Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினேழாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...

Content
உள்ளடக்கம்

சமையல்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

ஐந்திணைகளில் இசைக்கருவிகளும் வாழ்வியலும்

முனைவர் மா. பத்மபிரியா
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
தி ஸ்டாண்டர்டு ஃபயர் ஒர்க்ஸ் இராஜரத்னம் மகளிர் கல்லூரி, சிவகாசி.


ஓரறிவுயிர்கள் முதல் ஆறறிவு உயிர்கள் வரை இசைக்கு உருகாதோர் மண்ணுலகில் இல்லை.

இசை்ககருவிகளை எங்ஙனம் கையாள வேண்டும் என்ற நெறிமுறையும் அதனைப் பாதுகாக்கக்கூடிய நுட்பங்களும் தெரிந்தவர்களாக பழந்தமிழர்கள் இருந்துள்ளனர்.

கலைஞர்களைப்போற்றும் மரபு பழந்தமிழக மரபாக இருந்துள்ளது. இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழின் வளர்ச்சிக்கு ஐந்திணை வாழ் மக்களும் பங்காற்றியுள்ளனர். இசைத்தமிழ் என்னும் தனிப்பிரிவு தனித்து இயங்குவதற்குக் காரணமாக இயற்றமிழும் நாடகத்தமிழும் இணைபிரியாது இருந்துள்ளது.

இன்பம், துன்பம் என்ற மனநிலைகளில் மட்டுமின்றி வாழ்வியலின் அங்கமாகவே இசையை வளர்த்துப் போற்றியுள்ளனர் என்பதற்கு சங்க இலக்கியங்களே ஆதாரங்கள். பண்டைத்தமிழர் பயன்படுத்திய இசைக்கருவிகளே இன்று வெவ்வேறு வடிவங்களோடும், பெயர்களோடும் நம் பயன்பாட்டில் உள்ளன.

பண்டைத் தமிழர் பயன்படுத்திய இசைக்கருவிகள்

பழந்தமிழகத்தில்

1. தோற்கருவி

2. நரம்புக்கருவி

3. துளைக்கருவி

4. கஞ்சக்கருவி

என்ற நான்கு வகை பாகுபாட்டுடனான இசைக்கருவிகள் பயன்பாட்டில் இருந்துள்ளன. இக்கருவிகளுள் எது முதலில் தோன்றியது என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன.


வேட்டைச் சமூகத்தின் வெளிப்பாடு சுட்டும் தோற்கருவி

ஆதித்தமிழன் வேட்டையாடப்பட்ட விலங்கின் தோலைக் கல்லில் போர்த்தி இருகக்கட்டி ஒலி எழுப்பி மகிழ்ந்ததாக தோற்கருவியின் தோற்ற வரலாற்றை உரைக்கின்றனர். வேட்டைச்சமூக வரலாற்றோடு பறையின் தோற்றமும் இனங்காணப்படுகின்றது. மலைபடுகடாம் பதிவு செய்துள்ள செய்தியானது மான் தோலில் செய்யப்பட்ட சிறுபறை குறித்ததாகும். காலையில் கள் அருந்திய குறவன் மான் தோலில் செய்யப்பட்ட பறையினை இசைத்து தம்மினத்தாருடன் குரவை கூத்து ஆடியுள்ளான் என்பது புலப்படுகின்றது.

“நறவுநாட்செய்தகுறவர்தம்பெண்டிரொடு
மான்தோற்சிறுபறைகறங்கக்கல்லென,
வான்றோய்மீமிசைஅயருங்குரவை” (1)

மலைநாட்டுக் குறவர்கள் பறையினை தமது தினைப்புனத்தை அழிக்க வந்த விலங்குகளை விரட்டி அச்சுறுத்தவும் பயன்படுத்தியுள்ளனர்.

“சேம்பும்மஞ்சளும்ஓம்பினர்காப்போர்
பன்றிப்பறையும்:… … … … … ” (2)


மலைபடுகடாம் நூலில் இயற்கையான ஓசைகளின் பதிவுகள் அம்மக்களின் வாழ்வியல் நிகழ்வோடு தொகுத்துரைக்கப்பட்டுள்ளன. நன்னனது மலை சார்ந்த பகுதியில் எழும் இயல்பான ஓசையை கடாம் என்றுச் சுட்டி

‘மலைபடுகடாஅம்மாதிரத்துஇயம்ப’

என்று சிறப்பித்துள்ளார் ஆசிரியர் பெருங்கௌசிகனார். இதன் காரணம் இயற்கையிலிருந்து பிறக்கும் இசையின் உயர்வு சுட்டவே எனலாம். சங்ககால மக்களின் வாழ்வியலில் அதிகம் பயன்படுத்தப்பட்ட தோற்கருவிகளுள் குறிப்பிடத்தக்கது பறை, முரசு, முழவு ஆகியன ஆகும். குரவை, துணங்கை, வெறியாட்டு ஆகிய கூத்து நிகழ்விலும் தோற்கருவிகள் முதன்மை பெற்றுள்ளன. போரின் வெற்றியில் முரசொலி அறிவிப்பும்,தோற்ற மன்னனின் முரசின் கண்ணைக் கிழிப்பதும், மன்னனின் முரசு கட்டிலுக்கும் முக்கியத்துவம் இருந்துள்ளது.


வில் குறியீடான யாழ்


வேட்டைக்கருவியில் ஒன்றான வில்லை முன்மாதிரியாக கொண்டு யாழ் தோற்றம் கண்டதாக வரலாற்றுரைஞா்கள் கூறுகின்றனர். ஆதலால்தான் வில் யாழ், சீறி யாழ், பேரியாழ், மகரயாழ், செங்கோட்டியாழ் என்பன வளைந்த வில் வடிவில் இருக்கின்றன. இன்று பயன்பாட்டிலிருக்கும் வயலின், கிட்டார் போன்ற நரம்பிசைக் கருவிகளுக்கு முன்னோடி இத்தகைய யாழே என்பது ஆய்வறிஞர்தம் கருத்தாகும்.

“சுகிர்புரிநரம்பின்சீறியாழ்” (3)

“வணர்கோட்டுச்சீறியாழ்” (4)

சுகிர் என்பது வடித்தல் என்றும், வணர் என்பது அரத்தால் அராவி செய்யப்பட்ட வளைந்த மரத்துறுப்பு என்றும் கூறப்பட்டுள்ளது.


இதன்மூலம் அறியப்படும் செய்தியானது, பழந்தமிழர் வேட்டைக்குப் பயன்படுத்திய மரத்தின் உறுப்பில் செய்யப்பட்ட வளைந்த வில்லின் குறியீட்டமைவின் வெளிப்பாடாக யாழை கட்டமைத்துள்ளமை புலனாகின்றது.

பண் இசைத்துப் பாடுநர் பாணர் என்று பெயர் பெற்றனர். இக்கலைஞர்கள் தம்மோடு எப்போதும் யாழ் வைத்திருந்தனர். சீறியாழை வைத்திருப்பவர் சிறுபாணர் என்றும், பேரியாழை வைத்திருப்பவர் பெரும்பாணர் என்றும் பெயர் பெற்றுள்ளனர். யாழ் மீட்டுவதையேத் தொழிலாக உடையவர்கள் என்பதால் யாழ்ப்பாணர், இசைப்பாணர், மண்டைப்பாணர் என்று மூன்று பிரிவு இருந்துள்ளது. அதில் யாழ்ப்பாணர் என்போர் யாழினை இசைத்தல் அடிப்படையில் சுட்டப்பட்டனர். யாழின் அமைப்பு அடிப்படையில் பெரும்பாணர், சிறுபாணர் என்ற பகுப்பு வேறு. ஈழத்தமிழர் சுவாமி விபுலானந்தர் 1947 இல் எழுதிய ”யாழ் நூல்” என்னும் இசைத்தமிழ் நூலானது யாழைப் பற்றிய நுண்ஆய்வுகளை மிக நேர்த்தியாகக் கூறியுள்ளது. பண்டைத்தமிழரின் இசைக்கருவிகளாகிய என்பன பற்றி கூறுகின்றது. விபுலானந்தரின் பதினான்காண்டு ஆராய்ச்சியின் பயனாக இயற்றப்பட்டதே யாழ்நூல் ஆகும்.

ஆற்றங்கரை நாகரிக அடையாளம் குழல்

ஆற்றங்கரையோரத்தில் குடியேறிய பழந்தமிழன் வாழ்வியலைச் சுட்டும் மூங்கில் கொண்டு இழைத்த கருவி குழல். இயற்கையின் இயல்பு நிலையில் ஒன்றிணைந்து இத்துளைக்கருவி தோற்றம் கண்டுள்ளது. நீர்நிலையின் அருகாமையில் செழித்து வளர்ந்த மூங்கிலில் காற்றின் இணைவு இசையாக மலர்ந்துள்ளது. மூங்கிலின் சிணுங்கலே! மண்ணில் தோன்றிய முதல் இசை என்கின்றனர்.

முல்லை நிலத்து ஆயர்கள் ஆநிரைகளை மேய்க்கும் ஓய்வில் குழல் இசைத்துள்ளனர். இதனைப் போன்றே கஞ்சக்கருவிகளுக்கு ஆதாரமாக இரும்பு, செம்பு, பொன் போன்ற உலோகம் நேர்த்திசையாக மலர்ந்துள்ளது. ஆதலால், பழந்தமிழரின் வாழ்வியலோடு இசைக்கருவிகள் இரண்டறக் கலந்திருந்தன.


இசைக்கலைஞர்கள் சுமந்து செல்லும் கருவிப்பை

ஆற்றுப்படை இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்ட கலைஞர்களின் வாழ்வு இசையின் வழியே பயணப்பட்டுள்ளது. ஆதலால் அவர்கள் தம் கையிருப்பு பொருட்களாக இசைக்கருவிகளை வைத்திருந்தனர். இதனை மலைபடுகடாம் பதிவு செய்துள்ள இசைக்கருவிகளின் தொகுப்பின் வழி அறியலாம். முழவு ஆகுளி(பறை), பாண்டில்(கஞ்சதாளம்), கோட்டுஉயிர்த்தூம்பு (கொம்புகருவி), குழல்,

“திருமழைதலைஇயஇருள்நிறவிசும்பின்
விண்அதிர்இமிழிசைகடுப்பபண்அமைத்து
திண்வார்விசித்தமுழவொடுஆகுளி
நுண்உருக்குஉற்றவிளங்குஅடர்ப்பாண்டில்
மின்இரும்பீலிஅணித்தழைக்கோட்டொடு
கண்இடைவிடுத்தகளிற்றுஉயிர்த்தூம்பின்
இளிப்பயிர்இமிரும்குறும்பரம்தூம்பொடு
விளிப்பதுகவரும்தீம்குழல்துதைஇ
நடுவுநின்றுஇசைக்கும்அரிக்குரல்தட்டை

கடிகவர்புஒலிக்கும்வல்வாய்எல்லரி
நொடிதருபாணியபதலையும்பிறவும்
கார்கோட்பலவின்காய்த்துணர்கடுப்ப
நேர்சீர்சுருக்கிக்காயகலப்பையிர்” (5)

தூம்பு (நெடுவங்கியம்), தவளையின் குரல் போன்று ஒலிக்கும் தட்டை( கரடிகை என்னும் தோற்கருவி), எல்லரி (சல்லிகை என்னும் பறை) பதலை (கிணை என்னும் பறை)

இத்தகைய கருவிகளைப் பலாமரத்தின் காய் கொத்தைப் போன்று கூத்தர்கள் சுமந்து சென்றுள்ளனர்.

பூக்களின் பெயரால் இசையும் இசைக்கருவியும்

முல்லைத்திணையில் முல்லை யாழ், முல்லைப்பண் சுட்டப்பட்டுள்ளன. மேலும் இதனை செவ்வழியாழ், முல்லையாழ் எனவும். முல்லை, சாதாரி என்னும் பண்பெயர்களாலும் சுட்டுவர். முல்லைமலர் குறியீடு இசைக்கருவியாகவும் பண்ணாகவும் திகழ்வதை அறியலாம். இம்முறை ஐந்திணைக்கும் பொருந்தும்.

குறிஞ்சித்திணையில், “முருகியம், தொண்டகப்பறை, குறிஞ்சியாழ்” குறிப்பிடப்பட்டுள்ளது. குறிஞ்சியின் சிறுபொழுது யாமம். அத்தகைய இரவில் காவல் புரிவோர்தாம் காவலுக்கு இருப்பதை அறிவிக்கவும், தூக்கத்திற்கு இடங்கொடாதிருக்கவும் குறிஞ்சிப் பண் பாடுவர் என்று பதிவுகள் உள்ளன.

மருதத்திணை வாழ்வியலில் மருத யாழ், மருதப்பண் இடம்பெற்றுள்ளது. பறை - மணமுழா, நெல்லரிகிணை குறிப்பிடப்பட்டுள்ளது.

பாலை என்று சுட்டப்படும் குறிஞ்சியும் முல்லையும் முறைமையில் திரிந்த நிலத்தில் பாலை யாழ் இசைக்கப்பட்டுள்ளது. முடத்தாமக்கண்ணியார் தாம் பாடிய பொருநராற்றுப்படையில்,

“ஆறலைகள்வர்படைவிடஅருளின்
மாறுதலைபெயர்க்கும்மருவின்பாலை,” (6)

என்று சுட்டியுள்ளார்.

பாலை நிலத்து கள்வர்கள் பாலை யாழின் இசையைக் கேட்டால் தன் கையில் உள்ள உயிர்கொல்திறன் படைக்கலன்களை நழுவவிட்டு மெய்மறந்து இசைக்கு உருகி நிற்பர் என்றும், இசையால் தமது களவு எண்ணத்தை விட்டு அன்புணர்வு கொள்வர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்செய்தி இசை கேட்பதின் பயனைக் குறிப்பதாகும். நெய்தல் திணையில் பறை மீன் கோட்பறை, நாவாய்ப்பம்பை, யாழ்- விளரியாழ், பண்- செவ்வழிப்பண் சுட்டப்பட்டுள்ளது.


தொகுப்புரை

ஐந்திணைகளில் வாழும் மக்களின் வாழ்வில் இசைக்கருவிகளின் பயன்பாடு பொழுதுபோக்கு என்பதனை மாற்றி தொழில் சார்புடைய பயன்பாட்டிற்கும் உதவியுள்ளது. பண் இசைத்த பாணர், சீறியாழை இசைத்த சிறு பாணர், பேரியாழை இசைத்த பெரும்பாணர், பறை இசைத்த பறையர், துடி இசைத்த துடியர், கடம் இசைத்த கடம்பர், கூத்தாடிய கூத்தர் என்று தொழில் முறை வாழ்வு இனமாக மாறியமையும் புலப்படுகின்றது.

சான்றெண் விளக்கம்

1. மலைபடுகடாம்,320-322

2. மலைபடுகடாம்,344-345

3. புறநானூறு,109

4. புறநானூறு,155

5. மலைபடுகடாம்,1-13

6. பொருநராற்றுப்படை, 21-22

பார்வை நூல்கள்

1. விபுலானந்தஅடிகளார், யாழ்நூல், யாதுமாகி பதிப்பகம், பாளையங்கோட்டை. (2003)

2. சாமிநாதையர்.உ.வே., புறநானூறு மூலமும் உரையும், டாக்டர் உ.வே.சா நூல்நிலையம், சென்னை. (1936)

3. மோகன். இரா., நாகராசன்.வி., (உ.ஆ)., பத்துப்பாட்டு நூல் தொகுதிகள், நியூ செஞ்சுரி புக்ஹவுஸ் (பி) லிட், அம்பத்தூர், சென்னை , 2004.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p251.html


  2022
  2021
  2020
  2019
  2018
  2017

வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்

முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License