இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

சீர்மிகு கட்சி மாநகர்

மு. கயல்விழி
உதவிப் பேராசிரியர் (தமிழ்),
பச்சையப்பன் மகளிர் கல்லூரி, காஞ்சிபுரம்.


முன்னுரை

உலகில் உள்ள பழமையான நகருள் காஞ்சிபுரமும் ஒன்று. அது மிகவும புனிதமான நகரும் கூட. அது கோயில் நகரம் என்ற சிறப்பு பெற்றது. இந்தியாவின் புகழ்பெற்ற புனிதத் தலமான காசிக்கு இணையாக இந்நகரைக் கொள்வர். இத்தகைய புனித நகரான காஞ்சிபுரம் சங்க காலம் முதல் சிறப்புற்றுத் திகழ்ந்து வந்தது. அது தொண்டை நாட்டின் தலைநகரென்ற பேறு பெற்றது. இந்நகர் சங்க காலத்தில் திருவெஃகா என்றும், கச்சி என்றும் அழைக்கப்பட்டது. சங்க காலக் கச்சி மாநகரைப் பற்றி இக்கட்டுரை ஆராய்கிறது.

கச்சியின் தோற்றம்

தொண்டைநாடு என்பது வட தமிழ்நாடும் ஆந்திராவின் தென் பகுதியும் சேர்ந்த பகுதியாகும். இதன் தலைநகர் காஞ்சிபுரமாகும். காடுகளும் மலைகளும் நிறைந்த இப்பகுதியைச் சீர்திருத்தி நாடாக்கியப் பெருமை சங்க காலச் சோழ மன்னன் கரிகாலனையேச் சாரும். அவனே காட்டை அழித்து நாடாக்கி காஞ்சி நகரை உருவாக்கி மக்களை அங்கு குடியமர்த்தினான். மேலும் அவன் தொண்டை நாட்டை 24 கோட்டங்களாகப் பகுத்தான். அவன் இமயம் நோக்கிப் படையெடுத்த பொழுது, வழியில் சந்தித்த ”சிந்து மேதான்” என்ற வேடன் மூலம் காஞ்சித் தலத்தின் பெருமையை அறிந்து அந்த நகரைப் புதியதாக உருவாக்கியளித்தான் என்று சேக்கிழார் பெருமான் பெரியபுராணத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

“என்று முள்ளவின் நகார் கலியுகத்து
லிலங்கு வேறுகரி காற்பெரு வளத்தோன்
வற்றி றற்புலி யிமயமால் வரைமேல்
வைக்க வெகுவோன் றன்க்கிதன் வளமை
சென்று வெடன்முன் கண்டுரை செய்ய
திருந்து காகுமென் குட்ட வகுத்து
குன்று போலுமா மதில் புடை போக்கிக்கு
குடிய ருத்தின கொள்கையின் விளக்கும்” (பெரிய புராணம். திருக்குறிப்புத் தொண்டர் புரா - 82)


இந்நகரை தாமரை மொட்டு வடிவில் கரிகாலன் வடிவமைத்தான். இது திருவிழாக்கள் மலிந்த நகராகவும், அகன்ற தெருக்கள் உடைய நகராகவும் சங்க காலத்தில் திகழ்ந்தது.

“நீல நிற உருவின் நெடியோன் கொப்பூழ்
நான்முக உருவற் பயந்த பல்லிதழ்
தாமரைப் பொகுட்டிற் காண்வரத் தோன்றிய” (பெரு.பா.படை:402.4)

காஞ்சி மாநகர் குறித்து சங்க இலக்கியங்கள் சிறப்புடன் பேசுகின்றன. இந்கரைக் கச்சி என்றும் அவை சுட்டுகின்றன. பரிசில் பெற்று பெரும்பாணன் ஒருவன் மற்றொரு வறிய பாணனுக்கு காஞ்சியைப் பற்றி உரைக்கும் செய்தி பெரும்பாணாற்றுப் படையில் உள்ளது. பண்டைய கச்சியில் பாம்பைப் படுக்கையாகக் கொண்டு திருமால் பள்ளி கொண்டிருந்தார். அங்கு அடர்ந்த சோலைவனமும், குருக்கத்திக் கொடிகளும், காஞ்சி மரங்களும் மிகுந்து காணப்பட்டன. இச்சோலைகளுக்கு அப்பால் காவற் காடுகளும், அதனை அடுத்து கச்சியின் கோட்டை மதிலும் காணப்பட்டன. இங்குதான் திருமாலின் திருப்பதியான திருவெஃகா காணப்பட்டது.

“பாம்பணைப் பள்ளி அமர்ந்தோன் அங்கண்” (பெரு.பா.படை:373)

இதேச் செய்தியை திருமங்கையாழ்வாரும் தம் திருவாய்மொழியில் உறுதிசெய்கின்றார்.

“பாந்தன் பாழியில் பள்ளி விரும்பிய
வேந்தனைச் சென்று காண்டும் வெகஃகாவுளே” (பெரிய.திரு:10.1.7)

கச்சியின் சிறப்பு

இந்நகரில் சோலைகளும் நெடிய தெருக்களும் மறவர் குடியிருப்புகளும் அங்காடிகளும் காவற் காடுகளும் எல்லா சமயத்தவரின் கோயில்களும் நிறைந்து காணப்பட்டன. திருவெஃகா என்பதே பிற்காலத்தில் வேகவதி என்ற பெயருடன் அழைக்கப்பட்ட ஆறாக விளங்கியது. இச்செய்தியை பல்லவர் காலக் கல்வெட்டுகளும் உறுதி செய்கின்றன (எஸ்.எஸ்.ஐ.தொகுதி.3.எண்:352). இக்கருத்தையேப் புராணக் கதைகளும் ஆதரித்துப் பேசுகின்றன. ஒரு சமயம் பிரமன் திருவெஃகா என்ற கோயில் அருகே தவம் செய்து கொண்டு இருந்த போது அத்தவதைக் கெடுக்க விரும்பிய சரஸ்வதி தேவியானவள் வெஃகா என்ற ஆறாக உருவெடுத்து அவன் முன் தோன்றினாள். ஆற்று வெள்ளத்தைக் கண்ட பிரமன் அஞ்சி, திருமாலை வேண்ட அவரும் நீரை தடுக்க அணைபோன்று அவ்விடம் பள்ளி கொண்டார். ஆடையற்று பள்ளி கொண்ட திருமாலைக் கண்ட கலைமகளும் வெட்கி தன் போக்கை மாற்றிக் கொண்டாள் என்ற இச்செய்தி காஞ்சி தலபுராணத்தில் காணப்படுகின்றது (செங்கல்பட்டு மாவட்ட மானுவல் (1879) ப:133)


இது தவிர சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய மணிமேகலையில் காஞ்சி பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. இங்கு பெரிய கோட்டை இருந்ததையும், சோழன் தொடுகழற் கிள்ளி வளவனின் தம்பியாகிய இளங்கிள்ளி கட்டிய புத்தர் கோயிலையும் மணிமேகலை பதிவு செய்துள்ளது.

“தொடுகழல் கள்ளி துணை இளங் கிள்ளி
செம்பொன் மாச்சினைத் திருத்தணி பாசடைப்
மைப்பூம் போதிப் பகவற்கு இயற்றிய
சேதியம் தொழுது...” (மணி,28.172-175)

அத்துடன் அந்நகரில் முக்காலத்தையும் அறிவிக்கும் கந்திற் பாவை என்ற தெய்வத்தின் கோயிலும் காணப்பட்டது. இது தவிர, சாத்தன் என்ற காரி கடவுளின் கோயிலும் இந்நகரில் காணப்பட்டது. இமயப் படையெடுப்பின் போது இத்தெய்வத்தை வணங்கிய கரிகால் சோழனுக்கு இத் தெய்வம் செண்டு (ஆயுதம்) அளித்து ஆதரித்தது.

“கச்சி வளைக்கச்சி காமக்கோட்ட டங்காவல்
மெச்சி இனித்திருக்கும் மெச்சத்தான் - பூச்செண்டு
கம்பக் களிற்றுத் கரிகாற் பெருவளத்தான்
செம்பொன் திரி திரித்த செண்டு”

எனவே காஞ்சியானது ஆரம்பத்தில் திருவெஃகா என்று அழைக்கப்பட்டு பின்னர் கச்சி என்றும், கச்சிப்பேடு என்றும் அழைக்கப்பட்டது. இந்நகரத்தின் கரையில் வேகவதி நதி பாய்ந்தோடியது. அதன் கரையிலே இந்நகர் அமைந்து செழித்த செய்தியை ”பூ மலி பெருந்துறை” என்ற வரிகள் உறுதிசெய்யும். சங்க காலக் கச்சியில் பல புலவர் பெருமக்கள் வாழ்ந்து வந்தனர். கச்சிப்பேட்டு நன்னாகையார், கச்சிபேட்டு இளந்தச்சனார், கச்சிபேட்டு பெருந்தச்சனார் போன்றோர் அங்கு வாழ்ந்து இலக்கிய பணி புரிந்தனர். கச்சி என்பதும் கச்சிப்பேடு என்பதும் வெவ்வேறான பகுதியாகும். கச்சிப்பேடு என்பது கச்சியின் புறநகார் பகுதியாகும். இச்செய்தியைக் கல்வெட்டுகளும் உறுதி செய்கின்றன. கச்சிப்பேட்டில்தான் புகழ்பெற்ற பெற்ற ஏகாம்பரநாதர் கோயில் (எ.ஆர்.இ.எண்:206-1915) கச்சபேஸ்வரர் கோயில் (எ.ஆர்.இ.எண்:79-1921) உலகளந்த பெருமாள் கோயில் (எஸ்.எஸ்.ஐ.தொகுதி:3.எண்:1942) போன்றவை அமைந்திருந்தன. இக்கருத்தை உறுதி செய்யும் சோழர்களின் திருவாலங்காட்டு செப்பேடுகள்” எயிற்கோட்டத்து எயில் நாட்டு கட்சிப்பேடு”(எஸ்.எஸ்.ஐ.தொகுதி:3எண்:205) என்று இந்நகரை அழைப்பதை எண்ணிப்பார்க்கலாம். எனவே, சங்க காலத்திற்கு முன்னும், சங்க காலத்திலும் திருவெஃகா என்று அழைக்கப்பட்ட பகுதியானது சங்கம் மருவிய காலத்திலும் பல்லவர் சோழர் காலத்திலும் கச்சி மற்றும் கச்சிப்பேடு என்றும் அழைக்கப்பட்டது. திருவெஃகா என்று அழைக்கப்பட்ட வேகவதி ஆறும் திருமாலின் உறைவிடமும் அமைந்த பகுதியானது பிற்காலத்தில் கச்சிபேடு என்று அழைக்கப்பட்டதை தொல்லியல் சான்றுகளும் உறுதி செய்கின்றன (எ.ஆர்.இ.எண்:21-1921). முதலில் கச்சிப்பேட்டும் பின்னர் கச்சியும் அடுத்தடுத்து அமைந்திருந்தன.


முடிவுரை

காஞ்சிபுரம் பழமையும் பெருமையும் ஒருங்கேக் கொண்ட நகராகும். இந்நகர் புத்தர் பிரான் வந்து தரிசித்த பெருமையுடையது. புகழ் பெற்ற அசோகர் இந்நகருக்கு வந்து ஓர் பௌத்த ஸ்துபத்தை அமைத்துத் தந்தார். இது தவிர மகான்களான ஆதிசங்கரர், இராமானுஜஎ மற்றும் புகழ்பெற்ற புனிதப் பயணியான யுவாங் சுவாங் போன்றோரும் இந்நகருக்கு வருகை புரிந்துள்ளனர். காளிதாசர் போன்ற மகாகவிகளும் இந்நகரைப் புகழ்ந்து பாராட்டியுள்ளனர். தொண்டைமான் இளந்திரையன் போன்றோர் இந்நகரில் இருந்து சிறப்புடன் ஆட்சி செய்துள்ளனர். சங்கக் காலத்தில் இப்பகுதி தமிழகத்தின் தலைச்சிறந்த வைணவத் தலமாக திகழ்ந்தது. இன்று அந்நகர் கோயில் நகராகத் திகழ்வதற்கு அன்றே அடித்தளமிடப்பட்டது. தமிழர்கள் நகரங்களை உருவாக்கி அளிப்பதில் உலகிற்கே முன்னோடிகள் என்பதற்கு பழமையான காஞ்சி நகரே சாலச்சிறந்த எடுத்துக்காட்டு.

பார்வை நூற்பட்டியல்

1. பெரிய புராணம், திருமகள் நிலையம், சென்னை. (2012)

2. பெரிய திருவாய் மொழி, சீனிவாஸ அச்சுக் கூடம், காஞ்சிபுரம். (1911)

3. பெரும்பாணாற்றுப்படை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் லிட், சென்னை. (2010)

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p211.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்

முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License