Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            ISSN  2454-1990
muthukamalam muthukamalam
உங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.

உள்ளடக்கம்

சமையல்

Alexa Rank


பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
அறிவியல் & தொழில்நுட்பம்

உலகை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும் இலத்திரனியல் கழிவுகள்

திரவியராசா நிறஞ்சினி
உதவி விரிவுரையாளர், மெய்யியல் மற்றும் தத்துவ விழுமியக்கற்கைகள் துறை,
கலை கலாசார பீடம், கிழக்கு பல்கலைக்கழகம், இலங்கை.


இலத்திரனியல் சாதனங்கள் இன்று உலகில் அதிவிரைவான தயாரிப்புக்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. தகவல் தொழில்நுட்பச் சாதனங்களின் வளர்ச்சி, துரிதப் பொருளாதார அபிவிருத்தி, நகரமயமாக்கம், நுகர்பொருள் கொள்வனவு, தொழில்நுட்ப வளர்ச்சி முதலியன இலத்திரனியல் உற்பத்திகளின் தேவையை அதிகரித்துள்ளன. இதனால் இலத்திரனியல் சாதனங்கள் எமது நாளாந்த வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அத்தியாவசியத் தேவையாக மாறியுள்ளன. இலத்திரனியல் கழிவுகள் என்பது மீள் திருத்தலுக்கு உட்படுத்த முடியாத நிலையில் உள்ள இலத்திரனியல் சாதனங்களைச் சூழலில் வீசும் போது, சூழலுக்கு விடுவிக்கப்படும் சக்தி அல்லது சடப்பொருள் எனப்படும். இலத்திரனியல் கழிவுகள் எனப் பிரதானமாக அடையாளப்படுத்தப்படுபவை மின்கலங்கள் (Batterys), கம்பிகள் (Wires), வெப்பமாக்கிகள் (Heaters), நெகிழி (Plastic), றப்பர் (Rubber) முதலியனவாகும். இத்தகைய இலத்திரனியல் கழிவுகளில் உள்ள ஆசனிக், கட்மியம், இரசம், குறோமியம், ஈயம், நாகம், பேரியம், செலினியம், செம்பு, புரோமின் முதலிய இரசாயணக்கலவைகள் பேராபத்தானவை.

இலத்திரனியல் கழிவுகளை பிரதானமாக மூன்றாக வகைப்படுத்தலாம். அவையாவன;

1. பாரியவீட்டுப் பாவனைப் பொருட்கள் - குளிரூட்டி, சலவை இயந்திரம் போன்றவை

2. தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு பொருட்கள் - கணினி, மடிக்கணினி, அச்சு இயந்திரம், கையடக்கத்தொலைபேசி போன்றவை

3. பாவனையாளர் உபகரணங்கள் - தொலைக்காட்சி, வானொலி போன்றவைஉலகளாவியரீதியில் வருடாந்தம் 13 கோடிக்கும் மேற்பட்ட கணினிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மில்லியன் கணக்கிலான கணினிகள் விற்கப்படுகின்றன. இதனால் உலகளாவிய ரீதியில் வருடாந்தம் 20 - 50 மெட்ரிக் தொன் இலத்திரனியல் கழிவுகள் சூழலுக்கு விடப்படுகின்றன. அத்துடன் தினமும் 4 - 5 தொன் இலத்திரனியல் கழிவுகள் சூழலில் குவிவடைகிறது. இலத்திரனியல் கழிவுகளை அதிகளவில் ஐரோப்பா, அமெரிக்கா, அவுஸ்ரேலியா முதலிய நாடுகள் வெளியிடுகின்றன. அண்மைக் காலங்களில் துரிதமாக வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்ட சீனா, இலத்தின் அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் முதலியன வெளியிடுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. என்பதுடன் பெரும்பாலான நாடுகளில் குப்பை ஆக்கப்படும் இலத்திரனியல் கழிவுகளில் இருந்து தேவையான உலோகங்களைப் பெறுவதற்காக அவை உடைக்கப்பட்டும், பகுதி பகுதியாக வேறாக்கப்பட்டும், எரிக்கப்பட்டும், புதைக்கப்பட்டும் விடுகின்றன. உதாரணம் நைஜீரியத் துறைமுகத்திற்கு இலட்சக்கணக்கான பாவிக்காத கையடக்கத் தொலைபேசிகளும், கணினிகளும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

சூழலின் பிரதான மூலக்கூறுகளான நிலம், நீர், வளி ஆகியன இலத்திரனியல் கழிவுகளால் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இதனால் இலத்திரனியல் கழிவுகள் சூழலின் உயிரியல் பல்வகைமைத் தன்மையிலும், இயற்கையின் சமநிலைத் தன்மையிலும், மனிதனின் ஆரோக்கியத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இலத்திரனியல் கழிவுகளை மண்ணினுள் புதைக்கும் போது அவை மக்குவது இல்லை. அவை, நீண்டகாலம் மண்ணில் தங்கியிருந்து மண் மற்றும் மண்வளத்தின் தரத்தினை மாற்றியமைக்கின்றன. அதாவது இலத்திரனியல் கழிவுகள் நிலத்தைச் சென்றடையும் போது மண்வளம் பாதிப்பிற்கு உள்ளாகிறது. அத்துடன் மண் நச்சுத்தன்மையையும் அடைகிறது. இதனால் நிலச்சூழலின் ஒழுங்கு பாதிக்கப்படுகிறது. மேலும் தாவர அழிவு, தாவர வளர்ச்சியில் பாதிப்பு, உயிரின அழிவு, பயிர்கள் அழிவடைதல், மண் வளம் இழத்தல், இயற்கைக் கனிமங்கள் பாதிப்படைதல், அழிவடைதல் முதலியன நிகழுகின்றன. உதாரணமாக, கையடக்கத் தொலைபேசியின் மின்கலத்தில் அடங்கியுள்ள இரசாயணப் பதார்த்தம் அவை வீசப்பட்ட இடத்தில் 600 கன அடி வரையிலான மண்வளத்தின் இயற்கைத் தன்மையை அழிக்கவல்லது.

இலத்திரனியல் கழிவுகளை எரிப்பதனால் அதிலிருந்து வெளியாகும் நச்சுவாயுக்கள் வளிமண்டலத்துடன் கலக்கின்றது. இதனால் வளிமண்டலவியலில் பல்வேறு வகையான பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. உதாரணமாக, கணினியை உடைத்துத் தீயிலிட்டு எரிப்பதால் அதில் உள்ள ஆசனிக், அஸ்ரோனியம், ஈயம், தகரம், என்டிமன், பெர்லியம், கோபோல்ட், இரசம், போன்ற இரசாயண மூலக்கூறுகள் புகையாக வெளியேறி வளிமண்டலத்துடன் கலக்கின்றன. இதனால் பாரிய அழிவுகள் ஏற்படுகிறன. உதாரணம், ஓசோன் படையில் துவாரம், அமில மழை பொழிதல், அல்பீட்டோ கதிரின் அதிகத் தாக்கம் முதலியனவற்றைக் கூறலாம்.முறையான மீள் சுழற்சியும், அழித்தொழிப்பும் இல்லாமையால் இலத்திரனியல் கழிவுகள் உடலியல் சார் பிரச்சினைகளையும் ஏற்படுத்துகின்றன. அதாவது, ஒரு கணினி உற்பத்திக்கு 22 கிலோ நிறை உடைய இரசாயணக்கலவை பயன்படுத்தப்படுகிறது. என்பதுடன் அக்கணினியை இயக்கப் பாரியளவிலான சக்தியும் செலவாகிறது. இத்தகைய சக்தி அனைத்தும் முழுமையாக பயன்படுத்தப்படுவதில்லை. மாறாக 20 % தொடக்கம் 40% வரையான சக்தி வீணாக சூழலுக்கு விடப்படுகிறது. அவை தீவிர நச்சுத்தன்மையுடையதாக விளங்குகிறது. இத்தகைய செயற்பாடுகளால் உடல்நிலை பாதிப்படைவதோடு, உயிரின இனப்பெருக்கத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. உதாரணமாக, ஒரு கணினியை உற்பத்தி செய்ய 7கிலோ நெகிழி (Plastic) பயன்படுத்தப்படுகிறது. அன்றாடம் இப்பொருட்களைp பயன்படுத்துவதால் புற்று நோய், சிறுநீரகp பாதிப்பு, சுவாசப்பிரச்சினை, ஆண்மைக் குறைபாடு, தைரொக்சைட், கருவின் வளர்ச்சி வீதம் குறைவு, வயதுக்கு முன் பூப்படைதல் முதலியன ஏற்படுகிறது.

மேலும் இலத்திரனியல் கழிவுகளின் முறையற்ற அழித்தொழிப்பு இல்லாமையால் நீர் வளம் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. இன்று நீர் வளம் அருகி வருவதற்கும், விற்பனைப் பொருளாக மாறியுள்ளமைக்கும் இலத்திரனியல் கழிவுகள் ஒருவகை காரணமாக இருக்கலாம். உதாரணமாக, பழுதடைந்து வீசப்படும் கையடக்கத் தொலைபேசி ஒன்றின் மின்கலம் 30,000 டன் நீரை மாசடையச் செய்கின்றது.

இலத்திரனியல் கழிவுகள் எங்கு உற்பத்தியாக்கப்படுகின்றன. அவை எங்கிருந்து அனுப்பப்படுகின்றன. என்பது தொடர்பில் தெளிவுபடுத்துகைகள் இல்லாத போதும் கூட ஆசிய பசுபிக் நாடுகளான சீனா, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளும், கானா, நைஜீரியா, செனகல், போன்ற சில ஆபிரிக்க நாடுகளும் இலத்திரனியல் கழிவுகளை மீள் சுழற்சி செய்யும் முக்கியமான நாடுகளாக உள்ளன. மேலும் இலத்திரனியல் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைப்பதற்கு மேலைத்தேய நாடுகள் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. உதாரணமாக, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பான்போன்ற அபிவிருத்தியடைந்த நாடுகள் மட்டுமன்றி அபிவிருத்தி அடைந்து வருகின்ற மலேசியா, சவூதி அரேபியா போன்ற நாடுகளும் இலத்திரனியல் கழிவுகளை அகற்றாமல் மீள் சுழற்சிக்காக இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்குப் புதிய வடிவத்தில் திருப்பி அனுப்புகின்றது. மேலும் 2006 ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் நிகழ்ச்சித் திட்டம் மூலம் இலத்திரனியல் கழிவுகள் தொடர்பான மதிப்பீட்டை ஆரம்பித்துள்ளது. இம்மதிப்பீட்டின் பிரகாரம் ஆண்டு தோறும் 20 - 50 மில்லியன் கழிவுகள் உருவாக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இலங்கையைப் பொறுத்தவரையில் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் இலத்திரனியல் கழிவுகளை குறைப்பதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன் கணினி, கையடக்கத் தொலைபேசி முதலியவற்றுக்கான விலைகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளது. இலங்கையில் இலத்திரனியல் கழிவுகளால் ஏற்படும் சூழலியல் அபாயத்தைக் குறைக்கும் நோக்கில் பழைய கையடக்கத் தொலைபேசிகளை சேகரிக்கும் திட்டத்தினை சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத்தக்க வளங்கள் அமைச்சு நடவடிக்கையை எடுத்து செயற்பட்டு வருகிறது. அத்துடன் இலத்திரனியல் கழிவுகளை அழிப்பதால் ஏற்படும் பாதிப்புக்களைத் தவிர்ப்பதற்கு மத்தியச் சுற்றாடல் அபிவிருத்தி அதிகாரசபை இலத்திரனியல் கழிவுகளைப் பொறுப்பேற்பதற்காகச் சில நிறுவனங்களைப் பதிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

எனவே மனிதனுடைய அத்தியாவசியத் தேவைகளிலும், ஆடம்பரத்தேவைகளிலும் இலத்திரனியல் சாதனங்களின் பாவனை தவிர்க்க முடியாதவையாக உள்ளது. இந்தச் சாதனங்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டின் மூலம் வெளியிடப்படும் கழிவுகளானது சூழலின் ஒட்டுமொத்தமான உயிரின சுவாத்தியப்பாடுகளுக்கு ஒவ்வாத தன்மையினை ஏற்படுத்தி விடுகின்றன. எனவே இலத்திரனியல் சாதனங்களின் பாவனையினை ஓரளவு குறைத்து, கூடுமான வரையில் மீள் சுழற்சிக்கு உட்படுத்தி மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதன் ஊடாக இதன் தாக்கத்தை பகுதியளவிலேனும் குறைத்துக் கொள்ளலாம்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/scienceandtechnology/p9.html


E-ISSN 2454 - 1990
  2020
  2019
  2018
  2017
சிறந்த நூலாசிரியர் பரிசு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...சிரிக்க சிரிக்க
எரிப்பதா? புதைப்பதா?
அறிவை வைக்க மறந்துட்டானே...!
செத்தும் செலவு வைப்பாள் காதலி!
வீரப்பலகாரம் தெரியுமா?
உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
இலையுதிர் காலம் வராது!
கண்ணதாசனின் நகைச்சுவைகள்
குறைச்சுத்தான் எடை போடறாரு...!
அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
இடத்தைக் காலி பண்ணுங்க...!
சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
மாபாவியோர் வாழும் மதுரை
இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
கவிஞரை விடக் கலைஞர்?
பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
கடைசியாகக் கிடைத்த தகவல்!
மூன்றாம் தர ஆட்சி
பெயர்தான் கெட்டுப் போகிறது!
தபால்காரர் வேலை!
எலிக்கு ஊசி போட்டாச்சா?
சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
சம அளவு என்றால்...?
குறள் யாருக்காக...?
எலி திருமணம் செய்து கொண்டால்?
யாருக்கு உங்க ஓட்டு?
வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
கடவுளுக்குப் புரியவில்லை...?
முதலாளி... மூளையிருக்கா...?
குட்டிக்கதைகள்
எல்லாம் நன்மைக்கே...!
மனிதர்களது தகுதி அறிய...
உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
அழுது புலம்பி என்ன பயன்?
புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
கடவுளைக் காண உதவும் கண்ணாடி
தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
சிங்கத்திற்கு வாழைப்பழம்!
வலை வீசிப் பிடித்த வேலை
சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
கல்லெறிந்தவனுக்கு பழமா?
சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
அக்காவை மணந்த ஏழை?
சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
இராமன் சாப்பாட்டு இராமனா?
சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
கழுதையின் புத்திசாலித்தனம்
விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
ஆணவத்தால் வந்த அழிவு!
சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
சொர்க்க வாசல் திறக்குமா...?
வழுக்கைத் தலைக்கு மருந்து
மனைவிக்குப் பயப்படாதவர்
சிங்கக்கறி வேண்டுமா...?
வேட்டைநாயின் வருத்தம்
ஆன்மிகம் - இந்து சமயம்
ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
தானம் செய்வதால் வரும் பலன்கள்
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
பிரதோஷம் எப்படி விஷேசமானது?
விநாயகர் சில சுவையான தகவல்கள்
சிவராத்திரி விஷேசமானது ஏன்?
முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
எப்படி வந்தது தீபாவளி?
தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
அனுமனுக்கு வடை மாலை ஏன்?
திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
முருகா என்றால் என்ன கிடைக்கும்?
குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
விபூதியின் தத்துவம்
கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
இறைவன் ஆடிய நடனங்கள்
யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License