இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
இலக்கியம்

இராமன் கடவுளாகக் காட்சிப்படுதல்

முனைவர் செ. ரவிசங்கர்


முன்னுரை

தமிழ் இலக்கியங்களில் கம்பராமாயணம் மிகவும் போற்றத்தக்க நூல் ஆகும். அறத்தைப் பற்றி மிகத் தெளிவாகக் கருத்துரைக்கும் நூல். குறிப்பாக, பெண்களினால் அழிந்தவர்களைப்பற்றி இராமாயணம் போல் வேறு நூல் குறிப்பிட்டதில்லை. அந்த வகையில் இராமாயணத்தில் ஆரணிய காண்டத்தில் உள்ள விராதன் வதைப்படலம் மிக முக்கியமானது. இராமனைத் திருமாலின் அவதாரம் என்று காட்டும் பகுதியாக இந்தப் படலம் அமைந்துள்ளது. மேலும் காப்பியத்தின் இரண்டாவது திருப்பு முனையாக இக்காண்டம் அமைந்துள்ளது. காப்பிய வளர்ச்சிக்கு இரண்டாவது திருப்புமுனை இக்காண்டத்தின் நடுநாயகமாக அமைந்துள்ளதைக் காணலாம். அயோத்தியா காண்டத்தில் கைகேயி செயல் காப்பிய நோக்கத்திற்கு முதல் திருப்பு முனையாகும். ஆதன் விளைவாகத்தான் திருமால் இராமனாக அவதாரம் எடுத்த நோக்கம் நிறைவேறியது. மேலும் காட்டடிற்குச் சென்ற இராமன் பதினான்கு ஆண்டுகள் கழித்து நாட்டிற்கு வந்திருந்தால் என்ன பயன்? அதனால் தான் இராமன் கடவுள் (திருமால்) என்பதை வெளிப்படுத்துவதாக ஆரணிய காண்டம் அமைந்துள்ளது. அந்த நிலையை வெளிப்படுத்தும் படலமாகத்தான் விராதன் வதைப்படலம் அமைந்துள்ளது. அந்த வகையில் இக்கட்டுரை விராதன் படலத்தின் மூலம் இராமன் கடவுளாகக் காட்சிப்படுவதை ஆராய்கிறது.

விராதன் தோற்றம்

கம்பர் தமது கவித் திறத்தினால் விராதனை அறிமுகம் செய்யும்போதே மிகக் கொடிய பசியுடைய அரக்க குணம் கொண்டவன் என்று கூறியுள்ளார். அதாவது,

"எட்டோடு எட்டுமத மா கரி
இரட்டி அரிமா
வட்ட வெங்கண் வரை யாளி
பதினாறு வகையின்
கிட்ட இட்டு இடை கிடந்தன
செறிந்தது ஒருகைத்
தொட்ட முத்தலை அயில் தொகை
மிடல் கழுவொடே" (ஆரண்ய: பாடல் - 5)

என்று பாடலில் விராதன் பண்பினை உருவகப்படுத்துகிறார்.

விராதன் கோரப் பசியில் இருக்கிறான் என்பதைக் கம்பர் "பதினாறு மதங் கொண்ட பெரிய யானைகள்; முப்பத்தி ரெண்டு சிங்கங்கள்; 16 யாளிகள் போன்றவற்றையெல்லாம் சூலாயுதத்தில் வரிசையாகக் கோர்த்துள்ளான். இவையெல்லாம் விராதன் சாப்பிடுவதற்கான உணவு" என்கிறார் கம்பர்.

மேலும் விராதனின் உடலின் தோற்றத்தில் குறிப்பிடும் போது, "நச்சுபோல் கொடுமையும் மலைபோல் வலிய தோற்றமும் கொண்டவன்" என்று கூறலாம். அவனின் உடல் உறுப்புக்களைப் பற்றிக் குறிப்பிடும் போது;

"புக்க வாள் அரி முழுங்கு செவியின் பொறிஉற
பக்கம் மின்னும் மணிமேரு சிகரம் குழைபட
செக்கர் வான் மழை நிகர்க்க எதிர் உற்ற செருவத்து
உக்க வீரர் உதிரத்தின் ஒளிர் செச்சையி னொடே" (பா - 8)

என்கிறார் கம்பர்.

அதாவது, “விராதனின் காது என்பது மலைக்குகை போல இருந்தது. அவனின் கரிய பூசிய சிவந்த இரத்தப் பூச்சு செவ்வான மேகம் போன்று இருந்தது. இவ்வாறான தோற்றம் கொண்டவன் விராதன்” என்று கம்பர் கூறியுள்ளார்.

விராதனின் ஆடை

விராதனின் ஆடைகளைப் பற்றி கம்பர் கூறும் போது;

“செற்ற வாள் உழுவ வன் செறி
அதள் திருகுறச்
சுற்றி வாரள உரித் தொகுதி
நீவி தொடர
கொற்றம் மேவு திசை யானையின்
மணிக் குலலுடைக்
கற்றை மாசுணம் விரித்து வரி
கச்சு ஒளிரவே” (பா - 13)

என்று கூறுகிறார்.

விராதன் தான் கொன்ற புலியின் தோலையும், பல யானைகளின் தோற்கூட்டத்தை அரையில் ஆடையாகவும், யானைகளின் மணிகளைக் கோர்த்த மலைப்பாம்பைக் கச்சாகவும் கட்டியிருந்தான். இத்தோற்றம் விராதனின் அரக்கக் குணத்தைக் காட்டுகிறது.

இவ்வாறாக விராதனின் உருவத்தை கம்பர் வருணித்துள்ளார். இது போன்ற தோற்ற வருணனை புராணக் கதைகளில் அரக்கர்களுக்குரியதாக அறிய முடிகிறது. எதார்த்த மனிதனின் நடவடிக்கை, பழக்க வழக்கங்களில் இருந்து மாறுபட்ட கோணத்தில் ஒரு பாத்திரத்தைப் படைக்கும்போது அது எதிர் நிலைப் பண்பினைப் பெற்றப் பாத்திரம் என முடிகிறது. அந்த வகையில் விராதன் பாத்திரமும் எதிர் நிலை பாத்திரம் என்பது அறிந்து கொள்ள முடிகிறது.



சீதையைக் கவர்தல்

விராதன் தலைமைப் பாத்திரத்திற்கு எதிர்நிலைப் பாத்திரம் என்பதைத் தோற்றத்தைக் கொண்டு உணர முடிந்தது, அது போலவே விராதன் காட்டிடையே இராமன் இலக்குவனுடன் சென்ற சீதையைக் கவர்ந்து வானுலகில் சென்று விட்டான், என்பதை

“நில்லும் நில்லும் என வந்து, நிணம்
உண்ட நெடு வெண்
பல்லும் வல் எயிறும், மின்னு பகு
வாய் முழை திறந்து
அல்லி புல்லும் அலர் அன்னம்
அனையாளை ஒரு கை
சொல்லும் எல்லையில் முகந்து உயர்
விசும்பு தொடர” (பா.19)

என்று கம்பர் புனைந்துள்ளார்.

அரக்கர்களின் கதையில் பெண்களைக் கவர்ந்து செல்வது போலவே பல கதைகள் உள்ளன. அது போலவே விராதன் சீதையைக் கவர்ந்து போவது தெரிகிறது. இது போன்றதொரு கதை அமைப்பு கம்பராமாயணத்தில் இடம் பெறுவது ஏதோ ஒரு கருத்தைக் கூற உள்ளதாகத் தெரிகிறது.

இராமன் தாக்குதல்

சீதையை விராதன் தூக்கிச்செல்வதைக் கண்ட இராம, இலக்குவன் சினம் கொண்டனர். இரண்டு பேரும் விராதனை விரட்டிச் சென்று போர் செய்தனர். அக்காட்சியை கம்பர் பின்வருமாறு கூறுகிறார்.

“இலை கொள' வேல் அடல் இராமன் எழுமேக உருவன்
சிலை கொள் நாண் நெடிய கோதை
ஒலி ஏறு திரை நீர்
மலைகள் நீடு தலம் நாகர் பிலம்
வானம் முதல் ஆம்
உலகம் ஏழும் உரும்ஏறு ஒலித்தது உரறவே” (பா.23)

அதாவது, இராமன் விராதன் மீது எய்த அம்பு அதன் ஒலி ஏழு உலகங்களிலும் இடி ஏறு போல ஒலித்தது என்பது இப்பாடலால் பெறப்படுகிறது. அதன் விளைவாக விராதன் சீதையை விட்டுவிட்டான். அதற்குப் பதிலாக இராமனை எதிர்த்துப் போர் புரிந்தான். அதாவது, தனது கையில் வைத்துள்ள சூலப்படையை இராமன் மீது எரிந்தான், ஆனால் அது இராமனின் வில்லினால் இரண்டு துண்டாக உடைந்து கீழே விழுந்தது. அதனைக் கண்டதும் கோபப்பட்ட விராதன்

“பார் ஒடுங்குறு கரம் கொடு
பருப்பதம் எல்லாம்
வேரொடும் கடிது எடுத்து எதிர்
விசைத்து விடவும்” (பா.28)

அதாவது மலைகளை எல்லாம் வேரோடு பிடுங்கி, அதனை இராமன் மீது எறிந்தான். இராமன் தனது வில்லினால் எய்யப்பட்ட அம்பு அந்த மலைகளை திருப்பி அனுப்பியது, அம்மலைகள் எல்லாம் விராதன் மேல் பட்டு கானத்தை உண்டு பண்ணியது. இறுதியாக இராமன் நெருப்பு போன்ற அம்புகளை எறிந்து விராதனின் வலிமையைக் குறைத்தான்.



விராதன் மீது இராமன் திருவடிபடுதல்

இறுதியாக விராதன் மீது இராமன் இலக்குவன் கொண்ட கோபத்தின் விளைவாக அவனின் தோள்களை இரண்டு பேரும் தமது வாளினால் வெட்டி சாய்த்தனர். மேலும் விராதனை மண்ணைத் தோண்டிப் புதைக்கத் திட்டமிட்டனர். அப்போது இராமன் விராதனைத் தன் காலால் எட்டி உதைத்தான். அப்போது அவன் உண்மையான உருவம் பெற்றான். தற்போது விராதன் தன் வரலாற்றை இராமனிடம் விளக்குகிறான்

“இம்பர் உற்று இது எய்தினேன்
வெம்பு விற்கை வீர பேர்
தும்புரு தனதன் சூழ்
அம்பரத்து உருளன் அரோ” (பா.62)

காக்க வந்த காம நோய்
துரக்க வந்த தோமினால்
இரக்கம் இன்றி ஏவினான்
அரக்கன் மைந்தன் ஆயினேன் (பா.64)

அன்ன சாபம் மேவி நான்
இன்னல் தீர்வது ஏது எனா
நின்ன தாளின் நீங்கும் என்று
உன்னும் எற்கு உணர்த்தினான் (பா.65)

என்று கம்பர் விராதனின் சாப வரலாற்றைக் கூறுகிறார்.

அதாவது என் பெயர் தும்புரு. குபேரன் ஆட்சிக்குட்பட்ட வானுலகில் வீணை மீட்டுபவனாக இருந்தேன். எனக்கு ஏற்பட்ட காம நோய் காரணமாகக் குபேரனால் அரக்கனாகும் படி சபிக்கப்பட்டேன் நான். எனக்கு எப்போது இச்சாபம் நீங்கும் எனக் கேட்டேன். அதற்கு இராமன் காலடி பட்டதும் தீரும் என்று விராதன் கூறினான். இக்கதை இராமனை இப்பிறவியில் கடவுளாகக் காட்டுகிறது.

இராமனின் மகிமை

கம்ப இராமாயணத்தில் இராமன் திருமாலின் அவதாரம் என்பதைக் காட்டும் பகுதியாக 'விராதன்' படலமும் அமைந்துள்ளது. எனவே தான் விராதன் இராமனின் மகிமையைக் கண்டு, துதிப்பதாக கம்பர் பாடலைப் புனைந்துள்ளார்.

“வேதங்கள் அறைகின்ற உலகு
எங்கும் விரிந்தன உன்
பாதங்கள் இவை என்னின்
படிவங்கள் எப்படியும்!
ஓதம் கொள் கடல் அன்றி, ஒன்றினோடு
ஒன்று ஒவ்வாப்
பூதங்கள் தோறும் உறைந்தால், அவை
உன்னைப் பொறுக்குமோ! (பா.47)

என்று விராதன் இராமனின் பெருமைகளைப் பேசுகிறான். வேதங்கள் சொல்கின்ற எல்லா உலகங்களிலும் பரந்துள்ளன உன்னுடைய திருவடிகள். இது தாம் என்றால் உன்திரு அடிகளின் மற்ற உறுப்புகள் எவ்வாறு அமைந்துள்ளனவோ என்று இராமனைப் பார்த்துக் கடவுள் பக்தியோடு விராதன் பேசுகிறான்.



இராமனைக் கடவுளாகக் காட்டுதல்

கம்ப இராமாயணத்தின் தொடக்கத்தில் இராமன் தசரதனின் மகன், என்று சாதாரண மனிதனாகக் காட்டிய கம்பன் ஆரணிய காண்டத்தில் தான் கடவுளாக இராமனைக் காட்டுகிறார்.

“ஓயாத மலர் அயனே முதல் ஆக
உளர் ஆகி
மாயாத வானவர்க்கும் மற்று
ஓழிந்த மன்னுயிர்க்கும்
நீ ஆதிமுதல் தாதை நெறி முறையில்
ஈன்று எடுத்த
தாய் ஆவார் யாவரோ? தருமத்தின்
தனி மூர்த்தி” (பா.52)

இங்கு இராமனை மிக உயர்வாக அறத்தின் ஒப்பற்ற வடிவாக இராமனே என்றும் பிரமன், மற்றும் தேவர்களுக்கும் நீயே முதன்முதலில் தோன்றிய தந்தை என்றும் விராதன் பக்தி முறையின் வணங்குகிறான். மேலும் இராமன் திருமாலின் அவதாரம் என்பதை மிகத் தெளிவாக

“நீ ஆதி பரம்பரமும்
நின்னவே உலகங்கள்
ஆயாத சமயமும் நின் அடியவே
அயல் இல்லை
தீயாரின் ஒளித்தியலால் வெளி
நின்றால் தீங்கு உண்டோ?
வியாத பெரு மாய
விளையாட்டும் வேண்டுமோ? ” (பா.53)

என்று கூறுகிறான் விராதன்.

அவன் இராமனை நீ முதன்மையான மேலாம் கடவுளும் ஆவாய் எல்லா உலகங்களும் உனக்குரியனவே என்று கூறுகிறான்.

முடிவுரை

இவ்வாறாக கடவுளின் தன்மையில் விராதன் இராமனின் கால் பட்டதால் தான் மாற்றம் அடைந்துள்ளான் என்பதை ஒரு படலமாக வைத்துக் கம்பர் இராமாணயத்தை எழுதியுள்ளார். கம்ப இராமாயணம் இது போன்ற படலத்தை கொண்டிருக்க வில்லை என்றால் இராமன் கடவுள் என்பது தெரியப்படுத்த வேறுவழி இல்லை எனவே கம்பர் இப்படலத்தைப் படைத்துள்ளார். இராமனின் கடவுள் நிலையை விளக்க விராதனின் கதையும் பயன்பட்டுள்ளது. இக்கதையின் வாயிலாக இராமன் திருமாலின் அவதாரம் என்பது புலனாகிறது அந்த வகையில் இப்படலம் மிக முக்கியமானது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p82.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License