Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!

                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam

Content
உள்ளடக்கம்

சமையல்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
அறிவியல் & தொழில்நுட்பம்

நனோ தொழில்நுட்பத்தின் பிரயோகங்களும் அதனால் ஏற்படும் ஒழுக்கமீறல்களும்

திரவியராசா நிறஞ்சினி
உதவி விரிவுரையாளர், மெய்யியல் மற்றும் தத்துவ விழுமியக்கற்கைகள் துறை,
கலை கலாசார பீடம், கிழக்கு பல்கலைக்கழகம், இலங்கை.


ஆய்வுஅறிமுகம்

தொழில்நுட்பங்கள் மனித இனத்தின் தேவை கருதி உருவாக்கப்படுகின்றது. தொழில்நுட்பங்கள் இன்றி இன்றைய உலகில் மனித சமூதாயத்தின் எந்தவொரு நகர்வும் சாத்தியமில்லை என்ற நிலையில் நாம் வாழ்ந்து வருகின்றோம். இத்தகைய தொழில்நுட்பத்தின் பிரயோகத்தன்மை அதிகரிப்பதால் மனித சமூதாயம் நன்மையையும் தீமையையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கின்றது. இந்தப் பின்னணியில் நனோ தொழில்நுட்பமானது மருத்துவம் தொடக்கம் விண்வெளி என்றவாறாக பல்வேறு துறைகளில் செல்வாக்கு செலுத்தி வருகின்றது. அத்துடன் பொருளாதார ரீதியாக இத்தொழில்நுட்பம் முக்கியம் பெறுவதனால் அதன் எதிர் காலத்தை உணர்ந்து பல முன்னணி நிறுவனங்கள் இவ்வாய்வுகளில் பாரிய முதலீடுகளை மேற்கொள்ளுகின்றது. இத்தகைய செயற்பாட்டினால் வருமானம் போதியளவு பெறப்படுகின்றது. இதனால் இத்தொழில்நுட்பத்தை மனித வாழ்வில் இருந்து நீக்கிவிட முடியாத நிலை காணப்படுகின்றது. எனவே இத்தகைய தொழில்நுட்பங்கள் மனித வாழ்விற்குப் பல்வேறு வழிகளில் உதவினாலும் கூட, அதனால் ஏற்படும் விளைவுகளை மனித சமுதாயமே அனுபவிக்கின்றது.

நனோ தொழில்நுட்பம்

மனிதன் தன்னுடைய பகுத்தறிவைக் கொண்டு தன்னைச் சுற்றியுள்ள பொருட்களைப் பார்த்து வியக்கத் தொடங்கியதில் இருந்து விஞ்ஞானம் ஆரம்பமானது. இத்தகைய விஞ்ஞானத்தின் வளர்ச்சி அல்லது பயன்பாட்டின் மூலம் பெறப்பட்ட ஒன்றே தொழில்நுட்பம் ஆகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் உருவான கைத்தொழில் புரட்சி மூலமே பிற்பட்ட காலங்களில் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி முன்னேற்றம் ஏற்பட்டது. அந்த வகையில் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பௌதீகம் ஏற்படுத்திய புரட்சியின் விளைவாக அடையாளப்படுத்தப்பட்டதே நனோ தொழில் நுட்பம்ஆகும்.

உலகில் உள்ள ஒவ்வொரு பொருளின் அடிப்படை அலகு என்று வர்ணிக்கப்படுவது அணு ஆகும். அந்த அணு அளவில் கையாளப்படும் இந்த நனோ தொழில்நுட்பத்தின் அடிப்படைச் செயல் ஆதாரம் அணு அளவிலேயே எந்தவொரு செயலையும் செய்யமுடியும் மற்றும் அதன் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த முடியும் என்பதுதான். ஒரு பொருளின் அமைப்பும் செயல்பாடுகளும் அதன் அணு கட்டமைப்பை பொறுத்து தான் உள்ளது. அணுக் கட்டமைப்பை மாற்றுவதன் மூலம் அந்தக் குறிப்பிட்ட பொருளின் செயல்பாடுகளை மாற்றி அமைக்கலாம். இதனை அடிப்படையாகக் கொண்டே இயற்கை பல்வேறு புதுமைகளை தினம் தோறும் நிகழ்த்திக் கொண்டு வருகிறது.

“மண்ணில் புதையுண்ட கரி வைரமாக மாறுகிறது”, “கடலில் உள்ள நீர் மேகமாக மாறுகின்றது” இது போல இயற்கையின் பல செயல்களைக் கூறலாம். இதே செயல்களை மனித இனமும் செயற்கையாக நன்மை தரும் விதமாகச் செய்து கொள்ள முடியும் என்ற மனித ஆராய்ச்சியின் விளைவாகக் கண்டு பிடிக்கப்பட்டதே நனோ தொழில்நுட்பம் ஆகும். நனோ தொழில்நுட்பம் என்பது “100 நனோமீட்டருக்குக் குறைவான அளவுகளால் அமைந்த உருவ அமைப்புக்களைக் கொண்டு அச்சிறு அளவாக அமையும் பொழுது அங்கு சிறப்பாக வெளிப்படும் பண்புகளைக் கொண்டு ஆக்கப்படும் கருவிகளும் அப்பொருட் பண்புகளைப் பயன்படுத்தும் நுட்பியலும்”நனோ தொழில்நுட்பம் என்று அழைக்கப்படுகிறது.

நனோ தொழில்நுட்பத்தின் பிரயோகம்

இன்றைய கால கட்டத்தில் எமது வாழ்வியலை மாற்றியமைக்கும் வகையில் நனோ தொழில்நுட்பமானது பல துறைகளிலும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளது. நனோ தொழில்நுட்பத்தால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் ஏற்கனவே சந்தைக்கு வந்துவிட்ட நிலையில் மக்கள் மத்தியில் அதனோடு தொடர்பான விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. நனோ தொழில்நுட்பம் செல்வாக்கு செலுத்தியுள்ள துறைகளைப் பின்வருமாறு கூறலாம். அவையாவன உயிரியல், மருத்துவம், பொறியியல், இயற்பியல், வேதியல், மின்னியல், தகவல் தொழில்நுட்பம், விண்வெளி, எரிசக்தி முதலானவைகளைக் கூறலாம்.

மருத்துவத் துறை

நனோ தொழில்நுட்பம் மருத்துவ ரீதியாக மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி வருகின்றது. இத்தொழில்நுட்பத்தால் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளை உட்கொண்ட மறுகணமே சம்பந்தப்பட்ட பகுதியில் தொழிற்படும் ஆற்றல் மிக்கன. இதனால் சாதாரண நோயாளி ஒருவர் தனது நோய் குணமாக நீண்ட நேரமோ அல்லது நீண்ட நாட்களோ காத்திருக்க வேண்டிய அவசியம் அற்றுப் போகிறது. இத்தகைய நனோ தொழில்நுட்பம் மருத்துவத்துறையில் பல புதுமைகளை படைத்துள்ளது அவையாவன புற்றுநோய் மற்றும் பல்வேறு பட்ட நோய்களுக்குத் தேவையான சிகிச்சை மருந்துகள், விச, நாய்க்கடிக்கான உடனடி மருந்துகள், டெங்கு நோய்க்கான சிகிச்சை, நோயை அறிதல், நோய் எதிர்ப்புத் திறன், கட்டிகளைக் கண்டறிதல், மனித உடலின் குறிப்பிட்ட செல்லைக் கண்டறிதல், மலேரியா நோய்க்கான மருந்துகள், நீரிழிவு நோய்க்கான சிகிச்சையும், மருந்துகளும் மாத்திரைகளின் பிரயோகம், சளித் தொல்லைக்கான மருந்துகள், சத்திர சிகிச்சை இன்றி நோயாளிக்கு சிகிச்சை வழங்குதல், புதிய கருவிகளின் பிரயோகம் வைரஸ்களை அழித்தல் சிகிச்சை, ஊசிகளின் பாவனை, மூளையின் செயற்பாடுகள் மற்றும் இதயத்தின் செயற்பாடுகளை கண்காணித்தல், இரத்தத்தை உறைய வைக்கும் உடனடி மருந்து முதலியவற்றை குறிப்பிடலாம்.

நுகர்வோர் துறை

நுகர்வோர்துறையில் நனோ தொழில்நுட்பம் மூலம் பல சிறந்த பொருட்களை பெறக்கூடியதாக இருக்கிறது. அந்தவகையில் நனோ கார் தயாரிப்பு, ஒளியின் வேகத்தில் இயங்கும். 3டி கமராதயாரிப்பு, 30 நொடிகளில் பேட்டரியை சார்ஜ் செய்யும் சார்ஜர் தயாரிப்பு, துணி வகைகள் தயாரிப்பு, குளிர் சாதனப் பெட்டி தயாரிப்பு, அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு, கணினி தயாரிப்பு, கண்ணாடி தயாரிப்பு, சலவை இயந்திரம் தயாரிப்பு, தொலைக்காட்சிப் பெட்டி தயாரிப்பு, கையடக்கத் தொலைபேசி தயாரிப்பு, பெயின்ட் உற்பத்தி, வாகன உதிரிப்பாகங்கள் தயாரிப்பு, நனோ சிம் கார்ட் தயாரிப்பு, நனோ சிப் தயாரிப்பு முதலியனவற்றைக் குறிப்பிடலாம்.விவசாயத் துறை

விவசாயத் துறையில் குறிப்பாக, இடுபொருள் மேலாண்மை, களை மேலாண்மை, நீர்ப்பாசன மேலாண்மை, மண் மேலாண்மை போன்ற பல்வேறு பிரிவுகளில் துறை வாரியாக நனோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது பன்னாட்டளவில் தொடங்கப்பட்டது. இத்தகைய ஆராய்ச்சிகளின் பயனாக ஆர்கன்சா பல்கலைக்கழகம் (University of Arkansa) சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு மாபெரும் கண்டுபிடிப்பை நிகழ்த்திக் காட்டியுள்ளனர். அது கார்பன் நனோ துகள்களைப் பயன்படுத்தி தக்காளி பயிரில் செய்யப்பட்ட ஒரு சோதனை அந்தச் சோதனையின் முடிவுகளின் படி தக்காளி விதைகளைக் கார்பன் நுண் குழாய்களுடன் இணைத்து நன்கு கலந்து ஊறவைத்து விதைத்து சோதனை செய்த போது, அது விதையின் உயிரியல் ரீதியான செயற்பாடுகளில் தாக்கங்களை ஏற்படுத்துவதையும் பதிவு செய்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக, கார்பன் நுண் குழாயுடன் சேர்க்கப்பட்ட விதைகள் சாதாரண நிலையை விட இரு மடங்கு வேகமாக முளைப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் சாதாரணமாக 38.9 வீதம் நீரை வித்துக்கள் முளைக்கும் போது உள்ளே உறிஞ்சுவதாகவும் முளைக்கவிடப்பட்ட விதைகள் 57.6 வீதம் நீரை உறுஞ்சுவதாகவும் கணக்கிட்டுள்ளார்.

உணவுத் துறை

நனோ உணவு என்பது நனோகருவிகள் மற்றும் நனோ பொருட்களைக் கொண்டு பயிர்களை வளர்த்து உற்பத்தி செய்து சிப்பமிடுதலைக் (Packaging) குறிப்பதாகும். சுற்றுச்சூழலுக்கு ஏற்ப தரமான உணவை பாதுகாப்பான முறையில் உற்பத்தி செய்வதில் தொழிற்சாலைகள் பெரும் சவால்களை சந்தித்து வருகின்றன. இந்தப் பிரச்சினைகளுக்கு மாற்றுத் தீர்வாக, சமீப காலத்திய நனோ பொருட்கள் விளங்குகின்றன. மேலும் ஆற்றல் மிக்க உணவு, நிறம், சுவை மற்றும் நுண்ணுயிர்க்கொல்லிகளை அழிக்கவல்ல பேக்கேஜிங் பொருட்களை உருவாக்குவது என பல வழிகளில் உணவு பதப்படுத்தும் தொழிலுக்கு புதிய வாய்ப்புக்களை வழங்கும் முகமாக நனோ தொழில்நுட்பம் அமைந்துள்ளது. நனோ சென்சர்கள், கண்காணிப்பு சாதனங்கள் மூலம் சுகாதாரமான உணவைப் பாதுகாப்பான வகையில் நுகர்வோரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் நாம் உற்பத்தி செய்ய முடியும். உணவில் கலந்துள்ள நச்சுப்பொருட்களைக் கண்டறிய மற்றும் உணவுப் பொருட்களின் வாழ்நாளை அதிகரிக்க இத்தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தமுடியும். அத்துடன் நனோ உணர் கருவிகள் என்பது உயிரியல் வேதியல் பண்புகளைப் பயன்படுத்தி நனோ துகளைப் பற்றிய தகவலை உணர்ந்து பெரிதுபடுத்தித் தருவதாகும். உணவுத்துறையில் இதன் பயன்பாடு அளப்பரியது. உணவு சீக்கிரம் கெட்டுப் போவதற்கு நுண்கிருமிகள் தான் காரணம். சால்மனெல்லா, கிலஸ்டிரியம் பொட்டுலினம், போன்ற நுண் கிருமிகள் மிகவும் தீங்கு விளைவிப்பதோடு ஒரு நொடிப் பொழுதில் பல்கிப் பெருகக்கூடிய ஆற்றல் மிக்கவைகளாக உள்ளன. நனோ உணர் கருவிகள் மூலம் நுண் கிருமிகளின் நடவடிக்கைகளை கண்காணித்து இரசாயண மாற்றங்களால் ஏற்படும் நச்சுத் தன்மையைக் கண்டறிந்து ஆவணப்படுத்தலாம்.

உணவில் கலந்துள்ள மாசுப் பொருட்களை கண்டறிய, உணவுப் பொருட்களை கண்டறிய, உணர் கருவிகளைப் பயன் படுத்தமுடியும். கனடாவில் உள்ள மானி டோபா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தானிய சேமிப்புக் கலன்களில் பாலிமர் நனோ துகள்களைப் பயன்படுத்தி பூச்சிகள் மற்றும் பூஞ்ஞைகளால் ஏற்படும் பாதிப்பை கண்காணிக்க உணர்கருவியை உருவாக்கி வெற்றி கண்டுள்ளனர்.

இதன் மூலம் நாம் தானியங்களை அதிக நாட்கள் கெடாமல் சேமிப்புக் கலங்களில் சேமிக்கமுடியும். நனோ உறை பொதியாக்கத் தொழில்நுட்பம் என்பது நனோ தொழில்நுட்பத்தின் மற்றுமொரு மைல் கல் ஆகக் காணப்படுகிறது. அதாவது, உணவுத் துறையைப் பொறுத்தவரையில் உணவின் சுவையை மறைத்தல், ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்தி வெளியிடுதல், அமில காரத்தன்மை அளவைக் கட்டுப்படுத்தி சிறிது சிறிதாக வெளியிடுதல். உதாரணமாக, சில தாவரங்களில் அல்லது காய்கறிகளில் சிறிய அளவே காணப்படும் பயோ ஆக்டிவ் கலவைகள் உதாரணத்திற்கு கரட்டில் காணப்படும் பீட்டாகரோட்டின், தக்காளியில் காணப்படும் லைக்கோபீன், ஓட்ஸில் காணப்படும் குளுகன், மீன் எண்ணெய்யில் காணப்படும் ஒமெகா 3 எனும் கொழுப்பு அமிலம், தயிரில் காணப்படும் லாக்டோ பாஸிலஸ், சோயா மொச்சையில் காணப்படும் பீட்டா கரட்டின் போன்றவைகளை நனோ தொழில்நுட்பத்தின் மூலம் காப்சூல்களாக்கி, பத்து கரட்டில் கிடைக்கும் பீட்டா கரோட்டினை சிறிய மாத்திரையிலே நாம் பெற்றுக் கொள்ள முடியும்.

உணவுத் துறையில் நனோ தொழில் நுட்பத்தின் மற்றுமொரு பயன்பாடு உணவு சிப்பமிடல் ஆகும். உணவைப் பக்கற்களில் அடைப்பதன் முக்கிய நோக்கம் பக்ரீரியா, வேதி மாற்றம், ஊட்டச்சத்து இழப்பு போன்றவைகளில் இருந்து பாதுகாத்து நீண்ட நாட்களுக்குக் கெடாமல் வைப்பதாகும். உணவு சிப்பமிடலுக்குப் பயன்படும் நெகிழிப் பொருட்கள் பாலிமர் நனோ துகள்களின் கலவையை கலந்து உணவுச் சிப்பமிடல் மெட்ரீரியல்களை உருவாக்குவதன் மூலம் நெகிழ்வுத் தன்மை மற்றும் உறுதியான செயல்திறன் கொண்ட சிப்பமிடும் பொருட்களைப் பெறமுடியும். இந்த வகைப் பொருட்கள் நுண்ணறிவு கொண்டதாக, அதாவது கிழிசல் மற்றும் ஓட்டைகளைத் தானே சரி செய்து கொள்வதோடு மட்டுமல்லாது பக்கெற்றுக்களில் இருக்கும் உணவுப் பொருள் வீணாகி இருந்தால் நுகர்வோருக்கு வாசனை மற்றும் நிறம் மூலம் எச்சரிக்கை செய்யவும் நனோ தொழில்நுட்பம் உதவுகிறது . மற்றும் ஆக்சிஜன் நிரப்பப்பட்ட உணவுப் பொட்டலங்களில் உள்ள உணவில் எண்ணெய், கொழுப்பு போன்றவைகளினால் வேதி மாற்றம் நடந்து நுண்கிருமிகள் உற்பத்தியாகி உணவு சீக்கிரம் கெட்டுப் போய் விடுகிறது.

மேலும் உணவின் சுவை, நிறம், தோற்றம் மற்றும் வாசனை போன்றவைகள் முற்றிலுமாக மாறி விடுகின்றன. நனோ தொழில்நுட்பம் மூலம் ஆக்சிஜன் பரிமாற்றத்தைக் கட்டுப்படுத்தி வாசனை நொதிகளைக் கொண்டு உணவுச் சிப்பமிடல் பொருட்களை உருவாக்கிப் பொருட்களைச் சரி செய்ய முடிகிறது.

இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலும் சாக்லேட், ஐஸ்கிறீம், மற்றும் ரெடி டு ஈட் என்று அழைக்கப்படும் துரித உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து பதப்படுத்த நனோ தொழில் நுட்பத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர். அத்துடன் உலக அளவில் பல பன்னாட்டு உணவு நிறுவனங்கள் தங்கள் ஆய்வுக் கூடங்களிலேயே நனோ ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுகின்றனர். குறிப்பாக நெஸ்லே, யூனிலிவர் போன்ற கம்பனிகள் இத்தொழில்நுட்பத்தை நடைமுறைப் படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.தகவல் தொடர்பாடல் துறை

நனோ தொழில்நுட்பம் மூலம் அதிக திறன் மிக்க கணினிகள் உருவாக்கப்படுகின்றன. அதாவது ஆரம்பகால கருவிகள் உபகரணங்கள் கொண்டிருக்கும் செயற்பாடுகள், எடைகள் முதலியவற்றை விட நனோ மூலம் உருவாக்கப்பட்ட கணினிகள் எடை குறைவாகவும் ஆற்றல் அதிகமானதாகவும் அதாவது ஆற்றலில் பல மடங்கு வேகமாக இயங்குபவையாகவும், குறைந்த இடத்தில் அதிகளவு தகவல்களை சேமித்து வைத்துக் கொள்ளக் கூடியதுமான வகையில் நனோ தொழில் நுட்பம் மூலம் கணினிகள் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் காபன் நனோ ரியுப்களை கணினி திரையில் பாவிப்பதால் Colour, Contrast, Display முதலியன சிறப்பாக இயங்குவதுடன் மெல்லிய எடை குறைந்த திரைகளையும் நனோ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது) அத்துடன் கையடக்கத் தொலை பேசி தயாரிப்பு, அதி வினைத்திறன் வாய்ந்த கணினி சிப் முதலியன உருவாக்கப்பட்டுள்ளது.

போர்த்துறை

நனோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் குண்டுகளைக் கண்டு பிடிக்கும் சாதனத்தை ருவயா பல்கலைக்கழகப் பொறியியலாளர்கள் உருவாக்கியுள்ளனர். விரிவுரையாளர்கள் “lbng zang” தலைமையிலான குழவினால் உருவாக்கப்பட்ட இச்சாதனம் “Carboz Nanotubes” என அழைக்கப்படுகிறது. நுணுக்குக்காட்டி இரண்டு மின் வாய்கள் என்பவற்றினையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ள இச்சாதனமானது குண்டுகளை அடையாளம் கண்டதும் உண்டாகும் மின்னியல் மாற்றத்தினைப் பயன்படுத்துவோருக்கு அறிவிக்கின்றது. ஆனால், எதிர்வரும் காலங்களில் விமான நிலையங்கள் போன்ற இடங்களிலும் பாதுகாப்பு முறைமைகளிலும் இத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படலாம் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் ஆயுதங்கள் தயாரிப்புக்கும் நனோ தொழில்நுட்பம் உதவுகிறது.

நனோ தொழில்நுட்பத்தின் பிரயோகத்தன்மையினால் ஏற்படும் ஒழுக்க மீறல்கள்

நனோ தொழில் நுட்பத்தினால் நன்மைகள் அதிகமாக இருந்தாலும் கூட, அவற்றினால் ஏற்படும் பாதகங்களையும் மனித சமூதாயமே அனுபவிக்கின்றது. அதாவது மனித குல மேம்பாட்டுக்கு இத் தொழில் நுட்பங்கள் உதவிகரமாக இருந்தாலும் கூட, அதன் அபாயகரமான மறுபக்கத்தையும் மறுக்க இயலாது. அந்தவகையில்

மருத்துவத்துறை

நனோ துணிக்கைகள் மிகவும் நுண்ணியவையாக இருப்பதனால் சுவாசப்பை, தோல், இரத்தம், மூளை என்பனவற்றையும் ஊடுருவிச் செல்லக் கூடியன. இந்தத் துகள்களில் அதிகம் பாவிக்கப்படும் நனோ, டைட்டேனியம், டையொக்சைட் உலகெங்கும் வருடாந்தம் சுமார் 10 மில்லியன் கிலோகிராம் வரை உற்பத்தி செய்கிறது. இந்த இரசாயணம் கரைக்கப்பட்ட நீரைக் குடித்த எலிகளின் நிறமூர்த்தங்களில் மாற்றம் ஏற்பட்டுப் புற்று நோய் ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இந்தத் துகள்களை ஊசியால் ஏற்றிய போது எலிகளின் ஈரல் பாதிப்படைந்திருந்தது குறிப்பிடத்தக்கது

அத்துடன் நனோ துணிக்கைகள் நச்சுத்தன்மையானவை. இவற்றை மருத்துவ ரீதியாக உள்ளெடுக்கையில் அவை மூளை ,தொண்டைக்குழி, நுரையீரல் போன்ற பாகங்களில் ஒன்று திரட்டப்பட்டு வேறு நோய்களோ அல்லது உயிர் ஆபத்துக்களோ ஏற்படக் காரணம் ஆகிறது. ஆக நனோ தொழில்நுட்பமானது புற்று நோய் போன்ற ஆபத்தான நோய்களுக்கு வழிவகுக்கும் அதே நேரம் நனோ துகள் கலவை கொண்டு, பல்வேறு விதமான நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கும் போது உடலினுள் நனோ துகள் கலவைகள் கலக்கப்படுவதனால் மனிதனுடைய மூளை, ஈரல், நுரையீரல், சிறுநீரகம், இரத்தம் முதலிய மனித உறுப்புகளில் நனோ துகள்கள் கலந்து பாரிய அழிவினை ஏற்படுத்துகிறது.

புற்று நோயால் பாதிக்கப்பட்ட கலங்களுக்கு நனோ மூலக்கூறுகளைப் பயன்படுத்தி, குறிப்பிட்ட சில மரபணு அலகுகளை கட்டி வைத்துச் செலுத்தும் போது, அவை உருவாக்குகின்ற புரதங்கள் மூலம் புற்று நோயால் பாதிக்கப்பட்ட செல்கள் அழியும். அதே நேரம் உடலினுள் செலுத்தப்படும் நனோ துகள்களால் புற்று நோய் ஏற்படுகின்றது. அத்துடன் நனோ தொழில் நுட்பம் மூலம் அனுப்பப்படும் மருந்து புற்று நோய் பாதித்த செல்லைக் கண்டு பிடித்து உடம்பிலேயே கரைத்து விடுவதனால் மீண்டும் அழிக்கப்பட்ட புற்று நோய் செல்கள் மீண்டும் உடம்பில் உருவாகச் சந்தர்ப்பம் உள்ளது. ஆக நனோ துகள்கள் உடலினுள் எந்த நோய்க்காவது செலுத்தப்படும் போது அதனால் பாரதூரமான நோய்கள் ஏற்படும்.நுகர்வோர் துறை

ஜேர்மன் விஞ்ஞானிகள் தக்காளிச் சாறு முதலியவைகள் போத்தலின் உட்பகுதியில் ஒட்டாமல் இருக்க நனோ துகள் கலவையினை போத்தலின் உட்பாகத்தில் பூசுகின்றனர். பூசுவதனால் தக்காளிச்சாறு போத்தலின் உட்பகுதியில் ஒட்டாமல் இருக்கிறது. போத்தல்கள் குலுக்கப்படும் போது போத்தலின் உட் பாகத்தில் பூசப்பட்டிருந்த நனோ துகள் கலவைகள் அனைத்தும் தக்காளிச் சாற்றுடன் கலக்கின்றது. இந் நிலையில் இந்த தக்காளிச் சாற்றை உணவுகளில் பயன்படுத்தும் போது போத்தலில் பூசப்பட்டிருந்த நனோ துகள் கலவை அதனை உண்பவர்களது உடலைச் சென்றடைந்து உள்ளுறுப்புக்களை சேதப்படுத்துகிறது.

நாளாந்தம் பயன்படுத்தும் சம்போ, கிறீம், பற்பசைகள், முகப்பூச்சுக்கள், அலங்காரப் பொருட்கள் முதலியன நனோ துகள்கள் மூலம் உருவாக்கப்பட்டு உடனடியாகப் பதில் வழங்குவதாகவும் விரைவாக விற்பனையாகிறது. அதாவது நனோ துகள்களால் உருவாக்கப்பட்டப் பற்பசைகளைப் பயன்படுத்துவதால் பற்கள் வெண்மையாக மிளிர்கிறது. வாய் நாற்றம், பற்களில் உள்ள கறைகள் முதலியன ஓரிரு நாட்களில் இல்லாமல் போகின்றது. இத்தகைய செயற்பாட்டினால் மனித சமூதாயம் அதிகமாக அத்தகைய பற்பசைகளை வாங்குகிறது. ஆனால், நனோ துகள் கலவை மூலம் உருவாக்கப்பட்ட பற்பசைகள் பற்களில் நேரடியாக ஆதிக்கம் செலுத்துவதால் வாயப் புற்றுநோய், காலம் தாழ்த்திப் பற்கள் இறப்பது, பற்கள் விழுவது முதலிய செயற்பாடுகள் நிகழுகிறது. இத்தகைய நிலைகளை நுகர்வோருக்குத் தெரியப்படுத்தாமல் இலாபத்தினையும் பணத்தினையும் மையமாக வைத்து விற்பனை செய்வது மனித சமூதாயத்திற்குப் பாதகமாக அமைந்து விடுகிறது.

மேலும் நனோ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட சம்போ முதலியவைகளை பயன்படுத்துவதால் குறிப்பிட்ட சில காலங்களுக்கு நன்மைகளை பெறலாம். அதாவது நீண்ட அடர்த்தியான முடி வளர்ச்சி, முடி உதிர்வதைத் தவிர்த்தல் ,சொடுகுத்தொல்லைகளில் இருந்து விடுபடுதல் முதலியனவாகும். ஆனால் காலம் செல்லச் செல்ல முடி உதிர்தல் மற்றும் முடியின் நிறம் மாறுதல் முதலியன ஏற்படும். காரணம், அதில் கலக்கப்பட்ட நனோ துகள்கள் ஆகும். அத்துடன் நனோ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட முகப் பூச்சுக்கள், கிறீம்கள் முதலியனவற்றால் முகங்கள் திடீரென்று பிரகாசமாகுதல், பருக்கள் இல்லாமல் போதல், முகம் அழகாக தோற்றமளித்தல் முதலியன ஏற்படும். ஆனால் காலம் செல்லச் செல்ல பல பாதிப்புக்களையும் எதிர்நோக்க நேரிடும். அந்த வகையில் முகப் பூச்சுக்களில் பூசப்பட்ட நனோ துகள் கலவை முகத்தில் தோலில் ஊடுருவி உட் சென்று பல நோய்களையும் பல்வேறு விதமான சருமப் பிரச்சினைகளையும் கொண்டு வருகிறது.

சீனாவில் 2009 இல் பூசும் வர்ணம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணி புரிந்த 2 தொழிலாளிகள் இறந்ததுடன் 5 பேர் சுகவீனம் உற்றனர். காரணம் சரியான காற்றோட்டமோ, பாதுகாப்பு உபகரணங்களோ இல்லாமல் பணிபுரிந்த இவர்களுக்குச் சுவாசப்பையில் நோய் ஏற்பட்டதுடன் முகத்திலும், கைகளிலும், தோல்களிலும் அரிப்பு ஏற்பட்டது. அத்துடன் இவர்களின் சுவாசப்பையில் நனோ துகள்கள் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் நனோ துகள் கலவை கொண்டு உருவாக்கப்பட்ட கண்ணாடியைக் கண்களில் அணியும் போது நனோ துகள்களின் செல்வாக்கினால் கண்களில் பாதிப்பு ஏற்படுகிறது. காலப்போக்கில் கண் தெரியாத நிலையும் ஏற்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

நனோ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட காலுறைகளில் பயன்படுத்தப்படும் சில்வர் நனோ பார்ட்டிக்கள் வியர்வைத் துர்நாற்றத்தைத் தடுக்கிறது. அதே சமயம் சுத்திகரிப்பு நிலையங்களில் உள்ள நல்ல பக்டீரியாக்களையும் பதம் பார்க்கின்றது. நனோ பார்ட்டிக்கிள் மூலம் சுவாசித்த எலியின் மூளை, நுரையீரல்களில் நனோ பார்ட்டிக்கள் தங்கியுள்ளது. அத்துடன் நனோ டைட்டேனியம், டை யொக்சைட் சுவாசித்த பிராணியின் (DNA) பாதிக்கப்பட்டிருக்கின்றன. மனிதனுக்கு இதனால் புற்றுநோய், இதய நோய்கள் போன்றவைகள் உருவாகின்றது.விவசாயத்துறை

நனோ துகள்களைப் பயன்படுத்தித் தக்காளி விதைகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இருந்து நனோ தொழில்நுட்பம் எத்தகையதொரு பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது என அறிந்து கொள்ளலாம். அதாவது, கார்பன் நனோ குழாய்களில் நன்கு கலந்து விதைக்கப்பட்ட தக்காளி விதைகளின் வேகமான வளர்ச்சி போன்று விவசாயத் துறையில் பல விதைகளின் உருவாக்கமும் மரங்களினுடைய வளர்ச்சியும், தாவரங்களின் உற்பத்தியும் உயரரக விதைகளின் அதீதமான உருவாக்கமும் விவசாயத்துறையில் நனோ தொழில்நுட்பம் மூலம் இடம் பெறுகிறது. இதனால் விவசாயத்துறை அதிகமான இலாபத்தை அடைகிறது.

குறித்த சில தினங்களில் பயனைப் பெறும் நோக்கில் பழங்களும் காய்களும் மரக்கறிவகைகளும் மனித சமூதாயத்தை சென்றடைகிறது. இதனை மனித சமூதாயம் நாளாந்தம் பயன்படுத்தும் போது அனைத்து விதமான பாதிப்புக்களும் மனிதர்களையும் விலங்குகளையும் சென்றடைகின்றது. இதனால் பல விதமான நோய்கள் மற்றும் நீண்ட கால பாதிப்புக்கள் முதலியன மனித சமூதாயத்தை சென்றடைகின்றது.

உணவுத்துறை

நனோ தொழில்நுட்பத்தில் தயாரான நனோ உணவைப் பொறுத்தவரையில் உணவுப் பொருளின் ஆரம்பம் முதல் இறுதி வரை நனோ துகள்கள் செல்வாக்கு செலுத்துவதால் அவை அனைத்தினுடைய ஆதிக்கமும் மனித உடலில் இடம்பெறுகிறது. இதனால் மனிதனுடைய ஆயுள் குறைவடையும் அதே நேரம் நோய்கள், உயிரிழப்பு முதலியன இடம் பெறுகிறது. அந்தவகையில் நனோ தொழில்நுட்பத்தில் நனோ உணர் கருவிகள் மூலம் நுண்ணங்கிகளின் தாக்கத்திற்கு உட்படாத உணவுகளை இக்கருவிகள் மூலம் பரிசோதிக்கும் போது, நனோ உணர் கருவிகளின் தாக்கம் அவ்வுணவுகளில் தாக்கம் செலுத்தும். இதனால், அவ்வுணவுகளை உட்கொள்ளும் மானிட சமூதாயம் பல பாதிப்புக்களை அடையும்.

தாவரங்கள், காய்கறிகள் முதலியவற்றில் சிறிய அளவில் காணப்படும் பயோ ஆக்டிவ் கலவைகளை நனோ தொழில்நுட்பத்தில் காப்சூல்களாக்கி மனித சமூதாயம் பயன்படுத்துகின்ற போது, தாவரங்கள், மரக்கறி வகைகள் முதலியவற்றில் இருந்து கிடைக்கும் சக்தியை விட ஆபத்தான சக்திகள் அதிகம் உடலினுள் ஊடுருவுகிறது. இதனால் மனித சமூதாயம் பல ஆபத்துக்களை அனுபவிக்கின்றது. நனோ தொழில்நுட்பம் மூலம் உணவுச்சிப்பமிடல் மெட்டீரியல்கள் உருவாக்கப்படுவதனால், அக்கலவைகளால் உருவாக்கப்பட்ட பக்கேற்றுக்களின் தன்மை உணவுப் பொருட்களை சென்றடையும். இதனால், உணவுப் பொருட்களில் நனோ துகள்களின் ஆதிக்கம் அதிகமாகும். அதனால் எற்படும் விளைவுகள் அனைத்தும் மனித சமூதாயத்தைச் சென்றடையும்.

போர்த்துறை

போர்த்துறையில் திறன் வாய்ந்த பருமனில் சிறியதுமான ஆயுதங்கள் விலை குறைந்த செலவில் இத்தொழில்நுட்பம் மூலம் வடிவமைக்கப்படுகிறது. ஆயுதக்கலாசாரம் மலிந்துள்ள இன்றைய உலகில் தனிநபர் மற்றும் நாடுகளின் பாதுகாப்பை அச்சுறுத்தலுக்குள்ளாக்கும். அதே நேரம் மனித குலத்தை அழிவடையச் செய்யும் ஒரு மூலமாகவும் இத்தகைய ஆயுதங்கள் அமைவது குறிப்பிடத்தக்கது.

முடிவுரை

எல்லாத் தொழில் நுட்பங்களும் ஒட்டு மொத்த மனித இனத்தின் நலனுக்காகப் பயன்படுவன அல்ல. இன்றைய உலகில் தொழில்நுட்பங்கள் மனித சமூதாயத்திற்குப் பல பிரயோகங்களை வழங்கினாலும், அதனால் ஏற்படும் பல பாதிப்புக்களையும் மனித சமூதாயமே பெற்றுக் கொள்ளுகிறது. இதனடிப்படையில் தொழில்நுட்பங்கள் சாதகம், பாதகம் எனும் இரு முனைகளிலும் கூரானதாக விளங்குகிறது.

உசாவியவைகள்

1. Nicoleta Lubu, “Nano Wires Seience and Technology" (2010)

2. Mohamed Muzibur, “Nano Materials" (2011)

3. http://www. ashokkumarkn .blogspot .in /2011 /09/introduction bio technology .html ? m=1

4. http://www.ssivf.com / ssivf -cms .pup ?page594

5. http:// www.ta.m.wikipedia.org /wiki /மருத்துவம்

6. http://www.dinamani.com/blogs/submit .blog article

7. http://www.tamil nenjam hifs .bolgs-post-02 html ?m=01

8. http :// www.eluthu .com /view -ennam /6699

9. http ://www.beeway .pixnet /blog /post/1752062 - நனோ தொழில்நுட்பம்

10. http ://www.ta.m.wikipedia.org - உயிர்த்தொழில்நுட்பம்

11. http://www.vidathanet.blogs pot .in /2014/01 /nano robotics html ?m=1

12. http://www.aliaalifali .blogs.pot in/2012 /05/blogs-post -html

13. http://www.wikipedia .org /wiki/ - நனோ தொழில்நுட்பம்

14. http://www.boobalam .com /ஆபத்துக்கள் நிறைந்த நனோ

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/scienceandtechnology/p10.html


  2020
  2019
  2018
  2017
சிறந்த நூலாசிரியர் பரிசு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...சிரிக்க சிரிக்க
எரிப்பதா? புதைப்பதா?
அறிவை வைக்க மறந்துட்டானே...!
செத்தும் செலவு வைப்பாள் காதலி!
வீரப்பலகாரம் தெரியுமா?
உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
இலையுதிர் காலம் வராது!
கண்ணதாசனின் நகைச்சுவைகள்
குறைச்சுத்தான் எடை போடறாரு...!
அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
இடத்தைக் காலி பண்ணுங்க...!
சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
மாபாவியோர் வாழும் மதுரை
இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
கவிஞரை விடக் கலைஞர்?
பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
கடைசியாகக் கிடைத்த தகவல்!
மூன்றாம் தர ஆட்சி
பெயர்தான் கெட்டுப் போகிறது!
தபால்காரர் வேலை!
எலிக்கு ஊசி போட்டாச்சா?
சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
சம அளவு என்றால்...?
குறள் யாருக்காக...?
எலி திருமணம் செய்து கொண்டால்?
யாருக்கு உங்க ஓட்டு?
வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
கடவுளுக்குப் புரியவில்லை...?
முதலாளி... மூளையிருக்கா...?
குட்டிக்கதைகள்
எல்லாம் நன்மைக்கே...!
மனிதர்களது தகுதி அறிய...
உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
அழுது புலம்பி என்ன பயன்?
புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
கடவுளைக் காண உதவும் கண்ணாடி
தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
சிங்கத்திற்கு வாழைப்பழம்!
வலை வீசிப் பிடித்த வேலை
சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
கல்லெறிந்தவனுக்கு பழமா?
சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
அக்காவை மணந்த ஏழை?
சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
இராமன் சாப்பாட்டு இராமனா?
சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
கழுதையின் புத்திசாலித்தனம்
விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
ஆணவத்தால் வந்த அழிவு!
சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
சொர்க்க வாசல் திறக்குமா...?
வழுக்கைத் தலைக்கு மருந்து
மனைவிக்குப் பயப்படாதவர்
சிங்கக்கறி வேண்டுமா...?
வேட்டைநாயின் வருத்தம்
ஆன்மிகம் - இந்து சமயம்
ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
தானம் செய்வதால் வரும் பலன்கள்
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
பிரதோஷம் எப்படி விஷேசமானது?
விநாயகர் சில சுவையான தகவல்கள்
சிவராத்திரி விஷேசமானது ஏன்?
முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
எப்படி வந்தது தீபாவளி?
தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
அனுமனுக்கு வடை மாலை ஏன்?
திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
முருகா என்றால் என்ன கிடைக்கும்?
குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
விபூதியின் தத்துவம்
கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
இறைவன் ஆடிய நடனங்கள்
யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License