Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினேழாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...

Content
உள்ளடக்கம்

சமையல்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

மூத்த திருக்குர்ஆன் பிரதியும் முதல் முஸ்லிம் மன்னரும்

மு. அப்துல்காதர்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி, உத்தமபாளையம், தேனி மாவட்டம்.


முன்னுரை

இஸ்லாம் மார்க்கம் முழுமைத்துவம் அடைவதற்கு முன்னரே அரபு மக்கள் தமிழ்நாட்டுடன் தொடர்பு கொண்டிருந்தனர். இதனைத் தமிழ் இலக்கியங்களும், வரலாற்று ஆய்வுகளும் மெய்ப்பிக்கின்றது. முகம்மது நபி (ஸல்) அவர்கள் காலகட்டத்தில் (கி.பி.570-632) இஸ்லாம் மார்க்கம் முழுமைத்துவம் அடைகின்றது. அந்தக் காலகட்டத்திலேயே தமிழகத்துடன் தொடர்பு வைத்திருந்த அரபு மக்களினால், தமிழகத்தில் முழுமைத்துவம் அடைந்த இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றக் கூடிய முஸ்லீம்கள் உருவாக ஆரம்பித்து விட்டனர். அச்சூழலில் தென் தமிழகம் வந்த அரேபியர்களிடம் அரபுமொழிக் குர்ஆன் பிரதி இருந்துள்ளதா, என்பதை ஆய்தல் அவசியம் அதனடிப்படையில்,

1. வசனங்கள் தொகுக்கப்பட்ட சூழலில் தென்தமிழகம் வந்த அரேபியர்கள்.

2. கி.பி.10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரபுமொழிக் குர்ஆன் பிரதி.

போன்ற பகுதிகளை பிரிவுகளாக்கிக் காணலாம்.

1. திருக்குர்ஆன் ஒன்று சேர்க்கப்பட்ட பணி நிறைவடைந்த சூழலில் தென் தமிழகம் வந்த அரேபியர்கள்

தமிழகத்திற்குள் இஸ்லாம் வந்த விதத்தை ஆராய முற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் தமீம்அன்சாரியின் (ரஹ்) அடக்கத் தலத்தையும் உக்காஸாவின் (ரஹ்) அடக்கத் தலத்தையும், முதன்மையாக வைத்து ஆராய்ந்துள்ளனர். (1) பல்லவர்கள் தமிழகத்தை ஆட்சி புரிந்த பொழுது இவ்விருவர்களின் அடக்கத்தலம் ஏற்பட்டது என்று கூறுகின்றனர். (2) ஆனால், பல்லவர்களுடைய காலத்தை அடையாளப்படுத்த முயன்ற வரலாற்று நூல்கள், கி.பி. நான்காம் நூற்றாண்டிலிருந்து கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு வரை குறிப்பிடுகின்றன. தமீம் அன்சாரியும் உக்காஷாவும் நபிகளாரின் தோழர்கள் என்று கூறியிருப்பதிலிருந்து, இவர்களின் காலத்தை நபிகளாரின் காலத்தோடு ஒப்புமைப்படுத்திக் கூறலாம். அதாவது, கி.பி.570லிருந்து 632 தமீம்அன்சாரி (ரஹ்), உக்காஷா (ரஹ்) அவர்களின் காலம் இந்த ஆண்டுகளுக்கு உட்பட்டு இருக்கும் பொழுது, திருக்குர்ஆனின் வசனங்கள் சிற்சிலவைகள்தான் இருந்திருக்க முடியும். ஏனெனில் நபிகளாரின் காலத்தில் திருக்குர்ஆன் வசனங்கள் ஒன்று சேர்க்கப்படவில்லை. ஆகவே, முழுமையான குர்ஆன் பிரதி இவர்களுடைய காலகட்டத்தில் தமிழகத்திற்குள் வந்திருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை.


திருக்குர்ஆன் வசனங்கள் ஒன்று சேர்க்கப்பட்டு, தொகுப்பாக உருவாக்கப்பட்ட பின்னர் உமர் (ரலி) அவர்கள் கலீபாவாக இருந்தக் காலகட்டத்தில் சில அரேபியர்கள் இஸ்லாத்தைப் பரப்பும் நோக்கில் தென்னிந்தியாவிற்குள் வருகை புரிந்துள்ளனர். இதனை ‘தென்னிந்தியப் பண்பாட்டில் இஸ்லாத்தின் செல்வாக்கு’ எனும் நூலில்,

“கி.பி. 636ல் அரபகத்தை ஆட்சி செய்த இஸ்லாத்தின் இரண்டாவது கலீபாவாகிய உமர் அவர்களின் ஆளுநர் (கவர்னர்) ஒருவர் தானாவைத் தாக்குவதற்காக ஒரு படையை அனுப்பினார். அந்தப்படை கடல் வழியாக இந்தியாவிற்கு வந்தது. ஆனால், உமர் அவர்கள் அந்தப் படையை எந்த வகையிலும் ஆதரிக்கவில்லை. எனவே, விரைவிலேயே பழைய வாணிப உறவு புதுப்பொலிவுடன் வளர ஆரம்பித்தது. அரபு வணிகர்கள் மலையாளக் கடற்கரையில் ஆங்காங்கே குடியேறி அங்குள்ள பெண்களை திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் வழிமுறையினரே இன்று ‘மாப்பிள்ளைகள்’ என்று அழைக்கப்படுகின்றனர். தென்னிந்தியப் பகுதிகளில் வாழ்ந்த அரசர்களுக்குத் தேவையான குதிரைகளைக் கொடுத்தது மட்டுமின்றி அவர்களுடைய கப்பற்படையிலும் பணியாற்ற ஆரம்பித்தனர். பல குடியேற்றப் பகுதிகளும் தோன்றியது. மலப்புரம், கீழக்கரை, காயல்பட்டினம், நாகூர் ஆகிய நகரங்கள் அக்குடியேற்றப் பகுதிகளில் முக்கியமானவை.” (3)

என்றும் ஜே. அஸ்ரப்அலி குறிப்பிட்டுக் காட்டுகின்றார்.

மேலும், எஸ்.கே.கோவிந்தசாமிப்பிள்ளை கி.பி.636-ல் இஸ்லாமிய கலீபாவின் படைவீரர்கள் இந்தியாவின் மேற்குக்கரைக்கு வந்தனர் என்கிறார். (4) கி.பி.642 சேரநாட்டில் கிரங்கனூரில் மாலிக் இப்னு தினாரில் முஸ்லிம்களின் முதல் பள்ளிவாசல் கட்டப்பட்டது என்று ‘தாள்மஹல்’ என்ற மலரில் வெளியான ‘தென்னகத்தில் இசுலாத்தின் தொன்மை’ என்னும் கட்டுரை குறிப்பிட்டிருக்கின்றது. (5)

தினமணி ரம்ஜான் மலரில் ‘தழிழகத்தில் இஸ்லாம் 150 ஆண்டு ஆட்சி’ என்ற தலைப்பில் அமைந்த கட்டுரையில்,

“அரேபியாவிலிருந்து இஸ்லாமியப் பிரச்சாரத்திற்குத் தனது மகன் சதாப், மாமனார், தனது மருமகன் மாலிக், அவரது மகன் மற்றும் சிலருடன் வந்தவர் இப்னு தீனார். இவரது முயற்சியினால் காசர்கோடில் கி.பி.643 சூன் மாதம் 7-ம் நாள் தென்னகத்தின் முதல் பள்ளிவாசல் எழுந்தது. (ஹிஜ்ரி 22 ரஜப்பிறை 13) அழிக்கவியலாத சரித்திரச் சான்றுகளுடன் இஸ்லாம் மார்க்கம் இந்த மண்ணில் வேரூன்றியதை அறிவிக்கும் சரித்திரப் பொன் ஏடாக 14 x 77 அகலத்தில் அமைந்துள்ள அரேபியக் கல்வெட்டு இன்றும் உள்ளது” (6)

என்று கூறப்பட்டுள்ளது மேலும் ‘இஸ்லாமிய வரலாற்றில் பள்ளிவாசல்’ என்ற நூலில்,


நாயகம்(ஸல்) அவர்கள் காலத்திலேயே அரபு வணிகர்களின் மூலம் தீர்க்க தரிசனத்தின் செய்தியை அறிந்து, சேரமான் பெருமான் நாயனாரின் அடக்கவிடம் ஓமன் நாட்டில் உள்ள (ஸலாலா நகரில்) ‘ஸபர்’ என்னும் இடத்தில் உள்ளது. அரேபியா சென்றிருந்த சேரமான்பெருமான் நாயனார் இஸ்லாத்தை ஏற்ற பின் மாலிக்இப்னுதினார் அவர்களின் குடும்பத்தை இஸ்லாமியப் பிரச்சாரத்திற்காக மலபார் பகுதிக்கு அனுப்பி வைத்தார். நபிகள் நாயகம்(ஸல்) இவ்வுலகை விட்டு மறைந்த 22 ஆண்டுகளில் கேரளாவில் சேரநாட்டின் தலைநகரான இரங்கனூரில் மாலிக் இப்னுதினரால் ஒரு பள்ளிவாசல் கட்டப்பட்டது. மாலிக்தினார் என்ற பெயரில் வாழும் அப்பள்ளிவாசல்தான் இந்தியாவில் கட்டப்பட்ட முதல் பள்ளிவாசல் ஆகும். தமிழகத்தின் மேற்குக்கரையோரம் கன்னியாகுமரி மாவட்டத்தில் மாலிக்தினார் பள்ளிவாசல் என்றே அழைக்கப்பட்டன. தேங்காய்பட்டினம், திருவிதாங்கோடு, கோட்டாறு, குளச்சல் ஆகிய இடங்களில் இன்னும் இப்பள்ளிகள் உள்ளன என காஜாமைதீன் கூறிச்செல்கின்றார். (7)

இங்கு நபி (ஸல்) இவ்வுலகை விட்டுப் பிரிந்து 22 ஆண்டுகளில் கேரளாவில் முதல் பள்ளிவாசல் கட்டப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நபிபெருமானார் இவ்வுலகை விட்டுப் பிரிந்த வருடம் கி.பி.632 உடன் 22 ஆண்டுகளைக் கூட்டினோமேயானால் கி.பி. 654 என வருடம் அடையாளப்படுத்தப்படுகின்றது.

மேலே, கூறப்பட்டுள்ள கருத்துக்களில் மேலாய்வாளர்கள் காட்டியுள்ள காலஅமைப்புகள் முரண்பட்டிருப்பதை அறிதல் அவசியம். கி.பி. 643 சூன் மாதம் 7-ம் நாள் தென்னகத்தின் முதல் பள்ளிவாசல் எழுந்தது என்று குறிப்பிட்டுக் காட்டியுள்ள செ. திவானின் கருத்துக்கும், (8) எம்.ஆர்.எம்.முஸ்தபா ஹிஜ்ரி 212 (கி.பி.833) சேரமான் பெருமான் நாயனார் அரேபியாவிற்கு சென்றதாகவும் ஹிஜ்ரி 216 (கி.பி.837) இறந்ததாகவும் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார். (9) இக்கருத்துக்களில் முரண்பாடுகள் இருப்பதைக் காண முடிகின்றது. இது போன்ற முரண்பாட்டை அப்துல்ரஹிம் தனது ‘இஸ்லாமியக் கலைக் களஞ்சியத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். (10) தமிழில் பக்தி இலக்கிய மரபில் சுந்தரர் காலத்துடன் சேரமான் பெருமான் நாயனாரின் காலத்தை ஏழாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்ததாகவே குறிப்பிடுவர். Tamil Nadu Real History--ல் சேரமான்பெருமான் மெக்கா சென்ற வருடத்தை கி.பி. 622 லிருந்து 632 வரை என்று குறிப்பிடுகிறார்.(11) க. ராஜையன் வரலாற்றாசிரியரும், தமிழிலக்கிய அமைப்பையும் முன்னுதாரணமாக்கி சேரமான் பெருமான் நாயனாரின் காலத்தை அறிந்து கொள்வோம். அதன் மூலம் மாலித்தினார் காலத்தின் வருகையையும் அறிதல் வேண்டும்.

கி.பி. 655-ல் உதுமான் (ரலி) அவர்களுடைய காலகட்டத்திலேயே இந்நிகழ்வுகள் நடைபெற்றுவிட்டன என்பதற்கான ஆதாரங்கள் தென்படுகின்றன. ஆகவே, 655 காலகட்டத்திற்குள்ளேயே முழுமையான குர்ஆன் பிரதிகள் வந்திருப்பதற்கான வாய்ப்புகள் இருந்துள்ளன. இந்தக் காலகட்டத்தில்தான் கள்ளிக்கோட்டை, காயல்பட்டினம், கீழக்கரை ஆகிய இடங்களுக்கு அரேபியர்கள் வருகை புரிந்துள்ளனர். அவர்களிடம் ஹப்ஸா (ரலி) அவர்களிடம் இருந்த குர்ஆன் பிரதிகள் இருந்திருக்கலாம். ஆனால், அதற்குத் தகுந்த ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்று முகம்மது அப்துல் கபூர் கூறுகின்றார்.

இஸ்லாம் மார்க்கம் முழுமைத்துவம் அடைந்த பின்னர் தமிழகத்திற்கு வந்து சென்ற இசுலாமிய அரபு மக்களிடையேயும், சஹாபிக்களிடமும் திருக்குர்ஆன் பிரதிகள் இருந்திருப்பினும், அவற்றில் ஒன்று கூட அன்றைய சூழலில் பாதுகாக்கப்படவில்லை.

அரேபியாவில் திருக்குர்ஆன் வசனங்கள் தொகுக்கப்பட்ட சூழலில் தென்தமிழகம் வந்த அரேபியர்களை இப்பகுதி அடையாளப்படுத்திக் காட்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் காணப்படுகின்ற , அரபுமொழியில் அமைந்த மூத்த திருக்குர்ஆன் பிரதியின் அடையாளத்தைக் காணலாம்.

2. கி.பி. 10 ம் நூற்றாண்டைச் சேர்ந்த அரபு மொழித் திருக்குர்ஆன் பிரதி

ஹஜ்ரத்அலி (ரலி) அவர்களின் ஒன்பதாவது தலைமுறையைச் சார்ந்த சையது அகம்மது சபீன் சிரியா, ரோமபுரி நாடுகளை ஆட்சி செய்துள்ளார். அவர்களது மூத்த புதல்வர் நத்ஹர் வலி அவர்கள் (கி.பி. 969) தனது அரச வாழ்வைத் துறந்து பல பகுதிகளுக்கு மெய்ஞ்ஞானப் பிரச்சாரம் செய்யக் கிளம்பினார். அவருக்குப் பிடித்தமான இடமாக அமைந்த பகுதியே, இன்றைய திருச்சி நகரம். இவர் கொண்டு வந்த திருக்குர்ஆன் பிரதி இன்னும் அவரது தர்காவில் கண்ணாடிக் கூண்டிற்குள் வைக்கப்பட்டுள்ளது. இக்கருத்தை ‘தமிழகத்துத் தர்காக்கள்’ எனும் நூலில் ஜே.எம்.சாலி குறிப்பிட்டுள்ளார். (12) தற்பொழுது கிடைத்துள்ள ஆய்வுத்தகவல்களின் அடிப்படையில் நத்தர்ஷா ஒலியுள்ளா தர்காவில் காணப்படும் அரபுமொழி திருக்குர்ஆன் பிரதியையேத் தமிழகத்தில் காணப்படும் திருக்குர்ஆன் பிரதிகளின் மூத்த பிரதியாகக் கருத வாய்ப்புள்ளது.

இப்படியாக தென் தமிழகத்தில் அரேபியர்களின் வருகையும், திருக்குர்ஆன் பிரதியும் வருகை புரிந்த விதத்தை ஆராய்ந்து கூறியுள்ளோம். தமிழகத்திற்குள் அரபுமொழிக்குர்ஆன் பிரதி வருகைபுரிந்த போது தமிழகத்தில் காணப்பட்ட காலச்சூழலை அடுத்து காண்போம்.


தமிழகத்திற்குள் அரபி மொழிக்குர்ஆன் பிரதி வருகை புரிந்த போது தமிழகத்தில் நிலவிய காலச்சூழல்கள்

தமிழகத்திற்குள் ஏழாம் நூற்றாண்டின் இறுதியிலேயே அரபி மொழிக்குர்ஆன் வருகை புரிந்துள்ளது. அப்பொழுது தமிழகத்தில் சைவம், வைணவம், பௌத்தம் தங்களுக்குள் முரண்பட்டுச் செயல்பட்டுக் கொண்டிருந்தன. பல்லவர்களின் ஆட்சிக்காலம் நடைபெற்றுக் கொண்டிருந்த சூழலில், பாண்டியர்களுக்கும், சோழர்களுக்கும், குறுநில மன்னர்களுக்கும், போர்களும், பிரச்சினைகளும் உருவாகிக் கொண்டிருந்தன என்று கே.கே. பிள்ளை குறிப்பிட்டுக் காட்டுகின்றார். (13) கி.பி. 600 முதல் கி.பி. 900 வரை தமிழகத்தில் சமயப்பூசல்கள் உருவாகிக் கொண்டிருந்தன என்று வே. தி. செல்வம் குறிப்பிட்டுக் காட்டுகின்றார். (14) இந்தக் காலகட்டத்தில்தான் தமிழகத்திற்குள் அரபுமொழிக் குர்ஆனும் முழுமைத்துவம் அடைந்த இஸ்லாம் மார்க்கமும் வருகை புரிந்துள்ளது. இக்கருத்திற்கு எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் கூறிய கருத்துக்களும் வலுசேர்க்கின்றன. அதாவது,

தமிழர்கள் இஸ்லாத்தைத் தழுவுவது கி.பி.ஏழாம் நூற்றாண்டிலிருந்து தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. இது குறித்து விரிவாக ஆய்வு செய்துள்ள அலிகர் மற்றும் உஸ்மானிய பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், வரலாற்றாசிரியருமான பேரா. பஹாவுத்தீன் மற்றும் கொல்லம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறைப் பேராசிரியருமான எம்.எஸ். செயப்பிரகாஷ் ஆகியோர் தமிழகத்தில் மூன்று அல்லது நான்கு கட்டங்களாக இசுலாம் பரவியது என்றும் குறிப்பிடுகிறார். இசுலாம் தமிழகத்தில் முதன் முதலாகப் பரவிய காலத்தில் (கி.பி.650-750) மதம் பெரும் நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருந்தது என்றும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். (15)

சங்க காலத்தை அடுத்துத் தமிழகம் வந்த வடபுல சமயங்களான வைதிக, சமண, பௌத்த சமயங்கள் மற்றும் சைவ, வைணவ சமயங்கள் பல தெய்வ வணக்க முறையைத் தமிழர் வாழ்வில் அழுத்தமாக உருவாக்கியிருக்கின்றன. அதோடு முதன்மை பெற வேண்டி ஒன்றோடொன்று போட்டியிட்டும், மோதிக்கொண்டும், சண்டையிட்டும் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்காக சமயம் ஜீவ-மரணப் போராட்டமே நடத்த வேண்டியிருந்தது. அதற்கு மொழியையும், சமயஇலக்கியங் களையும் ஆயுதங்களாகப் பயன்படுத்தி இச்சமயங்கள் நிலை நிறுத்துவதற்கு முயற்சித்தது. இதனால் மக்களிடையே ஒருவிதமான மனச்சோர்வு ஏற்பட்டிருந்ததில் வியப்பில்லை. இத்தகைய சூழலில்தான் இசுலாம் தமிழகத்திற்குள் வந்து சேர்ந்தது என மணவை முஸ்தபா குறிப்பிடுகிறார். (16)

கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து 10-ம் நூற்றாண்டு வரை தமிழகக் காலச்சூழலில் பல்வேறு விதமான அரசியல் காரணங்கள் காழ்ப்புணர்ச்சிகளாலும் அமைதியான சூழல்கள் நிலவவில்லை என்பதை அறியமுடிகின்றது. கி.பி. 11-ம் நுhற்றாண்டிலிருந்து வாழ்ந்து கொண்டிருந்த பிற்காலப் பாண்டியரான அதிவீரராமபாண்டியன் முதுமை எய்திய நிலைமை தனது மகன்களான திருப்பாண்டியன், விக்கிரமபாண்டியன், குலசேகரபாண்டியன் ஆகியோர்களுக்கு நாடுகளை பங்கிட்டுக் கொடுத்து விட்டு இறந்துவிட்டார். திருப்பாண்டியனுக்குப் பட்டம் சூட்டிய சூழலில் அவனது இளவலான விக்கிரமபாண்டியன் ஆட்சியில் குழப்பம் விளைவிக்க, திருப்பாண்டியனும், விக்கிரம பாண்டியனும் தங்களுக்குள் சமரசம் செய்து இருவரும் ஒன்று சேர்ந்து மற்றொரு குலசேகரபாண்டியனுக்குத் தொல்லை கொடுத்தனர். இவர்களைச் சமாளிக்க, குலசேகர பாண்டியன், அரேபியாவில் முகம்மது (ஸல்) அவர்களின் பேரர் உசைன் (ரலி) அவர்களின் மரபில் 13 வது தலைமுறையினராக கி.பி.1137-ம் ஆண்டு பிறந்து கீழ்த்திசை நாடுகளில் இஸ்லாமியப் பிரச்சாரம் பயணம் மேற்கொண்டு அரேபியாவிலிருந்து கடல் மார்க்கமாக கேரளாவின் கொச்சி கடலோரப் பாதையில் வந்து, விளிஞ்சல் எனும் ஊரை அடைந்து அங்கிருந்து ஆறு மலைகளைக் கடந்து, பாண்டி நாட்டை அடைந்து புன்னைக்காயலில் தங்கி, இஸ்லாமியப் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் சையது இப்ராகீமை உதவிக்கு வர வேண்டுகிறார்.

இப்ராகீமும் சகோதரர்களிடையே ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் நோக்கில் தம்முடன் வந்த முகைத்தீன், இம்யான் ஆகியோர்களை திருப்பாண்டியனிடம் சமாதானம் செய்விக்கும் பொருட்டு தூது அனுப்பினார். திருப்பாண்டியனோ இவ்விரு தூதுவர்களும் சமய பிரச்சாரத்திற்காக அனுமதி கேட்டுள்ளனர் என்று நினைத்து அவர்களைச் சந்திக்காமலே தெலுங்கு தேசம் சென்று விடுகிறான். திருப்பாண்டியன் இல்லாத சூழலில் குலசேகர பாண்டியனிடமிருந்து திருப்பாண்டியன் அபகரித்த பகுதிகளை இப்ராகிம் குலசேகரனுக்கு கொடுத்து விடுகிறார். அதேபோல் விக்கரபாண்டியனிடமும் தூது அனுப்புகிறார். விக்கிரம பாண்டியனை சமரசம் செய்விக்கும் நோக்கில் வந்த இவர்களை குலசேகர பாண்டியன் ஆதரவில் வந்தவர்கள் என்ற ஒரே சிந்தனையுடன் போருக்கு எழத்தயாராகிவிட்டான். நாங்கள் மார்க்கப் பிரச்சாரத்திற்காகவே வந்தோம் என்று எவ்வளவோ எடுத்துக் கூறியும் கேட்காத விக்கிரம பாண்டியன், சையது இப்ராகீமின் கூட்டத்தாரின் மீது போர் தொடுத்தான். அவர்களும் தவிர்க்க முடியாமல் போர் செய்யத் தொடங்கினர். இவ்வாறு நடைபெற்ற 10 நாள் போரில் சையது வெற்றியடைந்து 12 ஆண்டுகள் பவுத்திர மாணிக்கப் பகுதியை கி.பி.1188-ல் ஆட்சி புரிந்துள்ளார். இவ்வரலாற்று நிகழ்வை ‘தீன் விளக்கம்’ என்ற இஸ்லாமியத் தமிழ் காப்பியம் பதிவு செய்துள்ளது.(17) இப்படிப்பட்ட காலச்சூழல்களில்தான் இஸ்லாம் மார்க்கம் தமிழகத்தின் பல பகுதிகளில் கால் ஊன்றுகின்றது. இவரையேத் தென் தமிழகத்தை ஆண்ட முதல் முஸ்லிம் மன்னர் என அடையாளப்படுத்தலாம்.

அடிக்குறிப்புகள்

1. அல்பாக்கியத்துல் ஸாலிகாத், நூற்றாண்டு விழா மலர், ப.104.

2. அஜ்மல் கான்,பீ.மு., இஸ்லாம் வரலாறும் தத்துவமும், ப.92.

3. அஸரப்அலி,ஜே., தென்னிந்திய பண்பாட்டில் இஸ்லாத்தின் செல்வாக்கு, ப.6.

4. கோவிந்தசாமிப்பிள்ளை , எஸ்.கே., இந்திய வரலாறு, பதி.1943, ப.254.

5. அப்துல் காதர்,தி.மு., தாள்மஹல் - கருத்தரங்க சிறப்பு மலர், பக்.56-59.

6. திவான்,செ.,(கட்.ஆ.), தமிழகத்தில் இஸ்லாம்150 ஆண்டு ஆட்சி(கட்.த.), தினமணி ரம்ஜான் மலர் 2003, ப.102.

7. காஜாமைதீன் , இசுலாமிய வரலாற்றில் பள்ளிவாசல், பக்.28-29.

8. திவான்,செ.,(கட்.ஆ.), தமிழகத்தில் இஸ்லாம்150 ஆண்டு ஆட்சி(கட்.த.),தினமணி ரம்ஜான் மலர் 2003, ப.102.

9. முஸ்தபா,எம்.ஆர்.எம்., தென்னாட்டில் இஸ்லாம்,

10. அப்துர்ரஹீம் எம்.ஆர்.எம்., இசுலாமியக் கலைக்களஞ்சியம், பக்.325-326.

11. Rajayyan,k., Tamil nadu a real history> pg.74.

12. சாலி ஜே.எம்., தமிழகத்துத் தர்காக்கள், பக்.151-160.

13. பிள்ளை,கே.கே., தமிழக வரலாறும் மக்களும் பண்பாடும், பக்.220-240.

14. செல்வம்,வே.தி., தமிழக வரலாறும் பண்பாடும், பக்.231-268.

15. ஜவாஹிருல்லாஹ்,எம்.ஹச் (கட்.ஆ,), தமிழர்கள் வாழ்வில் தீண்டாமையை ஒழிப்பதில் இசுலாத்தின் அரும்பங்கு (கட்.த.), அப்துல்காதர்,தி.மு.,(தொ.ஆ.) தமிழர் வாழ்வில் மொழியில் இலக்கியத்தில் இசுலாத்தின் தாக்கம், பக்.192-195.

16. மணவை முஸ்தபா, (கட்.ஆ.), தமிழர்களின் வாழ்வில் மொழியில் இலக்கியத்தில் இசுலாத்தின் தாக்கம், (கட்.த.), தாள்மஹல் - கருத்தரங்கச் சிறப்பு மலர், ப.21.

17. வண்ணக்களஞ்சியப் புலவர், தீன் விளக்கம் (இசுலாமிய தமிழ் க்காப்பியம்)


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p204.html


  2022
  2021
  2020
  2019
  2018
  2017

வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்

முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License