இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

சிலப்பதிகாரத்தில் ஆடல்

வீ. முத்துலட்சுமி
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
எஸ். எஃப். ஆர். மகளிர் கல்லூரி, சிவகாசி.


முன்னுரை

புராணக் கூத்து வகைகள் எல்லாம் ஆரியம் இந்தியாவில் நுழைந்த போது தமக்குப் பகைவர்களாக இருந்து எதிர்த்த திராவிடர்களை இராட்சதர் அரக்கர், அசுரர் என்று பழித்து, அவ்வினத்தை ஒழித்துத் தழுவியவைகளே தெய்வமணத்தில் போற்றப்படுபவை. இவை தொடுக்கப்பட்டு, நியாயப்படுத்தப்பட்டு ஆடிக் காட்டியவையே கூத்துக்கள் ஆகும். திருமாலுக்கு பெருந்தேவபாணியும், சிவனுக்கு சிறுதேவபாணியும் என மாற்றியும் திரித்தும் அதற்கு இசை, இராகம், பாக்கள் பிரித்தமை போலச் சிறுதேவராடல், பெருந்தேவராடல் என்று வகைப்படுத்தினர்.

வகைக் கூத்தும் பதினொன்றாகக் கொடுகொட்டி, பாண்டரங்கம், குடை, துடி, அல்லியம், மல்லியம், குடம், பாவை, மரக்கால், பேடி, கடையம் எனச்சிவ வைணவக் கலப்படக் கூத்துகளும் சொல்லப்பட்டன. இவற்றுக்கு உறுப்புகளும் சொல்லப்பட்டன. ஐந்திணைப் பழைய வாழ்வியல் நிகழ்வுக் கூத்துக்களை, விலக்கிய உறுப்புகளாகச் சாந்திக்கூத்து, வினோதக் கூத்து ஆகியவற்றின் வழியாக,

“இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து
பலவகைக் கூத்தும் விலகினில் புணர்ந்து
பதினோ ராடலும் பாட்டும் கொட்டும்” (1)

என்றார் இளங்கோவடிகள்.

“பதினோ ராடற் பகுதி எல்லாம்
ஆதிரா வகைக் கூத்தாகு மென்ப” (2)

இவற்றுள்,

பதினோராடல்களில் அல்லியம், கொடுகொட்டி, குடை, குடம், பாண்டரங்கம், மல்லியம் ஆகிய ஆறு ஆடல்கள் நின்றாடல்களாகவும், துடி, கடையம், பேடு, மரக்கால், பாவை ஆகிய ஐந்து ஆடல்கள் விழுந்தாடல்களாகவும் இருக்கின்றன.

மேற்கூறிய பதினொரு வகைக் கூத்துகளும் தொடங்குவதற்குத் துணையாகத் ‘தொழுகை’ இளங்கோவடிகளால் கூறப்படுகிறது.

“வானோர் வணங்க மறைமேல் மறையாகி
ஞானக் கொழுந்தாய் நடுக்கின்றி யே நிற்பாய்” (3)

என்றும்,

“அரி அரன் பூ மேலோன் அகமலர்மேல் மன்னும்
விரிகதிர் அம் சோதி விளக்காகியே நிற்பாய்” (4)

என்றும்,

“கங்கை முடிக்கணிந்த கண்ணுத லோன் பாகத்து
மங்கை உருவாய் மனமார ஏத்தவே நிற்பாய்” (5)

எனவும்

இவ்வாறாகத் தேவர்களைச் சிறப்பித்தலும் பிரம்மா, விஷ்ணு, உருத்திரன், (உமைபாகன்) ஆகியோரைச் சிறப்பித்தலுமாகச் சிலப்பதிகாரப் புகார்க் காண்டம் தொடங்கி, உறையூரை விட்டு உலாவாகி கோவலன் கண்ணகிக்குத் துணையாகத் திருவரங்கம், திருவேங்கடமலை, அருந்ததி கதை, பேய்பூதக் கதைகள், இம்மை மறுமை என முழுமையும் சொல்கிறார்.

மாதவி இந்திர விழாவில் ஆடியதாக இப்பதினோராடல்களும் அமைகின்றன.

நின்றாடல்

அல்லியம், கொடுகொட்டி, குடை, குடம், பாண்டரங்கம், மல்லியம் ஆகிய ஆறு ஆடல்கள் எனப்படுகின்றன.

அல்லியம்

அல்லியம் இது கண்ணனால் ஆடப்பட்ட ஆடலாகும். கம்சன் என்னும் அரக்கன் குவலயாபீடம் என்னும் யானையின் உருக்கொண்டு தேவர்களுக்குத் துன்பம் செய்த பொழுது கண்ணன் அந்த யானையின் ஆற்றலை அழித்த பொழுது ஆடிய ஆடலாகும். இது வீரச்சுவை நிறைந்த ஆடலாகத் திகழ்கிறது. மாதவி கண்ணன் உருக்கொண்டு யானை உருவில் இருக்கும் கம்சனோடு போர் புரிவது போல் நடனமாடினாள். ஒரு விலங்கைக் கொல்லும்பொழுது அதனை எம்முறையில் ஆடிக் கொல்ல வேண்டுமோ அதற்கேற்ற தாள அமைதியும் அபிநயத்தையும் கொண்ட தனி ஆடலாக அமைந்துள்ளது.

“கஞ்சன் வஞ்சம் கடத்தற்காக
அஞ்சன வண்ணன் ஆடிய ஆடலுள், அல்லி” (6)

ஆனாலும் வலிமை மிக்கவனாகக் கண்ணனை நிறுத்தி அவன் அருள் வலிமையால் பகை வெல்லும் போது,

“ஆடல் இன்றி நிற்பவை எல்லாம்
மாயோன் ஆடும் வைணவ நிலையே” (7)

என்பார்.

அதாவது ஆடல் அவிநய உறுப்புகள் முகம், மார்பு, கை, கால் தொழில் செய்யாது முடங்கி நிற்பதாக அவை பொருளுணர்த்தும்.

“அல்லியம் மாயவன் ஆடிற் றதற்கு றுப்புச்
சொல்லிய ஆறாம் எனல்” (8)

ஒரு திராவிடப் பகைவனை உருவகப்படுத்தி அவன் ஏவலை எதிர்த்து வென்றதாகச் சொல்லப்பட்ட வைணவம் மிகைப்படுத்திய வெண்டுறைக் கூத்தின் திணிப்பு இதாகும்.



கொடிகொட்டி

கொடுகொட்டி ஆடல் சிவபெருமான் ஆடிய ஆடலாகும். தாரகாட்சகன், கமலாட்சன், வித்துவன் மாலி என்னும் அசுரர்களின் மூன்று கோட்டைகளையும் முப்புறங்களையும் எரித்தார். இதன் வெற்றிகளிப்பால் கைகொட்டி ஆடிய ஆடல் கொடுகொட்டியாயிற்று. ஆடுதலில் கொடுமையுடையதால் இவ்வாட்டத்திற்கு கொடுகொட்டி என்று அடியார்க்கு நல்லார் பெயரிடுகிறார். கொடுங்கொட்டி - கொடுகொட்டி என விகாரமாயிற்று என்று நச்சினார்க்கினியர் குறிப்பிடுகிறார்.

கலித்தொகை கடவுள் வாழ்த்துப் பாடலில் சிவன் கொடுகொட்டி ஆடிய குறிப்புக் காணப்படுகிறது. இதில் சிவபெருமான் ஆடியதாகவும் உமையவள் தாளம் இசைத்ததாகவும் குறிப்பிடுகிறது. சிலம்பில் மாதவி தன் உடம்பில் ஒரு பகுதி சிவனாகவும், மறு பகுதி உமையவள் ஆகவும் வேடம் பூண்டு ஆடிய செய்தி உணரப்படுகிறது.

“உமையவள் ஒருதிறனாக ஓங்கிய
இமையவள் ஆடிய கொடுகொட்டி ஆடலும்” (9)

திராவிடர்கள் என்னும் அசுரர்கள், ஆரியர்கள் என்னும் தேவர்கள் ஆக்ரமித்த இடங்களுக்கு நெருப்பு வைக்கின்றனர். தேவர்கள், சூத்திரர் (திராவிடர்) கடவுளான சிவனை வேண்டுகிறார்கள்.

தேவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள, பாரதி அரங்கமான பைரவப் பார்வதியின் சுடுகாட்டில் ஒரு கூறாக நின்று பாணி, தூக்கு, சீர் என்னும் தாளத்துடன் சிவன் நெருப்பாக ஆடுகிறான். அசுரர் என்னும் திராவிடர்கள் வெந்து விழுகின்றனர். இக்காட்சியை ஒரு பொருட்டாக மதியாது சிரித்துக் கைகொட்டிச் சிவனும் ஆடியதாக இக்கூத்து.

இதற்குக் கல்லாடனாரும் இசைக் கூத்தின் நளிநய முத்திரை கூறுகிறார்.

“கொடு கொட்டிக்குக் குறியடுத்தெடுக்கும்
புங்கம் வாரம் புடைநிலை பொறுத்து
கச்ச புடத்தில் தனி எழு மாத்திரை
ஒன்றை விட்டொரு சீரிரண்டுறவுறுத்தி
எடுத்துத் துள்ளிய இனமுத்திரை” (10)

குடைக் கூத்து

குடைக் கூத்தாடல் முருகன் ஆடியதாகும். சூரனோடு போர் செய்ய முனைந்த வானவர் படையஞ்சி சோர்வுற்றபோது முருகன் ஒருமுக எழினியாக தோன்றி தம் குடையைச் சாய்த்து சாய்த்து ஆட்டிச் சூரனின் வலிமையை இழக்கச் செய்து வானவர் படையைக் காத்த பொழுது ஆடிய ஆடலாகும். கையில் குடை ஒன்றைப் பிடித்துக் கொண்டு கட்டப்பட்ட கயிற்றில் ஏறி நின்று ஆடுவதையும் குடைக் கூத்தாகக் கருதுகின்றனர். மாதவி முருகன் போல் ஒப்பனை செய்து கொண்டு அரக்கர்களோடு போரிடுவது போலவும் வெற்றிக் களிப்பில் ஆடுவது போல் ஆடினாள்.

“படை வீழ்த்து அவுணர் பையுள் எய்தக்
குடை வீழ்த்து அவர் முன் ஆடிய குடையும்” (11)

ஆரியர் வணங்காத சூத்திரக் கடவுளான முருகனைக் கொண்டே அந்த சூத்திர அசுரத்திராவிடர்களை வென்ற கூத்து.

அசுரர்கள் முருகன் மீது போர் தொடுத்தனர். அனைத்திலும் தோல்வி. ஒருமுக எழினியாகக் குடையைத் தாழ்த்தி முருகன் ஆடிய குடைக் கூத்து. இதன் உறுப்பு,

“அறுமுகத் தோனாடல் குடைமற்றதற்குப்
பெருமுறுப்பு நான்காம் எனல்” (12)



குடக்கூத்து

குடக்கூத்து திருமாலால் ஆடப்பட்டதாகும். வாணன் எனும் அரக்கன் மகள் உழை என்பாளைக் காமன் மகன் அநிருத்தன் கவர்ந்து செல்ல அதனால் சினந்த வாணன் அநிருத்தனைச் சோ என்னும் நகரில் சிறை வைத்தான். திருமால் வாணனின் சோ நகருக்கு வந்து உலோகத்தையும் மண்ணையும் கலந்து செய்யப்பட்ட குடத்தின் மேல்நின்று ஆடிய ஆடல் குடக்கூத்தாடல். இது வினோதக்கூத்து ஆறினுள் ஒன்றாகும். மாதவி மாயோன் வடிவம் கொண்டு தலையிலும் தோளிலும் கையிலும் குடம் கொண்டு ஆடியிருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. இக்கூத்தை சித்திhpக்கும் சிற்பங்கள் திருவெள்ளறை திருமால் கோயிலிலும் சுசீந்தரம் கோயிலிலும் காணப்படுகின்றன.

“வாணன் பேரூள் மறுகிடை நடந்து
நீணிலம் அளந்தோன் ஆடிய குடமும்” (13)

ஆரியக் காமக் குமரனாகிய அநிருத்தன் என்பவன் திராவிட வாணாசுரனின் மகள் உழையைக் கவர்ந்ததற்காக அவள் தந்தையால் சிறை வைக்கப்பட்டான். ஆவனை மீட்க, கண்ணன் திராவிட நகரின் சோ என்ற அரணுக்குச் சென்று பஞ்சலோகங்களாலும் மண்ணாலும் செய்யப்பட்ட குடம் கொண்டு ஆடிய வைணவக் கூத்து குடம்.

நகைச் சுவைக்குரிய வைணவ வினோதக் கூத்துகளில் இது ஆறாவதாகும்.

“பரவிய சாந்தி அன்றியும் பரதம்
விரவிய வினோதம் விரிக்குங்காலை
குரவை கலி நடம் குடக்கூத் தொன்றிய
கரண நோக்கு தோற்பாவைக் கூத்
தென்றிவை யாறும் நகைத்திறச் சுவையும்
வென்றியும் வினோதக் கூத்தென இசைப்ப” (14)

என அடியார்க்கு நல்லார் கூறுவார். இவ்வைணவக் கூத்தினைக் கல்லாடனாரும்,

“மூன்று புரத் தொன்றில் அரசுடை வாணன்
மேருக் கிணைத்ததோள் ஆயிரத் தோடும்
எழு கடல் கிளர்ந்த திரள்கலி யடங்க
முகம்வே றிசைக்கும் குடமுழவு” (15)

என்று பெருமை மிக்க அசுரனை மாற்றுருவில் வென்றதாகக் கூறுவார். இதன் உறுப்பு,

“குடத்தினால் குன்றெடுத் தோனாடல் அதனுக்
கடைக்குப் வைந்துறுப் பாய்ந்து” (16)



பாண்டரங்கம்

பாண்டரங்கம் ஆடலும் சிவனால் ஆடப்பட்டுள்ளது. சிவன் போர்கள் பலவென்ற வலிமையோடும் வெற்றிக் களிப்போடும் பாரதி வடிவாய் இறைவன் வெண்ணீறு அணிந்து ஆடியதாகும். பாண்டரங்கம் என்பதனை பண்டரங்கம் என்றும் குறிப்பிடுவர். மாதவி அச்சம் தரக்கூடிய காளி உருத்தாங்கி அகோரத்தாண்டவமாடித் தன் ஆடற்புலமையை வெளிப்படுத்தினாள்.

“தேர்முன் நின்ற திசை முகன் காணப்
பாரதி ஆடிய வியன் பாண் டரங்கமும்” (17)

ரிக், யசூர், சாம, அதர்வணம் என்னும் மறை பூட்டிய (குதிரைகள்) தேரில், பூமிக்கும் வானத்திற்குமாக நின்ற நான்முகனான பிரம்மாவின் முன், சுடலைப் பொடி பூசிய உக்கிரசிவன் ஆடிய (வெறியாட்டு) தாளக் கூத்தாட்டம் பாண்டரங்கம். சிவனியத்தை ஆடவைப்பதே வைணவக் கூத்து. இதன் உறுப்பு

“பாண்டரங்கம் முக்கணான் ஆடிற் றதற்குறுப்பு
ஆய்ந்தன ஆறாம் எனல்” (18)

பாண்டரங்க ஆடல் இலக்கணமாகக் கல்லாடனாரும்,

“பாண்டரங் கத்தொரு பாடுபெற் றமைந்த
மோகப் புயங்க முறைத் துறை தூக்கி
அதற்குச் சாரணி அருட்கரம் ஒன்றில்
பாணி இரண்டும் தாளம் ஆக்கி
ஒருதாள் மிதித்து” (19)

என்று கூறுவர்.



மற்கூத்தாடல்

மற் கூத்தாடல் திருமாலால் ஆடப்பட்ட வைணவக் கூத்து, வாணன் என்னும் அரக்கன் தேவர்களுக்குத் துன்பம் செய்தபொழுது திருமால் மல்லர்களின் துணையோடு வாணனை வதம் செய்த பொழுது ஆடிய ஆடலாகும். மற்போர் புரிதல் என்ற செயலின் அடிப்படையில் பெயர் பெற்றது. மாதவி மாயவன் வடிவு கொண்டு வாணனை வதம் செய்யும் நிலையில் ஆடல் அபிநயங்களோடு ஆடியுள்ளாள்

“அவுணர்க் கடந்த மல்லின் ஆடல்” (20)

திருமால் ஆடிய வைணவக் கூத்தான இவற்றிற்கு உறுப்புகள்

“நெடியவன் ஆடிற்று மல்லாடல் மல்லிற்கு
ஒடியா உறுப் போரைந்து” (21)

வீழ்ந்தாடல்

துடி, கடையம், பேடு, மரக்கால், பாவை ஆகிய ஐந்தும் வீழ்ந்தாடல் எனப்படுகின்றன.

துடிக்கூத்து

துடிக்கூத்தாடல் முருகன் ஆடிய ஆடலாகும். சூரன் கடல் நடுவில் வேற்றுருக் கொண்டு நின்றபோது முருகன் தொண்டகம் என்னும் பறை முழக்கிச் சூரனை அழித்த பொழுது முருகன் ஆடிய ஆடல். துடியைக் கொட்டி ஆடியதால் துடியாடலாயிற்று. மாதவி முருகன் உருக்கொண்டு சூரனை வென்ற பிறகு கடல் அலையே மேடையாகப் பாவித்து ஆடினாள்.

“... ... ... மாக்கடல் நடுவண்
நிர்த்திரை அரங்கத்து நிகர்த்து முன் நின்ற
சூர்த்திறம் கடந்தோன் ஆடிய துடியும்” (22)

வைகுந்தவாசன் நாராயணன் ஆதிசேசனில் சயனித்திருந்தால் அது திருப்பாற்கடல். சூத்திரத் திராவிடன் சூரபத்மன் அங்கிருந்தால் அது கருங்கடல்.

கடல் நடுவில் மாற்றுருக் கொண்டு மறைந்திருந்த சூரபத்மனைக் கடலையே ஆடலரங்கமாகக் கொண்டு குறிஞ்சி நிலத்திற்குரிய தொண்டகத்துடி முழவு கொண்டடித்து வெற்றி பெற்றாடிய கூத்து துடிக்கூத்து. முருகன் ஆடியது. கூத்தாண்டியாகச் சிவனைக் கொள்ளவில்லை. இதன் உறுப்பு,

“துடியாடல் வேல்முருகனாடல் அதனுக்கு
ஓடியா உறுப் போரைந்து” (23)

கடையக்கூத்து

இந்திரன் மனைவி அயிராணி ஆடிய ஆடல் கடையக் கூத்தாடல் ஆகும். இந்திரன் மனைவி அயிராணி மண்ணுலக வளம் காண விரும்பிச் சேர நகருக்கு வந்து, அங்கு வாணன் மனையின் வடக்கு வாயிற் புறத்தே உள்ள வயலில் உழவர் பெண் வேடம் புனைந்து அயிராணி ஆடிய ஆடலாகும். மாதவி நாட்டுப்புற உழத்தி போல் வேடம் புனைந்து ஆடினாள்.

“வயல் உழை நின்று வடக்கு வாயில் உன்
அயிராணி மடந்தை ஆடிய கடயமும்” (24)

இப்பெண்மைக் கோலத்து அவிநயத்திற்கு உறுப்புகள் ஆறு.



பேடியாடல்

ஆண்மை திரிந்த பெண்மைக் கோலத்தோடு காமன் ஆடிய ஆடல் பேடியாடலாகும். அநிருத்தனைச் சிறைமீட்ட காமன் ஆண் தன்மை திரிந்து பெண்தன்மை மிகுந்து பேடி வடிவத்தோடு காமன் ஆடிய கூத்து. எதிரிகளை மயக்க காமன் பெண் உருக்கொண்டது போல் மாதவி தன்னை ஒப்பனை செய்து கொண்டு அபிநயங்களைச் செய்து மயங்கும்படி ஆடினாள. மணிமேகலையில், மணிமேகலையும் சுதமதியும் உவவனத்திற்கு மலர் பறிக்கச் சென்றபொழுது இக்கூத்து நிகழ்த்தப்பட்டது என்ற செய்தி கூறப்படுகிறது.

“ஆண்மை திரிந்த பெண்மைக் கோலத்துக்
காமன் ஆடிய பேடி யாடல்” (25)

இதனையே மணிமேகலையும்,

“வாணன் பேரூர் மறுகிடை நடந்து
நீணில மளந்தோன் மகன் முன்னாடிய
பேடிக் கோலத்துப் பேடு” (26)

என்று கூறும்.

இதன் உறுப்புகள்,

“காமன தாடல்பே டாகு மதற்குறுப்பு
வாய்மையின் ஆராயின் நான்கு” (27)

மரக்கால்

மரக்காலாடல் துர்க்கை தேவியால் ஆடப்பட்டதாகும். கோபமுடைய அவுணர்கள் வஞ்சம் கொண்டு கொடுந்தொழில்கள் பல செய்து வந்தனர். இவர்களை மாயோன் ஆகிய துர்க்கை அழித்து ஆடிய ஆட்டமாகும். அரக்கர்கள் பாம்பும் தேளுமாக வடிவம் கொண்டு மக்களைக் கடித்துத் துன்புறுத்தினர். நஞ்சுடன் திரியும் இவர்களை அழிக்கத் துர்க்கைதேவி மரத்தாலான கால்களைக் கட்டிக்கொண்டு அக்கால்களால் பாம்பு, தேள்வடிவ அரக்கர்களை மிதித்து அழித்து ஆடிய ஆடலாகும். மாதவி தன்னைக் கொற்றவைப் போல புனைந்து கொண்டு மரக்காலால் இவ்வாட்டத்தை ஆடியுள்ளாள். தற்காலத்தில் சிற்றூர்த் திருவிழாக்களில் பொய்க்கால் குதிரை ஆட்டமாகத் திகழ்ந்து வருகிறது.

“காய்சின அவுணர் கடுந்தொழில் பொறா அள்
மாயவள் ஆடிய மரக்கால் ஆடலும்” (28)

இளங்கோவடிகள் வேனிற் காதையிலும்,

“அசுரர் வாட அமரர்க்காடிய
குமரிக் கோலத்துக் கூத்து” (29)

என்பார்.

இதற்கு உறுப்புகள் நான்கு,

“மாயவள் ஆடல் மரக்கால் அதற்குறுப்பு
நாமவகை யிற் சொல்லுங்கால் நான்கு” (30)

இப்பெண்மைக் கோலக் கூத்தினைக் கல்லாடனாரும்,

“மரக்காலாடி அரக்கர்க் கொன்ற
கவைத்தலை மணிவேல் பிறைத்தலைக் கன்னி
வடபால் பரிந்த பலிமணக் கோட்டம்” (31)

என்றார்.



பாவையாடல்

பாவையாடல் திருமகளால் ஆடப்பட்டதாகும். தேவர் குலத்தை அழிக்க அரக்கர்கள் படையுடன் வந்த பொழுது அவர்களுக்கு முன் திருமகள் மக்களை மயக்கும் கொல்லிப்பாவை வடிவுடன் தோன்றினாள். இவள் அரக்கர் படையை மயக்கி அவர்களை வலியிழக்க செய்த பொழுது ஆடிய ஆடலாகும். மாதவி கொல்லிப் பாவை போல் அலங்கரித்துக் கொண்டு இக்கூத்தை ஆடியிருக்கிறாள்.

“செருவெங் கோலம் அவுணர் நீங்கத்
திருவின் செய்யோள் ஆடிய பாவையும்” (32)

கடாத்தலையன் என்னும் மகிடாசுரன் என்றும் பத்மாசுரன் என்றும் இழிவுபடுத்தி உருவமும் பெயரும் சூட்டுவிக்கப்பட்ட ஒரு திராவிட மல்லனையும் அவன் கூட்டத்தையும் அழிக்கத் திருமாலே மதன மோகினி வேடக் கூத்தாடியது கொல்லிப் பாவை.

“பாவை திருமகள் ஆடிற்றதற் குறுப்பு
ஓவாமல் ஒன்றுடனே ஒன்று” (33)

என்பர்.

இக்கூத்தினுடன் தொடர்புபடுத்தி, ஐயப்பன் பிறப்பைச் சொல்வாரும் உளர்.

சிவனாடியவை - பாண்டரங்கம், கொடுகொட்டி - 2

திருமாலாடியவை - அல்லியம், மல், குடம், பேடி, பாவை - 5

கந்தவேளாகிய முருகனாடியவை - குடை, துடி - 2

துர்க்கையாடியது - மரக்கால் - 1

இந்திராணியாடியது - கடையம் - 1

இப்பதினொரு ஆடலையும் மாதவி பதினோரு வகைக்கோலம் பூண்டு ஆடினாள். இதற்குப் பதினொரு வகைப் பாடல்கள் பாடப்பட்டன. பலவகையான கொட்டுக்கள் முழங்கின. விதிமாண் கொள்கையை விளங்க வைப்பதற்காகவே, சமணத்துறவி இளங்கோவடிகள் இப்பதினோராடலையும் விளக்கினார் என்பர்.

அடிக்குறிப்புகள்

1. ந.மு. வேங்கடசாமிநாட்டார், சிலம்பு, அரங்கேற்றுக்காதை. ப.70.

2. புரட்சிதாசன், சிலப்பதிகாரக்கூத்து, ப.94.

3. மேலது.

4. மேலது.

5. மேலது.

6. செ. கற்பகம், நாட்டிய நாடகங்களில் பாடலும் ஆடலும், ப.25.

7. புரட்சிதாசன், சிலப்பதிகாரக்கூத்து. ப.25.

8. மேலது

9. செ. கற்பகம், நாட்டிய நாடகங்களில் பாடலும் ஆடலும், ப.25.

10. எம். நாராயண வேலுப்பிள்ளை, கல்லாடம், நூற்.63.

11. செ. கற்பகம், நாட்டிய நாடகங்களில் பாடலும், ஆடலும், ப.26.

12. புரட்சிதாசன், சிலப்பதிகாரக்கூத்து, ப.96.

13. செ. கற்பகம், நாட்டிய நாடகங்களில் பாடலும் ஆடலும், ப.26.

14. புரட்சிதாசன், சிலப்பதிகாரக்கூத்து, ப.97.

15. எம். நாராயண வேலுப்பிள்ளை, கல்லாடம், நூற்.22.

16. புரட்சிதாசன், சிலப்பதிகாரக்கூத்து, ப.97.

17. செ. கற்பகம், நாட்டிய நாடகங்களில் பாடலும் ஆடலும், ப.25.

18. புரட்சிதாசன், சிலப்பதிகாரக்கூத்து, ப.98.

19. எம். நாராயண வேலுப்பிள்ளை, கல்லாடம், நூற்.30.

20. புரட்சிதாசன், சிலப்பதிகாரக்கூத்து, ப.98.

21. மேலது

22. செ. கற்பகம், நாட்டிய நாடகங்களில் பாடலும் ஆடலும், ப.26.

23. புரட்சிதாசன், சிலப்பதிகாரக்கூத்து, ப.99.

24. செ. கற்பகம், நாட்டிய நாடகங்களில் பாடலும் ஆடலும், ப.27.

25. மேலது.

26. மணிமேகலை

27. புரட்சிதாசன், சிலப்பதிகாரக்கூத்து, ப.100.

28. மேலது

29. மேலது

30. மேலது

31. எம். நாராயண வேலுப்பிள்ளை, கல்லாடம், நூற்.42.

32. செ. கற்பகம், நாட்டிய நாடகங்களில் பாடலும் ஆடலும், ப.27.

33. புரட்சிதாசன், சிலப்பதிகாரக்கூத்து, ப.101.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p169.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License