Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினேழாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...

Content
உள்ளடக்கம்

சமையல்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

பழங்காலத்தில் உணவு முறைகள்

முனைவர் க. லெனின்
உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத் துறை,
எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் - 635 130.


முன்னுரை

சங்கக்காலத்தில் அடிசில், அயனி, அவிழ், கூழ், சொன்றி, நிமிரல், புழுக்கல், புன்கம், பொம்மல், மிதவை, மூரல் என்ற சொற்கள் சோற்றைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை பல்வேறு வழிமுறைகளில் தயார் செய்யப்பெற்று உணவாக உட்கொள்ளப்பட்டுள்ளன. பழங்காலத்தில் இயற்கையோடு இயைந்து வாழ்ந்த மனிதன் முதலில் காய்கனிகளையே உண்டு வாழ்ந்தான். சைவ உணவுகளை உட்கொண்டு வாழ்ந்த மனிதர்கள் எந்தவிதமான நோய்நொடியின்றி வாழ்ந்தனர் எனலாம். “பல்வகைச் சுவையுணவைப் பாங்குடன் சமைப்பதும் நாகரிகத்தின் ஒரு பகுதியாகவே கருதப்பெறும். அதனையோர் அருங்கலையாகவே நம் நாட்டு மகளிர் பயின்றிருந்ததால், வாழ்க்கைத் துணையால் வரும் மனைவிக்கு, அறிஞர் வகுத்த தகுதிகளுள், அட்டில் தொழில் வன்மையினையும் ஒன்றாய்க் கொண்டனர்” (1) என்று அ. காமாட்சி குமாரசாமி குறிப்பிடுவது இங்கு எண்ணுதற்குரியது. சைவ உணவுகள் மனிதர்களின் உடலை பேணுவதோடு நல்ல சீரணசக்தியையும் அளிக்கின்றது. சங்ககாலத்தில் சைவ உணவு முறைகள் பற்றியக் கருத்துக்களை இவ்வாய்வு முன்வைக்கிறது.

சைவ உணவுகள்

சைவ உணவுகளில் நெல் சோற்றோடு காய்கறிகளின் குழம்பு ஊற்றி கீரை மற்றும் கிழங்கு வகைகளைச் சேர்த்து இலையில் இட்டு உண்பது இன்றும் நம்மிடையே வழக்கத்தில் உள்ளது. இவ்வழக்கம் பழங்காலத்திலும் இருந்ததைப் பின்வரும் அகநானூற்றுப் பாடல் எடுத்துரைக்கிறது.

“பண்ணை வெண்பழத்து அரிசி ஏய்ப்ப,
தொடிமாண் உலக்கை ஊழின் போக்கி,
உரல்முகம் காட்டிய சுரைநிறை கொள்ளை,
ஆங்கண் இருஞ்சுனை நீரொடு முகவா,
கள்படு குழிசிக் கல்அடுப்பு ஏற்றி,
குடவர் புழுக்கிய பொங்குஅவிழ்ப் புன்கம்” (அகம்.393:7-12)

என்னும் பாடலடிகளில், நீண்டு வளர்ந்த காதுகளுடைய இடையர் குல பெண்கள், கொல்லையில் உள்ள வரகினை எடுத்து வந்து, அதனைத் திரிகையில் இட்டு அரிசியாக்கினர். இந்த வரகரிசியை முறத்தால் புடைத்து தண்ணீர் ஊற்றி ஊற வைத்தனர். மண்ணால் செய்த பானையில் அருவியில் இருந்து விழும் சுனை நீரை ஊற்றி, பின்பு சோறாக்கித் தாம் உண்டதுடன் வழிப் போவார்க்கும் கொடுத்துள்ளதைக் காட்டுகின்றது. எனவே சங்க காலத்திலேயே உணவினை நெருப்பு மூட்டிச் சமைக்கும் போக்கு இருந்துள்ளதை அறியமுடிகிறது.

நெல் உணவு

நெல்லைக் குற்றிச் சோறாக்கி உண்பது என்பது சங்க காலத்தில் அரிதாகவே காணப்படுகிறது. செல்வந்தர்கள் மட்டும் நெல் உணவை உண்டுள்ளனர். சாதாரண குடிமக்கள் திணை மற்றும் கூழ் உணவையே உண்டனர்.

“உண்பது நாழி” (புறம்.189:5)

எனப் புறநானூற்று ஆசிரியர் உண்ணப்படும் பொருள் ஒரு வேளைக்குக் குறிப்பிட்ட அளவுதான் என்கிறார். அளவுக்கு அதிகமாக உண்டால் உடல்நலக் கோளாறு ஏற்படும் என்பதையே மேற்கண்ட வரிகள் காட்டுகின்றன. வயலில் இருந்து கொண்டு வரப்பட்ட நெல் முதலிய கூலங்கள் களத்திலேக் குவித்து வைக்கப்பட்டிருந்த செய்தியினை ஐங்குறுநூறு,

“ஐவனச் சிறுகிளி கடியும் நாட” (ஐங்குறு.285:3)

என்று எடுத்துரைக்கிறது. இதன்வழி பழங்காலத்தில் ஐவன நெல் உணவிற்காகப் பயிரிடப்பட்டதை அறியமுடிகிறது. மேலும் மூங்கிலின் நெல் உணவிற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளதை நற்றிணைப் பாடல்கள் (7, 26, 60) காட்டுகின்றன.


பழ உணவுகள்

மனித சமூகம் நாகரிகமடைவதற்கு முன்பாக நாடோடி வாழ்க்கையைக் கொண்டிருந்த காலகட்டத்தில் பழ உணவே மனிதனின் உணவுத் தேவையை பெரிதும் நிறைவு செய்தன. மா, பலா, வாழை என்பவை முக்கனிகளாகச் சுட்டப்படுவதன் மூலம் மனிதன் பழ உணவிற்கு அளித்த முக்கியத்துவத்தை உணரலாம். இவை பற்றிய குறிப்புக்கள் சங்க இலக்கியங்களில் அதிகம் காணப்படுகின்றன. ஐங்குறுநூற்றில்,

“அத்தப் பலவின் வெயில் தின்சிறு காய்,
அருஞ் சுரம் செல்வோர், அருந்தினர் கழியும்” (ஐங்குறு.351 1-2)

என்ற அடிகள், வறட்சி மிகுந்த பாலை நிலத்தில் செல்லக் கூடியவர்கள் பசியைப் போக்க பலாப்பழத்தை உணவாகக் கொண்டதைக் காட்டுகின்றன. மேலும் விளாம்பழம் (நற்.24, அகம்:394:1), நெல்லிக்கனி (நற்:87), புளியங்கனி (நற்:374), பலாப்பழம் (அகம்:2, அகம்:182, நற்:213) நுங்கு (நற்:392), களாப்பழங்கள் (அகம்:394:1) போன்றவற்றை சங்க கால மக்கள் பழ உணவாகத் தங்களுடைய உணவில் சேர்த்து வந்துள்ளதை பழம்பாடல்கள் வாயிலாக எடுத்துரைப்பதைக் காணமுடிகிறது.

உணவு சமைத்தல்

சங்ககாலத் தலைவி கருணைக்கிழங்கு பொறியல் செய்து செந்நெல்லால் சோறாக்கி விருந்து படைத்தாள் என்பதனை,

“கருங்கண் கருனைச் செந்நெல் வெண்சோறு” (நற்.367:3)

என்று நற்றிணை ஆசிரியர் கூறுகின்றார். குறுந்தொகைத் தலைவி தன் கணவனுக்காக உணவு சமைப்பதை,

“முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
தான் துழந்து அட்ட தீம்புளிப் பாகர்” (குறுந்.167:1-2)

என்ற அடிகள், முதல்நாள் நன்றாகக் காய்ச்சிய பாலில் உறை ஊற்றி, மறுநாள் காந்தள் மலரைப் போன்ற தன் மெல்லிய விரல்களால் புளிப்பேறிய தயிரைப் பிசைந்து, அதனுடன் இனிய புளிப்புச் சுவையுடைய குழம்பினைச் சேர்த்துத் தன் கணவனுக்குப் படைக்கிறாள். தலைவி குழம்பு வைக்கும் போது புளி, தயிரை மட்டும் சேர்க்கவில்லை. தன்னுடைய உண்மையான காதலையும் சேர்த்துப் பறிமாறுகிறாள். நெய்யொடு கூடிய தயிர்ச்சோற்றை உண்ணல் (அகம்:340), புல்லரிசியை உண்ணல் (பெரும்.89-94) போன்ற செய்திகள் புல்லரிசியும் தயிரும் உணவாகக் கொள்ளப்பட்டதைக் காட்டுகின்றன.

பெரும்பாணாற்றுப்படையில் பார்ப்பணத்தி ஒருத்தி பறவை பெயர் பெற்ற நெற்சோற்றோடு மோரை நன்கு ஊற்றி, வெண்ணெய்யில் கறிவேப்பிலையும், மாதுளங்காயும் பொறித்து, மிளகுப்பொடி தூவி, மாமரத்தின் பிஞ்சு இலைகளை மேலே போட்டு வைத்த ஊறுகாயை தொட்டு சாப்பிட்டாள் என்பதனை,

“சேதா நறுமோர் வெண்ணெயின் மாதுளத்து
உருப்புற பசுங்காய்ப் போழொடு கறிகலந்து” (பெரும்பா.306-307)

என்று பாடலடிகள் கூறுகின்றன. சோற்றையும் தயிரையும் சேர்த்து சாப்பிடும் போது, இப்படி கொஞ்சம் காரமும் புளிப்பும் மிகுந்த ஊறுகாயைச் சேர்த்து உண்ணும் பழக்கம் சங்ககால மக்களிடையே நிலவி வந்துள்ளது. பட்டினப்பாலையில் அதனுடைய நகரச்சிறப்பைக் கூறும் ஆசிரியர்,

“அறம் நிலைஇய அகன் அட்டில்
சோறு வாக்கிய கொழுங் கஞ்சி
யாறு போலப் பரந்து ஒழுகி” (பட்டினப்பாலை.43-45)

காவிரிப்பூம்பட்டினத்தில் அகன்ற உணவுச் சாலைகள் இருந்தது எனவும், அங்கு எப்போதும் இல்லை என்று சொல்லாத அளவுக்கு நெல்லைக் குற்றி சோறாக்க உலையானது கொதித்துக் கொண்டே இருந்ததாகவும், அப்போது அங்கு வடிக்கின்ற கஞ்சியானது நீண்ட தெருக்களில் ஆறுபோல் வழிந்தோடியது என்று செல்வச் சிறப்பைக் கூறுகின்றார். இதேப்போன்று “மடப்பள்ளி என்னுமிடத்தில் சமைத்ததை குறைந்த விலையில் கொடுத்தனர். திருச்சுற்றுலா (யாத்திரை) வருவோர்க்கும், ஏழையர்க்கும் சத்துணவு மையங்களாகத் திகழ்ந்தன” (2) என்பதிலிருந்து அக்காலத்தில் மக்கள் பொது இடங்களில் அனைவருக்கும் உணவிடுதலை வழக்கமாகக் கொண்டிருந்ததை அறியலாம்.


தானத்தில் சிறந்ததாக அன்னதானம் கருதப்பட்டுள்ளது. எனவேதான் தம்மை நாடி வருவோருக்கு உணவளித்தல் என்பது மரபாகவும் சிறந்த அறமாகவும் கருதப்பட்டுள்ளது.

ஓரிடத்தில் இருந்து வேறோர் இடம் செல்லும் மக்கள் தாங்கள் செல்லும் வழியில் அமர்ந்து சாப்பிட வெண்மையான பனை ஓலையால் முடையப்பட்ட வெண்குடையில் உணவினைக் கட்டி வருவார்கள் என்பதனை,

“ஆறுசெல் மாக்கள் சோறுபொதி வெண்குடை” (அகம்.121:12)

என்று அகநானூறு நவில்கிறது. மேலும் தலைவி ஒருத்தி வெண்நெல்லை பருத்த உலைக்கையால் குற்றி எடுத்து, அரிசியை உலை வைத்து சோறாக்கி, மாமரத்தின் மாங்கனியைப் பிசைந்து புளிக்குழம்பு தயார் செய்வதையும், அதனுடன் சுவையான பாகற்காயின் பொறியலையும், வள்ளைக் கீரையும், பாதிரியின் அரும்பின் இதழையும் சேர்த்து உண்ணத் தருவதையும் பின்வரும் பாடல் காட்டுகிறது.

“அடுமகள் முகந்த எளவா வெண்ணெல்
தொடிமாண் உலக்கைப் பரூஉக் குற்று அரிசி
காடி வெள்உலைக் கொளீஇ நீழல்” (புறம்.399:1-3)

என்று புறநானூற்று ஆசிரியர் கூறுகின்றார். மேலும், முற்றிய நெல்லோடு ஆம்பல் மலரின் இதழ்களைக் கொண்டு சமைத்த உணவும் (அகம்:78) சுவைமிக்கதாகக் கருதி அனைவராலும் விரும்பி உண்ணப்பட்டுள்ளது.

மூங்கில் குழாயினுள் புளிச்சோற்றினை அடைத்து வைத்து வேற்றிடம் செல்பவர்கள் அதனை இலையில் இட்டு உண்ணல் (அகம்:309) என்ற செய்திக் கூறப்பட்டுள்ளது.

தேன், தினை, அவுள் பயன்படுத்தி செய்யும் உணவுகள்

அன்று முதல் இன்று வரை மனிதர்களுக்கு தேன் அரும்பெரும் சுவையாக இருந்து வருகின்றது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் உண்ணக் கூடிய சுவைமிகுந்த இந்தத் தேனைப் பற்றிய குறிப்பினை,

“சுரும்பு உண விரிந்த கருங்கால் வேங்கைப்
பெருஞ் சினைத் தொடுத்த கொழுங்கண் கிறாஅல்
புள்ளுற்றுக் கசிந்த தீம் தேன்கல் அளைக்” (நற்றி.168 1-3)

என்ற அடிகளில், வேங்கை மரத்தில் கூடு கட்டிருக்கும் தேனீக்கள் தன்னுடைய தேனடைகளை எப்போதும் மொய் என சுற்றி வந்து கொண்டே இருக்கும். முற்றிப்போன தேனடையானது வழிந்து கீழே உள்ள பாறையில் விழும். அப்போது குறமகளின் பிள்ளைகள் அதனை கையால் எடுத்து உண்பார்கள் என்னும் செய்தி இடம்பெற்றுள்ளதை அறியமுடிகிறது. தற்போது காடுகள் அழிக்கப்பட்டு வரும் வேளையில் தேன்கூடுகள் இன்று அரியதாகவே காணப்படுகின்றன. மாடமாளிகைகள் வந்துவிட்டமையால் சில மாடி வீடுகளிலும் கூடுகள் கட்டி வாழ்கின்றன. தேனெடுப்பதிலும் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. நெருப்பைக் கொண்டு தேனீக்களை அழித்து அதன்பிறகு தேனை எடுத்து வருகிறார்கள். அது குழந்தை நன்றாகப் பேசுவதற்கும், பல நோய்களுக்கும் மருந்தாக அமைகின்றது.


ஒரு காலத்தில் தினைச்சோறும், தினைமாவும் மனிதர்களின் அன்றாட உணவு வகைகளில் ஒன்றாக இருந்துள்ளது. இதனை நற்றிணையில்,

“உணங்கு திணை துழவும் கை போல்” (நற்றி.267 4)

என்ற அடிகள் காட்டுகின்றன. இப்பாடல் கூறும் செய்தி, காட்டில் உள்ள திணையை அறுத்து எடுத்து வந்து தனியாக பிரித்து, அதை வெயிலில் உணர்த்தி காய வைத்து சோறாக்கி உண்டார்கள் என்னும் செய்தி இடம்பெற்றுள்ளது. மேலும் அவற்றை உரலில் இட்டு மாவாகச் சமைத்து உண்டதைச் சங்க இலக்கியங்கள் (புறம்:143:5, ஐங்:285) கூறுகின்றன.

அன்றைய காலந்தொட்டு இன்றுவரை அவுள் என்பது மக்களின் ஒரு தின்பண்டமாக இருந்து வருகின்றது.

“பெருஞ்செய் நெல்லின் வாங்குகதிர் முறித்து
பாசவல் இடிக்கும் இருங்காழ் உலக்கைக்” (அகம்.141 17-18)

புதிதாகத் திருமணம் ஆன பெண், வீட்டிற்கு வந்திருக்கக் கூடிய விருந்தினர்க்கு பால்காய்ச்சி அதனுடன், முற்றியநெல்லை உலக்கையால் நன்றாக இடித்து அவுளாக்கி வெள்ளம் போட்டு தருகின்றாள்.

முடிவுரை

உணவு சமைக்கும் முறைகளை விளக்குவதற்கென்றே தனி நூல் இருந்துள்ளது. குறிப்பாக ‘நளபாகம்’ என்னும் நூல் நளன் இயற்றியது. சிறுபாணாற்றுப்படையில் வீமன் உணவுக்கென ‘மடைநூல்’ எழுதினான் என்பதையும், “பனுவலின் வழாஅப் பல்வேறு அடிசில்” (சிறுபாண்.241) என்ற அடியின் வாயிலாகவும் அறியமுடிகிறது. போரில் ஈடுபட்ட படைவீரர்களுக்கு பெருஞ்சோறு அளித்ததால் சேர மன்னனுக்குப் பெருஞ்சோற்று உதியன் என்ற பெயர் அடையாக வந்துள்ளமை சோறிடுதலின் சிறப்பினை விளக்குகின்றது.

சான்றெண் விளக்கம்

1. அ. காமாட்சி குமாரசாமி, இலக்கிய இன்பம், தமிழரகம், மறவனேரி, சேலம், பக்.6-7

2. பா. இறையரசன், தமிழர் நாகரிக வரலாறு, பூம்புகார் பதிப்பகம், சென்னை-08, ப.231

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p206.html


  2022
  2021
  2020
  2019
  2018
  2017

வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்

முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License