Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினேழாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...

Content
உள்ளடக்கம்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

ஆசாரக்கோவை எடுத்துரைக்கும் மரபொழுக்க அறம்

ம. லியோசார்லஸ்
முனைவர் பட்ட ஆய்வாளர்,
பெரியார் ஈ. வெ. ரா. கல்லூரி (தன்னாட்சி), திருச்சி.


முன்னுரை

சமுதாயத்தின் மரபுகளே மனிதனைத் தனக்குள் கட்டுப்படுத்தி நிற்க வைத்து, அறச்செயல்களைச் சட்டங்களாக அமைத்து நடைமுறைப்படுத்தின. சமூகத்தில் ஒன்றுபட்டு வாழக்கூடிய நிலையில் தனிமனிதனை ஒழுங்குபடுத்தும் சில கட்டுப்பாடுகள் மரபுகளாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன. இதன்கண் ஒருவித ஒழுக்கநிலை சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவை அனைவரும் ஏற்றுக்கொள்பவையாக அமைக்கபட்டன. பழங்காலச் சமுதாயம் ஒன்றில் வாழும் ஒரு மக்கள் தொகுதி அல்லது குழு, மரபு என்னும் பொருண்மைக்கு வடிவம் கொடுக்கலாயின எனலாம். அதன்வழி மரபொழுக்க நிலைக்கு உட்பட்டு பழங்காலந்தொட்டு இன்று வரை அனைத்து மக்களாலும் போற்றப்படும் அற இலக்கியங்களில் ஒன்றாக விளங்குவது ஆசாரக்கோவை நூலாகும். இத்தகைய நூல் எடுத்தியம்பும் கருத்துகள் யாவும் மரபொழுக்க நிலையை ஏற்று பின்பற்றியவையாகவும் உள்ளன எனுங் கருத்தினைக் காணலாம்.

மரபொழுக்க நிலை என்பதன் பொருள்

அறவுணர்வுப் படிநிலைகளில் ஒன்றாகக் கருதப்படுவது மரபொழுக்க நிலையாகும். வழக்கம், ஆசாரம், சம்பிரதாயம், சட்டம், ஸ்மிருதி தேவகட்டளை என்பவைகளைக் கொண்டு சமுதாயம் தனி மனிதனுடைய நடத்தையைக் கட்டுப்படுத்தி வந்தால் இந்நிலை சம்பிரதாய தருமநிலை ஆகும். இத்தகைய நெறிமுறையினைக் கைக்கொண்டு சமூகக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு தனிமனிதன் தன் வாழ்க்கை நெறியினை அமைத்துக் கொள்வது மரபொழுக்க நிலை என்னும் வரம்பிற்குள் அடங்கும்.தனிமனிதன், குடும்பம், சமூகம் என்னும் படிநிலைகளுடன் ஒன்றுபட்டு ஏற்குந்தருவாயிலோ அல்லது மறுக்குந்தருவாயிலோ அமைந்தவையாக மரபொழுக்க நிலை அமைகின்றது. இந்நிலை பின்னர் வழக்கமாகவும் மாறி மக்களை வழிநடத்துபவையாக அமைகின்றன. இவைகளே மரபொழுக்க நிலையாகவும் கொள்ளப்படுகின்றன. இத்தகைய ஒழுக்கமரபு நிலையினை ‘அறவியல்’ என்னும் நூல் பின்வருமாறு வரையறை செய்கின்றது.

“மரபுநெறியின் அடிப்படையாக விளங்குவன கூட்டமாக அல்லது மந்தையாக வாழும் இயல்பூக்கமும் (Herd Instinct) அதனுடன் தொடர்புள்ள உடன்பிறந்த போக்குகளான இரக்கம் (Sympathy) மற்றவர்களைப் பார்த்து நடப்பது (Imitation) கருத்தைத் தோற்றுவிப்பது (Suggestion) போன்றவை” (அறவியல் - ஓர் அறிமுகம் ப - 86)ஆசாரக்கோவை நூல் சிறுகுறிப்பு

ஆசாரக்கோவையின் மூலநூல் ஆரிடம் என்ற வடமொழி நூல் எனலாம். வெண்பாக்களால் ஆன இந்நூல் 100 பாக்களைக் கொண்டுள்ளது. இந்நூலினை இயற்றியவர் கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார் ஆவார். இந்நூல் சைவ சமயம் சார்ந்த நூலாகக் கருதப்படுகின்றது. ‘ஆசாரம்’ என்பதன் பொருள் ஒழுக்கமாகும். ஒழுக்கங்களின் கோவை ஆசாரக் கோவையாகும். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகக் கருதப்படும் இவை அறப் பிரிவிற்குள் அடங்குபவையாக அமைந்துள்ளன. சான்றோர்களின் பழுத்த அறிவினால் தோன்றியவை என்பதனை உணர்த்தும் விதமாக ‘முந்தையோர் கண்ட நெறி ’, ‘யாவரும் கண்ட நெறி’ , ‘பேரறிவாளர் துணிபு’ , ‘நல்லறிவாளர் துணிபு’ என்னும் தொடர்கள் வாயிலாக அறியமுடிகின்றது.

ஆசாரக்கோவை உணர்த்தும் மரபொழுக்க அறம்

மரபொழுக்க நிலை என்னும் பதம் அறத்தினைப் போற்றுவனாய் அமைந்துள்ளன. அறத்தின் செயல்பாடுகள் யாவும் மரபொழுக்க நிலையினை ஏற்பவையாய் அமைந்துள்ளன. இவ்விதம் குறிக்கப்பெறும் இந்நிலை நாகரீகச் சமுதாயத்தில் சில நேரங்களில் புறந்தள்ளப்படுகின்றன என்றும் கூறலாம். அடிப்படையில் ஆராய முற்படும் வேளையில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான ஆசாரக்கோவை நூல் மரபொழுக்க அறநிலையினை ஏற்பவையாக அமைந்துள்ளமையினை அறியலாம். அறிவில் சிறந்த சான்றோர்களாகிய முன்னோர்களின் பட்டறிவுக் கருத்துகளை பிரதிபலிப்பனவாக உள்ளதால் இவை மரபொழுக்கத்தின் வழக்கமாக கொள்ளப்பட்டமை அறிய முடிகின்றது. இந்நூலில் நாள்தோறும் பின்பற்றக்கூடிய நித்திய ஒழுக்கங்களைக் கூறுவதின் நிமித்தம் அறம் வலியுறுத்தப்படுவதை உணர முடிகின்றது.

“வைகறை யாமம் துயிலெழுந்து தான் செய்யும்
நல்லறமும் ஒண்பொருளும் சிந்தித்து வாய்வதில்
தந்தையும் தாயும் தொழுதெழுக என்பதே
முந்தையோர் கண்ட முறை” (ஆசாரக்கோவை, பாடல் எண்: 4 )

இப்பாடலில் ‘முந்தையோர்’ என்னும் பதங்கண்ட அளவில் மரபினால் போற்றப்பட்ட முன்னோர்களின் செயல்பாடுகளை சமூகம் ஏற்றுக்கொண்டமை நன்கு விளங்குகின்றது. ‘அறம்’ எனும் நெறிமுறையில் ஆசாரக்கோவையின் இப்பாடல் மிகத் தெளிவாக மரபொழுக்க அறக்கருத்தினை வலியுறுத்துகின்றது.ஆதிகாலம் முதற்கொண்டு இவ்வுலகை இறைவன் படைத்தான் என்றும், அதனால் இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்றும் நம்பிக்கைக் கொண்டிருக்கின்றோம். தமிழிலக்கியங்களைக் கண்ணோக்கும் தருவாயில் அதனைப் படைத்தவன் இறைவன் எனவும் நம்புகின்றோம். அதனை ஏற்றுக்கொண்டவர்களும் உண்டு; மறுத்தவர்களும் உண்டு. இக்கருத்தினை ஏற்றுக் கொண்டவர்கள் மரபொழுக்க நிலையினை எற்றவர்களாகின்றனர். அதன்பேரில் ஆசாரக் கோவையில் சொல்லப்பட்ட செய்திகளும் இவற்றுள் அடங்கும் என்பதில் மாற்றில்லை.

“உடுத்தலால் நீராடார் ஒன்றுடுத் துண்ணார்
உடுத்தாடை நீருட் பிழியார் விழுத்தக்கார்
ஒன்றுடுத் தென்றும் அவைபுகா ரென்பதே
முந்தையோர் கண்ட முறை” (ஆசாரக்கோவை, பாடல் எண்: 11)

மேற்கூறப்பட்ட பாடலின் வழி பழமையோர் உணர்ந்து போற்றிய செயல்களைப் பின்னும் இறை நம்பிக்கைக் கொண்ட இன்றைய சமூகமும் பின்பற்றி வருகின்றன என்பது தெளிவாகின்றது. இதனால் மரபொழுக்க நிலை வழுவாமல் அறம் போற்றப்பட்டு வருகின்றது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை எனலாம்.

“எச்செயல் மக்களால் ‘செய்யப்படவில்லையோ’ அச்செயல் ‘தீய செயல்’ எனவும், ‘எப்போதும் செய்யப்படும் செயல்’‘நல்ல செயல்’ எனவும் ஆகும்” (அறவியல் ஓர் அறிமுகம் ப - 84)

இதனால் நற்செயல், தீச்செயல் என்னும் பதங்கள் யாவும் வெகுசன மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவையாக அமைந்துள்ளன. நம்பிக்கையின் வயப்பட்ட தமிழ்ச் சமூகம் சான்றோர்களின் வாக்கு பொய்யாத் தன்மை கொண்டது என்பதனை மனதில் ஏற்று தம் வாழ்வில் கடைபிடிக்கலாயினர். அதனால் மரபொழுக்க அறநிலை இன்றும் சமூகத்தில் நிலவுகின்றது. எத்தகையச் செயல்களைச் செய்ய கடமைப்பட்டுள்ளோமோ அத்தகையச் செயல்களை செய்கின்றோம். நம் முன்னோர்கள் எவ்வகையில் வாழ்ந்தார்களோ அவ்வகையில் நாமும் நம் வாழ்க்கையினை அமைத்துக் கொள்கின்றோம். சமுதாயம் கூறும் எந்தக் கருத்தும் செய்பவன் கருத்தென சிறப்பாக அமைகின்றது. இவ்வகையில் ஒரு சமுதாயத்தின் அறக் கருத்துகள் அறிவுள்ள ஒருவன் ஐயப்படாத வகையில் அவனுக்குத் தானே விளங்கும் அறக் கருத்துகளாக அமைகின்றன.

மற்றவர்களுக்கு இன்பம் தருவது மற்றும் நமக்கு மனமகிழ்ச்சியினைத் தருவது என்னும் உணர்வு நிலையிலும், சமூகம் ஏற்றுக்கொண்ட அனைத்து ஒருமித்த கருத்துகளின் அடிப்படையிலும், நாம் மரபொழுக்க வழியில் அறத்தினை மேம்படுத்த முயல்கின்றோம். இதனால் தனிமனிதனுக்கு சமூகம் தனி அந்தஸ்தினை அளிப்பதாக உள்ளமையினையும் காண்கின்றோம். சான்றாக நம் மூதாதையர் இறந்து போனபின் அவர்களைப் போற்றி செய்யும் கடமைகளைக் கொள்ளலாம். தனிமனிதனின் செயல்பாடுகள் யாவும் நற்செயலாய் அமைவதற்கான வாயிலாக ‘ஒழுக்கம்’ போற்றப்படுகிறது. அத்தகைய ஒழுக்கம் மூதாதையர்கள் வழியாய் பெறப்படுவது மரபொழுக்கமாகின்றது.

“அட்டமியும் ஏனை உவாவும் பதினான்கும்
அப்பூமி காப்பார்க் குறுகண்ணு மிக்க
நிலத்துளக்கு விண்ணதிர்ப்பு வாலாமை பார்ப்பார்
இலங்கு நூல் ஓதாத நாள்” (ஆசாரக்கோவை பாடல் எண்: 47)

மேற்காட்டப்பட்ட ஆசாரக்கோவை பாடலின் வழி நோக்கும்போது அந்தணர்கள் ஏற்றுக்கொண்டு பின்பற்றிய அட்டமி திதி, அமாவாசை, பெளர்ணமி, சதுர்த்தசி, மன்னர்க்கு துன்பம் வரும் நாள், பூகம்பம் வரும் நாள், தூய்மை இல்லா நாள் போன்ற நாட்களில் எல்லாம் வேதங்கள் ஓதக்கூடாத நாட்களாக கூறப்பட்டுள்ளன. இவைகள் மரபு ரீதியாக இன்றும் அந்தணர்கள் வாழ்வியல் முறைகளில் பின்பற்றி வருகின்றனர். இதனால் மரபொழுக்க அறநிலை ஆன்மீக வாழ்வின் அடிப்படை நாதமாக விளங்கி வருகின்றமையினை உணர்ந்து கொள்ளலாம்.ஏற்கத்தக்க மரபொழுக்க ஆசாரங்கள்

மனிதர்களிடம் இயல்பான உணர்வுகள் அல்லது செயல்பாடுகளாக அமைந்துள்ள இரக்கம், மற்றவர்களைப் போல நடப்பது, ஒருவர் கருத்தைப் பலரும் ஏற்பது, நம் அருகில் உள்ளவர்களுக்குப் பிடித்ததையே நாமும் செய்ய வேண்டும் என்பவை யாவும் நம்மை நெறிப்படுத்துவதாக அமைகின்றன. அவ்விதமாகப் பார்க்கும் போது பண்டைய மக்கள் தங்கள் வாழ்வில் அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழல்களுக்கு ஏற்ப, உளத்தின் பொருட்டும், உடலின் பொருட்டும் தகவமைத்துக் கொள்ளலாயினர். அதன் விளைவாக, நடத்தைகளின் போக்கு அமையலாயிற்று. பின்னர் தங்களுக்கென விதிகளை வகுத்துக் கொண்டு சமூகத்தில் ஏற்கக் கூடியது என்றும், போற்றக் கூடியது என்றும் எண்ணி பின்பற்றலாயினர். இக்கருத்தினை எடுத்துரைக்கும் விதமாக இந்நூலில்;

“நன்றியறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு
இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு
ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை
நல்லினத்தாரோடு நட்டல் இவை எட்டும்
சொல்லிய ஆசார வித்து” (ஆசாரக்கோவை பாடல் எண்: 1)

என்பதன் வழி சொல்லப்பட்ட எட்டுச் செய்திகளும் மரபொழுக்க அறத்தினை விதைப்பதாய் அமைந்துள்ளன. இவை இன்றைய காலகட்டத்திலும் ஏற்றுக்கொண்டு பின்பற்றப்படுபவைகளாக அமைந்துள்ளன. ஒரு காலகட்டத்தில் சமூகம் ஏற்றுக் கொண்டதனையே தனிமனிதன் ஏற்கும் மரபொழுக்க அறமாக கருதப்பட்டது. ஏனென்றால் நாகரீக வளர்ச்சியினால் சமூகத்தின் செயல்பாடுகள் மாற்றம் பெற்றதன் விளைவு எனலாம். இதன்படி என்றும் தளர்ச்சியில்லாத உறுதியான உள்ளத்தினை உடையவர்கள் வஞ்சனைச் சொற்கள், பயனற்ற சொற்கள், நாவடக்கமில்லாத சொற்கள், புறங்கூறுதல் ஆகியவற்றினைப் பற்றிச் சிறிதும் சிந்திக்காமல் தங்கள் கருமமே கண்ணாய் செயல்படுவர். இச்செயல் அன்று முதல் இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வரும் செயல் என்று வரையறுத்தல் என்பது துணிந்து முடிபு. இதனைப் பின்வரும் ஆசாரக்கோவைப் பாடல் பின்வருமாறு எடுத்துரைக்கின்றது.

“படிறும் பயனிலவும் பட்டி யுரையும்
வசையும் புறனும் உரையாரே யென்றும்
அசையாத உள்ளத் தவர்” (ஆசாரக்கோவை பாடல் எண்: 52)ஏற்கத்தகாத மரபொழுக்க ஆசாரங்கள்

ஆசாரக்கோவை நூல் வடமொழியின் தழுவல் என்று சிலர் உரைக்கின்றனர். அதில் சொல்லப்பட்ட கருத்துகள் யாவும் ஏற்றுக்கொள்ளக் கூடியனவாக அமைந்தாலும் சில கருத்துகள் ஏற்கத் தகாதவைகயாகவும் அமைந்துள்ளன. இதன் காரணம் என்னவெனில் நாகரீக வளர்ச்சி மற்றும் விஞ்ஞான வளர்ச்சி வேகம் மக்கள் வாழ்வியல் முறைகளை மாற்றமடையச் செய்துள்ளது.

“பழங்காலச் சமுதாயத்தின் வழக்கங்களுக்கு ஆதரவாக விளங்குவது ‘தடை’ அல்லது ‘இன்னது செய்யக்கூடாது’ என்ற விதியாகும். வழக்கத்துக்கு மாறாக எவனாவது ஒரு செயல் புரிந்தால் அவன் அனைத்துக்கும் மேற்பட்ட சக்தியான கடவுளின் ஆணைப்படி ஏதாவது ஆபத்து ஏற்படும் என்பதுதான் இது” (அறவியல் - ஓர் அறிமுகம் ப - 92)

இவ்விதம் கடவுள் நம்பிக்கையில் மூழ்கித் திளைத்த மக்களின் செயல்பாடுகள் மரபு வழியாக போற்றப்பட்டமையினால், அறிவார்ந்த சிந்திக்கும் மக்கள் இவற்றினை ஏற்றக்கொள்ள இயலாத நிலை அமைகின்றது. இத்தகைய ஏற்கத்ததகாத மரபொழுக்க ஆசாரங்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

“நின்றக்கால் நிற்க அடக்கத்தா லென்றும்
இருந்தக்கால் ஏவாமை ஏகார் பெருந்தக்கார்
சொல்லிற் செவிகொடுத்துக் கேட்டீக மீட்டும்
வினாவற்க சொல்லொழிந்தக் கால்” (ஆசாரக்கோவை பாடல் எண்: 74)

இப்பாடலில், ஆசிரியர் முன் மாணாக்கர்கள் நடந்து கொள்ள வேண்டிய வழிமுறைகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. காலச்சூழலுக்கேற்ப இவற்றினை நோக்கும் போது யாவும் இன்று பின்பற்றப்படாத சூழல்தான் நிலவுகின்றது. இவ்விடம் ஆராயப் புகுவோமேயானால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள பல வகையான மாற்றங்கள் தான் இவற்றிற்கான காரணம் எனலாம். மரபொழுக்க அறவிதிகளைப் பின்பற்றி செயல்படுபவர்கள் யாவரும் பழைமைவாதிகள் என்று அழைக்கப்பட்டு அவர்களின் அறக்கருத்துகள் எற்கப்படாத நிலை உள்ளது. இத்தகைய மரபொழுக்கத்தில், மதச்சடங்குகள் சமுதாயத்தின் அதிகாரத்தினை ஆதரிக்கின்றன. மதத்தின் பெயரால் பிரிவினைகளை விரும்பாத அறிவார்ந்த மக்கள், அதன்வழி சொல்லப்பட்டக் கருத்துகளைப் புறந்தள்ளுகின்றனர். தனிமனிதனை மரபொழுக்க அறநிலை ஆசாரங்கள் கருத்தில் கொள்வதில்லை. சமுதாயத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கும் இவற்றினால் நமக்குப் பயனில்லை என்பதனை உணர்ந்து மரபினை புறக்கணிக்க எண்ணினர். அதனால் மரபொழுக்க நிலை மறைந்து ஆசாரங்கள் போற்றப்படுவதில்லை எனும் சூழல் உருவாகியது. மேலும்,

“உண்டது கேளார் குரவரை மிக்காரைக்
கண்டுழிக் கண்டால் மனம்திரியார் புல்லரையும்
உண்டது கேளார் விடல்”(ஆசாரக்கோவை பாடல் எண்: 86)

ஐங்குரவர்கள் என்று போற்றப்படும் சான்றோர்களைக் கண்டால் உணவு உண்டீர்களா? என்று வினவுதல் கூடாது என மொழியப்பட்டுள்ளது. ஆனால் இன்று அவ்விதம் அல்லாத நிலை பின்பற்றப்படும் தருவாயில் இவற்றினை ஆராய முற்பட்டால் ஆசாரம் கடைபிடிக்கப்படவில்லை என்று கொள்ளலாம். ஆனால் இன்றைய சூழலைக் கண்டுணர்ந்தால் இச்செயல் சரிதான் என்பது தெளிவாகும். ஏனெனில் பெரியவர்களிடம் உரையாடும் போதும், சந்திக்கும் போதும், வீட்டில் உள்ளோர் நலமாக உள்ளார்களா? என்று வினவிய பின்பு உணவு உண்டீர்களா? என வினவுகின்றோம். அவ்வினா எழுப்புதலின் பொருள் அவர்களுக்கு உபசரிப்பு செய்வதற்காக அவ்வினா எழுப்பப்படுகின்றது. எனவே மரபொழுக்க அறநிலையினைப் பொறுத்த வரையில், பண்டைய காலத்தில் பின்பற்ற வழிமுறைகள் பலவும், நாகரீகக் காலமாகிய இன்று புறந்தள்ளப்படுபவையாக அமைந்துள்ளன எனலாம்.

முடிவுரை

அறவழியில் மிகச் சிறந்த கருத்துகளையும் விந்தையான செய்திகளையும் உள்ளடக்கிய கலவை நிலையில்தான் பழங்கால விதிகள் உள்ளன. இன்றைய காலகட்டத்தில் அற்பமான விதிகளாக கருதுபவைகள்தான், பழங்காலச் சமூகத்தில் பலரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அறமாகவும், ஆசாரமாகவும் விளங்கியது என்பதனை மறுக்க முடியாது. அறிவியல் வளர்ச்சியினாலும், நாகரீக மேம்பாடுகளாலும், மனிதன் அறிவார்ந்த சிந்தனைகளின் வழி பழைமைகளை ஒதுக்க வேண்டும் என்னும் பெயரில் அறிவு தொடர்பான சில ஆசாரங்களை ஒதுக்குவதினையும் நாம் காணலாம். மரபொழுக்க நிலை முன்னோர்களின் அனுபவத்தினால் விளைந்த அறிவுச் சுடர் என்றும், அது மக்களை நல்வழியில் அழைத்துச் செல்பவையாக அமைந்துள்ளன என்றும் கொள்ளலாம். அதன்வழி, ஆசாரக் கோவையில் சொல்லப்பட்ட ஆசாரங்கள் பலவும் ஏற்கத்தக்கனவாக அமையப் பெற்றிருந்தாலும், ஏற்கத்தகாத ஆசாரங்களும் உள்ளன என்பதனையும் மறுக்க முடியாது. ஆனால் ஆசாரக்கோவை நூலில் மரபொழுக்க அற நிலை உணர்வுகள் கருத்துகளாய் மிகுந்து உள்ளமையினால் அவற்றின் மூலம் நல்லொழுக்கச் செயல்பாடுகள் வளர்ந்து சமூகம் மேம்பாடடைய இந்நூல் உதவுகின்றது என்பது புலப்படுகின்றது.

துணை நூல் பட்டியல்

1. பெருவாயின் முள்ளியார் இயற்றிய ஆசாரக்கோவை, செல்வகேசவராய முதலியார், கலாரத்னாகரம் பிரஸ், சென்னை (மூன்றாம் பதிப்பு 1916)

2. அறவியல் - ஓர் அறிமுகம், வில்லியம் லில்லி (ஆங்கிலம்), காந்தி கோ. மோ (தமிழ் மொழியாக்கம்), தமிழ் வெளியீட்டுக் கழகம், சென்னை (1964)

3. ஆக்க இலக்கியமும் அறிவியலும், சண்முகதாஸ். அ, யாழ்ப்பாண வளாகத் தமிழ்த்துறை வெளியீடு, யாழ்ப்பாணம், இலங்கை (1977)

4. இலக்கியமும் உளவியலும், காஞ்சனா. இரா, விஷ்ணுப்பிரியா பதிப்பகம், மதுரை (1997)

5. பக்தி இலக்கியத்தில் சமுதாயப் பார்வை, ஈசுவரப்பிள்ளை. தா, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் (2000)


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p183.html


  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017

வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்

முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                               


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License