இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

பதிலீட்டுத் தன்மைப்பாத்திரம் ஆதித்த கரிகாலன்

முனைவர் சி. தேவி

உதவிப்பேராசிரியர்,
தி ஸ்டாண்டர்டு ஃபயர் ஒர்க்ஸ் இராசரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி.


முன்னுரை

படைப்பின் திறனை சிந்தனையோட்டத்தை திறம்பட ஆசிரியர் வாசகருக்கு எடுத்துச் சொல்ல பேருதவியாக அமைவது அவர் தம் பாத்திரங்கள் எனலாம்.

ஃபிராய்டு, யுங் ஆகியோரின் உளவியல் கோட்பாடுகளைத் தொடர்ந்து ஆல்பிரட் அட்லர் (Alfred Adles) கேரன் ஆர்ன் (Karen Aornry) எரிக். எச். எரிக்சன் (Erik. H. Erikson) போன்றோர் தன்முனைப்பின் உளவியலை விளக்கினர். இவர்கள் தன்முனைப்பின் பின்னணியில் சமூகக் காரணிகளையும், சமூகப்பயன் மதிப்புகளையும் இணைத்து ஆளுமைக் கோட்பாடுகளை உருவாக்கி வளர்த்தனர்.

இதனடிப்படையில் அமரர் கல்கி அவர்களது பொன்னியின் செல்வன் படைப்பின் முக்கிய கதாப்பாத்திரம் ‘ஆதித்த கரிகாலன்’ எனும் பாத்திரம் ஆய்வு செய்யப்படுகின்றது.

படைப்பு வழிமுறை

உளவியல் திறனாய்வு, குறிப்பிட்ட ஓர் இலக்கியம் என்றில்லாமல், ஒரு பொதுவான நிலையில் இலக்கியத்தில் பிறப்பு அல்லது வழிமுறை பற்றி அறிதற்கு விளக்க முறையில் அக்கறை கொள்கிறது. ‘இலக்கியம் எவ்வாறு படைக்கப்படுகிறது. அதன் வழிமுறைகள் என்ன என்பதற்குரிய முயற்சி, பல காலமாகவே இருந்து வருவதுதான். முக்கியமாக புனைவியல்காரர்கள் இதில் ஈடுபாடு காட்டினர். வோர்ட்ஸ் வொர்த்தின் பிரசித்தமான கட்டுரையில் (Preface to Lrical Ballads) இதனை வெகுவாகக் காணமுடியும்” (1)

உணர்வுகளிலும், உற்சாகத்திலும், அனுபவங்களை உள்வாங்கிப் புலப்படுத்துவதிலும் ஏனைய மனிதர்களிலிருந்து கவிஞர்கள் சற்றேனும் வித்தியாசப்பட்டவர்கள் என்றும், கவிதை ஒரு வித்தியாசமான மன எழுச்சியினால் உருவாக்கப்படுகிறது என்றும் புனைவியல்காரர்கள் பேசுகிரார்கள். இத்தகைய ‘மனஎழுச்சியை’ உண்டாக்கிக் கொள்வதற்காகப் பல கவிஞர்கள் குடிப்பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள் என்றும் சொல்லப்படுவதுண்டு. “கவிஞர்கள் சிலர் ‘பெருங்குடிமக்களாகப்’ போதைகளுக்கு அடிமைப்பட்டுப் போவதுண்டு என்பது உண்மையே. ஆனால், எல்லோரும் அல்ல. சிலர் மட்டுமே அந்நிலைக்கு உள்ளாகின்றனர். மேலும், உரைநடை (சிறுகதை, நாவல்) எழுத்தாளர்கள் இத்தகைய போதை எழுச்சியை ஒரு தேவையாகக் கருதுவதில்லை” (2)


பதிலீடு

உணர்வு வயப்படுதல் என்பது பற்றி இத்தகைய கருத்துக்கள், சற்று வேறு வகையில், பகுப்பு முறை உளவியல் ஆராய்ச்சியில், ‘நரம்பியல் செயல் திரிபுகளாக’ (neurosis) விளக்கப்படுகின்றன. ‘படைப்பு எழுத்தாளர்களும் பகல் நேரக் கனவு காணுதலும்’ என்னும் தனது கட்டுரையில் ஃபிராய்டு இவ்வாறுதான் படைப்பு வழிமுறைகளுக்கு விளக்கம் காண முயலுகிறார்” (3) கண்ணதாசன், நா.முத்துக்குமார் போன்ற திரையிசைக் கவிஞர்களை இதற்குச் சான்று கூறலாம்.

நனவிலி மனத்தின் (unconscious mind) ஒரு வெளிப்பாட்டு முறையாக அதனை அவர் பார்க்கிறார். ‘பிள்ளைப் பருவத்தில் குழந்தைத்தனமான விளையாட்டுக்கள் என்பது, வயது ஏறிவரும் காலத்தில் அதனை விடுத்து அதன் பிதிலியாக ‘விநோதப்படுத்துதலில்’ (unconscious mind) அவன் ஈடுபடுகிறான். அதாவது, சாதாரணமான சங்கதியை - செய்தியை - செயலைச் சாதாரணமாக, இயல்பாகப் பார்க்காமல் ஓர் அற்புதமான - மாயமான – ஆற்றலாகவும் - பொருளாகவும் ஒரு கனவுத் தோற்றத்தின் தன்மையோடு பார்த்தல் விநோதப்படுத்தல் ஆகும்.

பாரதிதாசன் தனது, நிலா கவிதையில் அழகுணர்ச்சியோடு பாடத் தொடங்கி பொதுவுடைமைக் கருத்தோடு நிறைவு செய்வார். இதைச் சான்றாகக் கூறலாம்.

“நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து
நிலாவென்று காட்டுகின்றாய் ஒளிமுகத்தை
கோல முழுதுங் காட்டிவிட்டால்... ... ...
அனுதினமும்; உழைத்து சிறிது கூழ் தேடுங்கால்
பானை ஆறக் கணத்திருந்த வெண்சோறு காணும் இன்பம்
கவின் நிலவே உனைக் காணும் இன்பந்தானோ” (4)

இத்தகைய விநோதப்படுத்தலை வெளிப்படுத்துவதற்குச் சாதாரண மனிதர்கள் கூசுகிறபோது, நரம்பியல் செயல் திரிபு கொண்டவனோ (அதாவது மனநிலையில் மாறுபாடு கொண்டவன்) அந்த விநோதங்களை வெளியே புலப்படுத்திக் கொள்கிறான் என்று அக்கட்டுரையில் கூறுகிறார் ஃபிராய்டு. மேலும், இத்தகைய விநோதப்படுத்தலின் பின்னணியில் இருப்பவை பாலியல் உணர்வுகளை முதன்மையாகக் கொண்ட நிறைவேற்றப்படாத ஆசைகளே என்றும் அவர் கூறுவார். வாசகனும் இத்தகைய மனநிலை காரணமாகவே, குறிப்பிட்ட கலை வடிவத்தில் ஈடுபாடு கொள்கிறான். மேலும், அத்தகைய விநோதப்படுத்தலில் தன்னை அவன் இனங்காணுகிறான் என்பதும் அவர் வாதம். இத்தகைய வாதத்தைப் பின்பற்றுகின்ற சிலர் இன்னும் ஒரு படிமேலே சென்று “கவிதைப் படைப்பு வழிமுறை என்பது, வலியில் மகிழ்ச்சி பெறுகின்ற, முக்கியமாகப் பாலியல் நிலையிலான அத்தகைய மகிழ்ச்சியைப் பெறுகின்ற (psychic masochism) ஒரு தற்காப்பு உத்தியே என்று வருணிக்கின்றனர்” (5)


“கலைப்படைப்பை நரம்பியல் செயல் திரிபோடு சேர்த்து வைத்துப் பேசுவதை உளவியல் அணுகுமுறையில் வல்ல பல திறனாய்வாளர்களே மறுக்கின்றனர். ‘நரம்பியல் திரிபுக்கும் கவிதையாக்கத்திற்கும் இடையே பெரும் வேறுபாடு உண்டு. இதனை உணர்வது அவசியம் என்று கென்னத்பர்க் கூறுகின்றார்” (6)

“நரம்பியல் செயல் திரிபு கொண்டவன், விநோதமாக்குதலுக்கு அல்லது அவரை மயக்கக்கற்பனையின் ஆதிக்கத்திற்கு உட்படுகிறவன். ஆனால், கவிஞன் விநோதமாக்குதலைக் கட்டுப்படுத்தி அதனை ஆள்கிற திறனுடையவன்’ என்பார். லியோலை ட்ரில்லிஸ்” (7) எனவே இரண்டையும் ஒன்றாகப் பார்ப்பது தவறு.

கல்கி பதிலீடு என்ற தன்மை படைத்த பாத்திரத்தை படைத்துக் காட்டியுள்ளார். சான்றாக பொது வாழ்வில் ஈடுபடும் நபர்களுக்கும், திறன் வெளிப்படுத்தி சாதனை புரிபவர்களுக்கும் அதிலும் குறிப்பாக பெண்களுக்கு, இல்லற வாழ்வு அவ்வளவு சிறப்பாக அமைவதில்லை அல்லது பிரிவு ஏற்பட்டுவிடும். இது நிதர்சனமான உண்மை என்பதை நாம் சமகால வாழ் மனிதர்கள் மூலம் கண்டறிந்திருக்கிறோம்.

தமிழக ஆட்சிப்பீடத்தை சிம்மமாய் அலங்கரித்த செல்வி ஜெயலலிதா, நல்ல சான்று. திரையுலகில் சாதித்த பெண்மணிகள் எப்படி சிதைந்தனர்? என்பதற்கு நடிகையர் திலகம் சாவித்ரி நல்ல உதாரணம். இரண்டு மூன்று மணம் செய்தும் கூட பிரிந்து தனியே வாழும் நிலைக்கு நடிகை லட்சுமி நல்ல சான்று.

ஆதித்த கரிகாலன் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற சோழர் குல பட்டத்து இளவரசர் ஆவர். வரலாற்றில் இடம் பெற்ற ஆதித்த கரிகாலனைச் சற்று புனைவுடன் இணைத்து கதாபாத்திமாக வடிவமைத்துள்ளார் கல்கி.

பாத்திர இயல்பு

சுந்தரசோழரின் மகனாகவும், அருள்மொழிவர்மன் மற்றும் குந்தவை தேவியின் மூத்த சகோதரராகவும், பட்டத்து இளவவரசனாகவும் விளங்கினான். இளம் வயதிலேயே அபார போர் ஆற்றல் நிரம்பியவனாக படைக்கப்பட்டுள்ளான். போர்களில் பல மன்னாதி மன்னர்களையும் வீழ்த்தி சோழ தேசத்தின் எல்லையை விரிவு செய்தான். சுந்தரசோழனின் நலக்குறைவு பல வஞ்சனை வலை விரிவதற்கு அடித்தளமிட்டது. எனினும், சோழ அரியணையைக் காத்தது ஆதித்த கரிகாலன் என்ற ஒற்றைப்பெயர்தான். கரிகாலன் பிறப்பின் பொழுதே சோழர்களால் வெல்ல இயலாத வீரபாண்டியனை வெல்லப் பிறந்தவன் என்று கூறப்பட்டது. அப்படியே நிகழ்த்திக் காட்டினான். ஆகையால் ‘வீரபாண்டியன் தலை கொண்ட கோப்பரசேகரி’ என்று பெயர் பெற்றான். சிறுவயதிலேயே நந்தினியின் மீது தீராத காதல் கொண்டு வாழ்கிறான். போர்க்களத்தில் தோல்வியைத் தழுவி ஓடி ஓளிந்த வீரபாண்டியனைத் தேடிச் சென்ற ஆதித்த கரிகாலன் நந்தினியுடன் அவனைக் கண்டான். நந்தினியை மாற்றானுடன் பார்த்தவுடன் கோபம் வெறியாக மாறியது நந்தினி மன்றாடினாலும் மண்ணிக்காது வீரபாண்டியன் தலையைக் கொய்தான். பின்னாளில் அதற்காக மிகவும் வருத்தப்பட்டான். நந்தினியின் உருவம் அவனது கனவிலும் வந்து துன்புறுத்தியது. ஆகையால் நந்தினி பழுவூர் ராணியாக மாறியபிறகு உடல் நலக்குறைபட்டிருந்த தனது தந்தையாரைச் சந்திக்கக் கூட தஞ்சை செல்ல இயலாதவனாகத் தவித்தான்.

பதிலீட்டுப்பாத்திரம் கரிகாலன்

ஆயிரம் யானைகள் வந்தாலும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் இவன் மனதில் எப்போதும் காதலையும் வலியையும் சுமந்தபடி இருந்தான். தனது சலன மனது காரணமாக எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாதபடி திண்டாடியவன். நந்தினியை இழந்த சோகத்தை, இழப்பை, மறக்க வேறு ஏதாவது ஒன்றில் கவனத்தைச் செலுத்த எத்தனிக்கிறான். போரில் தனது கவனத்தை திசை திருப்புகிறான். எதிர்கொண்ட வீரர்கள் மன்னர்கள் என அனைவரையும் அழிக்கின்றான். வெற்றி பெறுகின்றான். தனது கவனத்தை தனது திறனை முழுவதுமாக வேறொன்றில் செலுத்துவது பதிலீடு எனும் தன்மை நந்தினியின் இழப்பினை ஈடுகட்டும் விதமாக பெரும்படை திரட்டி நாடுகள் பலவும் கைப்பற்றி உலகெங்கும் புலிக்கொடியைப் பறக்கச் செய்ய வேண்டும் என்று ஆசை கொண்டான். இது அவனது பதிலீட்டு பண்பிற்குச் சான்று எனலாம். எனவே ஆதித்த கரிகாலன் பதிலீட்டுத் தன்மை படைத்த பாத்திரம் எனலாம்.

அடிக்குறிப்பு

1. David Daiches, Critical Approacher to Literature London. P.330

2. Malcolm Cowley, Convessar tatuions with Cowly (ED) Thomos, Daniel Yound P.85

3. Sigmund Freud, Creative writers and day, dreaming 20 th Century Literary Criticism (ED), David lodge P.37

4. பாரதிதாசன் கவிதைகள், நிலா பாடல். ப.எண்: ?

5. Edmund Bergles, The Writer and the Psycho – Analysis, P.43

6. Kenneth Burke, The Philosophy of Literary Form, P.121

7. Lionel Tnilling, Freud and Literature 20th Century Literary Criticism (ED) David Lodge P.276

துணைநின்ற நூல்கள்

1. பொன்னியின் செல்வி, கல்கி, கிழக்கு பதிப்பகம், சென்னை. 2011.

2. David Daiches, Critical Approacher to Literature London.1964. Malcolm Cowley, Convessar tatuions with Cowly (ED) Thomos, Daniel Yound 1983.

3. Sigmund Freud, Creative writers and day, dreaming 20 th Century Literary Criticism (ED), David lodge

4. பாரதிதாசன் கவிதைகள், டாக்டர் தொ.பரமசிவன், என்.சி.பி.ஹெச்.சென்னை.1993.

5. Edmund Bergles, The Writer and the Psycho – Analysis, “Newyork” 1949.

6. Kenneth Burke, The Philosophy of Literary Form, Newyork, 1940.

7. Lionel Tnilling, Freud and Literature 20th Century Literary Criticism (ED) David Lodge .

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p239.html


  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்

முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License