இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

பாரதி : பண்பாட்டு அவலங்களுக்கு எதிரான போர்க்குரல்

முனைவர் வ. சிவகுமார்
விரிவுரையாளர் - தமிழ்,
மன்னர் சரபோசி அரசுக் கல்லூரி (தன்னாட்சி), தஞ்சாவூர்-613005


முன்னுரை

பண்பாடு என்றால் ஓர் இனத்தாரின் கொள்கைகள், கோட்பாடுகள், நோக்கங்கள், இலட்சியங்கள், வாழ்க்கை முறைகள், பழக்க வழக்கங்கள், சமூகச் சட்டங்கள், களவொழுக்கம், கற்பொழுக்கம், அகத்திணை மரபுகள், புறத்திணை மரபுகள், இலக்கிய மரபுகள், அரசியலமைப்புகள், ஆடை அணிகலன்கள், திருவிழாக்கள், உணவு பொழுதுபோக்கு, விளையாட்டு போன்றவற்றைக் குறிக்கும்.

இன்று நாம் பண்பாடு எனும் சொல்லால் குறிப்பிடும் துறைகளை நம் முன்னோர் பண்புடைமை, சால்பு, சான்றாண்மை முதலிய சொற்களால் குறித்துள்ளனர். கலித்தொகையில் பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுவது (நெய்தற்கலி 133) என்றும்,

வள்ளுவத்தில்;

"பண்புடையார் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன்" (குறள். 996)

என்று கூறப்பட்டுள்ளது. பண்பாடு உடையவரைச் சான்றோரென்றும், ஒழுக்கமுடையோரென்றும், ஒளியோரென்றும் மாசற்ற காட்சியுடையோரென்றும் அழைத்தனர். உழவுத் தொழில் எவ்வாறு நிலத்தைப் பண்படுத்துகிறதோ அவ்வாறே மக்களையும் மக்களின் மனத்தையும் பண்படுத்துவது பண்பு. இச்சொல்லைத்தான் பண்பாடு என்னும் பொருளில் பழந்தமிழ்ச் சான்றோர் பெருமக்கள் பயன்படுத்தியுள்ளனர்.

தமிழரின் தொன்மையான பண்பாட்டை செவ்வியல் இலக்கியங்கள், நாட்டுப்புற இலக்கியங்கள் மட்டுமின்றி நவீன இலக்கியங்கள் வாயிலாகவும் அறிந்து கொள்ளலாம். தமிழர் பண்பாடு மட்டுமின்றி இந்தியப் பண்பாட்டுத் தளத்தில் இருக்கின்ற முரண்பாடுகளையும் சமூகச் சிக்கல்களையும் பற்றி பலரும் சிந்தித்துக் கொண்டிருக்கின்ற காலத்தில், அவற்றைக் கடுமையாக எதிர்த்துத் தமது முற்போக்குச் சிந்தையோடு புதியதொரு சுயமரியாதைப் பண்பாட்டை நிலைநிறுத்த முதன்முதலில் குரல் கொடுத்தவர் மகாகவி பாரதியார்.

அடிமைப்பட்ட இந்தியாவில் பெரிய தொழில்நுட்பம் எதுவும் வளர்ந்திராத நாளில், இந்து சனாதன கொள்கையோடு பற்றுக்கொண்ட குடும்பத்தில் பிறந்த ஒருவர் சீர்திருத்தவாதியாகவும், போராளியாகவும் மறுமலர்ச்சிக் கவிஞனாகவும் திகழ்வது அவரின் மேம்பட்ட ஞானத்தைக் காட்டுகிறது. தமிழர் பண்பாட்டில் புரையோடிப் போயிருக்கிற பிற்போக்குத்தனத்தோடு சமரசம் செய்து கொள்ளாத பாரதி, அதனைக் கடுமையாக எதிர்த்தார். அவ்வெதிர்ப்பைத் தமது படைப்புகளின் மூலமும் வெளிப்படுத்தினார். அத்தகைய கருத்தாக்கங்கள் சிலவற்றை எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.


கல்வி சமத்துவத்திற்கான குரல்

தமிழர் பண்பாட்டில் பழங்காலந்தொட்டு கல்வியில் பேதம் நிலவி வருகிறது. கல்வி என்பது எல்லாருக்குமானதாக இல்லை. உற்றுளி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பெறுவதாக இருந்தது, வர்ணாசிரம வேறுபாட்டிற்குத் தக்கபடி இந்தக் கல்விமுறையும் இரண்டாக வகுக்கப்பட்டது. ஒன்று ஏட்டுக் கல்வி, மற்றொன்று தொழிற்கல்வி. இதனையே தொல்காப்பியம்,

“வாயினும் கையினும் வகுத்த பக்கம்” (தொல். அகத். 44)

என்கிறது. சங்க இலக்கியங்களிலும் நீதி இலக்கியங்களிலும் கல்வி குறித்தப் பதிவுகள் நிறையக் காணப்பட்டாலும் அனைவருக்குமான கல்வி கிடைத்ததா? என வினவினால் சமூகக் கட்டமைப்பை ஏற்றத்தாழ்வைச் சுட்டிக் காட்டி மறுக்கப்பட்டது என்பதை எவராலும் மறுக்க முடியாது.

இச்சூழலில் பாரதி இனம், மொழி, சாதி என்ற எல்லா வேறுபாட்டையும் கடந்து அனைவருக்கும் கல்வி வழங்கி நாட்டை உயர்த்த வேண்டும் என்கிறார். எத்தகையச் சூழலிலும் கல்வியை எல்லாரும் பெற்றேத் தீரவேண்டும் எனும் கடப்பாட்டில்,

“வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் இங்கு
வாழும் மனிதருக் கெல்லாம்
பயிற்றுப் பல கல்வி தந்து இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்” (முரசு-பாடல் எண்-30)

ஆகையால் நாட்டுமக்கள் அனைவரும் கல்வி கற்க வேண்டும் என அறிவுறுத்துகின்றார்.

“அன்னச் சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்-அன்ன
யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கொரு ஏழைக்கு எழுத்தறிவித்தல்” (சரஸ்வதி தேவியின் புகழ், பாடல் எண் -9)

எனும் எழுச்சி மிகுந்தச் சிந்தனையோடு கற்பித்தல் தலையாய அறம் என வற்புறுத்துகின்றார்.

தாய்மொழிவழிக் கல்வி அறவே கீழ்மைப்படுத்தப்படும் இன்றைய சூழலை ஒரு நூற்றாண்டுக்கு முன்பே அசாத்திய கோபத்தோடு வெளிப்படுத்துகிறார்.

“வேறுவேறு பாஷைகள் கற்பாய் நீ . . .
நீ வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ . . .” (போகின்ற பரதத்தை சபித்தல், பாடல் எண் -3)

என்ற வெறுத்துரைக்கும் அவரின் மொழி. தற்போது நமது கடமையை நினைவுபடுத்துகிறது.

பள்ளியின் பெருக்கத்தால் பலருக்கும் கற்க வாய்ப்பு கிடைக்கும் என்பதை உணர்ந்த பாரதி,

“வீடு தோறும் கலையின் விளக்கம்
வீதி தோறு இரண்டொரு பள்ளி;
நாடு முற்றிலும் உள்ளன வூர்கள் நகர்களெங்கும் பலபல பள்ளி;
தேடு கல்வியிலாத தொரூரைத்
தீயினுக்கு இரையாக மடுத்தல்
கேடு தீர்க்கும் அமுதமென் அன்னை
கேண்மை கொள்ள வழியிவை கண்டீர்” (சரஸ்வதி தேவியின் புகழ், பாடல் எண் -6)

என்று தமது தீர்க்கமான கனவை வெளிப்படுத்துகிறார்.

கல்விசார் அறிவுலகைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திய பார்ப்பனர்கள் ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய மக்களை ஒடுக்கும் முறையை கையாண்டனர். பொருளாதாரத்திலும் சாதியாலும் வஞ்சிக்கப்பட்ட மக்களின் நிலை உணர்ந்த பாரதியார்,

“சூத்திரனுக்கொரு நீதி தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொருநீதி
சாத்திரம் சொல்லிடுமாயின்-அது
சாத்திரமன்று சதியென்றும் கண்டோம்” (உயிர் பெற்றத் தமிழர் பாட்டு, ஸ்மிருதிகள், பாடல் எண்-3)

என வஞ்சிக்கப்பட்ட மக்களின் மனத்துயரை உணர்ந்து பாடுகிறார்.


பண்பாட்டு அவலங்களுக்கு எதிரான போர்க்குரல்

ஒன்றே குலம் ஒருவனே தேவன், எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓர் இனம், யாதும் ஊரே யாவரும் கேளிர் எனும் முழக்கங்கள் தமிழ் மண்ணில் பல நூற்றாண்டுகளாக ஒலித்துக் கொண்டிருந்தாலும் நடைமுறை வாழ்க்கையில் பின்பற்ற பலரும் இணக்கம் காட்டவில்லை. காரணம் மக்கள் எல்லாம் சாதிக் கொடுமை, மதவெறி, பெண்ணடிமை போன்ற காரணங்களால் ஏற்றத்தாழ்வுடன் வேறுபட்டு நின்றனர். இதனைக் கடுமையாக எதிர்த்தவர் பாரதி.

“எல்லோரும் ஓர்குலம் எல்லோரும் ஓர் இனம்
எல்லோரும் இந்தியமக்கள்
எல்லோரும் ஓர்நிறை எல்லோரும் ஓர்விலை
எல்லோரும் இந்நாட்டு மன்னர்” (பாரத சமுதாயம், பாடல் எண்-4)

என்ற வரிகளின் மூலம் பிளவுப்பட்டு நிற்கும் மக்களை ஒற்றைத்தளத்தில் ஒன்றிணைக்கும் முயற்சிக்கு வித்திடுகிறார்.

சாதியால் அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் தமக்குக் கீழ் தாம் அடிமைப்படுத்துவதற்கு ஓர் இனம் இருக்கின்றது என மகிழ்கின்றனர். இந்தப் பிற்போக்கு அவல நிலையை உணர்ந்த பாரதியார்,

“ஏழை யென்றும் அடிமையென்றும்
எவனுமில்லை ஜாதியில்
இழிவு கொண்ட மனிதரென்பது
இந்தியாவில் இல்லையே” (விடுதலை, பாடல் எண்-2)

என்று பாடுகிறார்.

ஆண்டான்-அடிமை, ஏழை-பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாத பண்பாட்டை நிறுவ முயல்கிறார்.

உணவு, உடை, உறைவிடம் என்பன மனிதனின் அடிப்படைத் தேவைகளாகும். சமுதாயத்தின் ஓர் அங்கமாக விளங்கும் தனிமனிதனுக்கு எதிரான உழைப்புச் சுரண்டலால் அவன் வறுமையில் உழன்று பட்டினியால் மடிவதைக் கண்டு மனம் வருந்திய பாரதி,

“மனிதரு ணவை மனிதர் பறிக்கும்
வழக்கம் இனியுண்டோ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை இனியுண்டோ-புலனில்
வாழ்க்கை இனியுண்டோ-நம்மிலந்த
வாழ்க்கை இனியுண்டோ” (பாரத சமுதாயம், பாடல் எண்-1)

என்றும்,

“இனியொரு விதி செய்வோம்-அதை
எந்த நாளும் காப்போம்
தனியொருவனுக்கு உணவில்லை யெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்” (பாரத சமுதாயம், பாடல் எண்-2)

எனத் தனிமனிதனின் இயலாமையையும் வறுமையையும் சகிக்கமுடியாத பாரதி பட்டினிக்கு எதிராகக் குரல் கொடுக்கிறார்.

காலந்தோறும் அடிமைப்படுத்தப்பட்ட பெண்களின் நிலையையும் பெண்களுக்குரிய கல்வியுரிமையும் உலகியல் தொடர்பும் இல்லாத சென்ற நூற்றாண்டில் பெண் அடிமைக்கு எதிரான கலகக் குரல் பாரதியிடமிருந்தே வெளிப்பட்டது.

“பெண்ணுக்கு விடுதலை நீர் இல்லை என்றால்
பின்னிந்த உலகினில் வாழ்க்கை இல்லை" (பெண்ணுக்கு விடுதலை, பாடல் வரி 7, 8)

"பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்-புவி
பேணி வளர்த்திடும் ஈசன்
மண்ணுக்குள்ளே சில மூடர்-நல்ல
மாதரறிவைக் கெடுத்தனர்" (முரசு, பாடல் எண் -9)

"கண்கள் இரண்டினில் ஒன்றைக்-குத்தி
காட்சிக் கெடுத்திடலாமோ
பெண்களறிவை வளர்த்தால்-வையகம்
பேதமை யற்றடுங் காணீர்" (முரசு, பாடல் எண் -10)

"கற்பு நிலையென்று சொல்ல வந்தால் இரு
கட்சிக்கும் அது பொதுவில் வைப்போம்
மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்துவோம்" (பெண்கள் விடுதலைக்கும்மி, பாடல் எண்- 5)

"ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவிலோங்கி இவ்வையகம் தழைக்குமாம்"(புதுமைப்பெண், பாடல் எண் - 4)

"பெண்மை வாழ்க என்று கூத்திடுவோமடா” (பெண்மை, பாடல்வரி -1)

பெண்களுக்கு எதிரான வன்முறைகள், குழந்தைகளைக் கூடப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கும் வக்கிரங்கள் கவலை தரத்தக்க அளவில் அதிகரித்து வரும் இந்தச் சூழலில், சென்ற நூற்றாண்டிலேயே பெண்களுக்கு ஆதரவாக ஒலித்த அவரது குரலை சமூகப் பண்பாட்டுத் தளத்தில் வைத்துக் கேட்கும் போது தமிழ்ச் சமூகம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்பது புலப்படும்.


சாதியத்திற்கு எதிரான போர்க்குரல்

சாதியத்திற்கு எதிரான போர்க்குரலை அவர் முதலில் குழந்தைகளுக்கே சொல்லிக் கொடுத்தார். சாதிப் புரையோடிய பெரியவர்களிடம் சாதி இல்லை என்று சொன்னால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது அவர் கருத்து.

“சாதிகள் இல்லையடி பாப்பா-குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொலல் பாவம்
நீதி உயர்ந்த மதி கல்வி-அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்” (பாப்பா பாட்டு, பாடல் எண்-15)

என்றும்,

“எந்த நிறமிருந்தாலும் அவை யாவும் ஒரு தரம் அன்றோ
இந்த நிறம் சிறிதென்றும் ஏற்றம் கொள்ளலாமா?
சாதிப் பிரிவினைகள் வேண்டாம்
அன்பு தன்னில் தழைக்கும் இவ்வையகம்” (முரசு, பாடல் எண் -16)

என்ற கவிதைகளின் மூலம் அழுத்தமான தமது பிரகடனத்தை அறிவித்து சாதிய ஏற்றத்தாழ்வு பார்ப்பது பாவம் என்றும், அறிவு சார்ந்த கல்வியே மனிதர்களைச் சமத்துவப்படுத்தும் என்று அறிவுறுத்துகின்றார்.

சங்க காலந்தொட்டு இலக்கியங்களில் களவு-கற்பு என்று காதலைக் கொண்டாடும் தமிழ்ச் சமூகம் தற்காலத்தில் தொலைக்காட்சித் தொடர்களிலும், திரைப்படங்களிலும் நாள் முழுக்கக் காதலைக் கொண்டாடும் தமிழ்ச் சமூகம் தங்கள் பகுதியில் காதல் என்றால் ஆணவக்கொலை செய்யவும் துணிகிறது. இதனை எதிர்த்து,

“நாடகத்தில் காவியத்தில் காதலென்றால்
நாட்டினர் தம் வியப்பெய்தி நன்றாம் என்பர்
ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற் றோரத்தே
ஊரினிலே காத லென்றால் உறுமுகின்றார்
பாடை கட்டி அதைக் கொல்ல வழி செய்கின்றார்
மூடரெல்லாம் பொறாமையினால் விதிகள் செய்து
முறைசெய்து இடரெய்திக் கெடுகின்றாரே” (குயில் பாட்டு, ஆதலினால் காதல் செய்வீர், பாடல் எண்-4)

என்று சென்ற நூற்றாண்டிலேயே ஒலித்த பாரதியின் எதிர்ப்புக்குரல் இங்குக் கவனிக்க வேண்டியதாயிருக்கிறது,

பாரதியின் அரசியல் குரல் தேச விடுதலைக்கானது. சமூகக் குரல் பெண்ணடிமை - தீண்டாமை - தனியுடைமை எனும் பண்பாட்டு அவலங்களுக்கு எதிரானது. குழந்தைகள் கொண்டாடும் துள்ளாட்டம் எல்லா அறங்களையும் குழந்தைகளுக்கு எடுத்துச் செல்லும் அவர் கவிதை எதிர்கால செம்மையான பண்பாட்டை நிறுவ நினைக்கும் அவரின் தொலைநோக்குச் சிந்தனை அவர் கவிதைகளின் மூலம் வெளிப்படுகிறது. பண்பாட்டுத் தளத்தில் பாரதியின் படைப்புகளை உற்று நோக்குகையில் அவர் செய்தது ஒரு யுகப்புரட்சி.

பார்வை நூல்கள்

1. கலித்தொகை, நச்சினார்க்கினியர் (உரை ஆசிரியர்), பாகனேரி த.வை.இ.தமிழ்ச் சங்க வெளியீடு, 1955.

2. திருக்குறள், பரிமேலழகர் (உரை ஆசிரியர்), மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை.

3. தொல்காப்பியம், இளம்பூரணர் (உரை ஆசிரியர்), தமிழ் இணையக் கல்விக் கழகம்-நூலகம், தமிழ்நாடு.

4. பாரதியார் கவிதைகள், கங்கை புத்தக நிலையம், சென்னை, 2003.

5. கே.கே.பிள்ளை, தமிழக வரலாறும் மக்களும் பண்பாடும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p166.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License