ் குமாஸ்தாவிடம் தஞ்சம் புகுந்தால் அசட்டுத்தனமான பிடிவாதம் என்று கூறுவார்கள்” (18)

இந்தப்பெருங்குணங்கள் படைவீரனிடம் இருந்தால் பெருங்குணங்களாகக் கருதப்படும் என்னும் சமூகத்தில் நிலவுகிற உண்மையையும் சொல்லி அத்தோடு அதே குணம் பால்வண்ணம் பிள்ளை போன்ற சாதாரண ஊழியரிடம் இருந்தால் அது எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் பதிவு செய்கிறார் புதுமைப்பித்தன். இந்தப் பால்வண்ணம் பிள்ளை அலுவலகத்தில் ஒருமாதிரி, வீட்டில் ஒருமாதிரி என்பது சிந்திக்கத்தக்கது. பிடிவாதமான குணம் உடையவர்தான். அலுவலகத்தில் அவர் காட்டிக்கொள்ள முடியாத தன் திறமையை வீட்டிற்கு வந்ததும் அங்குள்ள மனைவி, குழந்தைகளிடம் வெளிப்படுத்திக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளார். “பால்வண்ணம் பிள்ளை ஆபிசில் பசு, வீட்டிலோ ஹிட்லர்.” (19)

சிறுபூசல்தான். அந்தப்பூசலின் காரணம் எந்த ஒரு காரியத்திற்கு உந்துசக்தியாக இருக்கப் போகிறது என்று யோசித்தால் அதைக் கண்டறிவது மிகச்சுலபம். பால்வண்ணம் பிள்ளை செய்கிற வாய்ச்சண்டை சமூகத்தின் கட்டை உடைப்பதோ, முற்போக்கின் தன்மையை வெளிப்படுத்தவோ, பெண்ணியத்தை நிலைநிறுத்துவதோ என்ற எதுவும் இல்லை. சின்னச்சின்ன அற்பச் செயல்களுக்காகப் பிடித்த பிடியைத் தளர்த்திக் கொள்ளாமல் இருப்பது என்பதுதான் இவரின் கொள்கை.

“ஆபிஸில் பக்கத்து குமாஸ்தாவுடன் ஒரு சிறு பூசல். இவர் மெக்ஸிகோ தென அமெரிக்காவில் இருக்கிறதென்றார். இவருடைய நண்பார் பூகோள சாஸ்திரம் வேறுமாதிரிக் கூறுகிறதென்றார். பால்வன்ணம் பிள்ளை தமது கட்சியை நிரூபிப்பதற்காக வெகுவேகமாக வீட்டிற்கு வருகிறார்” (20) இப்படிச் சின்னச்சின்னக் கருத்துகளில் ஏற்படும் வாய்ச்சண்டைக்குச் சமரசம் செய்துகொள்வதில்லை. பிடித்த பிடியில் தளராமல் நின்று நிரூபிக்க முயல்வது பால்வன்ணம் பிள்ளையின் குணம்.

வீட்டில் குடும்பத்தைச் சரியாக நடத்தப் பொருளாதாரச் சூழல், குடும்ப வளர்ச்சி இவற்றைக் கருத்தில் கொண்டு மனைவி சொல்லும் கருத்தையும் தன் ஆதிக்க முயற்சியில் வென்றெடுக்க நினைப்பது இவரில் செயல். குழந்தைப் பிறப்பை இவர்கள் ஒரு கட்டுக்குள் வைக்கவில்லை. வருசம் தவறாது குழந்தை பெற்றெடுத்துக் கொண்டார் பால்வண்ணம் பிள்ளை. குடும்பத்தில் பாலின் தேவை அதிகரித்து விட்டது. மனைவி ஒரு நல்ல யோசனை சொன்னாள். ஒரு பசுமாடு வாங்குவது பொருளுக்கு பொருளும் வந்துவிடும், பால் பிரச்சனையும் தீர்ந்துவிடும் என்பது அவளின் நல்ல யோசனை. இந்த யோசனையை அவர் மனைவி சொல்லி இவர் கேட்பது இவருக்கு இழுக்கு. எந்த ஒரு கருத்தும், யோசனையும் இவர் சொல்லுவதாகத்தான் இருக்க வேண்டும். மனைவி சொல்லி இவர் கேட்பது அவருக்கு இழுக்கை தேடித்தரும் என்று அவராகவே ஒரு கற்பனை செய்து கொள்வது அவருடைய வழக்கம். அவ்வாறே பசுமாட்டுப் பிரச்சனையையும் நினைத்தார்.

இவர் நிராகரித்தும் அவரின் மனைவி பசு மாட்டை வாங்கிவிட்டதால் அன்றிலிருந்து அவர் பால், காபி அருந்துவதை விட்டுவிட்டார்.

“அன்று புதுப்பால், வீட்டுப்பால் காப்பி, கொண்டு வந்து வைத்துக்கொண்டு கணவரைத் தேடினாள்.அவர் இல்லை. அதிலிருந்து அவர் காப்பியும் மோரும் சாப்பிடுவதில்லை. அவர் மனைவிக்கு மிகுந்த வருத்தம். ஒருபக்கம் குழந்தைகள். மற்றொரு பக்கம், புருஷன் என்ற குழந்தை. வம்சவிருத்தி என்ற இயற்கை விதி அவளை வென்றது.

இப்படிப் பதினைந்து நாட்கள்.
மாட்டை என்ன செய்வது?
... ... ... ... ... ... ... ...
மாட்டைப்பாரும் இருபத்தஞ்சி ரூபா என்றார்.

சாமி மாடு அறுபது ரூபாய் பெறுமே என்றான் சுப்புக் கோனார்.

இருபத்தைந்துதான். உனக்காக முப்பது ரூபா. என்ன இப்பொழுதே பிடித்துக் கொண்டு போகவேண்டும்” (21)


பால்வண்ணம் பிள்ளை பிள்ளைகளைப் பற்றிக் கவலைப்படவில்லை. வாங்கிய விலையை விடக் குறைந்த விலைக்கு மாட்டைப் பிடிவாதமாக விற்றுவிட்டார். ஏனென்றால் அந்த மாடு வாங்கும் யோசனை அவர் சொன்னதல்ல. அந்த மாட்டை அவர் வாங்கியிருந்தால் பால் கறந்து பயன்படுத்துவதில் ஒரு உண்மையிருக்கும். மாடு வாங்கும் யோசனை அவர் சொல்லாததனால் அது அவருக்கு வேண்டாததாக இருக்கிறது. இப்படிப்பட்ட மூன்று கால் முயல் மனிதர்கள் சமூகத்தில் பல இடங்களில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

பால்வண்ணம் பிள்ளை, மாவட்ட ஆசியர் அலுவலக எழுத்தர், அரசுக் கோப்புகளுக்கும் மேலலுவலர் அதட்டல்களுக்கும் கட்டுப்பட்டவர். வருவாய்த்துறையில் பணி புரிபவருக்கு பணிவு தவிர்க்க முடியாது என்னும் பொதுவிதிக்கு இருவரும் உட்பட்டவரே. எனினும் மனத்திற்குள் பிடிவாத குணம் உறைந்து கிடக்கும். இதனையே,

“பிராணி நூல், மிருகங்களுக்கு, முக்கியமாக முயலுக்கு நான்கு கால்கள் என்று கூறுமாம். ஆனால் பால்வண்ணம் பிள்ளையைப் பொருத்தவரை அந்த அபூர்வப் பிராணிக்கு மூன்று கால்கள்தான். சித்தி உறுதி, கொள்கையை விடாமை, இம்மாதிரியான குணங்கள் எல்லாம் படைவீரனிடமும், சத்தியாக்கிரகிகளிடமும் இருந்தால் பெருங்குணங்களாகக் கருதப்படும். அது போயும் போயும் போயும் ஒரு கலெக்டர் ஆபீஸ் குமாஸ்தாவிடம் தஞ்சம் புகுந்தால் அசட்டுத்தனமான பிடிவாதம் என்று கூறுவார்கள்” (22) என்று புதுமைப்பித்தன் கூறுகிறார்.

மெக்சிகோ எங்கிருக்கிறது என்பது பற்றி இவருக்கும் பக்கத்து எழுத்தருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. நிலநூற் படத்தை எடுத்து எப்படியும் தன் கருத்தை நிலை நாட்டிவிடவேண்டும் என்று துடித்துக் கொண்டு வரும் பால்வண்னம் பிள்ளையிடம், பால்மாடு வாங்கவேண்டிய தேவை பற்றி மனைவி கூறுகிறாள். குழந்தைகளுக்குப் பாலும் தேவையில்லை, குடும்பத்திற்குப் பால் மாடும் தேவையில்லை என்று கூறிவிட்டு சினத்துடன் வெளியேறிவிடுகிறார்.

பணிபுரியும் இடத்தில் அடங்கி ஒடுங்கிப்போகும் ஒருவன், வீட்டில் தன்னுடைய மேலாண்மையை நிறுவிக்கொள்வது ஒரு வடிகாலே! நம்முடைய சமூக அமைப்பில், பெண், கணவனின் சொல்லை மீறவே கூடாது, அப்படி அவள் மீறி, அதனைக் கணவன் கண்டுகொள்ளாது விட்டால் அவன் குடும்பத்தை நடத்தத் தெரியாதவன் என்னும் பழிக்கும் உள்ளாவான் என்னும் நிலை நடைமுறை உண்மை. எனவே, மனைவிக்குப் பாடம் புகட்டுவதற்காக எழுபது ரூபாய்க்கு வாங்கிய மாட்டை முப்பது ரூபாய்க்கு விற்றுத் தன்னுடைய குடும்பத் தலைவனென்னும் பதவிக்குப் பெருமை சேர்த்துக் கொள்கிறார் பால்வண்ணம் பிள்ளை.

3. கயிற்றரவு பரமசிவம்பிள்ளை

இச்சிறுகதையில் புதுமைப்பித்தன் அவர்கள் நனவோடை உத்தி (Stream of Consciousness) என்னும் ஒருவகை உத்தியைப் பயன்படுத்துகிறார். உளவியலின் தாக்கத்தால் இலக்கியத்தில் பிறந்த புதிய கதை எடுப்புமுறை இந்த உத்திமுறை. பாத்திரங்களின் எண்ணவோட்டத்தில் கதையை விவரனை செய்யும் இந்த நனவோடை உத்தி நவீனவாதப் புனை கதைகளில் பிரதானமாக இடம் பெற்றது. “ ஜேம்ஸ் ஜாய்சின் ‘யுலிசஸ்’ நாவலில் இவ்வுத்தி முதன்முறையாக இடம் பெற்றதாகத் திறனாய்வாளர்கள் குறிப்பிடுவர்” (23)

சமூகத்தில் பரமசிவம், பரமசிவம் பிள்ளையாகிறார் ஒரு காலகட்டத்தில். பரமசிவம் பிள்ளை பரமசிவமாக இருக்கும் போது,

“அப்பா யாரு? என்று கேட்கிறார் அழகிய நம்பியா பிள்ளை.

குழந்தை அவரது நெஞ்சை தொட்டுக் காட்டியது.

பரமசிவம் யாரு? என்று கேட்டார் அழகிய நம்பிய பிள்ளை.

‘நான்’ எனத் தனது நெஞ்சை தட்டிக்கொண்டது.

‘போடு பக்காளி போடு! பத்துப் பக்களி போடு! எனக் குழந்தையை மெய்மறந்து குதூகலத்தில் பந்துபோல் தூக்கிப் போட்டு விளையாடினார்” (24)

இது பரமசிவம் பரமசிவம் பிள்ளை ஆவதற்கு முன்னர்.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒருகடமை இருக்கிறது. அதை நிறைவேற்ற அவன் முயற்சி செய்கிறான். அது மட்டில் அவன் அந்தப்பனியை அவன் தொடர்ந்து வருகிறான். அதில் அவன் வெற்றி அடைகிறானா? அல்லது அவன் தோல்வி அடைகிறானா? என்பது அவன் கையில் இல்லை. அந்த வெற்றியும் தோல்வியும் அவனது பல்வேறு நிலைப்பாட்டின் கீழ் அமைந்துவிடுகிறது.

பரமசிவன் பிள்ளை என்கிற பாத்திரமும் அப்படித்தான். காலவெள்ளத்தில் செயற்பாடுகள் அதுமட்டில் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. அதை நிறுத்தியபாடில்லை. காலம் உருண்டோடுகிறது. இயற்கையில் எப்பாடி மாற்றங்கள் பல நிகழ்கிறதோ அவ்வாறே மனித குலத்தின் ஒவ்வொரு அங்கத்தினன் மீதும் ஒரு மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. பிறக்கிறான், வளர்கிறான், ஒரு சந்ததியை அவன் வளர்க்கிறான் காலம் அவனை வயதானவனாக்கி விடுகிறது. அவன் முதுமையை அடைந்து இறப்பு என்ற ஒன்றை அவன் அடைய நேரிடுகிறது. இந்த மாற்றம் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p132.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்

முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License