இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
கருத்தரங்கக் கட்டுரைகள்

தமிழ்ச் சிறுகதைகளின் பன்முகத்தன்மை


15. கல்கி சிறுகதைகளில் பெண்ணியச் சிந்தனைகள்

முனைவர் ப. சித்ரா

முன்னுரை

குடும்பம் என்பது சமுதாயத்தின் அடிப்படைக்கூறு இக்குடும்ப நிறுவனத்தைச் செம்மைப்பட நிர்வகிப்பவர்கள் பெண்கள். பெண்களின் ஆளுமையையும், அறிவையும் பொறுத்தே ஒரு குடும்பத்தின் நல்லதும் கெட்டதும் அமைகிறது. பெண்மையைப் பற்றிக் கூற வேண்டுமென்றால் உணர்ச்சிகளைப் பேணுவது, உள்ளன்பைப் போற்றுவது, வேதனையைத் தாங்குவது, தன்னையே அர்ப்பணம் செய்வது இவை எல்லாம் ஒரு பெண்ணின் வாழ்க்கை என்று கூறலாம்.

பெண் இல்லாவிட்டால் நம் வாழ்க்கை தொடக்கத்தில் துணை இருக்காது. நம் வாழ்வின் நடுப்பகுதியல் இன்பம் இருக்காது. வாழ்வின் இறுதிப்பகுதியில் ஆறுதல் இருக்காது. ஒவ்வொரு மனிதனின் வாழ்வும் நேற்று - இன்று - நாளை என்ற முக்காலங்களுடனும் இணைந்தது. இக்காலங்களில் பெண்ணின் இன்றியமையாமையை உணர வேண்டும். பெண்கள் இன்றி இவ்வுலகம் இல்லை. இத்தகைய சிறப்புமிக்க பெண்களின் நிலையைக் கல்கியின் சில சிறுகதைகளைக் கொண்டு ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

கல்கி

தமிழ்ச்சிறுகதைக்கு ஆழத்தை சாத்ததியமாக்கியவர் புதுமைப்பித்தன் என்றாலும், தமிழ்ச்சிறுகதையின் அகலத்தை சாத்தியமாக்கியவர் கல்கியே ஆவார். அதிலும் குறிப்பாக அடுப்படியே கதியெனக் கிடந்த பெண்கள் படிக்கவும், நிகழ்கால அரசியல், வரலாறு ஆகியவற்றை அறியவும், பேசவும், விவாதம் செய்யவுமான சூழலை உருவாக்கியது கல்கியின் எழுத்துகளே ஆகும்.

பெண்ணியம்

இலத்தின் மொழியில் ‘பெண்’ என்று பொருள்தரும் ‘பெமினா’ என்ற சொல்லிருந்து பெண்ணியம் என்ற சொல் தோன்றியது. பதினேழாம் நூற்றாண்டுகளில் பெண்ணியம் என்பதைக் குறிக்க ‘மகளிரியம்’ என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தற்போது பெண் சமத்துவம் வேண்டிப் போராடும் பெண்ணியக்கங்களையும் செயல்பாடுகளையுமே பெண்ணியம் என்று கூறுகின்றார்கள்.

பெண்ணுரிமை

‘மங்கையராகப் பிறப்பதற்கே மாதவம் செய்தல் வேண்டும்’ என்கிறார் கவிமணி. நாட்டிலுள்ள மண், மொழி, மதம் என அனைத்திலும் நீக்கமற நிறைந்திருப்பது பெண்மையின் பெயரென்றால் அது மிகையன்று.

நாடு வளம் பெற பெண் சிறத்தல் வேண்டும். பெண்ணைப் போற்றிய நாடு அறிவினிலும், தரத்தினிலும் மாற்றம் காணும். பெண் போற்றப்பட வேண்டுமாயின், ஆண்கள் போன்று அனைத்து உரிமைகளையும் பெண்களும் பெற வேண்டும். அவள் சுயமாகச் சிந்திக்க, செயல்பட, அறிவை விரிவாக்கப் பெண்ணுக்கு உரிமை மிக மிக அவசியாமாகும்.

வாழும் உரிமையை உலகில் அனைவருக்கும் சமமாகவே இறைவன் தந்துள்ளான். காதலுரிமை, திருமண உரிமை, பொருளாதார உரிமை, சொத்துரிமை, கல்வி உரிமை போன்ற பல உரிமைகள் பெண்ணுக்கு இருந்தால், சுதந்திர நாட்டில் பெண் சுதந்திரமாக வாழ முடியும். பெண்ணடிமை நீங்கப் பெண் அனைத்து உரிமைகளையும் பெறுதல் வேண்டும். பெண் முன்னேறினால் நாடு முன்னேறும். சமுதாயம் முன்னேறினால் நாடு முன்னேறும், அனைத்தும் முன்னேறினால் ஓருலக ஆட்சி மலரவும் வாய்ப்புள்ளன.பெண் பாத்திரத்தை முன்னிலைப்படுத்திய சிறுகதைகள்

கேதாரியின் தாயார் - ‘அம்மாமி அம்மாள்’

 • ‘அம்மாமி அப்பளத்தின்’ அடையாளம், தன் கணவனால் மூன்று வயது குழந்தையுடன் கைவிடப்பட்டவள், தன் மகனுக்காகவே வாழ்ந்தவள், விட்டுப்போன கணவனின் இறப்பால் விதவைக் கோலம். அதனுடன் மொட்டையும் அடிக்கப்படுதல், தன் தாயார் அபசகுனமாக மாறிய அவலநிலையை நினைத்தே கேதாரி இறந்துபோதல், அதனால் கேதாரியின் மனைவியும் அபசகுனமான விதைவையாக்கப்படுதல்.

  கடிதமும் கண்ணீரும்

 • அன்னப்பூரணி தேவியின் வாழ்க்கையில் மூன்று நிலைகள்.

 • ஆறு வயதில் பாலிய விவாகம்

 • ஒன்பது வயதில் விதவைக் கோலம்

 • கல்யறிவு இல்லாமையால் கைவிட்டுப்போன மறுவாழ்க்கை

 • பல்வேறு துன்பத்திற்கு ஆளான பெண்களின் ஆசிரமத் தலைவி

 • காதலி ஒன்றே அனைத்திற்கும் அஸ்திவாரம் என்று கூறுபவள்.

  கமலா கல்யாணம்
 • கமலா வளர்ப்பு பெற்றோரால் வளர்க்கப்பட்டவள்

 • வயதானவரோடு திருமணம் நிச்சயம் - திருமணத்தை சமூக ஆர்வலர்கள் தடுத்தல் - அவ்வயோதிகரே கமலாவின் தந்தையாக இருத்தல் - திருமணத்தைத் தடுத்த ஆர்வலர்களில் ஒருவரான கல்யாணசுந்தரத்தை திருமணம் செய்து கொள்ளுதல்.

  வீணை பவாணி
 • பவாணி ஓர் அழகுப் பெட்டகம், அழகுக்கு அழகு சேர்த்து பவாணியின் இசையும், பாட்டும் மொத்தத்தில் இவள் ஓர் தெய்வப்பிறவி. ஆனாலும் சாதாரண பெண்ணாகக் கலைக்குழுவில் பிறந்து, திருமணமே செய்து கொள்ளாமல் பெரிய மனிதர் ஒருவருடன் வாழ்தல், இருவருக்கும் மனவருத்தம் ஏற்படுதல், அவரால் தன் வாழ்க்கையை இழந்து, அவருடைய சந்தேகத்திற்கு இடமாகி, அவர் இறந்ததாக நினைத்து அவர் மீது கொண்ட உள்ளன்பால் உயிரைத் தானே மாய்த்துக் கொண்டவள். மேற்கூறப்பட்ட நான்கு கதைகளில் வரும் நான்கு பெண்களும் வேறு வேறு நிலையில் சொல்லப்பட்டிருந்தாலும், அனைவரும் துன்பத்தை அனுபவித்தவர்களே. இவர்களைக் கொண்டு கல்கி சுதந்திரப் போராட்டக் காலங்களில் வாழ்ந்த பெண்களின் நிலையை சிறப்பாக சித்தரித்துக் காட்டியுள்ளார். • பாலிய விவாகம்

  அறியாப் பருவமாகிய விளையாட்டு பிள்ளைப் பருவத்தில் குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைப்பதே பாலிய விவாகமாகும். இவ்வாறு செய்து வைப்பது ஓர் முறையற்ற செயலாகும். இதனைக் கல்கி கடிதமும் கண்ணீரும் கதையில்,

  “ஆறு வயதிலே எனக்குக் கல்யாணம் பண்ணினார்களாம்
  ஒன்பது வயதில் கைம்பெண் ஆனேன் - அதெல்லாம்
  எனக்குக் கனவு மாதிரிகூட ஞாபகத்தில் இல்லை” (கல்கி முத்துக்கள் பத்து - ப. 56)

  என்று பால்ய விவாகத்திற்கு ஆளான அன்னப்பூரணி கூறுவதாக படைத்துக் காட்டியுள்ளார்.

  பொருந்தாத் திருமணம்

  “பெருந்திணை என்பது பொருந்தா காமம்” என்று தொல்காப்பியர் கூறியுள்ளார். அதாவது, வயதில் மூத்தவர் ஒரு இளம் பெண்ணை மணப்பதோ, வயதில் குறைந்த வயதுடைய ஆண் வயது முதிர்ந்த பெண்ணை மணப்பது பொருந்தாத திருமணம். இவற்றைக் கல்கி கமலா கல்யாணம் என்ற சிறுகதையில்,

  “ஒரு நாள் திருவளர்ச்சோலைக் கோவிலில் நடக்கப்போகும் ஒரு கல்யாணத்தைப் பற்றி எங்களுக்குச் செய்தி வந்தது. ஐம்பத்தைந்து வயதான ஒரு கிழவருக்கும் பன்னிரண்டு வயதுப் பெண்ணுக்கும் கல்யாணம் நடக்கப் போகிறதா வதந்தி உலாவிற்று. மாமண்டூரில் யாரோ ஒரு உபாத்தியாயராம்; சம்சாரியாம். அவருடைய மூத்த பெண் கமலாவைத்தான் இப்படி ஒரு கிழவருக்கு பலிகொடுக்க ஏற்பாடாகியிருந்ததாம்” (கல்கி முத்துக்கள் பத்து - ப. 79)

  என்று கமலாவிற்கு நடைபெறவிருந்த, பொருந்தாத திருமணத்தைக் கதையில் வரும் சமூக ஆர்வலர்களின் வாயிலாக வெளிப்படுத்தி இருப்பதும், அவற்றைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டுள்ள செய்திகளின் வழி கல்கியும் இதனை எதிர்த்து இருப்பதை நன்கு அறிந்துகொள்ள முடிகிறது.

  கைம்பெண் நிலை

  கணவனுடன் வாழ்ந்தாலும், கணவனால் கைவிடப்பட்டு வாழ்ந்தாலும் பெண்கள் கணவன் இறந்தவுடன் கைம்பெண்ணாகப் படுவது சமூகத்தின் நிகழ்த்தப்படும் ஒரு மரபாகும். கல்கி சிறுகதையின் கேதாரியின் தாயாரும், அன்னப்பூரணி தேவியும் கைம்பெண்ணாக்கப்பட்டவர்களே, அவர்களின் நிலையை,

  “கேதாரி திரும்பி வந்தான். வெள்ளைப் புடவை அணிந்து மொட்டைத் தலையை முக்காடால் மூடிக்கொண்டு உட்கார்ந்திருந்த பாகீரதி அம்மாமியை உற்றுப் பார்த்தான்.”

  “ஐயோ! அம்மா! என்று பயங்கரமாக ஒரு கூச்சல் போட்டு விட்டுத் தொப்பென்று கீழே உட்கார்ந்தான்”.

  “சங்கரா! அது என்ன சாஸ்திரமடா அது? அநாதையாய் விட்டுப்போய்ப் பதினெட்டு வருஷம் திரும்பிப் பாராமலிருந்த புருஷன் செத்ததற்காகத் தலையை மொட்டையடிக்கச் சொல்லும் சாஸ்திரம்! அதைக் கொண்டு வாடா, தீயில் போட்டுக் கொளுத்துவோம்!” (கல்கி முத்துக்கள் பத்து பக். 36, 37)

  என்று கேதாரியின் வாயிலாகவும்,

  “அவ்வளவு இளம்வயதில் விதவையானதில் ஒரு சௌகரியம் இருந்தது. நாலைந்து வருஷத்துக்குப் பிறகு அப்படி நேர்ந்திருந்தால் எல்லாரையும் போல் என்னையும் அலங்கோலம் செய்திருப்பார்கள் ரொம்பச் சிறு வயதானபடியால் அப்படி ஒன்றும் செய்யாமல் விட்டிருந்தார்கள்” (கல்கி முத்துக்கள் பத்து - ப. 56)

  என்று அன்னப்பூரணியின் வாயிலாக, அவர்களுக்கு நடக்கவிருந்த விதவைக் கோலத்தை பற்றியும் கல்கி தெளிவாகச் சித்தரித்துள்ளார்.  பெண் கல்வி

  ஆண்டவனின் படைப்பில் அரிது ஒன்று உண்டென்றால், அது பெண்தான் என்பார் காந்தியடிகள். ‘ஓர் ஆணுக்குக் கல்வி அளிப்பது குடும்பத்தில் ஒருவருக்குக் கல்வி அளிப்பதாகும். ஆனால் ஒரு பெண்ணுக்குக் கல்வி அளிப்பது அக்குடும்பத்திற்கே கல்வி அளிப்பது போலாகும்” என்று நேரு கூறியுள்ளார்.

  “பெண்கட்குக் கல்வி வேண்டும்
  குடித்தனம் பேணுதற்கே
  பெண்கட்டுக் கல்வி வேண்டும்
  மக்களைப் பேணுதற்கே
  பெண்கட்குக் கல்வி வேண்டும்.
  உலகினைப் பேணுதற்கே!”

  என்று பாரதிதாசன் கூறியுள்ளார்.

  இவ்வாறு அறிஞர் பெருமக்களால் சிறப்பித்து கூறப்பட்ட பெண் கல்வியின் சிறப்பினை,

  “அன்னப்பூரணியின் வாழ்க்கை வரலாறோ, எல்லாரும் பிரசித்தமாக அறிந்த விஷயம். ஒன்பதாவது வயதில், நினைவு தெரியுமுன்பே விதவைக் கொடுமைக்கு ஆளாகும் துர்பாக்கியத்தைப் பெற்றவர் அவர். அவருடைய அந்த துர்பாக்கியமே பெண் குலத்தின் நற்பாக்கியம் ஆயிற்று பிற்காலத்தில் அவள் பள்ளிக் கூடத்தில் சேர்ந்து, முயற்சியுடன் படித்து, கடைசியாக பி.ஏ; எல். டி. பட்டமும் பெற்றார். அதுமுதல், இளம்பிராயத்தில் கணவனை இழந்தவர்கள், கணவன்மார்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள், அநாதைப் பெண்கள் முதலியோருக்குத் தொண்டு செய்வதிலேயே தமது வாணாளைச் செலவிட்டு வந்தார். (கல்கி முத்துக்கள் பத்து ப. 52)

  என்று கல்கி அன்னபூரணி பாத்திரத்தின் வாயிலாக, பெண் கல்வியின் முக்கியத்துவத்தையும், சிறப்பினை வெளிப்படுத்தியிருப்பது கல்கியின் சிறந்த சிந்தனையை வெளிப்படுத்தியுள்ளது.


  உயர்ந்த செயல்

  நீ இன்றி நான் இல்லை, நான் இன்றி நீயில்லை என்று வாழும் இல்லற வாழ்வில், கணவன் இறந்து விட்டால், கணவன் மீது கொண்ட அன்பால் பெண்கள் தன் உயிரை விடவும் துணிவது உண்டு. ஆனால் கலைக் குடும்பத்தில் பிறந்த ஓர் பெண் திருமணம் செய்து கொள்ளாமல், ஒருவர் மீது அன்பு கொண்டு அவருக்காகவே தன் உயிரை விடுவதை, வீணை பவானியில்,

  “அன்புள்ள கந்தப்ப அண்ணனுக்குத் தங்கச்சி பவானி எழுதிக் கொண்டது. என் பிராண நாயகரைப் பிரிந்து நான் உயிர் வாழ விரும்பவில்லை. இன்றைக்கு நான் செய்யும் கச்சேரிதான் கடைசிக் கச்சேரி. அவர் எனக்கு அன்புடன் வாங்கிக் கொடுத்த வைர மோதிரத்திலிருந்த வைரங்களை எடுத்துப் பொடி பண்ணி வைத்திருக்கிறேன். கச்சேரியிலிருந்து வந்ததும் சாப்பிட்டு விடுவேன்” (கல்கி முத்துக்கள் பத்து - ப. 168)

  என்று கல்கி பவானியின் செயலை உயர்வாகக் கூறியிருப்பது எண்ணத்தக்கது.

  முடிவுரை

  ஒவ்வொரு கால கட்டத்திலும் புதுப் புதுப் பிரச்சனைகளும் தொல்லைகளும், துன்பங்களும், தீமைகளும் சமுதாயத்தில் பெண்களுக்கு ஏற்படுவது உண்டு. அவற்றை வெளிப்படுத்துவதற்காகவும் அவற்றோடு போராடுவதற்காகவும் பேனா முனையால் முணைந்தவர் கல்கி ஆவார். சிறுகதைகளில் காட்டப்பட்ட பெண்கள் நிலை துன்பமுடையதாக இருந்தாலும், துன்பத்தின் வாயிலாக பெண்களின் பிரச்சனைக்கு தீர்வுக் கூறியிருப்பதன் மூலம் கல்கி ஓர் சமூகப்படைப்பாளான் என்பதை அறிந்துகொள்ள முடிகின்றன.


  *****


  இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

  இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/seminar/s2/p15.html
  

    2023
    2022
    2021
    2020
    2019
    2018
    2017


  வலையொளிப் பதிவுகள்
    பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

    எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

    சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

    கௌரவர்கள் யார்? யார்?

    தமிழ் ஆண்டுப் பெயர்கள்

    பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

    வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

    பண்டைய படைப் பெயர்கள்

    ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

    மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

    மரம் என்பதன் பொருள் என்ன?

    நீதி சதகம் கூறும் நீதிகள்

    மூன்று மரங்களின் விருப்பங்கள்

    மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

    மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

    யானை - சில சுவையான தகவல்கள்

    ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

    புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

    நான்கு வகை மனிதர்கள்

    தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

    மாபாவியோர் வாழும் மதுரை

    கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

    தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

    குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

    மூன்று வகை மனிதர்கள்

    உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


  சிறப்புப் பகுதிகள்

  முதன்மைப் படைப்பாளர்கள்

  வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


  சிரிக்க சிரிக்க
    எரிப்பதா? புதைப்பதா?
    அறிவை வைக்க மறந்துட்டானே...!
    செத்தும் செலவு வைப்பாள் காதலி!
    வீரப்பலகாரம் தெரியுமா?
    உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
    இலையுதிர் காலம் வராது!
    கண்ணதாசனின் நகைச்சுவைகள்
    குறைச்சுத்தான் எடை போடறாரு...!
    அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
    குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
    இடத்தைக் காலி பண்ணுங்க...!
    சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
    மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
    மாபாவியோர் வாழும் மதுரை
    இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
    ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
    அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
    ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
    கவிஞரை விடக் கலைஞர்?
    பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
    கடைசியாகக் கிடைத்த தகவல்!
    மூன்றாம் தர ஆட்சி
    பெயர்தான் கெட்டுப் போகிறது!
    தபால்காரர் வேலை!
    எலிக்கு ஊசி போட்டாச்சா?
    சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
    சம அளவு என்றால்...?
    குறள் யாருக்காக...?
    எலி திருமணம் செய்து கொண்டால்?
    யாருக்கு உங்க ஓட்டு?
    வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
    கடவுளுக்குப் புரியவில்லை...?
    முதலாளி... மூளையிருக்கா...?
    மூன்று வரங்கள்
    கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
    நான் வழக்கறிஞர்
    பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
    பொழைக்கத் தெரிஞ்சவன்
    காதல்... மொழிகள்
  குட்டிக்கதைகள்
    எல்லாம் நன்மைக்கே...!
    மனிதர்களது தகுதி அறிய...
    உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
    இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
    அழுது புலம்பி என்ன பயன்?
    புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
    கடவுளைக் காண உதவும் கண்ணாடி
    தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
    உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
    ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
    அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
    கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
    எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
    சிங்கத்திற்கு வாழைப்பழம்!
    வலை வீசிப் பிடித்த வேலை
    சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
    இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
    கல்லெறிந்தவனுக்கு பழமா?
    சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
    வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
    ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
    அக்காவை மணந்த ஏழை?
    சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
    இராமன் சாப்பாட்டு இராமனா?
    சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
    புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
    பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
    தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
    கழுதையின் புத்திசாலித்தனம்
    விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
    தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
    சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
    திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
    புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
    இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
    ஆணவத்தால் வந்த அழிவு!
    சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
    சொர்க்க வாசல் திறக்குமா...?
    வழுக்கைத் தலைக்கு மருந்து
    மனைவிக்குப் பயப்படாதவர்
    சிங்கக்கறி வேண்டுமா...?
    வேட்டைநாயின் வருத்தம்
    மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
    கோவணத்திற்காக ஓடிய சீடன்
    கடவுள் ரசித்த கதை
    புத்தர் மௌனமாக இருக்கலாமா?
    குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
    சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
    தேங்காய் சிதறுகாயான கதை
    அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
    அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
    கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
    சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
    அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
    விமானத்தில் பறந்த கஞ்சன்
    நாய்களுக்கு அனுமதி இல்லை
    வடைக்கடைப் பொருளாதாரம்
  ஆன்மிகம் - இந்து சமயம்
    ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
    தானம் செய்வதால் வரும் பலன்கள்
    முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
    பிரதோஷம் எப்படி விஷேசமானது?
    விநாயகர் சில சுவையான தகவல்கள்
    சிவராத்திரி விஷேசமானது ஏன்?
    முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
    தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
    கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
    எப்படி வந்தது தீபாவளி?
    தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
    ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
    ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
    அனுமனுக்கு வடை மாலை ஏன்?
    திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
    விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
    கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
    சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
    முருகா என்றால் என்ன கிடைக்கும்?
    குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
    விபூதியின் தத்துவம்
    கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
    தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
    கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
    இறைவன் ஆடிய நடனங்கள்
    யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
    செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
    கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
    விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
    இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
    நவராத்திரி பூஜை ஏன்?
    வேள்விகளும் பலன்களும்
    காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
    பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
    அம்பலப்புழா பால் பாயாசம்
    துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
    சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
    ஈசன் உபதேசித்தத் தலங்கள்
    பரமபதம் விளையாட்டு ஏன்?
    வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
    பதின்மூன்று வகை சாபங்கள்
    இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
    சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
    பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
    சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
    உணவு வழித் தோசங்கள்
    திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
    மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
    பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
    நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
    சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
    மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
    இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
    பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
    கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
    அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
    தீர்க்க சுமங்கலி பவா


  தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                       


  இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
  Creative Commons License
  This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License