இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
இலக்கியம்

பெரியாழ்வாரின் பக்தி நெறி

முனைவர் நா. கவிதா


பெரியாழ்வார் தனது மனம், சொல், சக்தி ஆகியவற்றை எப்பொழுதும் இறைவனைப் பற்றிக் கேட்பதிலும், பாடுவதிலும் ஈடுபத்திக் கொண்டவர். தமது ஐம்புலன்களையும் திருமாலின் பணிக்காகவே பயன்படுத்தியவர். இவ்விடத்தில் பக்தி எட்டு வகைகளாகப் பரிணமிக்கும் விதத்தைக் கூறுவது ஏற்புடையதாகும்.

எண் வகை பக்தி

* இறையடியார்கள் பக்கம் அன்பு செலுத்துதல்

* இறைவனை ஆராதிப்பதில் உகப்படைதல்

* தானே இறைவனை ஆராதித்தல்

* இறைவனிடம் ஆடம்பரமின்றி இருத்தல்

* இறைவனைப் பற்றிய கதைகளைக் கேட்குமிடத்தில் பத்தி கொள்ளுதல்

* பக்தியின் காரியமான குரல் தழுதழுத்தல் கண்ணீர் சொரிதல் மயிர்க்கூச்செறிதல் போன்றவை

* எப்பொழுதும் இறைவனை நினைத்தல்

* இறைவனிடமிருந்து வேறு பலன்களை எதிர்பாரதிருத்தல்

மேற்கூறிய பக்தி வகைகள் தாரளமாக பன்னிரு ஆழ்வார்களின் மனநிலையோடு பொருந்த வருவதைக் காண இயலும். இவற்றில் பெரியாழ்வாரிடம் காணலாகும் மனநிலையினை மட்டும் இங்கு காணலாம்.



தானே இறைவனை ஆராதித்தல்

அடியவர்கள் எப்பொழுதும் இறைவனுக்கு செய்ய வேண்டிய பூசனைத் தொடர்பான நிகழ்வுகளைத் தானே செய்வதில் மிகுந்த விருப்பம் உடையவர்களாக இருப்பர். அவ்வகையில் பெருமாளுக்கு தொண்டு செய்யும் குடும்பத்தில் பிறந்த பெரியாழ்வார் தன் வாழ்நாளினை இறைவனுக்காகவே செலவிட நினைத்தார். அதன் எச்சமாகவே தானே ஒரு நந்தவனம் அமைத்து பல நறுமணம் மிகுந்த மலர்களால் பெருமாளுக்கு விருப்பமான மாலையைத் தொடுப்பதே தனது பணியாக செயலாற்றி வந்தார்.

தனது நந்தவனத்திலே துளசி, தாமரை, செங்கழுநீர், நீலோற்பலம், மல்லிகை, முல்லை, மாதவி முதலிய பூக்களை நிறைந்து பொலியும்படி செய்தார். தினமும் தானே நந்தவனத்திற்குச் சென்று பரமனுக்குரிய மலர்களைக் கொய்து மாலை கட்டி பணி செய்வதே தனது வாழ்வின் பயனாக விரும்பி செய்தவர் பெரியாழ்வார் ஆவார்.

பக்திமையால் உடலில் உண்டாகும் உடல் வேறுபாடுகள்

இறைவனைக் காணும் பொழுது இறைவன் புகழ் பாடும் பொழுது அவனைப் பற்றிய கதைகளைக் கேட்கும் பொழுது அடியவர்கள் மனதில் எழும் உணர்வுகள் உடலில் வெளிப்படும். ஆனந்தக்கண்ணீரும், மயிர்க்கூச்செறிவதும், குரல் தழுதழுப்பதும் போன்ற உடலியற் மாற்றங்கள் உண்டாகும். பின்வரும் பாசுரத்தில் இறைவனைத் தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாகிய உடனே தனது உடலில் ஏற்பட்ட மாற்றங்களைக் கூறுகிறார்.

“வெள்ளை வெள்ளத்தின் மேலொரு பாம்பை மெத்தையாக விரித்து அதன்மேலே
கள்ள நித்திரை கொள்கின்ற மார்க்கம் காணலாங் கொலென் றாசையினாலே
உள்ளஞ்சோர உகந்தெதிர் விம்மி உரோம கூபங்களாய் கண்ண நீர்கள்
துள்ளம்சோரத் தயிலணைகொள்ளேன்,சொல்லாய் யானுன்னைத் தத்துறு மாறே”.
(நாலாயிர திவ்ய பிரபந்தம் - 439)

இதில் பெரியாழ்வார் இறைவனின் அழகைக் காணலாம் என்று ஆசைப்பட்ட பொழுதினிலே அவர் உடலில் ஏற்பட்ட மாற்றங்களை எடுத்துரைத்துள்ளார். “உடல் மயிர் கூச்செறிந்தது, வாயில் பேச்சில்லை, புத்தி தடுமாறுகிறது. கண்கள் நீரைச் சொரிகின்றன! உறக்கம் முற்றிலும் தொலைந்தது.” என்று கூறுவதில் பெரியாழ்வாரின் உள்ள உடல் உணர்வுகளைப் புரிய இயலுகின்றது.



பலன் எதிர்பாராத உள்ளம்

பெருமாளிடம் மாளா அன்பு கொண்டிருந்த பெரியாழ்வார் இறைவனிடம் அருளையும், திருவடிப்பேறினையும் மட்டுமே வேண்டி வணங்குகிறார். ஏனெனில் பக்தியின் பயன் பக்தியாகவே இருக்க வேண்டும் என்ற உள்ளம் உடையவராக, பலன் எதிர்பாராத உள்ளம் உடையவராகத் திகழ்கின்றார் பெரியாழ்வார். இதனை,

“நண்ணி நானுன்னை நாடொறு மேத்தும்
நன்மை யேயருள் செய்யெம் பிரானே”
(நாலாயிரதிவ்யப் பிரபந்தம்-440)

என்ற வரிகளில் அறியலாம். இவ்வுலகின் முதல்வனே, அரிய பெருமையைக் கொண்டவனே நான் என்றும் உன்னை பூஜிக்கும் உயர்குணத்தை மட்டும் எனக்கு அளிக்க வேண்டும் எம்பிரானே என்று வேண்டி வணங்கும் பக்திமையுடன் பெரியாழ்வார் திகழ்கின்றார்.

பெரியாழ்வாரின் உள்ளத்து உணர்வுகள்

மனித மனிதில் இயல்பாக எழும் காமம், குரோதம், பயம், நட்பு, உறவு, இன்ப, துன்ப உணர்வுகளை விழிப்புடன் அடக்கி அதனை இறைவனிடம் செலுத்தும் நபரே மோட்ச நிலையை அடைய இயலும் என்று கூறுவர். அதனைப் போன்றே பெரியாழ்வாரும் தனது உள்ளத்தில் எழும் பக்தி, பயம், பிரியம், காமம் போன்ற உணர்வுகளைத் திருமாலிடம் பதிவு செய்துள்ளார்.

ஆநிரைகளை மேய்த்து மீண்டு வரும் கண்ணனைக் கண்டு கன்னியர்கள் காமமுற்றுப் பாடுவதாகப் பாசுரங்களை அமைத்துள்ளார்.

“குன்று எடுது ஆநிரை காத்த பிரான் கோவலனாய்க் குழலூதி ஊதிக்
கன்றுகள் மேய்த்துத்தன் தோழரோடு கலந்துடன் வருவானைத் தெருவில்கண்டு
என்றும் இவனையொப்பாரை நங்காய்! கண்டறியேன, ஏடி!வந்து காணானய்
ஒன்றும் நில்லாவளை,கழன்றுதுகில் ஏந்திள முலையுமென் வசமல்லவே.”
(நாலாயிர திவ்யப் பிரபந்தம்-257)

என்ற பாசுரம், கண்ணனைக் கண்டதும் கை வளை நெகிழ்கின்றது, இடுப்பில் உள்ள ஆடை நெகிழும் வண்ணம் உடல் இளைத்துவிட்டது, மார்பு துடிக்கின்றது தோழி! இவனைப் போன்ற அழகனை இதுவரையிலும் கண்டதே இல்லை! நீயும் வந்து அவன் அழகை காண வருவாயாக என்று மங்கையின் கூற்றாகக் காணப்படுகின்றது. இப்பாசுரத்தில் வரும் கன்னிப் பெண் பெரியாழ்வாரே. கண்ணன் மீது கொண்ட காம உணர்வினை, அன்பினை ஒரு கன்னியாகவே தன்னை பாவித்து வெளிப்படுத்தியுள்ளார்.



தன்னுள் பெருமாளை நிரப்புதல்

பெரியாழ்வாரின் “சென்னியோங்கு” என்று துவங்கும் பத்து பாசுரங்களும் பெரியாழ்வார் திருமொழிக்கு முத்தாய்ப்புப் பாசுரம் போல் உள்ளன. இதில் பெரியாழ்வார் தன்னுள் பெருமாளை நிரப்பிக் கொள்கிறார்.

“கடல் கடைந்து அமுதம் கொண்டு
கலசத்தை நிறைத்தாற் போல்
உடல் உருகி வாய்திறந்து
மடுத்துன்னை நிறைத்துக் கொண்டேன்”
(நாலாயிர திவ்யப் பிரபந்தம்-466)

எளிமையான சொற்களால் திருமால் மீது கொண்டுள்ள அலாதியான அன்பின் மிகுதியை பதிவு செய்துள்ளார். அத்துடன் விசிஷ்டாத்வைதத்தின் ஆழமான தத்துவங்களை தனது பாசுரங்களில் மிக எளிமையாக நவின்றுள்ள பாங்கும் சிறப்பிற்குரியது.

“பொன்னைக் கொண்டு உரைகல்மீதே நிறமெழ உரைத்தாற்போல்
உன்னைக் கொண்டு என் நாவகம்பால் மாற்றின்றி உரைத்துக் கொண்டேன்
உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன் என்னையும் உன்னில் இட்டேன்
என்னப்பா இருடீகேசா என்னுயிர்க் காவலனே”
(நாலாயிர திவ்யப் பிரபந்தம்-467)


இங்கு, தங்கத்தின் உண்மை நிலையை உரைக்கும் உரைகல் போல் உன்னை என் நாக்கின் மேல் மாற்று குறையாமல் தேய்த்துக் கொண்டேன் என்று திருமாலை நோக்கி பெரியாழ்வார் பாடுகிறார். உன்னை எனக்குள் வைத்தேன் அது மட்டுமின்றி என்னையும் உனக்குள் இட்டேன் என்று வைணவ மையக் கருத்தினை கோடிட்டுக் காட்டிச் செல்கின்றார். இவ்விடத்தில் திருமழிசையாழ்வாரின் பாசுர அடி நினைவில் நிற்பதை மறுக்க இயலாது.

“நான் உன்னையன்றி இலேன் கண்டாய் நாரணனே
நீ என்னையன்றி இலை” (நாலாயிர திவ்யப் பிரபந்தம்-2388)

ஆக நாராயணன் நமக்குள் இருக்கிறான், நாமும் நராரயணனுக்குள் இருக்கிறோம் என்ற எண்ணம் நம்முள் மேலோங்குகின்றது.

பெரியாழ்வாரின் பிரபத்தி நெறி

பொதுவாக பக்தி நெறியினை மூன்று பிரிவுகளாக வேறுபடுத்திக் காட்டும் மரபு உண்டு. அவை,

* பரபக்தி (எம்பெருமானை நேரில் காண வேண்டும் என்ற ஆவல்)

* பரஞானம் (மேன்மேலும் இறைவனை இடையறாது அநுபவிக்க வேண்டும் என்று ஆவல்)

* பரமபக்தி (இறைவனின் அநுபவம் பெறாவிடில் நீரை விட்டுப் பிரிந்த மீன் போல் மூச்சு அடங்கம் படி இருத்தல்)

மேற்கூறிய பக்திநெறியை எல்லோராலும் பின்பற்ற இயலாது. ஆகவே உயர்ந்தோர், தாழ்ந்தோர், கற்றோர், கல்லாதவர் என்ற வேறுபாடு இன்றி எல்லோராலும் மேற்கொள்ளக்கூடிய நெறி ஒன்றினைக் கண்டனர் மெய்விளக்கம் பெற்ற மேலோர். அதுவே பிரபத்தி நெறியாகும் (சரணாகதி). இத்தகைய நெறி பற்றி வேதாந்த தேசிகர் பின்வருமாறு சிறப்பித்துக் கூறியுள்ளார்.

“அந்தணர் அந்தியர் எல்லையில் நின்ற அனைத்துலகும்
நொந்தவ ரேமுதலாக நுடங்கி அனன்னியராய்
வந்தடை யும் வகை”
(தேசிகப் பிரபந்தம் -56)

சரணாகதி, பரசமர்ப்பணம், உபயாநுஷ்டானம் என்ற பல்வேறு பெயர்களால் பிரபத்தி வழங்கப்படுகின்றது.மேலும் இப் பிரபத்தி நெறி ஆறு உறுப்புகளை உள்ளடக்கியது என்று கூறுவா்.


* சாத்துவிக உணர்வில் இறைசித்தத்தைப் பின்பற்றல் (அனுகூல்ய சங்கற்பம்)

* இறைச் சித்தத்திற்கு வேறானவற்றைத் துறத்தல் (பிராதிகூல்ய வா்சனம்)

* இறைவன் காப்பான் என்ற உறுதி (ரஷ்ஸ் திதிவிஸ்வாச)

* இறையருளையே வீடு வேற்றுக்கு நம்பியிருத்தல் (கோபத்ரத்வ வர்ணம்)

* தன்னையே நிவேதனமாக்கல்(ஆத்ம நிக்க்ஷேபம்)

* தன்னால் ஆகாமையை வெளிப்படுத்தல்(கார்ப்பண்யம்)

மேற்கூறிய பிரபத்தி வகைகளில் பெரியாழ்வாரிடம் இறைச்சித்தத்திற்கு வேறானவற்றறைத் துறத்தல் என்ற மன நிலையில் அமைந்த பாசுரம் பின் வருமாறு காணப்படுகின்றது.

“தோட்டம் இல்ல்வள் ஆத்தொழுஓடை துடவை யும் கிணறும் இவை யெல்லாம்
வாட்டமின்றியுன் பொன்னடிக் கீழே விளைப்ப கம்வகுத் துக்கொண்டிருந்தேன்
நாட்டு மானிடத் தோடெனெக் காது நச்சு வார் பலர் கேழலொன்றாகி
போட்டு மண்கொண்ட கொள்கையினானே குஞ்சரம் வீழக் கொம்பொசித் தானே”
(நாலாயிர திவ்யப் பிரபந்தம்- 437)

இவ்வுலகில் உள்ள உயிர்கள் யாவும் மாயைகளிலிருந்து விடுபட்டு இறைவனாகிய தன்னை வந்து அடைய வேண்டும் என்றே விரும்புவான். அவ்வாறே பெரியாழ்வாரும் அம்மாயையிலிருந்து விடுபட வேண்டும் என்றும், இறைவனுடைய திருவடி நிழலையே தோட்டம், மனைவி, பசுக்கள், தொழுவம், குளம், விளைநிலம், கிணறு ஆகிய எல்லாப் பொருள்களுமாகப் பாவனை செய்து கொண்டு பெருமாளை தனது நெஞ்சினில் நிலைநிறுத்தி வழிபடுகின்றார்.

திருமாலின் திருப்பாதங்களேச் சரணம், தஞ்சம் என்று அடைந்த பெரியாழ்வாரின் பாசுரங்கள் யாவுமே பக்தியின் பொற்கலசம். அவர் தம் பக்திமை நெறியினைப் பின்பற்றினால் மறு பிறவியில் துன்பம் இல்லை என்பது உறுதியே ஆகும்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p124.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License