Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினேழாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...

Content
உள்ளடக்கம்

சமையல்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

புறப்பொருள் வெண்பாமாலை கூறும் போர் முறைகள்

முனைவர் அரங்க. மணிமாறன்
முதுகலைத் தமிழாசிரியர்,
அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி, செங்கம் - 606 701


முன்னுரை

முன்னை பழமைக்கும் பழமையாய் பின்னை புதுமைக்கும் புதுமையாய் இலகுகிறது தமிழ்மொழி. காலந்தோறும் வளரும் புதுமைகளுக்குத் தக்க தன்னைப் புதுப்பித்துக் கொண்டு இளமை குன்றா இயல்பினதாய் விளங்குகின்றது.

காலந்தோறும் மலரும் இலக்கியங்களும், தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்களும், நிகண்டுகளும் வெளிநாட்டார் இலக்கணம் ஆராய்ச்சி முதலிய நூல்களின் வளத்தோடு வாழும் செம்மொழியாய் வளம் சேர்க்கிறது. அத்தகு தமிழ்மொழி ஐந்திலக்கண வளத்தோடு அசையா கோட்டையாக நின்று நிலைக்கிறது. மொழிக்கு இலக்கணம் வகுத்தது மட்டுமின்றி வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்துள்ளனர் தமிழர்.

அகப்பொருள் காதல் வாழ்விற்கும்,- புறப்பொருள் போர் நாகரிக பண்பாட்டு வாழ்க்கை முறைக்கும் இலக்கணம் வகுக்கின்றன.

தொல்காப்பியத்தின் வழிநூலாய்த் தோன்றிய புறப்பொருள் வெண்பா மாலை ஐயனாரிதனார் என்பவரால் வெட்சி முதல் பெருந்திணை ஈறாய் பன்னிரு படலமாய் விரித்துரைக்கப்பட்டுள்ளது. இதில் கூறப்படும் போர்முறைகளை ஆய்வதாய் இக்கட்டுரை அமைகிறது.

விரிச்சி (நற்சொல்) கேட்டல்

பகைநாட்டின் மீது போர்தொடுப்பதற்கு முன் போர்செயல் வெற்றி பெறுமா? என நற்சொல் கேட்டனர்.

‘வேண்டிய பொருளின் விளைவுநன் கறிதற்கு
ஈண்டிருன் மாலைச் சொல் ஓர்ந்தன்று’ (1)

இன்றும் நம் செயல்கள் வெற்றி பெறுமா என நாம் சகுனம் பார்த்தல், குறிக்கேட்டல், பல்லியின் (கௌலி) ஒலி திசையறிதல் ஆகிய முறைகளைக் கையாள்வதோடு இதனை ஒப்பிடலாம்.

மாலை நேரத்தில் ஊரின்புறத்தே திருக்கோவிலில் பலரும் கூடி நற்சொல் கேட்டு நிற்க வேட்டுவச்சி குடம் நிறைய கள் கொண்டுவா என்கிறாள். இது அவர்களுக்கு நல்நிமித்தமாக காதில் விழுகிறது. போரில் வென்றால் கள் குடித்து மகிழ்வது வழக்கம். அதுவே நற்சொல்லாகக் கேட்கின்றனர். சில நேரங்களில் எதிர்மறை சகுனம் ஏற்படினும் அதனை பொய்யாக்கும்படி வெற்றி பெறுதலும் உண்டு. (பிள்ளைப்பெயர்ச்சி)

ஒற்றாடல் (வேய்)

ஐந்தாம் படையாகிய ஒற்றர்படையே ஒரு நாட்டின் முக்கியப் படையாக அமைகிறது.

‘கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று’ (2)

என்று ஒற்றாடலின் முறைகளை திருவள்ளுவர் விளக்குகிறார்.

பகைநாட்டிற்குள் உயிரைப் பணயம் வைத்து அந்நாட்டின் எல்லை, வழிகள், அரண்அமைப்பு, படைபெருக்கம், படை நிலைகள், சுருக்க வழிகள் ஆகியவற்றை அறிந்து வருவர். பகைவரிடம் அகப்படின் கொலை செய்யப்படுவர். சிலப்பதிகாரத்தில் கோவலன் பகை நாட்டின் ஒற்றனெனக் கருதிக் கொலை செய்யப்படுகிறான். போரின் வெற்றியின் பின் ஒற்றாய்ந்தவர்க்கு அதிகப் பரிசிலைத் தருவதும் இதன் காரணமாகவே ஆகும்.

‘வெம்முனைநிலை யுணர்த்தியோர்க்குத்
தம்மினுமிகச் சிறப்பீந்தன்று’. (3)

என இதனைப் புறப்பொருள் வெண்பா மாலை விளக்குகிறது.


ஆநிரைக் கவர்தல்

ஒரு நாட்டின் மீது போர் செய்ய விரும்பும் அரசன் தன் படைகளை அனுப்பிப் பகை நாட்டின் பசுக்கூட்டங்களை (ஆநிரை) யாரும் அறியாதவாறு கவர்ந்து வரச் செய்வான்.

‘வென்றி வேந்தன் பணிப்பவும் பணிப்பின்றியும்
சென்றி கன்முனை ஆதந்தன்று’ (4)

பசுக்கள் அந்நாட்டின் செல்வங்கள் ஆகும். இதன் காரணமாகவே திருவள்ளுவரும்

‘கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்ற யவை’ (5) என்கிறார்.

மாடு ஒரு நாட்டின் செல்வம் மட்டுமன்று. மானத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. தனக்குத் தெரியாமல் தன் நாட்டின் பசுக்களைக் கவர்ந்தது போருக்கான அறைகூவலாகவும் அமைகிறது. இதனால் வெகுண்டு போருக்கெழுகின்றனர். எனவே ஆநிரைக் கவர்தல் போரின் தொடக்கமாக அமைகிறது.

படைக்கருவிகளை வழங்குதல்

அரசன் தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை, தூசிப்படை, கிடுகுப்படை ஆகியவற்றிற்கு அவரவர் கையாள் திறனுக்கேற்ற படைக்கருவிகளை வழங்குவது படைவழக்கு எனும் துறையில் விளக்கப்பட்டுள்ளது.

‘முத்தவிர் பூண் மறவேந்தன்
ஒத்தவர்க்கு படைவழங்கின்று’ (6)

என்று இதனைப் புறப்பொருள் வெண்பாமாலை கூறுகிறது.

வஞ்சினம் கூறுதல்

படைக்கருவிகளை அரசனிடமிருந்து பெற்ற படைவீரர்கள் தன் போர் ஆற்றலையும், நாட்டிற்கு ஆற்ற வேண்டிய கடமைகளையும், பகைவரை அழித்து சிதறச் செய்யும் திட்டங்களையும், அவ்வாறு பகைவரை வெல்லாவிட்டால் தான் அடையும் இழிநிலையினையும் எடுத்துக் கூறி வீரமொழி பகர்தல் ‘வஞ்சினம் கூறல், நெடுமொழிக்கூறல்’ என வழங்கப்படுகிறது.

‘இன்று பகலோன் இறவாமுன்னர் ஒன்னாரை
வென்று களங்கொள்ளா வேலுயர்ப்பின் - என்றும்
அரணவியப் பாயும் அடையார்முன் நிற்பேன்
முரணவிய முன்முன் மொழிந்து’ (7)

இன்று மாலைக்குள் பகைவரை வெல்வேன். அன்றி அவர்க்கு அடிமையாவேன் என்கிறான்.

தலையாணங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் பகைவரை வெல்லாவிடில் மாங்குடி மருதன் முதலிய புலவர் பெருமக்கள் பாடும் தகுதியை இழக்கக் கடவேனாக என்கிறான். (8)


பூச்சூடல்

போர் செயலின் ஒவ்வொரு நிகழ்விற்கேற்பவும் அதனை உணர்த்தும் வகையில் வெவ்வேறு பூக்களைச் சூடுவர்.

வெட்சிப்பூ சூடுதல் ஆநிரைக் கவர்தலைக் குறிக்கிறது. ஆநிரை மீட்கக் கரந்தைப் பூ, பகைவர் மேல் படையெடுக்க வஞ்சிப்பூ, பகைவரைத் தடுக்க காஞ்சி மதில் காக்க நொச்சிப்பூ, அதிரப் போர் செய்யும்போது தும்பைப்பூ, வெற்றி பெற்றோர் வாகைப்பூவையும் அடையாளமாகச் சூடுகின்றனர்.

பூசையிடுதல்

போர் செயல் வெற்றி பெறப் போர்க்குரிய தெய்வமாகிய காளிக்குப் பலியும் பூசையும் செய்து வழிபடுகின்றனர்.

‘நீடோளான் வென்றிகொள்கென நிறைமண்டை வலனுயரிக்
கூடாரை புறங்காணுங் கொற்றவை நிலையுரைத்தன்று’(9)

கலிங்கத்துப் பரணியில் காளியின் செயல்கள் விரிந்துரைக்கப்பட்டுள்ளன. போரில் வென்ற பிறகு வேலனோடு வெறியாட்டு நிகழ்த்துவதும் உண்டு.

படையெழுச்சி

போருக்குரிய நாள் குறித்த பின்னர் ஒரு நல்ல நாளில் அரச சின்னமான குடையும் போருக்குரிய கருவியான வாள்படையும் புறவீடு விடப்படுகிறது.

‘பெய்தாமஞ் சுரும்பிமிரப் பெரும்புலவர் புகழ்பாடக்
கொய்தார் மன்னவன் குடைநாட் கொண்டன்று’.(குடைநிலை)

‘செற்றார் மேல் செலவமர்ந்து
கொற்ற வாள் நாள் கொண்டன்று’ (10) (வாள் நிலை)


போர்புரிதல்

பழந்தமிழர் அறத்தோடு கூடிய போர்முறைகளையேக் கையாண்டனர். பழந்தமிழரின் ஈரம் செறிந்த வீரம் மறம் எனப்பட்டது.

தனக்கு நிகரான போர்த்திறனும் படைக்கலப் பயிற்சியும் பெற்றவர்களோடு மட்டுமே போரிடுவர்.

ஆவும், பார்ப்பனரும், பெண்களையும், பிணியுடையவரும், ஈமக்கடனிருக்க புதல்வர் பெறாதவரும் யாம் போரிட இருக்கிறோம். நீங்கள் பாதுகாப்பான பொது மன்றங்களுக்குச் செல்லுங்கள் என்று முரசறைந்து தெரிவித்த பின்னரே ஒத்த வலிமையுடையரோடு போரிடுவர். (புறநானூறு பாடல் 9-நெட்டிம்மையார்)

‘வெட்சியாரைக் கண்ணுற்று வளைஇ
உட்குவரத் தாக்கி உளர்செருப் புரிந்தன்று’ (11)

என்று போர் புரிதலை விளக்குகிறார். போரில் படைவிட்டவர், புறமுதுகிட்டவர், தனி நின்றவர் ஆகியோரைத் தாக்குதலில்லை. தான் தோற்கும் நிலையறிந்து புண் கிழித்து மாய்தலும் உண்டு. கணவனை அழித்த வேலால் அவன் மனைவியும் மாய்தல் உண்டு (ஆஞ்சிக்காஞ்சி)


விழுப்புண் பெறுதல்

‘மண்ணொடு புகழ் நிறீஇப்
புண்ணொடு தான் வந்தன்று’ (12)

போரில் பகைவரோடு பொருது மார்பிலும் தோளிலும் முகத்திலும் ஏற்படும் புண்ணை விழுப்புண் என்கிறோம்.

விசயாலயச் சோழன் தொண்ணூற்றாறு விழுப்புண்களைப் பெற்றவன் என்பதை மூவருலாவில் ஒட்டக்கூத்தர்

‘சீறும் செருவில் திருமார்பில்
தொண்ணூறும் ஆறும் படுதழும்பின் ஆகத்தோன்’ (13) என்று பாடுகிறார்.

தீயிட்டு எரித்தல்

பகை நாட்டைப் போரிட்டு வென்று அந்நாட்டைத் தீயிட்டு எரிக்கின்றனர். பகைவரின் வளத்தை முற்றிலும் அழிக்கும் செயலாகும்.

‘நேராதார் வளநாட்டை
கூரெரி கொளீஇயன்று’ (14)

அந்நாட்டின் செல்வங்களை முழுவதும் கொள்ளையடித்தலும் உண்டு.

‘களமர் கதிர்மணி காலேகம் செம்பொன்
வளமனை பாழாக வாரி’ (15) கொள்ளையடிக்கின்றனர்.

தாம் போரிட்டழித்த நாடு கெடும்படி கழுதை ஏறு பூட்டி வெள்வரகு கொள் விதைப்பர்.

‘எண்ணார் பல்லெழில் கழுதையே ழுவித்து
உண்ணா வரகொடு கொள்வித் தின்று’ (16)

இவ்வாறு பல வகையினும் தாம் போரிட்டு அழித்த நாட்டைச் சீர் கெடும்படி செய்தனர்.

மகள் வேண்டி போர்

‘இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு’ (17) என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.

நாட்டை வளப்படுத்தவும், வறியவர்க்கு ஈயவும், வேண்டிய பொருளுக்காகப் போரிடுதலும் உண்டு. பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதற்காகப் போரிடுதலும் உண்டு. மகட்பால் காஞ்சி துறை அத்தகையது. ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்கும் வீரமுண்டு என்பது மூதின்முல்லை.

எதிர்த்து போர்செய்ய முடியாதவர்கள் திறை தந்து நாட்டினைப் பாதுகாத்தலும் உண்டு.

வெற்றிக் கொண்டாட்டம்

போரில் கிடைத்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் கறி உணவும் மொந்தை நிறைந்த கள்ளும் உண்டு மகிழ்ந்தனர் (உண்டாட்டு). புலவர்க்கும் தன்னை நாடி வந்த இரவலர்க்கும் வாரி வழங்கினர். துடி இசைத்த துடியர்க்கு மிகு பொருள் வழங்குதல் உண்டு.

‘நீடவும் குறுகவும் நிவப்பவும் தூக்கி
பாடிய புலவர்க்குப் பரிசில் நீட்டின்று’ (18)


நடுகல்

நாட்டைப் பகைவரிடமிருந்து காப்பதற்கான போரில் வீழ்ந்துபட்ட வீரர்களுக்கு யாழைக் கொண்டு இசைத்துப் பாடும் பாணர் கையறவு பாடுதல் உண்டு.

‘வெருவரு வாளமர் விளிந்தோற் கண்டு
கருவி மாக்கள் கையற வுரைத்தன்று’ (19)

‘மண்மகுளத் துடிகறங்க
விண்மேயாற்குக் கற்கொண்டன்று’ (20)

போரில் மாண்ட வீரர்களுக்கு அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் சிறந்த கல்கொணர்ந்து, புனித நீராட்டி, அவரது பிணத்தைப் புதைத்த இடத்தில் நடுகல் நட்டு அவரது போர்த்திறத்தையும் புகழினையும் போற்றி நினைவு கூறுவர். இந்நடுகல் வழிபாடு பின்னர் கடவுள் வழிபாடாக மாறியுள்ளது.

இவ்வாறு சங்ககாலப் போர் முறை நிகழ்வுகள் புறப்பொருள் வெண்பா மாலையில் விவரிக்கப்பட்டமை அறிய முடிகிறது.

அடிக்குறிப்புகள்

1. புறப்பொருள் வெண்பா மாலை-(விரிச்சி துறை) ப.8 திருநெல்வேலி தென்னிந்திய சைவசிந்தாந்த நூற்பதிப்புக்கழகம் -சென்னை-18- பதிப்பு 2004.

2. திருக்குறள்-ஒற்றாடல் குறள்-585-ப.119-தென்றல் நிலையம்-சிதம்பரம்-8வது பதிப்பு-2006.

3. மேலது புற. வெ.மாலை புலனறிச்சிறப்பு-ப.21.

4. மேற்குறித்த நூல் வெட்சி ப.5.

5. திருக்குறள்-கல்வி குறள்-400-ப.81.

6. புற.வெ.மாலை-படைவழக்கு ப.69.

7. மேலது வஞ்சினக் காஞ்சி ப.74.

8. தமிழ் இலக்கிய வரலாறு-டாக்டர் மு.வரதராசனார்-ப.44 புது தில்லி சாகித்திய அக்காதெமி வெளியீடு-1999.

9 . புற.வெ.மாலை-கொற்றவை நிலை ப.44

10. மேலது குடை நிலை-வாள்நிலை பக்-42 -43.

11. மேலது போர் மலைதல் ப.29

12. மேலது புண்ணொடு வருதல் ப.30.

13. மூவருலா-ஒட்டக்கூத்தர்

14. புற.வெ.மாலை உழபுல வஞ்சி ப.53.

15. மேலது மழபுல வஞ்சி ப.54.

16. மேலது உழுது வித்திடுதல் ப.122

17. திருக்குறள் இறைமாட்சி-குறள் 385 ப.79.

18. புற.வெ.மாலை கொடைவஞ்சி ப.54.

19. மேலது கையறு நிலை ப.35.

20. மேலது கற்கோள் நிலை ப.244.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p214.html


  2022
  2021
  2020
  2019
  2018
  2017

வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்

முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License