இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

நான் என்ன போன்சாய் மரமா? - கேள்வி கேட்கும் விஜயலெட்சுமியின் கவிதைகளை முன் வைத்து

முனைவர் சு. செல்வகுமாரன்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
அரசு கலைக்கல்லூரி, பரமக்குடி.


தமிழில் கவிதை எழுத்தென்பது இன்று சமூகத்தில் பல்வேறு மனிதர்களிடத்தும் ஊற்றெடுத்துப் பல்கிப் பெருகிப் பிரவாகமாய் உருக்கொள்கிறது. மனித வாழ்வியலை, மனிதனின் இன்ப, துன்ப அழகியலை, மனித விடுதலையை, இயற்கையின் ரசிப்பை எனப் பல்வேறு தளங்களில் கவிதைகள் விரிகின்றன. இது தமிழ்ச் சமூகம் அறிவுசார் சமூகமாக மாறுவதன் அடையாளமாகப் பார்த்து சந்தோசிக்கின்ற தருணமாகவே எனக்குப் படுகிறது.

ஆரம்பத்தில் இயல்பு நிலையில் எழுந்த தமிழ் கவிதைகள் கால வளர்ச்சியில் அறிவு இயக்கத்தின் நுண்ணிய பார்வையினால் கோட்பாட்டு வரையறைகளை கைப்பற்றியும் எழலாயின. ஆனாலும் ஒரு படைப்புக்குள் இருந்து கோட்பாட்டை பலப்படுத்தும் கருத்துக்களை உருவி எடுப்பதென்பதும், ஒரு கோட்பாட்டுக்குள் நின்று அதற்காகவே ஒரு படைப்பை உருவாக்குவது என்பதற்கும் வேறுபாடு இருப்பதாகவே உணர்கிறேன். அந்த வகையில் விஜயலெட்சுமியின் பால் (ழ்) முரண் கவிதைத் தொகுப்பினை நாம் வாசிக்கின்ற போது அவர் கவிதைக்குள் இருந்து பெண்ணியக் கோட்பாட்டைப் பிரதிபலிக்கின்ற நல்ல பல கவிதைகளை இனங்காண முடிகிறது மட்டுமல்லாது இதுவரை வெளிவந்த பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுதிகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது முழுக்க முழுக்க எல்லாக் கவிதைகளுமே பெண் வாழ்வை, பெண் விடுதலையைப் பேசுகின்ற கவிதையாக அமைவதும் சிறப்புக்குரியதாகிறது.

கேரளப் பல்கலைக்கழக தமிழ்த்துறையில் தலைவராக பணியாற்றி வரும் பேராசிரியை விஜயலெட்சுமி கேரள மாநிலப் பழங்குடி மக்களில் ஒரு பிரிவினரான இருளர்களின் வாழ்வியல், அவர்கள் கையாளும் நாட்டார் மருத்துவம் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டுச் சிறந்த நூல்களை வெளிக்கொணர்ந்தவர் மட்டுமல்லாது பெண்ணிய ஆய்வுகளிலும், மலையாள, தமிழ் மொழி பெயர்ப்புகளிலும் தடம் பதிக்கும் வண்ணம் தம்மை வெளிப்படுத்தி வருபவர். கைக்குள் கனல் எனும் முதல் கவிதைத் தொகுப்பினை அடுத்த இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பே பால் (ழ்) முரண் என்பதாகும்.

கவிதை ஆக்க முயற்சியில் கவிஞர் விஜயலெட்சுமி பெரிதும் வெற்றி கண்டுள்ளார் என்றே சொல்ல வேண்டும். இவரின் கவிதை மொழியைப் பொறுத்தமட்டில் பூடகமான மொழியாக அமைந்து வாசகனைத் திக்குமுக்காடச் செய்யாத எளிய மொழியாக அமைந்திருப்பதும், நொந்து போன பெண் சமூகத்தைத் தன் கவிதை வழி அரவணைத்து அவர்களை வாழ்வில் நம்பிக்கைக் கொள்ளச் செய்வனவாகவும் உள்ளன.

“கல்வியை கற்றிடு பெண்ணே
அது உன்கையில் ஆயுதம் கண்ணே
முடங்கி இருப்போம் என்றே
உன் முயற்சியை விடாதே பெண்ணே” (1)

“தகுதியை வளர்த்திட வேண்டும் - உன்
தாழ்மையைப் போக்கிட வேண்டும் உன்னை
நுகர் பொருளாக்குவோரை - நீ
நொறுக்கி எறிந்திட வேண்டும்” (2)

போன்ற கவிதை வரிகள் பெண்ணிய மேம்பாட்டை வலியுறுத்தும் கவிதைகளாகத் தொனிக்கின்றன. படைப்பு எனும் கவிதை அச்சம் நாணத்தை அடுப்பில் இட்டுத் திறமைத் தகுதியை அணிகலன்கள் ஆக்கிப் பெண்ணைக் கட்டுப்படுத்திடும் கற்பெனும் மாயையை அப்புறப்படுத்தி எனக்கு ஏதுவாய் என்னை நானே படைத்துக் கொண்டிருக்கிறேன் என்பதாய்ப் பதிவு செய்துள்ளது. மேலும் பெண்வெளியைத் தமக்குத்தாமே மீட்டுருவாக்கம் செய்கின்ற, அவள் விரும்பியபடி தகவமைத்துக் கொள்கின்ற ஒரு கவிதையாகவும் இக்கவிதை வெளிப்படுகின்றது.


ஆண், பெண் உறவின் அடிநாதமாய்த் திகழக்கூடியது பாலுறவு. உணர்வின் வெளிப்பாடாய், உணர்வின் வடிகாலாய் திகழ்கின்ற பாலுறவில் கூட ஆணாதிக்கம் தலை நிமிரும் விதத்தை,

“அந்தரங்கங்களின்
அடிவைப்பில் கூட
உன் ஆதிக்கம் தானா?
முந்தியது அவள் என்றால்
முகம் சுளித்துத் திரும்பிப் படுக்கும்
உன் முதுகில்
ஏளனப் பார்வை ...” (3)

என்பதாக “ஆதிக்கம்” கவிதையில் வெளிப்படுத்துகின்றார்.

பெண் வாழ்வு, பெண் விடுதலை, பெண் மேம்பாடு, பெண்ணைப் புதிதாகத் தகவமைத்தலின் அவசியம் எனப் பெண் குறித்த பல உட்தளங்களில் பால் முரண் தொகுப்பு பேசியிருந்தாலும் தொகுப்பின் அச்சாரமாக “ஐயோ சாமி” கவிதை அமைகிறது.

முட்டை உடைந்த மூன்று நாள் போக்கைத் தீட்டாய்க் கருதி, தீண்டாமை ஆக்கிக் கோயில் நீக்கிக் குடிசையில் இருத்தினீர். நிர்மால்ய பூசைக்காய்த் தேவனைத் தொட்டுத் தடவி அங்கம் கழுவி ஆசாரம் செய்து சாந்தி செய்ய பூசாரினி கூடாது என்றீர். எனத் தொடரும் இக்கவிதை,

“தேவியின் உடைகளைந்து
தேகம் கழுவி
பின்னால் பிட்டவளைவில்
தண்ணீர் ஊற்றி
முன்னால் முலைக் காம்புகளை
மெல்லத் தடவி
ஒடுங்கிய இடுப்பை
இறுகத் தேய்த்து
மொத்தமாய் தடவி
முழு அலங்காரமும்
ஆசாரமாய் செய்ய
பூசாரினி வேண்டாம் என்கிறீர்
என்ன தர்க்கம்?
தேவிக்குப் பிடிக்காது
என்ற பேரில்
தெய்வப் பெண்ணின்
தொடு சுகம் காண
செய்த சதியா?
ஐயோ சாமி” (4)

என்று கோயிலில் சாமிக்குப் பூசை செய்யப் பெண் பூசாரினி அனுமதிக்கப்படாததை எதிர்த்துக் கேள்வி கேட்கும் கவிஞர், அதற்கான பதிலாகச் சாமியின் தொடுசுகம் காணவே ஆண்கள் செய்த சதி என்பதாக அடையாளப்படுத்துவது முக்கியத்துவம் பெறுகிறது. பிற பெண் கவிஞர்களால் இது வரையிலும் பார்க்கப்படாத ஒரு செய்தியாகவும் படுகிறது. மேலும், இஸ்லாமிய சமயம் சார்ந்து வாங்கு ஓதிட வன்குரல் அன்றி பெண்குரல் ஆனால் பக்தி போய் காமம் பிறிட்டிடுமோ எனக் கேள்வி கேட்பதும், கிறித்தவ சமயத்தின் ஆணாதிக்கம் மீது கேள்வி எழுப்புகின்ற போது பாவமன்னிப்பென்று பலரது அந்தரங்கம் கேட்டு மகிழப் போட்ட அங்கியைக் கழற்றி என்னிடம் தந்தால் பிழைத்திடுவதென்னமோ ஐயோசாமி என்றும் மதம் சார்ந்து ஆணாதிக்கத்தைக் கேள்வி கேட்பது ஆன்மீகப் பெண்ணியத் தளத்தில் வைத்துப் பார்க்கத்தக்கது. எனினும் ஒட்டு மொத்தமாக இவரின் எழுத்துக்களில் தீவிரவாதப் பெண்ணியத்தின் தாக்கம் (Radical feminisam) எதிரொலிப்பதைக் காணமுடிகிறது. “ஆண்களால் உருவாக்கப்பட்ட அனைத்து அமைப்புகளையும் சமூக மதிப்புகளையும் உடைத்தெறிந்து பெண்கள் மட்டுமே (Womenz only) எதிலும் எங்கும் முழுவதும் பெண்ணாட்சியே (women oriented movement practically every where even in political action)” 5 என்பதாகத் தீவிரவாதப் பெண்ணியம் பற்றி தனது நூலில் இரா. பிரேமா குறிப்பிடுவதும் இங்கு நினைவில் கொள்ளத்தக்கதாகும்.


“காக்கும் செருப்பே
காலைக் கடித்தது
காலப் போக்கில்
ஒவ்வாமல் இருந்த
செருப்பும் காலும்
ஒத்துப் போய் விட
இதில் அரம் போனது
செருப்பிற்கா
மரத்துப் போனது
காலுக்கா....” (6)

என்பதாக “இணக்கம்” கவிதை எழுப்பும் கேள்வியும் குறியீட்டு நிலையில் முக்கியமான ஒரு விமர்சனமாக அமைகிறது. “கூடு விட்டுக் கூடு பாய்ந்து” கவிதையில் கவிதை எழுத்தோடு ஆண், பெண்ணை ஒப்பிட்டுப் பேசும் கவிஞர் வெறுப்பும் விரக்தியும் வெத்துப் பெருமூச்சும் ஏக்கமும் எதிர்ப்பும் எரிச்சலும் சலிப்பும் இல்லாமல் கவிதை நயம் சொட்டச் சொட்டக் காதல் ரசம் ஊற்றெடுக்க வர்ணணை மெட்டுகள் வலம் வர ஒரு அருமையான அணிநயக்கவிதை எழுத வேண்டும். என ஆசைப்படும் அவர்,

“கொஞ்ச நேரம்
கூடுவிட்டுக் கூடு பாய்ந்து
ஆம்பிள்ளையாய்
ஆனால் என்ன” (7)

என்று ஒரு கேள்வியினை முன் வைக்கின்றார். இக்கேள்வி பெண் எப்போதுமே சந்தோஷத்துக்கு அப்பாற்பட்டவளாக, வலியிலும், விளிம்பு நிலையிலும் வாழ்பவள் என்பதை எதிர் நிலையில் பிரதிபலிக்கின்றது. அத்தோடு இத்தகைய நிலையில் வாழும் பெண்களால் எழுதப்படும் கவிதையானது துயரத்தை எழுதும் கவிதையாகத்தான் இருக்குமே ஒழிய மகிழ்ச்சி ஊற்றெடுக்கும் வர்ணனைக் கவிதையாக அமையாது என்பதும் சிந்தனைக்குரியது. மேலும் பெண்ணை இயற்கையாகப் பாவிக்கும் ஆணின் மனநிலையினைப் பற்றி பேசுகின்ற போது,

“இயற்கையைப் பொருத்தமாகப்
பெண்ணென்றனர்
ஆட்கொள்ளவும்
அழிக்கவும்
சௌகரியமாய்
அடக்குமுறையின்
அவலங்களை எதிர்த்து
இயற்கைச் சீற்றமாய்
என்று எழப்போகிறாய்?” (8)

என்று இயற்கையை ஆணின் செயலுக்கு ஒத்து வருவதாகக் குறிப்பிடும் அவர் அதே இயற்கையினைச் சுட்டி இயற்கையின் சீற்றமாய் என்று எழப்போகிறாய் என்ற கேள்வியினையும் முன்வைக்கின்றார். ஆகப் பெண் அமைதிக்கு மட்டும் பெயர் பெற்றவளல்ல. மாறாக ஆதிக்கம் செய்யும் தகுதியும் உடையவள் என்பதை அடையாளப்படுத்துகிறார்.


விஜயலெட்சுமி தனது கவிதைகளில் ஆங்காங்கே ஆணைப் பார்த்தும் பெண்ணைப் பார்த்தும் கேள்வி கேட்பதென்பது கவனத்திற்குரியது. இவை அவரது படைப்பு மனத்தையும் தாண்டியதாக அவருக்குள்ளிருக்கும் சமூகச் சீர்திருத்த எண்ணமும், திறனாய்வுப் பார்வையும் கவிதையில் மேலோங்குவதையே உணர்த்துகிறது.

மேலும் “தோற்றம்” கவிதையில் பூங்கொடியின் தயவில் பூத்துக் குலுங்கும் வெத்துக் கரண்டு கம்பம் என்பதாகப் பெண்ணின் பின்னணியிலேயே ஒரு ஆணின் வெளி உலக வெற்றிகள் அடங்கிக்கிடப்பதை அடையாளப் படுத்துவதும், “நீ” எனும் கவிதையில் விட்டுக் கொடுத்தல் என்பதை முழுமையாக எனக்கு விட்டுக் கொடுத்த நீ, என ஆணாதிக்கத்தின் அவலத்தைப் புலப்படுத்துவதும், “பெண்ணா என்ன அது” எனும் கவிதையில்,

“பெருத்த குண்டியும்
சிறுத்த இடையும்
கனத்த முலையும்
உடைய
இருகால் பிராணி” (9)

எனப் பெண்ணுக்கு இலக்கணம் வகுப்பதுமாய் ஒவ்வொரு கவிதையும் முழுவீச்சாய் ஆணாதிக்கத்தை நேரடியாகவும், குறியீட்டு நிலையிலும் கேள்வி கேட்கத் துணிகிறது. இதுவே அவரது கவிதைக்கான வெற்றியாகவும் அமைகிறது.

“சுடச்சுட” கவிதை ஆணியச் சமூகத்தால் பெண் மீது எழுப்பப்பட்டிருந்த அநேகமான அண்டப்புழுகுச் சித்திரங்களைக் கட்டுடைக்கும் மிக முக்கியமான பணியைத் துணிகரமாகச் செய்கிறது.

“வேசனைக் கூட்டிவா
விளையாட வேண்டும்
விதவனை விரட்டிவிடு
அபச குணத்திற்காய்
தேவடியான் எங்கே
தெருவிலே தேடிப்பார்
முண்டனைக் கண்டால்
காரிய நட்டம்
வாயாடன் வருவான்
வாசலை அடைத்திடு” (10)

மேலும், உயிர் சுக்கிலத்தை இழந்தது அவன் எனினும் கற்பை இழந்து விட்டாள் என்று கதை கட்டும் சமூகம் எனும் கற்பு குறித்த கவிதையும், உனக்குப் பிடித்தது போல் கத்தரித்துக் கட்டமைத்து வைத்துக் கொள்ள நான் என்ன போன்சாய்மரமா? எனக் கேள்வி கேட்கும் ஒவ்வொரு கவிதையும் ஆணாதிக்கத்துக்கு எதிரானதாகவும், பெண்ணிய விடுதலையை மையப்படுத்தும் மிக முக்கியமானக் குரலாகவும் ஒலிக்கின்றன.

அடிக்குறிப்புகள்

1. கனலி விஜயலெட்சுமி - பால்(ழ்)முரண், ப - 63.

2. மேலது, ப- 64

3. மேலது, ப- 60

4. மேலது, பக்- 49, 50

5. பிரேமா.இரா - பெண்ணியம் ஆழமும் அகலமும், ப - 67

6. கனலி விஜயலெட்சுமி - பால்(ழ்)முரண், ப - 59.

7. மேலது, ப- 80

8. மேலது, ப- 84

9. மேலது, ப- 70

10. மேலது, ப- 73

(குறிப்பு: துணை நூல் பட்டியலுக்கான நூல்களைப் பட்டியலிடும் போது நூலின் பெயர், நூலாசிரியர்(கள்), வெளியீட்டாளர் (பதிப்பகம், ஊர்), பதிப்பித்த ஆண்டு, பதிப்பு ஆகியவற்றை வரிசையாகக் குறிப்பிடுவது கட்டுரைக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமையும் - ஆசிரியர், முத்துக்கமலம் இணைய இதழ்)

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p137.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்

முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License