இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
அறிவியல் & தொழில்நுட்பம்

தமிழின் மின்னகராதிகளில் மாற்றுத்திறனார்களுக்கான ஒத்திசைவுகள்
ஓர் ஆய்வு


முனைவர் தமிழ்ப்பரிதி மாரி
உதவிப்பேராசிரியர்,
இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை,
பெரியார் பல்கலைக்கழகம்,
சேலம்-636011, தமிழ்நாடு.


அறிமுகம்

சொற்களை அகரவரிசைப்படியும், அதன் விளக்கங்களையும் சொற்பயன்பாட்டையும் அளிக்கும் நூலே அகரமுதலி என கேம்பிரிட்ஜ் லேனர்சு அகரமுதலியின் இரண்டாம் பதிப்புக் கூறுகின்றது. தமிழில் அகராதி, அகரமுதலி, நிகண்டு ஆகிய சொற்களால் அகரமுதலிகள் குறிக்கப் பெற்றுள்ளன. சிதம்பரரேவணசித்தர் 1594 ஆம் ஆண்டில் உருவாக்கிய நிகண்டில் ‘‘அகராதி நிகண்டு’’ என்னும் பொருளில் குறிக்கப் பெற்றுள்ளது. அச்சு அகரமுதலிகள் இன்று மின்னகரமுதலியாய், அலைபேசி அகரமுதலியாய் வேர்விட்டு நிற்கின்றன. அச்சு ஊடகத்தில் தனக்கான இடத்தைக் கொண்டிருக்கும் அகரமுதலிகள் இணையத்தின் பல்லூடகங்களின் உறுதுணையுடன் மாற்றுத்திறனாளர்களுக்கு ஒத்திசைவாகச் செயற்படுவதற்கான அடிப்படைகளை இக்கட்டுரை ஆராய்ந்துள்ளது.

ஒவ்வொரு நொடியிலும் பன்னூற்றுக்கணக்கான புத்தம் புதிய அருகலைச்சொற்கள் உலக மொழிகளில் யாவற்றிலும் முகிழ்ந்து வருகின்றன. ஒரு மொழியில் உள்ள சொற்களின் அகரமுதலி, அருங்கலைச்சொற்கள், சொற்பட்டியல், சொல்லடைவு ஆகியவற்றோடு, பிறமொழிச் சொற்களின் பொருளுக்கான தேவை நாள்தோறும் பெருகி வருகின்றது. பழந்தமிழ் இலக்கியங்கள் தொடங்கி, தற்காலத் தொழில்நுட்பம் வரையிலான தமிழின் சொற்பட்டியலை அகரவரிசைப்படுத்தி, அவற்றிற்கு விளக்கமளித்து, ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் அவற்றை விளக்குவதும், மொழிபெயர்ப்பதும், பல்லூடகத் திறப்பாடுடைய பன்மொழி அகரமுதலியைத் தமிழில் மாற்றுத்திறனாளர்களுக்காக உருவாக்குவதும் தமிழுக்கு நாம் செய்ய வேண்டிய மிக இன்றியமையாத ஒன்றாகும். சொல்லடைவுகள் என்பது தமிழ் நூல்களில் பெரும்பாலும் இல்லாத ஒன்றாகவுள்ளது.

இவ்வாய்வின் ஊடாக, தமிழ்ப்பேழை, தமிழ் விக்சனரி, தெற்காசியாவின் மின்-எண்மிய அகரமுதலிகள் ஆகியனவற்றின் உள்ளடக்கங்கள் மாற்றுத்திறனாளர்களுக்கு ஒத்திசைவாக உள்ளனவா? என்றும் தற்போதுள்ள அதன் கூறுகளும் இடைவெளிகளும் ஆய்விற்கு உட்படுத்தப்பெற்று ஆய்வு முடிவுகளும் பரிந்துரைகளும் வழங்கப்பெற்றுள்ளன. மேற்கண்ட மின்னகரமுதலிகளில் காணப்பெறும் பல்லூடகப் பொருத்தப்பாடுகள் மாற்றுத்திறனாளர்களுக்கு ஒத்திசைவாக உள்ளமை (Multimedia Suitability), அவற்றின் செயற்பாட்டியல், அவற்றின் உருவாக்கத்தில் உள்ள ஒருங்கிணைப்புக் கூறுகளையும் (Convergence) ஆராய்வதே இக்கட்டுரையின் முதன்மை நோக்கமாக இருக்கிறது.

குறிச்சொற்கள்

தமிழ்ப்பேழை, தமிழ் விக்சனரி, மின்னகராதி, மின்னகரமுதலி, தமிழ் இணையம், தமிழ் அகரமுதலி, தமிழ், தமிழ்க்கணிமை, தமிழ் வலைத்தளம், தமிழ் அகராதி, மின்னகராதி, தமிழ்ப்பேழை, தமிழில் ஒருங்கிணைந்த அகராதி, தமிழில் ஒருங்கிணைந்த அகரமுதலி, தமிழ் அருங்கலைச்சொற்கள்

ஆய்வுக்களம்

இவ்வாய்வுக் கட்டுரை தமிழ் மின்னகரமுதலிகளில் உள்ள தேடுபொறிகள், ஒலித்தேடல், தேடுபொறிகளில் தமிழ் ஒருங்குகுறி ஒத்திசைவு, சொற்பலுக்கல் (ஒலிப்பு), இணைப்புகளின் தன்மைகள், ஒளிப்படங்கள், வரைபடங்கள், அசைவூட்டப் படங்களின் இணைப்பு, நிலவமைவு மற்றும் பிற இணைப்புகள், மக்கள் பங்கேற்புடனான தொகுப்புப் பணிகளுக்கான வாய்ப்புகள், பின்னூட்டம், பேச்சு அல்லது உரையாடலுக்கான வாய்ப்புகள் ஆகியனவற்றில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒத்திசைவுகளை ஆராய்ந்து ஆய்வு அதனடிப்படையில் ஆய்வு முடிவுகளையும் ஆய்வுப் பரிந்துரைகளையும் வழங்கியுள்ளது.


மாற்றுத்திறனாளர்களுக்கான இணைய அகராதிகளின் நுட்பத்தேவைகள்

மாற்றுத்திறனாளர்களுக்கான இணைய அகராதிகளில் பின்வரும் நுட்பங்கள் இருத்தல் வேண்டும். அவை,

1) எழுத்துருவைப் பெரியதாக்கும் வசதி

2) எழுத்துருவைச் சிறியதாக்கும் வசதி

3) கணித்திரையின் வண்ணங்களை மாற்றும் வசதி

4) எழுத்துருவின் வண்ணங்களை மாற்றும் வசதி

5) பனுவல்களைப் படிக்கும் வசதி

6) சொற்றொடர் இடைவெளிகளை மிகுதியாக்கும் வசதி

7) இணைப்புகளை தனித்துக்காணும் வசதி

8) பனுவல்களுக்கு இடையே இடைவெளியை மிகுதியாக்கும் அல்லது குறைக்கும் வசதி

9) காட்டியைப் பெரிதாக்கும் வசதி

10) ஒரு வண்ணத்தை எதிர் வண்ணமாக மாற்றும் வசதி

11) மீத்தொடுப்புகளைக் காணும் வசதி

12) ஒளிப்பட இணைப்புகள்

13) பனுவல்களுக்கான ஒலிக்கோப்புகள்

14) காணொலி இணைப்புகள்

15) அசைவூட்டப்பட இணைப்புகள்

16) நிலவமைவு இணைப்புகள்

17) தள வரைபடம்

18) சொற்றொடர் இடைவெளிகளை குறைக்கும் வசதி

தமிழ் அகரமுதலிகளின் வரலாற்றுப் படிநிலைகள்

சேந்தன் திவாகரம் நமக்குக் கிடைத்துள்ள நிகண்டுகளில் காலத்தால் முற்பட்டு இருப்பதாக எஸ். வையாபுரிப்பிள்ளை (1985) கூறுகின்றார். பிங்கல நிகண்டு எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்தது என சண்முகனார் (1965) எழுதியுள்ளார்; இந்நூல் பத்தாம் நூற்றாண்டைச் சார்ந்ததென மு. அருணாசலம் (1975) குறிப்பிடுகின்றனர். காங்கேயர் என்பார் 11ஆம் நூற்றாண்டில் உரிச்சொல் நிகண்டினை வெளியிட்டார் என்கின்றார் மு. அருணாசலம் (1975). சிதம்பரரேவணசித்தர் 1594 ஆம் ஆண்டில் அகராதி நிகண்டு தொகுக்கப் பெற்றது. சூடாமணி நிகண்டு 16ஆம் நூற்றாண்டில் வெளியிடப் பெற்றதாகும். கயாதரம் என்னும் நிகண்டும், கைலாச நிகண்டு சூடாமணியும் 17ஆம் நூற்றாண்டில் வெளிவந்தவை ஆகும்.

சீகன் பால்கு தமிழ் அகராதியையும் (1732), தமிழ் உடைநடை அகராதியையும் (1732) தொகுத்துள்ளார். இவை அச்சாகாதவை என்கின்றார் பெ. மாதையன் (1997: 57). வீரமாமுனிவரால் உருவான சதுரகராதி 1732 ஆம் ஆண்டில் வெளிவந்தது. மானிப்பாய் என்னும் அகராதியை யாழ்ப்பாணத்து சந்திரசேகர பண்டிதர் 1842 ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ளார். நா. கதிரைவேற்பிள்ளையின் தமிழ் மொழி அகராதி 1904 ஆம் ஆண்டில் வெளிவந்தது. த. குப்புசாமிநாயுடு தமிழ்ப்பேரகராதி என்னும் அகரமுதலியை 1906 ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ளார். பி. இரமநாதன் 1909 ஆம் ஆண்டில் The Twentieth Century Tamil Dictionary என்ற அகரமுதலியை உருவாக்கியுள்ளார். இவ்வாகராதியில் படங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளதாகவும், இதுவே படங்களுடன் வெளிவந்த முதல் அகரமுதலி எனவும் பெ. மாதையன் (1997: 59) குறிப்பிடுகின்றார். ச. பவானந்தம் பிள்ளை 1925 ஆம் ஆண்டில் தற்காலத் தமிழ்ச் சொல்லகராதியையும், 1935 ஆம் ஆண்டில் ஜூபிலி தமிழ் அகராதியையும், 1937 ஆம் ஆண்டில் மதுரைத் தமிழ்ப்பேரகராதியும் வெளியாயின. தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தால் 1985 ஆம் ஆண்டில் தமிழ்-தமிழ் அகரமுதலி வெளியிடபெற்றது என தமிழ் அகராதியின் காலவரிசை வரலாற்றை பெ. மாதையன் (1997) விவரித்துள்ளார். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதியின் சீர்கேடு என்னும் நூலின் வாயிலாக ஞா. தேவநேயப் பாவணர் (1961) அகரமுதலி ஆய்வுப்பணிகளை மேற்கொண்டுள்ளார். 2002 ஆம் ஆண்டில் ப. அருளி ஒரு 1.3 இலக்கத்திற்கும் மேற்பட்ட அருங்கலைச் சொற்களை உடைய ‘‘அருங்கலைச்சொல் அகரமுதலி’’ என்னும் நூலினை வெளியிட்டுள்ளார். இந்நூல் தற்காலத்திற்கு ஏற்றவாறு அனைத்து கலை, அறிவியல், தொழிற்நுட்பவியல், பொறியியல் என 135 துறைகளுக்கான அருங்கலைச் சொற்களைக் கொண்டுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் விக்சனரி செயற்பட்டு வருகின்றது. தமிழ்ப்பேழை அகராதி இணைத்தில் 72 அகராதிகளுக்கும் மிகுதியாக அகராதி வளங்களை ஒருங்கிணைந்த முறையில் அளித்துள்ளது.


தமிழ்ப்பேழை (https://MyDictionary.in/): தமிழ் அகரமுதலிகளின் களஞ்சியம்

தமிழ்ப்பேழை (MyDictionary.in) என்பது உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த மின்னகராதியாக செயல்படுகின்றது. இவ்வகராதியில் வானியல், மண்ணியல், மீனியல், கானியல், கணிப்பொறியியல் என 160-க்கும் மேற்பட்ட துறைகளுக்கான கலைச்சொற்கள் அளிக்கப் பெற்றுள்ளன. உலக அளவில் அகராதி வளங்களில் 23 ஆம் இடத்தில் இருந்த தமிழ் அகராதி வளங்களை எட்டாம் இடத்திற்கு தமிழ்ப்பேழை தற்போது மாற்றியுள்ளது. இன்னும் நான்கு ஆண்டுகளுக்குள் உலக அளவில் 171 மொழிகளில் தமிழ் அகராதி வளங்களை முதலிடத்திற்கு வருவதற்குரியப் பணிகளை தமிழ்ப்பேழை மேற்கொண்டு வருகின்றது. இவ்வகராதியில் 14 இலட்சம் அடிப்படைச்சொற்களுக்கு 1.6 கோடி விளக்கங்கள் உள்ளன, தமிழ்ப்பேழை (MyDictionary.in) அகராதி ஓர் ஒருங்கிணைந்த அகராதியாக இணையத்தில் செயல்படுகின்றது.

ஒருங்கிணைந்த அகராதி என்பது பல்வகை அகராதிகளின் அடிப்படைச்சொற்களையும் அதன் விளக்கங்களையும் எளிதில் முழுமையாக ஒற்றைத்தேடலில் ஒரே பக்கத்தில் அளிக்கும் ஒன்றாகும். எடுத்துக்காட்டாக முறை என்னும் சொல்லிற்கான விளக்கத்தைத் தமிழ்ப்பேழை அகராதியில் தேடினால், முறை என்னும் சொல்லில் 12 சொற்கள் தொடங்குகின்றன. முறை எனும் சொல் ஒருங்கிணைந்தத் தேடலாக 2124 முறை வருகின்றது. அச்சொல் தமிழின் இலக்கண, இலக்கியங்களில் எப்பொருளில் உள்ளது எனக்காட்டுவதோடு, முறை என்னும் சொல்லின் முன்னொட்டு, பின்னொட்டுகளுடன் தமிழ்ப்பேழையிலுள்ள 72 அகராதிகளில் என்னென்ன தலைச்சொற்கள் உள்ளன? அவற்றின் விளக்கங்கள் யாவை என்பதை அளிக்கின்றது. தற்போது அதிகச் சொற்களுடன் திகழும் முதல் பெரிய தமிழ் அகராதித் தளமாக, தமிழ்ப்பேழை உருவாக்கப்பெற்றுள்ளது. உலக அளவில், இணையத்தில் தமிழை அதிகமான சொற்பதிவுகள் கொண்ட முதல் மொழியாக மாற்றும் எதிர்கால நோக்கில் இவ்வகராதி உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்ப்பேழை அகராதியில் ஐம்பதாயிரம் பழமொழித் தரவுகளும், ஆயிரக்கணக்கன விடுகதைகளும், நான்கு இலக்கம் தமிழ் நூல்களுக்கான தரவுகளும், ஆயிரக்கணக்கான திரைப்பட, தமிழிதழ் தரவுகளும் அளிக்கப்பெற்றுள்ளன. இத்தரவுகள் யாவும் தேடுபொறிக்கு உகந்தவையாகவும் ஒருங்குகுறித் தமிழிலும் உள்ளன.

இத்திட்டத்திலுள்ள அகராதிகள் யாவும் படைப்பாக்கப் பொதும உரிமத்தின் கீழ் (Creative Commons Attribution- ShareAlike License) வழங்கப்பட்டுள்ளன. எனவே, இவ்வகராதிகளின் வளங்களை யாவரும் பகிரலாம், சேமிக்கலாம், சான்றுகளுடன் மாற்றலாம். தமிழ்ப்பேழையின் செயற்பாடுகள் இத்தளம் தமிழின் இலக்கண, இலக்கிய அகராதிகளையும் அறிவியல், நுட்பியல் கலைச்சொற்களையும் ஒருங்கிணைத்துள்ளது. தொல்காப்பியம், அகநானூறு, திருக்குறள், சிலப்பதிகாரம், திருஅருட்பா ஆகிய நூல்களின் சொற்களை அதன் விளக்கத்துடனும் பாடல் எண்களுடனும் கலைச்சொற்களுடன் இணைத்துள்ளது. இந்த அகரமுதலி அலைபேசிகளுக்கு ஒத்திசைவுக் கொண்டதாக உள்ளது. தமிழ்ப்பேழை அகராதியில் பல்லூடகக் கூறுகள் இணைக்கப்பெற வேண்டும். இத்தளம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒத்திசைவாக உள்ளது.

தமிழ் விக்சனரி

தமிழ் மின்னகரமுதலிகளில் மக்கள் பங்கேற்புடன் ஒவ்வொரு நொடியிலும் செழுமையுறும் வலைதளம் இது. தமிழ் விக்சனரியில் 4,08,570 (ஆகத்து, 2025இல் நிலை) சொற்கள் அகரவரிசையில் பட்டியலிடப் பெற்றுள்ளன. தற்பொது அவ்வகரமுதலி உலக அளவில் 21ஆம் இடத்தில் தமிழினை நிலைநிறுத்தியுள்ளது. இத்தளத்தில் சொற்களை எளிதாகப் பார்வையிடவும், தேடுபொறியில் தமிழ் ஒருங்குகுறியில் தமிழ் உள்ளீட்டிற்கும் ஒத்திசைவு உள்ளது. இத்தளத்தில் ஒருங்குகுறித் தமிழை தமிழின் எழுத்துப்பெயர்ப்பு, தமிழ்99, இன்சுகிரிப்ட், பாமினி, இன்சுகிரிப்ட்2, சொந்த விசைப்பலகைப் பயன்பாடு ஆகிய உள்ளீடுகளுடன் தேடுபொறி ஒத்திசைவு உள்ளது. இவ்வலைதளத்தில் ஒலித்தேடல் பொறி இல்லை. சொற்களுக்கான பலுக்கல் (ஒலிப்பு) இணைப்பு பெருமளவில் உள்ளது. சொற்களின் ஒலிப்பு திறவூற்றுக் கோப்பாக (open source file), .ogg என்னும் தன்மையில் இருப்பதால், அவற்றை யார் வேண்டுமென்றாலும் தொகுக்கவோ, பயன்படுத்தவோ வாய்ப்பு அளிக்கப்பெற்றுள்ளது. இத்தளத்தில் ஒளிப்படங்களும், காணொளிகளும், வரைபடங்களும், அசைவூட்டப் படங்களும் திறவூற்றுக் கோப்பாக இருப்பதினால் அவற்றின் பயன்பாடு புரிந்தலையும் கற்றலையும் எளிதாக்கி உள்ளது.

இத்தளத்தின் அனைத்துத் தரவுகளும் கிரியேட்டிவ் காமன்சு என்னும் படைப்பாக்கப் பொதும உரிமத்தின் அடிப்படையில் (CC-BY-SA) விளங்குவதால், ஒருவர் உள்ளீடு செய்யும் தரவு கடுமையான செம்மையாக்கலுக்கு உள்ளாகும் வாய்ப்புகள் மிகுதியாக உள்ளன. தமிழ் விக்சனரியில் பதியப்படும் ஒரு சொல்லிற்கான முலத்தையும் தெற்காசியாவின் மின்னனகராதிகள் பதிப்பின், வின்சுலோ, அகரமுதலி ஆகிய தளங்களோடு இணைப்பு அளிக்கப்பெற்றுள்ளது. இத்தளத்தில், பெயர்ச்சொல், வினைச்சொல், உரிச்சொல், பெயர் + வினை, பெயர் + உரி என்று புதிய தமிழ்ச்சொற்களை உள்ளிடும் அடிப்படைகள் உள்ளன. தமிழ் விக்சனரி நூறு விழுக்காடு மக்கள் பங்கேற்புடனான தொகுப்புப் பணிகளை முன்னெடுக்கும் ஓர் தளமாகும். பின்னூட்டம் அல்லது பேச்சு அல்லது உரையாடல் வாயிலாக தரவுகளை செழுமை செய்தல் என்பது இத்தளத்தின் அடிப்படைக் கோட்பாடாகும். தமிழ் விக்சனரியை தமிழ்க் குறுஞ்செயலியாக மாற்றுவது காலத்தின் தேவையாகும். இத்தளம் அலைபேசியில் ஒத்திசைவைக் கொண்ட வடிவமைப்பினைப் பெற்றுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு ஒத்திசைவானதாக ஆக இத்தளத்தளம், எழுத்து அளவு, திரையின் வண்ணம், ஒலி உள்ளீடு ஆகிய மாற்றங்களை இத்தளம் உள்வாங்க வேண்டியுள்ளது.

தமிழ் எழுத்துக்களுக்கான சைகை காணொளிகளை இத்தளம் பயன்படுத்தியுள்ளது. எழுத்துக்களை எழுதும் முறை அசைவூட்டுப் படமாக அளிக்கப்பெற்றுள்ளது. இத்தளம் முழுவதும் மக்கள் பங்கேற்புடன் செயல்படுவதால் நூற்றுக்கணக்கான பிறமொழிச் சொற்கள் உள்ளீடு செய்யப்பெற்றுள்ளன. தமிழ் விக்சனரியில் உள்ளீடாகியுள்ள பிறமொழிச் சொற்களை தமிழ் வழக்கில் கலந்துள்ள அயன்மொழிச்சொற்கள் என்னும் பகுப்பாக்கி அவற்றிற்கான தமிழ் விளக்கத்தையும், அச்சொல்லுக்குரிய தமிழ்ச்சொல்லையும் அளிப்பது காலத்தின் தேவையாகும். காப்புரிமைச் சிக்கலில்லாத, திறவூற்று அகரமுதலிகள் இனங்காணப்பெற்று அவற்றைத் தமிழ் விக்சனரியில் இணைப்பது அல்லது மூலமாகச் சேர்ப்பது ஓர் உடனடிப் பணியாகும். இவ்வகராதியில் பல்லூடகக் கூறுகள் இணைக்கப்பெற வேண்டும். இத்தளம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒத்திசைவாக உள்ளது.


யொகான் பிலிப் பப்ரிசியசு தொகுத்த மின்னகரமுதலி

பப்ரிசியசு (1711-1791) தொகுத்த மின்னகரமுதலியில் தேடுபொறி வாயிலாக சொற்களை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ ஒருங்குறியில் தேடும் சிறப்பு உள்ளது. இந்த அகரமுதலியில் தமிழ்ச்சொற்களுக்கான ஆங்கில ஒலிப்பு அளிக்கப்பெற்றுள்ளது. இவ்வகரமுதலி தமிழ் - தமிழ் - ஆங்கிலம் என்னும் தன்மையில் பொருள் விளக்கத்தினை அளித்துள்ளது. தேடுபொறியில் தமிழ் ஒருங்குகுறியில் தமிழ் உள்ளீட்டிற்கான ஒத்திசைவை இத்தளம் கொண்டுள்ளது. இவ்வலைதளத்தில் ஒலித்தேடல் பொறி இல்லை, இத்தளத்தில் சொற்களுக்கான பலுக்கல் (ஒலிப்பு) இணைப்பு இல்லை. இத்தளத்தில் ஒளிப்படங்கள், காணொளிகள், வரைபடங்கள், அசைவூட்டப் படங்களின் பயன்பாடு இல்லை. பின்னூட்டம், பேச்சு அல்லது உரையாடல் வாயிலாக தரவுகளை செழுமை செய்வதற்கான வாய்ப்பு அளிக்கப்பெறவில்லை. இந்த அகரமுதலியை அலைபேசிக் குறுஞ்செயலியாக மாற்றுவது தேவையான ஒன்றாகும். இத்தளம் அலைபேசியில் ஒத்திசைவைக் கொண்டிருக்கவில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கு ஒத்திசைவானதாக இல்லை. இவ்வகரமுதலியில் நூற்றுக்கணக்கான பிறமொழிச்சொற்கள் உள்ளன. அயன்மொழிச்சொற்சுட்டியை இந்த அகரமுதலியில் இணைத்து வெளியிட்டால் அது ஆய்வுகளுக்குப் பயன்படும். பப்ரிசியசு அகரமுதலியில் நூறு விழுக்காடு ஆங்கில எழுத்துப் பெயர்ப்புடனும் உருவாக்கப் பெற்றுள்ளமை பிறமொழியினருக்குப் பயன்படும் வகையில் அமைந்துள்ளது.. தமிழ்ப்பேழை அகராதியில் பல்லூடகக் கூறுகள் இணைக்கப்பெற வேண்டும். இத்தளம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒத்திசைவாக உள்ளது.

ந. கதிர்வேலுப்பிள்ளையின் தமிழ் மொழி அகராதி

ந. கதிர்வேலுப்பிள்ளை இந்த அகரமுதலியை 1928 ஆம் ஆண்டில் வெளியிட்டு உள்ளார். இந்த அகரமுதலியில் தமிழ்ச்சொற்கள் முதலிலும், இரண்டாவதாக அதன் ஆங்கில எழுத்துப் பெயர்ப்பும், மூன்றாவதாக தமிழ் விளக்கமும் அளிக்கப் பெற்றுள்ளன. இந்த மின்னகரமுதலியில் தேடுபொறி வாயிலாக ஆங்கிலத்திலோ அல்லது தமிழ் ஒருங்குறியிலோ தேடும் உள்ளீட்டுப்பெட்டி உள்ளது. இந்த அகரமுதலியில் தமிழ்ச்சொற்களுக்கான ஆங்கில ஒலிப்பு அளிக்கப்பெற்றுள்ளது. இவ்வகரமுதலியில் தமிழ் - தமிழ் - ஆங்கிலம் என்னும் தன்மையில் பொருள் விளக்கம் அமைந்துள்ளது. தேடுபொறியில் தமிழ் ஒருங்குகுறியில் தமிழ் உள்ளீட்டிற்கான ஒத்திசைவு இத்தளத்தில் உள்ளது. இவ்வலைத்தளத்தில் ஒலித்தேடல் ஏந்து இல்லை, இத்தளத்தில் சொற்களுக்கான பலுக்கல் (ஒலிப்பு) இணைப்பு இல்லை. இத்தளத்தில் ஒளிப்படங்கள், காணொளிகள், வரைபடங்கள், அசைவூட்டப் படங்களின் பயன்பாடு இல்லை. பின்னூட்டம், பேச்சு அல்லது உரையாடல் வாயிலாக தொகுப்புகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்பு இல்லை; எனினும் இவ்வகரமுதலியை ஓர் அடிப்படைப் பார்வை நூலாகக் கொள்ளலாம். இந்த அகரமுதலிக் குறுஞ்செயலியாக மாற்றுவது ஆய்வுகளுக்குப் பயனளிக்கும். அவ்வகரமுதலி அலைபேசியில் ஒத்திசைவைக் கொண்டிருக்கவில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கு ஒத்திசைவானதாக இல்லை. தெற்காசியாவின் எண்மிய அகரமுதலிகள் பிரிவில் இந்த அகரமுதலி திறவூற்று மூலமாக வெளியிடப் பெற்றுள்ளது.. தமிழ்ப்பேழை அகராதியில் பல்லூடகக் கூறுகள் இணைக்கப் பெற வேண்டும். இத்தளம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒத்திசைவாக உள்ளது.

டேவிட் எம்சி ஆல்பின் தொகுத்த அகரமுதலி

டேவிட் எம்சி ஆல்பின் தொகுத்த அகரமுதலியில் முதலில் தமிழ்ச் சொல்லும், இரண்டாவதாக அதற்குரிய ஆங்கில ஒலிப்பும், மூன்றாவதாக தமிழ் விளக்கமும், அடுத்தது தமிழின் பேச்சு வழக்கும் பட்டியலிடப் பெற்றுள்ளன. ஆங்கிலத்திலோ அல்லது தமிழ் ஒருங்குறியிலோ தேடும் வகையில் இந்த மின்னகரமுதலி உள்ளது. தேடுபொறியில் தமிழ் ஒருங்குகுறியில் தமிழ் உள்ளீட்டிற்கான ஒத்திசைவு இத்தளத்தில் உள்ளது. ஒலித்தேடல் இவ்வலைதளத்தில் இல்லை, இத்தளத்தில் சொற்களுக்கான பலுக்கல் இல்லை. ஒளிப்படங்கள், காணொளிகள், வரைபடங்கள், அசைவூட்டப் படங்களின் பயன்பாடு இத்தளத்தில் இல்லை. பின்னூட்டம், பேச்சு அல்லது உரையாடல் பகுதி இல்லை. இவ்வகராகதியை தமிழ் அகரமுதலி நூல்களின் மூலங்களில் ஒன்றாகக் கொள்ளலாம். இந்த அகரமுதலிக் குறுஞ்செயலியாக மாற்றுவது ஆய்வுகளுக்குப் பயனளிக்கும். அவ்வகரமுதலி அலைபேசியில் ஒத்திசைவைக் கொண்டிருக்கவில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கு ஒத்திசைவானதாக இல்லை. தெற்காசியாவின் எண்மிய அகரமுதலிகள் பிரிவில் இந்த அகரமுதலி திறவூற்று மூலமாக வெளியிடப்பெற்றுள்ளது. அவ்வகரமுதலி திறவூற்று மூலமாக உள்ளமை கல்வி, ஆய்வுப்ணிகளுக்கு பயனுடையதாக அமையும். ஆங்கில எழுத்துப் பெயர்ப்புடனும் இவ்வகரமுதலி உருவாக்கப் பெற்றுள்ளமை ஆய்வு வகையில் சிறப்பான ஒன்று. தமிழ்ப்பேழை அகராதியில் பல்லூடகக் கூறுகள் இணைக்கப் பெற வேண்டும். இத்தளம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒத்திசைவாக உள்ளது.

வின்சுலோ அகரமுதலி

மிரோன் வின்சுலோ (1789) தொகுத்த, தமிழ் ஆங்கில விரிவான அகராதியில் (A Comprehensive Tamil and English Dictionary) அகரவரிசைப்படி அறுபத்து எட்டாயிரம் சொற்கள் உள்ளன. 1862 ஆம் ஆண்டில் இந்த அகரமுதலியினை வின்சுலோ தொகுத்தளித்தார். தமிழ் - ஆங்கில விளக்கம் - சொல் வேர், தொடர்புடையச் சொற்கள் என இவ்வகரமுதலி தொகுக்கப் பெற்றுள்ளது. இந்த அகரமுதலியில் முதலில் தமிழ் - தமிழ் - ஆங்கிலம் என்னும் தன்மையுடன் விளங்குகின்றது. தமிழ் ஒருங்குகுறி அல்லது ஆங்கிலத்தில் உள்ளீட்டைச் செய்யும் வகையில் இம்மின்னகரமுதலி உள்ளது. தேடுபொறியில் தமிழ் ஒருங்குகுறியில் தமிழ் உள்ளீட்டிற்கான ஒத்திசைவுடன் இவ்வலைத்தளம் உள்ளது. ஒலித்தேடல் இவ்வலைத்தளத்தில் இல்லை, இத்தளத்தில் சொற்களுக்கான பலுக்கல் ஒலிப்பு இல்லை. ஒளிப்படங்கள், காணொளிகள், வரைபடங்கள், அசைவூட்டப் படங்களின் பயன்பாடு இத்தளத்தில் இல்லை. பின்னூட்டம், பேச்சு அல்லது உரையாடல் பகுதி இல்லை. இவ்வகராகதியை தமிழ் அகரமுதலி நூல்களின் மூலநூலாகப் பயன்படக்கூடியவை ஆகும். இந்த அகரமுதலிக் குறுஞ்செயலியாக மாற்றுவது தேவையான ஒன்றாகும். அவ்வகரமுதலி அலைபேசியிலும், மாற்றுத்திறனாளிகளுக்கும் ஒத்திசைவானதாக இல்லை. இந்த அகரமுதலி திறவூற்று மூலமாக வலைத்தளத்தில் வெளியிடப்பெற்றுள்ளது. தமிழ்ப்பேழை அகராதியில் பல்லூடகக் கூறுகள் இணைக்கப்பெற வேண்டும். இத்தளம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒத்திசைவாக உள்ளது.



சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராகரமுதலி

சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட தமிழ் அகராதியே சென்னைப் பல்கலைக்கழக பேரகராதி ஆகும். இது இவ்வகரமுதலி ஏழு தொகுதிகளாக 1924-1936 ஆண்டுக் காலக்கட்டத்தில் பதிப்பிக்கப் பெற்றது. இவ்வகராதியில் 1,17,762 சொற்கள் உள்ளன. இவ்வகரமுதலியின் தேடுபொறியில் முழுச்சொல்லையும் சரியாகத் தேடுதல், ஒரு சொல்லின் தொடக்கச் சொற்களைக் கொண்டு தேடுதல், ஒரு சொல்லின் இடைப்பகுதியைக் கொண்டு தேடுதல், ஒரு சொல்லின் கடைப்பகுதியைக் கொண்டு தேடுதல் என்னும் விருப்பத் தேர்வுகள் உள்ளன.

இந்த அகரமுதலியில் முதலில் தமிழ் - தமிழ் - ஆங்கிலம் என்ற வகையில் விளங்குகின்றது. ஆங்கிலத்திலோ அல்லது ஒருங்குகுறித் தமிழிலோ தேடும் வகையில் இவ்வகராதி உள்ளது. தேடுபொறியில் தமிழ் ஒருங்குகுறியில் தமிழ் உள்ளீட்டிற்கான ஒத்திசைவை இவ்வலைத்தளம் கொண்டுள்ளது. இவ்வலைத்தளத்தில் ஒலித்தேடல் இல்லை. சொற்களுக்கான பலுக்கல் ஒலிப்பு இத்தளத்தில் இல்லை. இத்தளத்தில், ஒளிப்படங்கள், காணொளிகள், வரைபடங்கள், அசைவூட்டப் படங்களின் பயன்பாடு இல்லை. பின்னூட்டம் அளிப்பதற்கான ஏந்து இத்தளத்தில் இல்லை. இந்த அகரமுதலி திறவூற்று மூலமாக வெளியிடப் பெற்றுள்ளது. இந்த அகரமுதலிக் குறுஞ்செயலியாக மாற்றுவது ஆய்வுகளுக்குப் பயன்படும் ஒன்றாகும். தமிழ்ப்பேழை அகராதியில் பல்லூடகக் கூறுகள் இணைக்கப்பெற வேண்டும். இத்தளம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒத்திசைவாக உள்ளது.

கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி

இவ்வகரமுதலி 1992 ஆம் ஆண்டில் வெளியான தற்காலத் தமிழ் அகரமுதலி ஆகும். இந்த அகராதியில் 75 இலக்கம் தமிழ்ச் சொற்கள், சொல்வங்கியின் உறுதுணையுடன் தொகுக்கப்பெற்றுள்ளது. படங்கள் 342 சொற்களுக்குப் பயன்படுத்தப் பெற்றுள்ளதால் சொற்பொருள் விளக்கம் எளிதில் புரியும் வகையில் உள்ளது. இந்த அகரமுதலி தமிழ் - தமிழ் - ஆங்கிலம் என்பதாக உள்ளது. ஆங்கிலத்திலோ அல்லது ஒருங்குகுறித் தமிழிலோ தேடும் வகையில் இவ்வகராதி உள்ளது. தேடுபொறியில் தமிழ் ஒருங்குகுறியில் தமிழ் உள்ளீட்டிற்கான ஒத்திசைவை இவ்வலைத்தளம் கொண்டுள்ளது. இவ்வலைத்தளத்தில் ஒலித்தேடல் இல்லை. சொற்களுக்கான பலுக்கல் ஒலிப்பு இத்தளத்தில் இல்லை. இத்தளத்தில் காணொளிகள், வரைபடங்கள், அசைவூட்டப் படங்களின் பயன்பாடு இல்லை. பின்னூட்டம் அளிப்பதற்கான ஏந்து இத்தளத்தில் இல்லை. இந்த அகரமுதலி ஐபோன், ஐபேட் ஆகியவற்றில் செயல்படும் குறுஞ்செயலியாக செயற்பாட்டில் உள்ளது. இவ்வகரமுதலித்தளம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒத்திசைவு கொண்டதாக இல்லை. தமிழ்ப்பேழை அகராதியில் பல்லூடகக் கூறுகள் இணைக்கப்பெற வேண்டும். இத்தளம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒத்திசைவாக உள்ளது.

முடிவும் பரிந்துரைகளும்

இவ்வாய்வின் நோக்கீட்டின்படி;

1. ஆங்கிலத்தில் பதிப்பிக்கப் பெற்றுள்ள கலைக்களஞ்சியங்கள், பட அகரமுதலிகளைப் போல தமிழின் அகரமுதலிகள் செம்மையாக நீண்டகால நோக்கில் மாற்றுத்திறனாளர்களுக்கு ஒத்திவுசைவுடன் உருவாக்கப் பெறவேண்டும்.

2. படம், காணொலி, ஒலிப்புடன் அசைவுப்படம் சார்ந்த அகரமுதலிகளின் உருவாக்கம் மாற்றுத்திறனாளர்களுக்கு ஒத்திவுசைவுடன் உருவாக்கினால் கற்றல், கற்பித்தலில் சிறந்த தாக்கத்தினை ஏற்படுத்தக்கூடும்.

3. தமிழில் உள்ள அருங்கலைச்சொற்கள் நூறு விழுக்காடு பல்லூடகத் தன்மையுடன் மின்னகரமுதலிகளாக மாற்றப்பெறல் வேண்டும்.

4. தமிழகப் பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் அகரமுதலித்துறை உருவாக்கப்பெற வேண்டும்.

5. தமிழ் இணையக் கல்விக்கழகம் அகரமுதலிகளை மாற்றுத்திறனாளர்களுக்கு ஒத்திவுசைவுடன் அலைபேசி குறுஞ்செயலியாகவும் வெளியிட வேண்டும்.

6. செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கக அகரமுதலிகள் மின்னகரமுதலிகளாக ஆக்கம் பெற்றிருந்தாலும் அலைபேசிக்கு ஒத்திசைவுக் கொண்டதாகவும் மாற்றுத்திறனாளர்களுக்கு ஒத்திவுசைவுடனும் வெளியிடப்பெற வேண்டும்.

7. தமிழக அரசின் ஆட்சிச்சொல்லகராதிகள் அலைபேசி குறுஞ்செயலியாகவும் மாற்றுத்திறனாளர்களுக்கு ஒத்திவுசைவுடனும் வெளியிடப்பெற வேண்டும்.

8. தமிழ் மின்னகரமுதலிகள் அனைத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒத்திசைவானதாக புத்தாக்கம் பெற வேண்டும்.

9. தமிழ்நாட்டரசு நாட்டுடைமை ஆக்கியுள்ள அகரமுதலி நூல்கள் யாவும் மாற்றுத்திறனாளர்களுக்கு ஒத்திவுசைவுடன் ஒருங்குகுறித்தமிழில் மின்னகரமுதலிகளாகவும் உருவாக்கப் பெற வேண்டும்.

10. தமிழ்நாட்டரசின் அனைத்து இணையதளங்களும் மாற்றுத்திறனாளர்களுக்கு ஒத்திசைவிற்குரிய நுட்பங்களுடன் உடனடியாக மாற்றப் பெற வேண்டும்.

11. தமிழ்நாட்டின் கல்வி நிறுவன இணையத்தளங்கள் அனைத்தும் சீரான இடைவெளியில் மாற்றுத்திறனாளர்களுக்கு ஒத்திசைவாக உள்ளதா எனவும் ஆட்சித்தமிழ் சட்டத்தின்படி தமிழ் உள்ளடக்கங்கள் உள்ளவானவா எனவும் கண்காணிக்கப் பெற வேண்டும்.

நோக்கீட்டுத் தரவுகள்

1. அருளி, ப., அருங்கலைச்சொல் அகரமுதலி, தமிழ் பல்கலைக்கழகம்: தஞ்சாவூர். (2002)

2. தேவநேயப் பாவணர், ஞா.,சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதியின் சீர்கேடு, புதுச்சேரி. (1961)

3. மாதையன், பெ., அகராதியியல், தமிழ் பல்கலைக்கழகம்: தஞ்சாவூர். (1997)

4. http://MyDictionary.in/ (பார்வையிட்ட நாள் 22.08.2025)

5. http://dsal.uchicago.edu/dictionaries/fabricius/ (பார்வையிட்ட நாள் 20.08.2025)

6. http://dsal.uchicago.edu/dictionaries/kadirvelu/ (பார்வையிட்ட நாள் 22.08.2025)

7. http://dsal.uchicago.edu/dictionaries/list.html#tamil (பார்வையிட்ட நாள் 21.08.2025)

8. http://dsal.uchicago.edu/dictionaries/mcalpin/ (பார்வையிட்ட நாள் 23.08.2025)

9. http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/ (பார்வையிட்ட நாள் 25.08.2025)

10. http://dsal.uchicago.edu/dictionaries/winslow/ (பார்வையிட்ட நாள் 26.08.2025)

11. http://thamizhagam.net/education/dictionary.html (பார்வையிட்ட நாள் 22.08.2025)

12. http://www.crea.in/index.php (பார்வையிட்ட நாள் 20.08.2025)

13. http://www.tamilvu.org/library/technical_glossary/html/index.htm (பார்வையிட்ட நாள் 19.08.2025)

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/scienceandtechnology/p14.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License