இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

பாலைக்கலியில் காதல் உணர்வுகள்

ஆ. மனோகரன்
முனைவர் பட்ட ஆய்வாளர், இலக்கியத்துறை,
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.


முன்னுரை

எட்டுத்தொகை என்று எல்லோராலும் மதிக்கப்பட்ட தொகைநூல்களுள் கலித்தொகையும் ஒன்றாகும். எட்டுத்தொகை நூல்களுள் எந்த நூலைப் படித்தாலும் காண்பது என்னவெனில், உள்ளதை உள்ளவாறு கூறும் புலவரின் உண்மை நிலையேயாகும். அவை எல்லாவற்றிலும் அனைவராலும் ஒருங்கே புகழப்படும் பெருமையுள்ள நூல் கலித்தொகையாகும். இந்நூல் ‘கற்றறிந்தார் போற்றும் கலி ’ என்னும் சிறப்பினைப் பெற்றுள்ளது தமிழுக்குக் கிடைத்த பெரும் பேறு எனலாம். அகப்பொருளைப் பற்றிப் பாடுவதால் கலித்தொகையைக் காதலர் தம் அகத்தொகை எனவும் சிறப்பித்துக் கூறலாம். மேலும், இந்நூலைக் கலி, கலிப்பா, கலிப்பாட்டு, குறுங்கலி, கற்றறிந்தார் ஏத்தும் கலி, கல்விவலார் கண்டகலி என்றெல்லாம் கூறுவர். இக்கலித்தொகையில் கடவுள்வாழ்த்து 1 பாடலும், பாலைக்கலியில் 35 பாடல்களும், குறிஞ்சிக்கலியில் 29 பாடல்களும், மருதக்கலியில் 35 பாடல்களும், முல்லைக்கலியில் 17 பாடல்களும், நெய்தல்கலியில் 33 பாடல்களுமாக மொத்தம் 150 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றுள் பாலைக்கலியில் சுட்டப்பெறும் பழந்தமிழரின் காதல் உணர்வுகளை இக்கட்டுரை வாயிலாக அறியலாம்.

பாலைக்கலி

பாலைத்திணை அல்லது பாலை ஒழுக்கத்தினைப் பற்றிப் பாடுவது பாலைக்கலியாகும். மேலும், கலித்தொகையில் முதல் பகுதியாக விளங்குவதும் பாலைக்கலியாகும். இதனைப் பாடியவர் சேர மரபினரான பெருங்கடுங்கோ ஆவர். இவர் சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ எனவும் அழைக்கப்படுவர். இவர் பாலைத் திணையைப் பலவாறாகச் சிறப்பித்துப் பாடும் ஆற்றலுடையவர். பாலைத்திணை ஒன்றை மட்டுமே பாடியதனால் பாலைப் பாடியவர் என்று அடைமொழி பெறப்பட்டார். பிறர்கூறாத, காணாத சில உவமைகளை மிக அழகாகக் கூறும் திறனுடையவர். இவர் பாடியனவாக நற்றினையில் 10 பாடல்களும், குறுந்தொகையில் 10 பாடல்களும், அகநானூற்றில் 11 பாடல்களும், புறநானூற்றில் 1 பாடலும், கலித்தொகையிலுள்ள பாலைக்கலியில் 35 பாடல்களும் ஆக 67 பாடல்கள் இவர் பாடினதாகும்.

வைப்புமுறை

கலித்தொகையில் திணைகளைத் தொகுத்தவர் நல்லந்துவனார். இவர் வைப்பு முறையில் பாலைக்கலியை முதன்மையாக வைப்பதற்குப் பொருத்தமான காரணமாக, உரையாசிரியர் நச்சினார்க்கினியர் “முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தலெனச் சொல்லிய முறையால் சொல்லவும் படுமே” என்புழிச் சொல்லாத முறைமையாற் சொல்லவும் படுமென்றலின் கலித்தொகையைப் பாலை, குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தலென இம்முறையைக் கோத்தார் நல்லந்துவனார் எனலாம்” (பொ.வே.சோமசுந்தரனார், கலித்தொகை, ப.6, ஆண்டு-1970) என்பர்.

ஐவகை நிலங்களில் பாலைத்திணை ஒன்று மட்டுமே மற்ற நான்கு திணைகளிலும் பொதுவாகக் காணப்படுகிறது. பாலை எந்நிலத்திலும் ஏற்படலாம். இது வறட்சியைச் சுட்டும் குறியீடாகவும் விளங்குகிறது. இதற்கென்று தனி நிலம் இல்லாமையாலும், பிரிதல் நிகழ்ச்சி மிகுதியும் காணப்படுவதாலும், புறநிகழ்ச்சி விரிவாகச் சொல்லப்படுவதாலும் பாலையை நல்லந்துவனார் முதன்மையாக வைத்திருக்கலாம் எனக் கருத முடிகிறது.

நிலமும் காதலுணர்வுகளும்

நிலமும் அந்நிலத்தில் வாழும் மக்களின் காதல் உணர்வுகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையன என்று உறுதியாகக் கூறலாம். அந்தந்த நிலத்துக்குரிய வாழ்க்கை முறை அந்தந்த நிலத்தின் தன்மையை மற்றும் காலத்தை ஒட்டியே அமைகிறது. காதல் என்பது உயிரின் உடைமையாகும். காதலர்கள் எந்நிலத்திலும் எப்பொழுதும் காதலர்களே ஆவர். அவர்கள் அமைத்துக் கொள்ளும் சந்திப்பு முறைகள், காதல் குறிப்புகள், அடைகின்ற உணர்வின் தன்மைகள் இவைதாம் இடத்திற்கேற்றார் போல் மாறுபடுகிறது.



பாலை நிலம்

மலையும் காடும் வெப்பத்தால் தன் தன்மை இழந்து மயங்கிய பகுதியே பாலை நிலமாகின்றது. எனவே, இதனைத் தனி நிலமாகக் கருதாமல் நிலங்கள் நால்வகையாகவே கொள்ளப்படுகின்றன. குறிஞ்சியும் முல்லையும் மயங்கிய இடமே பாலையாகக் கருதப்பட்டது. இதனை,

“முல்லையும் குறிஞ்சியும் முறைமையிற்றிந்து
நல்லியல் பிழந்து நடுங்கு துயருறுத்துப்
பாலையென்ப தோர்படிவங் கொள்ளும்”

என்னும் சிலப்பதிகார அடிகள் வலியுறுத்துவனவாக அமைகின்றன.

காதல் இன்பம்

தலைவன், தலைவி ஆகிய இருவர் உறவினுடைய அன்பின் ஆழமான வெளிப்பாடு பிரிவின் போதுதான் அதிகமாக வெளிப்பட்டு நிற்கும். அவ்வகையில், பொருள் வயிற்நோக்கில் பிரிந்து செல்லும் தலைவனிடம் இணைந்து வாழ்வதே இல்லறத்தின் தனிச்சிறப்பாகும் என்பதனை,

“ஒன்றன் கூறாடை உடுப்பவரே ஆயினும்
ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை அரிதரோ
சென்ற இளமைதரற்கு” (பா.கலி. 18 : 5-12)

இத்தகைய இனிமை தரும் இன்பத்திற்கு மேம்பட்டதாக எந்த இன்பமும் இல்லை. வறுமையின் காரணத்தால் சரியாக அரை ஆடையையே அணிந்தாலும், மனம் ஒன்றி இருவரும் இணைந்து வாழும் வாழ்க்கையே உண்மையான வாழ்க்கை. மேலும், இளமையானது சென்று விட்டால் மீண்டும் அதைப் பெற்று வாழ்வது என்பது இயலாத செயலாகும் எனத் தோழி அறிவுறுத்துகிறாள்.

உயர்வான இன்பம்

தலைவன் பொருள் ஈட்டி வரத் தலைவியைப் பிரிந்து செல்ல எண்ணுகிறான். தலைவியோ நீ செல்லும் பாலை வழியில் உனக்குத் துணையாக நானும் வருவேன் என்றும், உம்மைப் பிரிந்து வாழ்தலை விடப் பாலைநிலம் தரும் துன்பம் பெரிதல்ல என்றும், ஆதலால் உன்னுடன் வருவதே எனக்கு உயர்வான இன்பம் என்கிறாள். இதனை,

“மரையாமரல் கவரமாரி வறப்ப
வரை ஓங்கு அருஞ்சுரத்து ஆரிடைச் செல்வோர்
சுரைஅம்பு மூழ்கச் சுருங்கி புரையோர் தம்
உண்ணீர் வறப்பப்புலர் வாடு நாவிற்குத்
தண்ணீர் பெறா அத்தடுமிற்று அருந்துயரம்
கண்ணீர் மறைக்கும் கடுமையகா டென்றால்
என்நீர் அறியாதீர் போல இவை கூறல்?
நீன்நிர அல்ல நெடுந்த காய் எம்மையும்
அன்பு அறச்சூழாதே ஆற்றிடை நும்மொடு
துன்பம் துணையாக நாடின் அதுவல்லது
இன்பமும் உண்டோ எமக்கு?” (பா.கலி.5 : 4-6 )

என்ற பாடல் வரிகளில், மாந்தனின் உடலுக்குள் உள்ள நீர் ( குருதி ) வற்றிப் போவதால் நா வறண்டு போகும். அவ்வேளையில் தண்ணீர் கிடைக்காது தடுமாற்றமடைகின்ற நாவிற்குப் பாலை வழி நடப்போரின் கண்ணீர் விழுந்து அந்நாவின் வறட்சியைப் போக்கும் என்னும் உயரிய வருணனையைப் பாலைக்கலியில் காணலாம். தலைவி தன் உயிர்படும் துன்பத்தை விடவும் தன் உள்ளம்படும் துன்பத்தைப் பெரிதெனக் கருதியே அவனுடன் செல்லத் துடிப்பதாகக் கூறப்பட்டுள்ளது.



அன்பின் வெளிப்பாடு

தலைவியின் வருத்தமான நிலையினையும், தலைவன் தலைவி மீது கொண்ட அன்பினையும் வெளிப்படுத்தும் விதமாகவும் பாலைக்கலியில் செய்திகள் இடம் பெற்றுள்ளன. இதனை,

“எல்வினை எம்மொடுநீ வரின் யாழநின்
மெல்இயல் மேவந்த சீறடி தாமரை
அல்லி சேர் ஆய்இதழ் அரக்குத் தோய்ந்தவை போல
கல்உறின் அவ்வடிகறுக்குந அல்லவோ?” (பா.கலி.13 : 10-13 )

தலைவன் பொருள் தேடச் செல்லும் போது தலைவியும் உடன் வருவதாகக் கூறுகிறாள். அதற்குத் தலைவன் தாமரைப்பூவின் அல்லியைப் போன்ற அழகிய இதழ்களை உடைய உன் பாதங்களைக் கற்கள் தீண்டும் போது இங்குலிகம் போன்று கறுத்துவிடும் என்று அன்பின் மிகுதியினால் தலைவன் இரக்கப்படுகிறான்.

அஃறிணை உயிர்களின் காதலுணர்வு

நெருப்பு போன்ற வெம்மையால் அடி பொறுக்கும் அளவின்றிக் காடுகள் கடியனவாய் இருக்கின்றன. அத்தகைய காட்டிடத்தே, துடி போன்ற அடியுடையயானைக் கன்றுகள் தம் தந்தையும் தாயும் உண்ண வேண்டுமென்று கருதி நிற்கின்றன. ஆனால் களிறு தான் உண்ணாது தன் பிடியை முதலில் உண்ணச் செய்து பின்பு தான் உண்ணும் எனச் சிறப்பித்துக் கூறப்படுகிறது.

“துடியடிக்கயந்தலை கலங்கிய சின்னீரைப்
பிடியூட்டிப் பின்உண்ணும் களிறு எனவும் உரைத்தனரே” (பா.கலி.10: 8-9)

அ.:றிணை உயிர்களுக்கும் காதல் உணர்வுகள் இருப்பதை இப்பாடலடிகளால் நன்கு அறிய முடிகிறது.



பிணையைக் கொண்டு அன்பை வெளிப்படுத்துதல்

தலைவன் பிரிய நேரும் சூழலில் தலைவி வருந்துகிறாள். தலைவி தன்னையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டும் என தலைவனிடம் கூறும் போது அதற்கான காரணத்தையும் கூறுகிறாள்.

“அணைஅரும் வெம்மைய காடு? எனக் கூறுவீர்!
கணைகழி கல்லாதகல் பிறங்கு ஆர்இடை
பணை எருத்து எழில் ஏற்றின் பின்னர்ப்
பிணையும் காணிரோ? பிரியுமோ, அவையே?” (பா.கலி.20: 20-23)

நீங்கள் செல்லும் அவ்விடத்திலுள்ள காடு அரிய வெம்மை உடையது எனக் கூறினீர். எய்த கணைகள் மேற்செல்லாதவாறு பெரிய கற்களின் நெருக்கத்தை உடைய அரிய வழி என்று கூறுனீர். அந்த வழியில் கலைமானின் பின்னால் பிணைமான் பிரியாமல் திரிவதைக் காணவில்லையோ? ஆதலின், எம்மையும் உடன் அழைத்துச் செல்வீராக என்று தலைவி கூறுகிறாள்.

பிரிவுச் சூழலைத் தவிர்த்தல்

கலித்தொகையில் பாலைக்கலியில் தலைவன் பிரிந்து செல்லும் சூழலைத் தலைவிக்காகத் தவிர்த்து விடுவதைக் காணமுடிகிறது. பாலைக்கலியில் பொருள் தேடுவதற்காகத் தலைவன் பிரிந்து சென்றால் அதனைத் தாங்காமல் தலைவி இறந்து விடுவாளோ என்கிற அச்சத்தினால் தலைவி மீது இரக்கம் காட்டிப் பயணத்தைத் தவிர்த்து விடுகிறான். இதனை,

“சென்னவையரவத்துமிணைவள் நீநீப்பிற
தன்நலம் கடைகொளப்படுதலின் - மற்றுஇவள்
இன்உயிர் தருதலும் ஆற்றமோ
முன்னிய தோத்து முயன்ற செய்பொருளே” (பா.கலி.7: 18-21)

தலைவியின் உயிர் மீது கொண்ட இரக்கத்தின் காரணமாகவும், அன்பின் காரணமாகவும், மனிதனின் தனித்தன்மையை அடையாளப்படுத்தும் விதமாகவும் தலைவன் தலைவியை விட்டுப் பிரியவில்லை. இப்பாடலை மனிதநேயம் மிக்க பாடலாகவும் கூறலாம்.

நிறைவுரை

கலித்தொகையில் பாலைக்கலி முதன்மை பெறுவதற்குப் பாலைக்கலிப் பாடல்களின் கருத்து வளர்ச்சியே காரணமாக அமைகின்றது. பாலைக்கலி முழுவதும் துன்பமன்று. ‘பிரிவானோ’ என்று அஞ்சும்நிலை கொண்டது. பெரும்பாலும் அஞ்சும் போதுதான் அன்பின் திறன் நன்கு புலப்படும். எந்தப் புலவரும் துன்பத்தைப் பற்றிச் சொல்லும் போதுதான், தான் மனிதத் தத்துவத்தை அறிந்துள்ள முறையை நன்கு உணர்த்த முடியும். எனவேதான் பாலை கலிப்பாடல்கள் மற்ற கலிப்பாடல்களை விடச் சுவையும், பயனும் நிரம்பியவையாக நிற்கின்றன. வாழ்வியல் உண்மைகளையும், அறநெறிக் கருத்துக்களையும், காதல் உணர்வுகளையும் ஆழமாகப் பெற்றுக் காட்சியளிக்கின்றன. பிரிவுத் துன்பத்தையும் இனிய இலக்கியமாகச் சுவைக்க முடியும் என்பதற்குப் பாலைக்கலியே தகுந்த சான்றாக அமைகின்றது.

துணை நின்ற நூல்கள்

1. பொ. வே. சோமசுந்தரனார், கலித்தொகை, கழகவெளியீடு, சென்னை, 1970.

2. முனைவர்அ, விசுவநாதன், கலித்தொகை (மூலமும்உரையும்), NCBH, சென்னை.

3. முனைவர் மணிமாறன் சுப்பிரமணியம், கலித்தொகை, கலைஞன் பதிப்பகம், சென்னை.

4. இரா.ஜெகதீசன், கலித்தொகை ஆய்வுக்கோவை, விழிச்சுடர் பதிப்பகம், சென்னை.

5. தமிழண்ணல், புதிய நோக்கில் தமிழிலக்கிய வரலாறு, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை.


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p157.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License