Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினாறாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...

Content
உள்ளடக்கம்

சமையல்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

சிலம்புச்செல்வர் ம. பொ. சிவஞானம் சிறப்புகள்

முனைவர் ஜெ. ரஞ்சனி


சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் தமிழால் தம்மை வளர்த்துக் கொண்டு தம்மால் தமிழையும் வளர்த்த தமிழ்வேந்தர். பிறந்து மொழிபயின்ற பின் தமக்காகவும், தமிழர்களுக்காகவும் தம்மை முழுமையாக ஒப்படைத்த தலைவர். தமிழ்நாட்டின் எல்லைகளைக் காத்து நின்ற தானைத் தலைவர். முத்தமிழ்க் காப்பிய வித்தகர். சென்னையைத் தமிழ்நாடாக்கிய செந்தமிழ் வீரர் என்று குறிப்பிட வேண்டும்.

இன மத கலப்புகளும் தமிழர் பண்பாடும்

இன சமயக் கலப்புகளால் தமிழர் பண்பாடு அழியவில்லை எனும் தமது ஆய்வை ம.பொ.சி. “இலக்கியங்களிலே இன சமயக் கலப்புகள்” எனும் நூலில் பதிவு செய்துள்ளார். இனக்கலப்பும் மதக்கலப்பும் ஏற்பட்ட சமய சகாப்தத்திலே தமிழருடைய பண்பாடு அழிந்தொழிந்து விட்டது என்று இலக்கிய ஆய்வாளர்கள் சிலரும் கருதுகின்றனர். இது முற்றிலும் தவறு. சைவ சாத்திரங்களிலே தலை சிறந்ததான திருமந்திரத்திலே, “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்கிறார் திருமூலர். இதனைச் சமயவாதிகளேயன்றி பகுத்தறிவாளரும் தங்களுடையதாக்கிக் கொண்டு விட்டார்களே என்று குறிப்பிடுகின்றார்.

தமிழ் பண்பாட்டில் கடவுள் நம்பிக்கை

ம.பொ.சியின் நோக்கில் தமிழ்ப்பண்பாடு, கடவுள் நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டதாகும். தமிழர், தமிழ், தமிழ்நாடு என்று பெயர்களைச் சொல்லி இயக்கம் நடத்துவோரில் ஒரு சாரர் பண்டையத் தமிழருக்குத் தெய்வம் கிடையாது, மதம் கிடையாது, பண்டிகை கிடையாது என்றெல்லாம் ஒரு தலையாகப் பேசியும் எழுதியும் வருவதற்கு வருத்தம் தெரிவிக்கின்றார். சமயத்தில் முற்போக்கான கொள்கைகளை வலியுறுத்துவோரை வைதீகர்களில் சிலர் “நாத்திகர்கள்” என முத்திரைக் குத்தி ஒதுக்குவது ம.பொ.சிக்கு இசைவானதன்று. ஆத்திகத்தின் பெயரால் நடத்தப்படும் சுரண்டல்களையும் ம.பொ.சி. எதிர்த்தார். ஒழுக்க சமயத்தை நிலைநாட்ட வேண்டியதின் அவசியத்தையும் ம.பொ.சி. பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

“ஆலய வழிபாடு தமிழிலேயே நடைபெற வேண்டும் எனக் கூறுவதோ, வழிபாட்டுத் தொழிலில் சாதி வேற்றுமை கூடாதென்று வற்புறுத்துவதோ நாத்திகவாதமல்ல. நாட்டில் பரவி வரும் நாத்திகத்தைத் தடுக்கவும், ஆத்திகத்தின் பெயரால் மக்களைச் சுரண்டி வாழும் கொடுமையை ஒழிக்கவும் அதுவே சரியான வழி.சிலப்பதிகார இயக்கம்

சிலப்பதிகார மாநாடுகள், சிலப்பதிகார வகுப்புகள், சிலப்பதிகாரப் பேருரைகள், ஆய்வுகள் மூலமாகச் சிலப்பதிகார இயக்கத்தை உருவாக்கியவர் ம.பொ.சி. தமிழ் இலக்கியங்கள் பற்றிய மாநாடுகள் ம.பொ.சி.யின் சிலப்பதிகார இயக்கத்திற்கு முன்பு நடைபெற்றுள்ளன. ஆனால், சிலப்பதிகாரத்திற்காக முதன்முதலில் ஒரு மாநாட்டை ம.பொ.சி தான் நடத்தினார். 24.03.1951 அன்று சென்னை இராயப்பேட்டையில் கண்ணகி பந்தலில் நடத்தப் பெற்ற இம்மாநாட்டில் டாக்டர் மு. வரதராசனார் தலைமையில் பேராசியர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார், பேரறிஞர் ரா. பி. சேதுப்பிள்ளை, டாக்டர் ந. சஞ்சீவி முதலான தமிழறிஞர்கள் பலர் பங்கேற்றனர்.

தமிழ் இலக்கியங்களில் சிலப்பதிகாரத்தைத் தேர்வு செய்து அதைப் பரப்புவதற்கு ஓர் இயக்கத்தை உருவாக்கியதற்கான காரணத்தை ம.பொ.சி. விளக்குகின்றார்.

“தமிழரசு கழகத்தின் சார்பில் காங்கிரசு பாரம்பரியத்தின் பிரதிநிதியாகவும் நின்று சிலப்பதிகாரம் காப்பியத்தை மக்கள் மத்தியிலே கொண்டுவர நான் விரும்பியதற்கு காரணம் உண்டு. திருக்குறளையோ, கம்பராமாயணத்தையோ நான் விரும்பாதவனல்ல. மனமார விரும்பக் கூடியவன். ஆயினும், இந்திய தேசிய ஒருமைப்பாட்டிற்குக் கேடில்லாத வகையில் தமிழினத்தை ஒன்றுபடுத்த நான் எடுத்துக்கொண்ட முயற்சிக்குப் பயன்படக் கூடிய இலக்கியம் தமிழில் உண்டென்றால், அது சிலப்பதிகாரம் தான் வேறில்லை”

என்று குறிப்பிடுகிறார்.

வடக்கெல்லைப் போராட்டம்

1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு பதினாறாம் தேதியன்றே தமிழரசுக்கழகம் தமிழகம் வடக்கு எல்லை மீட்சிக் கிளர்ச்சியைத் தொடங்கினார். சித்தூர் மாவட்டத்தில் திருப்பதி, திருக்காளத்தி, சித்தூர், திருத்தணி, பல்லவனேரி, கங்குந்திக்குப்பம் ஆகிய ஆறு தாலுக்காக்களையும் தமிழகத்தில் சேர்க்க வேண்டுமென்று போராடியவர் ம.பொ.சி. சித்தூர், புத்தூர், திருத்தணி ஆகிய மூன்று தாலுக்காக்களில் தான் தமிழர் மிகுதியாக வாழ்கின்றனர். அதனால், அப்பகுதியைக் கோரியதாகக் குறிப்பிடுகிறார்.

திருப்பதியை ம.பொ.சி. கேட்டதற்கான காரணம் இலக்கிய ஏடுகளிலுள்ள சான்றுகள் தமிழினத்தாருக்குச் சாதகமாக இருப்பதாலும், அவற்றை மட்டும் காட்டிக் கேட்டதையும் தன் போராட்ட வாழ்க்கையில் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் எல்லைப்பகுதிகளை மீட்க முயன்றதற்காகத் தமிழர் ஆட்சியிலேயே எட்டு முறை சிறை வைக்கப்பட்டவர் ம.பொ.சி. என்பது குறிப்பிடத்தக்கது.தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கான போராட்டம்

தமிழ்நாடு எனும் பெயர் மாற்றம் கோரி தீர்மானத்தை முதன்முதலில் நிறைவேற்றியது தமிழரசு கழகமே. 1955 ஆம் ஆண்டு நவம்பர் 29ல் தமிழரசுக் கழகத்தின் செயற்குழு கூடி தமிழ் மக்கள் வாழும் பிரதேசத்தை “மெட்ராஸ் ஸ்டேட்” என்று அழைக்கப்படுவதை எதிர்க்கின்றது. மத்திய மாநில அரசுகள் ராஜ்ஜியத்தின் பெயரைத் தமிழ்நாடு என்று பெயரிடப்பட வேண்டும் எனும் தீர்மானத்தை நிறைவேற்றியது. இப்போராட்டத்தில் ம.பொ.சி தீவிரமாக ஈடுபட்டு வெற்றியை நிலை நாட்டினார்.

சைவ சமயப்பற்று

தமிழ்நாட்டிற்கே உரிய சைவ உணர்வு அழியக்கூடாது என்று விரும்புபவர்களில் ம.பொ.சி.யும் ஒருவர். சிவம் என்பது அனாதியான ஒரு பொருள். அதனை நாம் அணுகுவதற்கு ஒரு சாதனமாகத் தான் சைவம் தோன்றியது. ஆம், சிவம் கர்த்தா, சைவம் கருவி. கருவியை கர்த்தாவாக கருதும் மயக்கம் கூடாது. சிவவழிபாடு அனாதியானது என்பதற்கு நம் தமிழில் உள்ள சங்க இலக்கியங்களே சான்று ஆகும். ம.பொ.சி. சைவம் தமிழர்களின் மதம் என்று குறிப்பிடுவது சிந்திக்கத்தக்கதாகும்.

சைவம் தமிழரிடையே தோன்றிய சமயம் என்றும், தமிழர் எல்லோரும் முன்னொரு காலத்தில் சைவர்களாக இருந்தனர் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், இன்றைய நிலைமை வேறு. பிற்காலத்தில் தமிழரிலே பலர் வேறு சமயங்களைத் தழுவிச் சைவ சமயத்திற்கு அயலாராகி விட்டனர். ஆம், தமிழகத்திலே உள்ள சமண, பௌத்த, இசுலாமிய, கிறித்துவ மக்களிலே மிகப்பெரும்பாலோர் மதம் மாறியவர்களே, மதம் மாறிய பின்னரும் அவர்களெல்லாம் தமிழினத்தவரே ஆவார்.

சைவர் என்ற சொல்லுக்கு, தமிழர் என்று பொருள் சொல்வதற்கில்லை. தமிழ்மொழியும், தமிழ் நிலமும் சைவர் அல்லாதாருக்கும் சொந்தமாகும். இனம் வேறு, மதம் வேறு. இந்த உண்மையை சைவ சமயப் பிரச்சாரங்கள் மறந்து விடக்கூடாது என்று சைவ சமயத்தைப் பற்றி விளக்குகின்றார்.

சர்வமத சமரசம்

சிலப்பதிகாரம் முதல் பாரதி இலக்கியம் வரையில் பேணப்பெற்று வந்த சர்வமத சமரசக் கோட்பாட்டைப் பற்றி ம.பொ.சி. எடுத்துரைத்துள்ளார்.

எனக்குள்ள தமிழன் என்னும் இன உணர்ச்சியும், இந்தியன் என்னும் சமுதாய உணர்ச்சியும் மதப்பூசல்களிலிருந்து என்னைக் காப்பாற்றி வருகின்றன என்று ம.பொ.சி. கூறியது சர்வமத சமரசம் பற்றி பேச அவருடைய தகுதியை உணர்த்துகிறது. சர்வமத சமரசம் என்பது சிவன், திருமால், அல்லா, கர்த்தர், அருகர், புத்தர் ஆகிய அனைத்துத் தெய்வங்களையும் ஒவ்வொருவரும் வழிபடுவது தான் சர்வமத சமரசம் என்று ம.பொ.சி கருதவில்லை. அது குழப்பத்தை ஏற்படுத்தும் என்று கூறுகின்றார். அத்தகைய குழப்பத்தால் பக்தி வளராது என்றும் மற்ற மதத்தைச் சார்ந்தவர்கள் தங்கள் தெய்வங்களைத் துதிக்கலாம். அதே சமயத்தில், பிற தெய்வங்களை மதிக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும். இப்படி துதிப்பதும், மதிப்பதுமாக இருந்தால் போதும். ஒரு மதத்தாரின் தெய்வத்தை இன்னொரு மதத்தார் பழிக்க வேண்டாம். இதுதான், சர்வமத சமரசத்திற்கு வழி என்று குறிப்பிடுகின்றார்.தமிழர் கலாச்சாரம்

தமிழர் கலாச்சாரம் என்ற தலைப்பிலே ம.பொ.சி. 31.10.1954-ல் செங்கோல் இதழில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் ஆரியமதம், வேங்கடத்திற்குத் தெற்கே தனது தனித்தன்மையை இழந்து தமிழ்ப்பண்பு வழியும், தமிழருடைய பழக்கவழக்கப் படியும், திரிந்துவிட்டதை எவரும் தெரிந்து கொள்ள முடியும். அப்படித் தமிழ் பண்பு வழி திருந்த மறுத்ததால் தான் சமணமும், பௌத்தமும், ஆரிய மதத்துக்கு எதிராகத் தமிழகத்தில் வாழ முடியவில்லை.

வேங்கடத்திற்குத் தெற்கே புகுந்த புற சமயக் கருத்துக்கள், கதைகள் எதையும் தமிழர்கள் ஏற்க மறுத்து எதிர்த்துப் போராடியதில்லை. அவற்றைத் தமிழ் வழிப்படுத்தி தங்களுக்கே உரியதாக்கிக் கொண்டனர். குறிப்பாக ஆரிய மதப்பண்புகளைக் கூறும் ராமாயணம், மகாபாரதம் போன்ற மாபெரும் காப்பியங்களைத் தமிழர்கள் விரும்பி ஏற்றனர். வெறுத்து ஒதுக்கவில்லை. ஆனால், அவற்றை மூலமொழியில் ஏற்க மறுத்து மொழி பெயர்ப்பின் வடிவில் வரவேற்று வாழ்வளித்தனர். தமிழில் மொழிபெயர்த்ததோடு நிற்காமல், அக்காப்பியங்கள் கூறும் பண்பாட்டினைத் தமிழ் வடிவிலும் திருத்தி கொண்டனர்.

சமய வேற்றுமைகளையெல்லாம் விரோதங்களாக வளர்த்து கொள்ளாமல், சர்வ சமயங்களையும் சமரசமாகப் பாவிக்கும் பெருமை தமிழருக்கே உரியது. ஆம். பண்பட்ட தமிழ் அதற்குப் பயன்பட்டது என்று ம.பொ.சி. கூறியுள்ளார்.

தமிழர் திருநாள்

“சாதி சமய கட்சி வேறுபாடின்றி தமிழினமே ஒன்றுபடு” எனும் முழக்கத்திற்குச் செயல் வடிவம் தர, பொங்கல் திருநாளைத் தமிழினத்தின் தேசியத் திருநாளாகக் கொண்டாட முதன்முதலில் ஏற்பாடு செய்தவர். 1946 ஆம் ஆண்டு ஜனவரி 14ல் சென்னை கோகலே மண்டபத்தில் முதல் தமிழர் திருநாள் கொண்டாடப்பட்டது.

கட்டபொம்மன் விழா

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து முதன்முதலில் விடுதலைப் போரைத் துவக்கி வைத்தவர், பாஞ்சாலங்குறிச்சி மன்னன் வீரபாண்டிய கட்டபொம்மன் என பிரகடனப்படுத்தி தமிழரசுக் கழகம் கட்டபொம்மன் தூக்கிலிப்பட்ட 16.10.1799ஆம் நாளை நினைவு நாளாகக் கொண்டாடும் வழக்கத்தையும், தனியாக 16.10.1944ல் சென்னை இராஜாஜி மண்டபத்தின் பின்புறத்திலுள்ள பூங்காவில் இவ்விழாவைத் துவக்கி வைத்த பெருமைக்குரியவர் ம.பொ.சி.

இளங்கோவடிகள் விழா

சிலப்பதிகார இயக்கம் எனப் பெயர் பெற்ற தமிழரசுக்கழகம் சிலப்பதிகாரத்தைப் படைத்த இளங்கோவடிகள் நினைவு நாளை ஆண்டுதோறும் சித்திரைத் திங்களில், பௌர்ணமி நாளில் கொண்டாட முதன்முதலில் ஏற்பாடு செய்தவர் ம.பொ.சி. முதல் விழா 14.04.1950ல் சென்னை செயின்ட் மேரிஸ் மண்டபத்தில் இவ்விழா கொண்டாடப்பட்டது. இதில் ம.பொ.சி., டாக்டர் மு.வ., கலைஞர், டி.கே.சண்முகம், பம்மல் சம்பந்த முதலியார் முதலானோர் கலந்து கொண்டனர். இவ்வாறு தமிழுக்காகவும், தமிழ் மொழிக்காகவும், பண்பாட்டிற்காகவும் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர் ம.பொ.சி.

தொகுப்புரை

தமிழ்மொழி, தமிழ் இனம், தமிழ்நாடு இவை மூன்றனுக்காகத் தம் வாழ்வையும், மூச்சையும் அர்ப்பணித்தவர், சிலம்புச் செல்வர் அவர்கள் ஆவார். இவர் மொழிச்சிந்தனை மிக்கவர். தமிழ்நாடு எல்லைகளை வரையறுத்தவர். தமிழருக்கான கொடியை வரைந்தவர். தமிழரசுக்கான, தமிழரசைக்காண தம் வாழ்நாளைத் தியாகம் செய்தவர், தமிழ் பண்பாட்டைக் காத்த மாவீரர் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. என்றால் அது மிகையில்லை.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p60.html


  2021
  2020
  2019
  2018
  2017

வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்

முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License