Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினேழாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...

Content
உள்ளடக்கம்

சமையல்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

எட்டுத்தொகை புறநானூற்றில் தூதுக் கூறுகள்

வ. பாக்கியராஜ்
முனைவர் பட்ட ஆய்வாளர்,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை-113.


முன்னுரை

வீரம் தமிழரின் உயிர் அவ்வீரத்தைத் தங்கள் கண்ணென போற்றுகின்றனர். விழுப்புண் படாநாளெல்லாம் வீண் நாளாகவே அவர்கள் கருதி வந்தவர்கள். குழந்தை இறந்தால் கூட அதை வாளால் கீறி பின் புதைக்கின்றனர். என புறநானூறு பேசும் அத்தகைய புறநானூற்றில் உயர்திணைப் பொருளையும் அஃறிணைப் பொருளையும் நாட்டின் பாதுகாக்கும் பொருட்டும், காதல் பொருட்டும் தூது விடப்பட்டுள்ளதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தூது - விளக்கம்

இருவரிடையே பேச்சு நிகழ்வதற்குச் செய்திகளை அல்லது கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதற்கு உறுதுணையாய் இருப்பவரைத் தூதர் என்று வழங்குவர். காதலர்களிடையே தூது அனுப்பும் பழக்கம் உண்டு. தூது என்பது ஒருவகைச் சிற்றிலக்கியம், இருவரிடையே சந்து செய்வித்தல், கூழாங்கல், செய்தி, பகை, தானாதிபதி எனப் பல பொருள் தரும், உண்ணும் தாணியங்கள் செரித்தற்காகச் சிறு கற்களை உண்ணும் ஒருவகைப் புறா ‘தூதுணம் புறவு’ எனப்பட்டது. சந்து, தூது, வாயில் ஆகிய மூன்றும் தூதின் பெயர்கள் என நிகண்டுகள் குறிப்பிடுகின்றன.

சந்து எனும் சொல் சந்தி என்பதிலிருந்து தோன்றியதாகலாம். சந்தி என்னும் சொல், இசைப்பு, கூடுகை, பல தெருக்கூடுமிடம், எழுத்துப் புணர்ச்சி ஆகிய பொருள்களைக் கொண்டதாகும். சேர்த்தல், எதிர்தல், கண்டுகொள்ளுதல் ஆகியன சந்தித்தல் ஆகும் என்கிறார் வே.இரா. மாதவன் அவர்கள்.

தூதின் இலக்கணம்

பல்வேறு இலக்கிய வகைகளுக்கு உரிய இலக்கணம் கூறும் பாட்டியல் நூல்கள், தூது இலக்கியத்தின் இலக்கணத்தையும் கூறுகின்றன. இலக்கண விளக்கம், பிரபந்த மரபியல், சிதம்பரப் பாட்டியல், நவநீதப் பாட்டியல், முத்து வீரியம், பிரபந்த தீபிகை, இரத்தினச்சுருக்கம் முதலிய பாட்டியல் நூல்களில் தூது இலக்கிய வகையின் இலக்கணத்தைக் காணமுடிகின்றது. பாட்டியல் நூல்கள் கூறுவது போல, தூது இலக்கியம் பின்வருமாறு அமைகிறது.

இலக்கண விளக்கம்

''பயிறருங் கலிவெண்பாவினாலே’’ என்ற இலக்கண விளக்கச் சூத்திரத்தின் படி அனைத்துத் தூதிலக்கியங்களும் கலிவெண்பாவினாலேயே இயற்றப்பட்டுள்ளன.

தூது இலக்கணம், கலிப்பாவில் அமைதல் வேண்டும் என்பதை,

"பயில்தரும் கலிவெண்பாபாவினாலே
உயர்திணைப்பொருளையும், அஃறிணைப்பொருளையும்,
சந்தியின்விடுதல்முந்தறுதூதுஎனப்
பாட்டியற்புலவர்நாட்டினர்தெளிந்தே" (இ.விளக்கம் .874)

மொழி பெயர்க்கப்பட்ட மேகதூதும் போன்ற சில நூற்கள் மட்டும் ஆசிரியப்பாவால் அமைந்துள்ளதைக் காண்கிறோம்.


பிரபந்த மரபியல்

"எகினமயில் கிள்ளை யெழிலியொரு பூவை
சகிகுயிலெஞ்சந்தென்றல்வண்டு - தொகைபத்தை
வேறுவேறாப்பிரித்து வித்தாரித்து மாலை
கொண்டன்பு ஊறிவா வென்றல் தூது" (பிர.மரபியல்.15)

என்கிறது. அதாவது மயில் முதலாக வண்டு ஈறாக உள்ள பத்துப் பொருட்களில் யாதாயினும் ஒன்றை விடுத்து மாலை வாங்கி வருமாறு கூறல் என்பதாம்.

இரத்தினச் சுருக்கம் கூறும் தூதிலக்கணம்

“இயம்புகின்ற காலத் தெகினமயில் கிள்ளை
பழம்பெறுமே கம்பூவை பாங்கி - நயந்தகுயில்
பேதைநெஞ்சந் தென்றல் பிரமரமி ரைந்துமே
தூதுரைத்து லாங்குந் தொடை” (இரத்தின.சுரு.7)

அன்னம், மயில், கிள்ளை, மேகம், பூவை, பாங்கி, குயில், நெஞ்சம், தென்றல், வண்டு எனக் கூறுகிறது.

தூதுப் பொருள் பத்து என்ற வரையறை பிரபந்த மரபியல், இரத்தினச் சுருக்கம் இவற்றில் உரைக்கப்பட்டுள்ளமை கண்டோம். இப்பத்து என்ற வரையறையைத் தாண்டி, பணம், தமிழ், மான், வனசம், சவ்வாது, நெல், புகையிலை, விறவி, துகில், காக்கை, மதங்கி, பொன், கழுதை, பழையது, அன்பு, செருப்பு முதலிய பொருட்களையும், குளளை, சண்பகம், பாரிசாதம், பீச்சி, இருவாட்சி முதலிய மலர்களையும் தூதுப் பொருளாகக் கொண்ட நூற்கள் உள்ளன.

தூதின் காலம் - உரிமை

"தூதின் பிரிவும் துணைவயின் பிரிவும்
பொருள் வயின் பிரிவும் ஓர் யாண்டு உடைய" (இ.விளக்கம். 458)

இது தூதிற்பிரிவு முதலாகிய மூன்று பிரிவிற்கும் கால வரையறை உணர்த்துகிறது. தூது காரணமாகப் பிரியும் பிரிவும், துணை இடமாகப் பிரியும் பிரிவும், பொருள் காரணமாகப் பிரியும் பிரிவும், ஓர் ஆண்டின் எல்லை ஆகும். என்றவாறு பரத்தையிற் பிரிவுக்கும் காவல் பிரிவுக்கும் கால வரையறைக் கூறார். அவை காடு இடையிட்டும் பிரியப்பாடமையின்.

"வேத மாந்தர் வேந்தர் என்று இருவருக்கும்
தூது போதல் தொழில் உரித்து ஆகும்" (இ.விளக்கம். 443)

இது நிறுத்த முறையானே தூதிற்குப் பிரியும் பிரிவுக்கும் உரியார் இவர். அந்தணரும், அரசரும் என்னும் இருதிறத்தாருக்கும் தூது நிமித்தம் பிரியும் பிரிவு தொழில் உரித்து. இது தூதிற்கு உரிமையைப் பற்றி பேசுகிறது.

"சிறப்புப் பெயர் பெறின் செப்பிய இரண்டும்
உறற்குஉரி மரபின ஒழிந்தோர் இருவர்க்கும்" (இ.விளக்கம். 444)

அரசனால் சிறப்புப் பெயர் பெற்றாராயின், மேல் கூறிய நாடு காவல் பிரிவும் தூதில் பிரிவும் பொருந்துதற்கு உரிய மரபினவாம், ஏனைய வணிகரும் சூத்திரரும் இருதிறத்தாருக்கும்.


தூது இலக்கியத்தின் தோற்றம்

தமிழ் மொழியில் தோன்றிய முதல் தூது நூல் நெஞ்சு விடு தூது எனும் நூல் ஆகும். இந்த நூலின் ஆசிரியர் உமாபதி சிவாச்சாரியார். அவர் தமது நெஞ்சத்தைத் தம் ஆசிரியருக்குத் தூதாக அனுப்புகிறார். இதில் சைவ சித்தாந்தக் கருத்துகள் நிரம்ப உள்ளன. இந்த நூலின் காலம் கி.பி. 14-ஆம் நூற்றாண்டு. இப்போது நாம் ஒரு செய்தியை மனத்தில் கொள்ளவேண்டும். எந்த ஓர் இலக்கியமும் திடீர் என்று தோன்றிவிடாது. ஓர் இலக்கிய வகை தோன்றுவதற்கு உரிய கூறுகள் அதற்கு முன்னால் உள்ள இலக்கண நூல்களிலும் இலக்கிய நூல்களிலும் காணப்படும் இதனைச் சிறிது விளக்கமாகக் காணலாம்.

தொல்காப்பியத்தில் தூது

தொல்காப்பியர் தொல்காப்பியத்தில் தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே பிரிவு ஏற்படுவதற்கு உரிய காரணங்களில் ஒன்றாகத் தூது செல்வதைக் குறிப்பிடுகின்றார். இந்தச் செய்தியைக் கூறும் தொல்காப்பிய நூற்பா,

"ஓதல் பகை தூது இவை பிரிவே" (தொல். அகத்திணை. 27)

தொல்காப்பியத்தில் தொல்காப்பியர் தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே பிரிவு நிகழ்வதற்குரிய காரணங்களைக் கூறுகின்றார். கல்வி கற்கும் பொருட்டுச் செல்லுதல், மன்னனின் பகைவர்கள் மேல் போர் தொடுத்துச் செல்லுதல், தூது செல்லுதல் ஆகிய காரணங்களுக்காகத் தலைவன் செல்வான். அப்போது தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே பிரிவு ஏற்படும் என்று தொல்காப்பியர் கூறுகின்றார். இந்த இடத்தில் தூது செல்லுதல் பற்றிய குறிப்பு உள்ளது.

தலைவன் - தலைவியிடத்தும், தலைவி - தலைவனிடத்தும் தூதுவிடும் வழக்கம் மிகவும் தொன்மையான வழக்கம். இதைத் தொல்காப்பியர் வாயில்கள் என்று குறிப்பிடுகின்றார்.

"தோழி தாயே பார்ப்பான் பாங்கன்
பாணன் பாடினி இளைஞர் விருந்தினர்
கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர்
யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப" (தொல் .கற்பியல் .52)

கற்புக்காலத்தில் தோழி, தாய், பார்ப்பான், பாங்கன், பாணன், பாடினி, இளையர், விருந்தினர், கூத்தர், விறலியர், அறிவர், கண்டோர் இவர்களை வாயில்கள் என தொல்காப்பியர் கூறுகின்றார்.

தூது பற்றிய இலக்கியங்கள் பிற்காலத்திலேயேத் தோன்றின. அவை சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாகக் கருதப்பட்டன. ஆனால், சங்க இலக்கியத்திலேயே நிரம்பக் காணப்படுகின்றன. அகப்பொருள் நிலையிலும் புறப்பொருள் நிலையிலும் தூதுச் செய்திகள் அமைந்துள்ளன. அவை புறத்தூது, அகத்தூது என இரண்டு வகைகளாக அமைகிறது.


புறநானூற்றில் தூது

சங்க இலக்கியங்களில் ஒன்றாகிய புறநானூறு என்ற நூலில் தூது அமைப்பில் புலவர்கள் பாடல்களைப் பாடி உள்ளார்கள். அவை, இரு பெருமன்னர்களுக்கு இடையே நடக்க இருக்கும் போரினை நிறுத்தும் வகையில் உயர்திணை, அஃறிணை தூதுவிடுக்கும் பாடல்களைப் பாடியுள்ளனர்.

உயர்திணை, அஃறிணையையும் தூது செல்லுமாறு வேண்டும் வழக்கம் தலைவன் தலைவியரிடை உண்டு. அது பெரும்பாலும் பிரிவுத்துன்பம் மிகுந்த நிலையில் ஏற்படும். தலைவன் பிரிந்தவிடத்துப் பிரிவுத்துன்பம் அதிகமான நிலையில், தன் காதல் மிகுதியையும் ஆற்றாமையையும் அஃறிணைப் பொருள்களிடம் கூறித் தூது சென்றுவருமாறு தலைவி வேண்டுவாதாக அமைகின்றன.

உயர்திணைத் தூது

ஒரு தூதுவன் எவ்வாறு தன்னுடைய பணியை செய்ய வேண்டுமோ அவ்வாறே புலவர் ஔவையார் அவர்கள் செயல்பட்டுள்ளார். தன்னுடைய அரசனுக்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் வகையில் தொண்டைமானிடம் உன்னுடை படைக்கருவிகள் அனைத்தும் புத்தம் புதிதாக போற்றிப் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அதியனின் படைக்கருவிகளோ ஓயாது போரில் ஈடுபட்டு நுனி மழுங்கியும், கூர் முறிந்தும் கிடக்கின்றன. செல்வம் உண்டாயின் இல்லாதவர்களுக்கு கொடுத்தும், தன் சுற்றத்தாருடன் கூடிவுண்ணும் தலைமையை உடையவன் எம் வேந்தனுடைய வேல். இங்கு வேல் என்பது கருவியை குறிக்காது வேந்தனுடைய சிறப்பை உணர்த்துகிறது. என்று கூறுவதன் மூலம் அதியனின் பேராற்றலை இகழ்வது போல புகழ்ந்து கூறியுள்ளார். அதாவது ‘சிதைந்து கொற்றுறைக் குற்றில’ என்பது பழிப்பது போல புகழ்வது எனும் அணியை பயன்படுத்தியிருப்பது ஔவையாரின் தூது திறத்திற்கு சான்றாக,

"இவ்வே பீலிஅணிந்து மாலை சூட்டி
கண்திரள் நோன்காழ் திருத்திநெய் யணிந்து
கடியுடை வியன்நக ரவ்வே அவ்வே
பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து
கொல்துறைக் குற்றி மாதோ என்றும்
உண்டாயின் பதங் கொடுத்து
இல்லாயின் உடன் உண்ணும்
இல்லோர் ஒக்கல் தலைவன்
அண்ணல்எம் கோமான் வைந்நுதி வேலே" (புறம்: 95)


அதியமான் என்ற மன்னனுக்காக ஔவையார் என்ற புலவர்தொண்டைமான் என்ற அரசனிடம், போர் மேற்கொள்ள வேண்டாம் என்று வலியுறுத்துவதற்காகத் தூது சென்றதாகப் கருதப்படுகிறது. ஔவையின் தூதை அரண் செய்யும் வகையில் வள்ளுவரின் கூற்று அமைகிறது.

"இறுதி பயப்பினு எஞ்சா இறைவற்கு
உறுதி பயப்பதாந் தூது” (குறள். 690)

இரு வேந்தர்களுக்குமிடையே மூள இருந்த போரை நல்லுரைக் கூறி வலிந்த இளமை கொண்ட பார்ப்பான் ஒருவன் தூதாக சென்று முற்பட்ட வேந்தனையடைந்து தக்கது கூறி அவனது போர் வேட்கையை மாற்றினான். பின்பு அவனுடைய மாற்றானாகிய வேந்தனை அடைவதற்குள் அந்நாட்டில் போர்ப் பறை முழங்கிற்று. தானை வீரரும் தொகுவாராயினர். பகைவர் மதில் கோடற்பொருட்டு ஏணிகளும் மதில் காத்தற்பொருட்டுச் சீப்புகளும் நன்மைந்திருந்தன. தூது போந்த பார்ப்பான் இரவில் வேந்தனைக் கண்டு போரைக் கைவிடுவற்கு வேண்டி பலவும் சுருங்கச் சொல்லி விளக்கினான். வேந்தன் உடன்பட்டான் தானை வீரரைத் தத்தம் மனையேகுமாறு வேந்தன் பணித்தான். இதன் மூலம் போரை நிறுத்தினான் என்பதனை இப்பாடல் உணர்த்துகிறது. அது கண்ட வேளாசானுக்கு அப்பார்ப்பான் தூதின்பால் வியப்பு மிகுந்தது.

பார்ப்பான் கூறி பின் ஏணியும் சீப்பும், போருக்குத் தயார் நிலையிலிருந்த யானைப்படை அவை அகற்றப்பட்ட செய்தியையும் இப்பாடல் உணர்த்துகிறது.

"வயலைக் கொடியின் வாடிய மருங்குல்
உயவல் ஊர்திப் பயலை பார்ப்பான்
எல்லி வந்து நில்லாது புக்குச்
சொல்லிய சொல்லோ சிலவே அதற்கே
ஏணியும் சீப்பும் மாற்றி
மாண்வினை யானையும் அணி களைந்தனவே" (புறம். 305)

"பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்" (குறள். 649)

மேலும்,

"தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாந் தூது" (குறள். 685)

வள்ளுவரின் கூற்றிற்கு ஏற்றார் போல் இத்தூதுப் பாடல் அமைந்துள்ளது.

உயர்ந்தோன் தூதாகலின் ‘விழுத்தூது’ என்றார். பொன்னரி மாலையின் வேறுபடுத்த ‘நூலரி மாலை’ எனப்பட்டது. இறந்த யானையின் உடம்பை ‘ஒருகை யிரும்பிணம்’ என்றார். வாள் திருத்தம் கண்ட மறவன் அஞ்சிப் புறங்கொடுத்தோடக் கண்ட மூதிலாளன், அவன் செயல் மறமுடையார்க்கு இழிவு தருவது பற்றி நாணமுற்று நகைத்தானாகளின், ‘நகும்’ என்றார். இசைப்ப சுடி, வந்த மூதிலாளன், திருத்தா, நகும் என செய்ல முடிகிறது. என்பதை கீழ்கண்ட பாடல் எடுத்துரைக்கிறது.

"வருகதில் வல்லே வருகதில் வல்லென
வேந்துவிடு விழுத்தூ தாங்காங் கிசைப்ப
நூலரி மாலை சூடிக் காலிற்
றமியன் வந்த மூதி லாளன்
... ... ... ... ... ... நகுமே" (புறம். 284)

பேகன் தன் மனையாளாகிய கண்ணகியை விட்டு முல்லையூரில் பரத்தை இல்லத்தில் பொழுதைக் கழித்தகாலை, பேகனைக் கண்ணகியோடு சேர்த்து வைக்கக் கபிலர், பரணர், அரிசில் கிழார், பெருங்குன்றூர் கிழார் ஆகியோர்கள் தாமாகவே தூது சென்ற செய்தியைப் புறப்பாடல்கள் கூறுகின்றன. பேகனைக்கான அவன் இல்லம் சென்ற புலவர்களுக்குக் கண்ணகியின் நிலை துயரைத்தர அவன் கூறாமசேயே அவள் துன்பம் கண்டு பொறாராய் தாமே தூது செல்லும் குறிப்பு (143- 146) ஆகிய பாடல்கள் மூலம் அறியமுடிகிறது.

அகத்திணையில் ஆற்றாமையே வாயிலாகக் கொண்டு தலைவன் தலைவியைச் சார்தல் போலப் புறத்திணையில் தலைவியின் துயர நிலைக் கண்டு புலவர்கள் தலைவனை நோக்கித் தூதராய்ச் செல்லும் தூதுக் குறிப்பினைக் காணமுடிகிறது.

பகைவர்மேல் போர் செய்ய எழும் வஞ்சித்திணையின் ஒருதுறை துணைவஞ்சி பகைவருடன் போரிடவந்தவனைத் தடுத்து அமைதிப்படுத்திப் போரைத் தவிரச் செய்தல் இருபெரு வேந்தர்க்கும் சந்து (தூது) செய்வித்தல் எனவும் கூறப்பெறும் இப்பாட்டில் ‘நெடுமதில் வரைப்பில் இனிதிருந்த வேந்தனொடு மலைத்தல் என்பது நாணத்தக்கது’ என்று கூறிப் போரைத் தடுத்தமையை,

“அடுநை ஆயினும் விடுநை
... ... ... ... ... ... ... ... ... ... ... ...
மலைத்தனை என்பது நாணுத தகவு உடைத்தே” (புறம்.36)


செறிந்த, பரல்களையுடைய சிலம்பும் நீண்ட கோல் தொழிலமைக்க சிறிய வலையல்களும் அணிந்த பெண்கள் (மகளிர்) குளிர்ந்த பொருனையாற்று மணல் மேட்டிலே பொன்னாலாகிய சுழற்சிக் காய்களைக் கொண்டு வீடு விளையாடுவர். அவர்கள் விளையாடும் வெண்மணற்பரப்பு, சிதையுமாறு வலிய கையையுடைய கொல்லனால் அடிப்பகுதி அகன்ற சுர்மை பெருந்தியதாகவும் நெடிய கைப்பிடியை உடைய கோடாரியைக் கொண்டு நின் வீரர்கள் காவல் மரங்களை வெட்டுவர், அதனால் மலர் மணமுடைய நெடிய கிளைகள் பூக்கள் உதிர்ந்து பொலிவழியும், இவ்வாறு சோலைகள் தோறும் காவல் மரங்களை வெட்டும் ஓசை தனது ஊரில் நெடிய மதில் எல்லையைக் கடந்து அரண்மனையின் இடத்து சென்றொலிக்கும். எனினும் மானமின்ற, இனிதாக அங்கே உரையும் வேந்தனுடன், இங்கு வானவில் போன்ற நிறமுடைய மாலையையுடைய முரசு முழங்க நீ போரிட்டார் என்பது நாணத்தக்கது.

நல்லிசைப் புலமையால் சிறப்புற்று விளங்கும் அரிசில் கிழார்க்குப் பெரும்பேகன் கண்ணகியாரைத் துறந்து புறத்தொழுகும் செயல் செவிப்புலனாயிற்று. அவர் அன்பால் அடைந்து அவன் நலம் பாராட்டினர். அவனும் இவர்க்குப் பெரும் பரிசில் நல்கினன், அவர் என்னை நயந்து பரிசில் நல்குவையாயின், யான் வேண்டும் பரிசில் ஈதன்று, நீ அருளாமையால் அருந்துயருழக்கும் அரிவை, நின் அருட்பேற்றல் தன் கூந்தலை முடித்துப் பூச்சூடுமாறு நின் தேடும் குதிரையும் பூட்டுற்று அவள் மனைக்குச் செல்லுதல் வேண்டும். இதுவே யான் வேண்டும் பரிசில்” என்ற கருத்தமைந்தது இப்பாடல்,

“அன்ன வாகரின் னருங்கல வெறுக்கை
அவைபெறல் வேண்டேம்; அடுபோர்ப் பேக!
சீறியாழ் செவ்வழி பண்ணி, நின் வன்புல
நன்னாடு பாட என்னை நயந்து
... ... ... ... ... ... ... ... ... ... ... ...
ஒலிமென் கூந்தல் கமழ்புகை கொளீஇத்,
தண்கமழ் கோதை புனைய
வண்புரி நெடுந்தேர் பூண்க, நின் மாவே” (புறம். 146)

இத்தூதுப்பாடல் அகம்சார்ந்த செய்தியைத் தாங்கியிருப்பினும் தொல்காப்பியர் விதிப்படி “சுட்டி ஒருவர் பெயர்க்கெனப் பெறர்” இப்பாடல் அகம் என்னும் நிலையிலிருந்து புறத்தைத் தழுவிய நிலையிலிருப்பதைக் காண முடிகிறது.

அஃறிணைத் தூது

காம மிகுதியால் மனமயக்கம் பெற்று, அஃறிணைப் பொருள்களை முன்னிலைப்படுத்தி உரைப்பதைத் தொல்காப்பியம் வழுவமைதியாகக் கொண்டுள்ளது.

"சொல்லா மரபின் அவற்றொடு கெழீஇச்
செய்யா மரபிற் றொழிற்படுத் தடக்கியும்" (தொல்,பொருள்.2)

என வரும் சூத்திரப் பகுதியில் ‘காமமிக்க கழிபடர் கிளவி’ இன்னது என விளக்கப்பட்டுள்ளதைக் காண்கிறோம். காமப் பொருண்மை பற்றி ஒருசார் நிகழும் பேச்சுக்கள் இவை இவை எனத் தொகுத்துரைக்குமிடத்து இப்பகுதி கூட்டியுரைக்கப்பட்டுள்ளது. இப்பகுதிக்கு உரையெழுதிய இளம்பூரணர் ‘சொல்லாத மரபினை யுடைவற்றே கெழுமி அவை செய்யாத மரபை ஆண்டுப்படுத்தியவற்றையும் நெஞ்சினைப் போல் அடக்கியும் என்றவாறு; சொல்லா மரபின ஆவன - புள்ளும், மாவும், மரனும், கடலும், கானலும் முதலாயின செய்யா மரபாவன தூதாச் சேறலும், வருதலும், உளபோலக் கூறும் அவைபோல்வன பிறவும் எனக் குறிப்பிட்டுள்ளார். இப்பகுதி ‘காமமிக்க கழிபடர் கிளவி’ இன்னது எனக் கூறும் விளக்கமாக அமைந்துள்ளது.


ஒருவர் கூறுவனவற்றை அறிந்துணர்ந்து, அவற்றிற்கேற்றபடி அஃறிணைப் பொருள்கள் நடக்கும் உணர்வு பெற்றவை அல்லவேனும், அங்ஙனம் அவற்றை முன்னிலைப்படுத்தி உரைப்பது ஒரு மரபாக இலக்கியவாணர்கள் கொண்டிருந்தனர். ‘இலக்கியம் கண்டதற்கேற்ப இலக்கணம்’ இயம்பப்படுதலின், இங்ஙனம் இலக்கியங்களில் பயின்று வரும் பகுதியைக் ‘காமமிக்க கழிபடர் கிளவி’ என இலக்கணத்துக்கு உட்படுத்தி உரைத்தனர் அறிஞர்.

“அன்னச் சேவல் அன்னச் சேவல்
ஆடுகொள் வென்றி அடுபோர் அண்ணல்
நாடு தலை அளிக்கும் ஒண்முகம் போலக்
கோடு கூடு மதியம் முகிழ்நிலா விளங்கும்
மையல் மாலையாங் கையறுபு இனையக்
குமரி அம் பெரும்துறை அயிரை மாந்தி
வடமலை பெயர்குவை ஆயின் இடையது
சோழ நன்னாட்டுப் படினே கோழி
உயர்நிலை மாடத்துக் குறும்பறை அசைஇ
வாயில் விடாது கோயில் புக்கு எம்
பெரும் கோக் கிள்ளி கேட்க இரும் பிசிர்
ஆந்தை அடி உறை எனினே மாண்ட நின்
இன்புறு பேடை அணியத்தன் நண்புறு
நன்கலம் நல்குவன் நினக்கே" (புறம் : 67) இந்தப் பாடல் பிசிராந்தையார் என்ற புலவர் பாடியது. அவர், வானத்தில் பறந்து செல்லும் அன்னச் சேவலைப் (ஆண் அன்னத்தை) பார்த்து அன்னச்சேவலே! அன்னச் சேவலே! என்று அழைக்கிறார். அப்பொழுது மாலை நேரம். எப்படிப்பட்ட மாலை நேரம்? நிலவொளி வீசும். துணையைப் பிரிந்த வாழ்வோரை மயங்கச் செய்யும் மாலை நேரம். அன்னச் சேவலானது தெற்குத் திசையில் உள்ள குமரித் துறையில் உள்ள அயிரை என்ற மீன்களைத் தின்றுவிட்டுச் செல்கின்றது. அப்போது பிசிர் ஆந்தையார் அந்த அன்னச் சேவலிடம் தன் செய்தியைக் கூறுகின்றார்.

தூதுவனாக அன்னச் சேவல் அன்னச் சேவலே! நீ வடதிசையில் உள்ள இமயமலைக்குப் போகின்றாயா? அவ்வாறு போவாய் ஆயின் இமயமலைக்கும் குமரித் துறைக்கும் இடையில் உறையூர் என்ற ஊர் உள்ளது. இந்த ஊர் சோழ நாட்டில் உள்ளது. நீ உறையூருக்குச் சென்றால் அங்கு உள்ள அரண்மனையின் உயர்ந்த மாடத்தில் தங்க வேண்டும்; அங்கு வாயில் காவலர்கள் இருப்பர்.

ஆகையால், அவர்களுக்கு உணர்த்தாது நீ அரண்மனையின் உள்ளே செல்ல வேண்டும்; அங்கு என் மன்னனாகிய கிள்ளி என்பவன் இருப்பான். அவன் கேட்கும்படி பெரிய பிசிர் என்ற ஊரில் உள்ள ஆந்தையின் அடியில் வாழ்வேன் என்று கூறவேண்டும். அவ்வாறு நீ கூறிய உடன் அவன் மனம் நெகிழ்ந்து உன் பெட்டை அன்னம் அணிவதற்கு நல்ல அணிகலன்களாய்த் தருவான் என்று பிசிர் ஆந்தையார் கூறுகின்றார்.

உலக ஒருமைப்பாட்டின் அடித்தளக் காவலர் தூதுவரே. இன்றல்ல வரலாறு காலம் முதலாக அமைந்த நிலையே இது. தூதுவர் இல்லையெனில் ஒருமைப்பாடு ஒழிந்தது என்று பொருள் போரின் முதற்படி தூதுவரை பின்வலித்தல் தானே? இது இன்றைய நடைமுறையில் உலக அரசியல். எனவே, தூதுவர் உலகில் மோதுதல் இன்றிக் காக்கும் காவலராகவே காட்சியளிக்கின்றனர்.

இன்றைய தூதுவர்க்கும் முன்னையத் தூதுவர்க்கும் செயல்பாடுள் ஒற்றுமை வேற்றுமைகள் பல உள. இன்று தூதுவர் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொருவர் நியமனம் பெறுகின்றனர். அந்நாட்டுத் தலைநகரில் அலுவலகம் அமைத்துப் பணித்துணைவர் பலர் சூழப் பணியாற்றுகின்றனர். முன்னைய நிலையோ முற்றிலும் வேறானது உரிய காலையில் தூதுவராய் கோலங் கொண்டு சென்றனர். பொதுத்தன்மை நோக்க, அறிவாற்றல், கூரியமதி, ஆட்சி நிலை தெரிதல், சூட்சித் திறன் மிகுதி இவை தூதுவர்குரிய தன்மைகளாதல் இயல்பு.

தூதுவர் செயலால் நலம் வருதலும் உண்டு. நலிவு உறுதலும் உண்டு. அது அவர்தம் ஆற்றலாலும் அறிவின்மையாலும் முறையே வருவது. தூதுவர் நிலையும் பல்வேறு திறத்தது. கொண்டதைக் கொண்டு கொடுப்பவர் சொன்னதைச் சென்று சொல்பவர், பொருள் தெரிந்து செல்லுமிடத்துச் சூழலும் பிறவும் கண்டு தம் ஆற்றலால் சிறப்பு நல்கிச் செயல்படுவர். என புறநானூற்றின் வாயிலாக அறியமுடிகிறது.

பார்வை நூல்கள்

1. திவாகர நிகண்டு, திவாகரர்.

2. தமிழில் தூது இலக்கியம், முனைவர் வே.இரா.மாதவன்., அன்னம் பதிப்பகம், தஞ்சை-007.

3. இலக்கண விளக்கம், தஞ்சை சரசுவதிமகால்.

4. பிரபந்த பாட்டியல் (மரபியல்-15), கு.சுந்தரமூர்த்தி, கழக வெளியீடு.

5. தொல்காப்பியம்,(பொருளதிகாரம்), நச்சினார்க்கினியர் உரை, கழக வெளியீடு.

6. தொல்காப்பியம் (பொருளதிகாரம்), இளம்பூரணம், கழக வெளியீடு.

7. புறநானூறு, டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர், வெளியீடு,1950.

8. புறநானூறு, ஔவை துரைசாமிப்பிள்ளை, சாரதா பதிப்பகம், சென்னை-14, 2015.

9. திருக்குறள், மணிவாசகர் பதிப்பகம், 2007.

10. இரத்தினச் சுருக்கம், கழக வெளியீடு.


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p226.html


  2022
  2021
  2020
  2019
  2018
  2017

வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்

முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License