இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

சிலப்பதிகாரத்தில் வேடர்கள்

முனைவர் சு. விமல்ராஜ்
உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை,
அ.வ.அ. கல்லூரி (தன்.), மன்னன்பந்தல், மயிலாடுதுறை.


முன்னுரை

சிலப்பதிகாரம் தென்னிந்தியாவின் வரலாற்றுப் பெட்டகம் எனின் பொருந்தும். காலங்காலமாய் சிலம்பின் உள்ளுக்குள் கட்டமைத்திருக்கும் நிகழ்வுகளின் மீதான ஆய்வுகள் நிகழ்ந்த வண்ணமிருக்கிறது. அவ்விலக்கியத்தின் கதை மாந்தர்கள் உண்மைத்தன்மையுடையவர்களா என்னும் கேள்வி, ஆய்வாளர்களைத் தேடுதலுக்கு உட்படுத்திக் கொண்டிருக்கிறது. நிகழ்வுகள் மீதான உண்மைத்தன்மையின் தேடல் தொடர்கிறது. சிலம்பு கி.மு அல்லது கி.பி.யின் கதை என்றவாறு ஆய்வுகள் தொடர்கின்றன. நிலமும் மனித வாழ்வும் குறித்த பல்வேறு புரிதல்களை மானிடர்களுக்கு உணர்த்தி நிற்கும் ஒரு பேரிலக்கியம் சிலப்பதிகாரம் என்றால் அது மிகையில்லை. இராமாயன மகாபாரதக் கதைகளைப் போல் சிலம்பும் மக்கள் மத்தியில் பன்னெடுங்காலம் செவிவழிக்கதையாகப் புழங்கிக் கொண்டிருந்திருக்கிறது. இப்படைப்பின் வழி மண்ணையும் மக்களையும் ஆழமாக உணர்ந்தறியமுடியும் என்பது திண்ணம். ஐந்து நில மக்கள் வாழ்வை இது சங்கத்தமிழ் இலக்கியம் போன்று ஆங்காங்கே பதிவு செய்திருக்கின்றது. அவற்றுள் வேடுவர்களை சிலம்பு எவ்வாறு எடுத்துக்காட்டியிருக்கிறது என்பது குறித்து அறிய இக்கட்டுரை பயணம் செல்கிறது.

பாலை நிலம்

திணையின் நிலையைச் சுட்டும் வகையில் நான்கு திணையின் இடத்தில் நின்று ஐந்தாம் நிலத்திணையாகிய பாலையினை நிலையானது இல்லை என்னும் அதன் கருத்தியலைப் பதிவு செய்வது சிலப்பதிகாரம். இதனை,

“முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து
பாலை என்பதோர் படிவம் கொள்ளும்” (சிலம்பு. காடுகாண் காதை.கோடையில் வரலாமா.5-6)

என்ற செய்யுள் வழியேப் பதிவு செய்கிறார் இளங்கோவடிகள். நிலையான திணையாகப் பாலை இல்லை என்பதால் தொல்காப்பியரும் ஐந்தாம் திணையாக (நிலம்) பாலையை சுட்டாது விட்டார். உரிப்பொருளுக்கு பாலையை முறையேப் பதிவு செய்கிறார். பாலை நிலத்து வேடர்களின் வாழ்க்கையை இளங்கோ வேட்டுவரியில் படம் பிடித்திருக்கிறார். அற்றை நாள் வாழ்வும் வெம்மையும், வேடுவர்களின் வேட்டையும் மண்ணும், மரமும் செடியும் கொடியும், பறவையும் விலங்கும் முற்றிலும் ஆவணமாய் அடைத்து வைக்கப்பட்ட இலக்கியமாக இது விளங்குகிறது. மழை வளம் இல்லாத பாலை நிலத்தில், பாலை வெளிகள் கடுங்கதிர்களால் கொடிய வெம்மை உடையனவாயிருந்தன. முள் வேலிகள் சூழ்ந்து காவல் செய்யப்பெற்ற மன்றங்களில் வேடர்கள் கூட்டமாய் வாழ்ந்திருந்தனர். இச்செய்தியை,

”இடுமுள் வேலிஎயினர் கூட் டுண்ணும்
நடுவூர் ... ... ... ... ...
வல்வில் எயினர் மன்றுபாழ் பட்டன
மறக்குடி தாயத்து வழிவளம் சுரவாது
அறக்குடி போல் அவிந்தடங்கினர் எயினரும்” (சிலம்பு.வே.வ.10-15)


என்ற செய்யுளடிகள் வழி அறியமுடிகின்றது. வேடர்களின் கூடிவாழும் கூட்டுணர்ச்சியும், வேட்டையில் பெற்ற உணவைக் கூடி ஒருங்கேப் பங்கிட்டு உண்ணும் தன்மையும், வேட்டையுணர்வு அவர்களை வலிமையுடையவர்களாக வைத்திருக்கும் பொருத்தப்பாடும் மறக்குடி அறக்குடி என்று இளங்கோ எடுத்தாண்ட சொல்லாட்சியில் புரிந்துகொள்ள முடிகின்றது. வேடர்களின் வீடுகள் தனித்தனியேக் குடிசைகள் அமைக்கப்பெற்று இருந்ததை,

“கயமலர் உண்கண்ணாய்! காணாய் நின் ஐயர்
அயலூர் அலற எறிந்தநல் ஆனிரைகள்
நயனில் மொழியின் நரைமுது தாடி
எயினர் எயிற்றியர் முன்றில் நிறைந்தன” (சிலம்பு.வே.வ.கொடை.9-12)

என்ற பாடல் வரிகள் புலப்படுத்துகின்றன. வேடர்களின் வில்லாற்றலுக்குச் சான்றாக,

“வழங்குவில் தடக்கை மறக்குடி... ... ... ” (சிலம்பு.வே.வ.6)

என்னும் வேட்டுவவரிப்பாடல் விரைந்து செலுத்துகின்ற வில்லையும், அதற்குண்டான வலிமையான கைகளையும் உடையவர்கள் என்பதை எடுத்துக் காட்டுகின்றது.

மக்கட்பெயர்

இந்நிலத்து மக்கள் பெயருள் வேடர்களுக்கு மறவர், எயினர், எயிற்றியர்,வேடர், கானவர் என்னும் பெயர்களை இளங்கோ எடுத்தாண்டுள்ளார். இப்பெயர் திணையிடத்துச் (நிலம்) சுட்டப்பெறும் சங்க காலத்தை ஒத்தப் பெயர்களாக காணப்படுகின்றன. சிலம்பு சங்க நிகழ்வா அல்லது அதற்கும் முந்தையதா என்னும் ஆய்வும், அது செவிவழிச்செய்தியாக மக்களிடத்தில் புழங்கி எப்போது அது படைப்பாக உருப்பெற்றது என்ற வகையிலெல்லாம் ஆய்வுகள் நிகழ்ந்த வண்ணமிருக்கிறது. மக்கட்பெயருள் இவற்றை வைத்தெண்ணும்பொழுது மரபை ஒட்டி ஒழுகி வந்ததை அது புலப்படுத்துகிறது. இப்பெயர்கள்,

“வழங்குவில் தடக்கை மறக்குடி” (சிலம்பு.வே.வ.6)

“கானவர்” (சிலம்பு.வே.வ.9, கொடை.7)

“வல்வில் எயினர்” (சிலம்பு.வே.வ.13)

“எயினர்” (சிலம்பு.வே.வ.20, கொடை.12, பலிக்கொடை.6,12)

“எய்வில் எயினர்” (சிலம்பு.வே.வ.குலச்சிறப்பு.8)

“வேய்வில் எயினர்” (சிலம்பு.வே.வ.குலச்சிறப்பு.12)

“எயினர்கள்” (சிலம்பு.வே.வ.அவிப்பலி.8)

“வல்வில் எயின்” (சிலம்பு.வே.வ.பலிக்கொடை.2)

“பெருவிறல் எயின்” (சிலம்பு.வே.வ.அவிப்பலி.7)

“எயிற்றியர்” (சிலம்பு.வே.வ.கொற்றவைகோலம்.20, கொடை.12)

“இளமா எயிற்றி” (சிலம்பு.வே.வ.கொடை.1)

“விற்றொழில் வேடர்” (சிலம்பு.வே.வ.குலச்சிறப்பு.4)

என்னும் பாடல் வரிகள் வழியாக வேடர்களின் பல்வேறு பெயர்கள் வெளிப்படுகின்றன. இளங்கோவடிகள் மரபுப்பெயர்களை ஆங்காங்கேச் சுட்டிச்சென்றுள்ளார்.


வேடர்களின் தொழில்

வேடர்களுக்கு வேட்டையாடுவது முதன்மைத் தொழில். வேட்டையில் பெற்ற உணவை பகிர்ந்து உண்டனர். மழை வளம் நிறைந்த மருத நிலங்களில் வாழும் உழவர்கள் கலைப்பை கொண்டு ஏர் ஓட்டி, பயிரை விளைவித்து வாழ்வர். மழை வளம் இல்லாத பாலை வெளியில் வாழுகின்ற வேடுவர்கள், வில்லைக் கலப்பையாகப் பயன்படுத்தி உணவை ஈட்டுவர். கானவரின் தொழிலுக்கு வில் முதன்மையான கருவி. விற்றொழில் வேடர் என்றெல்லாம் அழைக்கப் பெற்றமை வில்லேந்தி விலங்கை வேட்டையாடியும், தேனெடுத்தும் வழிப்பறியிலும் உணவை சமைத்துக்கொண்டமை வெளிப்படுகிறது.

“மறங்கொல் வயப்புலி வாய்பிளந்து” (சிலம்பு.வே.வ.கொற்றவை கோலம்.7)

“ஆறெறி பறை” (சிலம்பு.வே.வ.கொற்றவை கோலம்.20)

“இட்டுத்தலை எண்ணும்” (சிலம்பு.வே.வ.கொற்றவை கோலம்.1)

என்றெல்லாம் மறவர்களின் வேட்டையும் வீரமும் பதிவு செய்யப்பெற்றுள்ளது.

உணவு

வேடர்கள் வேட்டையில் பெற்ற விலங்கினங்களைச் சோறாக்கி உண்டனர். இந்நாளில் பிரியாணி என்னும் உணவு அந்நாள் புலால் உணவே. ஊனைச் சோற்றில் புழுக்கி உண்ணுதல். அவரை, துவரை முதலியவற்றின் அவியலையும் இவர்கள் விரும்பி உண்டனர். இச்செய்தியை,

“புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும்” (சிலம்பு.வே.வ.கொற்றவ கோலம்.18)

வேடுவர்கள் கள்ளை விரும்பி உண்டனர். வேட்டுவக்குல பெண்கள் கள்ளை தெருக்களில் விற்றனர் என்ற செய்தியும் பெறப்படுகிறது. அவ்வாறு கள் விற்கும் பெண்களைக் கள்விலையாட்டி என்று அழைத்தனர். இதனை,

“கள்விலை யாட்டி மறுப்
பொறா மறவன் கைவில் ஏந்திப்... ...” (சிலம்பு.வே.வ.வெட்சிப்புறநடை.1)

“கள்விலை யாட்டி நல் வேய்தெரி கானவன்” (சிலம்பு.வே.வ.கொடை.7)

“மட்டுஉண் வாழ்க்கை வேண்டுதிர் ஆயின்” (சிலம்பு.வே.வ.18)

என்ற வரிகள் மூலம் மறவர்கள் கள் உண்ணும் நிகழ்வு, எயிற்றியர் கள் விற்கும் செய்தி, வேடர்கள் வேட்டை என்னும் நிகழ்வுகளைச் சிலப்பதிகாரம் பதிவு செய்திருக்கிறது.


ஆடை அணிகலன்கள்

வேடர்கள் தாங்கள் வேட்டையாடிக் கொன்ற யானை மற்றும் புலியின் தோல்களை ஆடையாக அணிந்திருந்தனர், குமரிக்கு ஆடை அணிகலன் சூட்டும் நிகழ்வில் மறவர்களின் உடையணி முறையை அறிந்து கொள்ள முடிகிறது. இதனை,

“வரியும் புள்ளியும் மயங்கு வான்புறத்து.
உரிவை மேகலை உடீஇப் பரிவோடு” (சிலம்பு.வே.வ.கொற்றவை கோலம்.10-11)

என்ற பாடல் வழியும் கொற்றவையின் ஆடையினைச் சுட்டுமிடத்தில்,

“ஆனைத்தோல் போர்த்துப் புலியின் உரிஉடுத்து” (சிலம்பு.வே.வ.தாயே.நிற்பாய்.1)

என்றும் சொல்லி நிற்பது வேடர்களின் ஆதிநாள் ஆடை எது என்பதை அடையாளப்படுத்திக் காட்டுகிறது. மேலும், அணிகலனாகக் காட்டும் நிலையில்,

“சிறுவெள் ளரவின் குருளைநாண் சுற்றிக்
குறுநெறிக் கூந்தல் நெடுமுடி கட்டி,
இளைசூழ் படப்பை இழுக்கிய ஏனத்து
வளைவெண் கோடு பறித்து மற்றது
முளைவெண் திங்கள் என்னச் சாத்தி
மறம்கொள் வயப்புலி வாய்பிளந்து பெற்ற
மாலை வெண்பல் தாலிநிரை பூட்டி” (சிலம்பு.வே.வ.கொற்றவை கோலம்.2-9)

என்ற செய்யுள் வரிகளின் வழியாக இளங்கோவடிகள் புலப்படுத்துகிறார். ஆதிநாள் முதற்கொண்டு மனிதனின் ஆடையும் அணிகலனும் மாற்றமும் ஏற்றமும் பெறுவதற்கு முன்பிருந்த நிலைப்பாட்டை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. நாகரிக மனிதனின் ஆடை நவீன வடிவத்திற்கு வருவதற்கு முன்னர், இயற்கையில் கிடைத்தவற்றை அவன் தனக்கான ஒன்றாக மாற்றிக் கொண்டது புலப்படுகிறது.


கடவுள்

வேடுவர்களின் கடவுள் கொற்றவை. இவளைப் போர்க்கடவுள் என்றும் சுட்டுவர். ஆறலைத்துண்ணும் தம் தொழில் வளம் பெருகத் தங்கள் குலத் தெய்வமாகிய கொற்றவையை வணங்கும் பழக்கம் உடையவர்களாக வேடர்கள் உள்ளனர். கொற்றவைக்கு உயிர்ப்பலி கொடுக்காத நிலையில், தங்களுக்கு வேட்டைப்பலன் கிட்டாதென நம்பினர். இதனை,

”நடுஊர் மன்றத்து அடிபெயர்த்து ஆடிக்
கல்என் பேர்ஊர்க் கணநிரை சிறந்தன
வல்வில் எயினர் மன்று பாழ்பட்டன
மறக்குடித் தாயத்து வழி வளம் சுரவாது
அறக்குடி போல் அவிந்து அடங்கினர் எயினரும்
கலையமர் செல்வி கடன் உணின் அல்லது
சிலையமர் வென்றி கொடுப்போள் அல்லள்” (சிலம்பு.வே.வ.11-17)

என்ற செய்யுள் வரிகள் வேடுவர்களின் நம்பிக்கையை எடுத்துக்காட்டுகிறது. கொற்றவைக்குத் தங்கள் தொழிலின் வளர்ச்சிக்காகத் தங்கள் தலையை அறுத்து பலியாகக் கொடுக்கும் தன்மை உடையவர்கள் இத்தகு வேடர்கள். இச்செய்தியை,

“இட்டுத் தலை எண்ணும் எயினர் அல்லது
சுட்டுத் தலைபோகாத் தொல்குடிக் குமரியை” (சிலம்பு.வே.வ.கொற்றவை கோலம்.1-2)

“மிடறுஉகு குருதி கொள் விறல்தரு விலையே
... ... ... ... ... ... ... ... ...
நிணன் உகு குருதி கொள் நிகர் அடு விலையே” (சிலம்பு.வே.வ.அவிப்பலி.17-18)

என்றெல்லாம் இளங்கோவடிகளால் சுட்டிக்காட்டப் பெற்றுள்ளது. ஐயை கோட்டம் என்பது கொற்றவையின் கோயில். அங்கு வேட்டுவ முதுமகளுக்கு கொற்றவைக் கோல அலங்காரம் செய்து வண்ணமும் சுண்ணமும், தண்ணறுஞ் சாந்தமும் புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும் பூவும் புகையும் மேவிய விரையும் படைத்து பறை இசைக்க கொம்பு முழங்க கொற்றவையை வணங்குவர் (சிலம்பு.வே.வ.கொற்றவை கோலம்.17-22)


நுண்கலை

வேடர்கள் துடி, யாழ், பறை முதலிய இசைக்கருவிகளை இசைக்கும் திறன் படைத்தவர்களாக இருந்தனர். பறை இசை வழிப்போக்கர்களைத் துன்புறுத்தும் பொழுதும் இசைத்தனர். சின்னம் என்னும் இசைக்கருவியை ஊதுவர். கொம்பு, குழிகுழல், மணி ஆகியனவும் வேடர்களின் இசைக்கருவிகளாக இருந்தமை சிலம்பில் பதிவு செய்யப்பெற்றுள்ளது. இத்தகையச் செய்தியினை,

“ஆறெறி பறையும் சூறைச் சின்னமும்
கோடும் குழலும் பீடுகெழு மணியும்
கணங்கொண்டு துவைப்ப அணங்குமுன் நிறீஇ” (சிலம்பு.வே.வ.கொற்றவை கோலம்.21-23)

என்ற பாடல் வரிகள் எடுத்துக் காட்டுகின்றன. இங்கு இவர்கள் மட்டுமல்லாது துடியனும் பாணனும், இவர்களோடு சேர்ந்து இசைத்தமையும் உணரத்தக்கது.

“கொல்லன் துடியன் கொளைபுணர்
சீர் வல்ல நல்லியாழ்ப் பாணர்
தம் முன்றில் நிறைந்தன! “ (சிலம்பு.வே.வ.கொடை.3-4)

அமைதியாய் இருக்கும் ஊருக்குள் அச்சத்தை ஏற்படுத்தும் வண்ணம் துடியை இசைத்துப் பொருள்களை கவரும் வழக்கம் உள்ளவர் வேடர்கள்.

“துண்ணென் துடியொடு துஞ்சூர் எறிதரு கண்ணில் எயினர்” (சிலம்பு.வே.வ.பலிக்கொடை.6-7)

என்ற செய்தி இளங்கோவடிகள் பலவாறும் பதிவு செய்துள்ளார்.

முடிவுரை

சிலப்பதிகாரத்தின் ஒரு சிறு பகுதியாக (காதை) வேட்டுவரி இருந்த பொழுதினும், அது ஐந்து நில மக்களுள் ஒரு சாரர் வாழ்வை நுட்பமாகப் பதிவு செய்திருக்கிறது. அவர்களின் வாழ்வியலைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. முதற்பொருளும் கருப்பொருளும் வேடர்களின் வாழ்க்கையைப் புரிந்துணர்வுக்கான கருத்தியலாக பிரதிபலிக்கும் வண்ணம் இளங்கோவடிகள் எடுத்தாண்டுள்ளார். கடவுள் முதற்கொண்டு நம்பிக்கைகள் வரையிலும் புரிந்து கொள்ள முடிகிறது. காதைகளின் பலவிடங்களில் ஆசிரியர் மரபுசார் மக்கள் வாழ்வைப் பதிவு செய்ய முற்படுகிறார். அவ்வாறே வேட்டுவவரியில் வேடர்களின் வாழ்வியல் இடம் பெற்றுள்ளது. வேளாண் மக்களாய் பரிணமிக்கும் முன்பு மனிதன் வேட்டை மனிதனாய் இருந்தான். சிலம்பு காட்டும் வேடர்கள் விலங்கை வேட்டையாடுதல் மட்டுமன்றி வழிப்பறி செய்தனர். ஊருக்குள் சென்று மக்களை அச்சுறுத்திக் கொள்ளையடித்தனர்.

துணை நூல்

சிலப்பதிகாரம், புலியூர்க்கேசிகன் (உ.ஆ.), பாரி நிலையம், சென்னை. மு.ப.சூன்.1958.


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p224.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License