Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            ISSN  2454-1990
muthukamalam muthukamalam
உங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.

முத்து: 13 கமலம்: 8
உள்ளடக்கம்

சமையல்

Alexa Rank


பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

நற்றிணையில் இறைச்சிப் பொருள்

முனைவர் கார்த்திகேஸ் பொன்னையா
முதுநிலை விரிவுரையாளர், தமிழ்த்துறை,
சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகம், மலேசியா

* * * * *

முனைவர் போ. சத்தியமூர்த்தி
உதவிப்பேராசிரியர் மற்றும் தலைவர் (பொ), தமிழியல்துறை, தமிழியற்புலம்,
மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை - 625021


ஆய்வுச் சுருக்கம்

சங்கப் பாடல்கள் அக உணர்வை மறைமுகமாகவும் குறிப்பாகவும் உணர்த்த உள்ளுறை உவமை, இறைச்சிப் பொருள் என்னும் இரண்டு இலக்கிய நயங்களைப் பயன்படுத்தியுள்ளன. இவை இரண்டும் "குறிப்புப் பொருள் உத்தி" எனவும் அழைக்கப்படும். பாடல்களில் கூற வரும் செய்திக்கு அழகு சேர்க்கவும் வழுச்சேர்க்கவும் இந்த நயங்கள் ஒருங்கே பயன்படுத்தப்பட்டன. இறைச்சியும், உள்ளுறை உவமமும் அமைந்த பாடல்களை மேலோட்டமாக வாசித்தால் புலவர்கள் கருதியதை வாசகர்கள் உணர்ந்து கொள்ள இயலாது. அதனை ஒரு முறைக்குமேல் வாசித்துச் சிந்தித்துப் பார்த்தால்தான் புலவர்களின் ஆழ்மனக் கருத்தை நாம் உணர்ந்துகொள்ள முடியும் என்ற அளவில் இறைச்சி, உள்ளுறை உவமம் ஆகிய உத்தி முறைமை சிறப்புப் பெற்றுள்ளன. திணைக் கோட்பாட்டு அடிப்படையில் பாடப்பட்ட சங்க பாடல்கள் நிலமும் பொழுதும் முதற்பொருள்; தெய்வம், உணவு, விலங்கு, மரம், புல் எனப்பல வகை கருப்பொருள்; புணர்தல், பிரிதல், இரங்கல், இருத்தல், ஊடல் என்பன உரிப்பொருள் என்ற அடிப்படையில் கவிதைக்குச் சிறப்புச் சேர்க்கும் இறைச்சியையும், உள்ளுறை உவமத்தையும் நாம் சிந்திக்க வேண்டும்.

இறைச்சிப் பொருள்

இறைச்சி என்னும் சொல் ‘இறு’ என்னும் சொல்லின் அடிப்படையில் தோன்றியது. ‘தங்குதல்’ என்னும் பொருள் உடையது. கவிஞர்கள், தாம் கூறும் சொற்களுக்கு அடைமொழியாகக் கூறப்படும் பிற சொற்கள் தமது ஆற்றலால் பிறிதொரு பொருளைக் குறிப்பால் புலப்படுத்தி நிற்கும். அத்தகைய சொல் திறனை - புரிந்து - அறிந்து - உணர்ந்து கொள்ளும் நுட்பம் இறைச்சி எனப்படுகிறது.

இறைச்சி என்ற கோட்பாட்டினைத் தொல்காப்பியம் ஆறு இடங்களில் குறிப்பிடுகிறது.

“இறைச்சி தானே உரிப்புறத் ததுவே” (தொல்.1175)

பாடலின் கருத்தைக் கூறும் பொருட்டு, வெளிப்படையாகத் தெரியும் பொருளோடு வேறொரு பொருள் புலப்படுவதுபோல பாடல் அமைப்பது அக்கருத்தைப் புலப்படுத்துவது உள்ளுறை உத்தி அமையப்பெற்ற பாடல் எனப்படும். அதுவே, கூறவந்த பொருள் வெளிப்படாது மறைவாக இருக்க, அதை உணர்த்த, வோறொரு பொருள் வெளிப்படையாக நிற்குமாறு அமைந்த பாடல்கள் இறைச்சி உத்தி அமையப்பெற்ற பாடல்களாகும். கருப்பொருள்களின் செயல்களைக் கூறுவது இறைச்சி; அவ்விறைச்சியில் மானிடர் காதல் வாழ்வை மிகுவிக்கும் குறிப்புப் பொருள் தோன்றும் என்று சுருங்கக் கூறலாம்.

உயிரினங்களின் அன்புச் செயல்களை மிகுவிப்பன "இறைச்சி" என்பர். தெய்வம் முதலாகிய கருப்பொருளின் கண்ணே பிறப்பதே இறைச்சிப் பொருள் என்பது அகப்பொருள் வரையறை.

வழியிடைக் காணப்படும் இயற்கையையும் அவற்றின் அன்புணர்வைத் தூண்டும் காட்சிகளையும், காதல் செய்திகளையும் குறிப்பது; சிறப்பான ஒருவகை உணர்வை அடிப்படையாகக் கொண்ட குறிப்புணர்வு என்றும் இறைச்சியைக் கூறுவர். அது அன்பு, காதல், அருள், மனிதநேயம் ஆகியவற்றுக்குத் தூண்டுதலாக அமையும்.

மனிதனின் உள்ளுணர்வாகிய காதலைத் தூண்டும் புறச்சூழல்களே இறைச்சி என்றும் கூறப்படுகிறது.



நற்றிணையில் இறைச்சிப் பொருள்

சங்க இலக்கிய எட்டுத்தொகை பத்துப்பாட்டில் நற்றிணை பாடல்கள் மிகவும் முக்கியமானவை. நற்றிணையில் இடம்பெறும் பாடல்கள் அனைத்தும் ஐந்திணை கொள்கைகளைப் பின்பற்றியே பாடப்பட்டுள்ளன. இப்பாடல்களை இயற்றியவர்களில் சிலரைத் தவிர பலர் அடையாளம் காணப்படவில்லை. அவர்கள் எடுத்தியம்பியக் கருத்துகள் யாவும் இக்காலத்திலும் சில நடைமுறை வாழ்க்கையில் பின்பற்றக்கூடியதாகவும் இரசிக்கத்தக்க வகையிலும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. நற்றிணை பாடல்களில் நயம் சேர்க்கவும் பாடல்களில் தங்களின் கருத்துகளுக்கு வழுச் சேர்க்கவும் புலவர்கள் இறைச்சிப் பொருள் ததும்பும் வகையில் பாடல்கள் பல பாடியுள்ளனர். அவற்றுள் சில இறைச்சிப் பொருள் கொண்ட பாடல்களை அடையாளம் காட்டும் வகையில் இக்கட்டுரை அமைகிறது. அவ்வகையில்,

“கொல்முரண் இரும்புலி அரும்புழைத் தாக்கிச்
செம்மறுக் கொண்ட வெண்கோட்டு யானை
கல்மிசை அருவியில் கீழூஉம் சாரல்”

எனும் குறிஞ்சித் திணை தொடர்பான பாடலில் தோழியின் கூற்றில் இறைச்சிப் பொருளின் வெளிப்பாடு தெரிகிறது. கொல்லும் இயல்புடைய புலியைக் கொன்று தனது தந்தங்களில் படிந்த இரத்தக் கறையை அருவியில் கழுவும் என்பதே இப்பாலின் நேரடிப்பொருளாகும். அவ்வாறு அமைய, அயல் பெண்டிர் கூறிய அலராகிய பழிச்சொல்லை நீக்கி விரைவில் மணம்புரிந்து கொள்க என்ற இறைச்சிப் பொருளைக் கருப்பொருளாக உணர்த்துவதைத் தோழியின் இக்கூற்றினில் காணலாம்.

தொடர்ந்து,

“விடர்முகை
ஈன்பிணவு ஒடுக்கிய இருங்கேழ் வயப்புலி
இரைநசைஇப் பரிக்கும் மலைமுதல் சிறுநெறி
தலைநாள் அன்ன பேணலன் பலநாள்
ஆர் இருள் வருதல் காண்பேற்கு
யாங்குஆகும்மே இலங்குஇழை செறிப்பே”

மேற்காணும் நற்றிணை வரிகளின் வாயிலாகவும் இறைச்சிப்பொருள் மிளிர்கின்றது, பெண் புலியின் பசியை அறிந்த ஆண் புலி இரைத்தேட வேண்டி பதிங்கியிருக்கும். அவ்வழியே இரவு நேரம் குறித்துப் பயணிக்கும் தலைவனை நினைத்துத் தலைவியின் உடல் மெலிவடைந்து விட்டது என்ற தலைவியின் கூற்று இவ்வரிகளில் வெளிப்படுகின்றது. ஆனால், இத்தகைய வழியில் வந்து புலியினது இயல்பினை அறிந்த போதும் தலைவியின் துயர் நீங்குமாறு மணம் முடிக்க தலைவன் எண்ணவில்லை என்ற இறைச்சிப் பொருளை இவ்வரிகள் உணர்த்துகின்றன.



இதனை அடுத்து,

“தினையுண் கேழல் இரியப் புனவன்
சிறுபொறி மாட்டிய பெருங்கல் படாஅர்
ஒண்கேழ் வயப்புலி படூஉம் நாடன்
ஆர்தர வந்தனன் ஆயினும் படப்பை
இன்முகப் பெருங்கலை நன்மேயல் ஆரும்
பன்மலர்க் கான்யாற்று உம்பர்க் கருங்கலை
கடும்பாட்டு வருடையொடு தாவன உகளும்”

என்னும் தோழியின் கூற்றில் கலைமானுடன் ஆடு சேர்ந்தாலும் அக்கலைமான் பெண்மானுடன் மட்டுமே இணையும். இதனால், தலைவி அயலார் மணம் பேசி வரினும் தலைவனுடன் மட்டுமே சேர்வாள் அயலார் எண்ணம் நிறைவேறாது என்ற இறைச்சிப் பொருள் வெளிப்படுகிறது. மேலும், ஆண் குரங்கு தலைவனது தோட்டத்தில் நன்கு உண்ணும் என்ற வரிகள் தலைவன் தலைவியைத் திருமணம் செய்து கொண்டாலேயானால் நன்கு இன்பத்தை துய்க்கலாம் என்ற இறைச்சிப் பொருளையும் புலப்படுத்துவதைக் காணலாம்.

“நிலம் தாழ் மருங்கின் தெண்கடல் மேய்ந்த
விலங்குமென் தூவிச் செங்கால் அன்னம்
பொன்படு நெடுங்கோட்டு இமயத்து உச்சி
வான் அர மகளிர்க்கு மேவல் ஆகும்
வளராப் பார்ப்பிற்கு அல்குஇரை ஒய்யும்
அசைவுஇல் நோன்பறை போலச் செலவர
வருந்தினை வாழிஎன் உள்ளம்! ஒருநாள்
காதலி உழைய ளாகவும்
குனக்குத்தோன்று வெள்ளியின் எமக்குமார் வருமே?”

மேற்காணும் தலைவனது கூற்றில், இமய உச்சியில் வாழும் வானர மகளிர்க்கு விளையாட உதவும் அன்னக்குஞ்சுகளுக்கு அன்னம் இரை ஊட்ட முயன்று வருத்தத்தை மேற்கொள்ளும் என்பது, தலைவன் தலைவியோடு சேர்ந்து வாழ்வதற்கான பொருளீட்டி வரும் வருத்தமிக்க முயற்சியை மேற்கொண்டுள்ளான் என்ற இறைச்சிப் பொருளையும் வெளிப்படுத்துகிறது.



மேலும்,

“கொல்லைக் கோவலர் குறும்புனம் சேர்ந்த
குறுங்காற் குரவின் குவிஇணர் வான்பூ
ஆடுடை இடைமகன் சூடப் பூக்கும்
அகலுள் ஆங்கண் சீறூ ரேமே”

என்ற பாடலில், தலைவனே நீவிர் வேற்று நாட்டிற்குச் செல்வீராயின் கோவலருடைய புனத்திலுள்ள குரா மரத்தின் பூவானது ஆடு மேய்ப்பவருடைய தலையில் சூட பூக்கின்ற எங்கள் சிற்றூரிலே காத்திருப்பேன் என்ற பொருளை ஏற்று வந்துள்ளது. அவ்வகையில், மேற்காணும் தலைவியின் இக்கூற்றில், குராவினது பூ இடைமகன் சூடுவதற்காகப் பூக்கும் என்று கூறியதன் வழி தாங்கள் விரும்பும் பொருள் மிகுதியாகப் பெற்று வருவீர்கள் என்னும் இறைச்சிப் பொருளைப் புலப்படுத்துவதாக அமைந்துள்ளதைக் காணலாம்.

தொடந்து, நற்றிணையில் முல்லைப் பூ மலர்ந்ததை வைத்து ஓர் இறைச்சிப் பொருள் வெளிப்படுத்தப்பட்டது. அது பின்வரும் வரிகளில் பாடப்பட்டுள்ளது.

“சிரல்தலைக் கள்ளி
மீமிசைக் கலித்த வீநறு முல்லை”

தலைவன் வரும் வழியில் பூத்திருக்கும் முல்லைப் பூவினை இடையன் சூடிக்கொண்டான். அப்பூவின் நறுமணம் கமழுமாறு ஊரினுள் வந்தான் என்ற தலைவனின் கூற்றில் தலைவன் வரும் காலத்தை முல்லைப் பூ மலர்ந்ததால் தலைவி உணர்ந்திருப்பாள் எனும் இறைச்சிப் பொருளை வெளிப்படுத்துகிறது.


இதனிடையே மற்றொரு இறைச்சிப் பொருள் தாங்கும் பாடலில் சூழல் பின்வருமாறு; பரத்தையை நாடிச் சென்ற தலைவன் மீண்டும் தலைவியைச் சேர விரும்பி தோழியின் உதவியை நாடுகிறான். அச்சமயம், தலைவியின் உடன்பாடற்ற தன்மையை தோழி தலைவனிடம் இவ்வாறு கூறுகிறாள்.

“முயப்பிடிச் செவியின் அன்ன பாசடை
கயக்கணக் கொக்கின் அன்ன கூம்புமுகை
கணைக்கால் ஆம்பல் அமிழ்நாறு தண்போது
குணக்குத்தோன்று வெள்ளியின் இருள்கெட விரியும்
கயற்கணம் கலித்த பொய்கை ஊர”

குளத்தின் இடையே திரட்சியான தண்டினையும் கொக்கைப் போலத் தோன்றும் மொட்டுகளையும் நீர் ஆம்பல் நிறைந்துள்ள தோட்டத்தில் காணலாம். கிழக்கு திசையில் தோன்றும் வெள்ளியைப் போல ஆம்பல் பூ மலர்ந்துள்ளது. அத்தகைய குளத்தில் மீன்கள் திறைந்து காணப்படுகின்றன. இத்தகைய வளமிக்க நிலத்தில் வசிக்கின்ற தலைவனே என்ற பொருளை அளிக்கும் வகையில் உள்ளது மேற்காணும் தோழியின் கூற்று. ஆனால், தோழியின் கூற்றில், ஆம்பல் மலர் கிழக்கிலே தோன்றும் வெள்ளி போல மலர்ந்திருந்தாலும் அது ஒருபோது வெள்ளி ஆகாது என்பதைப் போல பரத்தை உன்னைச் சீராக வைத்திருந்தாலும் உன் தலைவியைப் போலப் பாச உறவுடன் இருக்க மாட்டாள் என்ற இறைச்சிப் பொருள் புலப்படுவதைக் காணலாம்.

முடிவுரை

நற்றிணையில் மட்டுமே 165 பாடல்கள் இறைச்சிப் பொருளில் அமைந்துள்ளன. காதல் உணர்வைக் குறிப்பதற்கும், தூண்டுவதற்கும் தலைவனை நெறிப்படுத்துவதற்குமே இறைச்சிப் பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சங்ககால மக்கள் தங்கள் மகிழ்ச்சியையும், மன வருத்தத்தையும் நேரடியாகக் கூறாமல் மறைமுகமாகக் கூற, "உள்ளுறை உவமை" மற்றும் "இறைச்சி”யை இலக்கிய உத்திகளாகக் கையாண்டு கூறியுள்ளது நாகரிகத்தின் வெளிப்பாடு என்பதை விட உச்சநிலையைக் கடைபிடித்துள்ளனர் என்றே கூறத்தோன்றுகிறது.

துணைநூற்பட்டியல்

1. அறவாணன், க. ப. (1978). அற்றைநாள் காதலும் வீரமும். பாரி நிலையம். சென்னை.

2. இராமநாதன் செட்டியார், லெ. ப. கரு. (1957). சங்ககாலத் தமிழர் வாழ்வு. இராமநாதபுரம்: வெள்ளையன் பதிப்புக் கழகம்.

3. இளங்குமரன், இரா. (1971). உரையாசிரியர் கண்ட சொற்பொருள். நுண்மை விளக்கம். சென்னை: சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.

4. பால சுப்பிரமணியன், கு. வெ. (2014). நற்றிணை மூலமும் உரையும். சென்னை: நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.

5. வரதராசன்,மு. (1979). இலக்கியத் திறன். சென்னை: பாரி நிலையம்.

6. இடைமருதூர் கி. மஞ்சுளா, = இலக்கிய உத்திகள்

7. முனைவர் ந. முருகேசன்https://groups.google.com/forum/#!topic/mintamil/_oPEi4HNuvI

8. http://thalirssb.blogspot.com/2014/07/How-is-your-Tamil-knowledge-66.html


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p211.html


ISSN 2454 - 1990
சிறந்த நூலாசிரியர் பரிசு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)





வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...



சிரிக்க சிரிக்க
எரிப்பதா? புதைப்பதா?
அறிவை வைக்க மறந்துட்டானே...!
செத்தும் செலவு வைப்பாள் காதலி!
வீரப்பலகாரம் தெரியுமா?
உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
இலையுதிர் காலம் வராது!
கண்ணதாசனின் நகைச்சுவைகள்
குறைச்சுத்தான் எடை போடறாரு...!
அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
இடத்தைக் காலி பண்ணுங்க...!
சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
மாபாவியோர் வாழும் மதுரை
இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
கவிஞரை விடக் கலைஞர்?
பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
கடைசியாகக் கிடைத்த தகவல்!
மூன்றாம் தர ஆட்சி
பெயர்தான் கெட்டுப் போகிறது!
தபால்காரர் வேலை!
எலிக்கு ஊசி போட்டாச்சா?
சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
சம அளவு என்றால்...?
குறள் யாருக்காக...?
எலி திருமணம் செய்து கொண்டால்?
யாருக்கு உங்க ஓட்டு?
வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
கடவுளுக்குப் புரியவில்லை...?
முதலாளி... மூளையிருக்கா...?
குட்டிக்கதைகள்
எல்லாம் நன்மைக்கே...!
மனிதர்களது தகுதி அறிய...
உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
அழுது புலம்பி என்ன பயன்?
புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
கடவுளைக் காண உதவும் கண்ணாடி
தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
சிங்கத்திற்கு வாழைப்பழம்!
வலை வீசிப் பிடித்த வேலை
சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
கல்லெறிந்தவனுக்கு பழமா?
சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
அக்காவை மணந்த ஏழை?
சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
இராமன் சாப்பாட்டு இராமனா?
சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
கழுதையின் புத்திசாலித்தனம்
விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
ஆணவத்தால் வந்த அழிவு!
சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
சொர்க்க வாசல் திறக்குமா...?
வழுக்கைத் தலைக்கு மருந்து
மனைவிக்குப் பயப்படாதவர்
சிங்கக்கறி வேண்டுமா...?
வேட்டைநாயின் வருத்தம்
ஆன்மிகம் - இந்து சமயம்
ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
தானம் செய்வதால் வரும் பலன்கள்
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
பிரதோஷம் எப்படி விஷேசமானது?
விநாயகர் சில சுவையான தகவல்கள்
சிவராத்திரி விஷேசமானது ஏன்?
முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
எப்படி வந்தது தீபாவளி?
தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
அனுமனுக்கு வடை மாலை ஏன்?
திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
முருகா என்றால் என்ன கிடைக்கும்?
குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
விபூதியின் தத்துவம்
கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
இறைவன் ஆடிய நடனங்கள்
யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                       


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License