இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

சித்தர் பாடல்களில் ஆளுமைப் பரிமாணங்கள்

முனைவா் ஜா. பெஞ்சமின் ஆரோன் டைட்டஸ்


கண்கவரும் கண்காட்சியிலும், பொருள்காட்சியிலும் மனதைப் பறிகொடுக்கும் வண்ணம் தோரணங்கள், இராட்டிணங்கள் பலவித அங்காடிகள் மனதை மகிழ்விக்கக்கூடிய பதிவுகளாக உலா வருவதுண்டு. கலைடாஸ்கோப் என்னும் கருவி போல் நம் வாழ்க்கையும் பல்வேறு பரிமாணங்களைப் பிரதிபலிக்கின்றன. கணியன் பூங்குன்றனாரின் 'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்பதற்கிணங்க அல்லதைத் தவிர்த்து நல்லதை அதிகப்படுத்தும் பரிமாணங்களாம் ஆளுமைகளால், ஒவ்வொரு மனிதனின் உயர்வும் உச்சத்திற்குச் செல்கின்றன. பரிமாணம் என்பது அளவையும் பரிணாமம் என்பது வேறுபாட்டையும் குறித்து வருகின்றது. டார்வினின் பரிணாமக் கொள்கையோ, குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்ற உயிரின் வளர்ச்சி அளவைக் குறிப்பிடுகிறது. அக்கொள்கையிலிருந்து வேறுபட்டு முழுமையான மனிதத்தன்மையுடன் மனிதனானவன் செயல்புரிந்து வந்தாலும் சில நேரங்களில் கீழ்மையான செயல்களினால் விலங்கைக் காட்டிலும் தரம் தாழும் கீழான எண்ணத்தைப் பெறப்போகும் அவல நிலைக்கு மனிதன் தள்ளப்படுகின்றான். மனிதனை அலைக்கழிக்கும் அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு சித்தர்கள் சில அளவுகோல்களை விட்டுச் சென்றிருக்கின்றனர்.

ஆளுமை என்பதற்கு ஆளும் தன்மை என்று பொருளாகிறது. ஆளுதல் என்பதற்கு “உடையவராதல்” எனக் கழகத்தமிழ் அகராதி விளக்கம் தருகின்றது. ஆளுமை என்பதற்கு ஒரு மனிதனின் தனிப்பட்ட குணத்தொகுப்பே எனக் க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி கூறுகின்றது. மனிதனின் குணத்தொகுப்பில் முரட்டுத்தனமும் மூர்க்கச்செயலும் இடம்பெறுவதுண்டு. அவைகள் மறை ஆளுமைகள் எனப்படுகிறது. அது எதிர்மறையான விளைவை மட்டுமே தரக்கூடியதாக அமைகின்றது. மாறாக, வாழ்வின் வளர்ச்சிக்கும் பேருதவிப் புரியக்கூடிய நோ் ஆளுமையை சித்தர்களின் பாடல்கள் வழிக் காண்போம்.

மாய வித்தைகளான எண்வகைச் சித்துக்களைத் தவறாகப் பயன்படுத்தாது மக்களினம் செழிக்க ஆக்கப்பூர்வமானச் சிந்தனைகளை உதிர்த்த சித்தர்கள் தமது பாடல்களில் உடல், எண்ணம், செயல் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த ஆளுமைப் பண்புகளை தெளிவுறுத்துகின்றனர். ஏன் எதற்கு எப்படி என்ற அறிவியல் பூர்வமானச் சிந்தனைகளின் அடித்தளமாக அமைந்துள்ள சித்தர்களின் பாடல்கள் மனிதனை மகத்துவமாக்குகிறது.



உடல் அளவிலான ஆளுமை

மனிதனின் அடிப்படை உரிமைகளாக உணவு, உடை, இருப்பிடம், கல்வி திகழ்கின்றது. அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒவ்வொரு மனிதனும் அங்குமிங்கும் அலைந்து திரிந்து தேய்ந்து போகின்றான். பட்டுக்கோட்டையாரின் ஆளும் வளரனும் என்ற பாடலுக்கேற்ப உடல் அளவில் ஒவ்வொரு மனிதனும் உறுதியாகத் திகழ வேண்டும். உடலினை உறுதிப்படுத்த பல வகைகளில் மனிதன் முயன்றாலும் கீழான எண்ணங்களால் ஏற்படும் தவறான செய்கைகளினால் மனிதன் தடுமாற்றம் அடைகின்றான். தடுமாற்றம் காணாமல், பரந்து விரிந்த பூமிதனில் இறைவன் எங்கும் நிறைவாக நிறைந்திருக்க குறைவு எனக்கெப்படி வரும் என்ற மந்திரச்சொல்லை நாள்தோறும் சொல்லிய வண்ணம் உழைப்பை உரமாக்கி உழுது வந்தால் வாழ்நாள் முழுவதும் வெற்றியே எனப் பட்டினத்தார் கூறுகிறார்.

“உடுக்கக் கவிக்கக் குளிர்க்காற்று வெய்யில் ஒடுங்கி வந்தால்
தடுக்கப் பழையவொரு வேட்டியுண்டு, சகம் முழுதும்
படுக்கப் புறந்திண்ணை எங்கெங்கும் உண்டு, பசித்து வந்தால்
கொடுக்கச் சிவனுண்டு நெஞ்சே! நமக்குக் குறைவில்லையே” (பட்டினத்தார்)

உடல் மீது ஆசை வைத்து அதற்காக அழகுநிலையம் மருத்துவச்சிகிச்சை என உடலை அழகுப்படுத்துவதில் பணத்தையும் நேரத்தையும் வீணாக அழிப்பதோடு இன்னல்களையும் ஒவ்வாமைகளையும் கொண்டு வருகிறோம். நிலைமையைச் சீர்செய்ய ஒவ்வொரு மனிதனும் மாயைத் தன்மை கொண்டதான உடலைப்பற்றி அக்கறையுடன் சிந்திக்க வேண்டும் என அழைப்பு விடுக்கிறார்.

“வாய் நாறும் ஊழல் மயிர்ச்சிக்கு நாறிடும் மையிடும்கண்
பீ நாறும் அங்கம் பிணவெடி நாறும் பெருங்குழிவாய்ச்
சீ நாறும் ..... ..... ..... ..... .....
..... ..... ..... ..... ..... இங்ஙனே மனம் பற்றியதே?” (பட்டினத்தார்)

உடலின் தன்மை நிலையானது அல்ல; அழியக்கூடியது; மாயையானது என்பதைப் புரிந்து கொண்டு உடலை விட்டுவிட்டு உள்ளம் பண்படும் நிகழ்ச்சிகளுக்காக ஒவ்வொரு மனிதனும் தன்னை அர்ப்பணிக்க வேண்டும். குவலயத்தை ஒளி வௌ்ளத்தால் மிதக்கச் செய்தாலும் பகலவனுக்கு மறைவு என்ற நிகழ்வு ஒன்றுண்டு. அதேபோல் இளங்கன்றும் முதுமை பெற்று மறைந்து போவது இயல்பு. மறைவும் முதுமையும் தரும் உண்மையை நன்குத் தெரிந்திருந்தும் உண்மையில்லாததும் அழியக்கூடியதான உடலுக்காகப் போராட்டம் ஏன் புரிய வேண்டும் எனத் திருமூலா் கேட்கிறார்.

“கிழக்கு எழுந்தோடாய் ஞாயிறு மேற்கே
விழக்கண்டும் தேறார் விழி இலா மாந்தர்
குழக்கன்று முத்து எருதாய்ச் சிலநாளில்
விழக்கண்டும் தேறார் வியன் உலகோரே” (திருமூலா்)

மூச்சுக்காற்றின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்ட மனிதன் மூச்சை அடக்கி தியானம் புரிந்து தன்னுடைய ஆயுள் காலத்தை அதிகரித்துக் கொள்கின்றான். யோகா என்ற பெயரால் மனிதன் செய்யும் பயிற்சியைச் சில நூறு ஆண்டுகளுக்கு முன்னரே சித்தா்கள் அழகாகச் சொல்லிச் சென்றுள்ளனா்.

“புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்பட உள்ளே நின்மலம் ஆக்கி
உறுப்புச் சிவக்கும் உரோமம் கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே” (திருமூலா்)

உடலற்ற உயிரால் எதையும் சாதிக்கவோ இறைச்சிந்தனையில் மூழ்கித் திளைக்கவோ இயலாது. உயிருக்கு வடிவம் தரும் உடலைக் காப்பாற்றிக் கொள்ள ஒவ்வொருவரும் முனைய வேண்டும் எனத் திருமூலா் கூறினார். அழிவுக்குக் கொண்டு செல்லும் வாய்க்காலாக உடம்பு இருக்கும் பட்சத்தில் அத்தகு உடலை முன்னிலைப்படுத்தாமல் அதன் மீது கொண்டுள்ள ஆசையை விட வேண்டும் என சித்தா் கூறுகின்றார்.

“உடம்பார்அழியில் உயிரார் அழிவா்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளா்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளா்த்தேன் உயிர் வளா்த்தேனே” (திருமூலா்)

“ஈரைந்து மாதமாய் வைத்த ஆளை
அருமையாய் இருப்பினும் அந்தச்சூளை
அரைக்காசுக்கு ஆகாதென்று ஆடுபாம்பே” (பாம்பாட்டிச்சித்தா்)



எண்ண அளவிலான ஆளுமைகள்

“மனப்பூட்டும் சிந்தைக் கதவும்
துறந்திடும் வகையறிந்து ஆடு பாம்பே” (பாம்பாட்டிச்சித்தா்)

இலக்கு இல்லா மனிதனும் திக்குத் தெரியாதப் பயணமும் எல்லை போய் சோ்வதில்லை. இலக்கு தெளிவாக வேண்டுமெனில் மனிதனிடம் எண்ணமானது நல்லனவாகவும் செம்மையுடையதாகவும் இருக்க வேண்டும். எப்போதும் சுற்றித்திரிந்து கொண்டே இருக்கும் மனதைப் பூட்டி வைக்க வேண்டும். அலைபாய்கின்ற எண்ணத்தை மனம் என்னும் கூட்டினுள் அடைத்து வைக்கும் போது ஏற்படுகின்ற நலம் பெறும் எண்ணமே மனிதனை ஆளுமையின் உச்சிக்குக் கொண்டு செல்லும்.

உண்மை உள்ளவராக ஒருவா் நடந்து கொண்டால் வாழ்வில் பலவித நன்மைகளைப் பெறலாம். சக்தி வாய்ந்த உண்மையை உள்ளத்திலிருந்தே தொடங்க வேண்டும். உண்மை மட்டுமே மனம் என்னும் பூட்டைத் திறக்கும் மந்திரமாக அமைகிறது என்ற கருத்தை வாலைசாமி சித்தர் கூறுகிறார்.

“பூட்டைத் திறப்பதுங்கையாலே மனப்
பூட்டைத் திறப்பது மெய்யாலே!” (வாலைசாமி)

மனமது செம்மையானால் அதில் உருவாகும் எண்ண அலைகள் மேன்மை பெறும்; வாழ்வின் வனப்பை அதிகரித்து உயா்மதிப்பைப் பெற வைக்கும் வல்லமை வாய்ந்தாகும். எவ்வித மந்திரமும் தேவையில்லாமல் மனதை மட்டும் நோ்வழியில் செவ்விதமாக நடத்தி வந்தோமானால் எதையும் சாதிக்க முடியும் என சித்தர் கூறுகிறார்.

“மனமது செம்மை யானால் மந்திரஞ் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை வுயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரஞ் செம்மையாமே” (அகத்தியர்)

சிறிது நேரமே நீடிப்பதும் மறைந்து போகும் தன்மை கொண்ட வானவில் போல செல்வமும் அழிந்து போகும் தன்மையுடையன. எனவே செல்வத்தைப் பிறருக்குக் கொடுக்கும் எண்ணத்தை வளர்த்துக் கொண்டால் ஆளுமை என்னும் பீடத்தை நோக்கி ஒரு அடி முன்னெடுத்து வைக்கலாம். ஏனெனில் செல்வமானது நிலையானதல்ல எனக்கூறுகிறார்.

“சீருஞ்சதமல்ல செல்வஞ் சதமல்ல, தேசத்திலே
யாருஞ் சதமல்ல நின்தாள் சதங்கச்சி யேகம்பனே”

“பிறக்கும்பொழுது கொடுவந்ததில்லை பிறந்து மண்மேல்
இறக்கும் பொழுது கொடு போவதில்லை” (பட்டினத்தார்)



செயல் அளவிலான ஆளுமைகள்

ஒருவரது விண்ணப்பத்தை இறைவன் ஏற்றுக்கொள்கிறானென்றால் விண்ணப்பம் செய்கிறவனுடைய உடல், எண்ணம், செயல் ஆகிய மூன்றும் இறைவனை மட்டுமே எண்ணியிருக்க வேண்டும். ஐம்புலன்களும் பரமனையே ஆராதிக்க வேண்டும். இல்லையெனில் மனிதா்கள் செய்கின்ற பூசைகளை இறைவன் ஏற்றுக்கொள்ள மாட்டார்.

“கையொன்று செய்ய, விழியொன்று நாடக்கருத்தொன்று எண்ணப்
பொய்யொன்று வஞ்சக நாவொன்று பேசப் புலால் கமழும்
மெய்யொன்று சாரச் செவியொன்று கேட்க, விரும்பும்யான்
செய்கின்ற பூசை எவ்வாறு கொள்வாய்?”(பட்டினத்தார்)

நல்ல செயல் செய்வதற்கென நல்லநேரம் காலம் இடம் இவற்றையெல்லாம் பார்த்துக் காத்திருக்கத் தேவையில்லை. இயற்கைச் சீற்றங்கள் பல்வேறு கோணங்களில் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தாலும் செய்ய வேண்டிய நல்லறங்களைச் செய்து கொண்டு இருக்க வேண்டும் என சித்தர் மரபில் முதலாமவராகக் கருதப்படும் திருமூலர் கூறுகிறார்.

“எழுந்து நீர்பெய்யினும் எட்டுத்திசையும்
செழுற்தண் நியமங்கள் செய்மின்” (திருமூலர்)

தூய்மையாக உடலை வைத்துக் கொள்வது, புதிய ஆடைகள் அணிந்து கொள்வது, பிறர் மெச்சும் அளவிற்குச் செயல் புரிவது என எந்தவொரு முயற்சியும் ஆளுமையின் நிறைவிற்கு நம்மை இட்டுச் செல்லாது. காற்றால் செய்யப்பட்ட நிலையற்ற உடலுக்கு அழகுக்கு அழகு சேர்ப்பதை விடுத்து பயன் தரக்கூடிய இறைத்தேடலில் இறங்க வேண்டும். அதுதான் ஆளுமையின் முதிர்ச்சி.

“நட்டகல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணமுணென்று சொல்லும் மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்?
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?” (சிவவாக்கியர்)

“காற்றில் பொதிந்த நிலையற்ற பாண்டத்தைக் காதல் செய்தே
ஏற்றித் திரிந்து விட்டேன் இறைவா கச்சியேகம்பனே” (பட்டினத்தார்)

நிறைவுரை

முப்பரிமான முப்பெட்டகத்தைத் திருப்பித் திருப்பிப் பார்க்கும் போது அதிலுள்ள சிறுசிறு கண்ணாடித் துண்டுகள் ஒன்று சேர்ந்து ஏதேனும் ஒரு விதமான படக்காட்சியாய்த் தென்படும். அப்படக்காட்சி காண்பவரின் கண்களைக் கொள்ளையிடும் அதுபோல் ஆளுமை என்னும் திறன்கள் முழுமையாய் வெளிப்பட, வாழ்க்கையை ஒளியூட்டி வழி நடத்திச் செல்ல உடல், எண்ணம், செயல் ஆகிய மூன்று பரிமானமும் ஒரு முகமாகச் செயல்பட வேண்டும். ஆளுமைகளை அவற்றிற்கான அடிப்படைகளையும் சித்தர்களின் பாடல்கள் வழி கண்டு நிறைவான ஆளுமையை எய்துவோம்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p87.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License