இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

பூவும் போரும்

கி. இராம்கணேஷ்


முன்னுரை

இயற்கையின் தோற்றங்களாக விளங்கும் மனிதனுக்கும் மலருக்கும் மிகுந்த ஒற்றுமையுண்டு. ‘மனம் கொண்டவன் மனிதன்; மணம் கொண்டது மலர்’ எனக் கூறும் அளவிற்கு தமிழ்ச் சமூகத்தில் மலர்களின் பங்கு அளப்பரியதாக விளங்குகின்றது. வாழ்க்கையில் ஏற்படும் திருமணம், இறப்பு போன்ற பல்வேறு சடங்குகளிலும் ஊடும் பாவும் போல மலர் சிறப்பானதொரு இடத்தினைப் பெற்றுள்ளது. இறைவழிபாடு மேற்கொள்ளும் போது செய்யும் வழிபாட்டு நிகழ்வில், பூவும் நீரும் படைத்து வணங்குவதே பூசை எனச் சான்றோர் நவில்வது எண்ணத்தக்கதாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த மலர்கள், வீரத்திலும் வியாதிகளைப் போக்கும் மருத்துவத்திலும் இடம் பெற்றுள்ள நிலையை இலக்கியங்களின் வழி ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

மூவேந்தர் பூக்கள்

போர்க்களத்தில் போரிடும் போது இருதிறத்து மறவர்களும் தத்தமது அடையாளப் பூவைச் சூடிப் போர் செய்வர். இஃது மரபாகப் போற்றப்பட்டது. வீரர்கள் பூச்சூடுவதை வைத்தே எதற்காகப் போர் நிகழ்கிறது என்பதை உணர முடியும். மேலும், வீரர்கள் அக்காலத்தில் பல்கிப் பெருகியிருந்தனர். அச்சூழலில் போர்க்களத்தில் தன்னுடன் போர்புரிபவன் எதிரியா, தன்னுடைய படையைச் சேர்ந்தவனா என அடையாளம் காணவும் பயன்பட்டதை இலக்கியக்கண் கொண்டு ஆராயும் போது தெள்ளிதின் புலனாகும்.

சங்காலத்தில் புகழ்பெற்றவர்களாகத் தமிழகத்தை ஆண்டவர்கள் சேரர், சோழர், பாண்டியர் ஆகிய மூவேந்தர்கள் ஆவர். இம்முடிமன்னர்கள் ஆண்ட காலத்தில், ஏனைய குறுநிலப்பகுதிகளை சிற்றரசர்கள் ஆண்டனர். மூவேந்தர்களுக்குரிய பூக்களை இலக்கண, இலக்கிய நூல்கள் சுட்டியுள்ளன.

“சீர்சால் போந்தை வேம்பொ டாரே...” (பு. வெ. மாலை)

“போந்தை வேம்பே ஆர் என வரூஉம்
மாபெரும் தானையர் மலைந்த பூவும்”
(தொல்.)

“கருஞ்சினை
வேம்பும் ஆரும் போந்தையும் மூன்றும்
மலைந்த சென்னியர் அணிந்த வில்லர்”
(புறம்)

சேரர் - பனம் பூவையும், சோழர் - ஆத்திப் பூவையும், பாண்டியர் - வேப்பம் பூவையும் சூடுவர் என்ற செய்தியைப் புறப்பொருள் வெண்பாமாலை, தொல்காப்பியம், புறநானூறு ஆகிய நூல்கள் சுட்டியுள்ளன.



போர்ப்பூக்கள்

வெட்சி நிரைகவர்தல், மீட்டல் கரந்தையாம்,
வட்கார்மேற் செல்வது வஞ்சியாம் - உட்கா(து)
எதிரூன்றல் காஞ்சி, எயில்காத்தல் நொச்சி,
அதுவளைத்த லாகும் உழிஞை, - அதிரப்
பொருவது தும்பையாம், போர்க்களத்து மிக்கோர்
செருவென் றதுவாகை யாம்.
(பு.வெ.மா.மேற்கோள்)

வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, தும்பை, வாகை ஆகிய பூக்களை போர்ப்பூக்கள் என்று குறிப்பிடலாம். இப்பூக்கள் முறையே நிரை கவர்தல், நிரை மீட்டல், மண்ணாசை காரணமாகப் போருக்குச் செல்லல், மதில்காத்தல், மதிலைச் சுற்றி வளைத்தல், அதிரப் பொருதல், வெற்றி பெறுதல் ஆகியவற்றின் அடையாளங்களாக விளங்கின.

சிற்றரசர் போரிடும் காலத்தில் தத்தமது பேரரசர் பூவையே, அடையாளப் பூவாகச் சூடிக் கொண்டு போரிடுவர். பூக்கள் குளிர்ச்சியளிப்பவை. அக்காலத்தில் ஆண்களும் பெண்களைப் போலவே முடிவளர்த்துக் கொள்ளுதல் இயல்பாக இருந்தது. மேலும் போக்களத்தில் ஈடுபடும் வீரர்களுக்கு கோபத்தின் காரணமாக வெம்மை தோன்றும். அதனைத் தணிப்பதற்காகவும் வீரர்கள் பூச்சூடியிருக்கலாம் எனக் கருத இடமுண்டு.

தும்பைப் பூவின் தனிச்சிறப்பு

வீரத்தை நிலைநாட்டும் போர்க்களத்தில் பூ மாலையணிந்து போரிடுவது இயல்பு. எனினும் மற்ற பூக்களுக்கு இல்லாதத் தனிச்சிறப்பினை தும்பைப்பூ பெற்றுள்ளது. ஏனெனில் மற்ற போர்களில் பயன்படும் பூக்கள் ஏதேனும் ஓர் ஆசையைக் காரணமாகக் கொண்டே அணியப்படுகின்றன. தும்பைப் பூச்சூடி மேற்கொள்ளும் போர், வலிமையைப் புலப்படுத்தும் நோக்கோடு செய்யப்படுவதாகப் பெரும்பான்மையாக அமைகின்றது. ‘அதிரப் பொருவது தும்பை’ என்ற கருத்தே மேற்கூறிய கூற்றுக்கு வளம் சேர்க்கும்.

தும்பைப்பூ மாலையணிந்ததற்கான காரணம் குறித்துப் புலவர் கோவிந்தன். “மறங்கருதிய போர் புகழாசையினை அடிப்படையாகக் கொண்டது. புகழுக்கு வெண்மை நிறம் கற்பிப்பர். அதனால் தூய வெண்ணிறம் உடையதான தும்பை மலர், புகழ் காரணமாகப் போரிடப் போகும் வீரர்கள் அணியும் பூவாதல் பொருத்தமே என்க. மேலும் தும்பைச்செடி வன்னிலத்துச் செடியாகும். மறங்கருதிய போர் வேட்கை, உரம் மிக்க உள்ளத்தில் மட்டுமே உருவாகும்” என்று குறிப்பிட்டுள்ளார். தும்பைப் பூவானது எதிர்ப் படையினருக்குத் துன்பத்தைத் தருவதாக அமையும் நிலை ஒப்புநோக்கத்தக்கது ஆகும்.



வெள்ளுடை தமிழரின் பண்பாட்டில் தவிர்க்க முடியாத நிலையினைப் பெற்றதற்கு மேற்கண்ட மரபும் காரணமாக அமைந்திருக்கலாம். தும்பைப்பூ குறித்த செய்திகள் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன.

“வாடத்தும்பை வயவர் பெருமகன்” (பத்துப்பாட்டு)

“தும்பை மாலை இளமுலை” (ஐங்குறுநூறு)

“நிலந்தலைக் கொண்ட பொலம்பூந்தும்பை” (புறம்)

துணிவுடையவனே தும்பைப் பூவைச் சூட முடியும். இன்றைய காலத்தில் பெண்மையின் அடையாளமாக பூ அணிந்து கொள்ளும் மரபு பின்பற்றப்படுகிறது. ஆண், பெண் இருபாலரும் பூக்களை அன்றைய காலத்தில் அணிந்திருந்தனர் எனினும், போர்க்களத்தில் ஆடவர் பூ அணிந்து போரிடுதல் ஆண்மையின் அடையாளமாகக் கருதப்பட்டது. கம்பராமாயணத்தின் இறுதிநிலையாக அமையும் யுத்தகாண்டத்தில் இராமனுக்கும் இராவணனுக்கும் நடந்த போர் தும்பைப் போராகச் சுட்டப்பட்டுள்ளது. போரில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து, கம்பன் புறத்திணை என்னும் நூலின் ஆசிரியர் பின்வருமாறு கூறுகிறார்.

“முதல்நாள் போருக்கு வரும் இராமனும் இராவணனும் தும்பைப் பூச்சூடிப் போருக்கு வருகின்றனர். இராமன் மூன்று பூக்கள் சூடியதாகக் கம்பர் கூறுகின்றார். இதனை,

“இளவரிக் கவட்டிலை ஆரொடு ஏர்பெறத்
துளவொடு தும்பையும் சுழியச் சூடினான்”


என்ற பகுதியுணர்த்தும்.

சூரியகுலத்தில் தோன்றிய இராமன் ஆத்திப் பூமாலை அணிகின்றான். பிற்காலச் சோழர் காலத்தில் வாழ்ந்த கம்பன், சூரிய குலத்தினரான சோழர்களுக்குரிய ஆத்திப் பூவைத் தன் காப்பியத் தலைவனும் சூடியதாகப் பாடுகின்றான். இதில் மூன்று வகைப் பூக்களை இராமன் அணிந்தான் எனக் கம்பர் குறிக்கிறார்.

1. ஆத்திப்பூ

2. துளசிமாலை

3. தும்பைப்பூ.

இராமன் கடவுளின் அவதாரம் என்பதால் துளசி சூடினான். மேலும் அதிரப்பொருவதற்கு, மைந்து பொருளாகப் போர் செய்வதற்குத் தும்பை மாலையைச் சூடினான். மேற்கண்ட பாடலில்

1. அடையாளப்பூ (ஆத்தி)

2. சமயப்பூ (துளசி)

3. போர்ப்பூ (தும்பை)

எனச் சுட்டப்பட்டுள்ளது. இதன்வழி போர் என்றாலே சிறந்த மறவுணர்வைப் புலப்படுத்தும் தும்பைப் போரே எனத் தெரிகிறது.

தும்பைப் பூவின் மருத்துவக் குணங்கள்

இலபிட்டாய் குடும்பத்தைச் சார்ந்த ‘லூக்காஸ் ஆஸ்பெரா’ எனும் செடி தமிழில் தும்பை என்றும் மலையாளத்தில் தும்பாய் என்றும் தெலுங்கில் தும்மசெட்டு என்றும் குறிக்கப்படுகிறது. வெண்மை நிறமுடைய தும்பைப்பூ இருமல், சளி, இரைப்பையில் ஏற்படும் அழற்சி போன்ற நோய்கள் குணமாகக் காரணியாக அமைகின்றது. ஞாபகசக்தி மேம்பட உறுதுணை புரிகிறது.



வாகைப்பூவின் தனிச்சிறப்பு

போரில் வெற்றி பெற்ற மன்னன் வாகைப்பூ சூடி மகிழ்வது, வாகைத்திணை ஆகும். வாழ்க்கையின் மேம்பட்ட வெற்றி நிலையைக் குறிப்பது வாகை எனக் கூறுவர்.

“இலை புனை வாகைசூடி. இகல்மலைந்து
அலை கடல்தானை அரசுஅட்டு ஆஎத்தன்று”
(பு.வெ.மா.)

“கூகைக் கோழி வாகைப் பறந்தலைப்
பசும்பூண் பாண்டியன் வினைவல் அதிகன்”
(குறுந்தொகை)

எந்தவொரு போரும் வெற்றி எனும் விழுப்பொருளை அடைய வேண்டும் என்ற நோக்கோடுதான் மேற்கொள்ளப்படுகிறது. வாகை சூடி வருதல், இயலாத சூழலில் வீரமரணம் அடைதல் ஆகிய இலக்குகளை முன்வைத்தே சங்ககாலப் போர்கள் அரங்கேறியிருக்கின்றன.

வாகைப்பூவின் மருத்துவ குணங்கள்

வாகைமரம் தெற்காசியாவைப் பூர்வீகமாகக் கொண்டது. இஃது வீக்கம்,கொப்புளம் உடைந்து வடிதலுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. வாகை மரமாக வளரக்கூடியது. நீலநிறமுடையது. உடல் சூட்டினைத் தணிக்கும் இயல்புடையது. இருமல், நுரையீரல் அழற்சி போன்றவற்றிற்கு அருமருந்தாகப் பயன்படுகிறது.



உழிஞைப்பூவின் தனிச்சிறப்பு

உழிஞைப்பூ மாற்றரசன் மதிலை முற்றுகையிடப் போகும் மன்னர், அவர்தம் படையைச் சார்ந்தவர்கள் அணியும் பூவாகக் கருதப்படுகிறது. உழிஞைப்பூ கொடி வகையைச் சார்ந்தது. மரங்களை மூடிக்கொண்டு படரும் தன்மையுடையது. மக்களை ஆளும் அரசன் போல மரத்தை ஆண்டு கொண்டு படரும் இயல்புடையது.

மண்ணாசை கருதி வஞ்சி சூடி வந்தவன் தோற்றுப்போன சூழலில், தன் நாடு சென்று அரண்மனைக்குள் இருந்து கொண்டு நெடுங்கதவைத் தாழிடுவான். இச்சூழலில் அவனை வென்ற நாட்டின் அரசன் , தோற்ற அரசனின் நாட்டுக்குள் இரவில் புகுந்து முற்றுகையிடுவான். பின்னர் விடியற்காலையில் போரிடுவான். வென்ற மன்னன் முற்றுகையிட்டதன் அடையாளமாக உழிஞைப் பூவைச் சூடியிருப்பான்.

“பொன்புனை உழிஞைவெல் போர்க்குட்டுவ” (பதிற்றுப்பத்து)

“சிறியிலை உழிஞை தெரியல் சூடி” (பதிற்றுப்பத்து)

மேற்கூறப்பட்டுள்ள செய்யுளடிகள் உழிஞைப்பூவின் சிறப்புகளைப் பறை சாற்றுகின்றன.

வேம்பின் தனிச்சிறப்பு

பாண்டியர்களின் அடையாளப் பூவாகச் சுட்டப்படுவது வேம்பு. போர்க்குரிய மலரைச் சூடும் போது உடன் வேப்பம் பூவையும் சூடிச் செல்வது வழக்கமாக இருந்தது. எங்கும் பரவலாகக் காணப்படும் மரமாக வேம்பு விளங்குகிறது.

“அரவாய் வேம்பின் அங்குழைத் தெரியலும்
ஒங்கிருஞ் சென்னி மேம்பட மிலைந்த”
(பொருநராற்றுப்படை)

“வேம்பின் வெறிகொள் பாசிலை நீலமொடு சூடி” (அகநானூறு)

ஆகிய அடிகள் வேம்பின் உயர்வை எடுத்துரைக்கின்றன.

வேம்பின் மருத்துவ குணங்கள்

வேப்பம்பட்டை விட்டுவிட்டு வருகிற காய்ச்சலுக்கு உதவுகிறது. இரத்தத்தைச் சுத்திகரிக்கும் குணமிருப்பதால் குஷ்ட நோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது. வேம்பின் இளந்தளிரை உப்பும் மிளகும் கலந்து அரைத்து உண்ணும் போது வயிற்றுள் இருக்கும் பூச்சித் தொந்தரவு நீங்கும். வேப்பிலைச்சாறுடன் தேன் கலந்து உண்ணும் போது காமாலை நோய் நீங்கும். வேப்பம் பூ வாந்தி, ஏப்பம், பித்தம் ஆகியவற்றைப் போக்கும் தன்மையுடையது. வேப்பம்பழத்தின் சாறு சரும வியாதிகளுக்கு நன்மருந்தாகப் பயன்படுகிறது.

முடிவுரை

பூக்கள் மனித வாழ்வின் பண்பாட்டுக் கூறுகளில் பின்னிப் பிணைந்துள்ளன. மலரும் மணமும் பிரிக்க முடியாததைப் போல மனித மனமும் மலரின் மணமும் இணைந்துள்ள நிலை புலனாகிறது. இயற்கையின் உன்னதப் படைப்பான மலர்கள் போருடனும் மருத்துவத்துடனும் நெருங்கிய தொடர்புடையதாகத் திகழ்கின்ற பான்மை போற்றுதற்குறியது.

உசாத்துணை நூல்கள்

1. தொல்காப்பியம் - தமிழண்ணல் உரை

2. புறப்பொருள் வெண்பா மாலை - பொ.வே. சோமசுந்தரனார் உரை

3. பத்துப்பாட்டு - ஞா. மாணிக்கவாசகன் உரை

4. கம்பன் புறத்திணை - தே. சொக்கலிங்கம்

5. எட்டுத்தொகை - மூலமும் உரையும் - ச. வே. சுப்பிரமணியன் உரை

6. பண்டைத் தமிழர் போர்நெறி - கா. கோவிந்தன்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p95.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License