Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினேழாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...

Content
உள்ளடக்கம்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

தமிழர் பண்பாட்டில் உப்பு

முனைவர் த. ரெஜித்குமார்
கௌரவ விரிவுரையாளர், தமிழ்த்துறை,
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
வேதாரண்யம்.


முன்னுரை

மக்கள் அன்றாடம் வாழ்வில் பயன்படுத்துகின்ற பொருள்கள் அனைத்தும் ஏதாவது ஒரு வகையில் பண்பாட்டினை வெளிப்படுத்தி விடுகின்றன. பொருள்சார் பண்பாட்டில் மக்கள் வாழ்வியலோடு அன்றாடம் பயன்படுத்துகின்ற ஒவ்வொரு பொருட்களும் பண்பாட்டின் எச்சங்களாக திகழ்கின்றன. அதில் எல்லா மக்களும் அன்றாட வாழ்வியலில் பயன்படுத்துகின்ற முக்கியமான கனிமப் பொருள் உப்பு ஆகும். இயற்கையாக கிடைக்கும் உப்பு மக்களின் பண்பாட்டின் அடையாளமாகவும் விளங்குகின்றமைக் குறிப்பிடத்தக்கது. உப்பின் பயன்பாடு குறித்தும் உப்பின் மூலம் வெளிப்படுகின்ற மக்களின் பண்பாட்டினை எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகிறது.

பண்பாடு

மனிதன் கூட்டமாகச் சேர்ந்து வாழ்வதற்கு ஒரு பொதுவான ஒழுக்கத்திற்கான விதிமுறைகள் தேவைப்பட்டது. தான்தோன்றித்தனமான வாழ்க்கை முறையிலிருந்து கட்டுப்பாடுடைய வாழ்க்கை முறையினை மனிதன் ஏற்படுத்திக் கொண்டான். ஆகவே, பண்பாடு என்பது ஒரு முறையான நடத்தை முறைக்கு மக்கள் ஏற்படுத்திக் கொள்ளும் ஒர் அமைப்பு ஆகும். பெரும்பாலும் சிறந்த வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைகின்ற உள்ளப்பாங்கின் வெளிப்பாட்டை பண்பாடு (1983:8) என தெட்சணாமூர்த்தி குறிப்பிட்டு உள்ளார். மானிடவியலார் பண்பாட்டினைப் பொருள்சார் பண்பாடு, பொருள்சாராப் பண்பாடு என்று இரண்டாக வகைப்படுத்துவர். அதில் பொருள்சார் பண்பாட்டில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தி வருகின்ற புழங்கு பொருட்களான உணவு, உடை, உறைவிடம், தொழிற்கருவிகள் போன்ற பலவும் இடம் பெறுகின்றன. இதனைப் பக்தவத்சல பாரதி (1980:177), பொருள்சார் பண்பில் வழக்குகள், கருத்துகள், பழக்க வழக்கங்கள், அறிவுத் திறன்கள், உணவு உண்ணும் முறைகள், வழிபாட்டு முறைகள், நம்பிக்கைகள் போன்ற வழக்காறுகளும் அடங்குகின்றன என்று குறிப்பிடுகிறார். டாக்டர் நசீம்தீன் (1989:46), மக்கள் தங்கள் தேவையை நிறைவேற்றிக் கொள்ளப் பயன்படுத்தும் வேட்டைக் கருவிகள், வேளாண்மைக் கருவிகள், வீட்டு உபயோகப் பொருட்கள், மரச்சாமான்கள், கட்டடங்கள், உணவுகள், உடைகள், அணிகலன்கள், சாலைகள், போக்குவரத்துச் சாதனங்கள், எழுது பொருட்கள், அழகுப் பொருட்கள் போன்ற பொருள்சார் கூறுகள் புழங்கு பொருள் பண்பாட்டை அடையாளப் படுத்துகின்றன என்று விளக்கம் தருகிறார். பொருள் சார் பண்பாட்டில் உணவு பொருட்கள், தொழிற் கருவிகள், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் மக்கள் பயன்படுத்தும் எல்லா பொருட்களும் அடங்கும் என்று ரெஜித்குமார் (2017:127) குறிப்பிடுகிறார்.


உப்பு

உப்பு என்ற பெயர் வருவதற்கான காரணங்கள் அதிகமாகக் கிடைப்பது இல்லை. உப்பு என்ற தமிழ்ச் சொல்லுக்குச் ‘சுவை’ என்றுதான் பொருள். இனிப்பு, கசப்பு, துவர்ப்பு என்று சுவைகளெல்லாம் உப்பு என்ற சொல்லை அடியாகக் கொண்டேப் பிறந்தவை. சமையலுக்குப் பயன்படுத்தப்படும் உப்பிற்கு ‘வெள்ளுப்பு’ என்று பெயர். பழந்தமிழ் நாட்டுப் பொருளாதாரத்திலும், தமிழ் பண்பாட்டிலும் உப்புக்குத் தனி இடம் உண்டு. பழந்தமிழர்களால் சுவையின் சின்னமாகவும், வளத்தின் சின்னமாகவும் உப்பு கருதப்பட்டது. தன் உருவம் தெரியாமல் பிற பொருள்களோடு கலந்து பயன்தருவது வெள்ளுப்பு ஆகும்.

உப்பின் பெயராக இலவணம் என்று பிங்கல நிகண்டு (2004: 1731) குறிப்பிடுகிறார். உப்பினை சமுத்திர மணி, நீர் படிகம், கடல் தங்கம், பூமி கற்பகம், சமுத்திரஸ்வர்ணம், சுவர்ண புஷ்பம், சமுத்திரகனி, ஜலமாணிக்கம் என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. செய்த வேலைக்கு மாற்றாக நெல்லும் (சம்பாவும்) உப்பும் (அளத்தில் விளைவது) கொடுத்த வழக்கத்தினால்தான் ‘சம்பளம்’ என்ற சொல் பிறந்தது என்பர் சிலர். ஆங்கிலத்திலும் Salary என்ற சொல் Salt என்பதன் அடியாகப் பிறந்தது என்றும் கூறுவர். உப்பு விளையும் களத்திற்கு அளம் என்றும் பெயர். பெரிய உப்பளங்களுக்கு அரசர்களின் பட்டப் பெயர்களைச் சூட்டியிருக்கிறார்கள். அவை பேரளம், கோவளம் (கோ+அளம்) என்ற பெயர்களில் வழங்கப்பட்டுள்ளன. சோழ, பாண்டிய அரசர்கள் உப்புத் தொழிலை அரசின் கட்டுக்குள்ளேயே வைத்திருந்திருக்கிறார்கள் “ஜடாவர்மன் திரிபுவனச் சக்ரவர்த்தி சுந்தர பாண்டியன் காலத்தில் (கி.பி1268) அதும்பூர் என்னும் ஜனனாதப் பேரளம், செல்லூர் என்னும் அனபாய சோழப் பேரளம், இடையன் குழி என்னும் இராஜேந்திர சோழப் பேரளம், கூடலூர் என்னும் ராஜநாராயணப் பேரளம், திருநல்லூர் என்னும் கிடாரம் கொண்ட சோழப் பேரளம், வெண்ணாரிகன் சுழி என்னும் ஏழிசை மோகன் பேரளம், சூரைக்காமு என்னும் ஆளப்பிறந்தான் பேரளம் ஆகியவற்றிலிருந்து உப்பு விற்கையில் ஒரு உறை உப்புக்கு ஒரு உழக்கு உப்பு என்னும் விகிதத்தில் சேகரித்துத் திருவதிகை திருவீரட்டானேஸ்வரர் கோயில் திருவமுது படிக்கும் கோயில் சீரமைப்பிற்கும் நிவந்தமாக அளிக்கப்பட்டிருக்கின்றன” என்று தொல்லியல் அறிஞர் நடன காசிநாதன் (1992:45) எடுத்துக் காட்டுகிறார்.


பழந்தமிழகத்தில் மிகப்பெரிய சந்தையின் உற்பத்திப் பொருள் உப்புதான். கடற்கரையில் உப்பினை வண்டிகளில் ஏற்றி செல்லும் உமணர்களின் நிலையை சங்க இலக்கிய நெய்தல் திணைப் பாடல்களில் ஆங்காங்கே கூறப்பட்டுள்ளது. உப்பு வணிகம் செய்தவர்களை உமணர்கள் என்று அழைக்கின்ற மரபு இருந்துள்ளமையை சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. உப்பு வணிகம் செய்பவர்களின் நிலையில்லாத வாழ்க்கையினை, உவர் விளை உப்பின் குன்று போல்குப்பை மலை உய்த்துப் பகரும் நிலையா வாழ்க்கை (நற்றிணை, 138:1-2) என்ற நற்றிணை பாடல் வழியாக மலை போல குவித்து வைத்திருக்கும் கடல் நீரில் விளைந்த உப்பினை ஏற்றிக்கொண்டு மலை நாட்டிற்கு விற்பனை செய்கின்ற உமணர்களின் நிலையில்லாத வாழ்வினை எடுத்துரைகிறது.

தம்மிடமுள்ள பொருளை விற்று அதற்கு பதிலாக தமக்குத் தேவையான பிற பொருட்களை வாங்கும் முறையே பண்டமாற்று முறை ஆகும். பண்டமாற்று முறையில் நெல் முக்கியமானதாக கருதப்பட்டது. நெல்லின் மதிப்பு இணையாக உப்பின் மதிப்பு இருந்தை,

“நெல்லும் உப்பும் நேரே: ஊரீர்
கொள்ளீரோ” (அகநானூறு: 390, 9-10)

என்ற அகப்பாடலின் வழியாக அந்தகாலத்தில் நெல்லுக்கு நிகராக உப்பும் மதிக்கத்தக்கதாக இருந்துள்ளமை அறிய முடிகிறது.

உமணர்கள் கொண்டு வந்த உப்பினை விற்று மாற்றாக மலைப்பகுதியில் விளைகின்ற வேறு பொருட்களை வாங்கி செல்வார்கள். இதனை,

“தம்நாட்டு விளைந்த வெண்ணெல் தந்து
பிறநாட்டு உப்பின் கொள்ளைசாற்றி” (நற்றிணை, 183,1-2)

என்ற நற்றிணை பாடல் எடுத்துரைக்கிறது. இவ்வாறு பண்டைய தமிழ் சமூகத்தில் உப்பு வணிகம் மிகச்சிறப்பாக நடைபெற்றுள்ளமைப் புலனாகிறது. உப்பைக் கொடுத்து அதற்கு நிகராக பிற பொருட்களை வாங்குகின்ற முறையும் நெல்லுக்கு நிகராக உப்பிற்கும் மதிப்பு கொடுத்துள்ளமையை உணர முடிகிறது. உப்பு உலோகத்தை அரிக்கும் தன்மை கொண்டது. எனவேதான் வீடுகளில் ‘உப்பு மரவை’ எனப்படும் மரச்சட்டியிலும் ‘கல்மரவை’ எனப்படும் மாக்கல் சட்டிகளிலும் உப்பை இட்டு வைக்கின்ற வழக்கம் இருந்துள்ளது. இப்பாத்திரங்கள் இப்போது பண்பாட்டு எச்சங்களாக விளங்குகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

வரலாற்றில் உப்பு

இந்திய வரலாற்றிலும் உலகளவிய வரலாற்றிலும் உப்புக்கு தனிச்சிறப்பு உண்டு என்று கூறலாம். இறந்தவர்களின் உடலை பாதுகாக்க முதன் முதலில் உப்பை பயன்படுத்தியவர்கள் எகிப்தியர்கள் ஆவார். பண்டைய எபிரேயர்கள் கிரேக்கர்கள் ரோமனியர்கள் எகிப்தியர்கள் மற்றும் இந்தியர்கள் போன்ற நாட்டினர் உப்பை பரிசளிக்கும் வழக்கத்தை கொண்டிருந்தனர். இயற்கையின் கிடைக்கும் உப்பை இலவசமாக பெற மக்களில் ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. முப்புறமும் கடற்கரையை கொண்டுள்ள இந்தியாவில் மக்களுடைய தேவைக்கு அதிகமாகவே உப்பை உற்பத்தி செய்ய முடியும். ஆனால் அதிகப்படியான உப்பு அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பொருள் திரட்டும் வாய்ப்பு உண்டு.

உப்பு ஒரு வியாபார பொருளாக இருப்பதினால் அதனை வைத்து பல அரசியலும் பல போரட்டங்களும் வரலாற்றில் அரங்கேறியுள்ளன. இந்தியாவை ஆட்சி செய்த பிரிட்டிஷ் அரசு இந்தியர்கள் உப்பு உற்பத்தி செய்வதில் கட்டுப்பாடுகள் விதித்தது. ஏனெனில் இங்கிலாந்திலிருந்து கப்பல்களின் உப்பை இந்தியாவில் இறக்குமதி செய்தது. இந்தியாவில் உப்பின் அதிக வரி விதித்து இங்கிலாந்து உப்பை இங்கு விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டது. இந்தியாவில் உப்பு உற்பத்தி செய்வதற்கு ஆங்கில அரசு செய்த கெடுபிடிகளை தாங்கிக்கொள்ள முடியவில்லை. இந்த வரி விதிப்பு இந்தியர்கள் மீது கட்டாயமாகத் திணிக்கப்பட்டது. இதற்கு காரணம் இந்தியாவில் விளையும் உப்பு மலிவானது.

எளிய மக்கள் சிரமமில்லாமல் கிடைத்தது. அதனால் அங்கிருந்து கொண்டு வந்து உப்பை இந்தியாவில் விற்க முடியவில்லை. இந்தப் போக்கை எதிர்த்து காந்தியடிகள் உப்பு சத்தியாகிரக போரட்டங்கள் செய்வது என்று முடிவெடுத்தார். இப்போராட்டம் மக்களுக்கு அவசியமான ஒன்றாக இருந்தது (2006. 7)


விருந்தோம்லில் உப்பு

தமிழர்களின் முக்கிய பண்பாடுகளில் ஒன்று விருந்தோம்பல் ஆகும். இன்றும் விருந்தோம்பலின் போது இலையில் வைக்கப்படும் முதல் பொருள் உப்புதான். சோத்தில உப்பு போட்டுதான் சாப்பிடுகிறாயா? என்று பேச்சு வழக்கில் அதிகமாக மக்கள் பயன்படுத்துவதைக் காணமுடிகிறது. இது தன்மான உணர்வின் வெளிப்பாடாக பேசப்படுகிறது. உப்பு போட்டு சாப்பிட்டால் தன்மான உணர்வு அதிகமாக இருக்கும் என்ற நம்பிக்கை நாட்டுப்புற மக்களிடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

“உப்பில்லா பண்டம் குப்பையிலே” என்ற பழமொழி ஆரோக்கியம் தரும் இன்றியமையாத உணவைச் சுவைபட உண்ண வைக்கும் தன்மை உப்பிற்கு உண்டு என்பதைக் காட்டுகிறது. எதுவாயினும் உணவிற்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் உப்புக்கும் கொடுக்கப்படுகிறது. உணவு எப்படி அளவோடு இருக்கிறதோ, அவ்வாறே உப்பும் அளவோடு இருக்க வேண்டும்.

“உப்பு தின்னவன் தண்ணீர் குடிப்பான்; தப்பு செய்தவன் தண்டனை பெறுவான்”

என்ற பழமொழி உடலில் உப்பு கொஞ்சம் அதிகரித்தால் பிரச்சினைதான் வரும் என்பதை விளக்குகிறது. சரியான அளவில் சேர்க்கப்படும் உப்பு உணவிற்குப் பயன்படுவதால் தைராய்டு ஹார்மோன் குறைபாடு ஏற்படாமல் தடுத்து உடல் நலம் சீராக இருக்க உதவுகிறது. பொதுவாக நாம் உணவில் சேர்க்கும் உப்பு கடல் நீரை ஆவியாக்கி அதில் இருந்து எடுக்கப்படுகிறது. இதில் சோடியம் குளோரைடு மற்றும் இயற்கையில் நுண்ணூட்டச் சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. உப்பு உடம்பின் செல்களுக்கு மின் ஆற்றலைத் தருகிறது. உடம்பில் உண்டாகும் தசைப்பிடிப்பு குணமாக உதவுகிறது. உப்பு உணவில் உள்ள சத்துக்களை குடல் உறிஞ்சிகளால் உறிஞ்சப்பட்டு ஆற்றலாக மாற்றப் பயன்படுகிறது. உப்பு நரம்பு செல்களையும் மூளை செயல்களையும் இணைத்து மனிதன் சாகும் வரை செயல்பட உதவுகிறது. மூளை செல்களை உடம்பு முழுக்க உணரச் செய்யும் நரம்பு செல்களைத் தூண்டி செயல்படுத்தும் தன்மை கொண்டது.

உணவுக்குச் சுவை கூட்டச் சிறிதளவு உப்பை அவசியமாக்கி விட்ட காலம் இது. உப்பு தேவைக்கு அதிகமாகப் பல வழிகளில் உடலில் சேர்த்து விடுகிறது. உப்பில் பல தீமைகளும் ஏற்படுகிறது. உப்பு அதிகமாகச் சேர்வதால் ஆபத்து ஏற்படுகிறது. அளவுக்கு அதிகமான உப்பு கண்ணீர், வியர்வை போன்றவை வழிகளில் வெளியேற்றப்படுகிறது. உப்பு அதிகமானால் இரத்த அழுத்தம், மாரடைப்பு, வாந்தி, மயக்கம், தலைசுற்றல் உப்பு குறைந்தாலும் இது போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.

வாழ்வியலில் உப்பு

மனிதனானவன் ஒருமைப்பாடு, ஒழுங்கு, குறிக்கோள் ஆகியவற்றுடன் வாழத் தலைப்பட்ட போது ஏற்படுத்திக் கொண்ட சம்பிரதாய சாத்திரமே சடங்காகும், ஒவ்வொரு இனத்தாரும் தங்களுக்கென சில விதி முறைகளை உருவாக்கி வைத்துள்ளார்கள். அத்தைய சிறப்பு விதிமுறைகளேச் சடங்காகும். சமுத்திரத்தில் கிடைக்கக்கூடிய பொருளில் ஒன்று உப்பாகும். உப்பில்லாமல் மனிதன் உயிர் வாழ முடியாது என்ற சூழ்நிலையை உருவாக்கி உள்ளது. உப்பு மிக அத்தியாவசியமான ஒன்றாக, மனித வாழ்க்கையில் பயன்படும் விதங்களில் உயர்வு பெற்றது. நாம் சாப்பிடும் சாப்பாடுகளில் உப்பு முக்கிய இடம் வகிக்கிறது. சில பொருட்கள் சீக்கிரம் கெடாமல் பாதுகாப்பாக இருக்கவும் உப்பு நம் வாழ்வில் பயன்படும் ஒன்றாக இருக்கிறது. பல நல்ல செயல்கள் மற்றும் சடங்கியல் வாழ்க்கையிலும் மருத்துவத்திலும் கூட உப்பு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

புதிய வீட்டிற்கு முதன் முதலில் செல்லும் போது, லட்சுமி அருள் மற்றும் செல்வச் செழிப்பு நிறைந்து வாழ வேண்டும் என்பார்கள். எனவே, அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில், ஐந்து வகையான பொருட்களை எடுத்துச் செல்வார்கள். அதில் மிக முக்கியமான பொருள் உப்பு ஆகும். உப்பு என்பது மகாலட்சுமி ஆகும். முதலில் உப்பைக் கொண்டு செல்வதற்கான காரணம் நாட்டுப்புற மக்கள், புது இல்லத்தில் மகாலட்சுமி அருளால் பொருள் வளம் செழிக்க வேண்டும், அதனால் உப்பு எடுத்துச் செல்வதாக கூறுகின்றனர். அதேபோன்று புதுமனை புகுவிழாவிற்கு வருகின்ற உறவினர்கள் அரிசியினையும் உப்பினையும் அன்பளிப்பாகக் கொண்டு வருகின்றமைக் காணமுடிகிறது.

உப்பும் சர்க்கரையும் மங்களகரமான பொருளாக நாட்டுப்புற மக்கள் கருதுகின்றனர். அதனால் நல்ல செயல்களில் முதலில் உப்பும் சர்க்கரையும் பயன்படுத்துகின்றனர். திருமணத்தின் போது ஆண், பெண் இருவீட்டாரும் சுற்றத்தாரும் ஒரு பலசரக்குக் கடைக்குச் சென்று முதலில் ஒரு படி உப்பு, சர்க்கரை வாங்கிய பின்னரே, பிற பொருட்களை வாங்குகின்ற மரபு உள்ளது. வாங்கிய உப்பு, சர்க்கரையில் சிறிதளவு ஆண் வீட்டாருக்கு கொடுத்து அனுப்புவதும் உண்டு. இதன் காரணம், இரு வீட்டாருக்கிடையே நட்புறவும் நன்மை தீமைகளும் பங்கு எனக் கருதப்படுகிறது.

இன்றும் தமிழ் நாட்டில் பெரும்பாலான சாதி மக்களிடம் மணமகள் தன் கணவன் வீட்டிற்குள் முதலில் நுழையும்போது ஒரு சிறு ஓலைக்கூடையில் உப்பை எடுத்துக் கொண்டே நுழைகின்ற வழக்கம் உள்ளது. மதுரை மாவட்டக் கள்ளர் இனமக்களின் ஒரு பிரிவினர்கள் திருமணத்தை உறுதி செய்யும்போது மணமகள் வீட்டில் இருந்து அரிசியும், உப்பும் கொண்டு செல்கின்ற மரபும் உள்ளது. திருமண விருந்தில் தலைவாழை இலையில் முதலில் இடது பக்கத்தில் வைப்பது உப்புதான். ஏனென்றால், மற்றொரு மனிதனின் உறவை வளர்ப்பதற்காக உப்பு முதலில் வைக்கப்படுகிறது.

இறந்த வீட்டிற்கு சென்று விட்டு வீட்டிற்கு குளித்து விட்டு வருவது வழக்கம். அவ்வாறு வரும் போது, வீட்டினுள் செல்வதற்கு முன்னர் உப்பு கலந்த நீரினைத் தலை மற்றும் உடலில் தெளித்து விட்டுச் செல்லும் வழக்கம் கிராமப்புற மக்களிடம் உள்ளது. இதில் உப்பு இறந்த வீட்டில் சென்று வந்த தீட்டை போக்கும் தன்மையுடையது என்று கூறுகின்றனர். ஒருவர் இறந்த எட்டாவது அல்லது பத்தாவது நாளில் இறந்தவருக்குப் படைக்கும் உணவுகளை உப்பில்லாமல் செய்யும் வழக்கம் இன்னமும் பல இனமக்களிடத்தில் இருக்கின்றது. உப்பு உறவின் தொடர்வதற்கான ஒரு குறியீடு ஆகும். இறந்தாரோடு உள்ள தொடர்பை அறுத்துக் கொள்ளவே இவ்வாறு செய்வதாக கூறுகின்றனர்.

மருத்துவத்தில் உப்பு

உயிர்கள் தோன்றிய போதே நோய்களும் தோன்றியுள்ளன. மனிதன் நோயைப் போக்கி கொள்ள வழியை கண்டறிந்த போது மருத்துவம் தோன்றலாயிற்று. நாட்டுப்புற மருத்துவத்தில் உப்பு பெரும் பயன்பாட்டைப் பெற்றுள்ளது. நாட்டுப்புற மருத்துவத்தில் தனியாகவும் துணைப்பொருளாக உப்பு முக்கியத்துவம் பெற்றுத்திகழ்கிறது.

* குப்பைமேனி இலை, மஞ்சள், உப்பு போன்றவற்றை அரைத்துப் பூசி வந்தால் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் குணமாகும்.

* உப்பை வறுத்து ஒரு வெள்ளைத் துணியில் கட்டி, உடலில் வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் வலி குணமாகும்.

* மோரில் சிறிதளவு உப்பைச் சேர்த்து, அதை ஐந்து நிமிடம் வாயில் வைத்திருந்து பின்பு கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால் வாய்ப்புண் குறையும்.

* நாவல் பழத்தை உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குறையும்.

* உப்பை வறுத்துப் பொடி செய்து 3 சிட்டிகை மோரில் கலந்து குடித்தால் வயிற்று வலி வராது.

* கால்களில் முள் குத்தினால் ஏற்படும் வலிக்கு வெந்நீரில் உப்பு போட்டு, காலை உள்ளே வைத்திருந்தால் வலி நீங்கும்.

* உப்பு, ஒதியன் இலை, இது இரண்டையும் தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்தத் தண்ணீரைப் பயன்படுத்தினால் கால் வலி கால் அரிப்பு போன்றவை சரியாகும்.

* வெற்றிலையும் உப்பும் சேர்த்துச் சாப்பிடும் போது உமிழ்நீர் பெருக்கால் செரிமானம் சரியாகும்.

* வெங்காயத்தை உப்புடன் சேர்த்து சாப்பிட வயிற்று வலி நீங்கும்.

* உப்பைத் தூளாக்கிக் கொஞ்சம் தண்ணீரில் சேர்த்துக் கெட்டியாக அரைத்து, அந்த உப்பை வலிக்கின்ற இடத்தில் கனமாகப் பற்றுப் போட்டால் வலி நிற்கும். காயக்காயப் போட்டு கொண்டு இருக்க வேண்டும் அப்படி போட்டுக் கொண்டு இருந்தால் குளவி மற்றும் சிறிய பூச்சி கடித்திருந்தால் அல்லது கொட்டியிருந்தால் சரியாகும்.

* கல்லுப்பு சிறிதளவு குளிக்கும்போது போட்டு குளித்தால் அனைத்து வியாதிகளும் குணமாகும்.

* கொத்தமல்லி இலையில் சாறெடுத்து உப்பு கலந்து குடித்தால், உணவில் ஏதேனும் செரிமானக் கோளாறுகள் இருந்தால் வாந்தி மூலம் வெளியேற்றிவிடும்.

* உப்பு அதிக அளவில் கொடுத்தால், விஷம் குடித்திருந்தால் வாந்தியை உண்டாக்கும்.

* தவிடையும், உப்பையும் வறுத்து ஒத்தடம் கொடுத்தால் குதிகாலில் வலி நீங்கும்.

* மஞ்சள் குப்பைமேனி இலை உப்பு சேர்த்து அரைத்து பற்றுப் போட்டால் காய்ச்சல் குணமாகும்.

* கல்யாண முருங்கை இலை, உப்பு, வெங்காயச் சாறு கலந்து முகத்தில் உள்ள தேமல் உள்ள இடத்தில் பூசிவந்தால் தேமல் விரைவில் குணமாகும்.

* தொண்டையில் உள்ள வரட்டு இருமல் மற்றும் தொண்டை வலி வலிகளைக் குணப்படுத்த உப்பை வெந்நீரில் கலந்து தொண்டை வரை கொப்பளிக்க வேண்டும். அந்தத் தண்ணீரைச் சிறிது நேரம் கழித்துத் துப்பிவிட வேண்டும்.


* தேனீக்களின் கொடுக்குகளை நீக்குவதற்கு உப்பு பயன்படுத்தப்படுகிறது.

* காய்கறிகளைச் சுத்தம் செய்வதற்கு முன்பு பெருமளவு பயன்படுகிறது.

* சுக்கு, உப்பு இரண்டையும் சேர்த்துத் தொண்டையில் பற்றுப் போட்டு வந்தால் இருமல் நின்று விடும்.

* எறும்புகளை விரட்ட உப்பு நீர் தெளிப்பு அதனால் எறும்புகளின் தொந்தரவு இருக்காது.

* அரிசியைச் சிறிது உப்பு கலந்து வைத்தால் புழு வண்டு வராது.

* வறட்டு இருமலைச் சரி செய்ய உப்பு பயன்படுகிறது.

* உப்பைத் தண்ணீரில் கலந்து வாய் கொப்பளித்தால் ஜலதோஷத்தின் காரணமாக ஏற்படும் பல் மற்றும் ஈறுகளில் வலியை நீக்குகிறது.

* பாத வெடிப்புகளைச் சரி செய்யவும் உப்பு பயன்படுகிறது.

* சுளுக்கினால் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உப்பு தண்ணீரில் சிறிது நேரம் வரை வைத்து வீக்கம் உள்ள இடத்தில் தண்ணீர் கொண்டு கழுவுவதால் வீக்கம் குறைந்துவிடும்.

* மிளகு, உப்பு இரண்டையும் அரைத்துப் பல்லில் தேய்த்தால் பல் வலி நீங்கும்.

* உப்பு, எலுமிச்சை பழச்சாறு கலந்து பல் துலக்கினால் பற்களில் இருக்கும் கறைகள் நீங்கும்.

* பற்களில் ரத்தம் வடிதல் இருக்கும் போது தண்ணீரில் உப்பு போட்டுக் கொப்பளித்தால் சரியாகிவிடும்.

* குழந்தைகள் சரியாகப் பேச்சு வராத போது கொஞ்சம் தேனும், உப்பும் கலந்து கொடுத்தால் நன்றாகப் பேசுவார்கள்.

* பற்களில் மஞ்சள் கரை போக உப்பும் சர்க்கரையும் சேர்த்துத் துலக்கினால் மஞ்சள் நிறம் நீங்கும், பற்கள் வலிமை பெறும்.

* நீண்டப் பயணத்தின் போது, ஏற்படும் கால் வீக்கம் நீங்க வெண்ணீரில் உப்பு கொஞ்சம் போட்டு, அத்தண்ணீரில் கால்களை வைத்தால் கால் வீக்கம் நீங்கும்.

* வண்டுகள் கடித்தால் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உப்புத்தண்ணீர் பயன்படுகிறது.

* காயங்களால் உண்டாகும் ரத்தக்கசிவு நீங்க, உப்புத் தண்ணீரில் கழுவினால் ரத்தக்கசிவு நீங்கும்.

இவ்வாறு பல்வேறு நாட்டுப்புற மருத்துவத்திற்கு உப்பு பயன்படுத்தப்படுகிறது. உப்பு உணவிற்கு பயன்படுத்துவது போன்று சிறிய அளவிலேயே மருத்துவத்திலும் பயன்படுத்தபடுகின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

நாட்டுப்புற நம்பிக்கையில் உப்பு

மனிதரால் தோற்றுவிக்கப்பட்ட நம்பிக்கையும் இயற்கை மீது மனிதன் கொண்ட அச்சத்தின் பயனால் பிறந்தது. இயற்கையாக நடைபெறும் காரியங்கள் மனிதச் சிந்தனைக்கு எட்டாத போது மனிதனே அதற்கான ஒரு காரணத்தைத் தெரிந்து கொண்டு அதற்கேற்ற பரிகாரத்தை செய்து கொண்டான். இதையே, நம்பிக்கை என்று கூறுவார்கள் (2017:108).

* வியாபாரத்தில் வெற்றிகரமாக நடத்துவதற்கு உப்பைத் தூவி செல்லவேண்டும் என்று ஒரு பெரிய நம்பிக்கை உள்ளது.

* உப்பைக் கொட்டினால் பெரும் சண்டைகள் ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

* உப்பை வெள்ளிக்கிழமைகளில் வாங்கினால் செல்வம் செழித்து வளரும் என்று கூறுவார்கள். மாதம் முடியும்போது உப்பை வாங்கிவிட வேண்டும் என்று சொல்வார்கள்.

* கண் திருஷ்டி நீங்க மிளகாய் உப்பு ஆகியவற்றை மூன்று முறைகள் தலையை சுற்றி போட்டால் திருஷ்டி நீங்கும்.

* மிளகை உப்புடன் சேர்த்து வைத்தால் வீட்டில் தூர்சக்திகள் நெருங்காது.

* உப்பைத் தானமாக கொடுத்தால் வற்றாத செல்வம் பெருகும் என்று கூறுவார்கள்.

* கோயில் குளத்தில் உப்பும் மிளகும் இட்டால் உடல்நலம் நல்லபடியாக இருக்கும்.

* அட்சய திரிதியை அன்றே தங்கம் வாங்க முடியாத நிலையில் உள்ளவர்கள் கூட உப்பும், மஞ்சளும் வாங்கினால் செல்வ செழிப்பு என்பது உண்டாகும்.

என்பன போன்ற நம்பிக்கைகள் நாட்டுப்புற மக்கள் உப்பை மையமாக வைத்து கூறுகின்ற மரபு காணப்படுகிறது. இதில் உப்பு வளமையின் குறியீடாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

சமயத்தில் உப்பு

* உப்பு சமயம் சார்ந்தும் பெரும் பயன்பாட்டை பெற்றுள்ளது. ஏனெனில் உப்பைப் புனிதமான பொருளாக, புனிதமாக்கும் பொருளாகவும் மக்கள் எண்ணுகின்றனர். ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வந்ததின் விளைவாக பரவிய சமயம் கிறித்தவ சமயம் ஆகும். நீங்கள் இந்த உலகிற்கு உப்பாய் இருங்கள் என்பது பைபிள் வசனம். அதனால்தான் உப்பை கிருத்தவர்கள் புனிதமாகக் கருதுகின்றனர். இதன் காரணமாக இறந்தவர்களின் உடல் வைக்கப்படும் சவப்பெட்டிகள் உப்பு போட்டு புதைக்கப்படும் வழக்கம் இன்றும் கிறிஸ்தவ சமயத்தில் உள்ளது. ரோமன் கத்தோலிக்க பிரிவினரிடையே வழிபாட்டுப் பொருளாக உப்பு பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்து சமயத்தில் அதிகளவில் உப்பு பயன்படுத்தப்படுகிறது. உப்பு மீது சத்தியம் செய்யும் வழக்கம் இன்றும் உள்ளது. ஏனென்றால், உப்பு புனிதமாகப் பார்க்கப்படுகிறது. கோயில்களில் குடமுழுக்கின் போது கடலில் கொண்டு வந்த உப்பு நீரை வைத்து கும்பாபிஷேகம் செய்யும் வழக்கம் உள்ளது. கடல் நீர் பாவம் புண்ணியங்களை போக்குவது போன்று மக்களின் பாவங்களை நீக்கும் என்று நம்புகின்றனர். உப்பால் விநாயகர் செய்து வழிபட்டு வந்தால் வீட்டில் ஏற்படும் பிரச்சினைகள் நீங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. சில இந்து கோயில்களில் (உதாரணமாக முருகன் கோயில்) நேர்த்திக்கடனாக உப்பு வாங்கி போடுகின்ற மரபு உள்ளது. அவ்வாறு போடும் போது உடலை சுற்றித்தடவி போடுகின்றமை காணமுடிகிறது. இவ்வாறு செய்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று நம்புகின்றனர்.

இஸ்லாமிய சமயத்தில் உப்பு புனிதமாக பார்க்கப்படுகிறது. அவர்கள் திருமண நிகழ்வு கூட உப்பு மேல் போர்வை விரித்து அதன் மீது அமர வைத்து, திருமணம் செய்யும் வழக்கம் உள்ளது. உப்பு பரிமாற்றம் போன்ற காரியங்களை இஸ்லாமியர்கள் ஒரு போதும் செய்யக் கூடாது என்ற நியதியும் அவர்களிடம் உள்ளமைக் குறிப்பிடத்தக்கது.


தொழில்களில் உப்பு

விவசாயத் தொழில் செய்யும் ஒரு சில விவசாயத்திற்கு உப்பு பயன்படுத்தப்படுகிறது. தென்னை சாகுபடியின் போது தென்னைக் கன்றை நடுகின்ற போது, பூச்சிகளின் தொந்தரவு வராமல் இருக்க மண்ணோடு உப்பு கலந்து போடுகின்ற வழக்கம் உள்ளது. உப்பு பூச்சிகளிலிருந்து தென்னையை பாதுகாக்கும் தன்மையுடையது. உரங்கள் தயாரிக்கும் போதும் அதில் உப்பினைச் சேர்க்கின்ற வழக்கம் உள்ளது.

மின்சாரப் பாதுகாப்பிற்கான பூமி இணைப்பு (Earth connection) கொடுக்கப்படும் போது, பூமியில் தோண்டப்படும் குழியில், மின் கசிவு பூமிக்குள் விரைவில் செல்வதற்கான இரும்புக் குழாய், அமைத்து அதில் செம்புக் கம்பிகளை இணைப்பார்கள். அந்தக் குழியில் மின் தடைகளைக் குறைப்பதற்காக, கரி மற்றும் உப்பு பயன்படுத்தப்படுகின்றன.

தோல் பதப்படுத்தி இசைக்கருவிகள் செய்பவர்கள் தோலை பதப்படுத்துவதற்கு தோலோடு உப்பும் கலந்து வைக்கின்றனர். அவ்வாறு செய்யும் போது தோல் கெட்டுவிடாமல் நல்ல நிலையில் பயன்படுத்துகின்ற தன்மையை உருவாக்கும்.

புகையிலை சாகுபடி செய்கின்ற விவசாயிகளின் முக்கிய பொருளாக இருப்பது உப்பு ஆகும். வேதாரண்யம் பகுதியில் புகையிலை சாகுபடி அதிகளவில் நடைபெற்று வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது. புகையிலையினை உப்பில் ஊற வைக்கும் தன்மையின் அடிப்படையில் அதன் தரம் நிர்ணயிக்கப்படுகிறது. புகையிலை முழுவதும் உப்புத் தண்ணீரில் கரைத்து வைத்திருக்கும் நீரில் முழுமையாக நனையும்படி வைத்து அதனை ஒரு குழியில் வைத்து ஐந்து நாட்கள் வரை ஊர வைக்கின்றனர். ஐந்து நாட்களுக்கு பின்னர் அதனைக் காய வைத்துப் பக்குவப்படுத்துகின்றனர். இவ்வாறு தொழில் சார்ந்தும் உப்பு பெரும் பயன்பாட்டினை பெற்றுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

தொகுப்புரை

பொருள் சார் பண்பாடு என்பது மக்கள் பயன்படுத்தும் அன்றாடப் பொருட்களோடு தொடர்புடையது. உப்பு என்ற கனிம பொருள் நம் எல்லோருடைய வாழ்விலும் நிலைத்தப் பயன்பாட்டைப் பெற்றுத் திகழ்கின்றது. உப்பு விருந்தோம்பலில் சுவையேற்றியாக அதிகப் பயன்பாட்டைப் பெற்றிருந்தாலும் ஒவ்வொரு சூழலில் வெவ்வேறு விதமாகப் பண்பாட்டை வெளிப்படுத்தும் பொருளாகவும் உள்ளது. திருமண நிகழ்வின் போது, மங்களகரமான பொருளாகவும் இறப்புச் சடங்கின் போது தீட்டை போக்குகின்ற புனிதப் பொருளாகவும் இடம் பெற்றுள்ளது. மருத்துவத்தில் மருந்தாகவும், சமய வழிபாட்டில் புனிதப் பொருளாகவும் தொழில்களில் முக்கிய பொருளாகவும் பெரும் பயன்பாட்டை பெற்றுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

துணைநூற் பட்டியல்

1. கோபாலன், உப்புச் சத்தியாக்கிரகம், தஞ்சாவூர். 2006.

2. தெட்சணாமூர்த்தி, தமிழர் நாகரிகம் பண்பாடும், ஐந்திணை பதிப்பகம், சென்னை, 1983.

3. நடன காசிநாதன்., தமிழர் பண்பாட்டு சிதறல்கள், சேகர் பதிப்பகம், சென்னை, 1992.

4. டாக்டர். நசீம்தீன், பி., இடுக்கி மாவட்ட பழங்குடி மக்களின் வழக்காற்றியல், அன்னம் பதிப்பகம், சிவகங்கை, 1989.

5. பக்தவத்சல பாரதி, சீ., பண்பாட்டு மானிடவியல், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 1980.

6. பிங்கல முனிவர், பிங்கலநிகண்டு, கமலகுகன் பதிப்பகம், சென்னை, 2004.

7. ரெஜித்குமார், த., நாட்டுப்புற இயல், நியூ செஞ்சுரிபுக் ஹவுஸ்(பி)லிட், சென்னை, 2017.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p233.html


  2022
  2021
  2020
  2019
  2018
  2017

வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்

முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License