இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
இலக்கியம்

சமூகப் பொருளாதாரச் சூழலில் நெய்தல் தலைவி

முனைவர் ச. ஜென்சி ரோஸ்லெட்
முதுநிலை முனைவர் ஆய்வாளர்,
கேரளப் பல்கலைக்கழகம், திருவனந்தபுரம் 695 581.


முன்னுரை

‘சமூகப் ருளாதாரச் ழலில் நெய்தல் தலைவி’என்பது இக்கட்டுரையின் தலைப்பாக அமைகிறது. பொருளாதாரச் சூழலில் நெய்தல் நிலம் சார்ந்த தலைவியின் சூழல்கள் அமைந்த திணைப்பாடல்கள், நூல்கள், கட்டுரைகளை இனம் கண்டு தொகுத்துக் கட்டுரை ஆய்வுக்குத் தேவையானவற்றைத் தருவது, இக்கட்டுரையின் பொருளை மேலும் அழகூட்டுவதாகும். கட்டுரைக்கு அடிப்படையாக அமைவது ஆதாரங்களாகும். இலக்கிய வரையறையை ஆழமாகப் புரிந்துகொள்ள உதவும் தமிழ் இலக்கிய வரலாறு போன்ற நூல்கள் முதன்மை ஆதரமாகும். இலக்கியம் தொடர்பான கட்டுரைகள் துணைமை ஆதாரங்களாகும். இவ்வாய்வுக் கட்டுரையில் பகுப்பாய்வு முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.

சங்க செவ்வியல் இலக்கியத்தில் திணைப்பாகுபாடு என்பது இலக்கியம் சார்ந்த ஒன்றாகவேக் கொள்ள வேண்டும். தொல்காப்பியர் பாடல்களை முன்வைத்து அதில் பயின்று வரும் வாழ்வைப் பாடலின் உள்ளடக்கம் என்னும் வகையில் வகைப்படுத்தியிருக்க வேண்டும். தலைவன் தலைவி ஆகியோருக்கான அடிப்படைத் தகுதிகளையும் வரையுறுத்துள்ளார். ஏவலரும், வினைவலரும் தலைவன், தலைவியாகப் பாடல்களில் சுட்டப்படுவதில்லை - தொல்காப்பியம் இதை அனுமதிக்கவும் இல்லை. ஆனால், ழ்வில் இவர்கள் ஓங்கியிருக்க வேண்டும். எல்லோரையும் போல் வாழ்ந்திருக்கவும் வேண்டும். எனினும், சங்கப்பாடல்களுக்கும் அக்கால வாழ்விற்கும் தொடர்பே இருந்திருக்க இயலாது, எனக் ருதவும் இயலாது. எக்காலத்திலும் கவிஞனுக்கும் வாழ்விற்கும் இடையிலான உறவில்தான் இலக்கியம் உயிர்ப் பெறுகிறது. இந்த உறவு எத்தகையது என்பது கவிதை மீதான ஆழ்ந்த வாசிப்புதான் உணர்த்த முடியும்.

நிலமும் மக்களும்

சங்கப் பாடல்களில் நிலம் என்பது பாடலில் சுட்டப்படும் மனிதர்களின் இயங்குதளத்தைக் குறிக்கிறது. ஆனால் இயங்குதளமான நிலமே வாழ்வின் போக்கை, கலாசாரத்தைத் தீர்மானிக்கிறது. தொல்காப்பியரைப் பொறுத்தவரையில் பாலை ஒரு நிலமல்ல. இயல்பான வாழ்க்கை பாலையில் நடைபெறுவதில்லை, இயல்பிற்கு மாறான நிலை பொழுது மட்டுமே குறிக்கப்பட்டுள்ளது. பொழுது அதாவது வேனிற்கால நண்பகல் நேரம் மனிதனை, உயிரினங்களை வதைக்கின்றது. சங்கப்பாடல்கள் இந்த வதைபடும் காட்சியை மீண்டும் மீண்டும் முன்வைத்துள்ளன. ஏனைய நான்கு நிலங்களும் மனித வாழ்விற்கு உகந்ததே. பாதுகாப்பானதும் கூட.

மக்களின் சமூகப் பொருளாதார வாழ்வை நிலம்தான் தீர்மானித்துள்ளது. முல்லையிலும் குறிஞ்சியிலும் மிகுபொருள் உற்பத்தி இல்லை. வாழ்விற்குத் தேவையானப் பொருளை இயற்கையிலிருந்து மனிதன் பெற்றுக் கொள்ளுகிறான். உணவிற்காகவே, உணவு,தானியங்களைப் பயிரிடுகிறான். வேட்டையாடுதல் நிகழ்வுதுண்டு. அதுவும் உணவிற்காகவே வசிப்பிடங்கள் எளிமையான சற்றுக் கூடுதலாகக் கிடைக்கும் பொருட்களைப் பிற நிலங்களில் கொடுத்துத் தேவையானப் பொருள்களைப் பெற்றுக் கொள்வர். இவையனைத்தும் பாடல்கள் முன் வைக்கும் சித்திரங்களே. குறிஞ்சியின் உறுப்பொருளானகூடல். வாழ்விற்கு அடிப்படையானது இயற்கையானது குறிஞ்சித்திணைப் பாடல்கள் மேலோங்கி இருக்கும், காமம் மிக உயர்வானது. உயிரின் அடிப்படை இயல்பு. முல்லையின் உரிப்பொருளான இருத்தல் காமத்தை நெறிப்படுத்துவது. தொல்காப்பியர் இவ்விரு திணைகளையும் முதல் இருதிணைகளாகச் சுட்டுகிறார். சிக்கலான சமூகஅமைப்பை இவ்விரு நிலத்தைச் சுட்டும் பாடல்களில் காண இயலவில்லை. ஏறுதழுவுதலும் அதைச்சார்ந்த கலாச்சாரத்தையும் கலித்தொகைப் பாடல்களில் மட்டுமே காணமுடியும். கலித்தொகையும் பரிபாடலும் காலத்தால் பிந்தியவை என்றும் வையாபுரியின் கருத்தினை நினைவில் கொள்ளவேண்டும்.


மருதமும் நெய்தலும் மிகுபொருள் உற்பத்தி நிகழ்ந்த இடங்கள். இதன் காரணமாக வணிகச்செயல்பாடும் செழித்திருந்தது. பொருளாதாரத்தில் வளத்தை இவ்விரு நிலங்களுமேக் கொண்டிருந்தன. பொருளாதாரத்தை மேலாண்மை செய்ய மனிதன் முற்படும்போது சமூக அமைப்பு சிக்கலாகி விடுகிறது. முல்லையிலும் குறிஞ்சியிலும் உயர்வு தாழ்வு கொண்ட வாழ்வு பாடல்களில் சித்தரிக்கப்படவில்லை. ஆனால், மருதத்திலும், நெய்தலிலும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த சமூக அமைப்பினை எதிர்கொள்ளமுடிகிறது.

ஒரு பசுவிலிருந்து கிடைக்கும் வருவாயைக் கொண்டு வாழும் நிலையும் உண்டு. அதேசமயம் பெருநில உடைமையாளர்களையும் காணமுடிகிறது. காதலுக்கு இப்பொருளாதார வேறுபாடு தடையாக அமையாது என்றுதான் கவிஞன் உணர்த்த முயல்கிறான். ஆனால் பெரும்பாலும் ஒத்தப் பொருளாதார நிலையைச் சார்ந்த தலைவன் தலைவி மணவாழ்வில் இணைவதையேக் காணமுடிகிறது. உற்பத்தி செய்பவன் மட்டுமே நிலத்திற்கு உரியவன் ஆவான். உற்பத்திக்குப் பாடலில் தலைவன், தலைவியாகும் தகுதியைப் பெறுவதில்லை.

"நெய்கனி குறும்பூழ் காய மாக
ஆர்பதம் பெறுக தோழி யத்தை
பெருங்கனாடன் வரைந்தென வவனெதிர்
நன்றோ மகனே யென்றனன்
நன்றே போலு மென்றுரைத் தோனே” (குறுந்தொகைபாடல் -389 )

இப்பாடலில் தலைவன் வரைவு மேற்கொண்டச் செய்தியை வந்துரைக்கும் 'மகன் ' நெய்கலந்த உணவு பெறுவதாக, என்கிறாள் தோழி. இவன் தலைவனை ஏவகனாக இருத்தல்கூடும். இவனுக்கும் வாழ்வில் காதல் அரும்பும். ஆனால் அக்காதல் பாடப்படும் தகுதி படைத்தல் அல்ல. பாடல்களைக் கூர்ந்து வாசிக்கும் போது இவர்களுடைய காதலும் பாடல்களில் தலைதூக்குவதைக் காணமுடியும். குறுந்தொகைப் பாடல் - 392ல் சுட்டப்படும் தலைவி,

"துளரெறிநுண்டுகட்கலளஞர்தங்கை"

களை எடுப்பவனின் தங்கை என்றாலும் மருதநிலக் காதல்கள் மருத நிலத்தில் காதல் ஒத்தப் பொருளாதாரச் சூழலில்தான் எழுந்துள்ளது எனக் கூறமுடியும்.

நெய்தல் நிலம்ஏனைய மூன்று நிலங்களிலிருந்து முற்றிலும் வேறாக அமையும். பொருளாதாரத்தின் சமூகநிலை ஏற்றத்தாழ்வுகள் கொண்டவர்களுக்கிடையில் காதல் எழுகிறது. தலைவி பெரும்பாலும் மீன் வேட்டம் நிகழ்த்துபவர்களின் மகளாக தங்கையாக அமைகிறாள். ஆனால் இவர்களை நாடிவரும் காதலன் கொடி அசையும் தேரில் வந்து இறங்குகிறான். சமூகப் பொருளாதார நிலையில் வேறுபட்ட நிலையில் உள்ளவர்களுக்கு இடையே நிகழும் காதல் என்ற உணர்வு கவிஞர்களுக்கு இருந்துள்ளது. நற்றிணை 45-வது பாடலைச் சுட்டவேண்டும்.

"இவளேகானல் நண்ணிய காமர்சிறுகுடி
நீல்நிறப் பெருங்கடல் கலங்க உள்புக்கு
மீன்ஏறி பரதவர் மகளே !நீயே
நெடுங்கொடி நுடங்கும் நியமமூதுர்க்
கடுந்தேர்ச் செல்வன் காதல்மகனே ;
நிணச்சுறா அறுத்த உணக்கல் வேண்டி,
இனப்புள் ஒப்பும் எமக்கு நலன் எவனோ?
புலவுநாறுதும்; செலநின்றிமோ!
பெருநீர்விளையும் எம்சிறு நல்வாழ்க்கை
நும்மொருபுரைவதோ அன்றோ ;
எம்மனோரில் செம்மலும் உடைத்தே” (நற்றிணைபாடல் -45)

பெயர் அறியாத புலவர் பாடிய பாடல் இது.

முதல் ஐந்து வரிகளிலும் தலைவி தலைவனின் சமூகநிலைச் சுட்டப்படுகிறது. தலைவி சிறுகுடியைச் சார்ந்த மீன்ஏறி பரதவர் மகள். தலைவனோ நியமமூதூரிலிருந்து கொடிஅசைய தேரில் வந்து இறங்கும் செல்வம் ஒருவரின் காதல்மகன் பெரும்பாலும் வணிகனாகவோ அதிகாரமையத்தைச் சார்ந்தவனாகவோ இருத்தல்கூடும். அடுத்த மூன்றுவரிகளும் சமூகப் பொருளாதார வேறுபாடு துல்லியமாக முன்வைக்கப்படுகிறது. சுறாவின் கசையை உணக்கமுனையும் தலைவியும் அவளைச் சார்ந்தவர்களுக்கு பறவையை விரட்டுவது அவர்கள் பண்பு ஏறிய வாழ்க்கை, புலவுநாறுதும் ‘செல்நின்றிமோ’ ‘மீன்வாடை வீடும் எங்களிடமிருந்து விலகிச்செல்’ என்கிறார் தோழி.


பாடலின் அடுத்த வரியிலேயே தங்கள் வாழ்வு குறித்த இழிவை அல்ல பெருமிதமே உள்ளது என்பது பதிவு செய்யப்படுகிறது. 'பெருநீர் விளைவும் எம் சிறு நல்வாழ்க்கை' கவிஞன் இந்த வாழ்வு செல்வனின் மகனோடு பொருந்தாது என்கிறார். கடைசி வரியாக, 'எம்மனோரில் செம்மலும் உடைத்தே' எங்கள் இனத்திலும் தலைவிக்குத் தகுதியானவன் உண்டு என்பது கவிஞனின் பார்வையைத் துலக்கி விடுகிறது. சங்கப்பாடல்கள் நெய்தல் திணைப்பாடல்களில் மட்டுமே இத்தகையப் பாடல்களைக் காணமுடிகிறது.

நெய்தல் மீன்வேட்டம் நிகழ்த்தும் பரதவர்களின் நிலம். அதேசமயம் கடல் வணிகம் நிகழ்த்தும் வணிகர்கள் வாழுமிடம் நெய்தலாகத்தான் இருத்தல் வேண்டும். இதனால் சமூகம் பொருளாதார ஏற்றதாழ்வு நெய்தலில் இயல்பாக இடம்பெறுகிறது. நெய்தல் பெண்ணின் வாழ்வை வாழ்வின்மீது இது தாக்கததைச் செலுத்துகிறது. மீன்வேட்டம் நிகழ்த்தும் பரதவர் வீட்டில் பெண்களும் உழைத்தாக வேண்டும். மருதத்தில் இந்நிலை இல்லை. அங்கு இல்லறக் கடமைகள் மட்டுமே பெண்கள் ஆற்றிட வேண்டும்.

“ஓங்குதிரைப் பரப்பின் வாங்குவிசைக்கெளீஇ
திமிலோன் தந்த கருங்கான்வயமின்
தழைஅணிஅல்குல் செல்வத்தங்கையர்
விழாஅயர்மறுகின்விலை எனப்பகளும்” (அகநானூறுபாடல் - 320)

மீன்வேட்டத்தில் ஆண்கள் கொண்டு வந்த மீனைத் தேவைப்படும் இடங்களைத் தேடிச்சென்று விற்பனை செய்யும் கடமை பெண்களுடையது. இதனால் இவர்கள் வாழ்வு அல்லல் நிறைந்தது.

குறுந்தொகை 269-வது பாடல் நெய்தல்நிலக் குடும்பத்தில் தலைவியின் ஒருநாள் வாழ்வைச் சித்தரித்துள்ளது.

"வயற்சுறாவெறித்த புண்டணிற்தெந்தையும்
நீனிறப்பெருங்கடல் புக்கனன்யாயும்
உப்பைமாறி வெண்ணெற்றரீகிய
உப்புவிளை கழனிச் சென்றனள்" (குறுந்தொகைபாடல் - 269)

கணவன் சுறா எரிந்து புண்பட்ட போது அவனையும் குடும்பத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு அவளுடையதாகிறது. புண்பட்ட கணவனுக்குப் பணிவிடை செய்வதோடு உப்பு வித்துக் குடும்பச் செலவினுக்கான பொருளையும் திரட்டியாக வேண்டும். கூடவே தன் பெண் பாதுகாக்க வேண்டும். ஏனைய திணைப் பெண்களோடு ஒப்பிடும்போது, நெய்தல்நிலப் பெண் மட்டுமே இப்பெருஞ்சுமையைச் சுமக்க நேரிட்டுள்ளது. மருதநிலப் பெண்கள் கணவரின் பரத்தமை ஒழுக்கத்தால் அல்ல அல்லலுறுகின்றனர். எனினும், பொருள் தேடும் சுமை அவர்களுக்கு இல்லை. குறிஞ்சி, முல்லை நிலத்தில் வாழ்வு எளிமையானது. உடல் உழைப்பின் மூலம் உணவைப் பயிரிடுவர் அல்லது சேகரிப்பர். அங்கும் பெண்கள் உழைத்திருக்கக் கூடும். ஆனால், நெய்தல் வாழ்வு மருதத்தைப் போல் சிக்கலானது. நெய்தல் பெண்கள் போராடியாக வேண்டும்.

நெய்தலில் உயர்குடியினரும் இருந்திருக்க வேண்டும். இவர்கள் வாழ்வு மீன்வேட்டம் நிகழ்த்தும் பரதவர் வாழ்விலிருந்து வேறானதாக இருந்திருக்க வேண்டும்.

“புள்ளும்மாவும் புலம்பொடுவதிய
நள்ளெனவந்தநார் இல்மாலை
பலர்புகுவாயில் அடைப்பக்கடவுநர்
வருவீர்உள்ளீரோ எனவும்
வாராதோழி - நம்காதலரே”

இப்பாடலில் மாலை நேரத்தில் வீட்டின் வாயில் அடைக்கப்படும் செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.


வாயிலை அடைக்கும் முன் வீட்டினுள் வர விரும்புகிறவர்கள் உள்ளீர்களாஎனக்கூவி அழைக்கப்படுகிறது. உறுதியாக இது செல்வந்தர்கள் வசிக்கும் வீடுதான். இவர்கள் நெய்தல் நிலத்தில் வாழ்ந்த பெரும் வணிகர்களாக இருத்தல் வேண்டும். சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் திணை மாந்தரையும், சமகால வாழ்வின் ஜாதிகளையும் கருதக்கூடாது. மீன்வோட்டம் நிகழ்த்துபவர்கள் கடல் வாணிபம் செய்பவர்கள் நெய்தல் நில மக்களை வணிகர்கள். உயர் பொருளாதாரச் சூழலில் வாழ்ந்த போது மீன்வேட்டம் நிகழ்த்துபவர்கள் அன்றாடம் வாழ்க்கை செலவிற்காகக் கடலில் போராடினர்.

“... ... ... ... ... அல்கல்
இளைஞரும் முதியவர் கிளையுடன்குழிஇ
கோர்ட்சுறா எரித்தன சுருங்கிய நரம்பின்
முடிமுதிர் பரதவர் மடமொழி குறுமகள்
வலையும் தூண்டிலும் பற்றி பெருங்கால்
திரைஎழு பௌவம் முன்னிய
கொலை வெஞ்சிரா அர்பாற்பட்டனளே” (நற்றிணைபாடல் - 207)

இந்த நற்றிணைப் பாடலின் நெடுந்தேரில் வரும் தலைவனுக்கு மனைவியாக வேண்டிய தலைவி கொலை வெஞ்சிறாஅர்களின் ஒருவனுக்கு மனைவியாக நேரிடும் அவலத்தை எதிர்கொள்ள முடிகிறது. கவி மீன்வேட்டம் இனக்குழு மக்கள் ஒருங்கிணைந்து நிகழ்த்த வேண்டிய தொழில் இளையோரும், முதியரும் ஒன்று சேர்ந்து பணியாற்றியாக வேண்டும். வணிகரின் தொழில் வேறானது. கவிஞன் அத்தொழிலையே உயர்வாகக் கருதுகிறான். இந்த ஏனைய மூன்று நிலங்களிலும் இந்த அளவிற்கு இடம் பெற்றிருக்க வாய்ப்பில்லை. எனவே நெய்தல் நிலப் பெண்கள் பொருளாதாரச் சூழலில் எழும் வாழ்க்கை சிக்கலை எதிர்கொள்ளும்படியானது. நெய்தல் பாடல்கள் இதை உணர்த்தி உள்ளன.

முடிவுரை

சங்கப்பாடல்களில் மனிதவாழ்வு அவர்கள் வாழும் நிலத்தின் தன்மைக்கேற்ப அமைந்தது. நெய்தல் மீன்வேட்டம் நிகழ்த்தும் எளியமக்களும் கடல்வாழிடம் நிகழ்த்தும் செல்வந்தர்களும் வாழும் இடமாக அமைந்தது. நெய்தல் நிலத் தலைவன் தலைவியர் இவ்விரு பிரிவினரையும் சார்ந்தவர்களாக அமைந்தனர். பொருளாதார ஏற்றத்தாழ்வு இவ்வாழ்வின் மீது தாக்கத்தைச் செலுத்தியது நெய்தல் தலைவி இதை எதிர்கொள்ளும்படியானது.

துணை நூற்பட்டியல்

1. மீனாட்சி சுந்தரனார் தெ.பொ, தமிழ் இலக்கிய வரலாறு, காவ்யா, சென்னை (2005)

2. ஜெயராமன். நா, தமிழ் இலக்கிய நெறிகள், குமரன் பதிப்பகம், மதுரை (1979)

3. சுப்பு ரெட்டியார், அகத்திணைக் கொள்கைகள், பாரி நிலையம், சென்னை.

4. அருணாச்சலம். மு, தமிழ் இலக்கிய வரலாறு பதினான்காம் நூற்றாண்டு, தி. பார்க்கர், சென்னை.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p200.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License