Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினேழாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...

Content
உள்ளடக்கம்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
கருத்தரங்கக் கட்டுரைகள்

தமிழ்ச் சிறுகதைகளின் பன்முகத்தன்மை


3. தமிழ்க்கூத்தன் சிறுகதைகள்

சு. அனுசுயாதேவி

முன்னுரை

சிறுகதை வடிவம் பற்றி தொல்காப்பியர் கூறிய ‘பொருளொடு புணராப் பொய்ம்மொழி, பொருளொடு புணர்ந்த நகைமொழி’ என்று கூறியவற்றை ஒப்புநோக்கல் வேண்டும். கதைகள் உருவாகுதல் என்பது கற்பனையினால் இருக்கலாம். உண்மை நிகழ்வுகளாய் இருக்கலாம். நகைச்சுவை கலந்தவையாய் எழுதப்படலாம். நாம் அன்றாட வாழ்க்கையில் காண்கிற, நாம் கேட்கின்ற நிகழ்வுகளைக் கதைபோல் தான் பிறரிடம் கூறிடுவோம். கதைக் கூறலும், கதைக் கேட்டலும் மனித வாழ்க்கையில் இரண்டறக் கலந்து விட்ட ஒன்றாகும். எனவே ஒவ்வொரு சமூகத்திலும் நிரம்பவே கதைகள் உள்ளதனை நாம் அறிவோம். ஆகவே எப்போதும் சிறுகதையை ஒரு இலக்கியமாகக் கருதுகின்ற நோக்கினை அமெரிக்காவைச் சேர்ந்த எட்கர் ஆலன்போ தொடங்கி வைத்தார். மேனாட்டார் வரவினாலும், அறிவியல் வளர்ச்சியினாலும், இதழ்களின் பக்க பலத்தாலும் சிறுகதை இலக்கியம் வளர்ச்சியடைந்தது. 18ஆம் நூற்றாண்டில் வீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குருகதை தமிழ்ச்சிறுகதையின் முன்னோடி எனலாம்.

சிறுகதை ஒரு மாளிகையின் சாளரம் என்றால், மாளிகையின் மொத்தப் பரப்பும் புதினம் ஆகும் என்கிறார் சயார்ச் மூர் என்னும் அறிஞர். தொடக்கம், வளர்ச்சி, உச்சகட்டம், முடிவு என்னும் ஐந்து கூறுகளை ஒரு சிறுகதை கொண்டிருக்கும். குதிரைப்பந்தையத்தின் தொடக்கம், முடிவு போல் கூர்மை கொண்டிருக்க வேண்டும். கிளைக்கதை கூடாது. கதையில் கூறப்படும் ஒவ்வொரு நிகழ்வும் கதையோடுக் கட்டாயமாக தொடர்பு கொண்டிருக்க வேண்டும். இதனை அடிப்படையாகக் கொண்டு, கதைகள் புனைந்து தமிழிலக்கியத்தில் புகழ்பெற்றோஎ பலஎ. அவ்வரிசையில் தற்கால கதையிலக்கியத்தில் தமிழ்க்கூத்தன் அவர்களின் சிறுகதைத் தொகுப்பும் வெளியிடப்பட்டுள்ளது. அக்கதைகளில் அவர் நம் வாழ்க்கைக்கு வழிகாட்டுகின்ற நல்வழிகளைப் பல நன்னெறிக் கதைகளாகத் தன் சிறப்பான, எளிமையான நடையில், உணர்ந்து கொள்ளும் வகையில், குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அவற்றை உணர்ந்து தங்களது வாழ்க்கையில் ஏற்று நடந்து கொள்ளும் விதமாய்க் கதைகளை எழுதியுள்ளார். அவர் தன் கதைகளில் பல்வேறு மாந்தர்கள் மற்றும் கடவுளரை வைத்து நன்னெறிகளைச் சுட்டிக்காட்டுகின்றார். தமிழ்க்கூத்தன் தன் கதைகளில் நன்னெறியை எவ்வெவ் வழிகளிலெல்லாம் தம் கதை மாந்தர் வழி எடுத்துரைத்துகின்றார் என்பதை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகின்றது.பாவ, புண்ணியம்

பாவம் என்பதும், புண்ணியம் என்பதும் அவரவர் செயல்களால் நடப்பவை. நன்மை செய்பவர் புண்ணியம் அடைவதனையும், பாவம் செய்வோர் பிறர்க்குத் தீமை செய்வோர் பல வழிகளில் துன்பத்திற்கு ஆளாக நேரிடும் என்றும், கடவுளின் கொடும் பார்வைக்கும், அவர் தரும் துன்பத்திற்கும் ஆளாக நேரிடும். இதனையே திருக்குறளில் 21ஆம் அதிகாரமான தீவினையச்சம் என்ற அதிகாரத்தில்,

“தீயவை தீய பயத்தலான் தீயவை
தீயினும் அஞ்சப் படும்” (குறள் - 202)

“அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யானின் எனின்” (குறள் - 210)

என்று வள்ளுவர் பாவம், புண்ணியம் பற்றிய கருத்துக்கள் கூறுவது, ‘பாவத்திற்குப் புண்ணியம்’ என்ற கதைக்குப் பொருத்தமாய் அமைந்துள்ளன. வணிகன் ஒருவன் தான் வாழும் காலத்தில் தன் தொழிலில் நேர்மையின்றி கலப்படம் செய்து பிழைத்ததற்கு பாவச் சம்பளமாகப் பேயாக மாமரத்தில் இருக்கின்றான். அம்மரம் ஒரு குடிமகனின் வீட்டில் உள்ளது. அதனால் அரசனை விட அவன் மரம் நன்கு காய்ப்பதால் பேரும் புகழும் அடைந்திடுகின்றான். அதைக் கண்டு, பொறாமையுற்ற மன்னன் அந்த மரத்தை வெட்டிட ஆணையிட, அம்மரத்தில் பேயாக உறையும் வணிகன், மன்னனின் கனவில் தோன்றி, தான் செய்த பாவத்தின் பயனாக அந்த மரத்தில் பேயாக உறைவதாகவும், தன்னை மன்னித்துக் கடவுள் அருள் புரிந்ததால் நன்கு காய்த்து பிறருக்கு உதவுவதாகவும், அடுத்த ஆண்டே இம்மரம் பட்டுப்போய் விடும் என்றும், தாங்கள் அதனை வெட்டிப் பாவத்தினை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்றும் கோரிக்கை வைக்கின்றது.

மரியாதை

மரியாதை செலுத்துதல் என்பது வயதைப் பொறுத்தோ, நிலையைப் பொறுத்தோ, கல்வியைப் பொறுத்தோ அன்று. யாராகினும் மரியாதை செலுத்திட தவறுதல் கூடாது. இக்கருத்தினை விளக்கிட தன்னுடைய ‘எல்லோருக்கும் மரியாதை’ என்ற கதையில் பேரனிடம் பிச்சைக்காரனுக்குப் பணத்தையிடும்படிக் கூறுகிறார் அவனது தாத்தா. அவனோ பணத்தையிட்டு வந்து விடுகிறான். நீ ஏன் தொப்பியைத் தூக்கி, வணங்கிக் காசினை இடவில்லை என்று கேட்கும் போது, அவருக்குத்தான் கண் தெரியாதே, நான் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்? என்று கேட்கிறான் அந்தச் சிறுவன். அதற்கு அந்தப் பெரியவர், அவர் கண் தெரிந்திருந்து தெரியாதவர் மாதிரி வேடமிட்டிருந்தால், நாம் மரியாதை செய்திடவில்லை என்று வருந்துவார் அல்லவா? எனவே, நாம் அனைவருக்கும் உரிய வழியில் மரியாதை செலுத்திட வேண்டும் என்று தாத்தாவின் கூற்றுவழி நமக்கு தெளிவுபடுத்துகிறார்.

எண்ணங்கள்

ஒவ்வொருவரும் தாங்கள் எந்நிலையில் உள்ளனரோ, அதைப்போலத் தான் பிறரையும் எண்ணுவர். அவரவரின் எண்ணப்படியே அவரவரது பார்வை அமைந்திடும் என்பதனைத் தன்னுடைய ‘அவரவர் எண்ணம்’ என்ற கதையில் விளக்குகிறார் தமிழ்க்கூத்தன். மரத்தடியில் ஆழ்ந்துறங்கும் ஒருவனைக் காணும் உழைப்பாளி. இவன் நன்குழைத்ததனால் அயர்ந்து உறங்குகின்றான் என்று எண்ணுகின்றான். ஒரு திருடனோ அவனைக் கண்டு, இவனும் நம்மைப் போலவே இரவெல்லாம் திருடிவிட்டு பகலில் உறங்குகின்றான் என்று எண்ணுகின்றான். குடிகாரன் ஒருவன், தன்னைப் போலவே அவனும் குடித்துவிட்டு போதையில் கிடப்பதாய் எண்ணுகின்றான். ஞானி ஒருவர் இப்பகல் வேளையில் இவ்வளவு ஆழமாய் உறங்கும் இவன் நிச்சயம் முற்றும் துறந்த ஞானியாய்தான் இருக்க வேண்டும் என்று எண்ணுவதாய்க் கதையை அமைத்துள்ளார். இதன்மூலம் அவருடைய சிந்தனை மற்றும் செயல்களின் அடிப்படையில் தான் காட்சிகளைக் கண்டிடுவர் என்ற அரிய கருத்தினைக் கூறுகிறார்.பாச உணர்வு

‘காக்கைக்கும் தன்குஞ்சு பொன் குஞ்சு’ எனும் கருத்தினை அடிப்படையாய்க் கொண்டு எழுதப்பட்ட கதை ‘தாய்ப்பாசம்’. தாய்க்குத் தன் குழந்தை எவ்வாறாக இருப்பினும் பேரழகே என்ற கருத்தை இக்கதையில் உணர்த்துகிறார். ஒரு காட்டில் காட்டரசி தன் குழந்தைகளில் யார் அழகு? என்ற போட்டி நடத்தப் போவதாகவும் அதில் வெல்பவருக்குப் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கிறாள். அனைவரும் கூடிட குரங்கும் அங்கு வருகிறது. குரங்கினைக் கண்டவுடன் நீ எவ்வளவு அசிங்கமாய் இருக்கிறாய்? நீ ஏன் இங்கு வந்தாய் என்று கேட்டவுடன் குரங்கு அழுது கொண்டே தன் தாயிடம் செல்கிறது. குரங்கின் தாய், நீதானடா இவ்வுலகிலேயே மிகவும் பேரழகன் என்று ஆறுதல் கூறுகிறது.

தாய்க்குத் தன் குழந்தை என்றும் பேரழகாகவே தெரியும் எனும் தாய்ப்பாச உணர்வை உணர்த்துகிறார். இது போலவே குருவின் மீது பாசம் கொண்ட பீமனும், பாஞ்சாலியும் தன் மக்களைக் கொன்ற அசுவத்தாமனை, குருவின் நிமித்தம். குருவும் தம்மைப் போல குழந்தையை இழந்து வருந்தக் கூடாது என்று எண்ணம் கொண்டு மன்னித்து விட்ட கதையை நல்ல உள்ளம் என்ற கதையின் வழி கூறுகின்றார். மன்னிப்பு என்பதே சிறந்த பண்பு என்பதனை நமக்கு வழிகாட்டுகின்றார்.

நேர்மை

நேர்மையான உழவன் ஒருவன் படைத்தளபதியை பிறரின் நிலத்திலிருந்து பொருளை எடுக்க வேண்டாம் என்று தடுத்துத் தொலைவில் உள்ள தன் நிலத்தில் எடுத்துக் கொள்ளும்படி எடுத்துரைக்கின்றான். ஏன் அங்கே எடுக்க விடாமல், இங்கேக் கூட்டி வந்தாய் எனக் கேட்கும் படைத்தளபதிக்கு இது என்னுடைய நிலம். இதில் பொருளை எடுத்துக்கொள்ள நான் யாருடைய அனுமதியையும் பெற வேண்டியதில்லை. மாறாக பிறருடைய நிலத்தில் எடுத்துக் கொள்ளும்படி கூற எனக்கு உரிமையில்லை என்று தன் நேர்மையைக் காட்டுவதாய் ஆசிரியர் நேர்மையான உழவன் என்ற தலைப்பிலேயே நேர்மையின் அவசியத்தைக் கூறுகிறார். பிறர் அனுமதியின்றி அவருடைய பொருளை எடுக்கக் கூடாது என்று அறிவுறுத்துகிறார். ஒரு சிறுமியின் நேர்மையான உணர்வினையும் தன்னுடைய ‘சிறுமியின் நேர்மை’ என்ற கதையின் வாயிலாய் கூறுகிறார். இளம் வயதில் நேர்மை குறித்த உணர்வினை ஏற்படுத்தி விட்டால் அது பசுமரத்தாணி போல் அவருடைய மனத்தில் பதியும் என்றுணர்த்துகின்றார்.இறை நம்பிக்கை

இறைவனை நம்பினோர் கைவிடப்படார் எனும் கருத்தை உணர்த்த எத்துன்பம் வரும் போதும் இறைவனை நாம் நினைத்திட்டால், அவரை முழுமையாக நம்பினால் ஒருபோதும் நம்மை கைவிடமாட்டார் என்னும் உண்மையை மக்கள் உணர்ந்திட ‘கடவுளை நம்பு’ எனும் கதையை எழுதியுள்ளார். புலியிடமிருந்தும், முதலையிடமிருந்தும் கடவுள் அருளால் காப்பாற்றப்பட்டு விட்டதை அறிந்த ஒருவன், இறைவா உன் அருளால் இன்று பிழைத்தேன் என்ற கூற்றுவழி உணர்த்துகிறார்.

என்றும் நீக்கமற நிறைந்திருப்பவன் கண்ணன் என்பதனை விளக்க நாரதர் சென்ற இடங்களிலெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கின்றார். ருக்குமணி, சத்தியபாமா, சத்தியவதி, சாம்பவதி போன்றோர் இல்லத்திலெல்லாம் ஒரே நேரத்தில் இருப்பதனை நாரதர் காண்பதாய் நிருபித்து நமக்கும் காட்டுகின்றார். இறைவா எல்லா உயிர்களிலும் நீர் நிறைந்து இருக்கின்றீர் என்பதனை உணர்த்தும் உம்மீது ஐயம் எல்லாம் கொண்டேனே! எல்லாம் உம்மால் முடியும் என்பதனை உணர்ந்து கொண்டேன் என்று நாரதர் கூறுவதாய் நிறைவு செய்கின்றார்.


வாழ்வியல் சிந்தனைகள்

பெரியோர் முன் தனக்கு என்ன தெரிந்தாலும் பெரியோர்க்கு அவமரியாதை ஏற்படக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் அபுபக்கர், உமர் ஆகியோருக்கு அறியாத பதில் தனக்குத் தெரிந்திருந்தும் உமரின் மகன் அதனை முந்திக் கொண்டு கூறவில்லை. பெரியோரை மதித்து நடத்தல் என்ற கருத்தைத் ‘தெரிந்தாலும் சொல்லாதவர்’ என்ற கதை வாயிலாக கூறுகின்றார்.

உள்ளதனை வைத்து மகிழ்வுடன் வாழ வேண்டும் எனும் கருத்தைக் கூறிட விளையும் ஆசிரியர், சிங்கம் ஒன்று வேட்டையாட சென்ற போது முதலில் முயலைப் பார்த்தும் அதனைவிடப் பெரிய மானைக் கண்டவுடன் முயலை விட்டு, மானைத் துரத்தியது. இறுதியில் இரண்டும் தப்பித்துச் சென்றது. முதலில் கிடைத்திருந்த முயலைப் பிடித்திருந்தால் உணவு கிடைத்திருக்கும். தவற விட்டதனால் இரண்டும் போனது. இதனைத் தனது ‘கிடைத்ததை விடலாமா?’ என்ற கதையின் வாயிலாகத் தெளிவுபடுத்துகிறார்.

வள்ளல் குணம் பிறப்பிலேயே வர வேண்டும். அக்குணம் கர்ணனிடம் நிறையவே இருந்தது. ஒருநாள் பீமன் கண்ணனிடம் கர்ணனை ‘வள்ளல்’ என்று புகழ்கின்றான். நானும் தான் பொருள் இருந்தால் தாரளமாக வாரி வழங்குவேன் என்றான். அதனைக் கேட்ட கண்ணன் தன் மாய சக்தியால் ஒரு மலையைப் பொன்னாக்கி அவனிடம் தந்தான். பீமன் வெட்டி வெட்டி எடுத்துக் கொடுத்தும் மலை குறையவில்லை. ஆனால் கர்ணனிடம் அம்மலையைக் கண்ணன் கொடுத்தான். கொடுத்த கையோடு கர்ணன் கண்ணனைப் பின் தொடர்ந்தான். “ஏன் மலையைத் தானமாக வழங்காமல் எங்களுடன் வருகிறாய்?” என்று கண்ணன் வினவ. நலிந்தோர் ஒருவன் வந்து பொருள் வேண்டும் என்று கேட்கவே அம்மலையை நான் தானமாக கொடுத்துவிட்டேன் என்றான். பீமனுக்கு அப்போது தான் கர்ணன் எப்பேர்பட்ட வள்ளல் என்று புரிந்தது. இதனை விளக்கும் விதமாய்த் தமிழ்க்கூத்தன் ‘சிறந்த கொடையாளி’ என்ற கதையில் விளக்குகிறார்.

இவ்வாறு மனித வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து நன்னெறிக் கதைகளையும், தன் சிறந்த எழுத்தால் அனைவரது மனதிலும் பதியும் வண்ணம் தன்னுடைய அறுபது கதைகளில் நன்னெறிக் கருத்துக்களை வழங்கியுள்ளார். சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் பாங்கு சிறுகதைகளுக்கு உண்டு. இவரது கதைகள் அனைத்தும் சிறுகதை என்றே கருதத்தக்க வகையில் அமைந்துள்ளதோடு, நன்னெறிகளை எடுத்துரைக்கும் நீதிக்களஞ்சியமாகவும் திகழ்கின்றன. இவர் எழுதியுள்ள கதைகளை இன்றைய தலைமுறையினர் நன்கு கற்று, கற்றபடி நிற்பார்களேயானால் இனிவரும் சமுதாயமும், சமகால சமுதாயமும் தவறுகளற்ற நீதிச் சமூகமாக விளங்கும் என்பதில் எவ்விதவொரு ஐயமுமில்லை என்றே சொல்லலாம்.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/seminar/s2/p3.html


  2022
  2021
  2020
  2019
  2018
  2017

வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்

முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License