இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

கம்பராமாயணத்தில் உருவெளித் தோற்றம்

முனைவர் க. மங்கையர்க்கரசி
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி,
மீனம்பாக்கம், சென்னை.


முன்னுரை

‘நோக்குவை எல்லாம் அவையே போறல்’ சீதையைப் பிரிந்த இராமனுக்கும் பார்க்கும் எல்லாம் அவளாகவேத் தோற்றம் தந்தன எனவும், சீதை கடல், வானம், நிலா ஆகியவற்றைக் கண்ட போதெல்லாம் இராமனின் உடல் வண்ணத்தை இவற்றில் கண்டு துன்புறுகிறாள். அன்பு கொண்ட உள்ளம் அவர்கள் தம் எதிரில் இல்லையென்றாலும், அன்பின் மிகுதியால் பார்க்கும் பொருள்களில் எல்லாம் இருப்பது போல் தோற்றத்தைத் தரும். முதன் முதலில், இராமனைக் கண்ட சீதை அவன் மேல் கொண்ட அன்பினால் பார்க்கும் இடங்களில் எல்லாம் அவன் உருவமாகவேத் தோன்றின. சீதையைக் கண்ட இராமனுக்கும் அவ்விதமே இருந்தது. இராமனைக் கண்ட சூர்ப்பணகை, அவன் மேல் மையல் கொண்டதால் பார்க்கும் இடங்களிலெல்லாம் இராமன் முகமே தெரிந்தது. சூர்ப்பணகைக் கூறியதைக் கேட்டே, சீதை மேல் இராவணன் காம வயப்பட்டதால் நோக்கும் திசையெல்லாம் சீதையின் உருவெளித் தோற்றமாகவே இருந்தன. இராமன் உலா வரும் போது, கண்ட பெண்களுக்கு இராமனின் உருவெளித் தோற்றம் தெரிந்தது. இராமனும், சீதையும் பிரிந்த போதும் ஏற்பட்ட பிரிவினால் ஒருவரை ஒருவர் நினைத்துக் கொண்டே இருந்ததால் பார்க்கும் இடங்களிலெல்லாம் உருவெளித் தோற்றமாகவேக் கண்டனர். அகப்பொருளில் மட்டுமல்ல, புறப்பொருளிலும் பக்தி மேலீட்டாலும் இறைவனை எல்லா இடங்களிலும் உருவெளித் தோற்றமாகக் கண்டனர். கம்பராமாயணத்தில் கூறப்பட்டுள்ள உருவெளித் தோற்றக் கருத்துக்களைக் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.


உருவெளித்தோற்றம்

உருவெளித் தோற்றம் என்பதற்கு இடைவிடா நினைப்பினால், எதிரில் உள்ளது போல் தோன்றும். போலித் தோற்றம் என்று சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதி பொருள் தருகின்றது. உருவெளித் தோற்றம் என்பதனை மன நினைவின்படி ஒருவருக்கு கட்புலனாகும் தோற்றத்தை மனதில் வேறு நினைவுள்ள பிறர் காண இயலாது. உள்ளத்தில் ஊன்றியுள்ள நினைவே உருவெளியில் உருப்பெற்று தோற்றமளிப்பது. ஆதலால், அவரவர் நினைவில் உள்ளதே அவரவருக்கு உருவெளித் தோற்றமாகக் காட்சி வழங்கும் என்றும் குறிப்பிடுவர்.

இதன்படி உருவெளிக் காட்சி என்பதனை, மனதில் ஆழப்பதிந்த உருவம் பிறருக்குப் புலனாகாமல், தன் அளவில் வெளிப்பட்டு தோன்றும் காட்சி எனலாம். தொல்காப்பியர் தலைவன் தலைவிக்கு இடையிலான மெய்யுறு புணர்ச்சிக்குரிய நிமித்தங்களைக் குறிப்பிடுகையில்,

“வேட்கை ஒரு தலை உள்ளுதல், மெலிதல்
ஆக்கம் செப்பல் நாணுவரை இறத்தல்,
நோக்குவ எல்லாம் அவையே போறல்,
மறத்தல், மயக்கம், சாக்காடு, என்றுஅச்
சிறப்புடை மரபின், அவை களவு எனமொழிப” (தொல்காப்பியம்-களவியல் நூ 9)

இவ்வாறு கூறுகின்றார்.

இளம்பூரணர் நோக்குவை எல்லாம் அவையேப் போறலாவது தன்னால் காணப்பட்ட எல்லாம், தான் கண்ட உறுப்புப் போலுதல் என்று குறிப்பிடுவார். காதல் கொண்டவர்களுக்கு, தான் காணும் பொருள்களில் எல்லாம் தன்னால் விரும்பப்பட்டவரின் தோற்றம் தெரியும் என்று உளவியலைத் தன்னால் காணப்பட்டன எல்லாம் தான் கண்ட உறுப்பு போலும் என்பர் இளம்பூரணர்.


இராமனின் உரு வெளித் தோற்றம்

கன்னி மாடத்தில் நின்றிருந்த சீதை வீதி வழியேச் செல்லும் இராமனைக் கண்டு தன் உள்ளத்தில் காதல் கொண்டாள். என் மனதில் பதிந்தவை அவனுடைய மார்பும், தாமரைத் தாள்களும் என்னும் இவை அல்ல. ஆண் யானையைப் போல நடந்து சென்ற நடை அழகே என் மனதில் நிலைத்துள்ளது. அவன் யார் என்று ஆராய்ந்து கூறினால், அவருடைய தாமரை போன்ற கண்கள் இமைப்பதால், அவன் தேவலோகத்தில் உள்ளவன் அல்லன். வில்லை உடையவன். பூணூலைப் பூண்டவன். ஓர் இளவரசனாகவே இருத்தல் வேண்டும். என்னுடன் பிறந்த நல்லவையான பெண்மைக் குணங்களையும், மன உறுதியையும் ஆகிய கட்டமைந்த எந்திரங்கள் கழன்று திரியும் எனது கன்னித் தன்மை என்னும் பெரிய மதிலை அழித்த அக்குமரனை, இன்னொரு முறைக் கண்ணால் கண்டு அனுபவித்தப் பின், உயிர்ப் போவதானாலும் உடன்படுகிறேன். அவனை மீண்டும் காண முடியுமா? என்னும் இவற்றையும், இவைப் போன்றவற்றையும் சீதை கூறிய போது, இராமனின் உருவெளித் தோற்றம் கண்டாள். அதனால் அவன் இங்கே நின்றான் என்றாள், இங்கிருந்து நீங்கினான் என்றாள். சீதையின் விரும்பிய மனதிலேயே மிகுந்த காதல் வேட்கையால் ஒன்றன்று, பலவற்றையும் நினைத்து உருகினாள்.

“என்று இவை இனையன விளம்பும் வந்து எதிர்
நின்றனன் அவன் எனும் நீங்கினான் எனும்
கன்றிய மனத்து உறு காம வேட்கையால்
ஒன்று அல பல நினைந்து உருகும் காலையே” (மிதிலைக் காட்சிப் படலம் 544)

இவை எல்லாம் இராமனுக்கும், சீதைக்கும் திருமணம் நடைபெறுவதற்கு முந்தைய நிகழ்ச்சிகளாகும்.

சீதையின் உருவெளித் தோற்றம்

சீதையைக் கண்டு காதல் நோயுற்ற இராமன், தன் வேதனையுடன் மேகத்தை விட்டு வந்த, ஒரு மின்னலின் வடிவம் இத்தகைய பேரழகு வாய்ந்த பெண்ணின் வடிவத்தைப் பெற்றுள்ளதோ? எண்ணிப் பார்க்க முற்பட்டால், இந்தப் பெண்ணின் வடிவம் தவிர, வேறு வடிவத்தை எண்ணிப் பார்க்க முடியாதவனாக இருக்கிறேன். அவளை என் இரு கண்ணில் கண்ணுக்குள்ளும் காண்கிறேன். கருத்துக்குள்ளும் காண்கிறேன்.

திருப்பாற்கடலைப் போல விளங்கும் கண்களை உடைய அந்த நங்கை, எனது மனத் தாமரையில் வந்து தங்கியிருக்கிறாள். அவள் திருமகளோ? அவள் என்னிடம் கருணை இல்லாதவள். அவள் என் மனதிலே உண்டாக்கிய ஆசையாலும், அஞ்சுவதற்குரிய காதல் எனும் நோயைத் தருகின்ற விஷம் போன்ற தன் கண்களால் என்னை விழுங்கியமையாலும், தெளிவில்லாத இந்த உலகத்தில் நிலைத்துள்ளப் பொருள் யாவும் என் பார்வைக்கு அவளது பொன் வடிவமாகத் தெரிகின்றன என்கிறான்.

“அருள் இலாள் எனினும் மனத்து ஆசையால்
வெருளும் நோய் விடக் கண்ணின் விழுங்கலால்
தெருள் இலா உலகில் சென்று நின்று வாழ்
பொருள் எலாம் அவள் பொன் உரு ஆயவே” (மிதிலைக் காட்சிப் படலம் 570)

மங்கையர் இராமனது உருவெளித் தோற்றம் காணல்

இராமன், சீதையின் திருமணத்தைக் காணச் செல்கின்ற வழியில் மகளிர் பேரொலியால் ஒன்றும் தெரியாது ஊமைப் போல் திரண்டு சென்றனர். அப்போது மங்கையரின் கண்களில் ஆனந்த கண்ணீர் துளிக்குமாறு, இராமனது உருவெளித் தோற்றம் தோன்றியது. அவனை உண்மை என எண்ணி, ’எம்மை எதிர்கொண்டு வரவேற்க வந்தாய். ஆனால் அருகே வந்து எமது தேரில் ஏறிக்கொள்’ என்று வாயினால் கூறி, கையினாலும் செய்கை செய்தனர்.

“நாறு பூங் குழல் நங்கையர் கண்ணின் நீர்
ஊறு நேர் வந்து உருவு வெளிப்பட
மாறு கொண்டனை வந்தனை ஆகில் வந்து
ஏறு தேர் எனக் கைகள் இழிச்சுவார்” (எழுச்சிப் படலம் 723)

உலாவியற் படலத்தில் மைப் பூசியக் கண்களையும், ஒளி மிகுந்த நெற்றியையும் உடையவளான ஒரு நங்கை காமம் கொண்டதால், இராமனின் உருவெளித் தோற்றத்தைக் கண்டாள். உடனே செய்து முடித்த தவத்தை உடைய இராமன் ஒப்பற்ற தேரிலேச் செல்வதை விட்டு, என்னை நெருங்கி வந்து நிற்பது மாயையா? கனவா? என்று மயங்கிக் கூறினாள்.

“மை தவழ்ந்த கருங் கண் ஓர் வாணுதல்
செய் தவன் தனித் தேர்மிசைச் சேறல் விட்டு
எய்த வந்து எதிர் நின்றமைதான் இது
கைதவம் கொல் கனவு கொலோ என்றாள்” (உலாவியற்படலம் 10 32)


சூர்ப்பணகை கண்ட உருவெளித் தோற்றம்

இராமனைக் கண்ட சூர்ப்பணகை, அவன் மேல் காமுற்று, அவனிடம் வேண்டினாள். அவன் மறுத்ததால், அவனை எண்ணியே இருந்தாள். கரியமேகம் கண்ணில் பட்டாலும், நீல மணியாலான தூணை எதிரில் கண்டாலும், அவற்றை இராமனின் வடிவமாகக் கருதிக் கைகளைக் குவித்து வணங்குவாள். சூர்ப்பணகை, இராமனின் திருமேனி உருவெளித் தோற்றமாகக் காட்சியளிக்கக் கண்டாள். அத்தோற்றத்தில் விருப்பம் கொண்ட அவள், இராமனது திருமேனியை உண்மையாகவே எதிரேக் கண்டதைப் போலத், தளர்வுற்றாள். நாணம் கொண்டாள். பின் திடுக்கிட்டாள். அந்த உருவம் மறைந்த போது, காம நோயில் மீண்டும் விழுந்தாள்.

“வீரன் மேனி வெளிப்பட வெய்யவள்
கார் கொள் மேனியைக் கண்டனளாம் என
சோரும் வெள்கும் துணுக்கெனும் அவ்உருப்
பேருங்கால் வெம் பிணியிடைப் பேருமால்“ (சூர்ப்பணகைப் படலம் 300)

இராவணன், சீதையின் உருவெளிக் காண்டல்

இலட்சுமணனால் மூக்கறுபட்டு அவமானம் அடைந்த சூர்ப்பணகை, இராவணனைக் கண்டு சீதை பற்றிய அழகெல்லாம் எடுத்துரைத்தாள். இராவணன், சீதையைப் பார்க்காமலேயே அவள் மேல் காமம் கொண்டான். சீதையின் உருவெளித் தோற்றம் கண்ட இராவணன், அவள் சீதை தானா? என்று சூர்ப்பணகையை அழைத்துக் கேட்டான். சூர்ப்பணகையும் இராமனின் உருவத் தோற்றத்தைக் கண்டதாலே இவன் தான், வலிய வில்லை ஏந்திய அந்த இராமன் என்று கூறினாள்.

“செந்தாமரைக் கண்ணொடும் செங் கனி வாயினோடும்
சந்து ஆர் தடந் தோளொடும் தாழ் தடக் கைகளோடும்
அம் தார் அகலத்தொடும் அஞ்சனக் குன்றம் என்ன
வந்தான் இவன் ஆகும் அவ் வல் வில் இராமன் என்றாள்“ (சூர்ப்பணகை சூழ்ச்சி படலம் 700)

உடனே இராவணன், நான் பார்த்த இந்த உருவம் ஒரு பெண்ணின் வடிவம். ஆனால், நீ இங்கு உள்ளது நினைவிலும் இல்லாததாகிய ஓர் ஆண் உருவம் என்கிறாய் என்றான். அதற்குச் சூர்ப்பணகை, சீதையின் அழகிய உருவத்திலே நன்றாகப் பதிந்துவிட்ட உனது அறிவு, அதை விட்டு வேறொன்றில் செல்லவில்லை. இவ்வாறு மிகுதியாக உண்டான காமத்தைச் சுடுமாறு நிற்கின்ற உனக்கு, கண்களுக்கு எதிரேப் பார்க்கின்ற இடங்களில் எல்லாம் அச்சீதையேத் தோற்றமளிப்பாள். காமம் கொண்டவருக்கு இவ்வாறு காட்சி தோன்றுவது, பழமையான வழக்கமாகும் என்கிறாள். (சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் 72)

சீதையின் அழகைக் கேட்டவுடன் கண்ணிற்காணும் பொருளெல்லாம் இராவணனுக்கு அவளாகத் தோன்றியது போலவே, இராமனைக் கண்டு வந்த சூர்ப்பணகைக்கும், காணும் பொருள் ஒவ்வொன்றும் இராமனாகவேத் தோன்றியது என்று அவ்விருவரின் காமப்பெருக்கை விளக்கிக் காட்டுகிறார் கம்பர்.

மங்கையர்கள் ஆண்களாகக் காட்சியளித்தனர்

இராவணன், சீதையைக் கண்ட பின்பு, உலகங்கள் அனைத்திலும் உள்ள மயில் போன்ற மங்கையர்கள் அனைவரும், அவன் கண்களுக்கு ஆடவர்களாகக் காட்சியளித்தனர். காதல் விளைவிக்கும் பெண்களாகத் தோன்றவில்லை.

“ஏகநாயகன் தேவியை எதிர்த்ததன் பின்னை
நாகர் வாழ் இடம் முதல் என நான்முகன் வைகும்
மாக மால் விசும்பு ஈறு என நடுவண வரைப்பில்
தோகை மாதர்கள் மைந்தரின் தோன்றினர் சுற்ற“ (பிணி வீட்டுப் படலம் 1089)

இராவணனின் 10 முகங்களில் ஒரு முகம் கிளி போன்ற சீதையின் உருவெளித் தோற்றத்தோடுப் பொருந்தி இருந்தது. (பிணி வீட்டுப் படலம் 1094)

சீதையின் உருவெளித் தோற்றம் கூறுவது

சீதை, இராமனைப் போலக் காணப்பட்டாள். எங்ஙனமெனின் இராமனுக்குக் கையில் சங்கம் (திருமாலிடத்துள்ள பாஞ்சசன்யம் என்னும் சங்கம்) உண்டு. சீதைக்கும் சங்கம் (கையிலுள்ள வளையல்கள்) உண்டு. இராமன் தாமரைக்கண்ணன். பிராட்டியாரும் தாமரைப் போன்ற கண்களைக் கொண்டவள். சீதையின் உருவைக் கண்டவர்கள் உள்ளத்தில் பேறு எதைப் பார்த்தாலும் சீதையின் உருவமேத் தோன்றுகிறது. இராமனும் எல்லோருடைய உள்ளத்திலும் தோன்றுபவன். இத்தன்மையால் சீதை, இராமனை ஒத்திருக்கின்றாள்.


காடு முழுவதும் சீதையின் உருவெளித்தோற்றம்

பிரிந்த சீதையை நினைத்து இராமன் பலவாறு வருந்தலானான். ‘என் கண்களால் பார்க்கும் போது, காடு முழுவதும் சீதையின் உருவமாகவேக் காணப்படும் தன்னை, பெருமையுடைய அச்சீதையைச் சிறிதளவும் மறக்க முடியாமல் ஏற்பட்டதோ? அவ்வாறு ஏற்பட்டது அன்று என்று கூறினால், இது அரக்கர்கள் உண்டாக்கிய மாயத் தோற்றம்’ என்று வருந்தினார்.

“கானகம் முழுவதும் கண்ணின் நோக்குங்கால்
சானகி உரு எனத் தோன்றும் தன்மையே“ (அயோமுகிப் படலம் 11 20)

கரிய கூந்தலையும், செவ்வரி படர்ந்த கண்களையும் உடைய கட்டுடைய மகளிர்க்கு, அருமையான ஆபரணம் போன்ற சீதை என் பக்கத்தில் வந்து இருக்க, அவளிடம் கொண்ட ஆசையால் ஒரு சேரத் தழுவினேன். தழுவிய கரங்களில் ஒரு பொருளும் இருக்கக் காணவில்லை. இல்லை எனப்படும் இடையேப் போலவே சீதையின் வடிவம் முழுவதும் இல்லாமல் ஆகிவிட்டதோ (அயோமுகிப்படலம்1120)

சீதையின் முகமாகிய அன்று மலர்ந்த செந்தாமரையில் தேன் நிறைந்துள்ள கொவ்வைப் பழம் போன்ற அழகையும், செந்நிறத்தை உடைய பவழத்தைப் போன்ற வாயினது அமுதத்தைச் சற்று முன்பு பருகினேன். இப்போது பார்த்தால் அவள் அருகில் இல்லை. கண்ணை மூடித் தூங்காமல் இருக்கும் போதும் கனவு உண்டாகுமோ. (அயோமுகிப் படலம் 1122) என்று கூறுகிறான்.

பக்தியிலும் உருவெளித்தோற்றம்

அகப்பொருளில் மட்டுமல்ல புறப்பொருளிலும் பார்க்கும் பக்கங்களிலெல்லாம் அம்மையின் திருவுருவம் தெரிகிறது. அபிராமி பட்டர், அபிராமி அம்மையின் மேல் மிகவும் பக்தி கொண்டிருந்தார். அவருக்குப் பார்க்கும் இடங்கள் எல்லாம் எம் அம்மையின் வடிவமாகவேத் தோன்றுகிறது. அங்கிங்கெணாதபடி எங்கும் நிறைந்திருக்கும் அம்மையின் திருவுருவம், அவர் கண்ணிலும், நெஞ்சிலும் எப்போதும் எப்படி நிறைந்திருந்தது என்பதை அவரேப் பாடுகின்றார்.

“பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும் பனிச்சிறை வண்டு
ஆர்க்கும் புதுமலர் ஐந்தும் கரும்பும் என் அல்லால் எல்லாம்
தீர்க்கும் திரிபுரையாள் திருமேனியும் சிற்றிடையும்
வார்க் குங் கும முலையும் முலை மேல் முத்துமாலையுமே“ (அபிராமி அந்தாதி 85)

என்று பாடுகிறார்.

திருவாய்மொழியில் உருவெளித்தோற்றம்

பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் தனது திருவாய்மொழியில்,

“உண்ணுஞ் சோறு, பருகு நீர், தின்னும் வெற்றிலை எல்லாம்
கண்ணன் எம்பெருமான் என்றென்றே கண்கள் நீர்மழுகி“ (திருவாய்மொழி 619)

உண்ணுகின்ற சோறும், குடிக்கின்ற தண்ணீரும், தின்கின்ற வெற்றிலையில் எல்லாம் கண்ணனாகிய எம்பெருமான் என்று கண்கள் நீராலே நிறைகிறது என்று பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் பாடுகிறார். உள்ளம் முழுவதும் இறைவனைப் பற்றிய பக்தி உணர்வே எப்போதும் இருந்ததால் எல்லாப் பொருட்களிலும் கண்ணன் முகமாகவேத் தென்படுகிறது.


பிரபுலிங்க லீலையில் உருவெளித்தோற்றம்

பிரபுலிங்க லீலையில் அல்லமனும், மாயையும் இரவில் தனியறையில் விடப்படுகின்றனர். மாயை, அல்லமனைத் தழுவ முற்படுகிறாள். வடிவம் கையில் அகப்படவில்லை. பல தடவை முயற்சிக்கிறாள். வடிவம் காணப்படுகின்றனவேயன்றி அகப்படவில்லை. உண்மையை உருவெளித் தோற்றம் என்று நினைக்கிறாள் என்று கூறப்பட்டுள்ளது.

முடிவுரை

உருவெளிக் காட்சி என்பதனை, மனதில் ஆழப் பதிந்த உருவம், பிறருக்குப் புலனாகாமல் தன் அளவில் வெளிப்பட்டுத் தோன்றும் காட்சி எனலாம். அன்பு கொண்ட உள்ளம் அவர்கள் தம் எதிரில் இல்லையென்றாலும், அன்பின் மிகுதியால் பார்க்கும் பொருள்களில் எல்லாம் இருப்பது போல் தோற்றத்தைத் தரும். முதலில் இராமனும், சீதையும் ஒருவரை ஒருவர் கண்ட போது, அன்பின் மிகுதியால் ஒருவர் மற்றொருவரின் உருவெளித் தோற்றம் கண்டனர் என்பதையும், சூர்ப்பணகை, இராமனைக் கண்டதாலும், இராவணன், சீதையைக் காணாத நிலையிலும் உருவெளித்தோற்றம் கண்டனர் என்பதையும், அகப்பொருளில் மட்டுமல்ல, புறப்பொருளிலும் பக்தி மேலீட்டாலும் இறைவனை எல்லா இடங்களிலும் உருவெளித் தோற்றமாகக் கண்டதையும் அறிந்து கொள்ள முடிகிறது.

துணை நூற்பட்டியல்

1. அபிராமிப்பட்டர், அபிராமி அந்தாதி - https://temple.dinamalar.com/Slogandetails.php?id=542

2. அமுதன் கம்பன் காட்டும் வைணவப் பேருலகம், லக்‌ஷண்யா பதிப்பகம், சென்னை, 2019.

3. இரவிச்சந்திரன், திகு. சிக்மண்ட் பிராய்டு உளப்பகுப்பாய்வு அறிவியல், அலைகள் வெளியீட்டகம், சென்னை, 2005.

4. உரை அடிகளாசிரியர் பிரபுலிங்கலீலை மூலமும் உரையும், மயிலம் பொம்ம புராதினம், பொம்மையபாளையம்.

5. கமலக்கண்ணன். இரா.வ,நாலாயிர திவ்வியப் பிரபந்தம் மூலமும் விளக்கவுரையும் தொகுதி I, II தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னை,1963.

6. கருப்பையா பழ., எல்லைகள் நீத்த இராமகாதை, விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர், 2008.

7. கருத்திருமன். பி. சி., கம்பர் கவியும் கருத்தும், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2018.

8. காசி. ஆ, கம்பரும் திருத்தக்கதேவரும், தமிழ்ச்சோலைப் பதிப்பகம்,சென்னை, 2010.

9. காலமும், கணக்கும் நீத்த காரணன் கம்பன், கட்டுரைத் தொகுப்பு, (பதிப்பாளர்கள் பழ.பழனியப்பன், சொ.சேதுபதி) கபிலன் பதிப்பகம் புதுச்சேரி, சென்னை.

10. சக்தி நடராசன்.க, கம்பரின் கை வண்ணம், சரசுவதி பதிப்பகம், ஆர்க்காடு, 2017.

11. சாரதாம்பாள்.செ., இலக்கியமும் உளப்பகுப்பாய்வும், ஹரிஹரன் பதிப்பகம், தென்றல் நகர், மதுரை, 2004.

12. ஞானசம்பந்தன் அ.ச, இராமன் பன்முகநோக்கில், சாரு பதிப்பகம், சென்னை, 2016.

13. ஞானசந்தரத்தரசு அ. அ, கம்பன் புதிய தேடல், தமிழ்ச்சோலைப்பதிப்பகம், புதுக்கோட்டை, 2012.

14. தமிழ்நேசன், கவிச்சக்கரவர்த்தி கம்பன் ஒரு பார்வை, வள்ளி பதிப்பகம், சென்னை, 2019.

15. பழனிவேலு. தா, காலத்தை வென்ற கம்பன், பல்லவி பதிப்பகம், ஈரோடு, 2021.

16. பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p319.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License