இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

ஆற்றுப்படை நூல்களில் சமத்துவம் - சகோதரத்துவம்

முனைவர் மா. பத்மபிரியா
உதவிப்பேராசிரியர், முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை,
தி ஸ்டாண்டர்டு ஃபயர் ஒர்க்ஸ் இராஜரத்னம் மகளிர் கல்லூரி, சிவகாசி.


முன்னுரை

பொருளைப் பங்கீடு செய்யும் குணம் ஆதி மனிதனின் சிறப்பு அடையாளமாகும். தனக்குக் கிடைக்கும் எத்தகையப் பொருளாக இருந்தாலும், தத்தமக்குள் பிணைக்கப்பட்ட மாந்தர் தம் தேவைக்கு ஏற்பப் பிரித்துக் கொடுத்தமையை இலக்கியச் சான்றாதாரங்கள் வெளிப்படுத்துகின்றன. அவர் தம் குழு ஒருங்கிணைவின் வழி சங்கிலித் தொடராக உணவுப் பரிமாற்றங்கள் நிகழ்ந்தமை குறித்து ஆற்றுப்படை இலக்கியங்கள் ஆவணப்படுத்தத் தவறவில்லை. உணவின் தேவைக்கு ஏற்றவாறு குழுவாக இணைவதும், குழுவாகப் பயணப்படுவதுமாக இருந்துள்ளனர். செல்வவளம் உள்ள கொடைவள்ளல் தந்த பரிசிலைப் பெற்ற கூத்தன், பாணன், பொருநன், விறலி என்ற கலைஞர்கள் தன்னை ஒத்த சகக் கலைஞர்களிடம் சகோதர உணர்வுடன் நடந்து கொண்டுள்ளனர். திசைமாறி அலையும் வறுமையுற்ற கலைஞன் மீது பரிசில் பெற்றவன் மிகுந்த பரிவு கொண்டுள்ளான். தன் கலைத்திறனைப் பாராட்டிப் பரிசு வழங்கிய வள்ளலின் இருப்பிட முகவரியை நில வரைபடமிட்டுக் காட்டுகிறான். பொருள் வழங்கும் வள்ளலிடம் சென்றால், வறுமை தீரும் என்று சகோதர உணர்வுடன் நம்பிக்கை ஊட்டுகிறான். அத்தகையத் தலைவனிடம் செல்வதற்கான வழித்தடத்தையும் தன்னை ஒரு பயண வழிகாட்டி போல பாவனை செய்து விரிவாகக் கூறுகிறான். இத்தகைய உணர்வு நிலையானது ஆண் –பெண் இருபாலரிடையே சமத்துவ – சகோதரத்துவ நிலையினைச் சுட்டுவதாக இக்கட்டுரை வழி ஆராயப்படுகின்றது.


ஆற்றுப்படைக் கலைஞர் என்னும் வழிகாட்டுனர்

மனிதன் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வது பயணமாகும். ஆற்றுப்படை என்பது சங்கச் சான்றோர்கள் பாடிய பாட்டு வகைகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதனைப் பயணப்பாட்டு என்றும் கூறலாம். ஆற்றுப்படையை ஆறு + படை என்று பிரித்தால் ஆறு என்பது வழியாகும். படை என்பது படுத்தலாகும். ஒருவர் மற்றொருவரை வழிப்படுத்தலாகும். தொல்காப்பியர் ஆற்றுப்படைக்கான இலக்கணத்தைப் பின்வருமாறு வரையறுத்துள்ளார்.

“கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச்
சென்று பயன்எதிரச் சொன்ன பக்கமும்” (1)

கூத்தர் என்போர் நாடகக் கலைஞர்; பாணர் என்போர் இசைக்கலைஞர்; பொருநர் என்போர் பாடலிலும் நடித்தலிலும் வல்லவர்.போர்க்களத்தைச் சிறப்பித்துப் பாடுபவரும் பொருநர் என்றழைக்கப்படுவர். விறலி என்பவள் ஆடல், பாடல், நடித்தல் கலைகளில் வல்லமை பெற்ற பெண்ணிற்கான சிறப்புப் பெயராகும். இத்தகைய கலைக்குழுவினர் உதவும் மனநிலையில் சகோதரப் பாசத்துடன் தான் பெற்ற வளங்களை அறிவித்து, பிறரை பயனடையச் செய்துள்ளனர். ஆற்றுப்படை என்னும் துறை அறம் போற்றும் பண்பினைக் கொண்டுள்ளது. “ஆற்றுப்படை என்ற இத்துறை அறப்பண்பு மிக்க வறியோர்க்குத் தம்பால் உள்ளனவெல்லாம் உவந்தீயும் வள்ளல்களைப் புகழ்ந்து பாடுதற்கென நல்லிசைப் புலவர்கள் வகுத்துக் கொண்டதொரு புலனெறி வழக்கமாகும். உயரிய மக்கட் பிறப்பெய்தியோர் அப்பிறப்பின் பெருமைக்கேற்ற செயலாக ஈகை தலைசிறந்ததொன்று” (2) என்று அறிஞர் மாணிக்கவாசகர் கூற்று கவனிக்கத்தக்கது.

• பொருநராற்றுப்படை குறிப்பிடும் வள்ளல் - சோழன் கரிகாற்பெருவளத்தான்.

• சிறுபாணாற்றுப்படை குறிப்பிடும் வள்ளல் - ஓய்மாநாட்டு நல்லியங்கோடன்

• பெரும்பாணாற்றுப்படை குறிப்பிடும் வள்ளல் - தொண்டைமான் இளந்திரையன்.

• கூத்தராற்றுப்படை குறிப்பிடும் வள்ளல் - நன்னன்சேய் நன்னன்

வறுமையில் அலைந்த மனிதர்களுக்கு உணவு முதல் அடிப்படைத் தேவைகளை வழங்கியவர்கள் இச்சான்றோர்கள் ஆவர்.


ஒரு நாட்டின் தலைவன் என்ற எண்ணம் இல்லாது சமத்துவ உணர்வுடன் இருந்துள்ளனர். வரவேற்பு முதல் பரிசில் தந்து வழி அனுப்பதல் வரை கலைஞர்களுடன் உரையாடிய தன்மை சமத்துவ சிந்தனை கொண்ட அரசர்களையே நமக்குப் பகர்கின்றது. தலைவன் சமத்துவம் காட்டியது போல, கலைஞர்கள் சகோதர உணர்வு காட்டியுள்ளனர். ஒரு கலைக்குழுவினர் மற்றவருக்குச் சகோதர உணர்வுடன் வழிமுறையையும் காட்டியுள்ளனர். ஆற்றுப்படையில் குறிப்பிடப்படும் கலைஞர்கள் ஒருவர் மற்றொருவருக்கு வழிகாட்டுனராக இருந்துள்ளனர். “ஓரிடத்தைப் பற்றியோ ஒரு நிகழ்ச்சியைப் பற்றியோ, முற்றிலும் புதியவர்களுக்குப் புரியும்படியாக அவர்களுக்குத் தெரிந்த மொழியில் எடுத்துரைத்து வழிகாட்டுபவரே வழிகாட்டி எனலாம்” (3) அத்தகையக் கலைஞர்கள் யார்? அவர்களுக்கு எப்பெயர்கள் வழங்கப்பட்டன என்பது ஆராய்ந்து நோக்குங்கால் கலையின் பெயரால் ஒருங்கிணைந்த சமத்துவ – சகோதரத்துவ மானுட உயர்நிலையும் புலனாகும்.

சகோதரக் கலைஞர்கள்

பாணன் என்பவன் பாட்டு இசைப்பவன், பண் இசைப்பவன் ஆவான். பாண் என்ற சொல் “பண் என்னும் சொல்லின் அடியாகப் பிறந்து முதல் நீண்டது தான் ‘பாண்’ என்பதாகும். பாணர்களில் ஆடவரைச் “சென்னியர், வயிரியர், செயிரியர், மதங்கர், இன்னிசைகாரர், பாணரென்ப” (4) என்று பிங்கல முனிவர் சுட்டுகின்றார்.

பாணர்களில் பெண்டிரை, “பாடினி, விறலி, பாட்டி, மதங்கி, பாடல் மகடூஉ பாண்மகளாகும்” (5) என்று திவாகர நிகண்டு சுட்டுகின்றது. இசையும் கூத்தும் முழுதுறத் தழுவி வாழ்ந்த ஒரு பழங்குடியினர் பாணர் ஆவர். இவர்கள் பாடுவார் என்ற அளவில் பொருள் சொல்லக் கூடிய சுருங்கிய கலை வல்லார் அல்லர். “பாடுவாரும், ஆடுவாரும், கருவியிசைப்போரும், கருவி செய்வாரும் அவர்தம் பெண்டிரும் கூடிய ஒரு பெருந்தொகுதியினர்” (6) என்று இரா. இளங்குமரன் சுட்டுகின்றார்.

“இடனுடைப்பேரி யாழ் முறையுளிக் கழிப்பிக்” (பெரும்பாணாற்றுப்படை.462)

“இன்குரல் சீறியாழ் இடவயின் தழீஇ” (சிறுபாணாற்றுப்படை.35)

பாண்மரபினர் சிறுபாணர், பெரும்பாணர் என இரு பிரிவினராயிருந்தனர். அவர்களை இசைப்பாணர், யாழ்ப்பாணர், மண்டைப்பாணர் என மூன்று வகைப்படுத்துவர். வாய்ப்பாட்டு இசைப்போர் இசைப்பாணர் என்றும் நரம்புக்கருவி இசைப்போர் அதாவது யாழை இசைத்துப் பாடுவோர் யாழ்ப்பாணர் என்றும் அழைக்கப்பட்டனர்.

“பழுமரந் தேடும் பறவை போலக்
புல்லென் சுற்றமொடு கால்கிளந்து திரிதரும்” (பெரும்பாணாற்றுப்படை.20-21)

வறுமையுடைய பாணன் தன்னுடைய சுற்றத்துடன் சகோதர உணர்வுடன் இருந்த தன்மையால், தனக்குப் பொருள் வழங்கும் வள்ளலைக் காணச் செல்லும் போது கூடக் குழுவாக பயணித்துளள்னர்.

சங்கப்பாடல்களில் பொருநன் என்ற சொல் வீரன், அரசன், இசைக்கூத்து நிகழ்த்தும் கலைஞன் எனப் பல பொருண்மைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இசைக்கலையில் தேர்ச்சி பெற்றவர்கள். இவர்கள் குழுக்களாக சென்று ஆடல், பாடல் ஆகிய திறன்களை வெளிப்படுத்திப் பரிசில் பெற்றுள்ளனர். பொருநர் ஏர்க்களம் பாடுவோர், போர்க்களம் பாடுவோர், பரணி பாடுவோர் எனப் பல வகைப்படுவர். பொருநர் இசைப்பாடலோடு ஆடலிலும் வல்லவர். யாழொடு, தடாரி, கிணை போன்ற இசைக்கருவிகளை இயக்கி ஏர்க்களத்தும் போர்க்களத்தும் உழவரும் வீரரும் செய்யும் செயல்களை பொருநர்கள் நடித்துக் காட்டுவர்.

கூத்தர் என்போர் ஆடவும், பாடவும் இசைக்கருவி இயக்கவும் திறன் வாய்ந்த நிகழ்த்துக் கலைஞர் ஆவர். “கூ, கூடு, கூட்டு, கூட்டுவித்தல், கூத்தல், கூத்து எனக் கொள்ளலாம். கூத்தினை நடிப்போர் கூத்தர் எனப்பட்டனர்” (7) இக்கூத்தர்களுக்குச் சுற்றமாகப் பாணரும், விறலியரும் விளங்கியுள்ளனர்.

“கனிபொழி கானம் கிளையோடு உணீஇய
துணைபறை நிவக்கும் புள்ளினம் மான” (மலைபடுகடாம்.54-55)

என்னும் அடிகளில் கனிகளை நாடிச் செல்லும் பறவைக் கூட்டம் போல ஒன்றுபட்டு பொருள் தேடியுள்ளனர்.


வறுமையும் கலைஞர்களின் ஒற்றுமையுணர்வும்

சிறுபாணனின் உடல் கடும் பசியால் மிகவும் வாடியது என்பதை “அறிபசி வருத்தம்”என்று சிறுபாணாற்றுப்படை பதிவு செய்துள்ளது.

“புல்லென யாக்கைப் புலவு வாய்ப்பாண” (பெரும்பாணாற்றுப்படை.21)

பாணனின் வருந்திய உடலை “இலம்படு புலவர்” (மலைபடுகடாம்.576) குறிப்பிடுகின்றது.

வறுமையுள்ள கலைஞர் நைந்த உடையை அணிந்திருந்தனர் என்பதைப் பெரும்பாணாற்றுப் படையிலும் காணமுடிகிறது. (பெரும்பாணாற்றுப்படை.80-81,153-154)

பாணன் வீட்டு அடுக்களைச் சுவர் சிதல் அரித்தும், காளான் பூத்தும் காணப்படுவதாக ஆற்றுப்படையில் காட்சிப்படுத்தியுள்ளது. அவர்களின் அடுக்களையில் பசியால் நாய் குட்டிகளும் படுத்துக் கிடந்தன. பசியால் இளைத்த உடலையுடைய கிணைமகள் குப்பையில் பூத்திருந்த வேளைக்கீரையை கொண்டு வந்து உப்பு கூட இல்லாமல் வேக வைத்து உணவுண்டுள்ளாள். இத்தகைய உணவைப் பிறர் காணாதவாறு தலைவாயிலை அடைத்துக் கொண்டு தன் சுற்றத்தோடு பாணன் உண்பான் என்று சிறுபாணாற்றுப்படை எடுத்துரைக்கிறது. பெரும்பாணாற்றுப்படை பசியின் கொடுமையை பழம்பசி என்ற சொல்லாடலால் சுட்டுகின்றது.

“பழம்பசி கூர்ந்தவெம் இரும்பே ரொக்கல்” (பெரும்பாணாற்றுப்படை.25)

தங்களின் வறுமையைப் பெரும் செல்வந்தர்கள் மாற்றியதைப் போல, பிற கலைஞர்களின் வறுமையும் மாற்றப்பட வேண்டும் என்ற எண்ணம் உடையவராக இருந்துள்ளனர். அவ்வழிமுறையே ஆற்றுப்படுத்தலாக மாறியுள்ளது.

“… … … … … நீயிரும்
இவணயந் திருந்த இரும்பேர் ஓக்கல்
செம்மல் உள்ளமொடு செல்குவிர் ஆயின்” (சிறுபாணாற்றுப்படை.143-145)

என்றும்,

“நல்லியக் கோடனை நயந்தனிர் செலினே” (சிறுபாணாற்றுப்படை.269)

என்று ஆற்றுப்படுத்துகிறான்.

“பல்வேல் திரையன் படர்குவிர் ஆயின்” (பெருபாணாற்றுப்படை.37)

கொல்லுகின்ற பசி மாற நின்னுடைய பெரிய சுற்றத்துடன் காலம் நீட்டிக்காமல் எழுந்திருப்பாயாக என்று பெரும்பாணன் ஆற்றுப்படுத்துகிறான்.

“ஆடுபசி உழந்தநின் இரும்பேர் ஒக்கலொடு
நீடுபசி ஓராஅல் வேண்டின் நீடுஇன்று
எழுமதி வாழி ஏழின்கிழவ” (பொருநராற்றுப்படை.61-63)

இவ்வாறே, கூத்தர்களின் தலைவனே வருக! என்று பரிசில் பெற்ற கூத்தன் பெறாத பாணனை நோக்கி அழைக்கிறான். வறுமை நிலையில் உள்ள பாணனைப் பார்த்து, நீ செய்த நல்வினைப் பயனால் என்னை எதிரில் கண்டுள்ளாய் என்று பரிசு பெற்ற வந்த பாணர், கூத்தர் கூறியுள்ளதை அறியும் போது பிறருக்குத் தீங்கு செய்யாமல் நல்லதை மட்டுமேச் செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கோடு கலைஞர்கள் சகோதர உணர்வுடன் வாழ்ந்து வந்துள்ளமை புலனாகின்றது.

“அறியா மையின் நெறிதிரிந்து ஓராஅது
ஆற்றுஎதிரப் படுதலும் நோற்றதன் பயனே” (பொருநராற்றுப்படை.58-59)

“உள்ளினிர் சேறிர் ஆயின் பொழுதுஎதிர்ந்த
புள்ளினர் மன்ற, என்தாக்கு உறுதலின்” (மலைபடுகடாம்.65-66)

இவ்வாறு வறுமை தீர்க்கும் வள்ளலைத் தேடிச் செல்லும் நீங்கள் என்னை எதிரில் கண்டதால் நன்னிமித்தம் பெற்றவர்களானீர் என்று பரிசில் பெற்ற பாணர் கூறுகிறார். இதன்மூலம் பாணர்களின் உயர்ந்த பண்பும் ஆற்றுப்படுத்தும் தன்மையும் வெளிப்படுகிறது.


முடிவுரை

ஆற்றுப்படையில் பரிசில் பெற்ற கலைஞன், பரிசில் பெறாத கலைஞனை ஆற்றுப்படுத்துவதேத் தனி சிறப்பாக அமைகிறது. அதாவது, வழிகாட்டுதல் என்பது தேவையான ஒன்றாகும். வாழ்க்கையின் வெற்றி, வாழ்க்கையின் முழுநிறைவு அனைத்துமேச் சிறந்த வழிகாட்டுவதன் மூலமேச் சாத்தியமாகிறது. அந்த வகையில், ஆற்றுப்படைக் கலைஞர்கள் சிறந்த வழிகாட்டியாக தோழமை உணர்வுடன் இருந்துள்ளனர். பொருள் பெற்று வந்த கலைஞன் இன்னின்ன வழியாகச் செல்லுங்கள் என்று மட்டும் கூறாமல், எந்தெந்த இடங்களில் தங்கிச் சென்றால் நலம் விளையும் என்பதனையும் கூறி ஆற்றுப்படுத்துகிறான். புரவலன் என்னும் கொடை வழங்கும் வள்ளல் தலைமைத்துவம் கொண்ட ஆளுமையாக இருந்தாலும் கூத்தன், பாணன், பொருநன், விறலி என்று அனைத்துக் கலைஞர்களுடன் சமத்துவத் தன்மையுடன் இருந்துள்ளான். புலவன் என்னும் கலைஞன், தமக்குள் சகோதரத் தன்மையுடன் இருந்தள்ளனர்.

அடிக்குறிப்புகள்

1. இளம்பூரணனார் (உ.ஆ), தொல்காப்பியம், பொருளாதிகாரம், புறத்திணையியல், நூ..30

2. மாணிக்கவாசகர். ஞா., பத்துப்பாட்டு மூலமும் விளக்க உரையும், ப.13

3. ஈஸ்வரன். ச., சுற்றுலாவியல், ப.87

4. பிங்கல முனிவர், பிங்கல நிகண்டு, ப.815

5. சண்முகம் பிள்ளை,மூ. (பதி.ஆ), திவாகர நிகண்டு, ப.21

6. இளங்குமரன். இரா., பாணர், பக்.120-121

7. தமிழ்ப்பேரகராதி, தொகுதி,2., ப.1071

துணைநூற்பட்டியல்

1. சோமசுந்தரனார். பொ. வே (உ.ஆ), பெரும்பாணாற்றுப்படை, திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் (லி), சென்னை, 2007.

2. சோமசுந்தரனார். பொ. வே (உ.ஆ), சிறுபாணாற்றுப்படை, திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் (லி), சென்னை, 2007.

3. சோமசுந்தரனார். பொ. வே (உ.ஆ), பொருநராற்றுப்படை, திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் (லி),சென்னை, 2007.

4. சோமசுந்தரனார். பொ. வே (உ.ஆ), மலைபடுகடாம், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் (லி), சென்னை, 2008.

5. இளங்குமரன். இரா., பாணர், மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம்.

6. இளம்பூரணனார் (உ.ஆ), தொல்காப்பியம் பொருளதிகாரம், சாரதா பதிப்பகம், சென்னை, 2005.

7. சண்முகம் பிள்ளை மூ. (பதி.ஆ), திவாகர முனிவர், சேந்தன் திவாகர நிகண்டு, சென்னை பல்கலைக் கழகம், சென்னை.1993.

8. பிங்கல முனிவர், பிங்கல நிகண்டு, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1978.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p321.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License