இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
இலக்கியம்

பட்டுக்கோட்டையின் கடவுள் கொள்கை

முனைவர். சி. சேதுராமன்


தமிழ் இன்று பன்முகத்தடத்தில் வளர்ந்த நிலையில் ஓங்கி வளர்ந்து வருகிறது. துறைதோறும் புதுப்புது வளர்ச்சிகளும் தமிழன்னையின் மேன்மைக்கு எழில் கூட்டுகின்றன. அவ்வெழில் கூட்டல்களுள் இன்று திரைத்தமிழ் என்பது தனித்துறையாக நிலைபெற்று விட்டது. பொதுவுடைமைப் பூங்காவில் பூத்த செம்மலராக விளங்கிய பட்டுக்கோட்டையார்; திரைத்துறை வழியே பல்வேறு கருத்துக்களை சமுதாயத்திற்கு வழங்கியுள்ளார்.

சமுதாய முன்னேற்றத்தினை விரும்பிய மக்கள் கவிஞர்; தாம் சார்ந்த இயக்கத்திற்கு ஏற்புடையதாகாத கடவுளைப் பற்றி பல பாடல்களைப் பாடியுள்ளார். இப்பாடல்கள் அவர் பொது உடைமையிலிருந்து தடம் மாறிப் போகின்றாரோ என்ற கருத்தையும், வசதி வாய்ப்புகள் வந்ததால் மனம் மாறிவிட்டாரோ? என்ற ஐயங்களையும் பலரது மனதில் எழுப்புகின்றன. பட்டுக்கோட்டையார்; என்றும் தடம் மாறாமல் பொதுஉடைமைவாதியாகவே இருந்து இறந்தார் என்பது நோக்கத்தக்கது.

வாழ்க்கைச்சூழல்

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையின் கவிதைகள் அவர் தம் உள்ளத்துணர்வுகளிலிருந்து பிறந்தவை. ஊற்றெழ வெள்ளம் கரைகளின் கட்டுக்கடங்காது பாய்ந்தோடுதல் இயற்கை. அது போல் பட்டுக்கோட்டையின் பொதுமை எழுச்சியில் மலர்ந்த கவிதைகள் சில கரைகளைக் கடந்தும் சென்றிருக்கின்றன. 1930-ஆம் ஆண்டில் பிறந்த கவிஞர்; 1951-ஆம் ஆண்டில் திரை உலகிற்கு வருகிறார்;. இந்த 21 வயதிற்குள் கூலி ஆளாய் சிறு தொழில் முதலாளியாய் 17 வகைத் தொழில்களைச் செய்திருப்பதாய் அறிஞர் ஜீவா கூறுகிறார். வாழ்க்கையில் பல நிலைகளில் பணிபுரிந்து அவர் பெற்ற பட்டறிவு, அவர் பாடல்களில் படிந்து கிடக்கின்றன.



கவிஞர் பட்டுக்கோட்டை தன்னை ஓர் அரசியல் இயக்கத்தோடு அடைத்துக் கொண்டவர். அவர் சார்ந்திருந்த இயக்கம் கடவுளை எதிர்க்கும் பொது உடைமை இயக்கமாகும். அந்த இயக்கத்திற்கு இறைக் கொள்கையில் ஈடுபாடில்லை. ஆனால் பட்டுக்கோட்டைக்கு இறைக் கொள்கை மீது நாட்டம் இருந்தது. அவர் இறைவனைப் பற்றிப் பாடினார். ஒரு கவிஞனுடைய அல்லது எழுத்தாளனுடைய உள் மனதில் எந்த வகையான எண்ணங்கள் கருக்கொண்டிருக்கின்றனவோ அதுதான் கவிதையாக, கதையாகப் பரிணமிக்கின்றது.

“உள்ளத்து உள்ளது கவிதை இன்ப
ஊற்றெடுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழின் - உண்மை
தெரிந்துரைப்பது கவிதை”

- என்று கவிமணியும்

“உள்ளத்திலே உண்மை ஒளி உண்டாயின்
வாக்கினிலே ஒளி உண்டாகும்”

- என்று பாரதியும் குறிப்பிடுவது நோக்கத்தக்கது.

மக்களின் புற வாழ்விற்குப் பொது உடைமைத் தத்துவம் வேண்டும். அவர்களின் அக வாழ்விற்கு இறைத் தத்துவம் துணை நிற்க வேண்டும் என்ற கொள்கை உடையவராகவே பட்டுக்கோட்டையார் காட்சியளிக்கின்றார்.

திரு.வி.க. மக்களின் வாழ்விற்குப் பொதுஉடைமைத் தத்துவமும், அகவாழ்விற்கு இறைக்கொள்கையும் எவ்வாறு தேவை என்றாரோ அது போலவே பட்டுக்கோட்டையாரின் பாடல்வரிகளும் அமைந்துள்ளன.

‘‘ஆகா என்றெழுந்ததுபார் யுகப் புரட்சி’’

- என்ற பொதுஉடைமையைப் போற்றிய பாரதி எவ்வாறு இறைக்கோட்பாட்டினை உடையவராக விளங்கினாரோ அது போலவே பட்டுக்கோட்டையாரும் பொன்னுலக வாழ்விற்குப் பொதுஉடைமைக் கொள்கையைப் வரவேற்றுப் பாடியுள்ளார்.



இறைவனைப் பற்றிய கவிஞரின் கருத்துக்கள்

பட்டுக்கோட்டையார் 11 படங்களில் 26 இறைப்பாடல்கள் எழுதி இருக்கிறார். அவற்றுள் எட்டுப் பாடல்கள் பெண் தெய்வப் பெயரிலும், பிற ஆண் தெய்வப் பெயரிலும் அமைந்திருக்கின்றன. மனித அறிவிற்கு எல்லை உண்டு, அந்த எல்லைக்கும் அப்பால் இயங்கும் ஆற்றல் உண்டு. அந்த ஆற்றலை உடையவனை இயற்கை அன்னை, இறைவன், ஆண்டவன், சிவன், முருகன் எனப் பல பெயரிட்டு உலகம் அழைக்கின்றது. அந்த எவனோ ஒருவன் இருக்கிறான் என்பதிலே கவிஞருக்கு நம்பிக்கை இருக்கிறது இறைவனாகிய அந்த எவனோ ஒருவனை,

‘‘வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகிஉயிராகிஉண்மையுமாய் இன்மையுமாய்’’ (திருவாசகம்)

- என மாணிக்கவாசகப் பெருமான் வார்த்தைகளில் வடித்துக்காட்ட முயன்ற கவிஞர் அந்த வழியில்,

‘‘உள்ளும் புறமுமாகிய ஒளியாகி ஞான வெளியாகி
நின்ற உமையே!’’ (நான் வளர்த்த தங்கை)

- என்று பாடுகின்றார்;.

‘‘ஒன்றாகிப் பலவாகிப் பலவாகப் பண்ட
ஓளியாகி வெளியாகி உருவுமாகி’’

- என்ற தாயுமானவர் பாடலும், கவிஞரின் பாடலும் ஒத்து வந்துள்ளன. இதனையே இன்னும் தெளிவாக

‘‘விண்ணும் மண்ணும் நீயானாய் வெயிலும் மழையும் நீயானாய்’’ ‘‘விளங்கும் அகில உலகமீது நீயில்லாத இடம் ஏது?’’



- எனப் பாடுகின்றார். காலங்கள் வேறுபட்டிருந்தாலும், காட்சிகள் வேறுபட்டிருந்தாலும் இங்கு அடிப்படைச் சிந்தனை ஒன்றாக அமைந்திருப்பதைக் காணலாம்.

நன்மை கருதியே இறைவனை இவ்வுலகத்தவர் தொழுவர். ஆனால் கவிஞரோ, இந்த உலகில் இறையருள் பரவ வேண்டும், மக்களிடையே காணும் பேதங்கள் மறைய வேண்டும் என்கிறார். இராமலிங்கர் கேட்பது போன்றே,

‘‘சோதி இறையருள் ஆறு பாயவே
பேதம் மறைந்து உய்யவே’’ (கற்புக்கரசி)

- என்று கவிஞர் இறைவனிடம் வேண்டுகிறார்.

பொருளுக்காகவும் திரைக்காட்சிக்காகவும் பட்டுக்கோட்டையார், இறைப்பாடல்கள் பாடினார், கதை ஆசிரியர், படம் எடுப்பவர்; ஆகியோர் விரும்பும் முறையிலேயே இறைவனைப் பற்றி பாடல்கள் எழுதினார் என்பர். பேராசிரியர் சாலமன் பாப்பையாவும் பலரும் பேசியும் எழுதியும் வருகின்றனர். இவர்களின் கூற்று சற்றும் ஒவ்வாத வகையில் உள்ளது எனலாம். இதனை,

‘‘சந்திரனைக் கொஞ்சம் கிள்ளி எடுத்தே
சாதிப் பவளத்தில் சேர்த்து வைத்தே
உன்றனைச் செய்தே உலகினுக்கீந்த
அந்த இறைவனின் அன்பினுக்கே
என் நன்றியடடா’’

- என்ற அடிகளில் காணலாம். இவ்வரிகள் திரைப்பாடலன்று. பிறர் விருப்பிற்காகவும், காசுக்காகவும் எழுதப்பட்டவை அல்ல. தன்னை நோக்கி ஓடி வந்த குழந்தையின்பால் ஈடுபட்டுப் பாடிய வரிகள். அவ்வழகிய குழந்தையைத் தந்தது ஒப்பிலியாகிய இறைவனே என்பது கவிஞரின் உட்கிடக்கை. உட்கிடக்கையே உண்மைக் கவிதை என்பது இங்கு நோக்கத்தக்கது.



சமயக் கண்ணோட்டம்

பட்டுக்கோட்டையார் இறைக் கொள்கையினை ஏற்றமுற எடுத்தோதுகின்ற நிலையிலேயே சமயத்தினையும், ஆழ்ந்து நோக்குகின்றார். அவர் சமயத்துறையில், சமயநிலையங்களில் புதுந்துள்ள கேடுகளைச் சாடுகின்றார்.

‘‘பக்த ஜனங்கள் கவனமெல்லாம்
தினமும் கிடைக்கும் சுண்டலிலே
பசியும் சுண்டல் ருசியும் போனால்
பக்தியில்லே பஜனையில்லே” (338)

- என்று பாடி உண்மையான ஆன்மீகத் தொடர்பான பக்தி மக்கள் உள்ளத்தில் எழ வேண்டும், அதுவே மேன்மை மிக்கது என வலியுறுத்துகின்றார். கோயில்களில் பொருளாட்சியின் ஆதிக்கம் செலுத்தும் அவல நிலையையும் அவர் சாடுகிறார்.

‘‘காசுதந்தால் உன்னைக்
காணும்வழி காட்டுவதாய்
கதவுபோட்டு பூட்டி வைத்துக்
கட்டாயம் பண்ணுவதைப் பார்த்தாயா?” (339)

என்று கோயிற் கதவுகள் பூட்டப்பட்டு வழிபாட்டுரிமை மறுக்கப்படும் அநீதியைக் கண்டிக்கிறார். இதிலிருந்து உண்மையான, தூய்மையான நிலை இருந்தால்தான் சமயமானது மக்களின் அகவாழ்விற்குப் பயன்படும் வண்ணம் அமையும் என்பதை விளக்குகிறார்.

பட்டுக்கோட்டையாரின் உள்ளுணர்வாலேயே திரைப்படங்களில் இறைப் பாடல்கள் மலர்ந்தன. பிறருக்காகவோ, பணத்திற்காகவோ அவை எழுதப்படவில்லை. புறவாழ்வுக்குப் பொதுஉடைமையும், அகவாழ்வுக்கு இறைமையும் துணைபுரிவன என்னும் திரு.வி.க.வின் கொள்கையினைப் போலவே பட்டுக்கோட்டையின் இறைக் கொள்கையும் அமைந்துள்ளது.

பாரதி எவ்வாறு ஆன்மீகவாதியாக இருந்து பொது உடைமையினை வரவேற்றுப் பாடினாரோ அது போன்றே பட்டுக்கோட்டையும் பொதுமை நெறியிலிருந்து கொண்டே இறைநெறியினையும் பாடியுள்ளார். இறைவனை ஏற்றுப் பட்டுக்கோட்டையார்; இறைவனின் பெயரால் மனிதனை இழிவுபடுத்துதல், வாழ்வைச் சுரண்டுதல், அடிமைப்படுத்துதல் ஆகிய நிகழ்வுகள் நிகழக்கூடாது என்றும் தெளிவுறுத்துகிறார். மனித நலனை உள்ளடக்கிய மனித வாழ்வை மேம்படுத்துகிற, இறை வழிபாடே உன்னதமானது என்று கூறி இறைவனின் பெயரால் மலிந்து கிடக்கும் சமயச் சடங்குகளையும் மூடப்பழக்கங்களையும் சாடுகின்றார்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p23.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License