Muthukamalam.com / Essay General - கட்டுரை - பொதுக்கட்டுரைகள்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            ISSN  2454-1990
muthukamalam muthukamalam
உங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.

முத்து: 13 கமலம்:6
உள்ளடக்கம்

சமையல்

Alexa Rank


பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

சத்தர்ம புண்டரீக சூத்திரத்தினூடாக (LOTUS SUTRA) வெளிப்படும் பௌத்த சிந்தனைகள்

திரவியராசா நிரஞ்சினி
உதவி விரிவுரையாளர், தத்துவவியல் மற்றும் விழுமியக்கற்கைகள் துறை,
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.


சத்தர்ம புண்டரீக சூத்திரத்திரம் (LOTUS SUTRA) - அறிமுகம்

பௌத்த மதம் உலகில் தோன்றிய புராதன மதங்களில் ஒன்றாக விளங்குகிறது. பௌத்தமதப் பிரிவுகளுள் பிரதான பிரிவாக அமைவது மகாயான பௌத்தமாகும். மகாயானம் என்றால் “மாபெரும் வாகனம்” என்பது பொருள். மகாயான பௌத்தத்தில் மகாயான சூத்திரங்கள் முக்கியமானவை. மகாயான சூத்திரங்களுள் பாலித் திரட்டில் உள்ள தொடக்கச் சூத்திரங்கள் புத்தரின் சொந்த சொற்களால் ஆனவை. இதனடிப்படையில் மகாயான பௌத்தம் பல சூத்திரங்களைக் கொண்டது. இவை பொதுவாக இருவகைப்படும்.

1. கௌதம புத்தரால் அருளப்பட்டவைகள்

2. கௌதம புத்தரின் மறைவின் பின் அவரின் சீடர்களால் முன்மொழியப்பட்டவைகள்

இந்த இருவகையினுள் பெரும்பாலான சூத்திரங்கள் காணப்பட்டாலும் பிரதானமானவை ஒன்பதாகும். இவை மகாயானிகளின் படி கட்டாய வழிபாட்டிற்குரியவைகள். அவற்றுள் ஒன்றே சத்தர்ம புண்டரீக சூத்திரம் ஆகும். “Sad Dharma Pundarika Sutra” என்பதில் Sad என்பது அபூர்வமானது, நேர்த்தியானது மற்றும் சரியானது என்றும், Dharma என்பது பௌத்த போதனையையும்; Pundarika என்பது வெள்ளை நிறத் தாமரையையும் குறிக்கின்றது. இதனை ஒன்றிணைத்தே சத்தர்ம புண்டரீக சூத்திரம் (Sad Dharma Pundarika Sutra) என்ற பெயர் வழங்கப்படலாயிற்று.

இதனைத் தமிழில் வெண்தாமரை சூத்திரம் என்றும், ஆங்கிலத்தில் “LOTUS SUTRA” என்றும் அழைப்பர். இச்சூத்திரம் ஏனைய சூத்திரங்களின் ‘அரசன்;’ என வர்ணிக்கப்படுகிறது. (The King of Sutras) மேலும் பரந்தளவில் செல்வாக்கு பெற்றதொரு சூத்திரமாகவும் இது விளங்குகிறது.

வெண்தாமரையானது எந்தவித கலங்கமுமற்ற தூயவெள்ளை நிறத்தையுடையது. அது உருவாகும் நிலப்பகுதி பல்வேறுபட்ட அழுக்குகள் நிறைந்த சேற்றுச் சூழலாகும். ஆயினும் அதன் தூய்மையில் எந்தவிதக் களங்கமும் இருக்காது. இதன் உட்கருத்தானது மனிதன் வாழ்கின்ற இந்தப் பூமிச் சேறுகள் போன்ற அழுக்குகள் நிறைந்த சூழலாகும். இது இவ்வுலகில் உள்ள துன்பங்களையும் அநீதிகளையும் குறிக்கின்றது. இருப்பினும் இவ்வகையான பூமியிலிருந்து மனிதன் வெண்தாமரை போன்ற பரிநிர்வாணநிலையை அடைய வேண்டும். இதற்குத் துணைபுரிவதே இச்சூத்திரத்தின் நோக்கம்.

இந்தியாவில் இருந்து வந்த பல்வேறுபட்ட மொழிபெயர்ப்புகளின் அடிப்படையில் சீனாவில் இச்சூத்திரம் தொடர்பான கற்கைகள் நடைமுறையில் உள்ளன. பல மொழிகளில் இச்சூத்திரம் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. உதாரணமாக The lotus of the correct Dharma, The lotus of the wonderful Dharma, Lotus Sutra போன்றவற்றைக் குறிப்பிடலாம். பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டாலும் Prakrit மொழிபெயர்ப்பு பொதுவாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அமைந்துள்ளது. இச்சூத்திரம் பிரதானமாக இரு நோக்கங்களைக் கொண்டது.

* வாழ்க்கையில் புத்த நிலையில் முழுமையான திருப்தியை அடைதல்.

* வாழ்வின் எல்லாக் காலகட்டங்களிலும் நிலவும் இயற்கையாய் அமைந்த மாயைகள் மீதான பயத்திலிருந்து விடுதலை பெறல்

என்பனவாகும்.

இச்சூத்திரத்தில் இருபத்தெட்டு விடயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இதில் பதினான்கு கோட்பாடுகள் சார்ந்ததாகவும், பதினான்கு அடிப்படைகள் சார்ந்ததாகவும் அமைக்கப்பட்டுள்ளன.


சத்தர்ம புண்டரீக சூத்திரத்தின் முக்கியத்துவம்

* பௌத்தத்தின் பல சிந்தனைப் பள்ளிகளுக்கு அடித்தளமாக அமைந்துள்ளது. (Nichchiran School of Buddhism, Cheonatta, Tendai )

* பல்வேறு சூத்திரங்களின் “ராஜா” என வர்ணிக்கப்படுகின்றது.

* புத்தநிலையை அடைவதற்கான போதனைகள், வழிமுறைகளை உள்ளடக்கியுள்ளது.

* புத்தரின் உபதேசத் திறனை வெளிப்படுத்தப்படுகிறது.

* உயர்ந்த மனிதநேயப் பண்பினைக் கொண்டு அமைந்துள்ளமை.

* பௌத்த போதகர்களுள் பிரசித்தி பெற்ற அசங்க மற்றும் வசுபந்துவின் வணக்கத்திற்குரிய சூத்திரம். குறிப்பாக, இச்சூத்திரத்தின் பின்பாகத்தில் வசுபந்து அருளிய சிறு கருத்து உரை இணைக்கப்பட்டுள்ளதோடு இன்று இந்தியாவில் ஒரு சாத்திரமாகவும் பின்பற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

* விடுதலைக்கான போதிசத்துவ புத்தி ஞானமே சரியான மார்க்கம் என்பதனை வலியுறுத்துகிறது.

* போதி சத்துவ நிலையை அடைவதற்கான வழிமுறைகளை கூறுதல்.

* பொதுமையான நிர்வாணம் மற்றும் முத்தி போன்ற வெளிப்படுத்தல்களைக் கொண்டுள்ளன.

சத்தர்ம புண்டரீக சூத்திரம் கூறும் பௌத்தக் கருத்துக்கள்

புத்தரின் இயல்புகள், புத்த நிலை, போதிசத்துவ நிலை, புத்தராவதற்கான உறுதி மொழிகள், தர்மம் முதலிய பௌத்தக் கருத்துக்கள் இச்சூத்திரத்தில் கூறப்படுகிறது. புத்தர் என்பவர் நிலை பேறானதொரு உட்பொருளாகவும் நிப்பானத்தை அடைய முயற்சிக்கின்றவர்களுக்கு உதவி செய்பவராகவும் விளங்குகிறார். இவர் அனைவரிடத்தும் அன்பு செலுத்துபவராக (Father of All Beings) பரிநிப்பானத்தை அடைந்தாலும் உலகத்தோடு தொடர்பினை வைத்துக் கொண்டிருப்பவராகவும், இவரின் மறைவு இன்னொரு புத்தருக்கான ஆரம்பமாகவும் கருதப்படுகின்றது. அழிவடையாத ஒரு தொடர்ச்சிநிலை இதில் அமைந்துள்ளது.

இத்தகைய புத்தரின் தொடர்ச்சி வெளியில் இடம்பெற்றுக் கொண்டே இருக்கின்றது. ஆனால் காலத்திற்குக் காலம் பல்வேறு வகையாக இது இடம் பெறுகிறது. மேலும் இச்சூத்திரத்தில் வேறுபாடின்றிய அனைவருக்குமான புத்தநிலை வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்கள், கெட்டவர்கள், மிருகங்கள் போன்றவர்களும் புத்தராவதற்கான ஆளுமையைப் பெற முடியும். அனைத்து உயிர்களும் சமம். இதற்கமைவான பல கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இதனடிப்படையில் இச்சூத்திரம் அனைவரினதும் ஆன்மீக சமத்துவம் பற்றிய சூத்திரம்’ என்ற சிறப்புப் பெயரையும் பெற்றுள்ளது.


புத்தரின் எல்லையற்ற போதிசத்துவ நிலைகள் இச்சூத்திரத்தில் கூறப்பட்டுள்ளன. புத்தர் போதனைகளினூடாக உலகைக் காப்பாற்றுபவர், அனைவருக்கும் பாதுகாப்பை வழங்குபவராகவும் அத்துடன் இதில் பல்வேறு வகையான தியான முறைகளும், போதனை முறைகளும் உள்ளடங்கியுள்ளன. இதனால் ‘போதிசத்துவ நிலைக்கான கற்பனை வடிவம்’ இச்சூத்திரம் ஆகும். இதில் எதிர்கால புத்தரான மைத்திரேயர் தொடர்பான முரண்பாடுகளும் இணைக்கப்பட்டுள்ளன. இதன்படி அனைவருமே புத்த பிறவிகளாகவே மதிக்கப்படுகின்றனர். மேலும் சடாபிரிபுத்தா என்ற போதிசத்துவர் தொடர்பான விடயங்கள் இதில் கூறப்பட்டுள்ளது. நாம் சந்திக்கும் நபர் ஒன்றில் நல்லவராகவோ அதேவேளை கெட்டவராகவோ அமையலாம். ஆனால் நாம் அதனை ஆராயாது அனைவருக்கும் மரியாதை செலுத்த வேண்டும். காரணம் அவர்களும் ஒரு நாள் புத்தராகலாம் என்கின்ற கருத்துக்கள், புத்தரின் புறநிலை தொடர்பான சக்தி, போதிசத்துவர் மற்றும் அவரது அதிசய ஒலி அதாவது அவருடைய குரல் தொடர்பான அவலோகிஸ்வர் - கடவுள், முதலிய போதிசத்துவ கருத்துக்கள் இச்சூத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் போதிசத்துவரின் பாதையுடன் தொடர்புடைய பிரதான வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன. இதுவே மகாயானத்தின் GREAT VEHICLE ஆகும். அதிலும் மகாயான என்ற பிரதான வாகனத்தின் உதவியுடனே புத்தர் பல்வேறு விதமான போதனை முறைகளை மேற்கொள்வதையே இச்சூத்திரம் வலியுறுத்துகின்றது. இது வித்தியாசமான சூழ்நிலைகளையும் வேறுபட்ட மன நிலைகளையும் வழிப்படுத்துவதற்கான சிறந்த முயற்சியாக நாம் பார்க்கலாம்.

இதுபற்றி “PAUL WILLIAMS” கூறும் போது, புத்தரின் போதனைகளை மேலோட்டமாக பார்க்கும் போது பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக தோன்றுகிறது. ஆனால் அது பல்வேறுபட்ட நபர்களுக்கு பல்வேறுபட்ட சூழலில் வழங்கப்பட்டதாகப் பார்க்கும் போது முரண்பாடுகள் ஏற்படுவதில்லை. இது ஒரு ஆற்றைக் கடப்பதற்கு உதவி செய்வதைப் போன்று பயணம் முடியும் வரை மட்டுமே உதவும். இதில் பயன்படுத்தப்பட்டுள்ள போதனைமுறை வித்தியாசமானது. ஒரு பௌத்த வாகனம் அறிவின் பல்வேறுபட்ட வகைகளுடன் தொடர்புபடுவது எனக்கூறமுடியும். இச்சூத்திரத்தின்படி பௌத்தத்தின் அடிப்படையான போதனைகளை பல்வேறு மட்டத்தில் குறிப்பிடுகின்றது. அத்துடன் ஏனைய எல்லா சூத்திரங்களுக்கும் ஒரு முதன்மையான சூத்திரமாக இது திகழ காரணமாகவும் அமைவது இவ்விடயமே. இச்சூத்திரத்தின் சிறப்பினை GOLDEN WASTON என்பவரும் வலியுறுத்தியுள்ளார். இவரின் கருத்துப்படி இச்சூத்திரம் ஒரு ஆன்மீக மருந்து என்கிறார்.

தர்ம போதனைக்குரியதாக இச்சூத்திரம் விளங்குகிறது. தர்மத்தை நாம் பின்பற்றினால் அமைதியான, சந்தோசமானதும், அமைதி, ஞானம் மற்றும் செல்வம் போன்றவற்றை அடையலாம் என்பதும், அனைவருக்கும் போதிக்கும் தர்ம ஆசிரியருக்குக் கீழ்படியும் விடயத்தைச் சார்ந்தது. அதாவது உயர்நிலை பண்புகள் இச்சூத்திரத்தில் கூறப்பட்டுள்ளன. அவற்றைப் பெற்றவர்களே வாழ்க்கையில் உயர்நிலை அடைவார்கள். அவற்றுள் வாசித்தல், ஓதுதல், விளங்கப்படுத்தல், ஆராய்தல், பிரதிபண்ணல் மற்றும் விநியோகித்தல் போன்றவை உள்ளடங்கும். இவற்றைத் தன் வாழ்க்கையில் செய்பவர்கள் கட்டாயம் உயர்நிலை அடைவார்கள் என்பதை உணர்த்துகிறது. பிரபஞ்ச ஒழுக்கம் தொடர்பாகவும் கூறப்பட்டுள்ளது. ‘சமந்தபாதர’ என்ற நிலையை இது வலியுறுத்துகின்றது. இதற்கமைவான சூத்திரங்களைப் பின்பற்றுபவர்களே புத்தரால் பாதுகாக்கப்படுவர்கள் என்ற விடயமும் இதில் கூறப்பட்டுள்ளன.

பௌத்தத்தின் படி புத்தராவதற்கான உறுதி மொழிகள் இச்சூத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, மகாயானத்தை பின்பற்றுபவர்கள் மகா காசியப்ப சப்புதி, மகாகாட்டாயநா என்ற நிலையை அடைவர். இதில் அரஹத் நிலையை அடைவதற்கான உறுதிநிலையை அதாவது பௌத்த மதத்தின் உயர்ந்த நிலையான தரத்தை அடைய விரும்புபவர்கள் தன் எதிர் மனநிலையில் இருந்து மாறி நேர்நிலையான மனத்தோற்றத்தை கொண்டிருத்தல் தொடர்பான கருத்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.


முடிவுரை

சத்தர்ம புண்டரீக சூத்திரம் பௌத்த மதத்தின் பல சிந்தனைப்பள்ளிகளுக்கு அடித்தளமாக அமைந்துள்ளது. இதில் புத்தர், புத்தரின் இயல்புகள், போதிசத்துவ நிலை, புத்தராவதற்கான உறுதி மொழிகள், தர்மம் முதலிய பௌத்தக் கருத்துக்களும் மேலும் பல விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. போதிசத்துவர் தொடர்பான எண்ணக்கருக்களின் தந்திரோபாயமான பயன்பாடுகள், ஊகக்கதைகள் என்பன சிறப்பம்சங்களாக அமைந்துள்ளன.

உசாவியவைகள்

1. Essica Ganga (2016), “Donald Lopez on the Lotus Sutra ”, Princeton University Press Blog

2. Lopez, Donald S, Jr. (2016), The Lotus Sutra: A Biography, Princeton and Oxford: Princeton University Press

3. Reeves, Gene (Dec 1, 2001), "Introduction: The Lotus Sutra and Process Thought" . Journal of Chinese Philosophy

4. Groner, Paul; Stone, Jacqueline I (2014), "The Lotus Sutra in Japan". Japanese Journal of Religious Studies

5. Leary, Joseph S. (2003), "Review of Gene Reeves, ed. A Buddhist Kaleidoscope: Essays on the Lotus Sutra". Japanese Journal of Religious Studies

6. தேவிபிரசாத் சட்டே பாத்யாய - கரிச்சான் குஞ்சு (தமிழில்), 1976, “இந்திய தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும்”, சென்னை புக்ஸ் - சென்னை -02,

7. லக்ஷ்மணன். கி., 1960, “இந்திய தத்துவ ஞானம்”, பழனியப்பா பிரதர்ஸ் - சென்னை- 600 014

8. இரத்தினசிங்கம். வ., 2008, “உலக மதங்கள்”, மணிமேகலை பிரசுரம் - சென்னை.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p138.html


ISSN 2454 - 1990
சிறந்த நூலாசிரியர் பரிசு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...சிரிக்க சிரிக்க
எரிப்பதா? புதைப்பதா?
அறிவை வைக்க மறந்துட்டானே...!
செத்தும் செலவு வைப்பாள் காதலி!
வீரப்பலகாரம் தெரியுமா?
உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
இலையுதிர் காலம் வராது!
கண்ணதாசனின் நகைச்சுவைகள்
குறைச்சுத்தான் எடை போடறாரு...!
அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
இடத்தைக் காலி பண்ணுங்க...!
சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
மாபாவியோர் வாழும் மதுரை
இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
கவிஞரை விடக் கலைஞர்?
பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
கடைசியாகக் கிடைத்த தகவல்!
மூன்றாம் தர ஆட்சி
பெயர்தான் கெட்டுப் போகிறது!
தபால்காரர் வேலை!
எலிக்கு ஊசி போட்டாச்சா?
சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
சம அளவு என்றால்...?
குறள் யாருக்காக...?
எலி திருமணம் செய்து கொண்டால்?
யாருக்கு உங்க ஓட்டு?
வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
கடவுளுக்குப் புரியவில்லை...?
முதலாளி... மூளையிருக்கா...?
குட்டிக்கதைகள்
எல்லாம் நன்மைக்கே...!
மனிதர்களது தகுதி அறிய...
உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
அழுது புலம்பி என்ன பயன்?
புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
கடவுளைக் காண உதவும் கண்ணாடி
தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
சிங்கத்திற்கு வாழைப்பழம்!
வலை வீசிப் பிடித்த வேலை
சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
கல்லெறிந்தவனுக்கு பழமா?
சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
அக்காவை மணந்த ஏழை?
சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
இராமன் சாப்பாட்டு இராமனா?
சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
கழுதையின் புத்திசாலித்தனம்
விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
ஆணவத்தால் வந்த அழிவு!
சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
சொர்க்க வாசல் திறக்குமா...?
வழுக்கைத் தலைக்கு மருந்து
மனைவிக்குப் பயப்படாதவர்
சிங்கக்கறி வேண்டுமா...?
வேட்டைநாயின் வருத்தம்
ஆன்மிகம் - இந்து சமயம்
ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
தானம் செய்வதால் வரும் பலன்கள்
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
பிரதோஷம் எப்படி விஷேசமானது?
விநாயகர் சில சுவையான தகவல்கள்
சிவராத்திரி விஷேசமானது ஏன்?
முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
எப்படி வந்தது தீபாவளி?
தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
அனுமனுக்கு வடை மாலை ஏன்?
திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
முருகா என்றால் என்ன கிடைக்கும்?
குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
விபூதியின் தத்துவம்
கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
இறைவன் ஆடிய நடனங்கள்
யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                       


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License