இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

தமிழ்ச்சிறுகதைகளும் உத்தி முறைகளும்

முனைவர் பெ. வைரமூர்த்தி


இலக்கியங்கள் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்குவதில் பெரும் பங்காற்றி வருகின்றன. இது சமூகத்தில் மலர்ச்சியை உருவாக்குகின்றன. இந்த இலக்கிய மாற்றத்தில் சிறுகதையின் பங்கு அளப்பரிய ஒன்றாகும். மாறிவரும் மனிதத் தேவைகளும் நேரக் குறைவுமே சிறுகதையை மானுட சமூகத்தில் கொடிகட்டிப் பறந்திடச் செய்கின்றன. இறுக்கமான சமூகச் செயல்பாடுகள் மனித மனதை நெருக்கடிக்கு உள்ளாக்குகின்றன. இதில் இருந்து விடுபட கலை இலக்கியங்கள் பெரிதும் தேவைப்படுகின்றன. மனிதனின் நேரப் பயன்பாட்டிற்கு ஏற்ப சிறுகதைகள் இன்பத்தைக் கொடுப்பதுடன் மனித சமூகத்திற்கு பல்வேறு கருத்துப் பதிவுகளைக் கொடுக்கின்றன. தமிழ் இலக்கிய உலகின் பெரும்பான்மையான இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்ற சிறுகதை எனும் இலக்கிய வகை ஆண்டுகள் பல கடந்து, தமிழ் இலக்கிய உலகில் நீடித்து நின்று பேசுகின்றன. இந்திய நாட்டில் காலனிய ஆட்சி நிலைபெற்றதன் விளைவாக ஏறபட்ட நன்மையின் பயனாக நமக்கு கிட்டிய நன்மைகளில் ஒன்று சிறுகதை இலக்கியமாகும். சிறுகதை இலக்கியம் தோன்றிட மூன்று அடிப்படைக் காரணிகளைக் கூறலாம். அறிவியல் முன்னேற்றம், அரசியல் மாற்றம், பொருளாதார ஏற்றமும் நவீன இலக்கிய அறிமுகமுமேயாகும். கவிதை இலக்கியத்தின் வளர்ச்சி நாவல் இலக்கியம் அதன் வளர்ச்சி சிறுகதை இலக்கியமாகும். சிறுகதை இலக்கியம் மகாகவி காலத்தில் தொடங்கியது. அச்சு இயந்திர அறிமுக காலத்திற்கு முன் வாய்மொழிக் கதைகளான மதன காமராஜன் கதை, ஈசாப் நீதிக்கதைகள், பதுமைக்கதை போன்றவை இவைகள் சிறுகதை இலக்கியம் தோன்றுவதற்கு களமாக இருந்தன.

சிறுகதை வளர்ச்சியில் இதழ்கள்

சிறுகதை இலக்கிய வளர்ச்சியில் இதழ்களின் பங்கு முக்கியமாகும். சிறுகதை இலக்கியம் தோற்றத்திற்கான களத்தினை இதழ்கள் உருவாக்கின. காகிதம் அச்சு இயந்திரங்கள் தோன்றி வளர்ந்ததற்கு ஏற்ப இதழ்கள் தோன்றின. இந்த இதழ்கள் யாவும் சிறுகதை இலக்கியத்தை வளர்த்தெடுத்தன. இதழ்கள் தொடக்கத்தில் சிறுகதை போன்ற அமைப்புடைய கதைகளை வெளியிட்டது. பின்னர், விநோதரச மஞ்சரி, விவேக சிந்தாமணி, விவேக போதினி போன்ற இதழ்கள் சிறுகதை எழுதும் முயற்சியை படிப்பாளர் சமூகத்தில் வளர்த்தது. மேலும் இந்த இதழ்கள் சிறுகதையினை அரசியல் மற்றும் சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்பும் களமாகவும் கொண்டது. இதன் பிறகு மணிக்கொடி இதழ்கள் சிறுகதை இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றின. சிறுகதை மூலம் மக்களின் எல்லா வாழ்வியல் தளங்களையும் தொட்டிட முடியும் என்பதனை மணிக்கொடி காலத்தின் எழுத்தாளர்கள் தங்களின் கதைகள் மூலமாக நிரூபணம் செய்தார்கள். வ.வே.சு. ஐயரின் மங்கையர்கரசியின் காதல், மாதவையாவின் குசிகர் குட்டிக்கதைகள் போன்றவை சிறுகதையின் வளர்ச்சிப்பாதையின் மைல்கல்லாக விளங்கின.உத்திகள்

சிறுகதைகள் மக்களிடையே சமூகக் கருத்துகளைத் தொடர்ந்து மனதில் விதைப்பதுடன் நீண்ட காலத்தினை கடந்து நிலைத்து நிற்பதற்கு காரணமாக இருப்பது உத்தி முறைகளேயாகும். படைப்பாளர்கள் மக்களின் மனதினை அறிந்து தங்களின் பதிவுகளை மக்களின் மனதில் நுட்பமான வகையில் கொண்டு செலுத்தினார்கள். சிறுகதைகள் மூலம் படைப்பாளர்கள் உலகளாவிய சிந்தனையை வெளிப்படுத்தினார். சிறுகதை இலக்கியத் தோற்றத்திற்கு காலணி ஆதிக்கம் காரணம் என்றாலும் சிறுகதைகளின் பல்வேறு நுட்பங்களை தமிழ்ப் படைப்பாளர்கள் காலச் சூழலுக்கு ஏற்பவும் மக்களின் மனத் தன்மைக்கு ஏற்பவும் படைத்து வெளிப்படுத்தினார்கள். சிறுகதை இலக்கிய வாசகர்கள் படைப்பாளர்கள் வெளிப்படுத்தும் சிறுகதை உத்திகளை நன்கு அனுபவித்து மகிழ்ந்தார்கள். இதனால் படைப்பாளர்கள் நாளும் பல புதிய உத்திகள் மூலம் கதைகளை கூறினார்கள். உத்தி முறைகளே பல நிலைகளில் சிறுகதைப் படைப்பாளர்கள் பிரபலமாக ஆகுவதற்குக் காரணமாக ஆகின. சிறுகதையில் மையக்கரு மானுட சமூகத்தில் இருந்து பெறப்பட்டாலும் சிறுகதையை படைப்பாளர் சொல்லும் உத்தி முறைகளின் மூலமாக சிறுகதை இலக்கியம் வளர்ந்த வண்ணமாய் இருக்கிறது.

வர்க்க முரண்கள்

மனிதன் தனது வாழ்க்கையைத் தேடிக் கிராமச் சூழலில் இருந்து நகர்ப்புறத்துக்கு வருகிறான். உழைப்பு அவனுக்கு பழக்கப்பட்ட ஒன்று என்றாலும் நகர்ப்புறத்து சூழ்ச்சி புதியதாகவே அமைகிறது. வேலைப்பளு குறைந்தாலும் உழைப்புக்கு ஏற்ப ஊதியம் கிடைக்காமல் உழைப்பாளி வாழ்க்கை முழுவதும் உழைத்தே தனது வாழ்வைக் கரைத்துக் கொள்ளக்கூடிய கொடுமையான நிலை அமைகிறது. ஏழை உழைப்பாளி தொடர்ந்து ஏழையாகவும், ஏமாற்றிப் பிழைக்கும் முதலாளி வாழ்வு ஏற்றம் கண்டு அமைவதையும் சிறுகதைகளின் மூலம் படைப்பாளர்கள் உழைக்கும் வர்க்கம், முதலாளி வர்க்கம் என்னும் வர்க்க முரண்களை சுட்டி இருக்கிறது. ஆடம்பர மோகம், பதவி வெறி, நிலையற்ற அரசியல், சுயநலத்திற்காக எதையும் செய்யும் போக்கு போன்றவை வர்க்க முரண்களின் நிகழ்வுகளாக சிறுகதைகளில் சுட்டப்படுகின்றன. இவை மட்டுமன்றி மனித நேயம் வறண்டு போகின்ற சூழல், இத்தகைய சூழலையும் கடந்து மனித நேயம் துளிர்ப்பது நகர்ப்புற மக்களின் வாழ்வியல் தேடல்கள் மற்றும் பற்றாக்குறையால் விளையும் அவலங்கள் போன்றவைகளை சிறுகதையின் உத்திகளாக வெளிப்படுத்தி இருக்கும் விந்தன் தொடங்கி ஜெயகாந்தன், ஆதவன், வண்ணதாசன், வண்ணநிலவன், அம்பை முதலான சிறுகதைப் படைப்பாளர்கள் மூலம் அறிய முடிகிறது. மனிதனின் தேடல் சம்பந்தமான சிக்கல்களைக் காட்டுவது போலவே வர்க்க முரண்களை சிறுகதையில் படைப்பாளர்கள் படைத்துக் காட்டினார்கள்.பன்முகப் பார்வை

மனதுடன் பேசக்கூடிய மனிதன் இல்லாத உலகம் இல்லை. இருவர் இருக்கும்போது நிகழும் உரையாடல் போல மனிதன் இரவு, பகல் எல்லா நேரங்களிலும், வேலையுள்ள சூழல், வேலையற்ற சூழல் என எவ்விடத்தும் தனது அகமனதுடன் பேசிக்கொண்டே அமைகிறான். மனிதன் தான் செய்யக்கூடிய ஒவ்வொரு செயலின் போது அவனை சுயபரிசோதனை செய்து கொள்வதற்கு உள்முகப்பார்வை அமைகிறது. இத்தகைய நிலையினை சிறுகதைப் படைப்பாளர்கள் உத்தி முறையில் பயன்படுத்தி பாத்திரங்களின் ஆழ்மனப் பதிவினை உள்முகபார்வையாக நோக்கி, கருத்துப் பதிவினை ஏற்படுத்துவதுடன் ஒரு பாத்திரத்தின் செயல்பாட்டிற்கான அடிப்படைக் காரணம் என்ன என்பதனைக் காணமுடிகிறது. பொதுவாக எதார்த்த உலகில் மனிதன் ஒவ்வொருவரின் மனதினை அறிந்து கொள்வதற்கு முயல்வது இயற்கையாகும். இத்தகைய சூழலை சிறுகதைப் படைப்பாளர்கள் தங்களின் கதையின் உத்தியாகப் பயன்படுத்தி இருப்பது மிகவும் ரசிக்கத்தக்க வகையில் அமைவதுடன் படைப்பாளன் மன உணர்வை வாசகர்களை எளிதில் பெறச் செய்ய முடிகிறது. இந்திரா பார்த்தசாரதியின் நாசகாரக் கும்பல், உச்சி வெயில் மற்றம் நீல பத்மநாபனின் கதைகள் போன்றவை உள்முகப் பார்வை என்பது கற்றவர், கல்லாதவர், கிராமம் மற்றும் நகர்ப்புற மக்கள் என எல்லாத் தளத்தினையும் சேர்ந்ததாக அமையும் உத்தியினை விளக்குவதாக அமைவதைக் காணமுடிகிறது.

எதிர்ப்புக் குரல்

நகர்ப்புறத்து வாழ்க்கை மனிதனுக்கு பல புதுமையான இன்னல்களை ஏற்படுத்துகின்றன. இதனைப் பல படைப்பாளிகள் தங்களது படைப்பின் மூலம் வெளிப்படுத்தி இருக்கின்றனர். மனிதன் அவன் வாழ்கின்ற சாதாரணச் சூழல்கள் மற்றும் அந்தச் சூழல்களில் மனித மனம் எவ்விதம் ஒடுங்கிப் போகின்றது என்பதனையும், அதே வேளையில் தனக்கு நிகழ்கின்ற துன்பத்திற்குக் காரணமானச் சூழலினை எதிர்த்து குரல் எழுப்புகின்ற போக்கு காணப்படுகின்றது. இதில் சிறுகதை ஆசிரியர் தான் கதையைக் கூறாது விலகி நின்று கதையை நடத்தும் போக்கும் காணமுடிகிறது. கி.ராஜநாராயணனின் கதைகளில் கிராமத்து விவசாயிகள் படுகின்ற இன்னல்களும், பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம், மக்கள் தொகைப்பெருக்கம் பெருகி வரும் அறிவியல் முன்னேற்றம் போன்றவை மனித வாழ்வில் பல்வேறு அழுத்தமான சிக்கல்களை ஏற்படுத்தி இருந்தன. இதனை கிருஷ்ணன் நம்பி, ராஜநாராயணன், நீல பத்மநாபன், சா. கந்தசாமி, இந்திரா பார்த்தசாரதி ஈழத்து எழுத்தாளர் தளையசிங்கம், ஜெயகாந்தன் போன்றோர் சமூகத்தில் விமரிசனத்துக்குரிய அனைத்துக் கூறுகளையும் தமது கதைகளில் கருவாக்கி எதிர்ப்புக் குரல் எழுப்பி உள்ளதைப் பார்க்கலாம்.கதைக்கரு மாற்று

உருவ அடிப்படையில் பல மாற்றங்களை நிகழ்த்திய சிறுகதைப் படைப்பாளர்கள், அடுத்த கட்டமாக உள்ளடக்க மாற்றத்தில் ஈடுபட்டார்கள். இதன் வாயிலாகச் சமூகக் கேடுகளை விமரிசித்தல், ஆழமான மனித நேய உணர்வு, மூடத்தனமான சமூக அமைப்புகளை கேலி செய்தல், ஒழுக்கம் பற்றிய போலித்தனமான நடைமுறைகள், மனித உறவுகளில் அமையும் விரிசல்கள் ஆகிய நவீன கதைக்கருக்களை வைத்துச் சிறுகதையில் சமூக மதிப்பீடுகள், விதிமுறைகள் உடையும் வகையில் சிறுகதைப் பாத்திரங்கள் வாயிலாகவோ கதை கூறும் ஆசிரியரோ போலித்தன்மைகளை விமரிசனம் செய்தும், மனித நேயம் புரட்சியான சிந்தனை தோன்றும் வகையில் உத்திகளை அமைத்தனர். சிறுகதையில் கதைக்கரு மாற்றம் சமூக விமரிசனம் என்பதனை ஏற்படுத்தியவர்கள் தி. ஜானகிராமன், மு. அழகிரிசாமி, மீ. ப. சோமசுந்தரம், தொ. மு. சி. ரகுநாதன் ஆகியோர் ஆவார். ரகுநாதனின் ஆனைத்தீ என்னும் கதையில் சமூக நிறுவனமான சமயம் ஏற்படுத்திடும் போலியான கட்டமைப்புகள் அதனுடன் தொடர்புடைய மனிதர்கள் செய்யும் மூட நடவடிக்கைகளை கேலி செய்திடும் வகையில் அமைவது சிறுகதைக் கருவில் யதார்த்த வாதம் மற்றும் விமரிசன யதார்த்தவாதம் போன்ற நவீன தனங்கள் பங்கேற்றுள்ளதைக் காட்டுகிறது. இதனைத் தொடர்ந்து கலையானது மனித நலனை மேம்படுத்திட பயன்பட வேண்டும் என்றொரு பிரிவும், எழுத்தும் அழகு, அதன் விளைவும் அழகு என்றொரு வாதமும் சிறுகதை கருப்போக்கில் மாற்றத்தினை ஏற்படுத்தியது. இது போன்று நவீன சிறுகதைத் தளங்களில் சிறுகதையை வாசகர்கள் மகிழ்வுடன் வாசித்தது சிறுகதை இலக்கிய வளர்ச்சியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.

அங்கதம்

சிறுகதைப் படைப்பில் மற்றொரு உத்தியாக அமைவது அங்கதம் என்பதாகும். வாழ்வியல் உண்மைகளை நகைச்சுவையுடன் மனதில் பதியும் வண்ணம் ஏற்றிக் கூறுவதாகும். இதில் ம. வே. சிவக்குமார், கோபிக்கிருஷ்ணன், மாலன் போன்றவரின் கதைகளைக் கூறலாம். இதில் ஒரு படைப்பாளன் தனது பயனற்ற பொழுதை வாழ்வின் இன்றைய காலச் சூழலுக்கு ஏற்ப ஒரு உணவு விடுதி நடத்தி முன்னேறும் வண்ணம் கூறுவார். இதன் மூலம் படைப்பாளன் வாழ்வு இந்த சமூகத்தில் நகைப்புக்கு உரியதாகவே சித்தரிக்கப்படுகிறது என்பதனை கவசம் என்ற சிறுகதையில் மாலன் கூறுகிறார். இதே போன்று ம. வே. சிவக்குமார் மனித மனத்தின் மூலை முடுக்குகளில் ஒளிந்து புதைந்து மக்கிக் கிடக்கின்ற பல நுட்பமான உணர்வுகள் எண்ணங்கள் வக்கிரங்கள் ஆகியவற்றை அங்கதச் சூழலில் வெளிப்படுத்தி கதையை வடித்து கூறியுள்ளார். சமூகத்தில் நடைபெறும் யதார்த்தமான நடைமுறைகள் படைப்பாளன் பார்வையில் அங்கத்துடன் எடுத்துக் கூறப்பட்டு வாசகன் மனதில் பதியப்படுகிறது. படைப்பாளன் இந்த சமூகத்தில் தான் பெற்ற உணர்வுகளை மெருகேற்றி நவீன வகையில் வெளிப்படுத்துவதற்கு சிறுகதைக் களத்தில் அமைந்துள்ள இத்தகைய முயற்சிகள் சான்றாக அமைகிறது.


சமூக விமரிசனம்

ஒரு கருத்தினை வெளிப்படுத்திடும் நிலையை இருவகையில் சிறுகதைப் படைப்பாளர்கள் பின்பற்றி வருகின்றனர். ஒன்று தமது கருத்தினை மிகுந்து வலிந்து உரைப்பது மற்றொன்று சொல்ல வேண்டிய கருத்தினை மிகவும் மென்மையாக உரைப்பது என்பதாகும். இந்த இரண்டு நிலையில் செய்தி வாசகன் மனதில் பதிவினை ஏற்படுத்திட வேண்டும் என்ற நோக்கினைக் கொண்டு விளங்குவதாகும். எந்திரத்தனமான வாழ்வின் காரணமாக மனிதன் ஓயாத உழைத்தும் ஓடிக்கொண்டே இருக்கிறான். இதனால் ஒரு கட்டத்தில் அழுத்தமாக பின்பற்றி வந்த மதம், கடவுள் போன்ற சமூக நிறுவனங்கள் ஓரளவு மேம்போக்காக பின்பற்றப்படுகிறது. பாலகுமாரன், பிரபஞ்சன் போன்றோர் சமூகத்தின் முற்போக்கான விசயங்கள் மற்றும் காதல் போன்றவைகளை கதைக்களமாக வைத்துக் கொண்டு சமூக விமர்சனங்களை கூறியிருப்பதைக் காணலாம். மேலும் ஜனரஞ்சக இதழ்களின் பெருக்கமும், தங்களின் வாசகர்கள் நன்மைக்கு ஏற்ப கதைத் தளத்தினை படைப்பாளர்கள் படைத்திடும் வகையில் அமைகிறது. மேலும் சமூக நிறுவனங்களை இதழ்கள் தங்களின் வாசகர் கொள்கை நிலைக்கு ஏற்ப விமரிசனம் செய்திடும் பணியினை மேற்கொள்வது சிறுகதை நவீன கால வளர்ச்சிப் போக்கிற்கும் உத்திநிலை மாற்றத்திற்கும் காரணமாய் அமைகின்றன. இது மட்டுமின்றி இலக்கிய நிறுவனங்கள் சிறுகதைப் படைப்புகளை வெளியிடும் கொள்கைகளைக் கொண்டும் உத்தி நிலை மாற்றங்கள் ஏற்பட்டு இருந்தது.

சிறுகதை வளர்ச்சியில் உத்திகள்

கதைத்தளம் மாறாமல் ஒரே நிலையில் இருந்தாலும், அதன் உத்தி முறைகள் மாறிக்கொண்டே இருத்தல் வேண்டும். வாசகனுக்குப் புதிய உத்தி முறைகளின் மூலமாகக் கதையைச் சொல்வதன் வாயிலாக மனச்சோர்வு இல்லாது கதையை வாசிக்கக் கூடிய நிலையினை அடைகிறான். கதைக்கரு என்பது இந்த சமூகத்தில் கிடைக்கக் கூடிய ஒன்றாகும். கதைக்கருவினை படைப்பாளனும் சந்திப்பான், வாசகனும் சந்தித்திருப்பான். ஆனால் அதனைச் சொல்லும் முறையில் படைப்பாளன் புகுத்தும் உத்தியின் வாயிலாக கதைக்கு ஒரு புது வடிவத்தினைக் கொடுக்கிறான். நவீன உத்திகள் வாசகனுக்கு மட்டுமல்லாது, சிறுகதைப் படைப்புலகிற்கு நவீன வரவினைத் தருகின்ற வகையில் அமைகிறது. சிறுகதைக்கு உத்திகள் நவீனத் தன்மையைத் தருகின்றன. சமூகத்தில் பெறப்பட்ட கதைத்தளம் உத்திகள் மூலமாக தனது வடிவத்தினை வாசக உலகிற்கு புதிய வடிவில் தரப்படுவதால் சிறுகதை இலக்கியம் வளர்ச்சி பெறுகிறது என்பதில் ஐயம் இல்லை.


தீர்வுகள்

 • கதைக் கருவினை உத்திகள் புதிய தளத்திற்கு இட்டுச் செல்வதாய் அமைகிறது.

 • நவீன உத்திகள் படைப்பாளனுக்கு தமது கதையை சிறுகதை உலகிற்கு சொல்லும் வகையினை மாற்றுகிறது.

 • வாசகனிடையே ஒரே விதமான கதைப்போக்கு நுகர்வில் இருந்து விடுதலையை கொடுக்கும் வகையில் உத்திகள் நிலவுகிறது.

 • நவீன உத்தி முறைகள் சிறுகதையை மட்டுமன்றி படைப்பாளனையும் காலத்திற்கு ஏற்ப போக்குடையவனாய் மாற்றுகிறது.

 • நவீன வாழ்வியல் சூழலுக்கு ஏற்ப மாறுபடும் சிக்கலான உணர்வுகளை சிறுகதையில் உத்திமுறைகள் வெளிப்படுத்துகிறது.

 • *****


  இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

  இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p65.html
  

    2024
    2023
    2022
    2021
    2020
    2019
    2018
    2017


  வலையொளிப் பதிவுகள்
    பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

    எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

    சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

    கௌரவர்கள் யார்? யார்?

    தமிழ் ஆண்டுப் பெயர்கள்

    பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

    வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

    பண்டைய படைப் பெயர்கள்

    ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

    மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

    மரம் என்பதன் பொருள் என்ன?

    நீதி சதகம் கூறும் நீதிகள்

    மூன்று மரங்களின் விருப்பங்கள்

    மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

    மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

    யானை - சில சுவையான தகவல்கள்

    ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

    புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

    நான்கு வகை மனிதர்கள்

    தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

    மாபாவியோர் வாழும் மதுரை

    கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

    தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

    குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

    மூன்று வகை மனிதர்கள்

    உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


  சிறப்புப் பகுதிகள்

  முதன்மைப் படைப்பாளர்கள்

  வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


  சிரிக்க சிரிக்க
    எரிப்பதா? புதைப்பதா?
    அறிவை வைக்க மறந்துட்டானே...!
    செத்தும் செலவு வைப்பாள் காதலி!
    வீரப்பலகாரம் தெரியுமா?
    உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
    இலையுதிர் காலம் வராது!
    கண்ணதாசனின் நகைச்சுவைகள்
    குறைச்சுத்தான் எடை போடறாரு...!
    அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
    குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
    இடத்தைக் காலி பண்ணுங்க...!
    சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
    மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
    மாபாவியோர் வாழும் மதுரை
    இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
    ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
    அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
    ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
    கவிஞரை விடக் கலைஞர்?
    பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
    கடைசியாகக் கிடைத்த தகவல்!
    மூன்றாம் தர ஆட்சி
    பெயர்தான் கெட்டுப் போகிறது!
    தபால்காரர் வேலை!
    எலிக்கு ஊசி போட்டாச்சா?
    சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
    சம அளவு என்றால்...?
    குறள் யாருக்காக...?
    எலி திருமணம் செய்து கொண்டால்?
    யாருக்கு உங்க ஓட்டு?
    வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
    கடவுளுக்குப் புரியவில்லை...?
    முதலாளி... மூளையிருக்கா...?
    மூன்று வரங்கள்
    கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
    நான் வழக்கறிஞர்
    பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
    பொழைக்கத் தெரிஞ்சவன்
    காதல்... மொழிகள்
  குட்டிக்கதைகள்
    எல்லாம் நன்மைக்கே...!
    மனிதர்களது தகுதி அறிய...
    உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
    இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
    அழுது புலம்பி என்ன பயன்?
    புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
    கடவுளைக் காண உதவும் கண்ணாடி
    தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
    உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
    ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
    அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
    கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
    எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
    சிங்கத்திற்கு வாழைப்பழம்!
    வலை வீசிப் பிடித்த வேலை
    சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
    இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
    கல்லெறிந்தவனுக்கு பழமா?
    சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
    வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
    ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
    அக்காவை மணந்த ஏழை?
    சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
    இராமன் சாப்பாட்டு இராமனா?
    சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
    புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
    பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
    தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
    கழுதையின் புத்திசாலித்தனம்
    விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
    தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
    சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
    திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
    புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
    இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
    ஆணவத்தால் வந்த அழிவு!
    சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
    சொர்க்க வாசல் திறக்குமா...?
    வழுக்கைத் தலைக்கு மருந்து
    மனைவிக்குப் பயப்படாதவர்
    சிங்கக்கறி வேண்டுமா...?
    வேட்டைநாயின் வருத்தம்
    மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
    கோவணத்திற்காக ஓடிய சீடன்
    கடவுள் ரசித்த கதை
    புத்தர் மௌனமாக இருக்கலாமா?
    குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
    சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
    தேங்காய் சிதறுகாயான கதை
    அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
    அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
    கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
    சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
    அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
    விமானத்தில் பறந்த கஞ்சன்
    நாய்களுக்கு அனுமதி இல்லை
    வடைக்கடைப் பொருளாதாரம்
  ஆன்மிகம் - இந்து சமயம்
    ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
    தானம் செய்வதால் வரும் பலன்கள்
    முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
    பிரதோஷம் எப்படி விஷேசமானது?
    விநாயகர் சில சுவையான தகவல்கள்
    சிவராத்திரி விஷேசமானது ஏன்?
    முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
    தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
    கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
    எப்படி வந்தது தீபாவளி?
    தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
    ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
    ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
    அனுமனுக்கு வடை மாலை ஏன்?
    திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
    விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
    கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
    சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
    முருகா என்றால் என்ன கிடைக்கும்?
    குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
    விபூதியின் தத்துவம்
    கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
    தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
    கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
    இறைவன் ஆடிய நடனங்கள்
    யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
    செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
    கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
    விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
    இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
    நவராத்திரி பூஜை ஏன்?
    வேள்விகளும் பலன்களும்
    காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
    பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
    அம்பலப்புழா பால் பாயாசம்
    துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
    சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
    ஈசன் உபதேசித்தத் தலங்கள்
    பரமபதம் விளையாட்டு ஏன்?
    வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
    பதின்மூன்று வகை சாபங்கள்
    இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
    சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
    பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
    சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
    உணவு வழித் தோசங்கள்
    திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
    மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
    பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
    நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
    சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
    மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
    இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
    பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
    கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
    அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
    தீர்க்க சுமங்கலி பவா


  தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                       


  இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
  Creative Commons License
  This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License