இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
கருத்தரங்கக் கட்டுரைகள்

மணிமேகலை கால சமயங்களும் அவற்றின் முற்கால நிலையும் பிற்கால நிலையும்


28. மணிமேகலையில் இதிகாசக் கூறுகள்

முனைவர் இரா. குறிஞ்சி வேந்தன்

இதிகாசம் என்ற சொல்லை இதி, ஹ, ஆஸ என்று பகுக்கலாம். இந்தச் சொல்லுக்குப் பொருள் ‘‘இப்படி உண்மையில் இருந்தது’’ என்பதாகும். அதாவது ஒரு காலத்தில் உண்மையாக நடந்த கதை என்பதாக அமைவது இதிகாசங்கள் ஆகும். இதிகாசம் எனப்படுவது கடவுள், கடவுள் அவதாரம் அல்லது பெரும் வீரர்கள் நிகழ்த்திய அரும்பெரும் வீரச் செயல்களையும் நீதி நெறிகளையும் விவரிக்கும் புராண வரலாறு என்று பொருள் கொள்ளுவர் அறிஞர்.

இந்தியாவின் இதிகாசங்களான இராமாயணமும் மகாபாரதமும் கொள்ளப்பெறுகின்றன. இவை இரண்டும் தேசியத்தன்மை வாய்ந்த இலக்கியங்கள் ஆகும். இவ்விலக்கியங்கள் இந்திய மொழிகளின் பலவற்றில் தன் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இதன் காரணமாக இராமாயணமும், மகாபாரதமும் இந்திய அளவில் போற்றத்தக்க கூறுகளை தாம் கொண்டும் பிற இலக்கிய மொழிகளுக்குக் கொடுத்தும் இருநிலைகளில் அமைகின்றன.

தமிழில் சங்க இலக்கியங்கள் முதலாக இராமாயண மகாபாரத இலக்கியங்களின் தாக்கங்கள் இருந்துள்ளன. குறிப்பாக புறநானூறு, அகநானூறு ஆகியவற்றில் இராமாயண, மகாபாரத பாத்திரங்கள், காட்சிகள் இடம்பெறச் செய்யப்பெற்றுள்ளன. அடுத்ததாக எழுந்த காப்பியங்களிலும் அவற்றின் தாக்கங்கள் காணப்படுகின்றன. சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவை இராமன் புகழ்பாடும் இலக்கியமாகவே விளங்குகின்றது. மேலும் அதில் பாண்டவர்க்காகத் தூது நடந்த நிலையும் பாடப்படுகிறது. இதனைத் தொடர்ந்த மணிமேகலையிலும் இராமயண மகாபாரத இலக்கியங்களின் தாக்கங்கள் அமைந்துள்ளன. இவற்றை எடுத்துரைப்பதாகவும், இதனுடன் தொடர்புடைய புராணக்கூறுகளை இடம்பெறச் செய்யப்பெற்றிருப்பதையும் இக்கட்டுரை எடுத்துரைக்கின்றது.இராமாயணச் செய்திகள்

இராமாயண இதிகாசத்தில் இராமனின் மனைவியான சீதையை இராவணன் கொண்டுபோய் இலங்கையில் அசோகவனத்தில் அடைத்துவிடுகிறான். சீதையை இழந்த இராமன் அவளைத் தேடி தன் தம்பி இலக்குவணனுடன் பயணம் மேற்கொள்ளுகின்றான். இந்நிலையில் சுக்ரீவன் என்ற குரங்கு அரசனுடன் நட்பு பூண்டு அவ்வரசன் வழியாகச் சீதையைத் தேட முற்படுகிறான். அனுமன் என்ற சுக்ரீவனின் முதலமைச்சனின் வழியாக சீதை இலங்கையில் இருக்கிறாள் என்பதை அறிந்து இராமன் இலங்கை செல்ல கடலில் பாலம் அமைக்கிறான். இவ்வாறு பாலம் அமைக்க குரங்கு இனத் தலைவனான சுகரீவன் ஆணையிட, அதனை மயன் என்ற தேவதச்சன் கட்ட, குரங்குக் கூட்டங்கள் கற்களையும் மலைகளையும் கொண்டு வந்துச் சேர்க்கின்றன. அப்போது அக்குரங்குகள் இட்ட கற்கள், மலைகள் போன்றவை இருந்த இடம் தெரியாமல் கடலுள் அமிழ்ந்துபோகின்றன. இந்த நிகழ்ச்சியை உவமையாக மணிமேகலைக் காப்பியத்தில் படைக்கிறார் சீத்தலைச் சாத்தனார்.

காயசண்டிகை என்ற பெண் தன் கணவன் காந்தருவனுடன் மலைவளம் காண பொதிகை மலைக்கு வந்தபோது அங்கு ஒரு கருநாவல் கனியை காலால் மிதித்து விடுகிறாள். அந்நாவல் கனி பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பழுக்கும் தன்மையது. அதனை ஒருமுறை உண்டால் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பசியே எடுக்காது. இவ்வரிய கனியைக் காலால் சிதைக்கிறாள் காயசண்டிகை.

விருச்சிக முனிவர் என்ற முனிவர் பன்னிரு ஆண்டுகளுக்கு ஒருமுறை கிடைக்கும் இக்கனியை உண்டு பன்னிரண்டு ஆண்டுகாலம் உண்ணாமல் தவம் இயற்றிவந்தார். அவரின் பன்னிரண்டு ஆண்டுகாலப் பசியை இக்கனி போக்க இருந்தபோது, பின் பன்னிரு ஆண்டு காலப் பசியை போக்கவும் இக்கனி இருந்தபோது அது காயசண்டிகையால் சிதைவு படுகிறது. இதனால் கோபம் கொண்ட விருச்சிக முனிவன் யானைப் பசி நோயால், இப்பெண் துன்புறட்டும் எனச் சாபம் தருகிறான். இதன் காரணமாக அவள் பசிப்பிணி அடைகிறாள். அவளின் கணவன் அவளின் பசியைப் போக்க எவ்வளவோ உணவுப் பொருட்களைக் கொண்டு வந்தபோதும், அவை போதுமானதாக அவளுக்கு இல்லை.அவள் உண்ணும் உணவு இராமாயணத்தில் இராமர் பாலம் கட்ட முயன்ற போது எல்லாக் குரங்குகளும் கொண்டு வந்து போட்ட மலை, கற்களை இக்கடல் விழுங்கியதுபோல எல்லா உணவுப் பொருள்களையும் அவளின் வயிறு கரைத்துவிடுகிறது என்று உவமை வழியாக இங்கு இராமயணக் கதை எடுத்தாளப்பெற்றுள்ளது.

நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி
அடல் அரு முந்நீர் அடைத்த ஞான்று
குரங்கு கொணர்ந்து எறிந்த நெடு மலை எல்லாம்
அணங்கு உடை அளக்கர் வயிறு புக்காங்கு
இட்டது ஆற்றாக் கட்டு அழல் கடும் பசிப்
பட்டேன் என் தன் பழ வினைப் பயத்தால் (உலக அறவி புக்க காதை, 10-20)

என்ற பாடலடிகளின் வழியாக இராமயண இதிகாசத்தின் தாக்கம் மணிமேகலையில் ஏற்பட்டுள்ளது. நெடியோன் என்ற சொல் இராமனைக் குறிக்கின்றது. நின்றசீர் நெடுமால், திருமால் என்றழைக்கப்படும் பெருமாளுக்கு மணிமேகலை தரும் பெயர் நெடியோன் என்பதாகும். நிலமிசை தோன்றி என்பது பெருமாள் அவதாரமாக மண்ணிற்கு வந்ததைக் குறிப்பதாகும். அணங்குடை அளக்கர் என்பது காவலை உடைய கடலைக் குறித்தது. இலங்காதேவி இலங்கைக் கடலைக் காப்பவள் என்ற செய்தியும் பதிவு செய்யப் பெற்றுள்ளது. மேலும் குரங்கு கொணர்ந்த என்பதின் வழியாக குரங்குக் கூட்டம் செய்த அருஞ்செயல் காட்டப்படுகிறது.

இவ்வாறு உரிய இடத்தில் மணிமேகலை இராமாயணத்தின் காட்சிகளை எடுத்தாண்டு உள்ளது. இதன் வழியாக கடலில் மனித முயற்சியால் பாலம் கட்டுதல் என்பது எவ்வளவு அரிதானது என்பதும், மணிமேகலை கடல் பற்றி குறிப்புகளை அதிகம் பேசுவது என்பதாலும் இங்குக் கடல் பற்றி குறிப்பு எடுத்தாளப்பெற்றுள்ளது.

மேலும் மற்றொரு இடத்தில் இராமன் இராவணன் என்ற இருவரின் செயல்களும் சுட்டப்பெற்றுள்ளன. பெரும்பாலும் ஆங்கில ஆசிரியர்கள் செய்வினை, செயப்பாட்டுவினை ஆகியவற்றைப் பாடமாக நடத்தும்போது இராமன் இராவணனைக் கொன்றான் என்ற தொடரையும் இராவணன் இராமனால் கொல்லப்பட்டான் என்ற தொடரையும் கையாளுவர். இது தற்கால நிலைப்பாடு. இதே நிலை மணிமேகலை காலத்தில் சமயக்கணக்கர்கள் ஒரு பொருளை அறிவிக்கவும் இராமயணப் பாத்திரங்களை எடுத்துக்காட்டுவது வழக்கமாக இருந்துள்ளது.

அளவைகளுள் ஒன்றான மீட்சியளவை பற்றிச் சமயக்கணக்கர்கள் திறம் அறிய விரும்பியபோது பின்வரும் பகுதி எடுத்தாளப்படுகிறது.

மீட்சி என்பது ”இராமன் வென்றான்” என
மாட்சி இல் இராவணன் தோற்றமை மதித்தல்
உள்ள நெறி என்பது ”நாராசத் திரிவில்
கொள்ளத் தகுவது காந்தம்” எனக் கூறல்” (சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை, 50-60)

என்ற இப்பகுதியில் இராமன், இராவணன் இருவரும் இடம்பெற்றுள்ளனர். மீட்சியளவை என்பதில் இராமன் வென்றான் என்று சொன்னால் பெருமையற்ற இராவணன் தோற்றான் என்பது பெறப்படும். இதுவே மீட்சிஅளவை ஆகும். இவ்வாறு இராமாயண தாக்கம் மணிமேகலையில் காணப்படுவதாக உள்ளது.மகாபாரதத் தாக்கம்

இதிகாசங்களில் மற்றொன்றான மகாபாரதம் பற்றிய குறிப்புகளும் மணிமேகலையில் காணக்கிடைக்கின்றன. விராட பருவம் மிக முக்கியமான பருவம் ஆக மகாபாரத்தில் விளங்குகின்றது. பாண்டவர் ஐவரும் அவர்களின் பத்தினியும் மாறுவேடத்தில் ஓராண்டு காலம் வாழ ஏற்ற இடம் விராட நாடு என முடிவெடுக்கப்படுகிறது. தருமன் நீதி ஆலோசனை சொல்பவனாகவும், பீமன் சமையல் கலை வல்லுநனனாகவும், நகுலன் குதிரை சேனாதிபதியாகவும் அமைய அருச்சுணன் பேடியாக அங்குச் செல்கிறான். இதற்குக் காரணம் அவன் ஊர்வசியிடத்தில் பெற்ற சாபமாகும்.

இதனை மணிமேகலை எடுத்துரைக்கின்றது.

‘‘விராடன் பேர் ஊர் விசயன் ஆம் பேடியைக்
காணிய சூழ்ந்த கம்பலை மாக்களின்’’ (மலர்வனம் புக்க காதை, 47-48)

என்ற பகுதியில் விராடன் நாட்டில் சென்ற விசயன் ஆம் பேடியைக் காணவந்த மக்கள் கூட்டம்போல மணிமேகலையைக் கண்டனர் மக்கள் என்று குறிப்பிடுகின்றார் சீத்தலைசாத்தனார்.

இதில் விசயன் ஆம் பேடி என்ற தொடர் அருச்சுணனுக்கு பேடி வடிவம் வந்த நிலையை எடுத்துரைத்து அவன் விராட நாடு சென்றதைக் குறிக்கிறது. இராமயணத்தில் கடற்பாலம் கட்டுவது சிறப்பு போல மகாபாரத்தில் விராட பருவம் என்பதும் சிறப்பானது. அதனைச் சீத்தலைச் சாத்தனார் எடுத்தாண்டுள்ளார்.

பாகவதக் குறிப்புகள்

இதுபோன்று பாகவதக் கதையின் பகுதியும் இதிகாச நிலையில் எடுத்தாளப்பெற்றுள்ளது. பாகவதம் என்பதும் ஒரு இதிகாசமாகக் கொள்ளத்தக்கது. இவ்விதிகாசம் தமிழில் இன்னும் செய்யுள் வடிவமாக ஆக்கப்பெறாத ஒன்றாகும். ஆனால் இந்திய மரபில் இதுவும் ஒரு இதிகாசமாகும். இதனுள் இடம்பெறும் வாமன அவதாரம் பற்றிய செய்திகளையும் மணிமேகலை தருகின்றது.

கிள்ளிவளவன் என்பானின் பட்டத்தரசியான சீர்த்தி என்பவள் மாவலிமரபில் வந்தவள் என்ற குறிப்பு இடம் பெறுகிறது. அப்போது மாவலி பற்றிய குறிப்பும் வாமண அவதாரம் பற்றிய குறிப்பும் இடம்பெறுகின்றன.

‘‘நெடியோன் குறள் உரு ஆகி நிமிர்ந்துதன்
அடியில் படியை அடக்கிய அந்நாள்
நீரின் பெய்த மூரி வார்சிலை
மாவலி மருமான் சீர் கெழு திருமகள்
சீர்த்தி என்னும் திருத்தகு தேவியொடு’’ (சிறைக்கோட்டம் அறக்கோட்டம் ஆக்கியகாதை,51-54)

என்ற பகுதியில் நெடியோன் என்ற திருமாலின் வாமண அவதாரமாகிய குறள் உரு எடுத்துக்காட்டப் பெறுகிறது. அது நீர் பெய்ததால் பேருருவமான வகையையும் எடுத்துக்காட்டுவதாக உள்ளது. இவ்வகையில் பாகவத இதிகாசச் செய்திகள் மணிமேகலையில் காணப்படுகின்றன.


முருகன் பற்றிய குறிப்புகள்

முருகப்பெருமான் பற்றிய பல குறிப்புகள் மணிமேகலையில் கிடைக்கின்றன. இவை கந்தபுராணக் கதைச் சார்புடையனவாகக் கருதத்தக்கன.

கார் அலர் கடம்பன் அல்லன் (பளிக்கறை புக்க காதை அடி 49)

குருகு பெயர்க்குன்றம் கொன்றோன் அன்ன முருகச் செவ்வி முகத்து ( மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை, 12-13)

போன்ற குறிப்புகள் முருகப்பெருமான் பற்றிய குறிப்புகள் ஆகும். இக்குறிப்புகள் வழியாக கடம்ப மாலை அணிந்தவன் முருகன் என்பதும் கிரௌஞ்சம் என்ற பறவை பெயர் கொண்ட மலையைப் பிளந்துச் சிங்கமுகனைக் கொன்றவன் முருகன் என்பதும் தெரியவருகிறது. இங்கு கிரௌஞ்ச மலை வென்றதைக் குருகு பெயர்க்குன்றம் கொன்றவன் என்று சீத்தலைச்சாத்தனார் குறிக்கிறார். அதாவது மலைத் தூளாக்கமுடியும். உடைக்கமுடியும். ஆனால் கொன்றோன் என்பதன் வழியாக அரக்கன் மலையாக இருந்தான் என்ற குறிப்பு உள்ளமைக்கப் பெற்றுள்ளது தெரியவருகிறது.

காளி பற்றிய குறிப்பு

காளி தேவியைப் பற்றிய குறிப்புகளும் மணிமேகலையில் இடம்பெற்றுள்ளன.

காடுஅமர் செல்வி கடிப்பசி களைய
ஓடுகைக் கொண்டு நின்று ஊட்டுநள்போல
தீப்பசி மாக்கட்குச் செழுச்சோறு ஈந்து (உதய குமாரன் அம்பலம் புக்க காதை, 115-117)

என்ற குறிப்பு காளிதேவி பற்றிய குறிப்பு ஆகும். பேய்களின் பசியைப் போக்க வரும் காளிதேவியைப் போல மணிமேகலை காட்சி தந்தாள் என்று இந்தக்குறிப்பு அமைகின்றது.

தேவர்கள் பற்றிய குறிப்பு

இதிகாசப் பாத்திரங்களில் குறிக்கத்தக்கவர்களான தேவர்கள் பற்றிய பல குறிப்புகளும் மணிமேகலையில் இடம் பெற்றுள்ளன. மேலும் இந்திரவிழா என்பதே தேவர் தலைவனுக்கு எடுக்கப்படும் விழா என்பதால் அதனை முன்வைத்து மணிமேகலை தொடங்குகின்றது. இவ்வகையில் தேவர்கள் பற்றிய பல குறிப்புகள் மணிமேகலையில் அமைந்துள்ளன.

தேவரும் மக்களும் ஒத்து உடன்திரிதரும்
நால் ஏழ் நாளினும் நன்கு அறிந்தீர் (விழாவறை காதை 64-65)

என்ற குறிப்பு தேவரும் காவிரிப்பூம்பட்டிணம் வந்து இந்திரவிழா கண்ட செய்தியைக் குறிக்கின்றது.

ஆபுத்திரனைக் காண இந்திரன் வந்ததாக ஒரு குறிப்பும் மணிமேகலையில் இடம்பெறுகின்றது. இந்திரனின் கட்டளைக்குக் கீழ் படியாமல் வாழ்ந்தவன் ஆபுத்திரன் என்பதும் தெரிய வருகிறது. இதுபோன்று இந்திரசாபம் ஒன்று இருப்பதாகவும் மணிமேகலா தெய்வம் குறிக்கிறது.

இவ்வகையில் இதிகாசங்கள் பற்றிய கருத்துகளும், இதிகாசப் பாத்திரங்கள் பற்றிய செய்திகளும் மணிமேகலையில் இடம்பெற்று அதற்கு இந்தியத் தன்மையை மிகுவிக்கின்றன.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/seminar/s1/p28.html


  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்

முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License