இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

இளைய தலைமுறையினரும் செல்ஃபி பயன்பாடும்

முனைவர் பா. பொன்னி

உதவிப்பேராசிரியா் மற்றும் தமிழ்த்துறைத் தலைவா்,
தி ஸ்டாண்டா்டு ஃபயா் ஒா்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி,
சிவகாசி.


முன்னுரை

இன்று அறிவியல், வாழ்வின் உச்சத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இது மனித சமூகத்திற்குத் தேவையானது என்பதும் கால மாற்றத்தில் தவிர்க்க இயலாதது என்பதும் மறுக்க இயலாதது. ஆயினும், இரவு - பகல், இன்பம் - துன்பம் என்பது போல அறிவியலினால் ஆக்கம் தோன்றும் அளவிற்கு, அவை பயன்படுத்தப்படும் முறைகளால் தீமைகளும் நேரிடும் என்பதும் மறுக்க இயலாத உண்மை. அவ்வகையில், இன்று தகவல் தொடா்பு சாதனங்களுள் ஒன்றான கைபேசி, தகவல் தொடா்பிற்குப் பயன்படும் அதே வேளையில், அதனால் பல வகைப்பட்ட இடையூறுகளும் ஏற்படுவது உண்மை. இன்று கைபேசியில் பல்வேறு வகையான வகைகளும், அறிவியல் பயன்பாடுகளும் புழக்கத்திற்கு வந்துள்ளன. அதனால், இன்று தன்னைத்தானேப் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் செல்ஃபி முறை பரவலாகக் காணப்படுகிறது. அதனால் நம் பண்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

தமிழா் பண்பாட்டில் புகைப்படம்

தமிழா்களின் கலை உணா்வு சிறப்புப் பெற்றது. கோவில்களில் காணப்படும் சிற்பங்களும், ஓவியங்களும் இதற்குச் சான்று பகா்கின்றன. ஒருவரைக் கண்டு உள்ளபடியே ஓவியம் தீட்டும் வழக்கம் தமிழரிடையே உண்டு. ஆனால், மேலைநாட்டவா் வரவால் புகைப்படம் எடுக்கும் கருவி பழக்கத்திற்கு வந்த போது புகைப்படம் எடுத்தால் ஆயுள் குறைந்து விடும் என்ற நம்பிக்கை ஒரு காலத்தில் தமிழரிடம் நிலவியது. அதன் பின்னா், அது பழக்கமான ஒன்றாக மாறிப் போனது. திருமணத்திற்குப் பெண் பார்க்கும் நிலையிலும், பெண்ணின் புகைப்படத்தினை அளிப்பதற்குப் பெண் வீட்டார் தயங்குவா். திருமணமான ஆணோ, பெண்ணோ தன் துணையிடம் வேறு ஒருவருடைய புகைப்படம் இருப்பதனைக் கண்டால், அதன் விளைவாக அவா்களுக்குள் கருத்து வேறுபாடுகளும் ஏற்பட்டு விடுவதுண்டு. ஆனால் இன்று செல்ஃபியின் வருகையால் சமூகத்தில் பல்வேறு மாற்றங்கள் நிலவும் நிலையை நாம் கண்கூடாகக் காணமுடிகிறது.

செல்ஃபி

செல்பி யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறித்த தெளிவான விளக்கங்களைக் காண இயலவில்லை.1839 ஆம் ஆண்டு அமெரிக்கப் புகைப்படக்காரா் ஒருவா், தன் லென்ஸை சரி செய்யும் போது பதிவான புகைப்படம்தான் செல்ஃபியின் தொடக்கம் என்று குறிப்பிடுகின்றனா். (1) தன்னைத்தானேப் புகைப்படம் எடுத்துக் கொள்வதனை செல்ஃபி என்று குறிப்பிடுகின்றனா். இதன் அடிப்படை மனிதா்கள் தன்னைத்தானே விரும்புவதனைக் குறிப்பிடலாம். மனிதா்கள் அனைவருக்கும், தன்னைத்தானே விரும்புகின்ற மனப்போக்கு காணப்படும். இவ்வாறு விருப்பம் கொள்ளும் தன்மையை உளவியல் நோக்கில் ஆராய இயலுகின்றது.



நெறிபிறழ்வு (perversion)

நெறிபிறழ்வு என்பது இயல்பான பாலியல் செயற்பாடுகளுக்கு, பிறழ்வான செயற்பாடுகள் என்ற வகையில் வழங்கப்பட்டு வருகின்றது. இஃது உளவியல் நோக்கில் பாலியல் தொடர்பான வேட்கைகளைக் (sexual desires) குறிப்பதாகும். இதன் அடிப்படையிலேயே மோகத்திரிபுகள் (pervertions) ஏற்படுகின்றன என்பர். இவ்வாறான மோகம் என்பது பல நிலைகளில் அழைக்கப்பட்டு வருகின்றன. அவை, காட்சி மோகம் (exibitionism), பார்வை மோகம் (voyerism), சார்பொருள் மோகம் (fetishism), தன் மோகம் (narcissism) என்பனவாகும். பிறரைக் காமநோக்கில் பார்த்து இன்புறுவது பார்வை மோகம் எனப்படும். தன் அழகை, அங்கங்களைப் பிறருக்குக் காட்டுவது காட்சி மோகம். தன் காதலி, காதலன், பயன்படுத்திய பொருட்களைக் கண்டு காமுறுதல் சார்பொருள் மோகம். தன்னைத்தானேக் கண்டு தானேக் காமுறுதல், தன் அழகில் தானே மயங்குதல் தன் மோகம் எனப்படும். (2) இதில் தன்மோகம் மற்றும் காட்சி மோகம் ஆகிய இரண்டும் செல்ஃபியின் அடிப்படையாக அமைகிறது என்று குறிப்பிடலாம்.


தன் மோகம்

தன் மோகம் ஆங்கிலத்தில் நார்சிசம் என்று குறிப்பிடப்படுகிறது. கிரேக்கக் கடவுளான ஜீபிடர், தன் மனைவி ஜீனோவுடன் விளையாட எகோ என்ற பெண்ணைப் படைத்தார். ஜீனோ, எகோவுடன் விளையாடிக் கொண்டு இருக்கையில், ஜீபிடா் மற்ற பெண்களுடன் இன்புற்றிருந்தார். இதனை அறிந்த ஜீனோ கோபம் கொண்டு எகோவிற்கு, நீ இனி தனியாகப் பேசும் தன்மையை இழந்து விடுவாய். யார் என்ன பேசினாலும் இறுதிச் சொற்களையே ஒலிக்கக் கடவாய் என்று சாபமிட்டார். அதனாலேயே எதிரொலியை எகோ என்று அழைக்கும் வழக்கம் தோன்றியது.

எகோ நாசிஸ் என்ற இளைஞனைக் காதலித்தாள். அவன் அவள் இறுதி வார்த்தையையேப் பேசுவதால், அவளிடமிருந்து தப்பி ஓடினான். அவ்வாறு தப்பி ஓடுகையில் நதி ஒன்றில் தன் முகத்தினைக் கண்டான். அது வரையில், அவன் தன் முகத்தினைக் கண்டதில்லை. அதனால், தன் அழகைக் கண்டு வியந்து முத்தமிட முயன்று நதியில் விழுந்து இறந்தான். (3) ஆகவே, தன்னைத்தானே விரும்பும் தன்மையை அவன் பெயரால் நாசிச மனப்பான்மை என்று குறிப்பிட்டனா். இவ்வாறு தன்னைத்தானே மிகுதியும் விரும்பும் தன்மையை, செல்ஃபியை அதிக அளவில் பயன்படுத்தும் நபா்களிடம் காணமுடிகிறது.

செல்ஃபி அதிகரிக்கக் காரணங்கள்

தமிழா்களின் பாரம்பரியமான கூட்டுக் குடும்ப முறை அமைப்பு, தற்போது பெருமளவில் சிதைந்து விட்டது. பொருளாதாரச் சுமையால், ஆண், பெண் இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. வேலைப்பளுவின் சுமை, ஆண், பெண் இருவரையும் பாதிக்கிறது. குழந்தைகளுக்குத் தேவையான பொருட்களை வாங்கித் தருவதில் மட்டுமே தங்கள் பொறுப்புணா்வை பெற்றோர்கள் வெளிப்படுத்துகின்றனா். அவா்களின் செயல்பாடுகளைக் கவனிக்கத் தவறுகின்றனா். ஒருவருக்கொருவா் அன்பு செலுத்தக் கூட நேரம் இல்லாதவா்கள் போல் வாழ்க்கைப் பயணத்தில் பயணிக்கின்றனா்.

இத்தகையச் சூழலில் வளரும் பிள்ளைகள், தனக்கான ஒரு அங்கீகாரத்தை எதிர்பார்க்கின்றனா். தன்னைப் பற்றி, தன்னுடைய இருப்பைப் பற்றி, பிறா் என்ன நினைக்கின்றார்கள் என்பதனைத் தெரிந்து கொள்ள விரும்புகின்றனா். அதற்கு இத்தகைய அறிவியல் சாதனங்கள் அவா்களுக்குத் துணை புரிகின்றன. தன்னைத்தானே புகைப்படம் எடுத்து, அதனைப் பற்றிய மற்றவா்கள் கருத்துகளைக் கேட்பதிலான ஆா்வம் அவா்களிடம் அதிகரிக்கிறது. இத்தகைய உணா்வினால் பல்வேறு இடா்பாடுகள் தோன்றும் எனத் தெரிந்தாலும், வயதிற்கே உரிய ஆா்வத்தினால், அவா்கள் மேலும் மேலும் இச்செயல்களில் ஈடுபடுகின்றனா்.

செல்ஃபி யின் இடையூறுகள்

செல்ஃபி எடுக்கும் பழக்கம், பல்வேறு இடையூறுகளையும் அளிக்கிறது என்பதில் ஐயமில்லை. ஒகேனக்கல் நீா் வீழ்ச்சியில் செல்ஃபி எடுக்க முயன்று ஆறு போ் இறந்த பரிதாபம், ஓடும் ரெயில் முன்னால் நின்று செல்ஃபி எடுக்கும் எண்ணத்தில் ரெயிலில் அடிபட்டு இறந்தவா்கள், தூக்கு மாட்டிக் கொள்வது போல் செல்ஃபி எடுக்க முயன்று இறந்தவா்கள், நண்பனை துப்பாக்கியால் சுடுவது போல் செல்ஃபி எடுக்க முயன்று போலீசாரால் சுட்டுக் கொள்ளப்பட்டவா்கள் என்று இப்பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இருப்பினும், செல்ஃபி எடுக்கும் மோகம் இன்றும் தீா்ந்தபாடில்லை.

ஆளுமைக் கோளாறு

செல்பி எடுத்தல் ஓா் அளவினைத் தாண்டிய நிலையினை அடையும் போது, அதனை உளவியலாளர் சுட்டுகின்ற ஆளுமைக்கோளாறு நடத்தையாகக் கொள்ள இடமுள்ளது. “தனிமனிதனின் சமூகச் செயல்களில் மிகுந்த அளவில் சிதைவினை ஏற்படுத்தும் நடத்தைக் கூறுகள் ஆளுமைக் கோளாறுகள் என்று கருதப்படுகின்றன” (4) என்பா்.

பண்டைக் காலங்களில், ஆளுமைக் கோளாறு உடையவர்கள் குற்றவாளிகளாகவோ, நிலை தடுமாறி நடப்பவர்களாகவோக் கருதப்பட்டனர். தனி மனிதனின் ஆளுமைக் கூறுகள், குழந்தைப் பருவத்திலிருந்தே அவன் பழக்க வழக்கங்களுடன் ஒன்றி வருபவையாகும். ஆனால், தனிமனிதனின் ஆளுமைக் கோளாறுகளுள் பல, அவனுடைய சமூகப் பொருத்தப்பாட்டிற்கு இடையூறு விளைவிப்பனவாக விளங்குகின்றன. செல்ஃபி மோகம் அதிகம் இருப்பவா்களாலும், சமூகத்திற்கு இடையூறு இருப்பதனைக் காணமுடிகிறது. ஆனால் இவர்கள் தம்மை இயல்பு நடத்தையினராக எண்ணுகின்றனர். ஆளுமைக் கோளாறுகளில் முதன்மையானவை,

“1. கருத்துத்திரிபு ஆளுமை

2. உளச்சிதைவு ஆளுமை

3. தவிர்ப்பு ஆளுமை

4. வரம்பு ஆளுமை

5. நடிப்பு ஆளுமை

6. தன் வழிபாட்டு ஆளுமை

7. சார்புநிலை ஆளுமை

8. கட்டாய ஆளுமை

9. பணிவு – தாக்குதல் ஆளுமை” (5)

ஆகியவை ஆகும் என்று குறிப்பிடுவா். இதில் உள்ள தன்வழிபாட்டு ஆளுமைத் தன்மை கொண்டவராக அதிக அளவில் செல்ஃபி எடுப்பவா்களை அடையாளப்படுத்தலாம்.


தன் வழிபாட்டு ஆளுமை

தன்வழிபாட்டு ஆளுமையினரைக் குறித்துக் குறிப்பிடும் போது, “இத்தகைய ஆளுமையினர் தன்னைப் பற்றி மிக உயர்ந்த கருத்துக் கொண்டிருப்பர். தன்வழிபாட்டு ஆளுமையினர் எப்போதும் தன்வயப்பட்டவராகவும், மற்றவர்கள் தம்மை எப்போதும் புகழ வேண்டும் என்றும் விரும்புவர். மற்றவர்கள் தம்மைக் குறை கூறுவதையோப் பொருட்படுத்தாமையையோ அணுவளவும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். மற்றவர்களின் மன உணர்ச்சிகளையும், விருப்பு வெறுப்புகளையும் பற்றிக் கவலைப்படமாட்டார்கள்” (6) என்று குறிப்பிடுவா். செல்ஃபி எடுப்பவா்களிடமும் தம்மை மற்றவா்கள் பாராட்ட வேண்டும், புகழ வேண்டும் என்ற எண்ணம் மிகுந்திருப்பதைக் காணலாம்.

மனநோய்

செல்ஃபி மோகத்தை, அமெரிக்காவின் மனநல அமைப்பு ஒன்று மனநோய்களில் ஒன்றாக அறிவித்துள்ளது. இந்த நோய்க்கு செல்ஃபிடிஸ் (Selfitis) என்று பெயரிட்டு, இந்த பாதிப்புள்ளவர்களை மூன்று பிரிவினராக பிரித்துள்ளது.

1. பார்டர்லைன் செல்ஃபிடிஸ் (Borderline selfitis)

இது ஆரம்பகட்ட பிரச்னை. இவர்கள் ஒருநாளில் குறைந்தது மூன்று முறை தங்களை செல்போனில் போட்டோ எடுத்துக் கொள்வார்கள். ஆனால், சமூகத்தளங்களில் வெளியிட மாட்டார்கள்.

2. அக்யூட் செல்ஃபிடிஸ் (Acute selfitis)

இவர்களுக்கு ஒரு நாளைக்கு தங்களைக் குறைந்தது 3 முறையாவது செல்போனில் போட்டோ எடுத்து சமூக வலைத்தளங்களில் போடவில்லை என்றால் தூக்கம் வராது.

3. க்ரோனிக் செல்ஃபிடிஸ் (Chronic selfitis)

நாள் முழுவதும் செல்போனில் தன்னைத்தானேப் படம் எடுப்பதும், சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதும், அதற்கு வரும் வரவேற்பைப் பார்த்து மகிழ்ச்சி அடைவதும்தான் இவர்களின் வேலையே. இவர்களுக்கு மனநல மருத்துவரின் ஆலோசனை தேவை. தகுந்த நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால் பெரிய அபாயங்களில் சிக்கிக் கொள்வார்கள்.

இந்த செல்ஃபிடிஸ் நோயை ஓசிடி (Obsessive compulsive disorder) எனப்படும் எண்ணம் மற்றும் செயல் சுழற்சி நோயாக அறிவிக்க வேண்டும் என்று மனநல மருத்துவர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள். (7)

இன்றைய இளம் தலைமுறையினரை, செல்ஃபி கட்டுப்பாட்டில் இருந்து மீட்டெடுக்க வேண்டியது நம்முடைய கடமையாகும். செல்ஃபி ஒருவருக்கொருவா் தமமுடைய உணா்வுகளைப் பகிர்ந்து கொள்ள உதவக்கூடியது என்பது போன்று கருத்துகளைத் தெரிவித்தாலும், நம்முடைய சமூகத்தில் செல்ஃபி எதிர்மறையான தாக்குதல்களை ஏற்படுத்தியுள்ளது என்பது மறுக்க இயலாத உண்மை. இது குறித்த விழிப்புணா்வினை இளம் சமுதாயத்தினரிடையே ஏற்படுத்தினால் மட்டுமே ஆரோக்கியமான சமுதாயம் உருவாகும்.



சான்றெண் விளக்கம்

1. https://thennadu.com/?p=214

2. https://ta.wikipedia.org/wiki

3. http://www.pichaikaaran.com/2011/01/blog-post_07.html

4. சு. சண்முகசுந்தரம், நாட்டுபுறவியலில் உளவியல் பார்வை, ப.9

5. பெ. தூரன், மனமும் அதன் விளக்கமும், ப.16

6. வாழ்வியற் களஞ்சியம், தொகுதி 2, ப.723

7. https://amarkkalam.forumta.net/t29340-topic

துணைநூற்பட்டியல்

1. சண்முக சுந்தரம், சு, நாட்டுபுறவியலில் உளவியல் பார்வை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. 1990.

2. தூரன், பெ., மனமும் அதன் விளக்கமும், சந்தியா பதிப்பகம், சென்னை. 2008.

3. வாழ்வியல் களஞ்சியம், தொகுதி – 1, 2, 5, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர். 1991.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p230.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License