இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

விஞ்ஞானவாத மெய்யியல் - மகாயான பௌத்தத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு

திரவியராசா நிரஞ்சினி
உதவி விரிவுரையாளர், தத்துவவியல் மற்றும் விழுமியக்கற்கைகள் துறை,
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.


சத்தர்ம புண்டரீக சூத்திரத்திரம் (LOTUS SUTRA) - அறிமுகம்

ஆய்வு அறிமுகம்

அவைதீக மதங்களில் ஒன்றாக விளங்கும் பௌத்த மதம் மூன்று பிரதான பிரிவுகளைக் (மகாயான பௌத்தம்., ஹீனாயான பௌத்தம், வஜ்ரயானம்) கொண்டது. முற்கால மற்றும் தேரவாத, ஹீனாயான மரபுகளில் காணப்படும் பௌத்தக் கருத்துக்களின் விமர்சனமாகவும், பௌத்த மெய்யியலின் முழுமையான வெளிப்பாடாகவும், மகாயான பௌத்தம் தோற்றம் பெற்றது. இதனது வளர்ச்சியினை

•பிரக்ஞாபாரமித்தா சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்ட நாகர்ஜ}னரின் சூனியவாதம்

•இலங்காவதார சூத்திரம், வெண்தாமரைச்சூத்திரம், அஸங்கர், வசுபந்துவின் எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்ட யோகாச்சாரம், அல்லது விஞ்ஞானவாதம் என இரு வழிகளில் காணலாம்.

யோகாச்சார பௌத்தம்

மகாயான பௌத்தத்தின் பிரதான இருவகைப் பிரிவுகளுள் யோகாச்சாரமும் ஒன்று. யோகாச்சாரம் என்ற பொருளின் அர்த்தம் ‘யோகம் பயிலுதல்’ என்பதாகும். யோகத்தை பயிலுபவர்கள் யோகாச்சாரர்கள் எனப்படுவர். இதில் யோகம் என்ற விடயம் சிறப்பிடம் பெறுகின்றது. கீழைத்தேய மெய்யியல் வரலாற்றில் பல சிந்தனா கூடங்களிலும் இதனது செல்வாக்கினை நாம் காணலாம். யோகாச்சாரர்கள் இவ்வாறான பொது விடயம் ஒன்றை ஏற்பதற்குக் காரணம் இவர்கள் யோகத்தைப் பொதுவான பார்வையை விடுத்து தனிப்பட்டதொரு வகையில் வற்புறுத்துகிறார்கள் என்பதுதான்.

யோகாச்சாரர்களின் பார்வையில் யோகம் என்பது, தியான சமாதியும் தன்னைக் கடந்து அப்பாற்படும் நிலையும் ஆகும். அத்துடன் புறத்தே உள்ள பொருள் அனைத்திலிருந்தும் உணர்வைத் திரும்பப் பயின்று, தூய உள்ளுணர்வைப் பெறும் ஒரு நுண்ணிய வழியாகவும் இது அமைகிறது. இப்படியொரு வித்தியாசமான முறையில் யோகத்தை நோக்கும் தன்மையிலேயே யோகாச்சாரர்கள் இதனை ஏற்று அதனை பிரதான அம்சமாக கொண்டு செயற்படுகின்றனர். இவ்வகையான யோகமானது தத்துவஞானத்தைப் பெறுவதற்கான சிறப்பானதொரு வழிமுறையாகும்.

யோகத்தை நம்பும் ஏனைய தத்துவவாதிகள் பிரதான, அதிசயச் சக்தி வாய்ந்ததுமான யோக அப்பியாசத்தால் வரும் உயர்வான மானுட சக்தியைதான் அவர்கள் கொண்டாடுகிறார்கள். அத்துடன் யோகத்தைப் பெற வேண்டுமாயின் மானிடன் ஒருவன் உலகப் பந்தங்கள் எனும் சங்கிலிப் பிணைப்பிலிருந்து உணர்வை வெளியே எடுத்தேயாக வேண்டும். ஆனால் இவ்வகையான பழமைவாதிகளின் கருத்திலிருந்து விடுபட்டு விடுகின்றனர் யோகாச்சாரர்கள். இவர்கள் யோகம் பற்றி ஆழமாக ஆராய்ந்து பல விரிவான நூல்களை எழுதினர். அவை அனைத்தின் கருத்துமே தியானத்தையும் தன்னையும் கடத்தலைப் பற்றி அறிந்திருப்பதாகும்.

எனவே ஒருவன் யோகத்தைப் படிப்படியாகப் பயின்று உலகத்தை உள்ள பொருளாகக் கொள்ளும் பந்த பாசங்களிலிருந்து படிப்படியாக விடுபட்டு முன்னேற முடியும் என்பது யோகாச்சாரர்களின் கருத்தாகும். இவ்வகையான யோகத்தின் மூலம் பௌதீக உலகமெனும் பொய் மற்றும் மாயையில் சிக்கித் துயருறுவதில் இருந்து விடுபட முடியும். இவ்வாறு விடுபடுகின்றவன் ‘யோகி’ எனப்படுகிறான். இவ்வகையான அவர்களது தத்துவக் கருத்தினை விஞ்ஞானவாதம் மூலம் மேலும் நன்றாக அறியலாம்.


விஞ்ஞான வாதம்

இதனை விஞ்ஞானவாதம் அல்லது “விஞ்ஞாதிமாத்ரா” எனவும் அழைப்பர். இதில் விஞ்ஞானம் போன்ற சொற்கள் குறிப்பது மனம், உணர்வு அல்லது பிரக்ஞை என்பதையேயாகும். ஆனால் இதனை நாம் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது. அதாவது இவ்வகை பிரக்ஞை என்பது மரபு வகையிலான, வழக்கமாக நாம் கேள்வியுற்றதைப் போன்றது. அதாவது இங்கு பிரக்ஞை என்பது நமக்குள் இருக்கும் ஒரு ஆன்மப் பொருளைக் குறிக்கவில்லை. யோகாச்சாரிகளின் பார்வையில் பிரக்ஞை அல்லது மனம் என்பது ஒரு ஓடை போன்றது. தெளிவாகக் கூறினால் மனம் என்பது ஓடி மறையும் எண்ணங்களின், உணர்வுகளின் ஓட்டமாகும். இதனை இவர்களின் பார்வையில் ‘ஸ்நானம்’ எனக் குறிப்பிடுவர்.

இதன்படி ‘ஸ்நானம்’ என்பதன் பொருள் நீர்ப்பெருக்கு என்பதாகும். இவர்களின் கருத்துப்படி மனதிற்கான பொருளும் இதுவே. அதாவது மனம் என்பதில் வெறும் எண்ணங்கள் மட்டுமே உள்ளன. இதற்கு மாறாக, குறிப்பாக எமது எண்ணங்களைத் தவிர நமது மனதிற்குப் புறம்பே நாம் காணும் இந்த பொருள் மயமான, பௌதீக உலகம் என ஒன்றுமில்லை, பௌதீக உலகம் என ஒன்றுமில்லை, அனைத்துமே மாயையே. இதனையே விஞ்ஞான வாதம் வலியுறுத்துகின்றது. இயல்பான நாளாந்த வாழ்க்கையில் நாம் ஆறுகள், மலைகள், மரங்கள், பௌதீக பொருட்கள், கட்டிடங்கள், பாதைகள் போன்ற பல விடயங்களைப் பயன்படுத்துகின்றோம். அதேவேளை அவை பற்றிய எண்ணங்களும் உணர்வுகளும் எம் மனதில் காணப்படும். ஆனால் இவர்கள் இக்கருத்தினை முழுமையாக எதிர்கின்றனர்.

இவர்களின் பிரதான கருத்து எண்ணங்கள் மட்டுமே உள்ளன. இவை தவிர மனதிற்கு வெளியே, இந்த எண்ணங்களோடு தொடர்பு படுகின்ற நிஜமான பொருள் என ஒன்றுமில்லை. அனைத்தும் வெறும் மனதளவிலேயே இருக்கின்றன. உலகப் பொருட்களின் தொடர்பில்லாமலேயே இயல்பாக நமது மனதில் அவை தொடர்பான எண்ணங்களும் உணர்வுகளும் இருக்கின்றன. ஆனால் அதனை நாம் தவறுதலாக உணர்ந்து கொண்டு மனதிற்கு வெளியே ஒரு பௌதீக உலகம் இருப்பதாக நாம் நினைத்துச் செயற்படுகின்றோம். இதனையே இந்தியத் தத்துவ வாதத்தில் ‘நிராலம்பனவாதம்’ எனக் குறிப்பிடுவர். அதாவது எண்ணங்களுக்கும், உணர்வுகளுக்கும் பொருட்களும் எந்தவித பற்றும் இல்லை, எண்ணங்களுடன் தொடர்புடைய உலகப் பொருள் என்று ஒன்றுமில்லை.

உதாரணமாக, நாம் நீலம் என்ற நிறத்தைப் பற்றிச் சிந்தித்தால் நீலம் பற்றிய எண்ணம் எம்மிடம் உள்ளது. இதற்கு எந்த உலகப் பொருட்களின் பிடிப்பும் எமக்கு அவசியமில்லை அப்படி நீல நிறம் தொடர்பான ஒரு உலகப் பொருளும் உண்டா என்பதும் ஆய்விற்குரியதொரு விடயம். இவ்வாறே ஒவ்வொரு விடயங்களும் எண்ணங்கள் மட்டுமே உண்மை. மற்றவை அனைத்தும் மாயைகளே.


முழுமையாக இத்தத்துவத்தின் நோக்கமும் மனதிற்கு வெளியே எதுவும் இல்லை என்பதை நிறுவுவதேயாகும். இதனை வேறுவிதமாகக் கூறினால் வெளியே இருக்கும் எப்பொருளும் இல்லையென்று மறுக்கும் கொள்கை அதாவது ‘பாஹ்ய- அர்த்த - நிரோவாதம்’ எனலாம். இதனை ஒத்தக் கருத்தினை இந்தியத் தத்துவமாகிய பேக்லியின் (Berkely) வாதமாகும். இவர் தனது கருத்து முதல் வாதத்தை நிலைநிறுத்துவதற்காக இதற்கு ஒப்பானதொரு கருத்தினை முன் வைத்துள்ளார். இது ‘ஸஹ-உபாலம்ப-நியமம்’ எனப்படுகிறது. இதன்படி யாரும் தனது சொந்தக் கருத்துக்கள், உணர்வுகள் என்பவற்றிலிருந்து வெளியேக் குதித்து விட முடியாது. எண்ணங்கள் ஏதுமற்ற நிலையில் பொருளினை நேரிடையாகச் சென்றடைய முடியாது. எனவே ஒருவன் அறியும் அனைத்தும் மாறுதல்கள், மாயைகளேயன்றி வேறொன்றுமில்லை, உண்மையில்லை. அவை மனதின் எண்ணங்கள் மட்டுமே மாறாக மனதிற்கு வெளியே எதுவுமில்லை. ஆயினும் பேக்லியின் கருத்திலிருந்து யோகாச்சாரிகளின் கருத்து வேறுபடுகின்றது. குறிப்பாக பௌதீக உலகை முற்றாக மறுப்பதில் இவரிற்கு ஈடுபாடு இல்லை. காரணம் அது அனுபவத்திற்கு ஒவ்வாத நிலை ஒன்று இங்கு ஏற்படக்கூடும். எனவே இதிலிருந்தும் நழுவும் நிலையை பேக்லியில் அவதானிக்கலாம்.

ஆனால் யோகாச்சாரர்கள் தனது தர்க்க ரீதியான அணுகுமுறையின் மூலம் மனதின் எண்ணங்களுக்கு வெளியே ஒன்றுமேயில்லை என்பதை இறுதியாக வலியுறுத்துகின்றனர். இவர்களின் கருத்தில், சாதாரணமாக நாம் அறியும் உலகம் முற்றிலும் நிஜமானதன்று, மாறாக, அது வெறும் மாயைத் தோற்றமே என நிறுவுகின்றனர். இக்கருத்தானது அதாவது பௌதீக உலகமானது உண்மையில்லை என்பது இந்தியத் தத்துவ வரலாற்றில் நாம் பரவலாகக் காணும் விடயமேயாகும்.

ஆயினும் இதில் அனுபவம் மற்றும் நடைமுறைச் சிக்கல் ஏற்படக் கூடும். இதனையும் யோகாச்சாரர்கள் தனது தர்க்க அணுகுமுறை மூலம் சுலபமாக தகர்க்கிறார்கள். அதாவது மாயைத் தோற்றங்களை இதற்குச் சான்றாகக் கூறுகின்றனர். உதாரணமாக, கயிற்றில் பாம்பைக் காண்பது, கானல் நீரைக் காண்பது, பளபளக்கும் சிப்பியில் வெள்ளியைக் காண்பது போல இந்த உலகமும் மாயையே என்கின்றனர்.

யோகாச்சாரிகள் இன்னொரு விடயத்தையும் பௌதீக உலகிற்கு எதிராகக் கூறுகின்றனர். அதாவது, நாம் காணும் கனவுகள். இதன் போது பௌதீகப் பொருளின் தொடர்பின்றியே நமது மன உணர்வுகள் மற்றும் எண்ணங்களின் வழியேக் கனவுகளில் பொருட்களின் தன்மைகளை உணர்கிறோம். இதற்கு எந்த வழியிலும் பௌதீகப் பொருளின் தொடர்பு இருப்பதில்லை. இந்த விடயத்தையும் வைத்துப் பார்க்குமிடத்து பௌதீக உலகம் என்பது வெறும் மாயையாக வலியுறுத்தப்படுகின்றது. இவ்வகையான கருத்து இந்தியத் தத்துவ வரலாற்றில் குறிப்பாக யாக்ஞவாக்கியாரின் “பிருகதாரணிய” உபநிடதத்திலும் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இதன் உட்கருத்து யாதெனில் உலகம் நிஜமில்லை என்பதாகும். இதற்கு இவர் கூறும் சான்று என்னவெனில் கனவில் நாம் காணும் பொருட்கள் தன்னுடைய ஆத்மாவினால் உண்டாக்கப்பட்டவைகளே அன்றி, அவற்றிற்கும் வெளிச்சூழலிற்கும் இடையே எவ்விதத் தொடர்பும் இல்லை எனக்கூறி இதனை நிறுவுகிறார் யாக்ஞவாக்கியார். கனவுகள் தொடர்பாக இவர் விரிவாக கூறுகிறார். அதாவது ஒருவன் தன் கனவு நிலையின் போது, அதாவது ஒருவன் தூங்கும் போது, தன்னுடன் உள்ள பொருட்கள் யாவற்றையும் கொண்டு செல்கிறான். பிறகு தன்னை அதனிலிருந்து தனியேப் பிரித்து ஒதுக்கிச் சென்று புதிதாக ஒரு உலகத்தை நிர்மாணம் செய்கிறான். அதைத்தான் தேராகவும் ஒளியாகவும் காண்கிறான். அந்த உலகில் நிஜமாக எந்தத் தேரும் இல்லை. தேரோடும் வீதிகளும் இல்லை. ஆயினும் தன் சொந்த உலகாகவே தேர்களையும் அது ஓடும் வீதிகளையும் இருப்பன போலத் தனக்குக் காட்டிக் கொள்கிறான். அங்கே உண்மையில் ஆனந்தங்களும், சுகங்களும், இன்ப உணர்வுகளும் இல்லை, ஆனால் அவனே அவற்றை உணர்ந்து கொள்கிறான், தாமரைக் குளங்கள், நீரோடைகளைத் தானேப் படைத்துக் கொள்கிறான். காரணம் கனவுலகில் அவனே படைப்புக் கடவுள். இந்தக் கருத்திலிருந்தும் நோக்கும் போது பௌதீக உலகம் ஒரு மாயையே மறாக மனதின் எண்ணங்கள் மட்டுமே நிலையானவை என்ற கருத்து மேலும் நிறுவப்படுகின்றது. இதனை ஒத்தக் கருத்தினையே யோகாச்சாரமும் முன்வைக்கின்றது.


அதாவது, யோகாச்சாரர்கள் நாம் கனவில் படைக்கின்ற மாதிரியே நனவிலும் படைக்கின்றோம் என்கின்றனர். பொதுவாகப் பொருட்களை நமக்கு நாமே படைத்துக் கொண்டு அனுபவிக்கவும் அசையும் ஆற்றலுக்குக் கனவு ஒரு சான்று அல்லது ஒரு பிரமாணம் எனில் அவ்வாற்றல் எமக்கு நனவிலும் உண்டு என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். ஆகவே இவற்றின் மூலம் பார்த்தால் நாம் நனவிலும் அதைத்தான் செய்கின்றோம் என்பதில் தடையிருக்க வழியில்லை என விஞ்ஞானவாதிகள் வாதிடுகின்றனர்.

யோகாச்சாரர்கள் தான் ஒரு தனிப்பிரிவு என்பதை நிறுவுவதற்காக உபநிடதங்களில் இருந்துதான் இவற்றைப் பெற்றுக் கொண்டனர் என்பதைத் தெரிவித்துக் கொள்ளாமல் இருக்கின்றனர்.

ஏறத்தாழ சூன்யவாதிகளின் கருத்தும் இதுவே. இருப்பினும் யோகாச்சாரர்கள் அவர்களில் இருந்தும் தான் வேறு பிரிவு என்பதை உணர்த்த சூன்யவாதிகளின் கருத்திலிருந்தும் சற்று மாறுபட்ட கருத்தினை முன்வைக்கின்றனர். குறிப்பாக, சூன்யவாதிகள் கூறும் கருத்தினைச் சற்று உயர்ந்த நிலையில் மிகைப்படுத்தி யோகாச்சாரிகள் கூறுவதனை நாம் நோக்கலாம். மற்றும் இவர்கள் இருவகையினரும் பௌதீக உலகை மறுத்து பிரக்ஞை பற்றி வலியுறுத்துகின்றனர். ஆயினும் இந்த பிரக்ஞை தொடர்பாக யோகாச்சாரிகள் மனம் எனக் கூற சூன்யவாதிகள் பிரக்ஞையை அவ்வாறு திட்டவட்டமாக வரையறுக்க முடியாது என்கின்றனர். இவை ஒட்டு மொத்தமாகக் கருத்து முதல் வாதத்தினை மேலும் சான்றுபடுத்துபவைகளாக அமைகின்றன. விஞ்ஞான வாதத்தையும் சூன்யவாதத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, இரண்டும் உண்மை குறித்து பேசும் போது, அவற்றிற்கான தனி நிலைகளை ஏற்கின்றன.

இவ்விஞ்ஞான வாதத்தின் அடிப்படைகளை நோக்கும் போது, மகாயான பௌத்தத்தின் பிரதான சூத்திரங்களில் ஒன்றான இலங்காவதார சூத்திரத்தில் இது தொடர்பான விடயங்கள் இருப்பதை நாம் காணலாம். இதில் விஞ்ஞான வாதத்தைத் தனிச்சிறப்புடன் ஆதரித்துள்ளது. அத்துடன் அஸங்கரும் வசுபந்துவிற்கும் பிறகு இந்தியக் கருத்து முதல் வாதம் மிக நெருங்கிய அதேவேளை தனித்தனியேயும் வளர்ச்சியடைந்தது. அவையே சூன்யவாதமும், விஞ்ஞானவாதமும் ஆகும். குறிப்பாக வசுபந்துவிற்கு பிறகு அவரது சிறந்த சீடர்கள் இதனைத் தொடர்ந்தனர். அவர்களுள் ஸ்திரமதியும் திந்நாகரும் முன்னணியில் இருப்பவர்கள். இவர்களுள் ஸ்திரமதி இவ்வாதம் தொடர்பான சாத்திர நூல்களுக்கு எழுதிய உரைகள் மிகவும் தனிச்சிறப்புடையன.


அதேபோன்று திந்நாகரும் விஞ்ஞானவாதத்தை நிலைநாட்டிக் காப்பதில் மிக்க ஆர்வம் கொண்டிருந்தார். இவரது பிரதான நூலான ‘ஆலம்பன பரியையில்’, இவ்வுலகப் பொருட்கள் உண்டு எனக் கொள்வது தத்துவ ரீதியில் இருக்க முடியாது. நிலைநாட்டவும் முடியாது என்பதை நிரூபிக்க முயல்கிறார். இதில் அணுக்கொள்கையை மறுக்கிறார். இதுபற்றி அவரது குருவான வசுபந்துவும் எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அணுக்கொள்கை என்பது இயற்கை மற்றும் பௌதீகம் தொடர்பான மிகவும் உயர்ந்த ஆணித்தனமானதொரு கொள்கை. எனவே இதனை மறுப்பதென்பது மிகக்கடினம். இதனால் இவரது நூலின் பிரதானப் பணியாக இதனைக் கொண்டார். வசுபந்து போன்று இவரும் அணுக் கொள்கையை நிராகரித்துவிட்டால், தனது கொள்கையை இலகுவாக நிலைநாட்டி விடலாம் என்ற எண்ணப்போக்கில் செயல்பட்டார். இதற்காகத் தர்க்கம் என்ற விடயத்தைப் பயன்படுத்தினார். இதனால் ‘பௌத்த தர்க்கம்’ என்று குறிப்பிடும் முறையின் அடிப்படையே திந்நாகரையே சாரும்.

இவருடைய தர்க்கம் அதற்கு உரை எழுதிய தர்ம கீர்த்தியால் நல்ல விளக்கம் பெற்றது. இவர் பண்டைய இயற்கை சாத்திர முடிவுகளில் திக்நாகரின் விஞ்ஞான வாதத்தை பின்பற்றியவர். இவரும் மேற்கூறியவர்களைப் போன்று அணுக்கொள்கையை மறுப்பதன் மூலமாகத் தனது கொள்கையை முன்வைக்க எத்தனித்துள்ளார்.

இவ்வகையான யோகாச்சார விஞ்ஞானவாதத்திற்கு எதிரான கருத்துக்களும் காணப்படுகின்றன. குறிப்பாக இவை முழுமையாக பௌதீக உலகை மறுக்கின்றது. இதனால் பிரயோக வாழ்க்கை மற்றும் வாழ்க்கை அனுபவங்கள் என்பன கேள்விக்குறியாகின்றன. இவர்கள் கூறும் தவறான புலக்காட்சி நிலைகளை மற்றும் போலிகளை மட்டும் அடிப்படையாக வைத்துக் கொண்டு முழுமையாக இந்த பௌதீக உலகை மறுக்க முடியாது. அத்துடன் கனவுகளின் பொது மனிதன் படைப்புக் கடவுளாக கூறப்படுகின்றான். இருப்பினும், அந்தப் படைப்பிற்குரிய மூலத்தை வழங்குவது பௌதீக உலகமே. புதிதாக எம்மால் ஒன்றை உருவாக்குவது என்பது சாத்தியமற்ற விடயம் ஆனால் இருக்கின்ற ஒன்றை அடிப்படையாகக் கொண்டு புதிய ஒன்றை வடிவமைக்கலாம். இந்நிலையில் முழுமையாக நாம் பௌதீக உலகை மறுக்க முடியாத நிலை தோன்றுகிறது.

குமரிலபட்டர் என்பவர் இதற்கு எதிரான கருத்தினை முன்வைத்துள்ளார். அதாவது இவை அடிப்படையிலேயே கருத்து முதல் வாதத்திற்கு மிகப்பிரதான எதிரி என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் கருத்தின் படி யோகாச்சாரர்கள் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் புற உலகத்தில் தொடர்புடைய உண்மைகள் யாதுமே இல்லை என்கின்றனர். மாத்யமிகர்களோ எண்ணங்களும் உணர்வுகளும் இல்லை என்கின்றனர். இந்த இரண்டு கொள்கைகளுக்கும் புறத்தே எப்பொருளும் இல்லை என மறுப்பது பொதுவானது. இதை கூறும் அவரது செய்யுட் பகுதியான ‘தத்ரபஹாய - அர்த்த சூன்யதவம் துல்யம் தாவத் த்வயோரபி’ என்பதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

முடிவுரை

மகாயான பௌத்தத்தின் பிரதான பிரிவுகளில் ஒன்றாகிய யோகாச்சாரர்களால் இவ்வாதம் முன்வைக்கப்பட்டது. யோகத்தை பயிலுவதாலேயே இவர்கள் யோகாச்சாரர்கள் என கூறப்படுகின்றனர். மேலும் இவர்களது யோகம் என்ற கருத்து இந்திய மெய்யியலில் காணப்படும் ஏனைய யோகம் சார்ந்த கருத்துக்களை விட வித்தியாசமான முறையில் நோக்கப்பட்டிருப்பதையும் நாம் காணலாம். இவ்வகையான யோகாச்சார மெய்யியலில் சிறப்பிடம் பெறுவதே விஞ்ஞானவாதமாகும். இதன் பிரதான நோக்கம் மனம் சார்ந்த எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் மட்டுமே உண்மை மற்றவைகள் அனைத்தும் வெறும் மாயையே என்பதை நிறுவுவதாகும்.

பௌதீக உலகை முற்றாக மறுக்கிறார்கள். இவர்களது கருத்துக்களிற்கு சார்பாக புலக்காட்சியின் வழுக்களையும் போலிகளையும் மாயைகளையும் கனவினையும் பயன்படுத்துகின்றனர். இதற்கு ஆதரவாக இந்திய மெய்யியலில் பல சிந்தனைகள் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பல கருத்துக்களுக்கு எதிராக அமைகின்றது. குறிப்பாக குமரில பட்டர் போன்ற பலர் இதனை விமர்சித்திருப்பதும் அவதானிக்கக்கூடியதொரு விடயமாகும். அதாவது முற்றாக பௌதீக உலகை மறுப்பதால் இத்தகைய விமர்சனங்கள் எழுந்தன. இதனடிப்படையில் இவர்களின் பிரதான எண்ணக்கருவாக அணுக்கொள்கையை எதிர்த்தல் மாற்றமடைந்தது. காரணம் அதனை மறுத்தால் இலகுவாக தங்களின் கருத்தை நிலைநாட்டலாம் என்பது இவர்களின் எண்ணம். கருத்து முதல் வாத நோக்கில் இவர்களது கொள்கை வலிமை பெற்றிருப்பினும் நடைமுறை ரீதியாக இதற்கு எதிராக அதிகளவான விமர்சனங்ளே எழுந்துள்ளன.

உசாவியவைகள்

1. Surendranath Dasgupta (1992) “A History of Indian Philosophy”, Motital Banasidas, delhi

2. Beatria Lane suzki (1981)” Mahayana Buddhism”, George AllenAnd Unwind Ltd, London.

3. Rhys Davis, T.W (2000) “Buddhism - Its History and Literature”, Asia n Educational Services, Delhi, Madras

4. Shastri. M.N (1996 ) “The History of Buddhism”, Aryan books International, Delhi.

5. Bhattacharyya. N. (1981)” History of Researches on Indian Buddhism”, Manshiram Monoharlal, Delhi.

6. David. J. Kalupahana ( 1994) “A History of Buddhism Philosophy” ,University of Hawali Press, Hawali.

7. சர்வபள்ளி இராதா கிரு~;ணன் (1979) “கீழை மேலை நாடுகளின் மெய்ப்பொருளியல் வரலாறு” அண்ணாமலை பல்கலைக்கழக வெளியீடு.

8. ஹிரியண்ணா (1968) “இந்தியத் தத்துவம்” தமிழாக்கம் - தேவசேனாதிபதி, புது டெல்லி.

9. தேவிபிரசாத் சட்டே பாத்யாய - கரிச்சான் குஞ்சு (தமிழில்), 1976, இந்திய தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும், சென்னை புக்ஸ் - சென்னை -02, பக் (33 -50)

10. லக்ஷ்மணன்.கி., 1960, இந்திய தத்துவ ஞானம், பழனியப்பா பிரதர்ஸ் - சென்னை - 600 014, பக் - (127- 190)

11. இரத்தினசிங்கம்.வ., 2008, உலக மதங்கள், மணிமேகலை பிரசுரம் - சென்னை.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p146.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License