இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
இலக்கியம்

கம்பராமாயணத்தில் சங்கஇலக்கியப் புறத்திணை மரபுகள்

கோ. தர்மராஜ்


சங்கப்புலவர்கள் தன் இலக்கியங்களில் அகவாழ்விற்கு மிகுதியான சிறப்பினை அளித்துப் பாடினாலும் புறவாழ்க்கைக்கும் அதற்கு நிகரான சிறப்பினை அளித்துள்ளனர். அதனாலேயே இலக்கியங்களில் வாழ்வின் இரு கண்களாக அகமும், புறமும் பேசப்படுகின்றன. அத்தகையச் சிறப்பைப் பெற்ற புறத்திணைக்குக் கம்பர் தம் காப்பியத்தில் இராம இராவணப்போரினுக்கு முக்கியத்துவம் கொடுத்து தனியொரு காண்டமே பாடியுள்ளார். பத்தாயிரத்து ஐநூறு பாடல்கள் கொண்ட இக்காப்பியத்தில் நாலாயிரம் பாடல்கள் யுத்தகாண்டத்தில் உள்ளன. இக்காப்பியத்தின் கதை வளர்ச்சியில் தாடகைவதை, வேள்விக்காக அரக்கர்களுடன் போர், பரசுராமன் போர், கரன்வதை, வாலிவதை போன்ற பலபோர்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். அந்த அடிப்படையில் கம்பர் பின்பற்றும் புறத்திணை மரபுகளை யுத்தகாண்டத்தில் நன்கு அறியமுடிவதால் கம்பர் உணர்த்தும் போர் மரபுகளைச் சங்க இலக்கிய போர் மரபுகளான வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் போன்ற திணைகளுடன் ஒப்பிட்டு ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

வெட்சி

முல்லைநிலத்தில் வாழும் பசுக்களைக் குறிஞ்சியில் திரிந்து பாலையில் வாழ்கின்றவர்கள் கவர்ந்து செல்கின்றனர். அதன் விளைவாக நிகழும் போரே வெட்சிப்போர். ஆகையால் இப்போர் முறையைக், “குறிஞ்சி, முல்லை நிலங்களின் எல்லைகளில் நிகழ்ந்த அந்நிலத்திற்கேயுரிய தனிப்போர் முறையே வெட்சிப்போர்” (Rm Periuakaruppan, Tradition and Talent in Cankam Poetry, pp, 104-15) என்று இராம.பெரியகருப்பன் குறிப்பிட்டுள்ளார். தனிமனிதர்கள் நிகழ்த்திய இப்போர் நாளடைவில் இரண்டு பெருவேந்தர்கள் போரிட முனைந்த போது அதன் முதற்படியாக நிரை கவர்தலாக மாற்றம் பெற்றன. பின் நிரைகவர்தல் இன்றியும் நிரை கவர்ந்ததாகப் பாடுவதும் ஒரு மரபாக விளங்கியதையும் உணர முடிகின்றது.

இராமாயணத்தில் ஆநிரை கவர்தலும், மீட்டலுமாகிய வெட்சிப்போர் இடம்பெறவில்லை. இராமஇராவணப்போர் கடலுக்கு அப்பால் இலங்கையில் நடந்தது. இராமன் தவக்கோலம் பூண்டு காட்டில் வாழ்ந்தான். இராவணன் ஆநிரைகளே செல்வம் என்ற நோக்கில் வாழ்ந்தவனும் அல்லன். இவர்கள் இருவர் போருக்கு முக்கியக் காரணமாகச் சீதை அமைந்துவிட்டாள். கம்பராமாயணக் காப்பியக் கதையை உற்று நோக்கினால் நிரை கவர்தலும் மீட்டலுமாகிய வெட்சிப்போருக்கு இடமில்லை. எனவே காப்பியத்தில் இப்போர்முறை காட்டப்படவில்லை என்றாலும் வெட்சித்திணைக்குரியத் துறைகளான வேய், உண்டாட்டு, பூவைநிலை போன்றவைகள் காணப்படுவதை உணரமுடிகின்றது.



வஞ்சி

“எஞ்சா மண்ணாசை வேந்தனை வேந்தன்
அஞ்சுதகத் தலைச்சென் றடல்குறித் தன்றே” (தொல். புற: நூ. 64)


என்ற நூற்பாவில் வஞ்சித்திணைக்கு தொல்காப்பியர் இலக்கணம் கூறுகிறார். காடுகள் நிறைந்த உலகமாகிய முல்லைப்புறத்தில் மண்ணாசைக் காரணமாகப் போர் புரிந்த வேந்தன், அம்மண்ணைக் காத்தற்கு எதிரே சென்று போர் புரிவது வஞ்சிப்போர் என்பதாகும். “பண்டைக்கால அரசர்கள் தம்மைப் பெருவேந்தர்கள் எனப்பலரும் போற்ற வேண்டும் என்ற விருப்பம் இருந்ததால் தம் நாட்டினை விரிவுபடுத்தப் போரிடும் இரண்டு அரசாளும் வஞ்சி வேந்தராவர்” என்று இராம. பெரியகருப்பன் கூறியுள்ளது மனங்கொள்ளத்தக்கதாகும். கம்பர் வஞ்சித்திணைப்பற்றி தம் கருத்தைப் பரதன் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார். இதனை,

“தஞ்சு என ஒதுக்கினர் தனது பார் உளோர்
எஞ்சல் இல் மறுக்கினோடு இரியல் போயுற
வஞ்சி சென்று இறுத்தவன் வாகை மீக்கொள
அஞ்சின மன்னவன்” (இராமாயணம் ; 2210)


என்ற வரியில் மண்ணாசை கொண்ட பகைவேந்தர் வஞ்சிசூடி ஓர் அரசனும் அவன் மக்களும் அஞ்சும் வண்ணம் அந்நாட்டில் சென்று இறுப்பதே வஞ்சி என்று கம்பர் குறிப்பிடுகிறார். இக்கருத்திற்கு அரணாக இராமனது போர் அமைகிறது. இராம இராவணப்போர் இராமன் முற்றுகையிடுதலான் வஞ்சிப் போராகத் தொடக்கம் பெற்றது. இராமன் வஞ்சிவேந்தன் ஆகிறான். போர் செய்ய வந்தவனை உள்ளே செல்லவிடாமல் அரண் நின்று தடுக்கிறது. இலங்கை அரணின் திண்மை, உயர்ச்சி காவல் பற்றிய செய்திகளை ஊர்தேடு படலம், இலங்கைக் கேள்விப் படலம் ஆகிய இரு படலத்திலும் அனுமன், வீடணன் பாத்திரங்களின் வாயிலாக கம்பர் விளக்கியுள்ளதனைக் காணமுடிகிறது. அத்தகைய மதிற்காவலை முறித்து அரணைக் கைப்பற்ற முயன்ற வானர சேனையின் செயல் உழிஞைப் போராகிறது. வஞ்சி வேந்தனாக இறுந்து முற்றுகையிட்ட இராமன் இப்பொழுது உழிஞை வேந்தனாகிறான். எனவே வஞ்சியும், உழிஞையும் தொடர்புடையன என்பது போல தோன்றுமாறு, நிகழ்ச்சியடிப்படைக்கேற்பக் கம்பர் கதையைச் சங்க இலக்கியப் புறத்திணை அடிப்படையில் அமைந்துள்ளதைக் காணமுடிகின்றது.



உழிஞை

“முழுமுத லரணம் முற்றலுங் கோடலும்
அனைநெறி மரபிற் றாகு மென்ப” (தொல்.புற:நூ.66)


எனத் தொல்காப்பியர் உழிஞைத் திணைக்கு பொதுவிலக்கணம் கூறியுள்ளார். அரணை வளைப்பதும் பின் அழிப்பதும் பகைவேந்தன் ஒருவனது செயல் உழிஞை என்று இளம்பூரணர் சுட்டியுள்ளது மனங்கொள்ளத்தக்கதாகும். புறத்தோன் மதிலை வளைப்பதும் அகத்தோன் பகைவரை விரட்டி மதிலைக் காப்பதும் ஆகிய இருவரது செயல்களும் உழிஞைத்தினை என்று நச்சினார்க்கினியர் விளக்கியுள்ளார். கம்பர் பிற்கால இலக்கண அடிப்படையில் இராம இராவணப் போரை வருணித்துள்ளார்.

இலங்கை மதிலின் தெற்கு வாயிலில் அங்கதனும், கிழக்கு வாயிலில் நீலனும், மேற்கு வாயிலில் அனுமனும், தலைமையேற்றுப் போரிட நின்றனர். அப்போது அவர்கள் உழிஞை சூடி வந்தனர் என்பதை அனுமன் வாயிலாகக் கம்பர் கூறுகிறார். அவற்றை,

“மாருதி மேலை வாயில் உழிஞை மேல் வருவதானான்” (இராமாயணம்; 6950)

என்ற அடியில் உணரலாம். உழிஞை சூடி போர் தொடுக்க வரும் இவர்களை அரக்கர் நொச்சி சூடி வந்தனர் என்பதை,

“உழிஞையைத் துடைக்க நொச்சி உச்சியில்
கொண்டது அவ்வூர்” (இராமாயணம்; 6957)


என்றும் கூறுகிறார். கம்பர் இவ்வாறு உழிஞையோர் செயலைக் கூறியபின் நொச்சியோர் செயலைக் கூறிச் சென்றுள்ளதை உணரமுடிகிறது.



தும்பை

உழிஞை, நொச்சிப் போர்களின் தொடர்ச்சியாகத் தும்பைப் போரினைக் கம்பர் காட்டுகிறார். சங்கப் பாடல்கள் அனைத்தும் தன்னுணர்ச்சித் தனிநிலைப் பாடல்கள் அஃதாவது உதிரிப் பாடல்களாதலின் அவற்றுள் ஏதேனும் ஒரு புறத்திணை மட்டுமே பாடப்படும். இளங்கோவடிகள் தம் வஞ்சிக்காண்டத்தில், அவை தொடர்நிலைச் செய்யுளாதலின் பல்வகைப் போர்களையும் ஒன்றன்பின் ஒன்றாகக் கூறிக் கதையை வளர்த்துச் செல்வார். கம்பர் அவர் வகுத்த மரபையும் பின்பற்றியே புறத்திணை போர்களை அடுக்கிக் கூறுகிறார். நொச்சியில் தம் வெற்றிக்குப் பின்னும் இராவணனின் படைத்தலைவர்களும் வீரர்களும் களம் புகுந்தனர். உழிஞை, நொச்சிப் போர்களில் மொத்தமாக வானரர், அரக்கர் போரினைக் காட்டிய கம்பர் அடுத்து இருபக்கப் படைத்தலைவர்களுக்கிடையே நிகழ்ந்த நிகழ்வினைக் காட்டுகிறார். சுக்கிரீவனோடு வச்சிரமுட்டியும், இடும்பனோடு கும்பானுவும், நீலனோடு பிரகத்தனும், அங்கதனோடு சுபாரீசனும், அனுமனோடு துன்முகனும் மதில் வாயில்களில் போரிட்டனர். அரக்கர் தலைவர்களைக் கொன்று வானரப்படைத் தலைவர்கள் தம் திறனை நிறுவினர். எனவே இவை தும்பைப்போர் எனலாம். அரக்கர் படைத்தலைவரது இறப்பை ஒற்றர் வாயிலாக அறிந்த இராவணன் போர்க்காலம் பூண்டுத் தும்பைப் பூச்சூடிப் போருக்கு வந்தான். மைந்து பொருளாக வந்த இராவணனை அழிக்க இராமனும் களத்திற்குத் தும்பை சூடி வந்தான் என்று கம்பர் கூறுவதன் வாயிலாக அறியமுடிகின்றது.

“மைந்து பொருளாக வந்த வேந்தனைச்
சென்றுதலை யழிக்குஞ் சிறப்பிற் றென்ப” (தொல்.புற:நூ.70)


என்று தொல்காப்பியர் தும்பைத்திணைக்குக் கூறும் பொது இலக்கணத்திற்கேற்ப இப்போர் அமைந்துள்ளது எனலாம். வஞ்சிப் போராகத் தொடங்கப்பெற்ற இராம இராவணப்போர் உழிஞை, நொச்சியாகித் தும்பைப் போராகவும் வளர்ந்துள்ளதைக் காணமுடிகின்றது.

வாகை

உலகில் பலவகைப்பட்ட மனிதர்களும் தத்தம் தொழிலில் சிறப்புற வாழ்வதே வாகை என்கிறார் தொல்காப்பியர். இதனை,

“தாவில் கொள்கைத் தத்தங் கூற்றைப்
பாகுபட மிகுதிப் படுத்த லென்ப” (தொல்.புற:நூ.73)


என்ற நூற்பாவின் வழிக் காணலாம். கம்பர் காப்பியத்தில் வாகைத்திணைக் கருத்துக்கள் நிறைந்த பாடல்கள் உள்ளன. பல நிலைகளிலும் பகைவர்களோடு உறழ்ந்து பெறும் வெற்றியே வாகை என்றும் இந்நிலையடைந்தவர்கள் வாகைமலர் சூடும் வழக்கம் உண்டு என்ற மரபினையும் கம்பர் காட்டியுள்ளார்.

இலக்குவனோடு போரிடப்பெரும் படையுடன் இந்திரசித்தன் வந்தான். தன்னை வளைத்த அப்படையோடு போரிட்டு தன் திறனை நிலைநாட்டி இலக்குவணன் வாகை சூடினான் என்று கம்பர் குறிப்பிடுகிறார். அதனை,

“கோடிநூறு அமைந்த கூட்டத்து இராக்கதர் கொடித்தின்தர்
ஆடல்மாக் களிறும் மாவும் கடாவினர் ஆர்த்து மண்டி
மூடினார்; மூடினாரை முறைமுறை துணித்து வாகை
சூடினான், இராமன் பாதம் சூடிய தோன்றல் ம்பி” (இராமாயணம்; 8039)


என்ற பாடலடியில் போரில் வெற்றி பெற்று, பெற்ற மகிழ்ச்சியை வாகைப்பூவைத் தலையில் சூடி மகிழ்ந்தனர் என்று சிந்தனைப் புலப்படுவதை உணரமுடிகின்றது.



காஞ்சி

நிலையாமையைக் கூறுவது காஞ்சி என்கிறார் தொல்காப்பியர்.

“பாங்கருஞ் சிறப்பிற் பல்லாற்றானும்
நில்லா வுலகம் புல்லிய தெறித்தே” (தொல்.புற:நூ.76)


என்ற நூற்பாவில் காணலாம். தொல்காப்பியர் கூறிய நிலையாமைக் கருத்துக்களின் வழிநின்று கம்பரும் குறிப்பிடுகிறார். அவற்றை,

“பொய்ம்மை யாக்கை” (இராமாயணம்; 2214)

“பிணிக்கு உறுமுடை உடல்” (இராமாயணம்; 2216)

“நீர்க்கோல வாழ்வு” (இராமாயணம்; 7426)


மேலே கூறிய மூன்று அடிகளிலும் உடல் நிலையாமையையும் வாழ்வு நிலையாமையையும் கம்பர் குறிப்பிடுகிறார். மேலும்,

“இறத்தலும் பிறத்தலும் இயற்கை” (இராமாயணம்:2444)

“விண்ணு நீர் மொக்குளின் விளியும் யாக்கை” (இராமாயணம்; 2453)

“உண்மை இல் பிறவிகள் உலப்பில் கோடிகள்” (இராமாயணம்; 2445)

“நின்றும் சென்றும் வாழ்வன யாவும் நிலையாவால்” (இராமாயணம்; 3254)


போன்ற நிலையாமைக் கருத்துக்களைக் கம்பர் குறிப்பிடுகிறார். தந்தையின் இறப்பிற்கு வருந்திய இராமனை வசிட்டர் தேற்றுவதாக,

“கண்முதல் காட்சிய கரையில் நீளத்த
உள்முதல் பொருட் கெலாம் ஊற்றம் ஆவன
மண்முதல் பூதங்கள் மாயும் என்றபோது
எண்முதல் உயிர்க்கு நீ இரங்கல் வேண்டுமா?” (இராமாயணம்; 2448)


என்ற பாடலில் உணரலாம். நிலையாமைக் கருத்தமைந்த பாடல்களைத் தொல்காப்பியர் கூறும் வண்ணம் காஞ்சித்திணையைச் சார்ந்தவை எனலாம். ஆனால் கம்பர் நிலையாமைக் கருத்தைக் கூறும் எந்தவொரு இடத்திலும் காஞ்சி என்னும் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்பதையும் அறியமுடிகிறது.

நிறைவுரை

* இராம இராவணப்போர் வஞ்சிப்போராகத் தொடக்கம் பெற்றும் உழிஞைப் போராகிப் பின் தும்பைப் போராக மாற்றம் பெற்றதை உணரமுடிகின்றது.

* இராமாயணத்தில் வஞ்சி, உழிஞை, தும்பைப் போன்ற போர்கள் சிறப்பாக இடம் பெற்றிருந்தன. ஆனால் கதை அமைப்பால் வெட்சிப்போர் பற்றிய குறிப்புக்கள் இடம் பெறவில்லை என்பதை அறியமுடிகின்றது.

* வஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை, வாகை என்ற புறத்திணைப் பெயர்களைக் கம்பர் குறிப்பிட்டிருந்தாலும் காஞ்சித்திணைப் பெயர் மட்டும் குறிப்பிடப்படவில்லை என்பதைக் காணமுடிகின்றது.

* கம்பர் பழங்கால இலக்கிய மரபைப் பின்பற்றும் போது, அவர் காலத்தில் வழக்கில் இருந்த பிற்கால வளர்ச்சியினையும் கருத்தில் கொண்டு கவிதை புனைந்துள்ளார் என்பது புலப்படுகிறது.

* தமிழர்களின் போர் மரபுகளையும், துறை மரபுகளையும் காட்டும் வண்ணமாகப் பல செய்திகளைப் புகுத்தி இராம, இராவணப் போரினைக் கம்பர் பாடியிருப்பது போற்றுதற்குரியதாகும்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p119.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License