இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

வள்ளலார், காந்தி வாழ்க்கைச் சம்பவங்கள் ஒப்பீடு

கா. வேல்மதி


முன்னுரை

வடலூர் வள்ளலார் உலகம் போற்றும் அருளாளர். புதிய சிந்தனைகளை உலகிற்கு வழங்கியவர். பண்டிதர் கண்ட தமிழைப் பாமரரும் பெறச் செய்தவர். அவர் சிந்தனைகள் மனித நேயத்தை அடிப்படையாகக் கொண்டவை.

காந்தியடிகள் அகிம்சை வீரர், சத்திய சீலர், மகாத்மா என்று போற்றப்படுபவர். உள்ளத்திலும், செயலிலும், பேச்சிலும் உண்மையாக வாழ்ந்ததால் தான் காந்தியடிகளால் எனது வாழ்க்கையே நான் கூறும் செய்தி என்று கூற முடிந்தது.

இத்தகைய புகழ்பெற்ற வள்ளலார், காந்தி அவர்களின் வாழ்வியல் சம்பவங்களைப் பற்றி இக்கட்டுரையின் வாயிலாக அறியலாம்.

வாழ்வு

பிறப்பு இராமலிங்கம் எனப்படும் வள்ளலார், கடலூர் மாவட்டம் சிதம்பரத்திற்குப் பத்து மைல் தொலைவில் உள்ள மருதூரில் கிராமக்கணக்கர் இராமையா பிள்ளை - சின்னம்மை இணையர்களுக்கு ஐந்தாவது மகனாக 5.10.1823, ஞாயிற்றுக் கிழமை பிறந்தார்.

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி எனும் மகாத்மா, குஜராத் மாநிலத்தில் உள்ள சுதமாபுரி என்று கூறப்படும் போர்பந்தரில் கரம்சந்த் காந்தி - புத்திலிபாய் இணையர்களுக்கு 2-10-1869 அன்று பிறந்தார்.

பெயர்க்காரணம்

‘வள்ளல்’ என்ற சொல் சங்க இலக்கியங்களில் கையாளப்பட்டிருக்கிறது. இதனை;

“பலர்பேர் தோன்றிய கவிதை வள்ளல்
நிறையருந்தானை வெல்போர் மாந்தரம்
பொறையன் கடுங்கோ பாடிச் சென்ற…”


என்பதன் மூல அறியலாம்.

“வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன்”

என்ற இரக்க உள்ளம் கொண்டவராக இராமலிங்கல் இருந்தார். அதனால் இவரை வள்ளலார் என்று அழைத்தனர்.

காந்தி மக்களின் பொது நலனுக்காக பாடுபட்டவர். மக்களுக்கு மனஆறுதல் தருபவராகவும், அனைவரையும் ஒன்றாகக் கருதுபவராகவும் இருந்ததால் வங்கக்கவி ரவீந்திரநாத் தாகூர் இவரை ‘மகாத்மா’ என்று அழைத்தார்.கல்வி

வள்ளலார் சிறுவயதில் தம் தமையனார் சபாபதி பிள்ளையிடமும், அதன் பின்னர், அவர் ஆசிரியர் காஞ்சி பெரும்புலவர் சபாபதி முதலியாரிடமும் பயின்றார். இராமலிங்க வள்ளலார் எப்பள்ளியிலும் பயின்றதில்லை. இவருக்கு ஆசிரியர் இறைவன் தான் என்பதை;

“கற்றது நின்னிடத்தே, கேட்டது நின்னிடத்தே”

என்று வள்ளலார் கூறுவதிலிருந்து அறிந்து கொள்ள முடியும்.

காந்தி பள்ளியில் படிக்கும் போதே நேர்மையான மாணவனாக விளங்கினார். பதினெட்டாம் வயதில் ‘பாரிஸ்டர்’ எனப்படும் வழக்கறிஞர் கல்விக்காக இங்கிலாந்து சென்று படித்தவர்.

திருமணம்

வள்ளலார் திருவருளில் திளைத்துக் கொண்டிருந்தார். இவருக்குக் குடும்பத்தாரும், நண்பர்களும், சிவயோகியாரும் வற்புறுத்தித் திருமணம் செய்து வைத்தனர். மனைவி, அடிகளாரின் தமக்கையார் உண்ணாமலை அம்மையாரின் மகளாகிய தனம்மாள் ஆவார்.

காந்தி அவர்களுக்கு ஏழாவது வயதில் நிச்சயதார்த்தம் நடந்தது. பதிமூன்றாம் வயதில் கஸ்தூரிபாய் அவர்களை மணந்தார்.

இறப்பு

தமிழ்நாட்டில் தோன்றிய பல அருளாளர்களுள் புதுமை வாய்ந்த புலவராக விளங்கிய இராமலிங்க வள்ளலார் 1874 ல் மறைந்தார்.

அகிம்சை என்னும் வார்த்தைக்குப்பொருள் சொன்ன மகாத்மா காந்தி 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் நாள் புதுதில்லியில் நாதுராம் கோட்சே என்பவனால் கொல்லப்பட்டார்.

செயல்பாடுகள்

சாதி, சமயம்

சாதிவெறி தலைதூக்கி இருந்த காலகட்டத்தில் வள்ளல் பெருமான்

“சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே
சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே
ஆதியிலே அபிமானத்து அலைகின்ற உலகீர்!”


என்று பாடுகிறார்.

சாதிகளை ஒப்பும் சாத்திரங்களைக் ‘குப்பை’ என்று முதன் முதலாக ஏசியவர் வள்ளலார்.

“சாதி சமய பேதங்கள் கூறுமானால் வேத ஆகமங்களும் வேண்டாம்

சாதி சமயத்தைக் காட்டும் சடங்குகளும் வேண்டாம்

சாதி சமய பேதங்கள் காட்டுமானால் சைவ, வைணவ சமயங்களும் வேண்டுவன அல்ல.”


இவ்வாறு சாதி சமய பேதங்களை எதிர்த்துத் தமிழகத்தில் எழுந்த முதற்குரல், புரட்சிக்குரல் வள்ளலார் உடையது.

தீண்டாமைப் பழக்கத்தை சிறுவயது முதற்கொண்டே காந்தியடிகள் வெறுத்து ஒதுக்கினார். தீண்டாமைக்குச் சமய இசைவு இருக்க முடியாது என்று சிந்தித்தார்.

“தீண்டாமை சமய சம்பந்தமானது அல்ல. அது சமய சம்பந்தமானதாக இருக்கவே முயாது”

என்று கூறி தனது எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்கின்ற மனத்திண்மையும், சிந்தனைத் தெளிவும் காந்தியடிகளுக்கு சிறுவயதிலேயே தோன்றியது.பெண்ணுரிமை

பெண்களுக்கு உரிமை வேண்டும். ஆணும் பெண்ணும் சரிநிகரானவர் என்பதே வள்ளலாரின் கருத்தாகும்.

“பெண் - ஆணுக்கு அறிவாலும், ஆற்றலாலும் தாழ்ந்தவள் அல்லள்” என்று கூறுகிறார்.

“கணவன் இறந்தால் மனைவி தாலி இழக்க வேண்டியதில்லை”

என்று கூறுகிறார்.

இதனால் ஒரு பெண்ணின் விதவைக் கோலத்தை வள்ளலார் ஏற்க மறுத்துள்ளார் எனத் தெரிகிறது.

பெண்ணை அகிம்சையின் அவதாரம் என்று காந்தியடிகள் கூறுகிறார். பெண் ஆடவனது சம அறிவுள்ள சகி. ஆண் செய்யும், ஈடுபடும் எல்லாக் காரியங்களிலும் அவற்றின் எல்லா அம்சங்களிலும் கலந்து கொள்ள உரிமையுடையவள்.

“பெண்களுக்கு தக்க கல்வியளிக்க வேண்டுமென்று எண்ணுபவன் நான்”

என்று காந்தியடிகள் கூறுகிறார்.

வள்ளலாரும், காந்தியும் பெண்ணுரிமைக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். ஆணும், பெண்ணும் சரிநிகர் சமம் என்று கூறினர். இவற்றின் மூலம் இவர்களின் ஒத்தகுணம் வெளிப்படுகிறது.

வறுமை

வள்ளல் பெருமான் கொள்கைகளில் தலையாயது உயிர்இரக்கம். “இரக்கமே என் உயிர்” என்றார். உயிர்களின் பசி நீக்கலே உயிர் இரக்கத்தின் அடிப்படையாகும்.

“வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்
வாடினேன் பசியினில் இளைத்தே
வீடுதோறும் இரந்தும் பசியறாது அயர்ந்த
வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்”


என்றார்.

பசியால் வருந்துவோருக்கு உணவு தயாரிக்க அவர் அன்று பற்ற வைத்த அடுப்பு இன்றும் எரிந்து கொண்டிருக்கிறது.

காந்தியடிகள் வறுமையைப் பற்றி, “இப்பொழுது நமக்கு எவ்வளவு தேவையோ அதற்கு மேல் இறைவன் படைப்பது இல்லை. இதன் விளைவால், தேவைக்கு மேல் எவராது எடுத்துக் கொள்ளும் போது, அவன் அண்டை வீட்டுக்காரனை வறுமையில் ஆழ்த்துகிறான்” என்று கூறினார்.

கிராமங்களில் வறுமையை அகற்றுவதற்கு நூற்பு பெரிதும் உதவியாக அமையும் என்பது அண்ணலின் உறுதியான நம்பிக்கை.

வள்ளலார் வறுமையில் வாடுவோருக்கு உணவு கொடுக்க வேண்டும் என்றார். காந்தியடிகள் அவர்களுக்கு உணவும் கொடுத்து, வேலையும் கொடுக்க வேண்டும் என்றார்.படைப்புகள்

வள்ளலார் “மனுமுறை கண்ட வாசகம்”, “தொண்ட மண்டல சதகம்”, “ஒழுவிலொடுக்கம்”, “சிவநேச வெண்பா”, “நெஞ்சறிவுறுத்தல்”, “மகாதேவ மாலை”, “இங்கித மாலை” முதலிய பல பிரபந்தங்களைப் பாடியுள்ளார்.

காந்தியடிகள் “சத்திய சோதனை”, “இந்திய சுயராஜ்ஜியம்”, “ஜனநாயகம் உண்மையும் போலியும்”, “சமூகத்தில் பெண்கள்” என பல படைப்புகளை வெளியிட்டுள்ளார்.

வள்ளலார், காந்தி இவர்களின் படைப்புகள் சிறந்த முறையில் மக்களுக்கு இன்றும் உதவுவதாக இருக்கின்றன.

கொள்கைகள்

“உயிர்களின் பசி நீக்குதலே உயிர் இரக்கத்தின் அடிப்படை” என்பது வள்ளலாரின் முக்கியக் கொள்கையாகும். பசி போக்குவதே சீவகாருண்யத்தின் அடிப்படை என்று சொன்னதோடு அதைச் செயலிலும் காட்டியவர். வடலூரில் சத்திய தருமசாலையை அமைத்தார். அங்கு நாள்தோறும் சாதி, மதம் பாராமல் ஏழைகளுக்குச் சோறு போட ஏற்பாடு செய்தார்.

“மண்ணுல கதிலே உயிர்கள்தாம் வருந்தும்
வருத்தத்தை ஒருசிறி தெனினும்
கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும்
கணமும் நான் சகித்திட மாட்டேன்”


என்று பாடிய அருளாளராவார்.

அண்ணல் என்ற நாணயத்தின் ஒருபக்கம் அவர் வாழ்ந்த வாழ்க்கை என்றால், மறுபக்கம் அகிம்சை, சத்தியம் ஆகிய அடிப்படைகளின் மீது உருவாக்கப் பெற்ற சர்வோதயம் என்னும் வாழ்க்கைத் தத்துவமாகும். இரண்டு பக்கங்களையும் பிரிக்க இயலாது. அவர் வாழ்ந்த வாழ்க்கையிலிருந்து செய்த சோதனைகளிலிருந்தும் உருவானது தான் அவரது தத்துவம்.

வள்ளலார் உயிர்களின் பசியைப் போக்குவதையும், காந்தியடிகள் அகிம்சை, சத்தியம் என்பதையும் தங்களது கொள்கைகளாக வைத்துள்ளனர்.

கடவுள் நம்பிக்கை

வள்ளலார் இறைவனிடம் ‘மரணமில்லாப் பெருவாழ்வு’ வேண்டினார். இதனை,

“அழியாதே விளங்கும் மெய்”

“அருட்பெருஞ்சோதி ஆண்டவர் அருள்க”

என்றார்.வள்ளலார் பல கடவுளரை விரும்புதலைப் பிள்ளை விளையாட்டு என்றார். அருட்பெருஞ்சோதி ஆண்டவர் ஒருவரே என்பது வள்ளலாரின் முடிவாகும்.

மகாத்மா காந்தி கடவுளின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர். அவர் தன்னை ஒரு சனாதன இந்து என்று கூறி இறுதிவரை அவ்வாறே வாழ்ந்தவர். இந்தியாவில் இந்துக்களுக்கு உரிய நம்பிக்கைகள் எவை உள்ளனவோ அவைகளைத் தன்னகத்தே கொண்டிருந்தார்.

உயிரிரக்கம்

‘உயிர்பலி இடுவது தவறு’ என்றார் வள்ளலார். காந்தி அடிகளுக்கு முன்பே உயிர்ப்பலியை அடியோடு ஒழிக்கப் பாடுபட்டவர் வள்ளலார். இதை அவர் அருளிய அருட்பாடல்களில் காணலாம்.

“பலிதர ஆடு, பன்றி, குக்குடங்கள்
பலிக்கடா முதலிய உயிரைப்
பொலிதரக் கொண்டு போவது கண்டே
புந்தி நொந்து உளம் நடுக்குற்றேன்!”


என்று கூறினார்.

“மதத்தின் பெயராலும், தெய்வத்தின் பெயராலும் உயிர்களைப் பலியிடுவது காட்டுமிராண்டித்தனம்” என்று காந்தியடிகள் கூறினார்.

அரசியல்

அன்னியர் ஆட்சியில் மக்கள்படும் தொல்லைகளைக் கண்ட வள்ளலார் நாட்டின் சூழ்நிலைக்குக் காரணம் ‘கருணை இலா ஆட்சி’ என்கிறார். இதனை,

“கருணை இலா ஆட்சி கடுகி ஒழிக
பிறகு யார் ஆள வேண்டும்?
அருள் நயந்த சன்மார்க்கர் ஆள்க”


என்று கூறினார்.

மகாத்மா காந்தி ஓர் அரசியல் வாதி. மகாத்மாவின் அரசியல் என்பது மக்களுக்குச் செய்யும் தொண்டு ஆகும். அதுவே இறைவனுக்குச் செய்யும் தொண்டு. கோவிலுக்குக் கடவுளைத் தரிசிக்க எப்படிச் சுத்தமாகப் போக வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதுபோல அரசியலும் புனிதமானது. மகாத்மா காந்தி அரசியல் என்பது தெய்வீகமானது எனக் கூறினார்.

தொகுப்புரை

வள்ளலார், காந்தி ஆகியோரின் வாழ்வு, செயல்பாடுகளில் சில வாழ்வியல் சம்பவங்களை மட்டும் கொண்டு இருவரது கொள்கைகள் இங்கு ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டன.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p91.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்

முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License