இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

நாட்டார் வழக்காற்றியலில் நம்பிக்கை குறித்த கருத்துருவாக்கம்

இரா. மனோஜ் குமார்
ஆய்வியல் நிறைஞர், தமிழ்த்துறை,
காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம், திண்டுக்கல்.


முன்னுரை

மனிதன் தன் வாழ்நாளில் நன்கறிந்த பல்வேறு செயல்பாடுகளை இயல்பாக எதிர்கொள்கிறான். அவற்றிற்கான காரண காரியத்தையும் விளங்கிக் கொள்கிறான். காரணம் கற்பிக்க முடியாத பலவற்றைச் சடங்குகள் என்ற கட்டமைப்பிற்குள் அடக்கிவிடுகிறான். ஒவ்வொரு நிகழ்வுக்கும் சில கட்டுப்பாடுகளை மரபார்ந்த முறையில் கடைப்பிடித்து வருவதுடன், அதனை அடுத்த தலைமுறைக்கும் கடத்தி வருகிறான். பழமையில் நம்பிக்கை கொண்ட ஒருவன், சடங்குகள் செய்வதன் வாயிலாக மனநிறைவு அடைவதால், அதற்குரிய காரணகாரியத் தொடர்பை அறிய முற்படுவதில்லை. தன்னைச் சுற்றி வாழும் மனிதர்களையும், அவர்களது செயல்களையும் பின்பற்ற முற்படுவது மனித இயல்பாகும். இந்த அடிப்படையான மனித இயல்பே குழு வாழ்க்கை தொடங்கிய காலம் முதல் சடங்குகளின் தோற்றத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்திருக்கிறது. தமிழர் நாட்டார் வழக்காற்றியல் முறையில் இவ்வாறான சடங்குகள், நம்பிக்கைகள் குறித்து அறிஞர்கள் தத்தம் சிந்தனையை எடுத்துரைத்துள்ளனர். தமிழ்ச்சமூக வரலாற்றில் தவிர்க்க முடியாத நாட்டார் வழக்காற்றியல் நம்பிக்கையையும் மூடநம்பிக்கையையும் குறித்து இந்த ஆய்வுக்கட்டுரை விளக்க முற்படுகிறது.


சடங்குகள்

நம்பிக்கைகளையும் இலட்சியங்களையும் மிகத் தெளிவாக வெளிப்படுத்தும் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றான சடங்குகள் நாட்டுப்புறவியலில் முக்கிய இடம் வகிக்கிறது. (1). நல்லவை நடக்க வேண்டும் என்ற ஆவலும், தீமைகள் நடக்காமல் தவிர்க்க வேண்டும்” என்ற அச்சமுமே சடங்குகள் நடத்தப்படுவதன் அடிப்படைகளாக அமைகின்றன. இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு இனக்குழு சமுதாயமும் தங்களது பண்பாட்டு நம்பிக்கைகளின் அடிப்படையில் இவ்வாறுதான் சடங்குகளைப் பின்பற்றி வருகின்றன.

மனித வாழ்வின் ஒவ்வொரு சூழ்நிலையிலும் சடங்குகள் நடத்துவது என்பது தவிர்க்க முடியாத நடைமுறையாகிவிட்டது. சடங்குகள் நடத்தப்படும் முறையில் சமுதாயங்களுக்கிடையே வேறுபாடுகள் காணப்பட்டாலும், சடங்குகள் நடத்தப்பட வேண்டும் என்ற மனப்பாங்கு மட்டும் அனைத்து சமுதாயங்களுக்கிடையேயும் உள்ள மாபெரும் ஒற்றுமையாகத் திகழ்கின்றன. உலக மதங்கள் ஒவ்வொன்றும் சடங்குகள் குறித்த மரபைப் பின்பற்றுவதில் மிகுந்த கட்டுப்பாடுகளை வலியுறுத்துகின்றன. இந்நிலைப்பாட்டில் இந்து மதம் சார்ந்தவர்களுக்கு சாத்திரங்களும் சடங்குகளும் மிகுதியெனலாம். “இவை இவை இப்படி நடைபெற வேண்டும் என்ற நெறிமுறைகளைக் கூறுவது சாத்திரமாகும். சாத்திரத்தின் செயற்பாடுகள் அல்லது வழிமுறைகள் சடங்குகள் ஆகின்றன” (2)

ஒரு வரைமுறையின்றி மக்களால் அவரவர் விருப்பப்படிச் செயல்கள் நடத்தப்படும் போது அவை பழக்க வழக்கங்கள் எனவும், அச்செயல்களே ஒரு வரைமுறையோடு சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு நடத்தப்படும் போது சடங்குகள் எனவும் அழைக்கப்படுகின்றன.

* பிறப்புச் சடங்கு

* திருமணச் சடங்கு

* பூப்புச் சடங்கு

* இறப்புச் சடங்கு

என இச்சடங்கு முறைகளை பகுத்துக் கொள்ளலாம்.


சடங்குகளும் நம்பிக்கைகளும் பழக்கவழக்கங்களும்

சடங்குகள் குறித்த சிந்தனை ஆரம்ப காலத்தில், சடங்குகளின் செயல்பாட்டுத் தன்மையை முதன்மைப்படுத்தியும், மற்றொன்று சடங்குகளில் ‘அமைப்பு’ முறையிலான பண்புகளை முதன்மைப்படுத்தியும் பிரிக்கப்பட்டிருக்கிறது. சடங்குகளைச் செயல்பாட்டு தன்மையில் ஆராய்ந்தவர்களுள் ‘மாலினோவ்ஸ்கி’ முக்கியமானவராவார். இவர், “செயல் என்பது தேவைகளின் அடிப்படையில் நிகழ்வதாகவும் அனைத்து பண்பாட்டுக் கூறுகளும்; செயல் தன்மை வாய்ந்தவையாகவும் உள்ளன” என்றும் கூறுகிறார்.

எந்த ஒரு பண்பாட்டிலும் அதன் வழக்கங்கள் பயன்படும் பொருள்கள் கருத்துக்கள் நம்பிக்கைகள் போன்ற அனைத்துக் கூறுகளும் மனிதனின் தேவையை நிறைவு செய்யும் பொருட்டே அமைந்துள்ளன. பின்னாளில் அவை சமூக நிறுவனத்தின் ஓர் அங்கமாகவும்; பிரிக்க முடியாத கூறாகவும் விளங்கி நிற்கின்றன. தேவைகளின் மறுவடிவமே பண்பாட்டில் சட்டென ஏற்பட்டு உடன் மறைந்து விடுவதில்லை. பண்பாட்டில் வழக்காறுகளை நெறிமுறைகளை காலம் காலமாகச் சுமந்து செல்கின்றன. ‘ராட்கிளிஃப் பிரௌன்’ செயற்பாட்டியற் கொள்கையை விவரிக்கும் பொழுது, “செயலை விட அமைப்பிற்கு முக்கியத்துவம் தருகின்றார். சமுதாயத்தில் ஒரு செயல் திரும்பத்திரும்ப நடைபெறுவதை இவர் ஒவ்வொரு அலகும் திரும்பத் திரும்ப மேற்கொள்ளும் தொடர்ச்சியான செயல்கள் அச்சமுதாயம் என்னும் முழுமையை நிலைப்படுத்த நடைபெறும் பராமரிப்புச் செயலாகும்” என்கிறார். ஒரு செயல் நன்மை விளைவிக்கின்றது என்று மக்கள் உணரும் நிலையில் அது பழக்கமாக மாறுகின்றது. காலப்போக்கில் அறிவியல், கல்வி ஆகியவற்றின் காரணமாகச் சமுதாயத்தில் முன்னேற்றம் ஏற்படும் போது, அது சடங்காக மட்டும் நிற்கின்றது. இந்நிலையில் மக்களால் சடங்குகள் அரைகுறையாகவே நடத்தப்பட்டன. பொதுவாக, பிறர் செய்வதைப் போலத் தானும் செய்து இன்புற வேண்டும் என்னும் பண்பு மனிதனுக்கு மேலோங்கி நிற்கிறது. (3)

சடங்குகளில் தெய்வமும், சமயமும் நுழைந்த போது சடங்குகள் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டன. சடங்குகள் அனைத்தும் தனிமனிதனாக இருந்து செய்யப்படுவன அல்ல. உற்றாரும் உறவினரும் சேர்ந்து சிறப்பாகச் செய்யப்படுவன ஆகும். (4)

இன்றும் நம்மிடையே இரு குடும்பங்களுக்கு இடையே மோதல்கள் இருப்பினும் பகையை மறந்து இறப்புச் சடங்கில் கலந்து கொள்ளும் வழக்கம் இருக்கிறது. சடங்குகள் மக்களின் வாழ்க்கை மீதான நம்பிக்கையைக் கூட்டுகின்றன. மனிதன் சடங்குகள் வழி பழக்கவழக்கங்களையும் அவற்றுடன் உறைந்து கிடக்கும் நம்பிக்கைகளையும் அனைத்துச் சமுதாயங்களிலும் காணமுடிகிறது. நம்பிக்கைகள் சமுதாயப் பழக்க வழக்கங்களோடு மிகுந்த தொடர்பு உடையனவாகக் காணப்படுகின்றன. வாய்மொழி இலக்கியத்திற்கும், கருப்பொருள் சார்ந்த பண்பாட்டிற்குமிடையே மரபு வழி வாழ்க்கையில் பல கூறுகள் இருபுறமும் நோக்கியவாறு அமைந்து கிடக்கின்றன. அத்தகைய ஒரு கூறு “சமுதாய நாட்டுப்புற வழக்கங்கள்” என்கிறார் ரிச்சர்ட். எம். டார்சன். (5) மனிதனின் தன்னிலை உணர்வும், சமுதாய உணர்வுமே நம்பிக்கைகளை வளர்கின்றன. பய உணர்வுகளில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இயலும் தற்காப்பு முயற்சியும், நன்மை விளைய வேண்டுமென்ற விருப்பமும் நம்பிக்கைகளை நிலைநிறுத்துகின்றன. இவ்வாறு பிறப்பு முதல் இறப்பு வரையிலான நம்பிக்கைகளில் சிலவற்றை அறியலாம்.

* வீட்டிலோ (அ) வீட்டின் சுற்றுப்புறங்களிலோ குளவி கூடு கட்டியிருந்தால், அவ்வீட்டில் யாராவது தாய்மை அடைவர் என்ற நம்பிக்கை இருக்கிறது. அந்தக் குளவிக் கூட்டை யாரும் கலைப்பதில்லை.

* பிறந்த குழந்தையின் பின் பக்கவாட்டில் ஏதேனும் மச்சம் இருப்பின், அக்குழந்தை ராசியான குழந்தை எனவும் நம்புகின்றனர்.

* யாரேனும் தீக்குளித்தாலோ, ஏதோ ஒரு இடம் தீப்பற்றி எரிந்தாலோ, தீ எரிவது போன்ற காட்சிகளை கனவில் கண்டாலோ உறவினர்களில் யாராவது ஒரு பெண் பூப்படைவாள் என்று நம்புகின்றனர்.

* அவள் பூப்படைந்த முதல் நாள் கணவன் இல்லாத பெண்ணையோ, முதியவர்களையோ முதல் முதலில் பார்த்தால் திருமணம் தாமதமாகும் எனவும், தான் பூப்படைந்ததைத் தானே கண்டறிந்தால் அப்பெண் வருங்காலத்தில் துன்பத்தை அணுபவிப்பாள் எனவும் கூறுகின்றனர்.

* எவரேனும் இறந்து போவது போல் கனவு கண்டால் திருமணம் நடக்கும் எனவும் நம்புகின்றனர்.

* திருமணம் நடப்பது போலவும், முருங்கைக் கீரை அவிப்பது போலவும் கனவு வந்தால் எவருக்காவது இறப்பு நேரிடும் என்று நம்புகின்றனர்.

இவ்வாறு மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள வாழ்க்கை நிகழ்வுச் சடங்குகளை இம்மாதிரியான நம்பிக்கையின் மூலம் அறிந்துகொண்டு, அதனிடம் இருந்து தன்னைக் காக்கவும், மகிழ்ச்சி அடையவும் முயற்சி செய்கிறான்.


கால மாற்றத்தில் நம்பிக்கை, மூடநம்பிக்கையானது

படிப்பறிவில்லாத பாமர மக்களிடையே வழங்கிவரும் நம்பிக்கையானது படிப்பாற்றல் நிறைந்த நகரமயமாதல் சூழலில் வாழும் மக்களிடையே மூட நம்பிக்கைகளாகக் கருதப்படுகின்றன. நம்பிக்கைகளுக்குச் சில அடிப்படைக் காரணங்கள் உண்டு. ஆனால், மூட நம்பிக்கைகளுக்கு அடிப்படைக் காரணம் இருப்பதில்லை. இருப்பினும் நம்பிக்கைகளையும் மூட நம்பிக்கைகளையும் பிரித்துக் காண்பது மிகவும் கடினமான ஒன்று. “மக்களின் எண்ணங்களும் கருத்துக்களும் உண்மை என்று நம்பும் நேரத்தில் நம்பிக்கை என்கிறோம். அதே மக்களின் எண்ணங்களும் கருத்துக்களும் உண்மையில்லை என்று நம்பும் போது மூடநம்பிக்கையாகத் தோற்றமளிக்கும் என்கிறார். (6)

மேலை நாட்டுக் கிறிஸ்தவர்கள் தம் கோயிலுக்குள் செல்லும் போது தொப்பியை எடுத்து வெளியேயுள்ள ஆணிகளில் மாட்டிவிட்டு உள்ளே செல்வர். அதுபோல் இங்குள்ள மக்கள் தங்கள் மூளையைக் சுழற்றி வைத்துவிட்டு கோவிலுக்குள் செல்கிறார்கள் என அமெரிக்க அறிஞர் நம் நாட்டுக் கோயில்களில் நடத்தப்பெறும் சமயச் சடங்குகளின் பொருள் புரியாமல் நகைச் சுவையாகக் குறிப்பிட்டதை இங்கு நினைவு கூர்தல் பொருந்தும் என சரஸ்வதி வேணுகோபால் அவர்கள் நாட்டுப்புறப் பாடல்கள். சமூக ஒப்பாய்வு என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

சடங்கு என்பது மக்களால் மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு வரைமுறை ஆகும். மனிதனும் மனித சமூகமும் வாழ்க்கையை நெறிப்படுத்த ஏற்படுத்திக் கொண்ட ஒழுக்கம் என்று கூட சொல்லலாம். புனிதத் தன்மையின் பால் மக்கள் மேற்கொள்ளும் நடத்தைக் கோலங்களின் தொகுப்பே சடங்கு என்றும், புனிதச் செயல்பாடுகளே சடங்குகள் எனவும் சடங்குகள் குறித்து கூறப்பட்ட விளக்கங்களில் இருந்து அறிய முடிகிறது. சமுதாய வாழ்வில் சடங்குகள் பெரும் பங்காற்றுகின்றன. சடங்குகள் அடிப்படையிலான சமய வாழ்வின் மூலம் இப்பிரபஞ்ச ஒழுங்கு காக்கப்பட்டு இருக்கின்றன. ஒழுங்கமைவானது அகப்புறச் சூழல்களால் அச்சுறுத்தப்படும் போது மீள் சமன் செய்யப்பட்டு மறு ஒழுங்கு செய்யப்பட்டு மீண்டும் மீண்டும் ஒழுங்கு நிலை நிறுத்தப்படுகிறது. சடங்கானது “கூட்டு நனவிலிமனம்” அதாவது அனைவரையும் ஒன்றுபட வைக்கிறது என்கிறார் எமிலி தர்க்கைம்.

இவ்வாறு சடங்கானது வாழ்வியல் நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டவை என்றும், நம்பிக்கையின் வளர்ச்சியாகவே விளங்குகின்றன என்றும், எக்காரியத்தைச் செய்தாலும் அவற்றை இன்னின்ன நிகழ்ச்சிகளைக் கொண்டு செய்வதும். அவற்றை செய்யவில்லையென்றால் தீங்கு நேரும், வாழ்வு நலமாக அமையாது என்றும் கருதுவதினால் சில செயல்களைக் காலம் காலமாகச் செய்து வருகின்றனர். கடவுளிடம் உள்ள அச்சமும் முன்னோர் வழக்கத்தை மீறாமல் நடந்து கொண்டால்தான் வாழ்க்கை வசதியானதாய், கவலையில்லாததாய் அமையும் என்ற நம்பிக்கையும் சேர்ந்து இந்தச் சடங்குகளை விடாமல் செய்ய மக்களைத் தூண்டுகின்றன என சோமலே கூறுகிறார்.


முடிவுரை

தெய்வம் குறித்த மக்களின் அச்சம். சடங்குகளைப் பயபக்தியோடு நடத்தத் தூண்டுகின்றன. அதனால் சடங்குகள் காலப்போக்கில் கட்டாயமாக்கப்பட்டு, ஏன் எதனால் என்ற கேள்விகள் தவிர்க்கப்பட்டது. சடங்குகள் நடத்தப்படுவதன் காரணம், அவற்றின் நன்மைகள், தீமைகள் குறித்து ஒன்றும் அறியாமலேயே மக்கள் சடங்குகளை நடத்தத் தலைப்பட்டனர். அதன் காரணங்கள் புரியாமல், அவற்றை விளக்க முடியாமல் மக்களால் பின்பற்றப்படும் சில சடங்கு முறைகள் “மூட நம்பிக்கைகள்’’ என அறிஞர்களால் ஒதுக்கப்படும் நிலை ஏற்பட்டுவிட்டது. நம்பிக்கைகளிலும் சடங்குகளிலும் அறிவியல் நிலையிலான காரணங்கள் இயல்பாக சிலவற்றில் அமைந்திருக்கின்றன. அச்சம் காரணமாக வழங்கி வருகின்ற மரபார்ந்த பல்வேறு செயல்களில் காரணகாரியங்கள் இயல்பாக ஏற்றுக்கொள்ளுமாறு அமைந்திருக்கவில்லை என்ற கருத்தியலில் தான் இன்றைய தொடுதிரை உலகம் மூடநம்பிக்கை என்று அவற்றை ஒதுக்குகின்றன. பழையன கழிதலும் புதியன புகுதலும் காலம்தோறும் நிலவி வந்தாலும், நாட்டார் வழக்காற்றில் நம்பிக்கைகள் மனிதமனங்களில் தவிர்க்கமுடியாத இடத்தில் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. இதனைக் கல்வியாளர்களும் ஒப்புக்கொள்ளுகின்றனர். எனவே, சடங்குகள் நம்பிக்கைகள் குறித்த ஆய்வுகள் காலந்தோறும் முன்னெடுக்கப்படுவது அவசியமானதாகவே கருதப்படும்.

அடிக்குறிப்புகள்

1. சு. சக்திவேல், நாட்டுப்புற இயல் ஆய்வு. ப.154

2. மு.பாலகிருட்டிணன், கண்ணேறு கழித்தல், ப.183-184

3. மு.பாலகிருட்டிணன், கண்ணேறு கழித்தல், ப.183-184

4. தே. லூர்து, நாட்டார் வழக்காற்றியல் ஓர் அறிமுகம். ப.56

5. Richard M. Dorson, Folklore and Folklife, pg 3.

6. சு.சக்திவேல், நாட்டுப்புறவியல் ஓர் அறிமுகம் ப. 155.

பார்வை நூல்கள்

1. நாட்டுப்புறவியல் ஓர் அறிமுகம், சு. சக்திவேல், மணிவாசகர் பதிப்பகம், சென்னை-17. (முதற்பதிப்பு, 1993)

2. கண்ணேறு கழித்தல், மு.பாலகிருட்டிணன், பூங்கொடி பதிப்பகம், சென்னை – 4. (முதற்பதிப்பு, 2010)

3. நாட்டார் வழக்காற்றியல் ஓர் அறிமுகம், தே. லூர்து, நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம் வெளியீடு, தூய சவேரியர் (தன்னாட்சி) கல்லூரி, பாளையங்கோட்டை – 627002. (இரண்டாம் பதிப்பு, 2000)

4. நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு நூல் தே.லூர்து, முல்லை நிலையம், சென்னை – 17. (முதற்பதிப்பு, 2011)

5. நாட்டுப்புறப் பாடல்கள். சமூக ஒப்பாய்வு, சரஸ்வதி வேணுகோபால், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வெளியீடு, மதுரை. (முதற்பதிப்பு, 1982).

6. நாட்டுப்புறவியல் மற்றும் நாட்டுப்புற வாழ்க்கை ஒரு அறிமுகம் (Folklore and Folklife), ரிச்சர்ட்.எம்.டார்சன் (Richard M.Dorson), சிகாகோ பல்கலைக்கழகம், சிகாகோ (1972).

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p220.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License