இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
அறிவியல் & தொழில்நுட்பம்

கையடக்கக் கருவிகளில் தமிழ்

வினாயகமூர்த்தி வசந்தா
கலைமாணி, பொருளியல் துறை, கலை கலாசார பீடம்,
கிழக்குப் பல்கலைக்கழகம், வந்தாறுமூலை, இலங்கை.


அறிமுகம்

விண்ணில் பறக்கும் மனித சாதனைகளைத் தாண்டி இன்று எத்தனையோ விஞ்ஞானப் புதுமைகள் எம்மை வியக்க வைத்துள்ளன. மனிதனின் அறிவுத்திறனால் உலகம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சார்ந்த மனித கண்டுபிடிப்புக்களும் உலகை வெகுவாய் மாற்றியமைத்துள்ளன. நீரும் நிலமும் இணைந்து உருவாகிய உலகத்தில் வாழும் பல மொழி பேசும் மக்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ளவும், தங்களது கருத்துக்களை இலகுவாய் பரிமாறிக் கொள்ளவும், தமக்குத் தேவையான விடயங்களை அறிந்து கொள்ளவும், இது போன்ற இன்னோரன்ன செயற்பாடுகளை மேற்கொள்ளவும் நவீனத் தொடர்பாடல் தொழில்நுட்பம் வழி சமைத்துள்ளது. பரந்துபட்ட இவ்வுலகில் யாரும் யாரோடும் தொடர்பாடலை எந்தத் தடையுமின்றி மேற்கொள்ளலாம் என்ற நிலை உருவாகிப் பல தசாப்தங்களாகிவிட்டது. நாளுக்கு நாள் பல புதுமையான நுட்பங்களோடு தொடர்பாடல் உலகம் வலம் வந்து கொண்டிருக்கிறது.

உள்ளங்கைகளில் உலகமே இயங்கும் அளவிற்கு நாம் இன்று புதுமை நிறைந்த யுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நவீன உலகம் உள்ளங்கைக் கருவிகளின் துணையோடு இயங்கிக் கொண்டிருக்கிறது. கையடக்கக் கருவிகள் இல்லாமல் உலகம் இயங்க மறுக்கின்றது. அதன் எண்ணற்ற பல நுட்பங்கள் எம்மை ஆச்சரியத்தில் உறைய வைத்து, இன்று அதன் அடிமைகளாக எம்மை மாற்றிவிட்டது. பாமர மக்கள் முதல் படித்த உயர் சமூகம் வரை பயன் பெறக்கூடிய வகையில் கையடக்கக் கருவிகள் சமூகத்தில் ஒரு மாபெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. செல்லிடத் தொலைபேசி, கைக்கணினி (tablet), மடிக்கணினி (laptop) என பல கையடக்கக் கருவிகள் நாள் தோறும் மனிதரிடம் உறவாடும் ஒரு உயிருள்ள உறவுப்பொருளாக மாறியுள்ளது. மொழி என்ற ஒன்று இல்லாமல் தொடர்பாடல் இயங்குமா? மனித வாழ்வியலோடு பின்னிப் பிணைந்த ஒன்றாக மொழி விளங்குகிறது. கையடக்கக் கருவிகளுக்கும் எங்களுக்கமான உறவு மொழியினூடாகவே கட்டி எழுப்பப்படுகின்றது எனலாம். எண்ணற்ற பல மொழி பேசும் மக்கள் இலகுவாய் இயக்கக்கூடிய வகையில் கையடக்கக் கருவிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இக்கருவிகளைப் பயன்படுத்தும் மக்களுள் தமிழ் மொழியினைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழரும் அடங்குவர்.

தமிழ் மொழியின் பிரயோகத் தன்மை

உலகத்தில் எத்தனையோ எண்ணற்ற மொழிகள் காணப்படுகின்றன. அவற்றில் தமிழ் மொழியும் பல தொன்மையான வரலாற்றினைக் கொண்டதாக விளங்குகிறது. உலகிலுள்ள சகல தகுதிகளும் பெற்ற மொழிகளில் (செம்மொழி) தமிழும் ஒன்று. யுனெஸ்கோ விடுத்துள்ள அறிக்கையில் உலகில் அழிந்து போகக்கூடிய மொழிகளில் தமிழும் குறிப்பிடப்பட்டுள்ளமையானது வேதனைக்குரிய விடயமாகும். எனவேதான் கையடக்க கருவிகளில் தமிழின் பிரயோகத் தன்மை குறித்து ஆராய்வது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது, ஏன் எனில் தமிழானது இன்று அழிவடைந்து வருகின்ற மொழிகளில் ஒன்றாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. கையடக்கக் கருவிகளில் தமிழின் பிரயோகத் தன்மையினை பொறுத்தவரை தமிழின் வளர்ச்சி, அழிவு எனும் இரு முனைவுகளிலும் கூரானதாகவே விளங்குகிறது எனலாம். எனவே தழிழ் மொழியினைப் பாதுகாப்பது இன்றைய தலைமுறையினரின் தலையாய கடமையாகும்.

வளர்ச்சி நிலை

மேலைநாட்டவரின் விஞ்ஞானப் புதுமையினால் படைக்கப்பட்ட கையடக்கக் கருவிகளில் பழமை சார்ந்த மொழியாகப் பறைசாற்றப்பட்டு நிற்கும் தமிழ்மொழி; தனக்கென ஒரு இடத்தைப் பேணுவது தாற்பரியமான விடயமாகும். கையடக்கக் கருவிகள் உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து, இன்றைய நவீன கணினி யுகம் வரை முதன்மையான இடத்தில் இருப்பது கையடக்க தொலைபேசியாகும். கையடக்கத் தொலைபேசியை மோட்டரோலா (Motorola) எனும் நிறுவனம் 3- 4-1973 ஆம் திகதி உலகச் சந்தைக்கு அறிமுகப்படுத்தியது. ஆரம்பத்தில் கையடக்கக் கருவிகளுக்கு அடிப்படையாக அமைந்த கையடக்கக் தொலைபேசி முதல் அனைத்து கருவிகளிலும் ஆங்கில எழுத்துருக்களின் மூலமேதான் அவற்றினைப் பயன்படுத்தும் சகல மொழியினரும் தமது கட்டளைகளை செயற்படுத்தி பயனை பெறமுடிந்தது. இதனால் அவற்றினைப் பயன்படுத்துவோரும், அவற்றில் இருந்து பயன் பெறுவோரும் குறைவாகவே இருந்தனர்.

வேகமாக நகர்ந்து கொண்டிருக்கும் இவ்வுலகத்தில் மனிதத் தொடர்பாடல் ரீதியான தேவைகளை வரையறை செய்வது கடினமான காரியமாகும். நாளுக்கு நாள் மனிதத் தேடல்களின் வட்டம் விரிவடைந்து கொண்டே செல்கிறது. கையடக்கத் தொலைபேசி அறிமுகமாகிப் பயன்பாட்டில் இருந்த காலப்பகுதிகளில் குறும் செய்திகளை (SMS) ஆங்கிலத்தில் மட்டுமே அனுப்ப முடிந்தது. தமிழ் எழுத்துக்களை உள்ளீடு செய்வதற்கான விசைப்பலகை (Keyboard) வசதிகள் மற்றும் தமிழ் எழுத்துக்களை உள்ளீடு செய்வதற்கான கட்டளை வசதிகள் என்பனவும் காணப்படவில்லை. அதே போலவே தேடல்பொறிகளில் (Search Engine) ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே இணையதளச் சேவைகளைப் பெற முடிந்தது. இவ்வாறு கையடக்கக் கருவிகளில் அனைத்து நிகழ்ச்சிகளும் (Programmes) ஆங்கில மொழியினை அடிப்படையாகக் கொண்டவையாகவே அமைந்திருந்தன. ஆனால், அத்தகைய நிலைகள் யாவும் தற்போது முழுவதுமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. நாட்களின் நகர்வில் கையடக்கக் கருவிகளில் ஏனைய மொழிகளின் தேவை உணரப்பட்டது என்றே கூறலாம். இத்தகைய நிலை, தமிழின் தேவைப்பாட்டினையும் உணர வைத்தது.தமிழின் மேன்மையான பயன்பாட்டு நிலை

கையடக்கக் கருவிகள் ஒரு புதுப் பொலிவுடன் கடந்த இரண்டு தசாப்தங்களுக்குள் நவீன உலகில் மிளிருவதை நாம் கண் முன்னே காணலாம். இணையம் எனும் பெரும் சேவை உலகிற்குப் பல அரிய வகைப் பயன்களைப் பெற்றுத் தந்துள்ளது. பாரிய கணினி வலையமைப்புடன் இணைந்த வகையில் இன்றைய உலகம் ஓய்வில்லாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது. அத்தகைய இணைய வசதியுடன் கூடிய வகையில், இன்று கையடக்கக் கருவிகள் வளர்ச்சி பெற்றிருப்பதனைக் காணலாம்.

தமிழ் மொழியின் பல அம்சங்களை சுமந்து இணையமானது வலம் வருவது வியக்கத்தகு விடயமேதான். இன்று கையடக்கக் கருவிகளில் அமைந்துள்ள இணையத்தள வசதிகளில் பெரும்பாலானவை தமிழ் மொழிமூலம் பெறக்கூடியதாக இருப்பது பெருமைக்குரியதாகும். உதாரணமாக, www.muthukamalam.com, www.tamilvu.org, www.zonetamil.com போன்ற பல தமிழ் வலைத்தளங்களை குறிப்பிடலாம். இத்தகைய இணையத்தளங்களில் அறிவியல், அரசியல், தொழில்நுட்பம், விளம்பரங்கள், பத்திரிகை செய்திகள், தமிழ் படைப்புக்கள் இன்ன பிற எல்லாமும் தமிழ் மொழியின் மூலம் பெறக்கூடியதாக உள்ளது. அனேக இணைய வலைத்தளங்களில் ஏதோ ஒரிடத்தில் தமிழ் எழுத்துக்களை காணக்கூடியதாக உள்ளது.

ஏட்டினில் எழுதப்பட்ட எத்தனையோ அரிய பல கருத்தக்களும், தமிழரின் தமிழ் ஆக்கப் படைப்புக்களும், அழியும் நிலையில் இருந்த அழியா புகழ் பெற்ற தமிழ் ஆக்கங்களும், தமிழர் மனங்களில் துளிர்விட்டிருந்த சிந்தனைகளும், பிற மொழியில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட நுல்கள் என எத்தனையோ தமிழ்ப் படைப்புக்களின் தொகுதிகள் இணையத்தின் மூலம் கையடக்கக் கருவிகளில் ஒரு நிலையான இடத்தைப் பெற்றுள்ளது. தமிழ் என்றும் காலத்தால் அழிவதில்லை என்னும் உயரிய நிலைக்கு இது சான்று பகிர்கிறது. கூகுள் மொழிபெயர்ப்பு (Google translator) மென்பொருளில் ஆங்கில மொழியில் இருந்து தமிழினைப் பெறமுடிகிறது. ஆங்கிலம் மற்றும் ஏனைய மொழி மூலமான பல விடயங்களை தமிழில் நுகர முடிகிறது.

கையடக்க கருவிகளில் தமிழ் சார் நிகழ்ச்சிகள் (Progamme) அது சார்ந்த தேவையுடையவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. தமிழ் நிகழ்ச்சிகளுக்கான, உதாரணமாக யோசி (Yosi), தமிழ் அகராதிகள் (Tamil Dictionaries) ஆகிவற்றைக் குறிப்பிடலாம்.

தமிழில் பேச்சு நடையிலும், எழுத்து நடையிலும் பண்டையத் தமிழ்ச் சொற்கள் பல பயன்பாட்டில் இருந்து அவை அழிந்து போன, அழிந்து போகின்ற வரலாற்றினை நாம் அறிவோம். இத்தகைய ஒரு நிலையில் இன்று தமிழ்மொழி கையடக்கக் கருவிகளில் ஏதோ ஒரு வகையில் பாதுகாக்கப்படுவதனைக் காணலாம். எமக்குத் தேவையான தமிழ் சார் ஆக்கங்களை எந்தவொரு நேரத்திலும் எங்கிருந்தவாறும் இணைய வசதி மூலமாகப் பதிவேற்றம் (Upload) செய்யவும், அதே நேரத்தில் பதிவிறக்கம் செய்யவும் முடியுமான ஒரு சூழல் உருவாகியுள்ளது. கையடக்கத் தொலைபேசியினைப் பொறுத்தவரையில், இன்று தேவை கருதிக் குறுஞ்செய்திகளை (SMS) தமிழில் அனுப்ப முடிகிறது. தமிழ் விசைப்பலகை வசதிகளைப் பயனரின் தேவை கருதி கையடக்கக் கருவிகளில் தரவிறக்கம் செய்து கொள்ளவும் முடிகின்றது.

கையடக்கக் கருவிகளில் மற்றுமொரு தமிழ் சார்ந்த முக்கிய விடயம் யாதெனில் சமூக வலைத்தளங்களாகும். இச்சமூக வலைத்தளங்களானது இருவருக்கிடையிலோ அல்லது பல நபர்கள் சேர்ந்த குழுக்களுக்கிடையிலோ பல செய்திப் பரிமாற்றங்களை செய்து கொள்ள உதவுகிறது. உடனுக்குடன் பரிமாற்றம் செய்யும் பணியைப் புரிகிறது. இவ்வாறான சமூக வலைத்தள மென்பொருட்கள் (Facebook, Messenger, Twitter, Viber, WhatsApp, Youtube, flickr) தமிழ் மூலமான செய்திப் பரிமாற்றங்கள், தமிழ் நிகழ்பட இணைப்புக்கள் ஆகியவற்றை இலகுவாகப் பரிமாற்றம் செய்யக்கூடியவாறு அமைக்கப்பட்டிருப்பதனைக் காணலாம். தமிழ் சார் தொகுப்புக்கள் பல பரிமாற்றம் செய்யும் பாரிய பணியை இவை புரிகின்றன என்றால் அது மிகையாகாது.தமிழின் அழிவு நோக்கியதான பயன்பாட்டு நிலை

ஆயினும் தமிழ் மொழியின் பயன்பாடு முழுவதுமாக கையடக்கக் கருவிகளில் உள்ளனவா? என்றால் இல்லை என்றே கூறவேண்டும். நாளுக்கு நாள் தமிழ், கையடக்கக் கருவிகளில் பல புதியப் பரிமாணங்களுடன் வலம் வந்தாலும், தமிழ் பலவாறும் அழிவடையும் ஒரு நிலையும் மறுபுறம் உருவாகியுள்ளமையும் மறுக்கமுடியாத உண்மையாகி விடுகிறது. தமிழ் மொழியை நாம் பயன்படுத்தும் நல்ல செயற்பாட்டினிடையேப் பல தவறான இணையத்தளங்களிலும் தமிழ் மொழி பயன்படுத்தப்படுவது வேதனையான விடயமே. அதாவது, ஆபாசமான கருத்துக்களை வெளிக்காட்டக் கூடிய வகையில் பல தமிழ் சார் வலைத்தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எண்ணற்ற எத்தனையோ வலைத்தளங்கள் காணப்பட்டாலும் அவற்றில் முழுதாகத் தமிழ் சார் கட்டளைகளைக் கொண்டு இயங்கக் கூடியவை எத்தனை உள்ளன? என்றால் விடையளிப்பது சற்று கடினமான ஒரு விடயமேயாகும்.

கையடக்கக் கருவிகளில் என்னதான் வியத்தகு விடயங்கள் பொதிந்து கிடந்தாலும் மொழி என்ற வகையில் தமிழின் இடம் சற்று கேள்விக்குறியான விடயமாகவே உள்ளது. கையடக்கக் கருவிகளில் தமிழ் சொற்பிரயோகம் இடம் பெற்றாலும் அவை, பாரிய அளவில் சிதைவுக்குள்ளாக்கப்படுவதனையும் காணலாம். இணையத்தின் மூலம் சமூக வலைத்தளங்களில் தமிழானது தவறான வார்த்தைப் பிரயோகங்களுடன் பயன்படுத்தப்படுவதனைக் காணலாம். அதாவது தமிழானது சரியான ஒழுங்கின்றி இலக்கண அமைவில்லாமல் பயன்படுத்தப்படுவதும் மிக முக்கியமான ஒரு விடயமாகும். மேலும் எழுத்துப் பிழைகளுடன் கூடிய தமிழ்ச் சொற்கள் கையடக்கக் கருவிகளில் சாதாரணமாகப் பயன்படுத்தப்படுவதனையும் எங்கும் காணமுடியும்.

சமூக வலைத்தளங்களில் (Face Book, Messenger, Whatsapp) கேலி, கிண்டல் என்றவாறு; அரட்டையில் (Chating) தமிழ் மொழியானது பிரயோகிக்கப்படுவதனால் தமிழ் தனது பெருமையை இழந்து விடுவதனை நன்கு அவதானிக்க முடியும். கூகுள் மொழிபெயர்ப்பு (Google Translation) தமிழ் சார்ந்த செயற்பாட்டிற்கு ஒரு உந்து சக்தியாக அமைந்தாலும் அது பயனர்களுக்கு பெரும்பாண்மையான நேரங்களில் குறைபாடுடைய ஒன்றாகவே அமைகிறது.

மிக நீளமான வாக்கியத்தின் மொழி பெயர்ப்பின் போது அது வினைத்திறனாக செயற்படாமலிருப்பதனையும் காணலாம். தமிழ் மொழியானது வாக்கியத்தின் பொருள் மாறுபட்ட வகையில் மாற்றமடையும் ஒரு சூழ்நிலையினை உருவாக்கி விடுகின்றது. மேலும் பல தமிழ்s செயற்பாட்டுடன் கூடிய வகையில் அமைந்த பல மென் பொருட்கள் வினைத்திறனாகs செயற்படுவதில்லை. இதனால் கையடக்கக் கருவிகளை முழுதாக நம்ப முடியாத ஒரு கவலைக்கிடமான நிலையும் உருவாகியுள்ளது.

கையடக்கக் கருவிகளில் தமிழ் மொழியானது பிற மொழிகளோடு இணைந்த வகையில் பயன்படுத்தப்படுவதனால் தமிழினது செயற்றிறன் சற்று மாற்றமடையும் நிலை உருவாகியுள்ளது. அதாவது பிற மொழிகள் தமிழினை ஆக்கிரமிக்கும் கவலைக்கிடமான நிலை தோன்றியுள்ளமையினை நாம் வெளிப்படையாகக் கண்டு கொள்ளக்கூடியதாக உள்ளது. பிற மொழிகள் தழிழோடு சேர்ந்து பயன்படுத்தப்படும் செயற்பாடு நாளடைவில் அதிகரிக்கும் நிலையில் தமிழ் மொழியானது தன்னுடைய உயர்வு குறித்த சிந்தனையில் ஏற்றம் காண்பது என்பது இயலாத ஒரு விடயமாகிவிடும்.

ஆனாலும், சர்வ சாதாரணமான முறையில் தமிழ் மொழியானது பிற மொழிகளோடு இணைந்த வகையில் பயன்படுத்தப்படுவதற்கு கையடக்கக் கருவிகள் ஒருவகையில் காரணமாக அமைந்துள்ளன. தமிழ் சார்ந்த படைப்புக்கள் இன்று கணினி உலகுடன் கையடக்கக் கருவிகளில் பல வலைத்தளங்கள், பிற கருவி கட்டளை செயற்பாடுகள் (Programme) போன்றவற்றோடு இணைந்து பாதுகாக்கப்பட்டாலும் கூட மறுபுறம் தமிழ் சீரழிந்து செல்லும் ஒரு நிலையும் தென்பட்டுள்ளது. கையடக்கக் கருவிகளில் பயனாளர்களின் செயற்பாடுகளும் கருவிகளின் நுட்பங்களும்தான் இதற்குக் காரணமாய் அமைகின்றன என்றால் அது மிகையாகாது.முடிவுரை

அழியாத நிலையில் அடைவு காணும் வரை தமிழின் தாகம் ஓயப்போவதில்லை. தொழில்நுட்ப வளர்ச்சி உலகை ஒரு குடையின் கீழ் சுருக்கிவிட்டது. அறிவின் விருத்தி இன்று பாரிய தமிழ் மொழி வளரவும், அதே வேளை வேரோடு சாயவும் வழிகோலியுள்ளது. கையடக்கக் கருவிகளில் தமிழ் வளர்த்தெடுக்கப்பட வேண்டுமே தவிர தமிழ் வளர்ச்சி குன்றிப்போகக் கூடாது. தமிழ் சார்ந்தனவாக கையடக்க கருவிகளின் செயற்பாடுகளை மாற்றியமைக்க வேண்டும். ஒரு மொழியின் அழிவிற்கு கையடக்கக் கருவிகள் காரணமாக அமையக் கூடாது. புத்திக் கூர்மையான எத்தனையோ மேதைகள் தமிழரிடையே உள்ளனர். அவர்கள் தழிழ் மொழி மூலமாக இயக்கப்படும் மென்பொருட்களை உருவாக்க வேண்டும்.

தமிழ் மொழி மூலமான கட்டளைகளை ஏற்கவும், தமிழில் பதிலளிக்கவும் கூடியதாக சிறந்த வினைத்திறனான மென்பொருட்களை எதிர் காலத்தில் அமைத்திட வேண்டும். ஆங்கில வார்த்தைக்குச் செயற்படும் ஒரு கருவி ஏன் தமிழில் செயற்படமுடியாது? அறிவியல் தொழில்நுட்பவியலாலர்கள் புதிய உத்திகளைக் கையாண்டு புதிய தமிழ் மென்பொருட்களை கண்டுபிடித்துச் செயற்படுத்தினால் உலகெங்கும் பயன்பாட்டில் உள்ள கையடக்கக் கருவிகளில் தமிழ் மொழியின் பயன்பாடு தவிர்க்க முடியாததாகிவிடும். தமிழ் மொழி என்றுமே தரம் குறைந்ததல்ல என்ற உண்மை உலகுக்கு தெரியவரும். ஆங்கில மொழிகளில் கட்டளைகள் கொண்டு செயற்படுகின்ற மென் பொருட்களுக்கு இணையான வகையில் தமிழ் சார் மென் பொருட்கள் கையடக்கக் கருவிகளில் பயன்படுத்தும் தேவை இனியாவது உணரப்பட வேண்டும்.

நிலையற்ற இந்த உலகில் எதுவுமே நிரந்தரம் இல்லை. நாளுக்கு நாள் மாற்றங்கள் பலவும் உலகை வலம் வருகின்றன. விஞ்ஞான உலகில் வாழ்ந்து கொண்டிருக்கம் மனிதர்களின் நிலையும் அவனது ஏனைய வாழ்வியல் சார் அம்சங்களும் கேள்விக் குறியாகியுள்ளன. நாளுக்கு நாள் கையடக்கக் கருவிகளில் புகுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற புதிய நுட்பங்களானது பாவனையாளர்களினுடைய நன்மை கருதி அமைக்கப்பட்டாலும் கூட தமிழ் சார்ந்து பல விடயங்கள் கவலைக்கிடமாகியுள்ளமையும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகின்றது.

இனியாவது கையடக்கக் கருவிகளில் தமிழ் சார்ந்த செயற்பாடுகளின் தேவையானது சமூகத்தினால் உணரப்பட்டு அதற்கேற்ற முனைவுகள் முன்னெடுக்கப்படவேண்டும். ஆங்கில மொழி சார்ந்து காணப்படும் மென் பொருட்கள் எல்லாம் தமிழ் மொழி சார்ந்த கட்டளை தொழிற்பாடுகளை கொண்டு இயங்கக் கூடிய வகையில் புதிய மாற்றம் ஒன்றை வரலாறு காணும்படி நிகழ்த்த வேண்டும். கையடக்கக் கருவிகளுக்குத் தமிழினை நாம் சரியான முறையில் இன்று கற்றுக்கொடுப்போம். நாளை நம் எதிர்கால சமூகத்திற்கு கையடக்கக் கருவிகள் தமிழினை கற்றுக் கொடுக்கட்டும். தவறுகள் அற்ற தமிழ் சார் தொழில் நுட்பம் ஏற்றம் காணும் வகையில் இன்றே செயற்படுவோம்.

உசாவியவைகள்

1.பெரியண்ணன்.கோ, “இணையம் மற்றும் கணினி வழி தமிழ் கற்றல் கற்பித்தல்”, தமிழ் இணைய மாநாட்டு மலர், பென்சில்வேனியா. (2011)

2. நக்கீரன் பி. ஆர், “தமிழ் இணைய பல்கலைக்கழக மென்பொருட்கள்- ஒரு கண்ணோட்டம்”, தமிழ் இணைய மாநாட்டு மலர், கோவை. (2010)

3. இளஞ்செழியன். வே, இளந்தமிழ். சி. ம, “தமிழில் தகவல் தொழில்நுட்பத்தைக் கற்பித்தல்- வாய்ப்புக்களும் சிக்கல்களும்”, தமிழ் இணைய மாநாட்டு மலர், பென்சில்வேனியா. (2011)

4. குழந்தைவேல் பன்னீர்ச்செல்வம். சு, “இணையவழிக் கற்றல் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள்”, தமிழ் இணைய மாநாட்டு மலர், செருமானியம். (2009)

5. ரபி சிங். எம். ஜே, “மின்னனுவழியில் தமிழ் மொழிக் கற்பித்தல் மற்றும் கற்றல்”, தமிழ் இணைய மாநாட்டு மலர், கோவை. (2010)

6. http://www. Chennailibrary.com/index.html

7. http://www.tamilvu.org/library/libcontnt/html

8. http:// www.ta.wikipedia.org/தமிழ்

9. http://www. Tamilvu.org/library/ kalaikkalangiyam

10. http://ta.wikitionary.org/wiki/முதற்பக்கம்

11. http://www.thozhilnutpam.com

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/scienceandtechnology/p8.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்

முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License