இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

வரலாற்று நோக்கில் தமிழில் கலைச்சொல்லாக்கமும் நிலைபேறாக்கமும்

முனைவர் தி.நெடுஞ்செழியன்


தொடக்கம்

கலைத்துறை மற்றும் அறிவியல் துறைகளை உள்ளடக்கிய அறிவுசார் துறையில் கலைச்சொற்களின் பங்கு இன்றியமையாத ஒன்றாக அமையப்பெற்றுள்ளது. மிகப் பொருத்தமான கலைச்சொற்களை அடிப்படையாகக் கொண்டுதான் எந்தவொரு தகவல் தொடர்பும் முழுமை பெறும். கருத்துத் தொடர்புகளை அடியொற்றி அறிவுப் பகுதியை வரிசைப்படுத்தக் கலைச்சொற்கள் உதவுகின்றன. பொது அறிவியல் கருத்துகளின் தொடர்புகள் மட்டுமின்றி, அறிவியல் துறைகள் ஒவ்வொன்றிற்கும் உரிய கருத்துகளின் தொடர்புகளையும் வரிசைப்படுத்தலாம். ஒவ்வொரு துறைகளில் ஏற்படும் முன்னேற்றம் புதிய கருத்துகளை உருவாக்கும். இப் புதிய கருத்துகளும் கலைச்சொற்களும் ஏற்கனவே உள்ள கருத்துத் தொகுதியோடு ஒத்தமைவு உடையவனாக இருத்தல் வேண்டும். கருத்துகளைக் குறிக்கும் கலைச்சொற்களை உருவாக்கும் பணியும் அறிவியல் மற்றும் வரைவிலக்கணம் சார்ந்தனவாக அமையும். தமிழில் கடந்த 100 ஆண்டுகளில் உருவான கலைச்சொற்களும் அவைகளில் நிலைபேறாக்கம் பெற்ற சொற்களும் நிலைபேறாக்கம் பெற்றிடாத சொற்களும் இக் கட்டுரை வாயிலாக வரலாற்று நோக்கில் பகுப்பாய்வு செய்யப்படுகின்றது. நிலை பேறாக்கம் பெற்றமைக்கான காரணங்களும் நிலைபேறாக்கம் பெற்றிடாமைக்கான காரணங்களும் இக் கட்டுரையில் விளக்கப்பெறுகின்றது.

வரிவசூலிப்பவர் - ஆட்சியர்

தமிழகத்தில் Collector என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு முதலில் வழங்கப்பெற்ற சொல்லாக்கம் வரி வசூல் செய்பவர் என்பதாகும். பின்னர்த் தண்டல்நாயகர் என்றும் தண்டல் நாயகம் என்ற சொல் உருவானது. District Collector என்னும் புதிய ஆங்கிலச் சொல்லாக்கம் உருவானது. தமிழில் மாவட்ட ஆட்சித் தலைவர் என்னும் புதிய கலைச்சொல் உடனே ஏற்படுத்தப்பட்டது. அப்போது மின் வாரியத்தில் Bill Collector என்னும் பணியிடம் இருந்தது. பின்னர்ப் பில் கலெக்டர் பணியிடம் ஒழிக்கப்பட்டது. அதன் பின்னர் District Collectorஇல் இருந்த District நீக்கம் செய்யப்பெற்று Collector மட்டும் இருந்தது. தமிழில் ‘மாவட்ட’ என்பது நீக்கம் செய்யப்பெற்று ஆட்சித் தலைவர் என்றழைக்கப்பட்டது. இந்நிலையில் செயலாளர், பொருளாளர் முறையே செயலர், பொருளர் என்று சுருக்கி அழைக்கப்பட்ட நிலையில் ஆட்சித் தலைவர் என்பது ஆட்சியர் என்று சுருக்கம் செறிவும் பெற்றது. தற்போது Collector என்பதற்கு ஆட்சியர் என்ற சொல் தமிழில் தற்போது நிலைபேறாக்கம் பெற்றுள்ளது. இதற்குச் சுமார் 80 ஆண்டுகாலம் ஆனது என்பது குறிப்பிடத்தகுந்தது. Collector என்ற சொல்லுக்கு ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு சொல் நிலைபேறாக்கம் பெற்றுப் பின்னர் மறு நிலைபேறாக்கம் பெற்றுமை குறிப்பிடத்தக்கதாகும்.



தேநீர் - காபி

தமிழர்களின் வாழ்வில் காலையில் காபி, டீ குடிக்கும் வழக்கம் ஆங்கிலேயர் காலத்திலிருந்து தொடங்கிவிட்டது. டீ என்பதற்குத் தேயிலையிலிருந்து வடித்து எடுக்கப்படும் நீர் என்ற அடிப்படையில் தேயிலைநீர் என்பது பின்னர்ச் சுருக்கம் பெற்றுத் தேநீர் என்று நிலைபேறாக்கம் பெற்றுவிட்டது. தேநீர் என்பதில் தேன் போன்ற நீர் என்ற பொருளைத் தந்தாலும் டீ என்பதற்கான கலைச்சொல்லாகத் தேநீர் நிலைபேறாக்கம் பெற்றுத் தேநீரகம், தேநீர் கடை என்று விளம்பரப் பலகையில் இடம்பெறும் அளவிற்கு இச் சொல் நிலைபேறாக்கம் பெற்றுள்ளது. இதே காலக் கட்டத்தில் காபியும் தமிழர்களிடம் அறிமுகமாகி இருந்தது. காபி என்பதன் வேர் சொல் Calf. விலங்குகளின் கால் குளம்பு போன்று காபி கொட்டைகள் இருப்பதால் Calf இலிருந்து காபி என்ற சொல் உருவானது என்ற வரலாற்றை அறிந்த தமிழறிஞர்கள் காபி என்பது குளம்பி என்ற சொல்லை உருவாக்கி மக்கள் புழக்கத்தில் விட்டனர். மக்களிடம் இச் சொல் நிலைபேறாக்கம் பெறவில்லை. காபி கொட்டை வறுத்து அரைக்கப் பெற்றுப் பின்னர்க் கொதிநீரில் இடப்பட்டுப் பின்னர் வடித்தெடுக்கப்பட்டுப் பாலில் கலக்கப்படுவதால் காபி என்பதற்குப் பயன்பாட்டு அடிப்படையில் கொட்டைவடிநீர் என்னும் சொல் உருவானது. கொட்டை என்பது ஆண்களின் சிறுநீர் உறுப்பிற்குக் கீழே இருக்கும் விரையைக் ‘கொட்டை’ என்று அழைக்கும் வழக்கம் ஏற்கனவே இருந்தமையால் காபிக்குக் கொட்டை வடிநீர் என்ற சொல் நிலைபேறாக்கம் அடையவில்லை. 90களுக்குப் பின் தினமணி வாசகர் திருச்சி தி. அன்பழகன் மணநீர் என்னும் புதிய சொல்லை உருவாக்கி அவர் நடத்திய கரவொலி என்றும் சிற்றிதழ் வழியாக மக்கள் புழக்கத்தில் விட்டார். மணநீர் நிலைபேறாக்கம் அடையவில்லை. தி. அன்பழகன் சர்பத் என்பதற்குச் சுவைநீர் என்னும் சொல்லாக்கத்தை உருவாக்கினார். அது நிலைபேறாக்கம் பெற்றுள்ளது. காபி என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இதுவரை ஒரு புதிய தமிழ்க் கலைச்சொல் நிலைபேறாக்கம் பெறாத நிலையே நீடித்து வருகின்றது.

ஈருருளி - மிதிவண்டி

Bi-Cycle என்பதற்குத் தூவிச் சக்கர வண்டி என்ற சொல்லாக்கம் பயன்பாட்டு வந்தது. சொல்லாக்கம் சுருக்கமாக இல்லை என்ற குரல் எழுந்தது. பின்னர் ஈருருளி என்னும் சுருக்கமான சொல் தமிழறிஞர் பாவணாரால் உருவாக்கப்பட்டது. இச் சொல் மிகப் பொருத்தமுடையதாக இருந்தாலும் செயல்பாட்டின் அடிப்படையில் மக்கள் மிதிவண்டி என்றே அழைத்தார்கள். மிதிவண்டி, மிதிவண்டி நிலையம் என்றும் சொல் சேர்க்கைகள் ஏற்பட்டு நிலைபேறாக்கம் பெற்றது. இதே வேளையில் கார் என்பதற்கு மகிழ்வுந்து, ஸ்கூட்டர் என்பதற்குத் துள்ளுந்து, லாரி என்பதற்குச் சரக்குந்து, பஸ் என்பதற்குப் பேருந்து என்னும் சொற்கள் ஆக்கம் செய்யப்பெற்றன. இதில் பஸ் என்பதற்கு மட்டுமே பேருந்து என்ற சொல் நிலைபேறாக்கம் பெற்றது. மற்ற உந்துகளுக்குத் தமிழ் வழியில் சொற்கள் நிலைபேறாக்கம் பெறவில்லை.



பேருந்து - சிற்றுந்து

அண்மைக் காலத்தில் மினி பஸ் போக்குவரத்தில் இணைந்துள்ளது. இதனைத் தொடக்கத்தில் மினி பஸ் என்றே ஒலிப்பெயர்ப்பு முறையில் அழைத்தனர். காலம் செல்ல…செல்ல… புதிய ஆக்கம் செய்து சிற்றுந்து என்று அழைத்தனர். சிற்றுந்து என்ற சொல்லைத் தி இந்து தமிழ் நாளோடு பயன்படுத்தியது. “Mini Bus என்பதற்குச் சிற்றுந்து என்பது தவறான பயன்படாகும். பஸ் என்பது பெரிய உந்து என்ற பொருளில் அழைக்கப்படுவதாகப் பொருள்கொள்ளப்பட்டுள்ளது. பேர் என்பது மக்களைக் குறிக்கும் சொல். (எ-டு. எத்தனை பேர்) மக்கள் செல்வதால் அது பேருந்து என்று அழைக்கப்பட்டது. இந்நிலையில் மினி பஸ் என்பதில் மினி என்பதற்குச் சிறு என்றும் பஸ் என்பதற்கு ஏற்கனவே நிலைபேறாக்கம் பெற்றுவிட்ட பேருந்து என்ற சொல்லையும் இணைத்துச் சிறு பேருந்து என்று அழைப்பதே பொருத்தமுடையாதாக இருக்கும்” என இக் கட்டுரையாளரால் தி இந்து நாளேட்டிற்கு விளக்கம் எழுதப்பட்டுள்ளது. ஆனால் சென்னை, மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி போன்ற இடங்களில் சிற்றுந்து என்ற சொல்லே நிலைபேறாக்கம் பெற்றுள்ளமையைக் காணமுடிகின்றது.

செல்போன் - அலைபேசி

Cellular Phone 80களின் இறுதியில் தமிழர்களுக்கு அறிமுகம் ஆனது. அதனை முதலில் ஒலிபெயர்ப்பு அடிப்படையில் தமிழில் செல்லுலார் போன் என்றே அழைக்கப்பட்டது. ஏற்கனவே இல்லங்களில் இருந்த போன் என்ற கருவிக்குத் தொலைபேசி என்ற கலைச்சொல் நிலைபேறாக்கம் பெற்றிருந்தது. ஆங்கிலத்தில் வழங்கப்பெற்ற Cellular Phone - Cell Phone என்று சுருக்கி அழைக்கப்பட்டது. தமிழில் உடனே செல்பேசி என்று அழைக்கப்பட்டது. செல்லுகின்ற இடத்திலிருந்து இந்தப் போன் வழியாகப் பேசமுடிவதால் செல்லிடப் பேசி என்று அழைக்கப்பட்டது. கையில் வைத்துப் பேசுவதால் கைப்பேசி என்று அழைக்கப்பட்டது என்றாலும் ஒருவகையில் நிலைபேறாக்கத்தை இச் சொல் பெற்றது. Cell Phone என்பதற்குக் கைபேசி சரியான கலைச்சொல் இல்லை என்பதால் செல்போன்கள் Micro Waves மூலம் செயல்படுகின்றது என்ற அடிப்படையில் நுண்அலைபேசி என்ற ஒரு புதிய சொல் உருவாக்கப்பட்டது. அதில் இருந்த நுண் என்ற சொல் தேவையற்ற சொல்லாகக் கருதப்பெற்றுத் தற்போது அலைபேசி என்றழைக்கப் படுகின்றது. இச் சொல் தற்போதைக்கு நிலைபேறாக்கம் பெற்ற சொல்லாக உள்ளது. கைப்பேசி என்ற சொல்லும் மக்கள் புழக்கத்தில் உள்ளது.



கலாநிதி - முனைவர்

Ph.D. என்னும் உயர்கல்வியின் ஆய்வு சார்ந்த பட்டப்படிப்பின் விரிவாக்கம் Doctor of Philosophy என்பதாகும். தத்துவம், கொள்கையைக் கண்டுபிடித்தவர் என்ற பொருளில் மேற்சொன்ன சொல் வழங்கப்பட்டு வந்தது. இலங்கையில் தமிழர்களின் வாழ்நிலப் பகுதிகளில் ஒன்றான யாழ்பாணத்தில் உள்ள யாழ் பல்கலைக்கழகத்தில் Doctor of Philosophy என்னும் ஆங்கிலச் சொல்லுக்குப் பண்டாரகர் என்னும் சொல் ஆக்கம் செய்யப்பட்டு மக்கள் புழக்கத்திற்கு வந்தது. இது கோயில்களில் பூசை செய்வோரைப் பண்டாரம் என்று அழைக்கும் இருந்து வந்தது. இச் சொல் தமிழகத்தில் ஏற்புடையதாக அமைந்திருக்கவில்லை. இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணத் தமிழறிஞர்கள் கலாநிதி என்னும் புதிய சொல்லை உருவாக்கினார்கள். இந்தச் சொல்லும் தமிழகத்தில் ஏற்கப்பட வில்லை. 80களின் தொடக்கத்தில் முனைவர் என்னும் தமிழகத்தில் உருவாக்கப்பட்டு மக்கள் வழங்கிய ஏற்பின் அடிப்படையில் இச்சொல் நிலைபேறாக்கம் பெற்றுள்ளது. 90களின் பின்னர் முனைவர் என்ற சொல்லாகத்திற்குப் பதிலாகச் சொல்லாய்வாளர் மா.சே. விக்டர் என்பார் தக்கார் என்னும் சொல்லை அவர் எழுதிய நூல்களின் வழியாக மக்களின் புழகத்திற்கு விட்டார். இச் சொல் நிலைபேறாக்கம் பெறவில்லை என்பது குறிப்பிடத் தகுந்ததாகும்.



இயற்பியல் - இயைபியல்

Physics என்னும் சொல்லுக்குக் கல்விசார் நிலையில் 1975இல் பௌதிகம் என்ற சொல்லாக்கம் ஏற்பட்டது. இதற்கு முன்பு இச் சொல்லுக்குப் பூதவியல் என்னும் சொல் இலங்கைத் தமிழர்களிடமும் இந்தியத் தமிழர்களிடம் புழக்கத்தில் இருந்தது. பூதம் என்பது தமிழர் வாழ்வியல் சூழலில் அச்சமூட்டும் சொல்லாக இருந்தமையால் மேற்சொன்ன பௌதிகம் என்ற சொல் பயன்பாட்டில் இருந்து வந்தது. தமிழ்நாடு அரசின் பாடநூல் நிறுவனம் மேல்நிலை வகுப்பு Physics பாடநூலைத் தமிழில் பௌதிகம் என்னும் பெயரில் வெளியிடாமல் இயற்பியல் என்று வெளியிட்டது. இயல்பு + இயல் என்பது புணர்ச்சி பெற்று இயற்பியல் என்று அழைக்கப்பட்டது. இயற்பியல் என்பது தவறான பயன்பாடு என்பதை மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியின் தமிழ்த்துறையின் முன்னைத் தலைவர் முனைவர் கி.செம்பியன் நூல்களில் எழுதியும் இலக்கியக் கூட்டங்களில் உரை நிகழ்த்தும்போது இக் கருத்தை வெளியிட்டார். மேலும் ஏவிசி கல்லூரியில் முதன்மைப் பாடமாக இருந்த இயற்பியல் வகுப்புக்கான மாணவர் வருகை பதிவேட்டில் இயல்பியல் என்றே எழுதவேண்டும் என்று உடன் பணியாற்றிய ஆசிரியர்களை அறிவுறுத்தினார். (1997-2005வரை கட்டுரையாளர் முனைவர் கி.செம்பியனுடன் பணியாற்றியவர்) பொருள்களின் இயல்பை விளக்கும் இயல் என்பதால் இயல்பியல் என்று அழைப்பதே பொருத்தமுடையது எனப் பல அரங்குகளில் விவாதித்துள்ளார். எனினும் இயல்பியல் என்னும் சொல் நிலைபேறாக்கம் பெறாது இயற்பியல் என்ற சொல்லே நிலைபேறாக்கம் பெற்றுமையைத் தமிழ்நாடு அரசு பாட நூல்களின் வழி அறியமுடிகின்றது.

Chemistry என்பதற்கு 1903இல் இலங்கையில் வெளிவந்த வேளாண்மை இதழான கமத்தொழில் என்னும் இதழில் இயைபியல் என்னும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இராசயனம் என்ற சொல்லே 80கள் வரை பயன்படுத்தப்பட்டது. பின்னர்த் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் வேதியல் என்ற ஒரு புதிய சொல்லை உருவாக்கிப் புழகத்தில் விட்டது. வேதியல் என்னும் சொல் வேதியியல் என்றழைப்பதே பொருத்தமுடையது என்பதை மேற்சொன்ன முனைவர் கி.செம்பியன் வலியுறுத்தி வேதியல் மாணவர் வருகைப் பதிவேட்டில் வேதியியல் என்றே குறிப்பிட்டார். இயற்பியல் போலவே பரும்பான்மை மக்களால் வேதியல் என்பதே நிலைபேறாக்கம் பெற்றுமையை உணரமுடிகின்றது.

கணிப்பொறி - கணினி

தமிழ்நாட்டிலும் தமிழர்கள் வாழும் பிறநாடுகளிலும் மிக வேகமாகச் சொற்கள் நிலைபேறாக்கம் பெற்ற துறையாக விளங்குவது கணினித் துறையாகும். Computer என்பது கால்குலேட்டர் என்னும் கணிப்பான் என்னும் கணக்கீட்டு கருவியின் தொடர்ச்சியாகவும் நீட்சியாகவும் கண்டுபிடிக்கப்பட்டது என்பதால் கம்பியூட்டர் என்பதற்குக் கணிப்பொறி என்றழைக்கப்பட்டது. கல்விசார் நிலையில் Computer Science என்பது கணிப்பொறி அறிவியல் என்னும் BCA (Bachelor of Computer Application) கணினிப் பயன்பாட்டியல் என்று தமிழாக்கம் செய்யப்பட்டுத் தற்போது நிலைபேறாக்கம் பெற்றுள்ளது. தற்போது கம்பியூட்டர் என்பதற்குச் சுருக்கமான சொல்லாக்கமாகக் கணினி என்பது நிலைபேறாக்கம் பெற்றுள்ளது. மேலும் இத்துறை சார்ந்த Montor - காட்சி திரை, Printer - அச்சுப்பொறி, Mouse - தொடக்கத்தில் சுட்டெலி என்றும் தற்போது சுட்டி என்றும் நிலைபேறாக்கம் பெற்றுள்ளது. CPU என்னும் Central Process Unit மைய நிகழ்த்தகம் என்றும் மையச் செயல்பாட்டகம் என்றும் வழங்கப்பட்டு வருகின்றது. Software என்பதற்கு மென்பொருள் என்னும் சொல் நிலைபேறாக்கம் பெற்றிருந்த நிலையில், பாரதிதாசன் பல்கலைக்கழத்தின் தமிழ்த்துறையின் முன்னைத் தலைவர் முனைவர் இராதாசெல்லப்பன் மென்மம் என்னும் புதிய சொல்லாக்கத்தைத் தன்னுடைய நூல்களின் வழியாகப் புழக்கத்தில் விட்டார். இதைப் பலரும் ஏற்றுத் தங்களின் நூல்களில் இடம்பெறச் செய்துள்ளனர். Hardware என்பதற்கு வன்பொருள் என்னும் மென்பொருளைப் போன்று ஆக்கம் செய்யப் பெற்றது. வன்பொருள் என்றால் கடினமான பொருள் என்னும் தன்மையை வெளிப்படுத்தி நின்றது. இராதாசெல்லப்பன் வன்பொருள் என்பதைவிட கருவியகம் சிறப்பாக இருக்கும் என அச்சொல்லை ஆக்கம் செய்தார். தற்போது கருவியகம் நிலைபேறாக்கம் பெற்றுள்ளது, மேலும் இத்துறையில் பதிவேற்றம், பதிவிறக்கம், உள்ளீடு, வெளியீடு, மொழிமாற்றி, நினைவகம் போன்ற சொல்லாக்கங்கள் ஏற்பட்டு நிலைபேறாக்கம் பெற்றுள்ளமையைக் காணமுடிகின்றது. CD என்பதற்குக் குறுந்தட்டு, குறுவட்டு என்னும் சொல்லாக்கம் ஏற்பட்டுள்ளன. அண்மையில் மக்களின் புழக்கத்தில் உள்ள Pendrive என்பதற்கு எழுதிஇயக்கி, சேமிப்பகம் போன்ற சொற்கள் புழக்கத்தில் இருந்தாலும் இச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல்லாக்கம் நிலைபேறாக்கம் பெறாது உள்ளது.



வலைப்பின்னல் - இணையம்

கணினி மற்றும் Smart Phone என்னும் பல்லூடக அலைபேசி (இச் சொல்லாக்கம் கட்டுரையாளரால் முன்மொழியப்பட்டுப் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது) வழி இயங்கும் இண்டர்நெட் என்பதற்கு முதலில் தொடர்பின்னல், வலைப்பின்னல், வலையகம், பிணையம் என்ற சொற்கள் தொடர்ந்து உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்தது. பாலாப்பிள்ளை அவர்கள் இணையம் என்ற சொல்லை உருவாக்கிப் புழக்கத்தில் விட்டார். இச்சொல் மிக எளிமையாக நிலைபேறாக்கம் பெற்றது. வெப்சைட் என்பதற்கு முதலில் வலைதளம் என்றழைக்கப்பட்டது. தற்போது இணையத் தளம் என்றழைக்கப்படுகின்றது. மேலும், மின்னஞ்சல், மின்-அஞ்சல், நேர் அரட்டை, குரல் அரட்டை, காணொளி அரட்டை, சமூக வலைதளங்கள், மின்நூலகம், மின்நூல், முகநூல், இணைய இதழ்கள், இணையச் சிற்றிதழ்கள், இணையத்தில் தொடர்ந்து இயங்குவோரைக் குறிக்க முன்னர் வலைவாசி என்றும் தற்போது இணையவாசி என்றும் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதுபோன்ற பல புதிய சொல்லாக்கங்கள் கணினித் துறையில் நிலைபேறாக்கம் பெற்றுள்ளன. இணையத்தில் Blogspot என்பதற்கு வலைப்பூ என்னும் சொல்லாக்கத்தை இணையம் வழியாகப் புழக்கத்தில் விட்டு அச்சொல் நிலைபேறாக்கம் பெறுவதற்கு உழைத்தவர் தமிழ்மரபு அறக்கட்டளையின் துணைத் தலைவர் சுபாஷினி ஆவார். தமிழ்மரபு அறக்கட்டளையின் தலைவர் முனைவர் நா. கண்ணன் அவர்கள் வீடியோ என்பது ஏற்கனவே புழக்கத்திலிருந்த காணொளிக்குப் பதிலீடாக விழியம் என்னுமோர் புதிய சொல்ல உருவாக்கினார். இன்று இணையத்தில் இச்சொல் நிலைபேறாக்கம் பெற்றுள்ளமையைக் காணமுடிகின்றது. மேலும் முனைவர் நா. கண்ணன் Youtube என்பதற்கு உன்குழல் என்னும் சொல்லாக்கத்தை முன்வைத்தார். அச்சொல் நிலைபேறாக்கம் பெற்றாக அறிய இயலவில்லை.

கோர்ட் - நீதிமன்றம்

மக்களுக்கு மிகவும் அணுக்கமான தொடர்புடைய துறைகளில் நீதித் துறையும் ஒன்று. ஆங்கிலத்தில் Court என்பதற்குத் தமிழில் நீதிமன்றம் எனச் சொல்லாக்கம் செய்யப்பட்டது. நீதி வடமொழி சார்ந்த சொல் என்பதால் தமிழறிஞர்களில் குறிப்பாகப் பெருஞ்சித்திரனார் தன் வெளியிட்ட தமிழர் நிலம், தென்மொழி, தமிழ்ச் சிட்டு போன்ற இதழ்களில் அறங்கூறும் அவையம் என்ற சொல்லை உருவாக்கினார். இச் சொல் சுருக்கமாக இல்லாமல் இருக்கின்றது என்ற பின்னூட்டம் அறிந்து அறமன்றம் என்னும் புதிய சொல்லை ஆக்கம் செய்தார். இச் சொல் நிலைபேறாக்கம் அடையவில்லை. நீதிமன்றமே நிலைபேறாக்கம் பெற்றது. நீதி மன்றம், உயர்நீதி மன்றம், உயர்நீதி மன்றக் கிளை, உச்சநீதி மன்றம் என அத்துறை தொடர்பாகச் சொற்கள் உருவாக்கப்பட்டன. இச்சொல் நிலைபேறாக்கம் சென்னை, மதுரை பகுதிகளில் பெற்றுவிட்ட நிலையில், தமிழ்நாட்டின் மையப்பகுதியான திருச்சிராப்பள்ளியில் இயங்கும் பேருந்துகளின் பெயர் பலகைகளில் ‘வழி : கோர்ட்’ என்றே உள்ளது. நீதிபதி, நீதியரசர், வழக்குரைஞர், வழக்கறிஞர், தீர்ப்பு, மேல்முறையீடு, காப்புத் தொகை, பிணை, நேர்நிறுத்துதல், ஆட் கொணர் மனு, இடைக்காலத் தடை, அழைப்பாணை, வக்கலாத்து, முதல் தகவல் அறிக்கை, குற்றப்பத்திரிகை, குற்றச்சாட்டு, குற்றச்சாட்டுப் பதிவு, அரசு தரப்பு, குற்றவாளி தரப்பு என்பது தற்போது குற்றம் சாட்டப்பெற்றவர் தரப்பு, உரிமையியல் நீதிமன்றம், குடும்ப நல நீதிமன்றம், முத்திரைத்தாள் போன்ற பலசொற்கள் நிலைபேறாக்கம் பெற்றுள்ளமையைக் காண முடிகின்றது.



ஊடகங்களில் சொல்லக்கம்

தமிழ் ஊடகங்களில் குறிப்பாக அச்சு ஊடகமான இதழியலில் தொடக்கக் காலத்தில் சமஸ்கிருதம், வடமொழி கலந்தும் ஆங்கிலச் சொற்கள் தமிழ் ஒலிபெயர்ப்பு முறையிலும் அமைக்கப்பட்டுச் செய்திகள் வெளியிடப்பட்டன. சி.பா.ஆதித்தனார் தினத்தந்தி தொடங்கி இயன்றவரை எல்லாச் சொற்களுக்கும் தமிழில் சொல்லாக்கம் செய்தார். இவர் தன்னுடைய நாளிதழில் புதுபுது சொல்லாக்கங்களை உருவாக்க உதவியாகத் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் மு. கருணாநிதி, நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் க. அன்பழகன், ஈ.வெ.கி. சம்பத், மா.பொ.சிவஞானம் போன்ற தமிழ்நாட்டு தலைவர்களின் உரைகள், எழுத்துகள் அமைந்திருந்தன. பேரவைத் தலைவர், பெரியோர்களே, தாய்மார்களே, சட்டமன்றம், சட்டப்பேரவை, சட்டப்பேரவைத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர், அவை முன்னவர், Wib என்பதற்குக் கொறடா, சட்டமன்ற மேலவை உறுப்பினர், சட்ட முன்வரைவு, அனுமதி கோருதல், கேள்வி நேரம், நேரமில்லா நேரம் (ஜீரோ ஹவர்), ஒத்திவைப்பு தீர்மானம், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம், துணைக் கேள்வி, ஒழுங்கு நடவடிக்கை, அவையிலிருந்து வெளியேற்றம், வெளிநடப்பு, முதலமைச்சர், முதல்வர், அமைச்சர், துணை அமைச்சர், குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் என்று பல சொற்கள் நிலைபேறாக்கம் பெற்றுள்ளன. தினமணி 90களுக்குப் பின் செய்தி வழங்குதலில் நிறைய தமிழ் சொல்லாக்கங்களை அறிமுகம் செய்தது. குறிப்பாகச் சஸ்பெண்ட் என்பதற்குத் தற்காலிக நீக்கம் என்பதற்குப் பதிலாகப் பணிஇடைநீக்கம், Values என்பதற்கு மதிப்பீடு என்பதைவிட விழுமியம் என்ற சொல்லை அறிமுகம் செய்து வைத்தது. சுநாமிக்குக் கடல் சீற்றம் என்றும் கடல் கொந்தளிப்பு என்ற பெயரில் அழைக்கப்பட்டது. பின்னர்க் கடல்கோள் என்னும் பழந்தமிழ் சொல்லால் அழைக்கப்பெற்றது. சென்னை வானிலை ஆராய்ச்சி மையத்தால் ஆழிப்பேரலை என்னும் தொலைக்காட்சியில் அறிமுகமானது. இச்சொல் நிலைபேறாக்கம் அடையத் தினமணியைத் தொடர்ந்து பல அச்சு ஊடகங்கள், மின் ஊடகங்களில் புதிய தலைமுறை தொலைக்காட்சி, தந்தித் தொலைக்காட்சி, இமயம் தொலைக்காட்சி, சென்னை பொதிகைத் தொலைக்காட்சி, அகில இந்திய வானொலி போன்றவை உறுதுணையாக இருந்து வருகின்றன. மேலும் தமிழுக்குப் புதிய சொற்களை ஆக்கம் செய்து அறிமுகம் செய்து வைத்ததில் பட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுநர் மருத்துவர் இராமதாசு அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த தமிழ் ஓசைக்குப் பெரும் பங்குண்டு. இந்த இதழ் அறிமுகம் செய்து வைத்த சொற்கள் ஆட்டோ-தானி, வேன் - மூடுந்து, லாரி, சரக்குந்து, பிணை, நேரலை, முன்வைப்பு, நேர் நிறுத்துதல், பிணை மறுப்பு, உண்ணாநிலை போன்ற பல்வேறு சொற்கள் இதில் அடங்கும்.

மக்கள் தொலைக்காட்சி Live என்பதற்கு நேரலை என்னும் கலைச்சொல்லைப் புழக்கத்தில் விட்டது. அதற்கு முன் நிகழ், நேரடி, தொடரலை என்றிருந்தது. இலண்டன் பிபிசி தமிழோசை வானொலி நிகழ்ச்சியில் 90களில் தேர்தலின்போது நடைபெறும் பிரசாரத்தைப் பரப்புரை என்று ஆக்கம் செய்து நிகழ்ச்சிகளில் ஒலிபரப்பியது. 2014ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலின்போது புதியதலைமுறை தொலைக் காட்சி தன்னுடைய செய்தி ஒளிபரப்பில் பரப்புரை என்னும் சொல்லாக்கத்தைப் பயன்படுத்தியது. இலண்டனிலிருந்து ஒலிபரப்பப்படும் பிபிசி தமிழோசையில் 80கள் தொடங்கிப் புதிய கலைச்சொற்கள் புழக்கத்திற்கு வருவதற்குப் பெரும்துணையாக நின்றது. விமானம், ஆகாய விமானம் - வானுர்தி, ஹெலிகாப்டர் - உழங்கு வானுர்தி, கொரில்லா படையினர் - கரந்தடிபடையாளர், வயது-அகவை, விபத்து - நேர்ச்சி, இலஞ்சம் - கையூட்டு, தேர்தலில் வெற்றி பெற்றர்-தெரிவு செய்யப்பெற்றார், தோல்வி அடைந்தார் - தெரிவு செய்யப்படவில்லை எனப் பல சொல்லாக்கங்களைப் பிபிசி முன் வைத்தது. இந்த ஒலிபரப்பு தமிழுக்கு ஆக்கம் செய்வதாக அமைந்திருந்தது என்றால் மிகையில்லை. ஆனால் தமிழகத்தின் ஊடகங்கள் இதுபோன்ற பிறமொழிச் சொற்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பல சொற்களை மக்களின் புழக்கத்திற்கு விடவில்லை. மாறாகப் பிபிசிக்குப் போட்டியாகப் பிலிப்பைன்ஸ் நாட்டின் வெரித்தாஸ் தமிழ் ஒலிபரப்பு, சீனாவின் பெய்ஜிங் ஒலிபரப்பு, சிங்கப்பூர், மலேசிய வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் தமிழ்மொழிக்கும் ஆக்கம் சேர்க்கும் வகையில் சொற்களை அறிமுகம் செய்து வைத்தன.

நிறைவுரை

தமிழகத்தில் கடந்த ஓரு நூற்றாண்டு காலம் ஒலிபெயர்ப்பு, மொழிபெயர்ப்பு, புதிய ஆக்கம் என்ற நிலையில் தமிழுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பெற்ற சொற்களில் நிலைபேறாக்கம் பெற்ற சொற்கள் குறித்தும் நிலைபேறாக்கம் பெற்றிடாத சொற்கள் குறித்தும் வரலாற்றின் துணைக் கொண்டு நோக்கப் பெற்றுச் சில செய்திகள் மட்டுமே இக் கட்டுரையின்கண் முன் வைக்கப்பட்டுள்ளது. கலைச்சொற்கள், புதிய சொற்கள் நிலைபேறாக்கம் பெறுவதற்கு அரசின் துணை என்பது இன்றியமையாதாகும். தமிழ்நாட்டில் ஸ்ரீரங்கம் (திருவரங்கம்), ஸ்ரீவைகுண்டம் (திருவைகுண்டம்), ஸ்ரீவில்லிப்புத்தூர் (திருவில்லிப்புத்தூர்) வேதரண்யம் (மரைக்காடு), கரூர் (கருவூர்), ஈரோடு (ஈரோடைக்), குளித்தலைக் (குழித்தலை), விருத்தாசலம் (திருமுதுகுன்றம்) இலால்குடி (திருத்தவத்துறை) இதுபோன்று பல ஊர்பெயர்கள் தமிழாக்கம் செய்யப்படாமல் உள்ளன. அண்மையில் உள்ள கர்நாடக மாநிலத்தில் பெங்களூர் - பெங்களூரு, மைசூர் - மைசூரு என்றும் கேரள மாநிலத்தில் ஆங்கிலத்தில் Trivandram - திருவனந்தபுரம், Calicut - கோழிக்கோடு, Kannur - கண்ணனூர் என்று மிக எளிதாக ஊர்ப் பெயர்களை மாற்றம் செய்துள்ளன. இதை முன்மாதிரியாகக் கொண்டு செயல்படத் தமிழ்நாடு முன்வரவேண்டும்.

(மலேசியாவில் நடைபெற்ற 9ஆவது உலகத்தமிழ் மாநாட்டில் வாசிக்கப்பெற்ற கட்டுரையின் முழுவடிவம்)

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p55.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License