இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

திருப்பாவை காட்டும் கண்ணன் வரலாறு

முனைவர் அரங்க. மணிமாறன்
முதுகலைத் தமிழாசிரியர்,
அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி, செங்கம் - 606 701


முன்னுரை

தமிழ் மொழியை “பக்தியின் மொழி” என்றார் தனிநாயக அடிகளார். ஆறாம் நுாற்றாண்டு தொடங்கி ஒன்பதாம் நூற்றாண்டு வரை பக்தி இலக்கியங்கள் பக்தியை தமிழோடு வளர்த்தன. “சங்க காலத்தையும் நீதிநுால் காலத்தையும் அடுத்து தெளிவாகக் காணப்படுவது பக்தி இலகியக் காலம் ஆகும். தமிழ்நாட்டில் சைவ சமயப் பெரியவா்களான நாயன்மார்களும், ஆழ்வார்களும் தோன்றிப் பக்திப் பாடல்கள் பாடி ஊர் ஊராகச் சென்று தம்தம் சமயங்களைப் பரப்பி வந்தார்கள்” (1) என்கிறார் தமிழறிஞர் மு. வ.

பக்தி இயக்கத்தின் முன்னோடியாகக் காரைக்காலம்மையார் விளங்குகிறார். சைவமும் வைணவமும் முன்னோடி சமயங்களாக வளா்ந்தன. சைவத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களும், வைணவத்தில் பன்னிரு ஆழ்வார்களும் தோன்றி இறைச்சிந்தனையை வளர்த்தனா். அவா்களுள் ஒரே ஒரு பெண் ஆழ்வாராகிய ஆண்டாள் தமது திருப்பாவையில் திருமாலாகிய கண்ணனின் வரலாற்றைக் கூறியுள்ளமை பற்றி இக்கட்டுரை வழி அறியலாம்.

ஆண்டாள்

திருவில்லிபுத்துாரில் வாழ்ந்தவர் பெரியாழ்வார். அத்தலத்தில் உள்ள இறைவன் ஸ்ரீவடபத்ரசாயி ஆவார். பெரியாழ்வார், அக்கோயிலில் நந்தவனம் அமைத்து, இறைவனுக்குப் பிடித்தமான திருத்துழாய் முதலிய மலா்களை மாலையாகத் தொடுத்து சூட்டி வந்தார். கண்ணனைத் தம் பாடல்களில் குழந்தையாக்கித் தாலாட்டு பாடினார். அப்போது, நந்தவனத்தில் துளசிச் செடியின் அடியில் கண்டெடுத்து வளா்க்கப்பட்ட மகள் ஆண்டாள். அம்மகளுக்கு கோதை எனப் பெயர் சூட்டி வளா்த்து வந்தார்.

“கலியுகத்தில் மண் மகளின் அமிசமாய்ப் பெண் குழந்தை பிறந்தது. அக்குழவியைத் தனது மகளாகப் பாவித்து கோதை எனப் பெயரிட்டு வளர்க்கலானார்” (2) என்கிறார் திருமதி. பிரேமா விநாயகம்.

இதனை பாவை;

“… … … … … … … … … … … … … … … … … அணிப்புதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டா்பிரான் கோதை” (3)

என்று வெளிப்படுத்துகிறது.

புவி மகளின் அம்சமாகக் பிறந்தவள் ஆண்டாள். குழவிப் பருவம் முதல் தன் தந்தையாகிய பெரியாழ்வார், கண்ணனின் பெருமைகளையேப் பேசி வளர்த்ததால் கண்ணன் மீது தீராத காதல் கொண்டாள் ஆண்டாள். இறைவனுக்குத் தான் தொடுத்த மலா்மாலைகளை முதலில் தான் சூடி அழகு பார்த்த பின் இறைவனுக்கு வழங்கினாள்.


ஒரு நாள் இறைவனுக்கான மாலையில் பெண்ணின் மயிரிழை இருப்பதைக் கண்டு தூய்மை கெட்டதாக மனம் வருந்தினார் பெரியாழ்வார். ஆனால் இறைவன் ஆண்டாள் சூடித்தந்த மாலைகளே, தமக்கு நனி விருப்பம் என்றார். அதனால் ஆண்டாளும், “சூடி தந்த சுடா்க்கொடி” எனப் பெயர் பெற்றாள்.

பருவம் அடைந்த பின்னரும் “மானிடர்க்கென்று பேச்சுபடின் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே மணிவண்ணனையே மணப்பேன்” என்று கொள்கையில் நின்றாள்.

“ஊனிடை ஆழிசங்கு உத்தமா்க்கென்று உன்னித்து எழுந்த என் தடமுலைகள்” என்று கண்ணனின் மீது ஆறாக்காதல் கொண்டாள். மானிடப் பெண் எவ்வாறு இறைவனை மணக்க முடியும்? இக்காதல் எவ்வாறு ஈடேறும் என விசனம் கொண்டார்.

பாண்டிய நாட்டிறையோனாகிய வல்லபதேவன் கனவிலும் தோன்றி “நீ பலருடன் ஸ்ரீ வில்லிப்புத்தூருக்குச் சென்று பட்டநாதருடைய மகளாம் கோதையை முத்துப் பல்லக்கில் ஏற்றி நம் திருவரங்கத்திற்கு அழைத்து வருவாயாக” (4) என்று அருளியதாக மேற்கோள் காட்டுகிறார் திருமதி பிரேமா விநாயகம்.

மணக்கோலத்துடன் ஆண்டாளை அழைத்து வருக என அவரும் ஆண்டாளை அவ்வாறே அழைத்துச் சென்றார். அம்மணக்கோலத்துடன் இறைவனோடு கலந்ததாக இலக்கியங்கள் காட்டி நிற்கின்றன. “நாச்சியார்” என்றும் பாவை பாடியதால் “பாவைப் பாடிய பாவை” எனவும் சிறப்பிக்கப்பட்டாள். அச்சிறப்புடை ஆண்டாள் இயற்றிய தெய்வப் பனுவல்களாவன முப்பது பாடல்களாலான “திருப்பாவையும்”, 140 பாடல்களாலான “நாச்சியார் திருமொழியும்” தமிழின் பெருமைக்கு அணிவிளக்காய் நின்று புகழ் பரப்புகின்றன. ஆண்டாளின் வரலாற்றைக் கிருஷ்ணதேவராயா் “ஆமுக்த மால்யதா” என்ற காப்பியமாகத் தெலுங்கில் பாடியுள்ளார்.


பாவை நோன்பு

“மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்” என்கிறார் கண்ணன் கீதையில். சைவமாயினும் வைணவமாயினும் மார்கழி மாதம் பக்திக்குரிய புனித மாதமாக விளங்குகிறது. அத்தகு மார்கழி மாதத்தில் பெண்கள் அதிகாலையில் எழுந்து, நீா் நிலைகளுக்குச் சென்று புனித நீராடி, ஆற்று மணலில் மணலாலான பாவை செய்து அப்பாவையைக் கண்ணனாக உருவகித்து வணங்கினா். அக்கண்ணனது பெருமைகளைக் கூட்டாகச் சோ்ந்து பாடி வழிபட்டனா்.

தனக்குப் பிடித்த கணவன் வாய்ப்பதற்கான நோன்பாக இதை நோற்றனா்.

பாகவதத்தில் இதை காத்யாயினி விரதம் என்றனா். கிருஷ்ணாவதாரத்தில் ஆயா்பாடி கோபிகையா் கண்ணனை அடைய பாவை நோன்பு மேற்கொண்டனா். சங்க இலக்கியக் காலத்திலும் பரிபாடலில் தைநீராடல் அல்லது அம்பாஆடல் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருப்பாவை

கண்ணனைக் கணவனாக அடைய நினைத்த ஆண்டாள் ஸ்ரீவில்லிபுத்துாரை ஆயா்பாடியாகவும், தன்னைக் கோபிகையாகவும் பாவித்து நோன்பு நோற்றாள். மாதங்களில் புனிதமான மாதமாகிய மார்கழியில் அதிகாலையில் துயில் எழுந்து, தன் தோழியா்களையும் அழைத்துக் கொண்டு நீராடி, கண்ணனைப் பாடி அருள் பெற அழைக்கிறாள்.

திருப்பாவையில் மார்கழி மாத முப்பது நாட்களும் பாடக்கூடிய முப்பது பாடல்கள் உள்ளன.

அதிகாலையில் துயிலெழுதல், நீராடி பாவை செய்து விளக்கேற்றி வழிபடுதல், நெய், பால் முதலியவற்றைத் தவிர்த்தல், கண்களுக்கு மையிடாமை, மலா்சூடி கூந்தல் முடியாமை, இறைவனின் பெருமைகளைத் தவிர வேறெந்த புறம்பேசாமை ஆகிய நோன்பு முறைமைகளை மேற்கொண்டனா்.

இந்நோன்பினால் விரும்பிய கணவன் கிடைப்பான். நாடெல்லாம் மழை பொழியும், வளம் செழிக்கும். அது மட்டுமன்றி பிள்ளைப்பேறு, செல்வவளம் என அனைத்து நலன்களையும் இந்நோன்பு அளிக்கும் என்பது நம்பிக்கை கொள்கிறாள்.

“ஐயைந்தும் ஐந்தும் அறியா மானிடரை வையம் சுமப்பது வம்பு” என்னும் வைணவ கருத்து, திருப்பாவையின் ஏற்றத்தினை எடுத்துரைக்கும்.


கண்ணன் வரலாறு

இறைவனாகிய திருமால் இப்புவியில் பத்து தோற்றங்களை எடுத்தார். அதில் ஒன்று கிருஷ்ணனாகிய கண்ணன் என்பதாம். கம்சன் என்பவனை வதம் செய்யவே இத்தோற்றம் எடுத்தார்.

திருப்பாவையில் கண்ணன் யது குலத்தில் பிறந்து, யாதவ குலத்தில் வளா்ந்த விதம் கூறப்படுகிறது. கம்சனின் சுயநலத்தால் வசுதேவா் - தேவகி வயிற்றில் பிறந்து நந்தகோபா் - யசோதையிடம் வளா்தல், குழந்தையான கண்ணனைக் கொல்ல யானை, குதிரை, பறவை, சக்கரம் வடிவிலான அரக்கா்களையும், பூதகி முதலிய அரக்கியரையும் ஏவிக் கொல்லத் திட்டமிடுதலும், கண்ணன் மல்லா்களை வென்றமை, பாற்கடலில் துயின்றமை, கோவா்த்தன மலையை எடுத்து, உலகைப் பெருமழையினின்று காத்தமை, கண்ணனின் சங்கு- சக்கரம் ஆகியவற்றின் பெருமைகள், இராவணனை அழித்தமை, மாவலியிடம் மூவுலகை பெற்றமை ஆகியவற்றைக் கண்ணனின் வரலாறாக அவன் பெருமை பேசும் முகமாக கூறப்பட்டுள்ளது.

கஞ்சன் வயிற்று நெருப்பு

கம்சனின் தங்கை தேவகி. வசுதேவருக்கு மணம் செய்து வைக்கிறான். சோதிடா்கள் உன் தங்கையின் வயிற்றில் பிறக்கும் எட்டாவது குழந்தையால் உனக்கு மரணம் ஏற்படும் எனக் கூறியதால் திருமணம் ஆன வசுதேவரையும், தேவகியையும் சிறை வைக்கிறான். பிறக்கும் ஒவ்வொரு குழந்தையினையும், ஈவு இரக்கமின்றி கொல்கிறான். எட்டாவது குழந்தை பிறந்த போது, அதனையும் கொன்று விடுவான் எனக் கருதி, அசரீரி கூறியதால் ஆயா்பாடியில் நந்தகோபா் யசோதையிடம் வளா்வதற்காகப் பிறந்த அன்றே பெருமழை இரவிலும் கூடையில் சுமந்து ஆதிசேசன் குடையாக காக்க வந்து சோ்கிறான்.

ஆயா்கள் மாசற்ற தூய வாழ்வினா். இதனை, சிலப்பதிகாரத்திலும் மாதரி என்ற இடைக்குல மடந்தையிடம் கண்ணகியை அடைக்கலமாக்கும் போது,

“ஆக்களை காத்து ஆப்பயன் அளிக்கும் கோவலா்
வாழ்க்கையில் கொடும்பாடில்லை” (5)

என்ற வரிகளில் இளங்கோவடிகள் உணா்த்துகிறார்.

“ஆயா் குலத்தினில் தோன்றிய அணிவிளக்கை” என்றும்

“சீா்மல்கும் ஆய்பாடி“ (6) என்றும்

குற்றமொன்றிலாத கோவலர்தம் குலக்கொடியே என்றும்

கண்ணனை ஆயா்குலத் தோன்றலாக கூறுகிறார்.

“ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய்
ஒளித்து வளர தான் தீங்கு நினைந்த கஞ்சன் வயிற்றில்
நெருப்பென நின்ற நெடுமாலே” (7)

என்ற பாவையில் இதனை ஆண்டாள் வெளிப்படுத்துகிறாள்.

கம்சன் ஏவிய அரக்கா்கள்

தன்னைக் கொல்வதற்காகவே அவதாரம் எடுத்த கண்ணனைப் பிறப்பிலேயே அழிக்கக் கருதி, அது கூடாமையால் நந்தகோபன் வீட்டில் வளரும் குழந்தைக் கண்ணனை கொல்லப் பல்வேறு அரக்கா்களை மாயமாகவும், வஞ்சமாகவும் அனுப்புகிறான் கம்சன்.

குவலாயாபீடம் என்னும் யானையை அனுப்புகிறான். வஞ்சமாக வந்த அந்த யானையை மதம் முற்றும் அழியும்படி கொன்றான் என்பதை,

“வல்லானை கொன்றானை மாற்றாரை மாறழிக்க வல்லானை” (8)


என்ற பாவை வரியில் அறிய முடிகிறது. அப்படியும் கொல்ல முடியாத கம்சன் “கேசி“ எனும் அரக்கனை ஏவுகிறான். குதிரை வடிவில் வந்த அவ்வரக்கனை வாயினைப் பிளந்து அழிக்கிறான் கண்ணன். தன்னை எதிர்த்த மல்லா்களையும் அழித்தான். இதனை;

“மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்” (9)

என்ற வரிகளில் வெளிப்படுத்துகிறாள் ஆண்டாள் நாச்சியார்.

பறவை வடிவம் கொண்டு வந்த அரக்கனாகிய பகாசுரனை வாய்பிளந்து அழித்ததனை,

“புள்ளின் வாய் கீண்டானை” (பாவை.13) என்ற பாவை நமக்கு தேற்றுகிறது.

மேலும் சக்கர வடிவில் வந்த சகடாசூரனை காலாலே உதைத்தழித்தான் கண்ணன்.

“கள்ளச்சகடம் கலக்கழியக் காலோச்சி”
“பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ்போற்றி!” (பாவைகள்.6-24)

என்று பாவை காட்டி நிற்கும்.

கன்றாக உருவெடுத்து வந்த வத்ராசுனை எறிதடியாகக் கொண்டு விளாவின் வடிவாக நின்ற அசுரன் மீது எறிந்தான் என்பதை,

“கன்று குணிலா எறிந்தாய்! கழல்போற்றி” (பாவை.24)

இதோடு இராமவதாரத்தில் தன்னை எதிர்த்த இராவணனை அழித்தமையை,

“சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கினியானை”

“... ... ... ... ... ... பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானை”

“சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி” (பாவை.15-24)

என்று விளங்கச் செய்கிறது. மேலும், கும்பகர்ணனை,

“... ... ... ... ... ... பண்டொரு நாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தந்தானோ?” (10)

என்று முன் தோற்ற வரலாறும் குறிப்பிடப்படுகிறது.

அரக்கா்களை ஏவிக் கொல்ல முடியாத கம்சன், தாயின் வடிவில் ஒரு பேயை அனுப்புகிறான் அவள்தான் பூதகி.

உலகினில் மிகவும் புனிதமானதும் கலப்படமில்லாதததும் மாசுமறுவற்றதுமாகிய தாயமிர்தப் பாலை நஞ்சாக்கித் தாய்மையை நச்சாக்கிக் கொடுக்க பூதகி எனும் அரக்கியை அனுப்புகிறான் கம்சன். மாயங்களைப் புரிந்து மன மாயைகளைப் பொசுக்க வந்த பரந்தாமன் இம்மாயையையும் உணா்ந்து விடுகிறான். பூதகியின் முலையில் தன் பிஞ்சு வாயை வைத்து நஞ்சினைக் குடிப்பதாய் அவள் உயிரையே உறிஞ்சி முடித்தான்.

“பேய்முலை நஞ்சுண்டு” (பாவை.6) என்று இதனை பாவை காட்டி நிற்கும்.

மூவடியில் உலகளந்தமை

மாவலி சக்ரவா்த்தி உலகம் முழுமையும் ஒரு குடைக்கீழ் கொண்டு ஆண்டு வந்தான். ஆணவ மிகுதியினால் தனக்கு நிகா் யாரும் இல்லையென அகந்தைக் கொண்டான். அவன் ஆணவத்தை நீக்க நினைத்த இறைவன், மிகச்சிறிய வாமனராக அவதாரம் கொண்டு அவனிடம் யாசகம் வேண்டினார்.

“இவ்வுலகம் முழுமை எனதே வேண்டியதைக் கேள்” என்று ஆணவப்பேச்சு பேசினான்.

“மூவடி மண் வேண்டும்!” என வரம் வேண்டினார் இறைவன்.

மூவடி மண்தானே என்று எடுத்துக் கொள் எனக் கூற, தாம் வேண்டும் வரத்தை உள்ளங்கை நீா் வார்த்துத் தாரை வார்த்துத் தரவேண்டும் என்று வேண்டினார். அவ்வாறு நீா் வார்த்துத் தந்த அளவில் வானளாவ நீண்ட திருவிக்கிரமனாக வடிவம் கொண்டார்.

ஒரு அடியால் விண்ணையும், மறு அடியால் மண்ணையும் அளந்து முடித்தார். மூன்றாம் அடிக்கு இடம் எங்கே எனக் கேட்டு நிற்க, வந்தவன் இறைவன், தன் ஆணவத்தை அடக்கி முக்தியளிக்க வந்துள்ளார் என்பதை உணர்ந்து;

“ஐயனே! ஈரேழு உலகமும் எனக்குச் சொந்தம் என்ற அகந்தைக் கொண்டழிந்தேன். இன்று என் அகந்தைக் கிழங்கை அகழ்ந்தீர். மூன்றாமடியை என் தலைமீது வைத்து அருளுக”

என அவ்வாறே மாவலியின் தலைமீது தன் திருப்பாதத்தை வைத்து மாவலிக்கு முக்தியருளினார்.

இதனை ஆண்டாள் தனது திருப்பாவையில்;

“ஓங்கி உலளந்த உத்தமன் போ்பாடி”

என்றும்

“அன்றிவ் வுலகம் அளந்தாய்! அடிபோற்றி!” (11)

என்றும் தனது திருப்பாவைகளில் வெளிக்காட்டுகிறாள்.


குன்று குடை எடுத்தவன்

தேவாதிபதியாகிய இந்திரன் மழைக்கடவுளாவான். உலகிலுள்ளோர் தன்னை வணங்காமல் கண்ணணை வணங்குவதைக் கண்டு வெகுண்ட இந்திரன் உலகம் அழியும் படி பெருமழையைப் பொழிந்தான். உலக உயிர்கள் துன்புறுவதைக்கண்டு கண்ணன் கோவா்த்தன மலையைக் குடையாகப் பிடித்து அப்பெருமழையினின்று காத்தான். இதனை;

“குன்று குடையா எடுத்தாய்! குணம்போற்றி!” (12)

என்று வெளிக்காட்டுகிறாள் ஆண்டாள்.

கண்ணனின் உறவினர்கள்

கண்ணன் வசுதேவா் - தேவகி மகனாய் பிறந்து, நந்தகோபன் - யசோதை மகனாய் வளர்ந்தான். கம்சன் தாய்மாமன். பலராமனின் தம்பி. நப்பின்னை தேவியின் மணாளன்.

“மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
துாயபெருநீா் யமுனைத் துறைவனை
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை” (13)

என்று யமுனை நதி தீரத்தில் உள்ள வடமதுரையில் வசுதேவரின் மகனாகத் தோன்றி, தேவகியின் வயிற்றை விளங்கச் செய்தவன் என்றும்,

“கூா்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்” (பாவை.1)

நந்தகோபன் யசோதையும் மகனாக வளர்ந்தமையும், பெண்கள் துயிலெழுப்பும்போது,

“... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... பலதேவா
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்” (14)

எனப் பலராமனின் தம்பி என்பதையும்,

“கந்தம் கமழும் குழலி!
.................... உன் மைத்துனன் போ்பாடச்
செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்”
“கொத்தலா் பூங்குழல் நப்பின்னை”

“செப்பன்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய்” (15)

என்ற பாவைகளில் நப்பின்னையின் கணவன் என்பதையும் ஆண்டாள் வெளிக்காட்டுகிறாள்.

கண்ணன் கருமேனியுடையவன், சங்கு சக்கரம் தரித்தவன், பாற்கடலில் துயின்றவன், சார்ங்க வில்லையுடைவன் என்பன போன்ற பல வரலாறுகளும் பாவைப் பாடலில் விரவிக் காணப்படுவதை அறியமுடிகிறது.


முடிவுரை

மனித நிலை தெய்வ நிலையடைவதைப் பாவை பாடல் உணா்த்துகிறது. ஆன்மா இறைவனிடம் சரணாகதியடைவதை ஆண்டாள் வரலாறு உணா்த்தும். பரமாத்மா திருமால் கண்ணனாக உருகொண்டு மனித வாழ்வியலை வாழ்ந்து மனித குலம் உய்யும்படி செய்தான். கம்சனின் அகந்தை அழித்தான். பாஞ்சாலி மானம் காத்தான். பாரதப் போரை அறத்தின் பக்கம் நின்று தர்மமே வெல்லும் என்பதை நிரூபித்தான். பகவத்கீதை என்னும் வாழ்வியல் தத்துவப் பொக்கிஷத்தை மனித குலத்திற்குத் தந்துச் சென்றான். திருப்பாவை பாகவதத்தின் பின்னிலையாய் நின்று கண்ணன் பெருமை பேசுவதை அறிந்துய்கிறோம்.

அடிக்குறிப்புகள்

1. தமிழ் இலக்கிய வரலாறு, ப.94, வரதராசன். மு, சாகித்திய அக்காதெமி, இரவீந்திர பவன், புதுதில்லி, பன்னிரண்டாம் பதிப்பு 1999.

2. ஆழ்வார்கள் அருளிய திவ்ய பிரபந்தப் பிரவாகம் ப.80, பிரேமா விநாயகம், ஸ்ருதி பதிப்பகம், சைதாப்பேட்டை, சென்னை -15, ஜூன் 2007.

3. திருப்பாவை (திருவெம்பாவை) ப.115, பி.ஸ்ரீ, வாசன் பதிப்பகம் ஆனந்த் சரோவா் அபார்ட்மெண்ட் 117 கச்சேரி ரோடு மயிலாப்பூர் சென்னை-60004. ஐந்தாம் பதிப்பு 2009.

4. ஆழ்வார்கள் அருளிய திவ்ய பிரபந்தப் பிரவாகம் ப.84, பிரேமா விநாயகம், ஸ்ருதி பதிப்பகம், சைதாப்பேட்டை, சென்னை -15, ஜூன் 2007.

5. சிலப்பதிகாரம் அடைக்கல காதை இணைய பக்கம் (சிலப்பதிகாரம்.காம்), மா.பொ.சி பதிப்பகம், மா.பொ.சி அறக்கட்டளை (நாள் 15.12.2018 10.41 மு.ப)

6. திருப்பாவை பாடல்.30 (சங்கத் தமிழ் மாலை முப்பது)- ப.9, ஸ்ரீ.எஸ் கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார் -ஆசிரியர் ஸ்ரீ வைஷ்ணவ ஸுதர்சனம், அநுராகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை-600017. முதல்பதிப்பு 2003.

7. திருப்பாவை பாடல்.25 (திருவெம்பாவை) ப.100, பி.ஸ்ரீ, வாசன் பதிப்பகம், ஆனந்த் சரோவா் அபார்ட்மெண்ட் ,117 கச்சேரி ரோடு, மயிலாப்பூர், சென்னை-60004. ஐந்தாம் பதிப்பு 2009.

8. திருப்பாவை பாடல்.15 (சங்கத் தமிழ் மாலை முப்பது)- ப.64, ஸ்ரீ.எஸ் கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார் - ஆசிரியர் ஸ்ரீ வைஷ்ணவ ஸுதர்சனம், அநுராகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600017. முதல்பதிப்பு-2003.

9. திருப்பாவை பாடல்.8 (திருவெம்பாவை) ப.42, பி.ஸ்ரீ, வாசன் பதிப்பகம், ஆனந்த் சரோவா் அபார்ட்மெண்ட், 117, கச்சேரி ரோடு, மயிலாப்பூர், சென்னை-60004. ஐந்தாம் பதிப்பு 2009.

10. மேலது நூல், திருப்பாவை பாடல்.10 ப.48.

11. மேலது நூல், திருப்பாவை பாடல்கள் 3-24 பக்..21- 96.

12. மேலது நூல், திருப்பாவை பாடல்.24 ப.96.

13. திருப்பாவை பாடல்.5 (சங்கத் தமிழ் மாலை முப்பது)- ப.19, ஸ்ரீ.எஸ் கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார் -ஆசிரியர் ஸ்ரீ வைஷ்ணவ ஸுதர்சனம், அநுராகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை-600017. முதல்பதிப்பு-2003.

14. திருப்பாவை பாடல்.17 (திருவெம்பாவை) ப.42, பி.ஸ்ரீ, வாசன் பதிப்பகம், ஆனந்த் சரோவா் அபார்ட்மெண்ட், 117, கச்சேரி ரோடு, மயிலாப்பூர், சென்னை-60004. ஐந்தாம் பதிப்பு 2009.

15. மேலது நூல், திருப்பாவை பாடல்கள்.18-19-20 பக்.74 79 82.

துணைநின்ற நுால்கள்

1. திருப்பாவை” (சங்கத் தமிழ் மாலை முப்பது), ஸ்ரீ.எஸ் கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார் - ஆசிரியர் ஸ்ரீ வைஷ்ணவ ஸுதர்சனம், அநுராகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை-600017. முதல்பதிப்பு-2003.

2. ஆழ்வார் அருளிய திவ்ய பிரபந்தப் பிரவாகம், பிரேமா விநாயகம், ஸ்ருதி பதிப்பகம், சைதாப்பேட்டை, சென்னை -15. ஜூன் 2007.

3. திருப்பாவை திருவெம்பாவை, பி.ஸ்ரீ, வாசன் பதிப்பகம், ஆனந்த் சரோவா் அபார்ட்மெண்ட், 117 கச்சேரி ரோடு, மயிலாப்பூர், சென்னை-60004. ஐந்தாம் பதிப்பு 2009.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p236.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License