இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

ஔவையார் பாடல்களில் அதியமான் வீரம்

மு​னைவர் சி.​சேதுராமன்

தமிழாய்வுத் துறைத்தலைவர்,
மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி (தன்னாட்சி), புதுக்கோட்டை.


படைத்திறம், கொடைத்திறம் இரண்டும் நம் நாட்டுச் செல்வங்கள். பேராண்மையும் ஊராண்மையும் உடையவர் மேலோர். அவரே புகழத்தக்கவர். வீரமும் ஈரமும் அற்றவர் கீழோர். அன்னாரைப் பாடுதல் கவிதைக்கு இழுக்கு. நாவிற்கு அழுக்கு (1) என்பது தமிழர்தம் கொள்கையாகும். புலமையுகத்தில் ஔயைாருக்குத் தனிப்பெருமை உண்டு. ‘ஔவை வாக்கு தெய்வ வாக்கு’ என்பது பழமொழி. ஆண்மையாளரை வாயார வியந்து பாடுவது இவரது இயல்பு. அதியமான் வீரத்தலைவன். கடையெழு வள்ளல்களுள் ஒருவன். போரில் பொலிபவன். ஔவையின் பாட்டுடைத்தலைவன். ஔவையார் தாம் பாடிய புறநானூற்றுப் பாடல்களில் அதியமானின் வீரம், வெற்றி குறித்து தெளிவுற எடுத்துரைத்துள்ளார்.

அதியமானின் நாடும் நகரும்

அதியமான் தகடூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்தான். குதிரைமலை அதியன் நாட்டுக்குச் சிறந்த மலை. இவனை அதியமான் நெடுமானஞ்சி, அதியன், அஞ்சி, எழினி எனப் பலவாறாக வழங்குவர்(2). இவனுக்கு நெடுமிடல் என்ற பெரும் உண்டு. அவன் மகன் அதியமான பொகுட்டெழினி ஆவான்.

அதியமானின் அரச மரபு

அதியமானும் சேரமானும் ஒரே குடும்பத்தினர் என்பர் அறிஞர். அதியமானைப் பற்றிப் பேசும் உ.வே.சா. ‘சேரமானுடைய உறவினன். பமைாலை உடையவன். வெட்சிப் பூவையும் வேங்கைப் பூவையும் அணிவோன். அரசரெழுவர்க்குரிய ஏழிலாஞ்சனையும் நாடும் அரச உரிமையும் உடையோன்’’ என்று கூறுவர். (3)

குதிரை மலையினையும் கூரிய வேலினையும் கூவிளங் கண்ணியினையும், வளைந்த ஆரத்தையும் உடையவன் அதியமான் எழினி என்றும் இவனை அறிஞர் குறிப்பிடுவர்.

அறிஞர் பூவராகம் பிள்ளை, அதியமான் நெடுமானஞ்சி குறுநில மன்னர் குழுவிற் சேர்ந்து எண்ணப் பட்டிருத்தலால் இவன் சேரமரபினனாய் இருத்தல் இயலாது. அக்காலப் புலவர்கள் தமிழ் மூவேந்தர்களைக் கூறுமிடங்களில் அவர்களை வேந்தன் என்ற சொல்லால் கூறுகின்றனர். குறுநில மன்னர்களைக் கூறுமிடங்களில் அவர்களை வேந்தன் என்ற சொல்லால் கூறுகின்றிலர்.

இம்முறை புறநானூற்றுப் பாக்களில் பெரும்பாலும் தவறாமல் ஆளப்பட்டுள்ளது. அதியமானைப் பற்றிய பாடல்களில் ‘வேந்தன்’ என்ற சொல்லால் இவன் குறிப்பிடப்படாமையைக் காணலாம். மழவர் பெருமகன், அதியர் கோமான் என்று கூறப்படுதலால் ‘மழவர்’ என்ற ஓரினத்தாருள் ‘அதியர் குடி’ என்ற ஒரு குடியிற் பிறந்தவன் என்று கொள்ளுதலே பொருத்தமாகும். வேறு எக்காரணத்தாலோ இவன் பனம்பூ மாலை பெற்றிருந்தனன் எனக் கூறி அதியமான் சேரர்களுக்கு உறவினன் எனும் கூற்றை மறுப்பாரும் உளர் (4).

எனினும் சேரர்க்குரிய பனம்பூ மாலை இவனுக்கும் கூறப்பட்டிருத்தலால் இவனும் சேரனும் உறவினர்கள் என்ற டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளையின் கூற்று (5) மேலும் சிந்தனைக்குரியதாக அமைகின்றது.



அதியனின் தோளாண்மை

அதியமான் பெருவலஞன். அவனுடைய போர்த்திறத்தையும், தோள்வலிமையையும் பறைசாற்றுவனவாக ஔவையார் பாடல்கள் புறநானூற்றில் அமைந்துள்ளன. நாளொன்றுக்கு எண்தேர் செய்யும் தச்சன் ஒரு மாதம் கூடிச் செய்த தேர்க்காலைப் போன்ற வலிமையும் அழகும் வாய்ந்தவன் அதியமான். இதனை,

‘‘எண்தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்தகால் அன்னோனே’’(6)

என்ற பாடல் தெளிவுறுத்தும்.


வீரம்

அதியமானின் வீரத்தை விதந்தோதிய பாடல்களில் அவனது ஆளுமையின் முழுவீச்சையும் புலப்படுத்துகிறார் ஔவையார். அம்பகட்டு மார்பினன் அதிமான். அவன் மழவர் பெருமகன். போர் முழவுத் தோளினன். அவன் வீரம் சான்றாவனாதலின்.

‘‘யாவீர் ஆயினும், கூழைதார் கொண்டு
யாம்பொருதும் என்றல் ஓம்புமின்’’(7)

என அதியனின் தானைமறச் சிறப்பினைப் பகைவருக்கு எடுத்துக் கூறி, இனி நீர் எப்படிப்பட்டவராயினும் அவனோடு போரிடுவோம் எனச் சொல்லாதீர் என அறிவுறுத்துகிறார் ஔவையார். அவர் அதியமானை நோக்கி மறவர் பெரும! என அழைத்து நீ போர்க்களம் புகின்,

‘‘துன்னருங் கடாஅம் போல
இன்னாய்பெரும, நின் ஒன்னாதோர்க்கே’’(8)

என வியந்து கூறுவதிலிருந்து அதியமானின் வீரத்தினைத் தெளிவுறுத்துகிறார்.

பண்டைய மரபுப்படி பிறந்த குழந்தையைக் காணச் சென்ற அதியமான் போர்க்கோலம் புனைந்து செல்கிறான். மகனைக் காணும் ஆவலிலும் அவன் மறச்சினம் தவிர்ந்திலன். இதனைக் கண்ணுற்ற ஔவை,

‘‘வரிவயம் பொருத வயக்களிறு போல,
இன்னும் மாறாத சினனே அன்னோ!
உய்ந்தனர் அல்லர், இவன் உடற்றியோரே
செறுவர் நோக்கியகண் தன்
சிறுவனை நோக்கியுஞ் சிவப் பானாவே!’’ (9)

என மகனைக் கண்ட பின்பும் அவன் பகைவர்பால் கொண்ட சினம் தணிந்திலன் என அவன் வீரத்தினை இலைமறை காயாகக் கூறி அதியன் பகைவரை அழிக்கின்ற இயல்பை விளக்குகிறார்.

அதியமான் பேராற்றலன். தொண்டைமான் படைவலி காரணமாக அதியமானைத் தன்னினும் மெலியன் எனக் கருதிப் போர் தொடுக்க எண்ணினன். இதனை அறிந்த அதியமான் தன்னாற்றலையும் சிறப்பினையும் அஞ்சாமையையும் எஞ்சாது தூதுமூலம் அறிவித்தற்குக் கருதித் தொண்டைமானிடம் ஔவையாரைத் தூது விடுத்தான். தூது வந்த ஔவையிடம் தொண்டைமான் தன் படைக்கலக் கொட்டிலைக் காட்ட,

‘‘... ... ... அவ்வே,
பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து,
கொல்துஐறக் குற்றில முாதோ’’(10)

என ஔவை அதியமானின் படை பலத்தையும், ஆற்றலையும் பழிப்பது போலப் புகழ்ந்து கூறி அதியமானின் வீரத்தைத் தொண்டைமானுக்கு அறிவுறுத்துகிறார்.

அதியமானின் படைச்சிறப்பு

அதியமானஞ்சியின் மறப்பண்புகளை ஔவையார் விரித்துரைக்கும் பாங்கு சிறப்புடைத்து. போர்க்கள வீரச் செயல்களையும் அவனுடைய வீரத்தால் பகைவருடைய நாடு வீழ்ச்சி அடைந்ததையும் செந்தமிழ்க் கவிச் சொல்லாற் கவினுறக் கூறுகின்றார் ஔவையார்.

‘‘முனைத் தெவ்வர் முரணவியப்
பொரக் குறுகிய நுதி மருப்பின் நின்
இனக் களிறு செலக் கண்டவர்
மதிர்க் கதவம் எழுச்செல்லவும்
பிணன் அழுங்கக் களன் உழக்கிச்
செலவு அசைஇய மறுக்குளம் பின்நின்
இனநன்மாச் செலக் கண்டவர்
கவை முள்ளின் புழை யடைப்பவும்’’(11)

என யானைப்படை, குதிரைப் படை, வேற்படை, காலாட்படைகளின் நிலையினை எடுத்துக் கூறுவது, போரிடுவதற்கு முன்பே பகைவர் நாடு தனக்குரியதாகி விடும் என உணர்த்துவதாக வரும் பகுதி அவனது படைச்சிறப்புக்களைப் புலப்படுத்தும்.

அதியமானின் ஆற்றல்

கடுமான் தோன்றல் நெடுமானஞ்சியின் ஆற்றல் அளவிடற்கரியது. அவனை எதிர்க்கும் வலி படைத்தோரிலர்.

‘‘இல்லிறைச் செரீஇய ஞெலிக்கோல் போல
தோன்றா திருக்கவும் வல்லன் மற்றதன்
கான்று படுகனை எரிபோல
தோன்றவும் வல்லன் தான்தோன்றுங் காலே’’(12)

என ஔவையார் அதியனின் ஆற்றலைத் தீக்கடைக்கோல் கொண்டு நிறுவுகிறார்.


எழுவர், கோவலூர் வெற்றி

திருக்கோவிலூர் அரசனாகிய மலையமான் திருமுடிக்காரி என்பான், பல வேற்றரசர்களைப் போரில் வென்று அடக்கி, தனக்கு நிகர் ஒருவருமிலரென்று பெருமிதங் கொண்டிருந்தான். இதனை அறிந்த அதியமான் அவனது ஆற்றலை அடக்கக் கருதி நால்வகைப் பெரும்படையுடன் சென்று மலையமானை வெற்றி கொண்டான். மலையமான் புறங்கொடுத்து ஓடினான். அவனது படைகளும் நிலை கலங்கிக் கலைந்தன. கோவலூர் அதியமானது ஆட்சிக்குட்பட்டது.

ஔவையார் அதியமானின் கோவலூர் வெற்றியைப் பாடும்போது, கேழல், மேழி, கலை, ஆளி, வீணை, சிலை, கெண்டை என ஏழிலாஞ்சனையையும் நீங்க அரச உரிமையையும் பெற்றதோடு நில்லாது மீண்டும் தன்னோடு போர்செய்ய வந்த எழுவரையும் வென்று கோவலூரையும் முற்றுகையிட்ட செய்தியை,

‘‘... .... ... செருவேட்டு,
இமிழ்குரல் முரசின் எழுவரொடு முரணிச்
சென்று, அமர் கடந்து, நின்ஆற்றல் தோற்றிய
அன்றும் பாடீநர்க் கரியை இன்றும்
பரணன் பாடினன் மற்கொல் மற்றுநீ
முரண்மிகு கோவலூர் நூறி நின்
அரண்அடு திகிரி ஏந்திய தோளே!’’ (13)

என்று கூறி, அவனது புகழையும், வெற்றியையும், பகைவென்ற திறத்தையும் பாடுகின்றார். பரணன் பாடினான் என்பது அதியமான் புகழை மேலும் வலுப்படுத்துவதற்கு, தான் மட்டும் பாடவில்லை, இவன் புகழ் பரணராலும் பாடப்பட்டுள்ளது எனக் கூறுகிறார்.

சேரமான் பெருஞ்சேரலிரும் பொறையுடன் போர்

திருக்கோவலூரை இழந்த மலையமான் சேரமான் பெருஞ்சேரலிரும் பொறையை அடைந்து தனக்கு உதவுமாறு வேண்டினான். அவன் மலையமானுக்கு உதவ ஒருப்பட்டு பெரும்படையுடன் புற்பட்டுக் கொல்லிமலையை முற்றுகை இட்டான். இவ்வமயம் ஓரி அதியமானஞ்சியை உதவுமாறு வேண்டினான். அதியமானும் தனது நட்பரசனாகிய சோழ, பாண்டியரோடும் ஓரியுடனும் சேர்ந்து, சேரனோடும் மலையமானோடும் பெரும் போர் நிகழ்த்தினான். இப்போரில் சேரன் இருபெரும் வேந்தர்களின் முரசினையும் குடையையும் கவர்ந்து, ஓரியைக் கொன்று கொல்லி மலையைக் கைப்பற்றிக் கொண்டான். இதனை,

‘‘கொல்லிக் கூற்றத்து நீர் கூர்மீ மிசைப்
பல்வேற்றானை யதியமானொடு
இருபெரு வேந்தரையும் உடனிலை வென்று
முரசுங் குடையும் கலனும் கொண்டு’’(14)

எனப் பதிப்ற்றுப்பத்து நவிலும்.

அதியமான் தகடூர் போய், மதிலினுள் இருந்தான். மலையமானும், பெருஞ்சேரலும் தகடூர் மேல் படை நடத்தி மதிலை வளைத்தனர். அதியமானோ வெளியில் வந்து போர் செய்யாதிருந்தனன். உழிஞைத் திணையினை விளக்கும்போது இதனை, ‘சேரமான் செல்வுழித் தகடூரிடை அதியமான் இருந்தாதாம்’’ என நச்சர் தம்முரையில் குறிப்பிடுகின்றார் (15).

பகைவர் மதிலை வளைக்க வாளாவிருந்த அதியனைக் கண்ட ஔவையார்,

‘‘வழுவில் வன்கை மறவர் பெரும!
இருநிலை மண்கொண்டு சிலைக்கும்
பொருநரும் உளரோ?’’ (16)

என அதியமானின் ஆற்றலை எடுத்துக் கூறி அவனுக்குப் போரில் மனஞ்செல்லுமாறு ஊக்கமூட்டினார். இதுகேட்ட அஞ்சி அஞ்சாது போர்க்களம் புகுந்து வீரதீரமொடு போர் செய்தான். அப்போது பகைவர் விடுத்த படைகள் பல அதியமானின் மார்பிலும் கழுத்திலும் முகத்திலும் பட்டுப் புண்படுத்தின. அவ்வமயத்தும் ஔவையார் அதியமான் முன்னர் சென்று பெருந்தகையாய்! நீ விழுப்புண் பட்டபடியால் உன்னோடு எதிர்த்த அரசர் பலர் யுத்தத்தில் இறவாமையால் உளதாகும் குற்றம் நீங்கும்படி பிற்காலத்தில்,

‘‘அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்
திறம்புரி பசும்புல் பரப்பினர் கிடப்பி
மறம்கந்தாக நல்லமர் வீழ்ந்த
நீள்கழல் மறவர் செல்வுழிச் செல்க!
வாள் போழ்ந்தடக்கலும் உய்ந்தனர்’’(17)

இனி நீ வருந்திப் போர் செய்து வெல்ல வேண்டுவது யாதுளது? என்று பின்னரும் அவனை ஊக்கினர்.


அதியமான் அப்புண்பட்ட நிலையிலும் தளராது போர்புரிந்தான். இறுதியில் பெருஞ்சேரல் விடுத்த வேலொன்று காற்றிலும் கடுக வந்து, அஞ்சியின் நெஞ்சிற் பாய்ந்து ஊடுருவிச் சென்றது. அதியமான் உயிர் துறந்தான். அவனது இன்னுயிர் நண்பரான ஔவையார் கையற்று,

‘‘சிறியகட் பெறினே, எமக்கீயு மன்னே!
பெரியகட் பெறினே
யாம்பாடத் தான் மகிழ்ந் துண்ணும் மன்னே!’’ (18)

என நெஞ்சுருகிப் பாடினார்.

தகடூர் யாத்திரை என்னும் தமிழ் நூல் சேரனின் தகடூர்ப் படையெடுப்பின் தன்மையயும், போரின் வெம்மையையும் எடுத்துரைக்கின்றது. தகடூர் என்னும் மூதூர் இக்காலத்தில் தருமபுரி என்ற பெயர்கொண்டு வழங்குகின்றது. அதனருகே அதமன் கோட்டை என்ற சிற்றூர் உண்டு. அதிகமான் பெயரால் அமைந்தது அக்கோட்டை. அதிகமான் கோட்டை என்பது அதமன் கோட்டை என மருவிற்று’’ என்பர் டாக்டர் ரா.பி.சேதுப்பிள்ளை (19).

அதியனின் தகடூர்க் கோட்டை இடிந்தது. கொற்றவன் மடிந்தான். ஆயினும் வீரனான அதியமான் பெயர் அழியாது நின்று நிலவுகிறது எனலாம்.

அடிக்குறிப்புகள்

1. டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளை, தமிழர் வீரம், ப., 100

2. புலியூர் கேசிகன், புறநானூறும் தமிழர் சமுதாயமும், ப., 92

3. டாக்டர் உ.வே.சா., புறநானூறு பதிப்பு, ப., 62

4. ஆ. பூவராகம் பிள்ளை, புலவர் பெருமை, பக்., 35-36

5. தமிழர் வீரம், ப., 101

6. புறம்., பா.எ., 87

7. புறம்., பா.எ., 88

8. புறம்., பா.எ., 94

9. புறம்., பா.எ., 100

10. புறம்., பா.எ., 95

11. புறம்., பா.எ., 98

12. புறம்., பா.எ., 315

13. புறம்., பா.எ., 99

14. பதிப்ற்றுப்பத்து பா.எ., 73

15. தொல்காப்பியம், பொருளதிகாரம், நச்சினார்க்கினியர் உரை, நூற்பா, 62

16. புறம்., பா.எ., 90

17. புறம்., பா.எ., 93

18. புறம்., பா.எ., 235

19. தமிழர் வீரம், ப., 102.

துணைநூற் பட்டியல்

1. சேதுப்பிள்ளை, ரா.பி., தமிழர் வீரம், பழனியப்பா பிரதர்ஸ், மதுரை, ஒன்பதாம் பதிப்பு, 1971.

2. புலியூர் கேசிகன், புறநானூறும் தமிழர் சமுதாயமும், பசவேஸ்வரா பிரசுரம், தவுலாதாபாத், கிருஷ்ணகிரி, சேலம், 1964.

3. பூவராகம் பிள்ளை, ஆ, புலவர் பெருமை, நேஷனல் பப்ளிசிங் கம்பெனி, சென்னை, நான்காம் பதிப்பு, 1957.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p274.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License