Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினேழாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...

Content
உள்ளடக்கம்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

பொன்விழா காணும் சீனத் தமிழ் வானொலி

ஆல்பர்ட் பெர்னாண்டோ


சீனாவில் 1920 முதல் 1930 வரையிலான காலகட்டத்தில்தான் வானொலியின் தொடக்கம் இருந்தது. சீனாவின் குறிப்பிட்ட‌ சில நகரங்களில் மட்டும், குறிப்பாக அரசியல் சூழலுக்கான அரசியல் குறித்த கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டே வானொலியின் ஒலிபரப்பு இருந்தது. 1940 ஆம் ஆண்டில் மார்ச் மாதம் சீனக் கம்யூனிசக் கட்சி மாஸ்கோவிலிருந்து வரவழைக்கப்பட்ட ஒலியலைபரப்பிகளின் ஊடாகத் தன் சோதனை முயற்சியைத் தொடங்கியது.

1940 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 30 ஆம் நாள் யான்னான் எனுமிடத்திலிருந்து ஷின்ஹுவா புதிய சீன வானொலி (Xinhua New Chinese Radio (XNCR)) என்ற பெயரில் ஒலிக்கத் தொடங்கியது. சீன வானொலி நிலையம் போர் மேகங்கள் சூழ்ந்த காலங்களில், 1941ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3 ஆம் நாள் சீனாவின் வடமேற்கு பகுதியான யான்னானிலிருந்து அதன் பீகிங் ஒலிபரப்பைத் தொடங்கியது. தொடக்கத்தில், ஜப்பானிய மொழியில் மட்டும் ஜப்பானிய - சீன அறிவிப்பாளர் ஹாராகியோஷி என்பவரால் 15 நிமிடத்திற்கு ஒலிபரப்பானது.

1945 ஆம் ஆண்டில் இந்த வானொலியின் நிகழ்ச்சி நிரல் ஒழுங்குபடுத்தப்பட்டு, செய்திகள், அதிகாரப்பூர்வ அறிவிப்புகள், போர் குறித்த அறிவிப்புகள் வெளியிடுதல் போன்றவற்றோடு கலை மற்றும் இலக்கியம் சார்ந்த‌ பல்வேறு நிகழ்ச்சிகளையும் பரவலாக ஒலிபரப்பத் தொடங்கியது. அதன் பின் 1947 செப்டெம்பர் 11ஆம் தேதி முதல் முறையாக சீனாவின் ஹெபெய் மாநிலத்தின், டைகாங் மலைப்பகுதியில் ஷாஹே என்ற‌ குக்கிராமத்தில் முதல் தடவையாக வானொலியில் அறிவிப்பாளர் திருமதி. வெய் லின் என்பவர் மூலம் ஆங்கில மொழி பேசும் உலகிற்குச் சென்றடைந்தது.

1949 ஆம் ஆண்டில் சீனா குடியரசாக மாற்றம் கண்ட போது ஹெபெய் மாநிலத்தின், டாய்ஹாங் மலைப் பிரதேசத்திலிருந்து (Taihang Mountains) வானொலி, சீனத் தலைநகரம் பெய்ஜிங்கிற்கு இடம் பெயர்ந்தது. அதன் பின்னர் 1950 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் நாள் ரேடியோ பீகிங் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1960 ஆம் ஆண்டுகளில் அல்பேனியாவில் வானொலி அஞ்சல் செய்யும் நிலையம் நிறுவப்பட்டு 1983 ஆம் ஆண்டு வரை ஒலிபரப்பப்பட்டது.


1960களில் தமிழ்ப்பிரிவு பணியாளர்கள்

சீன வானொலி நிலையத்தின் தமிழ் ஒலிபரப்பு 1963 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1 ஆம் நாள் தொடங்கியது. தமிழ் மொழி பேசும் மக்கள் அதிகம் நிறைந்த இந்தியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் சீன வானொலியின் தமிழ் ஒலிபரப்பு பெரும் வரவேற்பைப் பெற்றது.



1984 ஆம் ஆண்டு முதல் உள்நாட்டில் இரண்டு அலை வரிசைகளில் அயல் மொழிகளிலான ஒலிபரப்புகள் வான்வழியே பயணப்பட்டன. ஆங்கிலம், ஸ்பேனிஷ், அரபு, ஜெர்மன், கொரிய, ஜப்பானிய மற்றும் ரஷிய மொழிகளில் இசை நிகழ்ச்சிகள் என்று அதன் ஒலிபரப்பு விரிவடையத் தொடங்கின. பிரிட்டன், பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ரஷியா, ஸ்பெய்ன், கனடா, மாலி, பிரேசில், கியூபா, அமெரிக்கா முதலிய பத்துக்கும் அதிகமான நாடுகளின் வானொலி நிலையங்களுடன் நிகழ்ச்சி ஒத்துழைப்புறவை செய்து கொண்டு 1987 ஆம் ஆண்டு முதல் சீன வானொலி நிலையம் அதன் எல்லையை மேலும் விரிவாக்கம் செய்தது.


1970களில் தமிழ்ப்பிரிவு பணியாளர்கள்

1993 ஆம் ஆண்டு சனவரி 1 ஆம் தேதி பீகிங் வானொலி நிலையம் மீண்டும் சீன பன்னாட்டு வானொலி நிலையம் என்கிற பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டது. 1997 ஆம் ஆண்டில் சீனத் தமிழ் வானொலியின் இணையதளம் மூலம் அறிமுகப்படுத்தும் சோதனை முயற்சியில் ஈடுபட்டது. அதிலும் வெற்றி கண்டு, 1998 டிசம்பர் மாதம் 26 ஆம் நாள் இணையதளத்தை நிறுவும் முயற்சிகளில் களமிறங்கியது. தற்போது சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஜப்பானிய, ரஷ்யா, ஸ்பானிஷ், போர்த்துக்கீசியம் உள்ளிட்ட 16 அயல் மொழிகளிலும், 17 மொழி இணையக் கிளைகள் இடம் பெறும் பன்னோக்க இணைய வலையம் நிறுவப்பட்டுள்ளது.

2000 ஆம் ஆண்டில் சீனத் தமிழ் வானொலி நிலையத்தின் இணைய தளம் அரசின் முக்கிய செய்தி இணைய தளமாக உறுதிப்படுத்தப்பட்டது. அதன் பிறகு 2000 ஆண்டிலிருந்து, ஆண்டு தோறும் கட்டுரை மற்றும் பொது அறிவுப் போட்டிகளை நடத்தத் தொடங்கியது. இப்போட்டியில் பங்கு கொண்டு சிறப்பு நேயராகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர், சீனாவில் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பைப் பெற்று வருவதுதான் இதன் சிறப்பாகும். அன்று முதல் வெளிநாட்டு வானொலிகளின் மூலம் அதன் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பும் ஆற்றலும் அதிகரிக்கப்பட்டது.


1980களில் தமிழ்ப்பிரிவு பணியாளர்கள்

2002ஆம் ஆண்டு நேயர் தொடர்புப் பணியை மேலும் பயன் தரும் முறையில் கையாளும் வகையில், நேயர் மின்னணுப் பதிவேடு கையாளுவது நடைமுறைக்கு வந்தது. 2003 ஆம் ஆண்டு ஜுலை மாதம் முதல் ஆங்கிலம், ரசியம், ஜெர்மன், பிரெஞ்சு உள்ளிட்ட மொழிகளிலான நிகழ்ச்சிகள், நாளுக்கு நாள் சுமார் 80 மணி நேரம் அமெரிக்கா, பிரிட்டன், ரஷியா, ஜெர்மனி, பிரான்ஸ் முதலிய நாடுகளின் மத்திய அலை மற்றும் பண்பலை வரிசை மூலம் நேரடியாக ஒலிபரப்பாகி, நேயர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

2003 ஆம் ஆண்டில் 61 மொழிகளில் இதற்கான இணையதளம் காண்போரைக் கவர்ந்திழுக்கும் வண்ணமாக இணைய உலகில் வலம் வரத் தொடங்கியது. சீனாவின் முன்னணி செய்தி நிறுவனங்களுள் ஒன்றாக இந்த இணையதளம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. 2004 ஆம் ஆண்டு ஜுலை 15 ஆம் நாள், 30 நிமிடங்கள் ஒலிபரப்பாகி வந்த சீனத் தமிழ் வானொலியின் நிகழ்ச்சிகள் நாள்தோறும் ஒரு மணி நேர ஒலிபரப்பாக மாறி, முதல் ஒலிபரப்பு, மறு ஒலிபரப்பு என மொத்தம் இரண்டு மணி நேரமாக அதிகரித்தது. "சீனத் தமிழொலி," எனும் சீனத் தமிழ் வானொலியின் முதலாவது தமிழிதழ் 2004 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாள் தமிழ்ப் பிரிவால் வெளியிடப்பட்டது. "சீனத் தமிழொலி" இதழ், நேயர்களுக்கிடையில் பெரும் வரவேற்பைப் பெற்று வலம் வந்து கொண்டிருக்கிற‌து.


1990களில் தமிழ்ப்பிரிவு பணியாளர்கள்

2005 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நாளிலிருந்து ஹாங்காங் வட தொலைக்காட்சிச் சேவை மூலம், சீன வானொலித் தமிழ்ப் பிரிவின் ஒலிபரப்பு ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தில் பண்பலை சேவையைத் தொடங்கியது. (2009ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில், அப்பண்பலை சேவை நிறுத்தப்பட்டது.) 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி சீனத் தமிழ் பண்பலை, கென்யாவின் நைரோபி நகரில் தொடங்கியது. அதே ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் தேதி லாவோசில் வியன்டியென்னில் சீன அதிபர் ஹு ஜின்டோ மற்றும் லாவோஸ் அதிபர் சோமலே சாயாசோன் ஆகியோர் இணைந்து சீனத் தமிழ் வானொலியின் பண்பலை வானொலி நிலையத்தை தொடங்கி வைத்தனர்.

கைபேசி பயன்பாட்டாளர்கள் "m.cri.cn" என்று தட்டச்சினால் செய்திகள், வணிகம், பொழுதுபோக்கு மற்றும் பயணச் செய்திகளை அறிந்து கொள்ளும் வகையில் 2009 ஆம் ஆண்டு ஜூலை மாத 16 ஆம் தேதி செல்லுமிடமெல்லாம் கேட்டு மகிழும் வகையில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது, சீனத் தமிழ் வானொலியின் வரலாற்றில் புதிய மைல் கல் எனப்படுகிறது.

2009 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இதற்கான இணைய தளம் முதன் முறையாகச் சீரமைத்து வடிவமைக்கப்பட்டது. பிறகு, 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், இரண்டாவது முறையாக அது சீரமைக்கப்பட்டு, மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இணையதளத்தில், ஒலி, ஒளி, படங்கள் கொண்ட பல்லூடக வடிவத்தில், சீன மற்றும் உலகச் செய்திகள், சீனப் பண்பாடு, சீனச் சுற்றுலா பயணம், சீனாவில் தமிழர்கள், சீன மொழிப் பாடம் என பலதரப்பட்ட சிறப்புமிக்க தகவல்களைக் கொடுக்கின்ற ஒலிபரப்பாகச் சீன வானொலித் தமிழ் ஒலிபரப்பு மாறியுள்ளது.


2013ல் தமிழ்ப்பிரிவு பணியாளர்கள்

2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் நாள், இலங்கைப் பண்பலை FM 102 ஒலிபரப்பைத் தமிழ்ப் பிரிவு தொடங்கியது. 2012 ஆம் ஆண்டு கடைசியில், அது FM 97.9யாக மாறியது. சீன மொழியைக் கற்றுக் கொடுக்கும் நிகழ்ச்சியையும் தமிழ்ப் பிரிவு தயாரித்து வழங்கியது குறிப்பிடத்தக்கது.

2012 ஆம் ஆண்டின் அக்டோபர் வரை, 61 அயல் மொழிகள், மெண்டரின் மற்றும் 4 உள்ளூர் மொழிகள் என நாளுக்கு 3500 மணி நேர அளவிலான நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகின்றன. தமிழ் தவிர, வங்காளம், உருது, இந்தி ஆகிய இந்திய மொழிகளிலும் சி.ஆர்.ஐ. தனது ஒலிபரப்புச் சேவைகளை வழங்கி வருகிறது.




கலைமகள், சீனத் தமிழ் வானொலிப் பிரிவுத் தலைவர்

சீனத் தமிழ் வானொலியின் தலைவர் கலைமகள் (சாவோ ஜியாங்), “சீன வானொலியின் தமிழ் ஒலிபரப்பு தொடங்கிய போது, நாள்தோறும் அரை மணி நேரம் மட்டும் தமிழ் மொழியிலான நிகழ்ச்சி வழங்கப்பட்டது. அதன் பிறகு இங்கு பணிபுரியும் பணியாளர்களின் முயற்சி மூலம், தமிழ்ப்பிரிவு மென்மேலும் வளர்ச்சியடையத் தொடங்கியது. தற்போது, சீனத் தமிழ் வானொலி சிற்றலை, பண்பலை, இணையதளம், தமிழொலி என்னும் இதழ், கைபேசி இணையம் ஆகியவற்றைக் கொண்டு பல வழிகளில் சிறப்பாக இயங்கி வருகிறது. பன்முக ஊடகமாகத் தமிழ்ப்பிரிவு மாற்றமடைந்திருக்கிறது. இன்றைய தமிழ்ப்பிரிவில் இளம் பணியாளர்கள் அதிகமாக இருக்கின்றனர். இவர்களின் புதிய கருத்துக்களால் தமிழ்ப்பிரிவின் வளர்ச்சி பெரிதும் முன்னேற்றமடைந்து வருகிறது. சீனத் தமிழ் வானொலி தான் அடைந்த சாதனைகளை அடிப்படையாக கொண்டு, தமிழ்ப்பிரிவு மேலும் தொடர்ந்து வளரும். எங்களது திறனை வலுப்படுத்துவதோடு, பல்வேறு துறைகளுடன் ஒத்துழைப்பு மேற்கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தமிழகத்தில் பண்பலை நிகழ்ச்சியைத் தொடங்குவது, கன்ப்யூசியஸ் பெயரிலான கல்லூரி ஒன்றை நிறுவுவது, தமிழொலி என்னும் இதழினை தமிழகத்தில் அச்சிட்டு வழங்குவது போன்றவை எதிர்காலத் திட்டங்களாக இருக்கின்றன. இந்த ஆண்டு, சீனத் தமிழ் வானொலியின் தமிழ் ஒலிபரப்பு தொடங்கிய பொன்விழா ஆண்டாகும். அனைவரின் கூட்டு முயற்சியில் தமிழ்ப்பிரிவு, மேலும் ஒளிமயமான எதிர்காலம் நோக்கிச் செல்லும் என்று உறுதியாக நம்புகின்றோம் என்றார்.


சீனாவில் இன்ப உலா

தற்போது சீன வானொலியின் தமிழ்ப்பிரிவுத் தலைவராக இருக்கும் "கலைமகள்" என்றழைக்கப்படும் "சாவோ ஜியாங்" (Zhao Jiang), "சீனாவில் இன்ப உலா"என்ற‌ புத்தகத்தைத் தமிழில் எழுதியிருக்கிறார். இந்தப் புத்தகம் சென்னையிலுள்ள கௌதம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற சென்னை புத்தகக் கண்காட்சியில் சிறப்பிடம் பெற்ற புத்தகம் இதுதான். இதன் சிறப்பு என்னவென்றால், கலைமகள் சீனாவிலுள்ள சுற்றுலாத்தலங்கள் குறித்து எவருடைய உதவியுமின்றி தமிழில் எழுதி இருப்பதுதான். இதன் மூலம் தமிழில் புத்தகம் எழுதிய முதல் சீனப் பெண்மணி என்கிற சிறப்பையும் பெற்றிருக்கிறார்.

இந்தப் புத்தகத்தில் சீனப் பெருநகரங்களான பெய்ஜிங், சாங்காய் போன்ற நகரங்கள் தோன்றிய வரலாறு, திபெத்திய நாகரிகம், சீனர்களின் கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றை எளிய‌ முறையில் 26 கட்டுரைகளாக எழுதியுள்ளார். முதன்முறையாக சீனாவுக்குச் சுற்றுலா செல்பவர்களுக்கு உதவும் விதமாக, ஒரு வழிகாட்டியாக இந்தப் புத்தகம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


சீன வானொலியின் தமிழ் ஒலிபரப்பு தென்னாசிய ஒலிபரப்பு மையத்தைச் சேர்ந்தது. தற்போது, சீனத் தமிழ் வானொலியில் 18 சீனப் பணியாளர்களும் 2 தமிழ்ப் பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர். இங்கு பணியாற்றும் சீனப் பணியாளர்கள் அனைவரும் த‌ங்க‌ள் பெய‌ரை அழ‌கு த‌மிழ்ப் பெய‌ராக‌ வைத்துக் கொண்டுள்ள‌ன‌ர்.

வாணி (தமிழ்ப்பிரிவு துணைத்தலைவர்)

மீனா (சீனப்பண்பாடு நிகழ்ச்சித் தயாரிப்பாளர்)

வான்மதி (சீனாவில் இன்பப் பயணம் நிகழ்ச்சி அறிவிப்பாளர்)

மோகன் (விளையாட்டுச் செய்திகள் நிகழ்ச்சி அறிவிப்பாளர், ஒளிப்படத் தயாரிப்பாளர்)

மதியழகன் (கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி அறிவிப்பாளர்)

கலைமணி (நட்புப் பாலம் நிகழ்ச்சி அறிவிப்பாளர்)

தேன்மொழி (நேயர் விருப்பம், நேருக்கு நேர், அறிவியல் மற்றும் நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சிகள் அறிவிப்பாளர்)

ஈஸ்வரி (இன்றைய திபெத் நிகழ்ச்சி அறிவிப்பாளர்)

சிவகாமி, (உங்கள் குரல், நேயர் கடிதம், நேயர் நேரம் நிகழ்ச்சிகள் அறிவிப்பாளர்)

சரஸ்வதி (சீனச் சமூக வாழ்வு நிகழ்ச்சி அறிவிப்பாளர்)

ஜெயா, (உங்கள் குரல், நேயர் கடிதம், நேயர் நேரம் நிகழ்ச்சிகள் அறிவிப்பாளர்)

இலக்கியா (மக்கள் சீனம் நிகழ்ச்சி அறிவிப்பாளர்)

நிலானி (சீனக் கலைஞர்களின் இதய ஒலி நிகழ்ச்சி அறிவிப்பாளர்)

ஓவியா (சீன இசை நிகழ்ச்சி அறிவிப்பாளர்)

மேகலா (சீனாவில் இன்பப் பயணம், மக்கள் சீனம் நிகழ்ச்சிகள் அறிவிப்பாளர்)

நிறைமதி (மலர்ச்சோலை நிகழ்ச்சி அறிவிப்பாளர்)

பூங்கோதை (மலர்ச்சோலை நிகழ்ச்சி அறிவிப்பாளர்)

தமிழன்பன் (சீன உணவரங்கம் நிகழ்ச்சி அறிவிப்பாளர்)


செம்மொழி மாநாட்டில் தி. கலையரசி

சீனத் தமிழ் வானொலியில் முன்பு தலைவராக இருந்த தி. கலையரசி 2009 ஆம் ஆண்டு சீன வானொலியின் முதன்மை அறிவிப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அறிவிப்பாளர் என்ற பதவியில் இது மிக உயர்ந்த பதவியாகும். இவர் 2010 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பங்கேற்றுச் சிறப்பித்தார். (கோயம்புத்தூரில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் தி.கலையரசியைப் பங்கேற்கச் செய்ய வேண்டும் என்று அப்போதைய மாநாட்டுச் செயலாளரும், தஞ்சை பல்கலைக்கழகத் துணைவேந்தருமான‌ முனைவர்.இராசேந்திரன் அவர்களை தொடர்பு கொண்டு பேசினேன். அவரும் என் வேண்டுகோளுக்கிணங்க, தி. கலையரசி அவர்களை மாநாட்டில் பங்கேற்கச் செய்தார் என்பதை இங்கே குறிப்பிடுவதில் மகிழ்கிறேன்) தி. கலைய்ரசி மற்றும் சீன வானொலியின் தமிழ்ப் பிரிவில் பணியாற்றும் தமிழரான தமிழன்பன் என்பவரும் இணைந்து சீனத் தமிழ் வானொலியில் வழங்கி வரும் சீன உணவரங்கம் நிகழ்ச்சி மிகச் சிறப்பு பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்றாகும்.

நேயர் கடிதங்கள்

உலகில் எந்த வானொலி நிலையத்துக்கும் இல்லாத சிறப்பு சீனத் தமிழ் வானொலிக்கு உண்டு. அது, சீன வானொலிக்கு அதன் நேயர்களிடமிருந்து நிகழ்ச்சி குறித்து பெறப்படும் நேயர் கடிதங்கள்தான். 1963 ஆம் ஆண்டு, சீனத் தமிழ் வானொலி நேயர்களிடமிருந்து இரண்டு கடிதங்கள் மட்டுமே கிடைத்த நிலை மாறி, உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து, ஒவ்வொரு ஆண்டும் இலட்சக்கணக்கில் நேயர் கடிதங்கள் குவிந்து கொண்டிருக்கின்றன.

2010 ஆம் ஆண்டில், 5 லட்சத்து 61 ஆயிரத்துக்கும் அதிகமான கடிதங்கள், சீனத் தமிழ் வானொலிக்கு வந்து சேர்ந்திருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் இணையதளம் மூலமாக அனுப்பப்படும் மின்னஞ்சல்களும் இப்போது தமிழ்ப்பிரிவிற்குக் குவியத் தொடங்கியுள்ளது.

ஐம்பதாம் ஆண்டு பொன்விழா காணும் இந்த வானொலியின் ‌நேயர்களாக‌, இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, சவூதி அரேபியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் பரவியுள்ளனர். உலகம் முழுவதும் சீனத் தமிழ் வானொலிக்கு நேயர்களாக இருப்பவர்கள் தொடங்கிய நேயர் மன்றங்களின் எண்ணிக்கை 150 ஆக இருக்கிறது. இம்மன்றங்களின் மூலம் பதிவு செய்யப்பட்ட நேயர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்கிறது.

சீன அரசு நட்புறவு விருது

முதன்முதலில் இலங்கையிலிருந்து சென்ற தமிழாசிரியர் மாதகல், வ. கந்தசாமி பணியாற்றினார். அதன் பின்னர் இலங்கையிலிருந்து சீன வானொலியில் பணியாற்றவும், அயல்மொழிப் பதிப்பகத்தில் மொழிபெயர்ப்புப் பணி புரியவும், தமிழ் கற்பிப்பதற்காகவும் தமிழாசிரியர் கே. சனகன், ராணி இரத்தினதேவி, வீ .சின்னத்தம்பி ஆகியோர் பணியாற்றினர்.

50 ஆண்டுகளில் தமிழ்ப் பிரிவின் ஒளிமயமான சாதனைகளில், மொத்தமாக 9 தமிழ் நண்பர்கள், வெளிநாட்டு நிபுணர்களாக, தமிழ்ப் பிரிவில் சேர்ந்து, பணி புரிந்துள்ளனர். சீன வானொலித் தமிழ்ப் பிரிவில் முழுநேரமாகப் பணி புரிந்த 9 தமிழ் நிபுணர்கள், இலங்கையைச் சேர்ந்த‌ மாதகல் கந்தசாமி, சின்னதம்பி, தமிழகத்தைச் சேர்ந்த ந. கடிகாசலம், சிவக்குமார், ராஜாராம், அந்தோனி கிளிட்டஸ், தமிழன்பன், புஷ்பா ரமணி, பாண்டியன் ஆகியோரும் அடங்குவர். அவர்களில் பேராசிரியர் முனைவர் ந. கடிகாசலம், மூன்று முறையாக ஏறக்குறைய 12 ஆண்டுகள் சீனத் தமிழ் வானொலியில் பணிபுரிந்துள்ளார். குறிப்பாக, அவரது பங்களிப்புக்கு மதிப்பளிக்கும் வகையில் 2004 ஆம் ஆண்டு, சீன அரசு நட்புறவு விருதை அவருக்கு வழங்கிச் சிறப்பித்தது.

புதிய முயற்சி

சீன வானொலித் தமிழ்ப் பிரிவின் இளம் பணியாளர்கள் கூகுள் ப்ளஸ், டுவிட்டர், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து, இணைய நண்பர்களுடன் தொடர்பு கொண்டு, இணையத்தில் உடனடியாக பரிமாற்றம் செய்ய முயன்று வருகின்றனர். இது சீனத் தமிழ் வானொலிக்கு மேலும் பல நேயர்களை உருவாக்கிக் கொடுக்கும் என்று உறுதியாக நம்பலாம்.

சீனத் தமிழ் வானொலி குறித்து முழுமையாக அறிந்து கொள்ளவும், சீனத் தமிழ் வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டு இரசித்து, சீனத் தமிழ் வானொலி நடத்தும் போட்டிகளில் பங்கேற்றுப் பரிசுகள் பல பெறவும் விரும்புபவர்களுக்காக அதன் இணைய முகவரி:


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p43.html


  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017

வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                               


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License