இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

குறுந்தொகை சாகுந்தலம் உவமை

முனைவர் செ. ரவிசங்கர்
உதவிப்பேராசிரியர், ஒப்பிலக்கியத்துறை, தமிழியற்புலம்,
மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை - 21


முன்னுரை

இலக்கியப் பரப்பில் ஒரு பொருளின் சிறப்பினை ஏற்கனவே சிறப்புப் பெற்ற ஒன்றோடு உவமை ஒப்புமைப்படுத்திப் பார்ப்பதை போன்று வடமொழியில் எழுதப்பெற்ற சாகுந்தலத்திலும் தமிழ் மொழியில் மிகச் சிறந்த அகநூலாகக் கருதப்படும் குறுந்தொகையிலும் ஒரே மாதிரியான உவமை அமைந்திருப்பதை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

சாகுந்தலம்

உலக மகா கவிஞர்களில் தலைச்சிறந்தவராகக் கருதப்படுபவர் காளிதாசர். காளிதாசர் வடமொழியில் வழங்கிய சிறந்த நாடகக் காப்பியமாகத் திகழ்வது சாகுந்தலம் என்னும் மகா காவியம் ஆகும். காளிதாசர் படைத்த சாகுந்தல நாடகத்திற்கு இணையான நாடகம் உலகில் இல்லை எனலாம். ‘சாகுந்தலம்’ என்பது இந்திய இதிகாசங்களில் ஒன்றான பாரதத்தில் வரும் ஒரு பாத்திரமாகும். பாரத ‘சகுந்தலோபாக்கியானத்தை’ அபிஞான சாகுந்தலமாக ஆக்கித் தந்தவராகக் காளிதாசர் விளங்குகிறார். மனித மனத்தின் நுட்பமான உணர்ச்சிகளையும், நாடக நிகழ்ச்சிகளின் சிறப்பினையும், நாடக மாந்தர்களிடையே அமைந்து கிடக்கின்ற மனித உறவுகளையும் வெளிப்படுத்துகிற விதமாக சாகுந்தலம் அமைந்துள்ளது.

குறுந்தொகை

சங்க நூல்களில் அகத்திணை பற்றிய பாடல்களே மிகுதியாகக் காணப்படுவதால் இவ்வுலக வாழ்வில் பண்டைத் தமிழர்கள் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளதாக அறியலாம். சங்க அகநூல்களில் குறுந்தொகை பல்வகையானும் மேம்பட்டு விளங்குகிறது. நான்கடி சிற்றெல்லையும் எட்டடி பேரெல்லையையும் கொண்டுள்ள குறுந்தொகை’ உரையாசிரிய்களால் மிகுதியான அளவில் மேற்கோள்கள் காட்டியிருப்பது இதன் சிறப்பு எனலாம்.

“வருணனை குறைந்தும், உணர்வு மிகுந்தும் விளங்கும் குறுந்தொகைப் பாடல்கள் அகத்திணையின் உயிரோட்டத்தைக் காட்ட வல்லது” என்று பேரா. வ. சுப. மாணிக்கனார் தன்னுடைய தமிழ்க்காதல் என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளது குறுந்தொகையின் சிறப்பினை உணர்த்துவதாக அமைந்துள்ளது எனலாம். குறுந்தொகையில் பல்வேறு உவமைகள் விரவிக் காணப்படுகின்றன. சாகுந்தலம் - குறுந்தொகையில் அஃறிணைப் பொருட்களான கொடி, வண்டு, நிலவு, யானை, நெஞ்சம், தேர் எருமை, மான், சூரியன், மரங்கள், கடல், நாரை, முத்து, சோலை போன்றவைகள் பல சேர்ந்து உவமைகளாக எடுத்தாளப்பட்டுள்ளன. அவ்வகையில் சாகுந்தலம் குறுந்தொகையில் உள்ள இலக்கியப் புனைவு, உவமைகளை வெளிக்கொணர உதவும் ஆய்வாக இக்கட்டுரை அமைகிறது.



கொடி

கொடி என்பது சங்க அக இலக்கியங்களில் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்ற சொல் ஆகும். கொடி என்ற சொல்லைப் புலவர்கள் கூற முற்படும் போது பெண்களின் இடையை வர்ணிப்பதற்கு அதிகம் பயன்படுத்துகின்றதை கூறலாம். கொடி போன்ற ‘இடை’ என்பதை இதற்குச் சான்றாகக் கொள்ளலாம்.

சாகுந்தலம் - குறுந்தொகையில் ‘கொடி’ பற்றிய புனைவு வெவ்வேறு பொருளில் காணப்படுகின்றது.

“துலங்குகின்ற பொற்கொடியைப் போன்ற பெண்கள்
உறும் வலிமைக் கேற்றவாறாய்க் குடத்தை ஏந்தி
உள்ளார்கள் … … … ” (சாகுந் 1 : 40)

என்பதில் பெண்களை வர்ணிப்பதையும்

“கொற்றவன் என் அரண்மனையின் மாடத்தின் மேல்
குளிர்ந்தொளிரும் கொடிகளினை” (சாகுந்1 : 41)

என்ற வரிகளில் அரண்மனை மாடத்தின் மேல் படரும் கொடிகளினையும்

“… … … குடத்தை ஏந்தி
பொற்கொடி போல் சகுந்தலையும்” (சாகுந் 1 : 42)

என்பதில் சகுந்தலையை கூறவும் ‘கொடி என்ற சொல்லை பயன்படுத்தியதை சாகுந்தலம் மூலம் அறியலாம். மேலும்

“நெடிய அந்த மாமரத்தின் பக்கம் … நீயும்
நின்றிருக்கும் பேர் அழகை நினைத்துப் பார்த்தால்
நினைப்பதற்கும் அரிதான … … பொருத்தமான
பொன் ஒளிரும் கொடியொன்று … … மரத்தின் பக்கம்
பொருத்தி மிகத் தழுவுதல் போல் உள்ளதாலே” (சாகுந் 1:57)

என்ற பாடலில் சகுந்தலையை தோழிகள் கொடி என்று கூறும் பாங்கு புலப்படுகிறது.

“துறுகல் அல்லது மானை மாக்கொடி
துஞ்சுகளிறு இவரும் குன்ற நாடன்” (குறுந் : 36)

என்ற பாடலில் பொற்றைக் கல்லின் பக்கத்தில் உள்ளதாகிய ‘மானை’ என்னும் பெருங்கொடி படர்ந்துள்ள குன்றின் தலைவன் என்னும் பொருளையும்

“இரலை மேய்ந்த குறைத்தலைப் பாவை
இருவிசேர் மருங்கில் பூத்த முல்லை” (குறுந் : 220)

இதில் ஆண்மான் மேய்ந்தமையால் குறைபட்ட நுனியையுடைய கதிர் நீங்கிய தாள் சேர்ந்த மலர்ந்த முல்லைக்கொடி என்றும்

“மான் அடி அன்ன கவட்டிலை அடும்பின்” (குறுந் : 243)

என்ற வரியில் மானின் குளம்பினைப் போலப் பிளவுபட்ட இலைகளையுடைய ‘அடும்பங் கொடி’ என்றும்

“ஆடு அரை புதையக் கோடை இட்ட
அடும்பு … … … …” (குறுந் : 248)

என்பதில் கடற்கரை சோலைமிடத்தேயுள்ள அசைகின்ற அடியிடம் புதையும்படி மேல்காற்றுக் கொண்டு வந்து போட்ட “அடும்பங்கொடி” என்றும் கூறுவதிலிருந்து குறுந்தொகையில் பல்வேறு விதமான கொடிகள் பல பொருளில் இடத்திற்கேற்றவாறு அமைந்திருப்பதாகக் கொள்ளலாம்.



வண்டு

அஃறிணைப் பொருளில் வரும் வண்டு தமிழ் இலக்கியங்களில் இடங்களுக்கேற்றவாறு பல்வேறு விதமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. தலைவனுக்குத் தூதனுப்புவதற்கு வண்டினைத் தலைவி தூதனுப்பும் பொருட்களில் ஒன்றாகப் பயன்படுத்தியதை இலக்கியங்கள் நமக்குப் புலப்படுத்துகின்றன.

சாகுந்தலை - குறுந்தொகையில் வண்டு பெண்களின் விழிகளும், துன்பத்திற்குரிய ஒன்றாகவும் பொருள் பொதிந்து அமைந்துள்ளது.

“பெயர்த்து சென்று சுற்றுகின்ற கரிய வண்டே
யார் பெற்றார் உன்னைப் போல் உயர்ந்த பேற்றை
சீர்மிகுந்த குளிர்நிலவில் … … தேங்கி நின்ற
சிறு கருப்பு வெளியேறி … … வண்டாய் மாறி” (சாகுந் 1:67)

என்பதில் துஷ்யந்தனுக்கு கிடைக்காதது வண்டுக்கு கிட்டியதாகவும்

“அயல் இருந்தும் அவ்விழியாம் வண்டி ரண்டை” (சாகுந் 1:69)

என்ற வரியில் ‘வண்டு’ விழிகளுக்கு உவமையாகவும்

“… … ... பொல்லா வண்டு” ((சாகுந் 1:71)

என்பதில் தீங்கினைத் தருகின்ற வண்டாகவும் இடம் பெறுவதைக் காணலாம். குறுந்தொகையில்

“வண்டுபடு மலரின் சாஅய்த்
தமியென் மன்ற அளியென் யானே”(குறுந் : 30)

என்ற பாடலில் வண்டுகள் விழுந்து உழக்கிய குவளை மலரைப் போல மெலிவுற்று நிலைகுலைந்த தலைவியையும்

“சிலம்புடன் கமழும் அலங்குலைக் காந்தள்
நறுந்தாது ஊதும் குறுஞ்சிறைத் தும்பி” (குறுந் : 239)

என்பதில் மனம் வீசுகின்ற, அசைகின்ற கொத்துகளையுடைய காந்தட்பூவின் மகரந்தத்தை ஊதுகின்ற தும்பி என்னும் வண்டு தலைவனின் மலைவளத்தை சிறப்பிக்கப்பெறும் பொருளிலும் அமைந்துள்ளது.



முத்து

நவமணிகளில் ஒனறாகக் காணப்படும் ‘முத்து’ பல சிறப்பினைப் பெறுகிறது. பற்களுக்கு உவமையாக முத்துப் போன்ற பற்கள் என்று கூறுவதைக் காணலாம்.

சாகுந்தலம் - குநற்தொகையில் ‘முத்து’ பெறுகின்ற பாங்கினை பின்வருமாறு அறிந்து கொள்ளலாம்

“தவக்குடிலாம் சிப்பியிலே … … ஒளி முத்தன்ன
பெண் மகளை … … அழகெல்லாம் தலைமேல் கொள்ளப்
பேராசைப் படும்படியாய் … … இருக்கும் பெண்ணை”

என்று சகுந்தலையின் அழகை வர்ணிக்க முத்தை உவமையாகக் கூறுவதைச் சாகுந்தலத்தில் காண முடிகிறது.

“அம்ம வாழி தோழி காதலர்
நூல் அறு முத்தின் தண்சிதர் உறைப்ப” (குறுந் : 104)

என்ற பாடலில் முத்துவடத்திலிருந்து உதிர்கின்ற முத்துக்களைப் போலப் பிரிந்து சென்ற தலைவனைக் கூறும் விதமாகப் பொருள் அமைந்துள்ளது.

பிரிவுத்துயர்

இலக்கியங்களில் காணலாகும் தலைவன், தலைவிக்கு பிரிவுத்துயர் என்னும் துன்பம் நிகழ்வதைப் பாடல்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

“வரும் பெரிய ஆற்றுவெள்ளம் … … இடையில் ஆற்றுள்
வாழ்கின்ற சிறு குன்றால் தடுக்கப் பட்டு
பிரிவது போல் என் மனமும் பிரிதல் கண்டேன்” (சாகுந் 2:86)

என்று துஷ்யந்தன் ஆற்று வெள்ளத்தில் வரும் நீரானது சிறு குன்றால் தடுக்கப்படுவது போன்று பிரிந்து வந்ததாகவும் கூறுவதும்,

“பிரிவெண்ணும் துயர்தானும் இடியைப் போல
பெருந் துன்பம் தர வீழும்” (சாகுந் 4:108)

என்பதில் பிரிவினை இடிக்கு உவமையாக கூறுவதையும் சாகுந்தலையில் காண முடிகிறது.

“கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல்ஆன் தீம்பால் நிலத்துஉக் காஅங்கு
எனக்கும் ஆகாது என்னைக்கும் உதவாது
பசலை உணீஇய வேண்டும்
திதலை அல்குல்என் மாமைக் கவினே” (குறுந் : 27)

என்று தலைவனின் பிரிவினால் தலைவியின் அழகு குறைவதாகத் தலைவி கூறுவதாகவும்,

“இருபேர் ஆண்மை செய்த பூசல்
நல்அராக் கதுவி யாங்கு என்
அல்லல் நெஞ்சம் அலமலக் குறுமே” (குறுந் - 43)

என்ற பாடலில் துன்பத்தையுடைய நெஞ்சு நல்ல பாம்பு கவ்வித் தீண்டியதால் ஏற்படும் வருத்தம் போல, தலைவனுடைய பிரிவு இருப்பதாக கூறுவதும், குறுந்தொகையின் மூலம் அறிய முடிகிறது.


காமத் தீ

அக இலக்கியங்களில் சிறப்பிடம் பெறுவன காதலும், காமமும் ஆகும். இதில் காமத்தினைப் பற்றிக் காளிதாசரின் சாகுந்தலத்திலும், குறுந்தொகையிலும் பல்வேறு குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.

“… … … … காமன் அம்பு
போழ்ந்ததனால் … … காமத் தீ வெப்பத்தாலே
புதுமலர் தான் வாடிற் றேயோ” (சாகுந் 3 : 21)

என்று காமத்தீயினால் வாடிய துஷ்யந்தன் சகுந்தலையைக் கூறுவதாகவும்

“… … … மழைக்காலத்தில்
புகுகின்ற வெள்ளத்தால் மதகை மீறி
வரும் வெள்ளம் போல் வந்து பிடித்தல் ஆமோ?
வளர்காமம் முறைமையினை நலித்தல் நன்றோ?
பெருங்காமம் என் மனத்தில் ஊறுமேனும்” (சாகுந் 2 : 77)

என்ற பாடலிலும்

“கவர்ச்சி மிக்க கண்ணாடி … … ஆவிபட்டுக்
கண்காட்சித் திறம் குறைந்து போனாள் போல
சிவந்த மலர் நின்மேனி உறுப்பெல் லாமும்
சீர்குலைந்து மெலிகிறது” (சாகுந் 3 : 28)

என்று சகுந்தலையை கூறுமிடத்தும் காமத் தீயின் கொடுமையை சாகுந்தலம் உணர்த்துவதாகக் கொள்ளலாம்.

“சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு இவள்
உயர்தவச் சிறிது காமமோ பெரிது” (குறுந் -18)

என்ற பாடலில் மரத்தினது சிறிய கொம்பில் பெரிய பழம் தொங்கியது போல உயிரை மிகச் சிறிதாகவும் காமநோயினை மிகப் பெரியதாகவும் கூறுவதைக் காணலாம்.

“தீம்புன னெரிதர வீய்ந்துக் காஅங்குத்
தாங்கு மளவைத் தாங்கி
காமம் நெரிதரக் கைநில் லாதே” (குறுந் - 149)

என்ற பாடலில் காமம் மென்மேலும் நெருக்குதலால் தன்னிடம் நில்லாது போய்விடும் என்றும்

“வான்தோய் வற்றே காமம்
சான்றோர் அல்லர்யாம் மரீஇ யோரே” (குறுந் - 102)

என்ற கவிதையில் காமநோய் என்னை வருந்தச் செய்து வானத்தைச் சென்று தோய்வது போன்ற பெருக்கமுடையது என்று தலைவி கூறுவதாகப் பொருள் கொள்ளலாம். இவ்வாறு குறுதொகை காமத்தினைப் பற்றிக் கூறுவதைக் காணலாம்.

முடிவுரை

வடமொழியில் சிறப்பு பெற்று விளங்கிய சாகுந்தலத்தில் இடம் பெற்றுள்ள உவமைகள் தமிழ் அகஇலக்கியங்களில் சிறப்பு பெற்று விளங்குகின்ற குறுந்தொகையில் இடம் பெற்றுள்ள உவமைகள் இரண்டும் இலக்கிய நயத்தை வெளிப்படுத்துகின்றனவாக அமைகின்றன. இலக்கியப்புனைவு என்பது எல்லா மொழிகளிலும் உவமையினால் சிறப்பு பெறுகின்றன என்பதைக் காணமுடிகின்றது. சங்க இலக்கியம் நாடகத்தன்மையுடையன என்னும் அடிப்படையில் சாகுந்தல நாடகத்தை ஒப்பிட்டு இக்கட்டுரை அமைந்துள்ளது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p210.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License