Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினேழாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...

Content
உள்ளடக்கம்

சமையல்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

இரட்சண்ய மனோகரத்தில் இயேசுவின் இறைத்தன்மை

ரா. அபிஷா

div Class=f2>
ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வாளர், தமிழாய்வு மையம்,
இலக்குமிபுரம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
நெய்யூர் -629802, கன்னியாகுமரி மாவட்டம்.


முன்னுரை

இயேசு இறைத்தன்மையை இழக்காமல் மனித உருவில் தோன்றி நம்மோடு வாழ்ந்தார். ஆபிரகாமுக்கும், தாவீதுக்கும் கடவுள் வாக்களித்தபடி, அவர்களது வழி மரபிலேயே இயேசு கிறிஸ்து தோன்றினார். இயேசுவின் இறைத்தன்மையும், மனிதத் தன்மையும், பிரியாமல் இருக்கின்றன. மனிதத்தன்மை கொண்ட இறைமகனாகவும், இறைத்தன்மை துலங்கும் மானிட மகனாகவும் இயேசு கிறிஸ்து விளங்குகின்றார். இயேசுவின் இறைத்தன்மை இரட்சண்ய மனோகரத்தில் இடம்பெற்றுள்ள தன்மை இக்கட்டுரையில் ஆராயப்பட்டு உள்ளது.

இறைத்தன்மை

இறைத்தன்மை என்பது இயேசுவின் அருட்செயலாகும். கிறிஸ்தவ இறைத்தன்மையின்படி, கடவுள் இறைத்தன்மையில் ஒருவராகவும், தந்தை, மகன், தூய ஆவி என விளங்குகின்றவராவார். கடவுளின் இந்த இயல்பே திரித்துவம் அல்லது அதிபுனிததிரித்துவம் ஆகும். படைத்த ஒரே கடவுள் அன்பிலும், பொறுமையிலும், தியாகத்திலும் சிறந்து திகழ்ந்து விளங்கியவர். மக்களுக்கு நல்வழிகாட்டி இறை அருளைப் பொழிந்து வல்லமை உடையவர்களாக அருள்பொழிவு செய்வதே இறைத்தன்மை ஆகும்.

இயேசுவின் வேதவாக்கு அருள்

இறைவனால் அருளப்பட்டது வேதம். இயேசுவின் அருளைப் பெறுவதற்கு வேதம் வழி வகுக்கிறது. இறையருள் பெற்றவர்களுக்கு நன்மையை விளைவிக்கும் தீயச் செயல்கள் செய்பவர்களுக்கு அச்சத்தைக் கொடுத்து மரணத்தை வழிவகுக்கக் கூடியனவாக இருக்கும். இது வேதத்தின் சிறப்புடையத் தன்மைகளாகவும் விளங்குகிறது. இயேசுவின் போதனைகள் மரணத்தை அழிக்கக் கூடிய ஆயுதமாகும். இயேசுவின் வேத அருள்வாக்கே தீய எண்ணங்களை மனதில் வரவிடாமல் தடுக்கும் சிறப்புடையதாக விளங்குகிறது என்பதை,

“தேவதூ தரும்வியந் தேத்து செம்பொருள்
பூவுலக குயவரு புனிதன் புத்துரை” (இ. ம.199)

என்பதை இப்பாடல் வரிகள் உணர்த்துகின்றன.

இயேசுவின் நற்செய்திப் போதனைகள்

தந்தை கடவுள் ஈசோ வழியாக நமக்கு அருளிய “மீட்பின் வார்த்தையே நற்செய்தி என்பனவாகும். ஈசோ என்பது இயேசுவைக் குறிக்கிறது. நற்செய்தி என்ற வார்த்தையின் பொருள் “நல்ல செய்தி” உலக மக்களுக்கு நலம் தரக்கூடிய வண்ணம் நற்செய்தியைப் பறைசாற்றி அவர்களைத் துன்பத்தில் இருந்து விடுவித்தார். (உலகின் உயிர் ப:137). இயேசுவின் நற்செய்தி மக்களின் மனத்தைத் தூய்மைப்படுத்தி நன்னிலை அடைய வழி வகுக்கும். இயேசுவின் நற்செய்தி அன்பு மிக்கது. இயேசு மக்களுக்கு நற்செய்தியைப் பறைசாற்றிக் கொண்டே சென்றார். தந்தை கடவுளின் அன்பைக் குறித்து மக்களுடன் உரையாற்றினார். ஈசோ மக்களிடம், “காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது. மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்” என்று கூறினார். (மாற்கு.1:15)


வாழ்வு தரும் சீவநதி

உலக மக்களைத் துன்பத்திலிருந்து பாதுகாப்பத்தற்காக சீவநதி உலகில் பாய்ந்து கொண்டிருக்கிறது. சீவநதி தண்ணீர் மக்களின் உடலுக்கு எந்தத் தீங்கும் வராத வண்ணம் தற்காத்துக் கொள்ளும் தன்மையுடையது. வானுலகையும், மண்ணுலகையும் இணைக்கும் இயல்புடையது. சீவநதி தண்ணீரில் மூழ்கி வருபவர்களின் பாவங்களும், அவர்கள் நோய்களும் அகன்று போகும். மனங்களில் இறை உணர்வை ஏற்படுத்தும் பிறவியான துன்பங்களைத் தொலைந்து போக இதை விட வேறு வழியும் இல்லை. சீவநதி தண்ணீரைப் பருகிக் கொண்டவர்கள் ஒரு நாளும் துன்புற மாட்டார்கள். நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும், என்றுமே தாகம் இருக்காது. நான் கொடுக்கும் தண்ணீர், அதைக் குடிப்பவருக்குள் பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலைவாழ்வு அளிக்கும் என்று இயேசு கூறினார். (யோவான்.4:14) அதுபோல சீவநதி நீரைப் பருகினால் பசி, துன்பம், சோர்வு, நோய் உடலை வருத்தும் துன்பங்கள் அழிந்து நிலை வாழ்வு கிடைக்கும் என்பதை,

“தாகமின் றாம்பசி தணியும் சஞ்சல
தேகமும் புனிதமாம் சீவ நீரினே” (இ.ம.216)

எனும் பாடல் வரிகள் உணர்த்துகிறது.

பாவங்களைப் போக்கி மீட்சியடையச் செய்தல்

பாவங்களில் விழாமல் காத்து மீட்சியடையத் துணையாக இருந்து வழி நடத்தி, பேய்கள் சூழ்ந்து கொண்டிருக்கும் மக்களை விடுவித்து அவர்களுக்கு அருள்புரிந்தீர். இறந்தோரை உயிர்த்தெழச் செய்து காட்சி கொடுத்தீர். உம் உதவியை நாடி நம்பிக்கையுடன் காத்திருக்கும் எளிய மக்களுக்கு என்றென்றும் அழியாத வாழ்வினை இயேசு நல்கி, அவர்களுக்கு நல்துணையாக வழிகாட்டினார் என்பதை,

“செத்தேன் உன் னருளாற்பிழைக் தேன்மறு செனம்மதாய்
எத்தோடங் களையும் பொறுத் தென்றுமிரங்குகவென்
அக்காவுன்னை யல்லாலெனக் கார்துணை யாருறவே” (இ.ம.313)

இரட்சண்ய மனோகரமும் மீட்படைந்தோர் என்றுமே வாழ்வார் என்றும்,

கீழ்க்காணும் கீர்த்தனைப்பாடலில்,

“மீட்டகப்பட்ட கூட்டமே
உங்கள் மீட்பர் பேரிலே
பாடி வாழ்த்தல் செய்யுங்கள்
மீட்பின் அன்பைச் சொல்லுங்கள்” (கீர்: 213)

விளக்குகிறது.


தொழுநோயாளிகளைக் குணப்படுத்துதல்

கண்களில் ஒளி இருள் சூழ்ந்து கொண்டிருக்கும் என் கண்களை உம் கையால் தொட்டு பார்வை பெறச் செய்தார். என் மேல் இரக்கம் கொண்டும் பார்வை அளித்தீர், காதுகேளாத என்னையும் குணமாக்கினீர். பசியுற்றோருக்கு உணவுக் கொடுத்து பசிக்கு உணவூட்டினார். வாய் பேசாதோரை பேச வைத்து குணமாக்கினார். தொழுநோயாளிகள் இறைவனிடம் “தாவீதின் மகனே எங்களுக்கு இரங்கும் என்று உரக்கக் கத்தினார்கள்” என்பதை (மத்தேயு.21.30) வசனத்தில் கூறியது போல இரட்சண்ய மனோகரத்திலும் இடம் பெற்றுள்ளது.

“மையார்கண் ணிருண்டுசெவி வாயடைத்துக் குழறி
ஐயால்மூச் சொடுங்கிஉயி ராக்கைவிட் டேகிடு நாள்” (இ.ம.315)

உலகைக் காக்கும் இறைவன்

உலக மக்களின் பாவங்களைப் போக்கி மக்களைத் துன்பத்திலிருந்து விடுவித்து அவர்களுக்கு வழித்துணையாக நின்று காத்தல், படைத்தல், அழித்தல் என்னும் செயல்களில் அரசராக விளங்கியவர். துன்பக் கடலில் தவித்த மக்களை மீட்டவர். “இயேசு சீடர்களை நோக்கி நம்பிக்கை குன்றியவர்களை, ஏன் அஞ்சுகிறீர்கள்” எனக் கேட்டு எழுந்து காற்றையும், கடலையும் அடக்கிக் கொண்டார். உடனே மிகுந்த அமைதியுண்டாயிற்று” (மனிதகுமாரன் இயேசுபிரான்.ப.181)

இஸ்ரவேலர் மக்களைக் காத்தல்

இஸ்ரவேல் என்பதற்கு எபிரேயத்தில் ‘இறைவனோடு போராடுகிறான்’ என்பது பொருள். அதன் பின் ஆபிரகாம் சந்ததியில் பிறந்த அனைத்து மக்களுக்கும் இஸ்ரவேல் என்ற பெயர் கடவுளால் வழங்கப்பட்டது. இஸ்ரவேல் மக்கள் நானூறு ஆண்டுகளுக்கு மேல் எகிப்து நாட்டில் அடிமையாக வாழ்ந்து வந்தனர். இஸ்ரவேலரின் அழுகுரலைக் கேட்டு, கடவுள் மனமிரங்கினார். இஸ்ரவேல் மக்களின் உயிர்களைக் காக்கும் பொருட்டு கடவுள் யோசேப்பை எகிப்திற்கு அனுப்பினார். கடுமையான பஞ்சத்தால் எகிப்து நாடும் கானான் நாடும் வாடியது. கடவுள் இஸ்ரவேல் மக்களை அடிமை வாழ்விலிருந்து விடுவித்தார் என்பதை,

“கருப்பினில் இசரேல் மக்களைக் காத்த
கருணையங் கடவுளே போற்றி” (இ.ம.391)

இஸ்ரவேல் மக்களை விடுவித்ததன் மூலம் இயேசுவின் இறைத்தன்மை வெளிப்படுகிறது.


அன்பால் வெளிப்பட்ட இறைத்தன்மை இஸ்ரவேல் மக்களைப் பஞ்சத்திலிருந்து கடவுள் காத்து அருள் புரிந்ததோடு மட்டுமல்லாமல் “குழந்தை வளம் பெற்றுப் பலுகிப் பெருகி எண்ணிக்கையில் உயர்ந்தனர். இதனால் அந்நாடே அவர்களால் நிறைந்து விட்டது” (கிறிஸ்தவக் தமிழ் இலக்கியம், ப.70). இதன் மூலம் கடவுள் இஸ்ரவேல் மக்கள் மீது கொண்ட அன்பு வெளிப்படுகிறது. அடிமை வாழ்வில் மருண்டு கிடந்த இஸ்ரவேல் மக்களை மோசே வழியாக மீட்டு, தெளிந்த புத்தியில்லாப் பார்வோனையும் அவன் படைகளையும் செங்கடலில் மடியச் செய்தார். இவையனைத்தும் ஆண்டவர் இஸ்ரவேல் மக்கள் மீது கொண்ட அன்பினால் நடைபெற்றது என்பதை,

“அருளினாற் செங்கோ லளித்து மோசேயை
அனுப்பிய அமலனே போற்றி” (இ.ம.392)

இப்பாடல் வரிகள் உணர்த்துகிறது.

இஸ்ரவேல் மக்களுக்கு மன்னாவை அளித்தல்

இஸ்ரவேல் மக்கள் நானூறு ஆண்டுகளுக்கு மேல் எகிப்து நாட்டில் அடிமைகளாக வாழ்ந்தனர். பார்வோன் சிறையிலிருந்து கடவுள் இஸ்ரவேல மக்களை மீட்டு மோசே தலைமையில் வழி நடத்திச் சென்றார். இஸ்ரவேல் மக்கள் பயணம் செய்த நாற்பது ஆண்டுகளாகக் குடியேற வேண்டிய கானான்நாட்டை அடையும் வரை அவர்களுக்கு உணவாக மன்னாவை கடவுள் அளித்தார். கடவுள் அருளிய வானமுதத்தை “இஸ்ரவேல் குடும்பத்தார் மன்னா என பெயரிட்டழைத்தனர். இது கொத்தமல்லி போன்ற வெண்ணிறமாயும், தேன் கலந்து ஆக்கிய பணியாரம் போன்றும் சுவையாயும் இருந்தது” (வி.ப.16:31) என்று விவிலியம் குறிப்பிடுகிறது.

“மற்றவர் தமக்கு வழித்துணையாகி
வானமு கருளினாய் போற்றி” (இ.ம.393)

கடவுள் இஸ்ரவேல் மக்களுக்கு வழித்துணையாக அவர்களுடன் சென்று, உணவாக மன்னாவை அருளி, தம் மக்கள் மீது கொண்ட அன்பைப் பறை சாற்றினார்.

கானானிய நாட்டில் இஸ்ரவேலர் குடிபுகல்

பாலும், தேனும் ஆறாக ஓடும் தன்மையைக் கொண்டது கானான் நாடு. இந்நாடே ஆண்டவர் இஸ்ரவேல் மக்களுக்கு வாக்களித்த நாடாகும். இஸ்ரவேலர் கடவுளின் வாக்குறுதிகளுக்கு உண்மையுள்ளவர்களாக நடந்தமையால், கொஞ்சம் கொஞ்சமாக கானானிய நாட்டைக் கைப்பற்றினார்.

“கொற்றமொ டிசரேல் வளமிகு கானான்
குடிபுக வருளினாய் போற்றி” (இ.ம.393)

இஸ்ரவேல் மக்கள் வளமிகுந்த நாட்டில் குடியேற ஆண்டவர் வரமருளினார்.

இயேசு மக்களுக்கு நற்செய்தி பறைசாற்றுதல்

இயேசு வழங்கிய முக்கியமான போதனையில் ஒன்று மலைப்பொழிவு ஆகும். எல்லா மனிதரையும் அன்பு செய்ய வேண்டும் என்றும், எதிரிகளை வெறுக்காமல் அவர்களை மன்னித்து ஏற்க வேண்டும். “விண்ணரசு நெருங்கி வந்து விட்டது என நற்செய்தியைப் பிறருக்கு பறைசாற்றுங்கள். இயேசு மலைமேல் ஏறி தாம் விரும்பியவர்களைத் தம்மிடம் வரவழைத்தார். அவர்களுள் பன்னிருவரைக் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் திருந்தூதர்கள் என்று பெயரிட்டு அழைத்தனர். “சீமோன் எனப்பட்ட பேதுரு” அவனது சகோதரனாகிய அந்நிரேயா, செபெதேயு மகன் யாக்கோபு, அவனது சகோதரனாகிய யோவான், பிலிப்பு, பார்தொலெமேயு, தோமா, மத்தேயு, அல்வின் மகனாகிய யாக்கோபு, லெபேயு எனப்பட்ட ததேயு, கானானாகிய சீமோன், யூதாஸ்காரியோத் என்னும் பன்னிரெண்டு பேரைத் தலைமைச் சீடர்களாகத் தேர்ந்தெடுத்தார்” (மீட்பராம் கடவுள், பக்.22) அவர்கள் நற்செய்தியை அறிவித்து இயேசுவின் பெயரால் நோயாளிகளைக் குணமாக்கினர் என்பதை,

“வந்தது பரம ராச்யம் மனந்திரும் புங்க என்று
முந்துப தேசஞ் செய்தி முத்திவித் தகனே போற்றி” (இ.ம:402)

இப்பாடல் வரிகள் உணர்த்துகிறது.


இயேசு கடல் மீது நடத்தல்

கலிலேயாக் கடலைக் கடந்து “பெத்சாயிதா” என்னும் நகருக்குச் செல்லுமாறு சீடர்களிடம் கூறினார். பின்பு இயேசு மட்டும் தனியே இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலையின் மேல் ஏறினார். அதற்குள் படகு கரையிலிருந்து நெடுந்தொலைவில் சென்று விட்டது. பெருங்காற்று அடித்தபடியினால் கடல் கொந்தளித்தது. படகு அலைக்கழிக்கப்பட்டது. இயேசு கடல் மீது நடந்து சென்று காற்றையும், புயலையும் நிற்கக் கட்டளையிட்டார் இயேசு. தோற்றதோர் அரசன் போல நின்றது சூறைக் காற்று மூண்டெழுந்த பெரும் புயல் காற்றையும் “இரையாதே அமைதியாயிரு” (உலகின் உயிர் ப:93) என்று கூறி விலகினார்.

“ஆழிழமீ துலவி ஆழி அலையினை அடக்க ஆங்தே
குழிரும் புச(ய)லைக் காத்த தொல்லைஎம் பரனே போற்றி” (இ.ம.401)

இயேசு வலிமை கொண்டு காற்றையும், புயலையும் அடக்கிக் கொண்டார் என்பதன் மூலம் இறைத்தன்மை வெளிப்படுகிறது.

இயேசு தோற்றம் மாறுதல்

பேதுரு, யோவான், யாக்கோபு ஆகியோரை அழைத்துக் கொண்டு இறைவேண்டல் செய்வதற்காக இயேசு தாபோர் மலைக்குச் சென்றார். அவர் இறைவேண்டல் ஏறெடுத்துக் கொண்டிருந்த போது அவருடைய ஆடைகள் இவ்வுலகில் எந்தச் சலவைக்காரரும் வெளுக்க முடியாத அளவுக்குத் தூய வெள்ளை நிறத்தில் ஒளி வீசியது.

“ஒரும லைச்சிக ரத்தொரு மூவருக்கு
அருதி லத்துச்சு பருமி ரவிபோல்
தரும சோறித ழைத்திடக் காட்டுமத்
திருமு கச்சுட ருள்ளித்தி யங்குவான்” (இ.ம.448)

“அங்கே அவர்கள் முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளி போன்று வெண்மையாயின்” (மத்தேயு 17.2) என்ற விவிலியமும் குறிப்பிடுகிறது.

இயேசுவின் பொறுமைக்குணம்

பொறுமை என்பது தமக்குத் துன்பம் ஏற்படும் போது கோபம் கொள்ளாமலும் இருக்கும் மனநிலை ஆகும். இயேசுவை கைது செய்ய குருக்களும், மூப்பர்களும் அனுப்பிய பெருங்கூட்டம் வாள்களோடும் தடிகளோடும் வந்தனர். பின்னர் அவர்கள் இயேசுவைக் கைது செய்து இழுத்துச் சென்று தலைமைக்குக் கயபாவுடன் கூட்டிச் சென்றார்கள். அக்கொடியவர்கள் செய்த கொடூரச் செயல்களையும் தாங்கிக் கொண்டு சினம் கொள்ளாமல் பொறுமையாக இருக்கும் குணமுடையவர். இயேசுவிடம் அன்புள்ளமும், அருள் நோக்கமும் உண்டு என்பதை இச்செயல்கள் தெள்ளத்தெளிவாக விளங்குகின்றது.

“குறும னக்கொடி யார்செய் குரூரமும்
சிறுமை யுமவர் தீச்சொல்லும் தாங்கியத்
தெறும கத்தவர் சிந்தை சினந்திபாய்
பொறுமை யுள்ளிப் புதைந்து புலம்புவான்"(இ.ம.456)

இயேசு பகைவரை மன்னித்தல்

மன்னித்தல் என்பது மிகப்பெரிய நன்மை தரும் நற்செயலாகும். மன்னிக்கிற மாண்புதான் மிக இன்றியமையாதது. மன்னிப்பு என்பது இறைத்தன்மை சார்புடையதாகும். தவறு செய்வது மனித இயல்பு. இருளை இருள் அகற்ற முடியாது என்பதைப் போல பகையைப் பகை அகற்ற முடியாது அன்புதான் பகையை அகற்றும் என்கிறார் மார்ட்டின் லூதர் கிங். இதைத் தொடர்ந்து இயேசு சிலுவையைச் சுமந்து கொண்டு கொல்கோத்தா என்னும் மலையை அடைந்தனர். எல்லாத் துன்பங்களையும் இயேசு அமைதியுடன் தாங்கிக் கொண்டார். அவர்கள் செய்த பாவச் செயல்களுக்காக இயேசு மனம் வருந்தி இறைவனிடம் மன்னிப்புக் கேட்டார்.

“விருண மேனியில் செவ்விருப் பாணிசெல்
தருண மற்றிவர் தம்பிழை யோர்கிலர்
அருண யந்துமன் விக்கவத் தவெனுங்
கருணை யுள்ளிக்க சிந்துக லுழுவாய்" (இ.ம.457)

“அப்போது இயேசு தந்தையே இவர்களை மன்னியும் ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை என்று சொன்னார்” (லூக். 23-33) துன்ப வேளையிலும் இயேசு மன்னிக்கும் குணம் உடையவர்களாகவும் விளங்குகின்றார்.


முடிவுரை

இயேசுவின் இறைத்தன்மையின் வாயிலாக உலக மக்கள் அனைவரும் பாவங்களில் இருந்து மீட்டு மக்களை நல்வழிகாட்டி துணையாக இருந்து அவர்களுக்கு வழிகாட்டினார். அளவில்லா நன்மைகளைச் செய்து மக்களை இன்பத்திலும், மகிழ்ச்சியலும் பங்களிக்க உதவகிறார். மக்கள் மீது அன்பு, இரக்கம் கொண்டு நோய் நொடிகளிலிருந்து விடுவித்து பாதுகாத்து வருபவர் இறைவன். ஏழை, எளியோர் மக்கள் மீது அளவில்லா இன்பத்தையும் கொடுத்து அருள் கொடைகளை மக்களுக்கு வழங்கியவர் இவ்வியலில் இயேசுவின் இறைத்தன்மையும், அவருடைய இரக்கக்குணம், பொறுமை, அன்பு, சேவை, தியாகம் கொண்டு மக்களைத் தொழுநோயிலிருந்தும் பார்வை இல்லாதவர்களுக்குப் பார்வை கொடுத்தும் இயேசுவின் இறையருளாக இக்கட்டுரையில் உணர்த்தப்பட்டுள்ளது. இறைவன் மீது நம்பிக்கை கொண்டோர் அவரது திருப்புகழைப் போற்றிப் புகழ்பவராகவும் இருப்பர். இயேசுபிரான் மக்களுக்குள்ளே இணையற்ற பெருமைகளைச் செய்ததால் அவர் பின்னால் சீடர்கள் பலர் வந்தார்கள். அவர்களில் பன்னிருவரை மட்டும் தன் சீடர்களாகத் தேர்ந்தெடுத்து மெய் வண்ணம் போதித்தார். அவர்கள் பெயரை அப்போஸ்தலர் என்று விளங்கச் செய்தார்.

நம்பிக்கை கொண்டோர் அனைவரும் இயேசுவின் இறையருளின் மூலம் வாழ்வடைவர் என்பதை இயேசுவின் இறைத்தன்மை என்ற இக்கட்டுரையின் மூலம் ஆராயப்பட்டுள்ளது.

பயன்பட்ட நூற்கள்

1. ஆர். அருளப்பா, உலகின் உயிர், பதிப்பு ஆண்டு:1995

2. எச். ஏ.கிருஷ்ணபிள்ளை, இரட்சண்ய மனோகரம், சாரதா பதிப்பகம், பதிப்பு ஆண்டு:2010

3. தி. தியானந்தன் பிரான்சிஸ், கிறிஸ்து நெறிப் பாவலர்கள், பதிப்பு ஆண்டு: 2000

4. சென்ட் தோமஸ், மீட்பராம் கடவுள், பதிப்பு ஆண்டு: 2006

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p231.html


  2022
  2021
  2020
  2019
  2018
  2017

வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்

முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License