Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            ISSN  2454-1990
muthukamalam

முத்து: 12 கமலம்: 14
உள்ளடக்கம்
பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)

சமையல்
அசைவச் சமையல்
Alexa Rank


கட்டுரை
கருத்தரங்கக் கட்டுரைகள்

தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்

      

15. தொல்காப்பியத் திணையியல்


கு. கண்ணன்
உதவிப் பேராசிரியர், தமிழ்த் துறை,
பெரியார் பல்கலைக்கழகக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மேட்டூர்.

முன்னுரை

திணை என்ற சொல் முதலில் நிலத்தைக் குறித்தனவாக அமைந்து பின் நிலத்திற்குரிய மக்களின் ஒழுக்கத்தினைக் குறித்து நின்றது என பண்டைய இலக்கண இலக்கியங்கள் வழி அறிய முடிகின்றது. தொல்காப்பியர் திணை என்பதை ஒழுக்கம் என்றும், நிலம் என்றும் இரு பெயரில் வழங்கியுள்ளார். அகம் சார்ந்த உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்தும் இடத்தும் புறம் சார்ந்த வீரம், போர், கொடை போன்ற புற நிகழ்வுகளை வெளிப்படுத்தும் இடத்தும் திணையானது ஒழுக்கம் என வந்தது. தொல்காப்பிய உரையாசிரியரான நச்சினார்க்கினியார்

“திணைதொறும் மரீஇயபெயர்,நால்வகைநிலத்தும் மரீஇப் போந்தநிலப்பெயர்” (1)

என்றுதிணையைநிலமாகக் குறிப்பிடுவதைக் காணமுடிகிறது.

திணை வாழ்க்கை ஒரே காலத்திலா நிகழ்ந்தது

ஐந்திணை வாழ்க்கை முறை பற்றி இலக்கியங்கள் வாயிலாக நாம் எவ்வளவு கற்றுத் தெளிந்த போதும் கூட இப்படியான ஒரு கேள்வி எழத்தான் செய்கிறது. பண்டையத் தமிழர்களான நம் முன்னோர்கள் ஒரேகாலத்தில் குறிஞ்சியிலும், முல்லையிலும், மருதத்திலும், நெய்தலிலும், பாலையிலும் வாழ்ந்தனரா என்ற கேள்விக்கு ஆம் என்று பதில் நமக்குள்ளே வந்திருக்குமாயின் அது மிகவும் சரியே. பல நூற் பயின்ற தமிழறிஞர்களும் இதை நம்பி ஏற்கத்தான் செய்கின்றனர். சங்ககாலத்தில் அவ்வாறு வாழ்ந்தது உண்மையும் கூட. ஆனால், ஆதியில் படிப்படியாக வளர்ந்து வந்ததே ஐந்திணை வாழ்க்கை முறை.

விலங்குகளைப் போலவே, மனிதனும் மந்தையாக வாழும் இயல்புடையவன் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியிலேயே அவன் வாழ்ந்திருக்க வேண்டும். அப்படியாயின், மனிதன் முதன் முதலாக வாழ்ந்த நிலம் எது? இதற்குத் தமிழர் வரலாறு எழுதிய ந. சி. கந்தையாபிள்ளை

‘தமிழரின் தொடக்கம் யாதோஒருமலையிடம் எனத் தெரிகிறது’

என்பர். மேலும் அவர்

“மனிதன் ஆரம்பகாலத்தில் குறிஞ்சி நிலத்திலேயே தனது வாழ்க்கையை வாழத் தொடங்கினான். கொடிய விலங்குகளினின்றும் அவனைக் காத்துக் கொள்ளக் குகைகள் அங்குத் தானுண்டு” (2) என்பார்.இது குறித்து தேவநேயப்பாவாணர்;

“இயற்கை அல்லது அநாகரிக மாந்தன், இயற்கையாக விளையும் காய்கனி, கிழங்குகளையும் வேட்டையாடிப் பெறும் விலங்கு, பறவை, இறைச்சியும் உண்டு வாழ்வதற்கேற்ற இடம் குறிஞ்சி என்னும் மலைநிலம் அதற்கடுத்தபடியாக, ஆடு மாடுகளைச் சிறப்பாக வளர்த்தும் வானவாரிப் பயிர்களை விளைத்தும் வாழ்வதற்கு ஏற்ற இடம் புல்வெளியும் குறுங்காடுமுள்ள முல்லை நிலம், அதற்கடுத்தபடியாக, நன்செய் பயிர்களையும், புன்செய் பயிர்களையும் நன்றாக விளைவித்து நிலையாக வாழ்ந்து நாளடைவில் சிற்றூர் பேரூரும், பேரூர் மூதூரும் ஆகி கைத்தொழிலும் வாணிகமும் வளர்ந்தது. கல்வியும் அரசும் நகரும் நகரமும் தோன்றி, மக்கள் நாகரிகம் அடைதற்கேற்ற இடம் நிலவளமும், நீர்வளமும் மிக்க மருத நிலம். அதற்கடுத்தபடியாக, பலவகை மரக்கலங்கள் புனைந்து கடல் கடந்து நீர் வாணிகஞ் செய்து பல்வகை பண்டங் கொணர்ந்து நாட்டை வளப்படுத்துவதற்கேற்ற இடம் கடல் சார்ந்த நெய்தல் நிலம். பாலை என்பது முல்லையும் சிறுமலைக் குறிஞ்சியும் முதுவேனில் காலத்தில் நீர்நிலைகளெல்லாம் வற்றி வரண்டு நிலமுஞ் சுடும் நிலை. பின்னர், மழைக் காலத்தில் பாலைநிலம் தளிர்த்தும், நீர் நிரம்பியும் மீண்டும் முல்லையும் குறிஞ்சியுமாக மாறிவிடும். ஆதலால், ஐந்திணைகளுட் பாலைக்கு நிலையான நிலமில்லை. அதனால், நிலத்தை நானிலம் என்றனர்” (3)

இத்தகைய பரிணாம வளர்ச்சியைப் பார்க்கும் போது அதை ஏற்கும் படியாக அமைகிறது.

“குறிஞ்சி நிலத்திலிருந்து பற்பல ஆயிரம் ஆண்டுகள் இடைவெளியில் முல்லை, மருதம், நெய்தல் என ஒவ்வொரு நில வாழ்க்கைக்கும் மாறிமாறி வாழ்ந்திருக்கிறான். இந்த உண்மையை ஐயமின்றி உணரும் அறிவே தமிழரின் திணை வரலாற்றைச் சரியாகப் புரிந்து கொள்ளத் துணைசெய்யும் அறிவாகும்” (4)

திணை - தொல்காப்பியர்

தொல்காப்பியர் அகம் புறம் எனச் சுட்டும் திணைப்பகுப்பில்

“கைக்கிளைமுதலாகப் பெருந்திணை இறுவாய்
முற்படக்கிளந்தஎழுதிணைஎன்ப” (தொல்.பொ.நூ.1)

என்று அகத்திணையைக் கைக்கிளை, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, பெருந்திணை என ஏழாகவும்,

“அகத்திணையாகிய எழுதிணையையும் சாற்றி அவற்றின் புறத்து நிகழ்வன” (5)

என்று வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் எனப் புறத் திணைகள் ஏழாகக் குறிப்பிட்டுச் சொல்லுவார் தொல்காப்பியர்.

இவையாவும் ஒழுக்கம் என்னும் பொருளில் அமைந்தது.

நிலத்தைக் குறிக்கும் போது,

“பெயரும் வினையுமென்று ஆயிருவகையே
திணைதொறும் மல்கியதிணைநிலைப் பெயரே” (தொல்.பொ.நூ.22)

என்று திணையை நிலமாகத் தொல்காப்பியர் குறித்துச் சொல்வதைக் காணமுடிகிறது.இருவகை ஒழுக்கமும் திணையே

பழங்கால இலக்கண இலக்கியங்கள் சுட்டும் உயர்ந்த ஒழுக்கம், தீயஒழுக்கம் என இரண்டையும் பொதுப்பெயராகத் திணை என்றே குறிக்கும் வழக்கம் உள்ளது. ஐந்திணை என்று எண்ணிட்டுச் சுட்டும் இடத்தில் அகத்திணை ஏழனுள் ஐந்திணை மட்டும் சிறப்பான உயர்பிரிவு என்பதும் பெறப்படும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்திணையில் மட்டுமே நாகரிகம் நிறைந்த மக்கள் காணப்பட்டனர்.

“மக்கள் நுதலியஅகன்ஐந் திணையும்” (தொல்.பொ.நூ.57)

என்பது இதனைஉணர்த்தும்.

நாகரீமுடைய மக்களிடத்தே அன்பு காணப்படும். அதுபோல, காமப்புணர்ச்சி என்பதும் அன்பின் ஐந்திணைகளுக்கே உரியதாகும்.

“அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கில்” (தொல்.பொ.நூ.89)

எனும் நூற்பா இதனை உணர்த்துகிறது.

ஏனைய கைக்கிளை, பெருந்திணை என்ற இரண்டு திணைகள் நற்பண்புடைய உயர்ந்த மக்களுக்குரியது அன்று. ஒழுக்கம் சிதைந்த நாகரிகமற்ற மனிதர்களுக்கு உரியது என்பது தமிழறிஞர்களின் கருத்தாகஅமைகிறது. ஆனால், மக்களின் வகைகளையோ, திணை வரிசைப்படுத்துதலிலோ ஐந்திணையுடன் அவை இரண்டனைணயும் கூட்டி ஏழு என்று சொல்லும் வழக்கமே உள்ளது.

“கைக்கிளைமுதலாஏழ்பெருந்திணையும்
முற்கிளந் தனவேமுறையினான” (தொல்.பொ.நூ.486)

என்ற நூற்பா வழி அறியமுடிகிறது.

பண்டைய தமிழர்களின் வாழ்க்கைமுறையைப் பற்றிக் குறிப்பிட்ட தொல்காப்பியர் “பரத்தமை” ஒழுக்கத்தைப் பற்றியும் கூறத் தவறவில்லை. நல்ல பதிவுகளுடன் தீயவையாதென பதிவதையும் பண்டைய அறிஞர்கள் மறந்துவிடவில்லை. உடன்பாடில்லாத தீய ஒழுக்கத்தை

“கொடுமைஒழுக்கம்” (தொல்.பொ.நூ.145)

“கொடுமையொழுக்கத்து” (தொல்.பொ.நூ.145)

“அடங்காஒழுக்கத்துஅவன் வயின்” (தொல்.பொ.நூ.148)

“பேணாஒழுக்கம் நாணியபொருளினுந்” (தொல்.பொ.நூ.148)

என்று தீய ஒழுக்கத்தைக் கடிந்து உரைத்தலும் காணமுடிகிறது.சங்க இலக்கியங்களில் திணைசொல்லாய்வு

சங்கப்பாடல்களில் திணை என்ற சொல்லாடல் பதினாறு இடங்களில் வந்துள்ளது.

“நீனிறமுல்லைப் பல்திணைநுவல” (பொருந.221)

“ஐம்பால் திணையும் கவினிஅமைவர” (மதுரைக்.326)

“வசையில் வான்திணைப் புரையோர்கடும்பொடு” (குறுந்.205)

“ஓண்சுவர்நல்லில் உயர்திணையிருந்து” (பட்டினப்.263)

“மேம்படவெறுத்தஅவன்தொல்திணை மூதூர்” (மலை.401)

“தெறுவதுஅம்மஇத் திணைப் பிறத்தலே’ (குறுந்.45)

“உயர்திணைஊமன் போல” (குறுந்.224)

“துளங்குடிவிழுத்திணைதிருத்து” (பதிற்,31)

“முன் துணைமுதல்வர்போலநின்று” (பதிற்.85)

“வழஞ்சுழிஉந்தியதுணைபுரிபுதல்வர்” (பரி.167)

“ஓழுகுபலிமறந்தமெழுகாப்புன்திணைப்” (அகம்.167)

“ஆடுகுடி மூத்தவிழுத்திணைசிறந்த” (புறம்.24)

“வேற்றுமை இல்லாவிழுத்திணைப்பிறந்து” (புறம்.27)

“வசையில் விழுத்திணைப் பிறந்த” (புறம்.159)

“அளக்கர்த்திணைவிளக்காக” (புறம்.229)

“விளங்குதிணைவேந்தர்களந்தொறுஞ் சென்று” (புறம்.373)

மேற்கண்டசங்கப் பாடல்களில் திணை என்பது காட்டுநிலம், நிலம், குலம், திண்ணை, உயர்ந்த ஒழுக்கம், குடி, நன்னெறி, இருப்பிடம், பாலினம் என்று பலவாறு குறித்து நிற்பது காணலாம்.

“சங்க இலக்கியங்களில் திணை என்னும் சொல் நிலம், குடி, குடும்பம், குலம், ஒழுக்கம் ஆகியவற்றைக் குறித்து வந்துள்ளது” (6)

எனவே, திணைஎன்பது பெரும்பாலும் நிலத்தையும், ஒழுக்கத்தையும் குறித்து வந்துள்ளது என்று துணியலாம்.

முதனிலை திணை

திணை என்பது திண்ணிய பழக்கம், உயர்ந்த பழக்க வழக்கம் உடையவர் உயர்திணை. அஃது அல்லாதவர் அஃறிணை.

உயர் + திணை = உயர்திணை (உயர்ந்தபழக்கமுடையவர்)

அல் + திணை = அஃறிணை (உயர்ந்தபழக்கம் அல்லாதவர்)

உயிருள்ள பொருட்களும் உயிரற்ற பொருட்களும் கொண்ட இவ்வுலகில் நல்ல பழக்க வழக்கம் உடைய - நன்னடத்தை உடைய - அறிவுடைய மனிதன் என்ற ஒரு சாதி மட்டுமே உயர்திணை மனிதன் தவிர்த்த ஏனைய உயிருள்ள, உயிரற்ற பொருட்கள் அனைத்துமே அஃறிணை.

“உயர்திணைஎன்மனார்மக்கட்சுட்டே
அஃறிணைஎன்மனார்அவரலபிறவே
ஆயிருதிணையின் இசைக்குமனசொல்லே” (தொல்.சொல்.1)

என்ற நூற்பா வழி தொல்காப்பியர் கூற்று இதனை உறுதியாக்குகிறது.


இரண்டாம் நிலை

மனிதகுலம் தோன்றி வளர்ந்த சூழலுக்கு ஏற்ப, அறிவு சிறிதுசிறிதாக வளர்ந்தபோது அகம், புறம் என வாழ்க்கை இரு வகையில் நிலைபெற்று அவை அகத்திணை, புறத்திணை எனப் பெயர் பெற்றன. மலைகள், காடுகள், வயல்வெளிகள், கடற்பகுதி என மனிதனின் வாழிடம் சூழலுக்கேற்ப மாறிவரஅங்கு வாழும் மக்களையும் அவர்களின் ஒழுக்கத்தைச் சுட்டும் பொருட்டும் திணையானது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனப் பெயர் பெற்றதையும் காணமுடிகிறது.

திணை என்ற சொல்

1. நல்ல பழக்க வழக்கம் (நன்னெறி)

2. நாகரிகம்

ஆகிய இரண்டு பொருள்களில் அமைந்து வருவது தெளிவாகிறது.

தொகுப்புரை

* திணைஎன்றால் என்னவென்று தொல்காப்பியர் தம் நூலில் எந்த இடத்திலும் விளக்கவில்லை. ஆயினும், அவரின் இலக்கண வழி ஓரளவு உணர முடிகிறது.

* தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள் கூற்றின் அடிப்படையில் திணை என்பது முதலில் நிலத்தைக் குறித்துப் பின், அந்நிலத்து மக்களின் ஒழுக்கத்தைக் கூறலாயிற்று என்பதை அறிய முடிகிறது.

* அகம் - புறம், உயர்ஒழுக்கம் - பேணா ஒழுக்கம் என திணை குறிக்கப்படுவதைக் காணலாம்.

* திணை என்பது நிலம், குலம், குடி, திண்ணை, உயர்ந்த ஒழுக்கம், நல்லொழுக்கம், நன்னெறி, இல் (வீடு) இருப்பிடம் சீயே குடி பூமி பாலினம் தலியவற்றை உணர்த்துவதைச் சங்க இலக்கியங்கள் வழியும் அறிய முடிகின்றது.

அடிக்குறிப்புகள்

1. தொல்காப்பிய உரைவளம், பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் ப.13

2. ந. சி. கந்தையா பிள்ளை, தமிழர்சரித்திரம் ப.39

3. ஞா. தேவநேயப்பாவாணர், தமிழ் இலக்கிய வரலாறு ப.17

4. வெ. மு. ஷாஜகான், கனி திணை வரலாறு பக். 4-5

5. தொல்காப்பியம் பொருளதிகாரம், இளம்பூரணர் ப.71

6. முனைவர்அ. அறிவழகன், சங்ககால திணைசார் பொருளாதார வாழ்வியல் ப.9


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/seminar/s3/p15.html


ISSN 2454 - 1990
Change Language/மொழி மாற்றம் செய்திட

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...

சிறந்த நூலாசிரியர் பரிசு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)


மாத பலன்கள்
படைப்புகளுக்குப் பரிசளிப்பவர்கள்
சிரிக்க சிரிக்க
எரிப்பதா? புதைப்பதா?
அறிவை வைக்க மறந்துட்டானே...!
செத்தும் செலவு வைப்பாள் காதலி!
வீரப்பலகாரம் தெரியுமா?
உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
இலையுதிர் காலம் வராது!
கண்ணதாசனின் நகைச்சுவைகள்
குறைச்சுத்தான் எடை போடறாரு...!
அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
இடத்தைக் காலி பண்ணுங்க...!
சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
மாபாவியோர் வாழும் மதுரை
இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
கவிஞரை விடக் கலைஞர்?
பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
கடைசியாகக் கிடைத்த தகவல்!
மூன்றாம் தர ஆட்சி
பெயர்தான் கெட்டுப் போகிறது!
தபால்காரர் வேலை!
எலிக்கு ஊசி போட்டாச்சா?
சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
சம அளவு என்றால்...?
குறள் யாருக்காக...?
எலி திருமணம் செய்து கொண்டால்?
யாருக்கு உங்க ஓட்டு?
வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
கடவுளுக்குப் புரியவில்லை...?
முதலாளி... மூளையிருக்கா...?
குட்டிக்கதைகள்
எல்லாம் நன்மைக்கே...!
மனிதர்களது தகுதி அறிய...
உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
அழுது புலம்பி என்ன பயன்?
புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
கடவுளைக் காண உதவும் கண்ணாடி
தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
சிங்கத்திற்கு வாழைப்பழம்!
வலை வீசிப் பிடித்த வேலை
சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
கல்லெறிந்தவனுக்கு பழமா?
சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
அக்காவை மணந்த ஏழை?
சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
இராமன் சாப்பாட்டு இராமனா?
சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
கழுதையின் புத்திசாலித்தனம்
விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
ஆணவத்தால் வந்த அழிவு!
சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
சொர்க்க வாசல் திறக்குமா...?
வழுக்கைத் தலைக்கு மருந்து
மனைவிக்குப் பயப்படாதவர்
சிங்கக்கறி வேண்டுமா...?
வேட்டைநாயின் வருத்தம்
ஆன்மிகம் - இந்து சமயம்
ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
தானம் செய்வதால் வரும் பலன்கள்
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
பிரதோஷம் எப்படி விஷேசமானது?
விநாயகர் சில சுவையான தகவல்கள்
சிவராத்திரி விஷேசமானது ஏன்?
முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
எப்படி வந்தது தீபாவளி?
தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
அனுமனுக்கு வடை மாலை ஏன்?
திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
முருகா என்றால் என்ன கிடைக்கும்?
குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
விபூதியின் தத்துவம்
கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
இறைவன் ஆடிய நடனங்கள்
யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                       


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License