இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
வரலாறு

ஆரம்பகால நாகரிகங்கள் விஞ்ஞானத்திற்கு ஆற்றிய பங்களிப்பு

வினாயகமூர்த்தி வசந்தா
கலைமாணி, பொருளியல் துறை, கலை கலாசார பீடம்,
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.


அறிமுகம்

புவி என்னும் கிரகத்தில் வாழ்ந்த மனிதனின் விஞ்ஞான வளர்ச்சி இன்று வேற்றுக் கிரகங்களில் மக்கள் குடியேறி வசிக்கக்கூடிய அளவிற்கு ஒரு சூழலை உருவாக்கிக் கொடுத்துள்ளது. இத்தகைய விஞ்ஞான வளர்ச்சி என்பது திடீரெனத் தோன்றியதல்ல. மனிதன் தோன்றிய காலத்திலிருந்து படிப்படியாக வளர்ச்சி பெற்றதாகக் காணப்படுகின்றது. அந்த வகையில் பிரமாண்டமான ஒரு துறையாக விஞ்ஞானம் இன்று பலவிடயங்களிலும் ஊடுருவியிருப்பதனைக் காணலாம். இத்தகைய உயரிய நிலையினை அடையப் பாரிய பங்களிப்பினை வழங்கியது நாகரிகங்கள் என்றால் அது மிகையாகாது. நாகரிகம் என்பது பழங்காலத்தில் இருந்து பயன்படுத்தப்பட்ட ஒரு சொல்லாகும். நாகரிகம் என்ற சொல்லை ஆங்கிலத்தில் ‘Civillization’ என்று கூறுவர். ‘civiliz’ எனும் லத்தீன் வார்த்தை ஆங்கிலச் சொல்லின் அடிப்படையாகும். ‘Civiliz’ ‘என்றால் குடிமகன், நகரவாசி எனப்பொருள்படும். இந்த அடிப்படையில் மனிதன் சமூதாயமாக வாழ ஆரம்பித்ததுதான் நாகரிகத் தொடக்கம் என்று சிலர் கூறுவர்.

நாகரிகம் என்பது சிறிய கிராமக் குடியிருப்புக்களில் வாழ்ந்து கொண்டு அல்லது நாடோடிகளாகத் திரிந்து கொண்டு உயிர் வாழ்வதற்காக வேட்டையாடலையோ அல்லது சிறிய நிலங்களில் விவசாயத்தையோ மேற்கொண்ட குலக்குழுக்கள் அல்லது பழங்குடிகள் போலன்றி, பலர் நகர வாழ்க்கையை மேற்கொண்டு விவசாயத்தைப் பயன்படுத்தும் நிலையிலுள்ள சிக்கலான சமூகத்தைக் குறிக்கும். இந்த வகையில் நாகரிகமானது மனித இனத்தின் வரலாறு மனிதன் ஆடையில்லாமல் விலங்குகளை வேட்டையாடிச் சமைக்காமல் உண்ட காலத்திலிருந்தே தொடங்கிற்று. ஸ்கொட்லாந்தின் தத்துவ மேதையும், வரலாற்று நிபுணருமான ஆடம் பெர்கூஸன் 1767 இல் எழுதிய ‘An Essay On The History Of Civil Society’ எனும் புத்தகத்தில் நாகரிகம் என்றால் தனிமனிதன் குழந்தைப் பருவத்தில் இருந்து மனிதத் தன்மை உடையவனாக வளர்ச்சியடைவது மட்டுமல்ல, மனித இனமே முரட்டுத்தனத்தில் இருந்து பண்பாட்டுக்கு முன்னேறுவது என்கிறார்.

கோர்டன் சைல்டின் அளவுகோல்கள், அகழ்வாராய்ச்சி ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஏழு பழங்கால நாகரிகங்களை முதிர்ச்சி பெற்றவைகளாகச் சொல்லலாம். அந்த வகையில் ஆரம்பகால நாகரீங்களாக மொசப்பத்தேமிய நாகரிகம், பபிலோனிய நாகரிகம், எகிப்திய நாகரிகம், கிரேக்க நாகரிகம், சீன நாகரிகம், ரோமன் நாகரிகம், சிந்துவெளி நாகரிகம் போன்ற பல்வேறு நாகரிகங்கள் உள்ளன. இவற்றுள் சில குறிப்பிடத்தக்க நாகரிகங்கள் விஞ்ஞானத்திற்காற்றிய பங்களிப்பினை நோக்கும் போது உண்மைத் தன்மையினை நாம் அறிந்து கொள்ளலாம்.

எகிப்திய நாகரிகம்


ஆப்பிரிக்காவின் கிழக்குப்பகுதியில் நைல் ஆற்றின் கீழ் பகுதிகளில் செறிந்து அமைந்திருந்த ஒரு பழங்கால நாகரிகம் ஆகும். உலகில் மூத்த நாகரிகமாக விளங்கும் எகிப்திய நாகரிகமானது நைல்நதிப்படுக்கையின் இரு மருங்கிலும் பல நகரங்களைக் கொண்டு வளர்ச்சி பெற்றிருந்தது. கீஸா,மெம்பிஸ், சாகுரா, அமர்னா, தீப்ஸ் என்பன முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களாகும். மேல் காணப்பட்ட நகரங்களில் எகிப்திய தெய்வங்களுக்குரிய கோவில்களையும் காணலாம். இது எகிப்திய நாகரிகத்தின் சிறப்பான இயல்பாகும். இம்மக்கள் தாம் வணங்கிய தெய்வங்களுக்கு உயர்ந்த நிலையைக் கொடுத்திருந்தனர் என்பதற்கு சிறந்த சான்று இதுவாகும். இது இன்றைய எகிப்து நாட்டிற்குள் அடங்குகிறது.

தனித்தனியே உருவான பண்டைய உலகின் ஆறு நாகரிகங்களில் இதுவும் ஒன்றாகும். இந் நாகரிகம் கீழ் எகிப்தும், மேல் எகிப்தும் முதல் பார்வோனின் கீழ் ஒன்றிணைந்த போது கி.மு 3150 அளவில் தொடங்கியது எனலாம். இதன் வரலாறு பல உறுதியான அரசுகளைக் கொண்ட காலப்பகுதியையும், இடையிடையே நிலையற்ற இடைக்காலங்களையும் கொண்டு அமைந்திருந்தது. இது மூன்றாயிரம் ஆண்டுகளாக வளர்ச்சியடைந்தது. ஆப்பிரிக்கா, ஜரோப்பா, ஆசியா ஆகிய 3 கண்டங்களும் சந்திக்கும் இடத்தில் எகிப்து அமைந்துள்ளது. பண்டைய எகிப்திய நாகரீகத்தின் வெற்றி நைல் நதிப்பள்ளத்தாக்குக்கு ஏற்ப வேளான்மையை வகுத்துக் கொள்வதில் இருந்தது. வெள்ளத்தை எதிர் நோக்கவும், நீர்ப்பாசனத்தைக் கட்டுப்படுத்தவும் இயன்றதால் அபரிமித விளைச்சளைப் பெற்றுக் கொண்டது. இவ்வாறு அமையப்பெற்ற எகிப்து நாகரிகமானது பல்வேறு வகையான அம்சங்களைக் கொண்டு காணப்பட்டமையால் அவை விஞ்ஞானத்திற்கு அளப்பெரும் பங்களிப்பினை வழங்கியுள்ளது.


பண்பாடும் தொழில்நுட்பமும்

பண்டைய எகிப்தியர்களின் சாதனைகளுள் கணிதமுறை, கற்கள் உடைப்பு , நில அளவை, கட்டுமான நுட்பங்கள், கண்ணாடித் தொழில்நுட்பம், மருத்துவமுறை, இலக்கியம், நீர்ப்பாசனத் தொழில்நுட்பம் என்பவை அடங்கும். வரலாற்றில் மிக முந்திய அமைதி ஒப்பந்தமும் இங்கேயே மேற்கொள்ளப்பட்டது. பண்டை எகிப்து ஒரு நிலையான பாரம்பரியத்தை விட்டுச் சென்றது. பிற நாட்டவரும் அவர்களுடைய கட்டிடங்களைப் பார்த்துக் கட்டினர்.

அவர்களுடைய கலைப்பொருட்கள் உலகம் முழுதும் உலா வந்தன. அவர்களுடைய பாரிய நினைவுச் சின்னங்கள் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளையும், எழுத்தாளர்களையும் பல நுற்றாண்டுகளாகக் கவர்ந்து வருகின்றன. இவ்வாறு எகிப்திய நாகரிகம் பண்பாட்டுத் தொழில்நுட்பத் தேவையில் வளர்ச்சி பெற்றமை விஞ்ஞானத்திற்கு ஏதுவாக அமைந்தது.

எழுத்துக் கலை

பண்டைய எகிப்தின் எழுதும் முறை கெய்ரோகிலிபிக் என அழைக்கப்பட்டது. இவ்வாறான எழுத்துக்கள் கோவில்களிலும், பிரமிடுகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு 700 க்கும் மேற்பட்ட எழுத்துருவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு எழுத்துருவமும் ஒவ்வொரு பொருளையும் எடுத்தியம்புகின்றன. இவை பிக்டோரியம் என அழைக்கப்படுகின்றன. பல பிக்டோகிராம்கள் சேர்ந்து ஒவ்வொரு ஒலிகளையும் எடுத்தியம்புகின்றன. ஒவ்வொரு ஒலிகளின் கூட்டங்களும் போனோகிரம் என்று அழைக்கப்படுகின்றன. இப்போனோகிராம்களே புதிய பற்பல சொற்களையும் உருவாக்க மூலாதாரமாய் அமைகின்றன.

பிரமிடுகள்

எகிப்து என்றவுடன் நம் கண்களின் முன்னால் தெரிபவை பிரமிட்கள். சாதாரண மக்களை மட்டுமல்ல, பொறியியல் வல்லுநர்களையும் வியக்க வைக்கும் அமைப்புக்களாக அவை திகழ்கின்றன. ஏழு உலக அதிசயங்களில் இன்று உலக மக்கள் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த அதிசயமாகப் பிரமிடுகள்தான் திகழ்கின்றது. பிரமிடு என்றால் கூம்பு வடிவம். அடிப்பகுதி நீண்ட சதுரமாக இருக்கும். நான்கு சரிவான முக்கோணப் பகுதிகள் உச்சியில் ஒன்றாக இணையும். இந்த பிரமிடுகளுக்குள் ராஜா ராணிகள், முக்கியமானவர்கள் போன்றோர்களின் உடல்கள் அவர்களின் மறைவிற்குப் பின்னர் மம்மிகளாக, உடல் கெடாதவாறு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த உடல்கள் கெட்டுப் போகாமல் இருக்கன்றன. இதற்குக் காரணம் பிரமிடுகள் கூம்பு வடிவமாக உள்ளமையாகும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இவ்வாறான பிரமிடுகளால் கிடைக்கப்படும் பல்வேறு நிகழ்வுகள் நம்மை பிரமிக்க வைக்கின்றன.

பிரமிடு வடிவ அறைக்குள் காய்கறிகள், பழங்கள் வைத்தால் மற்ற அறைகளில் வைக்கப்பட்ட காய்கறிகள், பழங்களை விட அதிக நாட்கள் கெடாமல் இருக்கின்றன. பிரமிட் வடிவ கட்டடங்களில் தூங்குபவர்களுக்கு சாதாரண அறையில் தூங்குபவர்களை விட அதிகப் புத்துணர்ச்சி கிடைக்கின்றது. பிரான்ஸ் நாட்டில் இறந்த ஒரு பூனையின் உடலை, மரத்தால் செய்த பிரமிட் வடிவப் பெட்டிக்குள் வைத்தார்கள். பல ஆண்டுகள் ஆன பின்னும் இந்த உடல் கெட்டுப் போகவில்லை. பிரமிடு வடிவ அறைக்குள் இருக்கும் இரும்புப் பொருட்கள் எளிதாக துருப்பிடிப்பதில்லை.

கூம்பு வடிவ அமைப்பு, சுற்றுப் புறத்தில் இருந்து ஒருவித மின்காந்த ஆற்றலை உள்வாங்குகிறது. பிரமிடின் உச்சிப்பகுதி இந்த ஆற்றலை பிரமிடின் உள்பகுதியில் ஒரே சீராக பரவ வைப்பதே இதன் ரகசியமாகும். மேலும் உலகின் முதன் முதலாக நெம்புகோலின் தத்துவத்தினைக் கண்டுபிடித்த மக்கள் எகிப்தியரே. இன்றைய கட்டிடக் கலையில் நெம்புகோலின் உபயோகமானது அதிமுக்கியத்துவம் வாய்ந்தது. 500 அடி உயரமான பிரமிட்டுகளின் உச்சிகளுக்கு நெம்புகோளின் உதவியுடனே மிகப்பெருங் கற்களைக் கொண்டு செல்ல எகிப்தியர் கற்றிருந்தனர்.


கணித அறிவு

கூட்டல், கழித்தல், பெருக்கள், வகுத்தல் ஆகிய அனைத்தும் அவர்களுக்கு அத்துப்படி. முக்கோணங்கள், சதுரங்கள், செவ்வகங்கள், பெட்டிகள், பிரமிடுகள், வட்டங்கள் ஆகியவற்றின் பரப்பளவு, கொள்ளளவு கண்டுபிடிக்கும் சூத்திரங்களையும் அவர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள். பிரமிடு கட்டுவதில் பல கணித சூத்திரங்கள் பயன்பட்டதாக ஆதாரங்கள் கூறுகின்றன.

காகிதம்

கேலுன் என்னும் சீன அறிஞர் சணல், துணி, மீன் பிடிக்கும் வலைகள் ஆகிவற்றைச் சேர்த்துக் கூழாக்கி, அவற்றால் மெல்லிய பாலங்களை உருவாக்கினார். இதுதான் காகிதத்தின் தொடக்கமாகும். எகிப்தின் ரசிகர்கள் சொல்லும் வரலாற்றுச் செய்தி வித்தியாசமானது. Papyrus என்னும் நாணல் நதிக்கரைகளில் வளர்கிறது. இதற்கு காகிதத் தாவரம் என்னும் காரணப் பெயரும் உண்டு. எகிப்தியர்கள் இந்த நாணலால் காகிதம் செய்தார்கள். பேப்பர் என்னும் ஆங்கிலப் பெயரே, பேப்பிரஸ் என்னும் எகிப்திய வார்தையிலிருந்து வந்ததுதான். ஆகவே காகிதம் கண்டுபிடித்தவர்கள் எகிப்தியரே என்பது இவர்களுடைய ஆணித்தரமான வாதம்.

கடிகாரங்கள்

கடிகாரத்தைப் பயன்படுத்தியவர்களில் எகிப்தியர்கள் முன்னோடிகளாவர். ஆரம்ப நாட்களில், சூரிய நிழலை அடிப்படையாகக் கொண்ட சூரியக் கடிகாரங்களைப் பயன்படுத்தினார்கள்.நான்கு முகத் தூண்கள் இருக்கும். இதன் நிழலை வைத்துக் காலை, பகல், மாலை ஆகியவற்றைக் கணக்கிட்டார்கள். அடுத்த கட்டமாக நீர்க்கடிகாரங்கள் பயன்படுத்தப்பட்டன. கி.மு.1400 இல் இவை புழக்கத்தில் இருந்தன. தலைக்கீழ் கூம்பு வடிவத்தில் கல்லால் செய்யப்பட்ட பாத்திரம் இருக்கும். இதன் அடிப்பாக ஓட்டை வழியாகத் தண்ணீர் வெளியேறும். பாத்திரத்தில் 12 அளவுகள் குறிப்பிடப்பட்டிருக்கும். பாத்திரத்தில் தண்ணீரின் அளவை வைத்து எகிப்தியர்கள் நேரத்தைக் கணக்கிட்டார்கள். நேரம் அளக்கத் தெரிந்து விட்டது. அடுத்தது என்ன? நாட்காட்டிகள் என்னும் நிலையில் காலண்டர்களும் எகிப்தியரால் கண்டுபிடிக்கப்பட்டன.

மருத்துவம்

மருத்துவத்துறையில் எகிப்திய மக்கள் ஈட்டிக்கொண்ட சாதனையானது வியக்கத்தக்கதாக உள்ளது. நோய்களுக்கு ரணசிகிச்சை மூலம் வைத்தியம் செய்தனர். சிலவேளைகளில் தைலங்கள் தயாரிக்கப்பட்டு அவற்றின் மூலம் நோய் தீர்க்கப்பட்டது. உடலில் இருந்து உயிர் பிரிந்ததன் பின்னர் அதனைப் பாதுகாப்பதற்காக மார்பினை பிளந்து உடலின் உள்ளே மருந்து சாத்தி , தைலங்கள் இட்டு , அவ்வுடல் கெட்டுப் போகாதபடி பாதுகாத்தனர். பின்னர் உடலினைச் சுற்றி ஒரு வகையான துனியினால் வரிந்து மம்மிகளாக ஆக்கினர். ரணசிகிச்சை நடத்தப்படும் போது வைத்தியர்கள் முகத்தில் பல்வேறு வகையான முகமூடிகளை அணிந்து கொண்டனர். அந்த பகுதியல் சிறந்த டாக்டர்கள் எகிப்தில்தான் இருந்தார்கள். பக்கத்து நாட்டு நோயாளிகள் சிகிச்சை பெற எகிப்து வருவது வழக்கம். இந்த டாக்டர்கள் நோயாளிகளின் உடலை நன்கு சோதித்த பின்னர் எந்த சிகிச்சை அவருக்கு சரியாகும் என்று சிந்தித்து முடிவெடுத்தனர்.மூலிகை மருந்துகள், தாயத்துகள், யோகப்பிரார்த்தனைகளும் செய்யப்பட்டன.

அவர்களால் அக்காலத்திலேயே அறுவைச் சிகிச்சைகளை மேற்கொள்ளவும், உடைந்த எலும்புகளைப் பொருத்தவும் முடிந்தது. அத்துடன் அவர்கள் பல மருந்துகளைப் பற்றியும் அறிந்திருந்தனர். பண்டைக்கால எகிப்தியர் தேன் மற்றும் தாய்ப்பால் போன்றவையும் மருந்துகளாகப் பயன்படுத்தியுள்ளனர். காயங்கள் குணமாக அவற்றின் மேல் மாமிசம்,தேன் ஆகியவற்றை வைத்து அதன் மேல் பண்டேஜ் கட்டினார்கள். தேன் நல்ல கிருமி நாசினியாகவும். காயம் அழுகாமல் இருக்க, பரவாமல் இருக்க தேன் உதவியது. காயங்களால் ஏற்படும் வலியைக் குறைக்க அபின் என்ற போதை மருந்து பயன்படுத்தப்பட்டது. வெங்காயம், பூண்டு ஆகியவற்றை உணவில் சேர்த்தால் ஆரோக்கியம் பெருகும். ஆஸ்த்மா போன்ற நோய்கள் அண்டாது என்று என்று அவர்கள் கண்டறிந்தனர்.


எகிப்தியரின் மருத்துவத் துறை முன்னேற்றத்திற்கு மம்மிகள் அற்புதமான உதாரணங்கள் ஆகும். மம்மி என்றால் புதைப்பதற்காகப் பாதுகாக்கப்பட்ட உடல். உள்ளுறுப்புக்களை எடுத்தல், உப்புத் தொட்டிக்குள் அமிழ்த்தி வைத்தல், மெழுகு கொண்டு பதனிடுதல், பின் லினன் துணிகளால் பண்டேஜ் போல் சுற்றுதல் ஆகிய முறைகளைப் பயன்படுத்தினார்கள். Mumo என்றால் மெழுகு ஆகும். அதனால் தான் இந்த மேக்கப் போட்ட உடலுக்கு மம்மி என்று பெயர். மம்மி செய்ய உடற் கூறு, அறுவை சிகிச்சை, மருத்துவம் ஆகிய துறைகளின் அறிவு தேவையாகின்றது. இதனை எகிப்தியர்கள் அறிந்திருந்தார்கள். கடவுள் அவதாரங்களான மன்னர்கள் உயிர் வாழ்வார்கள் என்ற நம்பிக்கையில் மம்மி வடிவத்தில் அவர்கள் உடல்கள் கெடாதவாறு பாதுகாத்து அவற்றின் மேல் பிரமாண்ட பிரமிடுகளைக் கட்டினார்கள். முக்கிய நபர்கள், ராஜா, ராணிகள், மன்னர்களின் உடல்களை ‘மம்மி’ யாக்குவது எகிப்தியர்களின் வழக்கம். இது சாதாரண வேலையல்ல. உடற்கூறு, அறுவை சிகிச்சை, மருத்துவம் ஆகிய துறைகளை அறிந்த நிபுணர்கள் இதற்குத் தேவை.

இறந்தவர் உடலின் வயிற்றுப் பாகத்தைத் துளை போடுவார்கள். நுரையீரல், குடல் ஆகிய அங்கங்களை லாவகமாக வெளியே எடுப்பார்கள். மருத்துவப் பச்சிலைகளை வயிற்றுக்குள் நிரப்பித் துளை போட்ட இடத்தைத் தைத்து மூடுவார்கள். உடல் கெடாமல், அழுகாமல் இருக்க மூலிகைகள் பயன்படுத்தப்படும். இதயம் அப்படியே விடப்படும். மூளை மூக்கு வழியாக உறிஞ்சி எடுக்கப்படும். சில சமயங்களில் கண்கள் அகற்றப்பட்டு செயற்கை கண்கள் பொருத்தப்படும். அடுத்தாக, உடலை உப்புத் தொட்டிக்குள் நாற்பது நாட்களுக்கு வைப்பார்கள். உடலில் உள்ள திரவங்களை வெளியேற்றும் வழி இதுவாகும். உடலில் உள்ள திரவங்களால் உடல் அழுகும். எனவேதான் உப்பு இந்தத் திரவங்களை உறிஞ்சுவதால் உடல் அழுகுவது தடுக்கப்பட்டு விடுகிறது.

அதனோடு வேலை முடிந்துவிடுவதில்லை. உடலை வெளியே எடுத்து அதன் மீது மெழுகு பூசுவார்கள். இதன்மேல் லினன் துணிகளால் பாண்டேஜ் போல் சுற்றுவார்கள். மம்மியானது ராஜாவா, ராணியா, குட்டிமன்னரா, மந்திரியா, தளபதியா என்கிற சமூகத் தகுதியின் அடிப்படையில் தங்க, வைர, வைடூரிய நகை அலங்காரங்கள் அணிவிப்பார்கள். இவ்வாறான அனைத்து வேலைகளும் நிறைவு செய்யப்பட்ட பின்னர்தான் மம்மி தயாரானதாகக் கருதப்படும். சுமார் 3000 ஆண்டுகள் தாண்டியும் பல மம்மிகள் இன்று கிடைத்துள்ளன. எகிப்து நாட்டு மம்மி செய்யும் முறை, காலத்தை வெல்லும் மருத்துவ முறைதான். இந்த வகையில் எகிப்திய நாகரிகத்தில் மருத்துவத்துறை விஞ்ஞானத்திற்குப் பங்களிப்புச் செய்தன. இதனைக் கொண்டு நவீன காலத்தில் விஞ்ஞானத்தின் வளர்ச்சி துரிதமானது.

மொசப்பத்தேமிய நாகரிகம்


மொசொப்பொத்தேமியா தென்மேற்கு ஆசியாவைச் சேர்ந்த ஒரு பிரதேசமாகும். இது தைகிரிஸ், யூபிரட்டீஸ் ஆகிய இரண்டு ஆறுகளுக்கு இடைப்பட்ட வளமான வண்டல்மண் பகுதியாகும். இன்றைய ஈரான், ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளின் பகுதிகளை இது உள்ளடக்கியிருந்தது. பொதுவாக ‘மொசப்பத்தேமியா’ எனும் சொல் மேற்கு சிரியப் பாலைவனத்தாலும், தெற்கில் அராபியப் பாலைவனத்தாலும், தென்கிழக்கில் பாரசீக வளைகுடாவினாலும், கிழக்கில் ஸ்ராஸ் மலைகளாலும், வடக்கில் காக்கேசிய மலைகளினாலும் சூழப்பட்டுள்ளது. மேற்சொன்ன இரண்டு ஆற்றுச் சமவெளி முழுவதையும் சுற்றியுள்ள தாழ்நிலப் பகுதிகள் அனைத்தையும் உள்ளடக்கியதாகும். மொசப்பத்தேமியா உலகின் மிகப் பழைய நாகரிகங்கள் சில தழைத்தோங்கியிருந்த இடம் என்ற வகையில் மிகவும் புகழ் பெற்றது. மொசப்பத்தேமியா உலக நாகரிகத்தின் தொட்டில் என்று அழைக்கப்படுகின்றது.

பிராந்திய இடப் பெயராகிய மொசப்பத்தேமியாஎன்பது புராதான கிரேக்கச் சொற்களாகிய (மெசொ) “மத்திய’மற்றும் (பொத்தேமியா) “ஆறு” என்பவற்றிலிருந்து தோன்றியதுடன் ஆறுகளுக்கு இடைப்பட்ட நிலம் என பொருள்படுகின்றது. அனபாசில் மொசப்பத்தேமியா என்பது யூப்பிரதீஸ் நதிக்குக் கிழக்கே, வட சிரியாவில் அமைந்துள்ள நிலப்பகுதியாகும். அதன் மூலம் சிரியாவின் பகுதிகள் மட்டுமல்லாமல் ஈராக் மற்றும் தென்கிழக்கு துருக்கியின் கிட்டத்தட்ட அனைத்துப் பிரதேசங்களும் இதனுள் அடங்கும். இவர்களின் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் என்பன விஞ்ஞான வளர்ச்சிக்கு மிக முக்கியமான பங்களிப்பினை வழங்கியுள்ளது.

கணிதம்

மொசப்பத்தேமியர்களின் கணிதம் மற்றும் அறிவியல் அறுபதினை அடிப்படையாக (அடியெண் 60) கொண்ட எண் முறையைக் கொண்டது. இதன் அடிப்படையில் அவர்கள் 60 நிமிடம் ஒரு மணி நேரமாகவும், 24 மணிநேரம் ஒரு நாளாகவும் மற்றும் வட்டத்தின் கோணத்தை 360 பாகைகளாகவும் கணக்கிட்டனர். சுமேரிய நாட்காட்டி ஏழு நாள்களை அடிப்படையாகக் கொண்ட வாரத்தை உடையது. இக்கணக்கீட்டு முறையே முற்காலத்தில் வரைபடங்களை உருவாக்க அடிப்படையாக அமைந்தது. பாபிலோனியர்கள் பல வடிவங்கள் மற்றும் திடப்பொருட்களின் சுற்றளவு ஆகியவற்றைக் கணக்கிட சமன்பாடுகளை உருவாக்கினர். வட்டத்தின் சுற்றளவு, உருளையின் கனவளவு ஆகியவற்றையும் கணக்கிட அவர்கள் அளவை முறைகளைப் பயன்படுத்தினர். அவர்களின் தூரக்கணக்கீட்டு முறை பாபிலோனிய மைல் எனப்படும் தூர அளவைக் கொண்டிருந்தது. அது தற்காலத்தில் 7மைல்களுக்கு (11கிமீ) சமமானதாகும். இதன் அடிப்படையில் அவர்கள் சூரியனுடைய பயண தூரத்தையும் கால அளவையும் கணக்கிட்டனர்.

வானவியல்

சுமேரியர்களின் காலம் முதல், கோயில் மத குருமார்கள் கோள்கள் மற்றும் விண்மீன்களின் அமைவிடத்தைப் பொறுத்து அவர்கள் காலத்தைக் கணித்து வந்தனர். இது அசிரியர் காலம் வரை தொடர்ந்தது. இக்காலத்தில் அசிரியர்கள் லிம்மு (உயர் அரசு அலுவலரின் பதவியின் பெயர்) எனப்படும் அரசு அலுவலர்களின் பெயரில் ஒவ்வொரு வருடத்திற்குமான பட்டியல் தயாரித்தனர். அது மேற்கண்ட முறையில் நடப்பு நிகழ்வுகளுடன் கோள்கள் மற்றும் விண்மீன்களின் நிலையுடன் தொடர்புபடுத்தப்பட்டதாகவே இருந்தது. இம்முறை இன்னும் நடைமுறையில் உள்ளது. இது மிகச் சரியான முறையில் மொசப்பத்தேமியாவின் காலக்கணக்கீட்டு முறையில் வரலாற்றைத் துல்லியமாகக் கணக்கிட உதவுகிறது.

அவர்கள் ஒரு வருடத்திற்கான நிகழ்வுகளை முன் கூட்டியே கணித்தனர். கணிதத்தில் திறமை வாய்ந்தவர்களாக இருந்ததால் அவர்களால் சூரிய, சந்திர கிரகணங்களை முன்கூட்டியே கணிக்க முடிந்தது. வானவியல் அறிஞர்கள் ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஏதேனும் ஒரு காரணம் உண்டென்று நம்பினர். இது மதம் மற்றும் சடங்குகளுடன் தொடர்புடையதாக இருந்தது. அவர்கள் சந்திரனின் பயணத்தைக் கணக்கிட்டு அதன் அடிப்படையில் 12 மாதங்களைக் கொண்ட நாட்காட்டியைப் பயன்படுத்தினர். கோடை மற்றும் குளிர் காலம் என இரண்டு பருவங்களாக ஒரு ஆண்டின் பருவங்களைப் பகுத்திருந்தனர். இக்காலத்தில் இருந்துதான் வானவியல் என்ற ஒன்று தோற்றம் பெற்றது.


தொழில்நுட்பம்

மெசொப்பொத்தேமியர்கள் பல உயர் தொழில்நுட்ப முறைகளைக் கண்டறிந்து பயன்படுத்தியுள்ளனர். உலோக மற்றும் தாமிர வேலைகள், கண்ணாடி மற்றும் விளக்கு தயாரித்தல், ஐவுளி நெசவு, வெள்ளக்கட்டுப்பாடு, நீர் சேமிப்பு, மற்றும் பாசன முறை போன்ற பல தொழில்நுட்பங்ளை அறிந்திருந்தனர். இவர்கள் உலகின் வெண்கல காலகட்ட மக்களுள் ஒருவராக இருந்தனர். அவர்கள் இரும்புடன், செம்பு, வெண்கலம் மற்றும் தங்கங்களையும் பயன்படுத்தினர். நுற்றுக்கணக்கான கிலோ கிராம் கொண்ட மிக விலையுயர்ந்த உலோகங்களால் அரண்மனைகள் அலங்கரிக்கப்பட்டன. மேலும் அவர்கள் இரும்பு, தாமிரம் மற்றும் வெண்கலத்தை பயன்படுத்தி வாள்கள்,ஈட்டிகள், கவசங்கள், குத்துவாள், தண்டாயுதம் போன்ற ஆயுதங்களையும் செய்தனர். சமீபத்திய கருதுகோள்களின்படி கி.மு 7 ஆம் நூற்றாண்டின் சன்கெரிப் என்ற அசிரிய மன்னன் ஆக்கிமிடிசின் தத்துவ கருகோள்களின்படி இயங்கும் அமைப்பைப் பயன்படுத்திப் பாபிலோனில் தொங்கும் தோட்டம் மற்றும் நினிவே என்ற இடத்திற்கான தண்ணீர் இறைக்கும் இடத்தினை ஏற்படுத்தினான் என அறியப்படுகின்றது. இக்கிரேக்கக் கண்டுபிடிப்பு பிற்காலத்தில் தண்ணீர் இறைக்கும் அமைப்புக்களுக்கு முன்மாதிரியாக இருந்தது. பின்னர் பார்த்தியன் அல்லது சசானியர்களின் காலங்களில் பாக்தாத் மின்கலம் எனப்பட்ட உலகின் முதல் மின்கலம் மொசப்பத்தேமியாவில் உருவாக்கப்பட்டது.

அறிவியல் துறைசார் சாதனைகள்

சுமேரியரின் அறிவியல்துறைப் பண்புகளில் மிகவும் முக்கியமானது Sexegezhimal system என்பதாகும். அதாவது 60 ஆகப் பகுப்பது என்பது இதன் பொருளாகும். ஒரு நாளில் 24 மணித்தியாலயங்கள் எனவும், ஒரு மணித்தியாலயம் 60 நிமிடம் எனவும், ஒரு நிமிடம் 60 செக்கன் எனவும் பகுத்துத் தமது நீர்க் கடிகார முறையினைக் கணக்கிட்டுக் கொண்டனர். இது சந்திரனை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டக் கணித முறையாகும். சுமேரியரின் அறிவியல்துறைச் சாதனைகளில் சக்கரத்தின் உபயோகம் முக்கியமானதாகும். சக்கரத்தின் உதவியுடன் பொருட்களை ஓரிடத்தில் இருந்து கொண்டு செல்ல கற்றுக் கொண்டனர். சக்கரத்தின் உதவியுடன் தரமான மட்பாண்டங்களை வனையக் கற்றுக் கொண்டனர்.

சக்கரத்தின் உதவியுடன் நீர்ச்சில்லு முறையினை உருவாக்கிக் கொண்டனர். சக்கரத்தின் உதவியுடன் தானியங்களில் இருந்து எண்ணெய், மா போன்றவற்றினைத் தயாரிக்கக் கற்றுக் கொண்டனர். எனவே சுமேரியர் முதன்முதலாகச்சக்கரத்தின் பாவனையை அறிமுகம் செய்தமையானது தரை மார்க்கமாக போக்குவரத்து பாதைகள் உருவாகுவதற்கு வழிவகுக்கப்பட்டது. சுமேரியருடைய சக்கரவண்டி அவர்களது முக்கியமான தொழில்நுட்பப் புரட்சியின் சாதனையாகக் கொள்ளப்படுகின்றது.

பாபிலோனியர் நாகரிகம்


பண்டைய பாபிலோனிய நாகரிகம் என்பது தற்போதுள்ள ஈராக் மற்றும் சிரியா போன்ற நாடுகளில் கி.மு 1800 ஆம் ஆண்டு தோன்றியது. பாபிலோனியர்கள் கணிதம், வானவியல், அறிவியல் போன்ற அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கினர். குறிப்பாக நீர்ப்பாசனத்திற்கு கால்வாய் வெட்டுதல், தானியப்பொருள் உற்பத்தி, கட்டிடங்களை அமைத்தல் போன்ற பல்வேறு தொழில்களில் ஈடுபட்டனர். இவ்வேலைகளுக்குத் தேவையான நாட்கள் மற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கையைத் துல்லியமாகக் கணக்கிட மெஸபடோமிய ஆட்சியாளர்கள் கணிதவியலாள்களின் துணையை நாடினார்கள். பாபிலோனியர்கள் தங்கள் முன்னேற்றத்திற்கு கணிதத்தை அடிப்படையாகக் கருதினர். எகிப்தியர்களும் கிரேக்கர்களும் கணிதத்தை அடிப்படையாகக் கொண்டு தங்கள் அறிவியலை மேம்படுத்தினர். இவ்வாறு பாபிலோனியர்கள் பல்வேறு வகைகளில் சாதனைகள் நிகழ்த்தினர். இது விஞ்ஞானத்திற்கு பல்வேறு விதத்தில் பங்களிப்பு செய்தது.

தொழில்நுட்பம்

தொழில்நுட்ப வளர்ச்சியின் கீழ் நோக்கும் போது பாபிலோனியர்கள் வேட்டைக்காரர்களாகவும், பின் மந்தை மேய்ப்பவர்களாகவும் இருந்து விவசாயத்தைக் கண்டறிந்தனர். சக்கரங்கள் கண்டுபிடிப்பு, கப்பல் கட்டுதல், பீங்கான், மட்பாண்டங்கள் உருவாக்கம், கரையோரத்தை அண்டிய விவசாயம் செய்தல் எனப் பல விடயங்களில் சிறந்து விளங்கினர். கருவிகளின் உருவாக்கம் என்னும் வகையில் தீக்கருவிகள், எலும்பு கொம்புகளிலான கருவிகள், பாய்கள், கூடைகள், வள்ளங்கள் போன்றவற்றையும் உருவாக்கினர்.


வானியல்

கி. மு 8 மற்றும் 7 ஆவது நூற்றாண்டுகளில் பாபிலோனிய வானியலில் ஒரு புதிய அணுகுமுறை உருவாக்கப்பட்டது. பாபிலோனிய வானியல் அறிஞர்களால் பிரபஞ்சத்தில் இயற்கை இயல்புகளைத் தத்துவங்களோடும், கோள்களோடும் தொடர்புப்படுத்திப் புதிய வானியல் கொள்கைகள் உருவாக்கப்பட்டு அவை பயிற்றுவிக்கப்பட்டன. இது வானியல் தத்துவத்திற்கான ஒரு முக்கியமான பங்களிப்பாகும்.இவர்களின் இப்பங்களிப்பு விஞ்ஞானப் புரட்சி எனக் குறிப்பிடப்படுகின்றது. இப்புதிய முறையிலான வானியலைக் கிரேக்கர்களும் பின்பற்றி அதனை மேம்படுத்தினர்.

செல்யூசிட் மற்றும் பார்த்தியம் முறையிலான வானிலை அறிக்கைகள் முற்றிலும் அறிவியல் முறையிலேயே கணக்கிடப்பட்டது. அறிவியல் வளர்ச்சியடையாத அக்காலத்திலேயே இது போன்று துல்லியமாக நிகழ்கவுகளைப் பாபிலோனியர்கள் மிகச்சிறந்த முறையிலேயே கணக்கிட்டது எவ்வாறென இன்று வரை அறிய முடியாததாகவே உள்ளது. பாபிலோனியர்களின் கோள்களின் இயக்கங்களை முன்கூட்டியேக் கணிக்கும் வானியல் முறை மொசப்பத்தேமிய வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகின்றது. மொசப்பதேமிய வரலாறு கிரகங்கள், இயக்கங்கள் கணிக்கும் முறைகள் பாபிலோனிய வளர்ச்சியில் ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகின்றது. இவ்வாறு வானியலில் பாபிலோனியர் சாதனை ஈட்டியுள்ளனர்.

இவைகளுள் பொதுவானவையாக நாட்காட்டி தயாரிப்பு,விண்ணுலகத் தகவல் பற்றிய எதிர்வு கூறல், பயிர்ச்செய்கையின் பருவகாலம், நதிகளின் வெள்ளப் பெருக்கு, நாளாந்த வாழ்க்கை நிகழ்வுகளைக் கணித்தல், வாரம் ஒன்றில் ஏழு நாட்கள், வருடம் ஒன்று பன்னிரெண்டு மாதங்கள், பகல் இரவு மொத்தமாக 24 மணித்தியாலயங்கள் என அவர்களின் கண்டுபிடிப்புக்கள் வியக்கத்தக்கவையாகக் காணப்படுகின்றன. சந்திர கிரகணங்கள்ஒரு குறிப்பிட்ட சுழற்சி முறையில் நிகழ்வதை முதன் முதலில் கண்டறிந்தனர். இது சாரோசு எனப்படும். சோதிடம், கோள்களின் பெயர்ச்சிகளைக் கண்டறிவதன் மூலம் மனிதர்களின் எதிர்காலத்தைப் பற்றிக் கூறமுடியும் என்றனர். ஒரு மணித்தியாலயம் 60 நிமிடம், ஒவ்வொரு நிமிடமும் 60 விநாடி என்று நிச்சயித்திருந்தனர்.

கிரேக்கப் பாபிலோனியரும் வானியலாளருமான செலூசியா (கி.மு 190) என்பவர் அவருக்கு முன் வாழ்ந்த வானியல் அறிஞரான புளுடார்க் என்பவரது சூரிய மையக்கொள்கையைக் கற்றிருந்தார். எனவே புளுடார்க்கின் கொள்கையான பூமியானது தனது சொந்த அச்சில் சுழன்று கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது என்ற கொள்கையை அவர் நிரூபிக்க முயன்றார். ஆனால், சந்திரனின் ஈர்ப்புவிசையால் கடலில் ஓதங்கள் உருவாகின்றன என்ற இவரது கொள்கையைத் தவிர, இவரது வாதங்கள் கிடைக்கப் பெறவில்லை. பாபிலோனிய வானியலானது கிரேக்க வானியல், பாரம்பரிய இந்திய வானியல், சசாந்திய பேரரசு, பைசாந்திய பேரரசு, இடைக்கால இஸ்லாமிய வானியல், மத்திய ஆசியா மற்றும் மேற்கு ஐரோப்பா ஆகியவற்றில் வானியலுக்கு மிகவும் அடிப்படையாக அமைந்தது.

மருத்துவம்

கி.பி 2ஆம் நூற்றாண்டின் முதல் பாதியிலேயே பழமையான மருத்துவ நூல்கள் பாபிலோனியப் பகுதியில் எழுதப்பட்டுள்ளன. மிக விரிவான பாபிலோனிய மருத்துவ நூலான மருத்துவக் கையேடு நூலானது உம்மானு அல்லது தலைமை அறிஞர் என்றழைக்கப்படும் போர்ச்சிப்பாவின் ஈசகில்-கின்-அப்லி என்ற அறிஞரால் பாபிலோனிய அரசரான அதாத் - அப்லா - இத்தினியா என்பவரது ஆட்சியில் எழுதப்பட்டது (கி.மு1069-1046). அக்காலத்திய எகிப்திய மருத்துவத்துடன் இணைத்து பாபிலோனியர்கள் அறுவைச் சிகிச்சை, நோய்ப் பகுப்பாய்வு, உடல் பரிசோதனை மற்றும் மருந்துகள் போன்றவற்றில் புதிய அணுகுமுறைகளை அறிமுகப்படுத்தினர். மருத்துவக் கையேடு நூலில் சிகிச்சை முறைகள், நோய்க்கான காரணிகள், முன்கணிப்பு முறைகள் ஆகியனவும் நோய்களை அறிவதற்கும், நோயாளியின் உடலில் கண்டறியப்பட்ட அறிகுறிகளை இணைத்து அவற்றை ஏரண, தருக்க விதிகளுடன் இணைத்து விரிவாகப் பகுத்தறிவதற்கான முறைகளும், நோய் அறிகுறிகளுக்கான பட்டியல் ஒன்றும் உருவாக்கப்பட்டது.

பாபிலோனிய மருத்துவ முறையில் காயத்திற்குக் கட்டுப் போடுதல், களிம்பு தடவுதல், மாத்திரைகள் ஆகியவற்றின் மூலம் நோயாளியின் நோயைக் குணப்படுத்த முயன்றனர். இம்முறையில் குணப்படுத்த முடியாதவரைச் சபிக்கப்பட்ட நோயாளியாகக் கருதிப் பேயோட்டும் முறை அக்காலத்தில் நடைமுறையில் இருந்து வந்தது. ஆனால் ஈசகில் - கின் - அப்லி என்பவரது மருத்துவ நூல் வெளிப்படையான ஏரணங்களையும், ஊகங்களையும் அடிப்படையாகக் கொண்ட நவீன முறையில் நோய்ப் பரிசோதனையையும், ஆய்வு செய்யும் முறைகளையும் கொண்டது. இதனடிப்படையில் ஒரு நோயாளியின் உடலில் ஏற்பட்டுள்ள நோய், நோய்க்காரணி, அதன் வளர்ச்சி ஆகியவற்றினை அறிந்து நோயாளியைக் குணப்படுத்த வாய்ப்பு இருந்தது.

அத்துடன் பல்வேறு வகையான வலிப்பு மற்றும் அதனுடன் தொடர்பான நோய்களும் அதற்கான அறிகுறிகளும் கூறப்பட்டுள்ளது. அறுவைச் சிகிச்சை, மனித உடலுக்குத் தேவையான மருந்துகள், 500 மருந்துகளின் பெயர்களைக் காட்டும் களித்தகடுகள் நிப்பூர் நகரத்தில் கண்டெடுக்கப்பட்டன. ஹமுராபி மன்னன் மருத்துவ ஒழுக்க விதிகளை அறிமுகம் செய்தார். சிகிச்சையின் போது தவறுதலாக வைத்தியர் காயத்தினை ஏற்படுத்தினால் வைத்தியரின் இரண்டு கைகளும் துண்டிக்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார். பாபிலோனியர் தங்களது கண்டுபிடிப்புக்களைக் களிமண் ஏடுகளில் பதிவு செய்தனர். இந்தக் களிமண் ஏடுகளின் மூலமே இன்று அவர்களின் பாரரம்பரியத்தையும், கலாச்சரத்தையும், அறிவியல் சிந்தனையையும் அறிய முடிகிறது.



சுமார் 3400 ஆண்டுகளுக்கு முன்னர் பாபிலோனியர் களிமண் ஏட்டை உருவாக்கியுள்ளனர். களிமண் ஏடு வட்ட வடிவத்தில் அமைந்த கடல் வழிப் போக்குவரத்தைக் குறிக்கிறது. பாபிலோனியர்கள் ஏற்படுத்திய நான்கு களிமண் ஏடுகளின் மூலமே இன்று நாம் அவர்களின் கணித ஆற்றலை அறிந்து கொள்ள முடிகிறது. MitYale taolet YOC 7289Ï PlimptHn 322Ï Îhe susa taolet abd the tell dhioayi taolet எனும் ஏடுகளாகும். இதில் PlimptHn 322 கணித அடிப்படைகளை எடுத்துக் காட்டுகிறது. வர்க்க எண்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. எனவே கணிதத்தில் மிகப் பிரபல்யமான ‘பைத்தகரஸ்’ தோற்றத்தைப் பபிலோனியர்கள் பைதகரஸ் காலத்திற்கு 1200 ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்திருந்தனர். ஆனால் இது போன்ற களிமண் ஏடுகளை அதில் காணப்படும் வர்க்க எண்களை அடிப்படையாகக் கொண்டு வாழ்கைக்கான கணிதப் புதிர்களுக்கு தீர்வு கண்டனர்.

பாபிலோனியர்கள் அறிவு நுணுக்கத்துடன் இருபடி, முப்படி சமன்பாடுகளின் தீர்வைக் கண்டறிந்து தங்கள் வாழ்வியல் தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டனர். கிட்டத்தட்ட 3700 வருடங்களுக்கு முன்னர் இந்தத் தீர்வை வழங்கியதால் இன்று வரைக்கும் கணித அறிஞர்கள் வியப்படைகிறார்கள். பாபிலோனியர்கள் தங்களின் கணித சிந்தனையால் கோள்களின் பாதையையும், நட்சத்திரங்களின் தோன்றல், மறைவு ஆகிய காலக்குறிப்புகளையும் ஏடுகளில் பதிவு செய்து சமுதாயத்திற்குப் பெரும் பங்காற்றினர்.

முடிவுரை

கண்களால் நம்பமுடியாத அளவிற்கு வியத்தகு ஆச்சரியங்களை நவீன விஞ்ஞானம் உலக மக்களுக்கு குறைவின்றி வழங்கிக் கொண்டிருக்கின்றது. மனித விலங்குகளினது படைப்புக்களின் எல்லை மிகவும் பரந்துபட்டதாகும். விஞ்ஞானத்திற்கான ஆரம்பம் மிகவும் பழமை வாய்ந்ததாகும். காலச்சக்கரத்தின் சுழற்சியில் பல மாற்றங்களை எதிர்கொண்டு விஞ்ஞானம் இன்று பாரிய துறையாகப் பரிணமிக்கின்றது. இத்தகைய விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்கு பழமையான நாகரிகங்கள் தமது காத்திரமான பங்களிப்பினை வழங்கியுள்ளமை மிகவும் முக்கியமான விடயமாகும். விஞ்ஞானத்தினது வெற்றி நிறைந்ததான பாதை வழியே நாகரிகங்களுக்கு என்று ஒரு தனி இடம் எப்போதும் வரலாற்றில் நிலைத்திருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

உசாவியவைகள்

1. https://www.google.lk/amp/s/jayabarathan.wordpress.com

2. htt://ta.m.wikipedia.org,wiki, மொசப்பத்தேமியா

3. http://m.facebook.com, viyapugal, posts

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/history/p3.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License